Friday, February 19, 2010

குர்ஆன் = ஆச்சர்யங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.

குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.


1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள். 

ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.  

குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.

அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.

நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது. 

நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.

இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை. 

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.

மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...

ஏன்?

இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.          



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது. 

இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

குரானின் தனித்துவம் என்ன தெரியுமா?

ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).

எளிமையாக சொல்லப்  போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.

குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான். 

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும்? சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். 

இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் மொழிப்பெயர்ப்புகளின் மூலம் குரானின் முழு அழகையும்/அற்புதத்தையும் உணர முடியாது? 

விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான், அதனால் தான் குரானின் வார்த்தைகளை மொழிப்பெயர்க்காமல் அதன் அர்த்தங்களை மட்டுமே மொழிபெயர்க்க முயல்கின்றார்கள்), சத்தங்களை?     

Qur'an is the most difficult book on the face of earth to translate...


2. குரான் அருளப்பட்ட சமயம், நான் ஏற்கனவே கூறியது போல் அரபி மொழி அதன் உச்சத்தில் இருந்த நேரம். அப்பொழுது அரபி மொழி இலக்கணம் மூன்றாக அறியப்பட்டிருந்தது,
a. கவிதைநடை (poetry), அரபியில் "பிஹார்" எனப்படும்.
b. உரைநடை (common speech), அரபியில் "முர்ஸல்" எனப்படும்.
c. கவிதையும் உரையும் சேர்த்த நடை (combination of both poetry and common speech), அரபியில் "சாஜ்" எனப்படும். 
அரேபிய மக்களோ அல்லது இலக்கியவாதிகளோ ஒன்றை சொல்ல அல்லது எழுத நினைத்தால், அது மேற்கூறிய ஒன்றில் அமைந்து விடும்.

ஆனால் குரானை பார்த்து இந்த அரேபிய இலக்கியவாதிகள் அதிர்ந்ததற்கு மற்றுமொரு காரணம் குரானின் வசனங்கள் மேற்கூறிய எந்த நடையிலும் இல்லை என்பதுதான். குரானின் நடை அவர்கள் இதுவரை கண்டிராதது, கற்பனை செய்ய முடியாதது.

சாதாரண மக்களுக்கோ, அந்த வசனங்களின் நெஞ்சை ஊடுருவச்செய்யும் பொருளும், அந்த பொருளை தாங்கி வந்த சொற்களின் அசாதாரண நடையும், அந்த சொற்கள் உச்சரிக்கப்பட்ட விதமும் மனதை கொள்ளைக்கொண்டன.

இன்று வரை குரான் போன்றை ஒன்றை எவராலும் உருவாக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

குரான் அருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் அதிசயமாக பார்ப்பது குரானை மட்டுமே.  நம்முடைய பலமும் அதுதான்.

அன்றும் சரி இன்றும் சரி குர்ஆன் ஆச்சர்யங்கள் அளிப்பதில் தவறியதில்லை, ஆனால் இதையெல்லாம் ஆராயாத, காதில் போட்டுக்கொள்ளாத சிலர் இருப்பதுதான் ஆச்சர்யம்.

"அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை நிச்சயமாக அவர்கள் கண்டிருப்பார்கள்" - (குர்ஆன் 4:82)

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


My sincere thanks to:
1. Br.Nouman Ali Khan, founder and CEO of Bayyinah Institute.
2. Br.Eddie of thedeenshow.com.
3. Dr.Sabeel Ahmed, Director of Outreach, Gainpeace.com, ICNA
4. Dr.Lawrence Brown, Canadian Dawah Association.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
.
  






18 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக்,
    தினமும் தங்களுடைய வலைப்பூ பதிவேற்றம் செய்யப்படுவது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
    உலகத்திலேயே பகுத்தறிவு ரீதியில் சிந்திக்கின்ற சொல்லுகின்ற வேதம் குர்ஆன் மட்டுமே. "அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் (25:73)".

    மறுப்பவர்களுக்கு பல சவால்களை முன் வைக்கின்ற வேதமும் குர்ஆன் மட்டுமே. "அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82)".

    ஆனால் இன்றைய நிலையில் கடவுளை மறப்பது தான் பகுத்தறிவு என்று சொல்லிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளும் உண்மையான கடவுள் கொள்கையை அறிந்து கொள்ள விரும்பும் ஆத்திகர்களும் குர்ஆனை முழுமையாக படித்து விளங்கி கொள்வார்களேயானால் நிச்சயம் நேர் வழி பெறுவார்கள். " இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. (திருக்குர்ஆன் 2 :2)

    ReplyDelete
  2. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. இப்பதிவை மகிழ்ச்சியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அல் குரானின் எண்ணிலடங்கா அற்புதங்களில் ஒன்றை இப்பதிவின் மூலமாக நினவூட்டுவதற்கும் அறிய தருவதற்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

    தொடரட்டும் தொய்வில்லாது.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அருமையான பதிவு!!!

    ReplyDelete
  6. salaam,

    expecting more article related to this & as you mentioned above, need more articles to educate & facilitate us to improve our knowledge which will helpful for our dhava field.

    take care
    shafiq

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அருமையான பதிவு,குரானின் ஓசை சிறப்பு ---புதிய செய்தி

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் அறிய தகவல்கள்

    ReplyDelete
  9. ஸலாம்

    இது தான் பகுத்தறிவு

    "அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் (25:73)".

    கண்ணை மூடிகிட்டு பின்பற்றுதல் இஸ்லாத்ல் இல்லைங்க ..

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே ..

    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும் ..

    இன்ஷாஅல்லாஹ் முடிந்தால் இன்னும் விரிவாக எழுதுங்கள் .. திருக்குரானை படிக்க ஆரம்பித்தால் அது நம்மை கட்டிபோட்டுவிடும் என்று சொன்னீர்கள் உண்மை தான். ஆனால் ஆனால் என்ன ஆச்சரியம் திருக்குரானை பற்றிய உங்களின் பதிவும் கவனம் மாறாமல் என்னை கட்டிபோட்டது .. ஏமாற்றம் சிறியபதிவு என்பதால் .. சந்தோசம் படித்ததில் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்ததால் ..

    அல்ஹம்துலில்லாஹ்

    வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும் .

    ReplyDelete
  11. இது குர்-ஆன் பற்றி ஓஷோ சொல்வது. நாங்கள் எதை நம்புவது?:(

    Mohammed was an absolutely illiterate man,

    and the Koran, in which his sayings are collected, is ninety-nine percent rubbish. You
    can just open the book anywhere and read it, and you will be convinced of what I am
    saying. I am not saying on a certain page — anywhere. You just open the book

    accidentally, read the page and you will be convinced of what I am saying.

    Whatsoever one percent truth there is here and there in the Koran is not Mohammed’s. It is just ordinary, ancient wisdom that uneducated people collect easily

    — more easily than the educated people, because educated people have far better

    sources of information — books, libraries, universities, scholars. The uneducated,

    simply by hearing the old people, collect a few words of wisdom here and there. And those words are significant, because for thousands of years they have been tested and found somehow true. So it is the wisdom of the ages that is scattered here and there; otherwise, it is the most ordinary book possible in the world.

    Muslims have been asking me, “Why don’t you speak on the Koran? You have spoken on The Bible, on the Gita, this and that.” I could not say to them that it is all rubbish; I simply went on postponing. Even just before I went into silence, a Muslim scholar sent the latest English version of the Koran, praying me to speak on it. But now I have to say that it is all rubbish, that is why I have not spoken on it — because why unnecessarily waste time? And this is from a paigambara, a messenger from God!


    ———From Unconciousness to Conciousness - Chapter 5 by Osho Rajneesh.

    ReplyDelete
  12. மதிப்பிற்கூறிய சமுத்ரா அவர்களுக்கு, எதை நம்புவது என்ற கேள்விக்கு என்னால் முடிந்த பதில் இறைவன் நாடினால் இங்கு தருகிறேன், ஓஷோ சொல்வது அவருடைய கருத்து உங்களுடையதாக எடுத்து விடாதீர்கள், அல்-குர்ஆணை பொறுத்த வரை வாசிக்கு அனைவருக்கும் சரியான வழியை காட்டாது, அல்-குர்ஆணை அனுப்பிய இறைவன் நாடினால் தான் அதை கொண்டு நேர்வழி பெற முடியும், இந்த கருத்தை அல்-குர்ஆனில் இருந்தே தாங்கள் தெரிந்து விடலாம்.

    தாங்களும் ஆதம்(அலை) ஒரு பிள்ளைதான், ஆதம்(அலை) அவர்களை படைத்த இறைவன் தான் இந்த அல்-குர்ஆணை இறுதி வேதமாக இறுதி இறை தூதரிடம் முகம்மது(ஸல்) அவர்களுக்கு அருளினான் என்பது அசைக்க முடியாத எங்களின் நம்பிக்கை.

    தாங்கள் முயற்சி செய்து பாருங்கள் அல்-குர்ஆணை வாசிக்க, வாசிக்கும் முன் தீய சக்தியான சைத்தானை விட்டு உங்களை படைத்த இறைவனிடம் பாதுகாப்பு தேடி துவங்குகள்.

    ReplyDelete
  13. *அல்ஹம்துலில்லாஹ்#

    ReplyDelete
  14. 'மாஷா அல்லாஹ்' அல்லாஹ் *உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்#

    ReplyDelete
  15. மிக அருமையான பதிவு சகோ...உங்கள் அனைத்து படைப்புகளும் ,நல்ல ஒரு தகவல் பெட்டகமாக உள்ளது...

    ReplyDelete
  16. அருமையான பதிவு, மாஷா அல்லாஹ்.

    ReplyDelete