உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
சமீபத்தில் வெளியான ப்யு ஆய்வறிக்கையில் (PEW REPORT) நான் கண்ட ஒரு சுவாரசியமான தகவலை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்....
முதலில் ப்யு ஆய்வறிக்கையைப் பற்றி சில தகவல்கள்...
இந்த அறிக்கை அக்டோபர், 2009ல் வெளியானது. உலக முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது. பெரும்பாலான ஊடகங்களால் நம்பத்தகுந்த அறிக்கை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கி இருப்பதாக அந்த அறிக்கையின் இரண்டாம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்களின் மக்கட்தொகை 157 (1.57 பில்லியன்) கோடி என்றும், இது உலக மக்கட்தொகையில் 23% எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது உலகில் நால்வரில் ஒருவர் முஸ்லிம்.
இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.
இதற்கு முன் நாம் அறிந்திருந்த தகவலின் படி, உலகில் 19% முஸ்லிம்கள். ஆக, ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருந்த நிலை போய் இப்போது நான்கில் ஒருவர் முஸ்லிம்.
முன்பு நான் குறிப்பிட்ட அந்த சுவாரசியமான தகவல் ஷியா-சன்னி முஸ்லிம்களின் மக்கட்தொகையைப் பற்றியது.
ப்யு அறிக்கை, உலக முஸ்லிம்களின் தொகையை துல்லியமாக தந்துள்ளதாக சொன்ன போதிலும், இந்த ஷியா-சன்னி மக்கட்தொகையை பற்றிய அவர்களது கணிப்பு துல்லியமானது அல்ல. இதை அவர்களே அந்த அறிக்கையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது, அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிற 157 கோடி என்ற முஸ்லிம்களின் மக்கட்தொகை சரியானது. ஆனால் அதில் 10-13% ஷியாக்கள் என்றும், 87-90% சன்னிகள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது சரியானது இல்லை.
இதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுவாரசியமானது, அதாவது, அவர்களால் ஷியா-சன்னி மக்கட்தொகையை சரியாக சொல்லமுடியாததற்க்கு காரணம், கணக்கெடுப்பிற்காக முஸ்லிம்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, பலரும் "நாங்கள் முஸ்லிம்கள், அவ்வளவுதான்" என்று கூறியதே.
அதாவது பலரும் தங்களை ஷியா என்றோ சன்னி என்றோ வகைப்படுத்த விரும்பவில்லை என்பதுதான்...அட...
இதைப் பற்றி, ப்யு ஆய்வறிக்கை அதன் 38 வது பக்கத்தில் கூறுவதாவது,
"முஸ்லிம்களில் பலர் தங்களை சன்னி என்றோ ஷியா என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.அதனால் நாங்கள் கொடுத்திருக்கும் ஷியா-சுன்னி தகவல் துல்லியமானது இல்லை, இதனை படிப்பவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்"
அப்புறம் எப்படி கணக்கெடுத்தார்கள்? வேறு சில முந்தைய தகவல்களை வைத்து தான். ஆனால் அந்த தகவல்களும் எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை என்றும் கூறிவிட்டார்கள். இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ப்யு அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர்களின் அறிக்கைப்படி ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது ஈரான், ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தியா.
என்ன இந்தியாவா? நான் ஆச்சரியப்பட்டேன்.
ஒருவேளை, நம்மூருக்கு வந்து, தர்காக்களுக்கு போகும் நம்மாட்களை பார்த்துவிட்டு அவர்களையும் ஷியா கணக்கில் சேர்த்து விட்டார்களோ என்னவோ...
என் வலைப்பதிவை படிப்பவர்களில் ஷியாக்கள் யாராவது இருந்தால் நான் அவர்களை கேட்டுக்கொள்வது, நன்றாக ஆராய்ந்து உங்கள் கொள்கைகளை திருத்திக்கொள்ள முன்வாருங்கள் என்பதுதான். சொல்ல வேண்டியது எங்களின் கடமை, ஏற்றுக்கொள்வது உங்கள் இஷ்டம்.
ஐரோப்பாவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு ரஷ்யா. சுமார் 1 கோடியே 64 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள், அதற்கடுத்து ஜெர்மனியில் சுமார் 40 லட்சம் முஸ்லிம்களும், பிரான்சில் 35 லட்சம் முஸ்லிம்களும், பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.
தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினாவில் சுமார் 7 லட்சம் முஸ்லிம்களும், பிரேசில் நாட்டில் சுமார் 2 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். வட அமெரிக்க நாடுகளான கனடாவில் சுமார் 6.5 லட்சம் முஸ்லிம்களும், அமெரிக்காவில் 24.5 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள்.
உலகிலேயே ஒரு நாட்டில் முஸ்லிம்கள் வாழும் சதவிதம் அதிகமிருப்பது அப்கானிஸ்தானில் தான், இங்கு வாழக்கூடிய மக்களில் 99.7% பேர் முஸ்லிம்கள்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இந்த அறிக்கையில் உள்ள மக்கட்தொகை கணக்கெடுப்பு, சில நாடுகளில் 2000,2001,2002 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை. மற்ற நாடுகளிலோ 2005, 2006 போன்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை.
இந்த வருட இறுதியில், மற்றுமொரு ஆய்வறிக்கை இதே நிறுவனத்தால் வெளியாகப்போகிறது. அது, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் மக்கட்தொகை எப்படி இருக்கும் என்பது பற்றியது.
இறைவன் நன் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
Reference:
1. Mapping the global population - A report on the size and distribution of world's Muslim population, released by PEW research center on October,2009.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
இசுலாம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது தெரிதே விசயம்தான்.ஆனால் தங்களை ஷியா,சன்னி என்று அடையாளப்படுத்தி கொள்ள முசுலிம்கள் விரும்ப வில்லை என்பது ஆச்சர்யத்தை தரும் மகிழ்ச்சியான விசயம்.
ReplyDeleteசியா சுன்னி இருவரும்மே இருவரின் கொள்கையை சரியான முறையில் புரியாத்து தான் காரணம் இது மகிழ்ச்சியான செய்தி அல்ல. ஈரான் மற்றும் ஈராகில் சுன்னிகளுக்கு அவர்கள் புரியும் அநியாயம் அட்டுளியமே சாட்சி.
ReplyDeleteAssalamu alaikumm,
ReplyDeleteMay ALLAH bless you Brother Ashiq!
http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Muslim_population
அன்பு அனானி,
ReplyDeleteசலாம்...
உங்களுடைய மறுமொழியை என்னால் பிரசுரிக்க முடியாது. வார்த்தைகளில் கண்ணியம் காத்து கொள்ளுங்கள்....
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான அறிவு இன்றைய முஸ்லிம்களிடம் ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
ReplyDeleteஅஸ்ஸலாமு அல்லைக்கும் ஆஷிக் அஹமத்,
ReplyDeleteஉங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.....
ஷியாக்களை பற்றி எழுதுமாறும் கேட்டுக்கொள்கிறேன்...
யார் இந்த ஷியாக்களை? அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அவர்களின் கொள்கை என்ன? அவர்கள் எப்படி உருவானார்கள்? அவர்களை காரிஜிக்கள் உருவாக்கினார்கள் இப்போது அவர்கள் ஓமனில் பெரும்பான்மையாக இருக்குறார்கள்.அவர்களை இபாடி (Ibaadi) என்று அழைக்கபடுகிறார்கள்...
இதை பற்றி உங்கள் வலைப்பூவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
இப்படிக்கு உங்கள் இலங்கை சகோதரன்
zayeem anfaaz
ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் அரபு மொழி சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
ReplyDeleteஇந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். எஞ்சிய பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சுன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.
முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகன்களில் ஒருவரான அலியே நபிகளாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.
விக்கிபீடியாவில் காப்பி அடித்தது இந்த தகவல்,,, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
ReplyDelete