Pages

Thursday, March 4, 2010

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - I



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....

லகில் எந்தவொரு இனமும் மற்றொன்றிற்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது. அறிவுத்திறனில் அனைவரும் சிறந்தே விளங்கி இருக்கின்றனர். இது புரியாத அல்லது தெரியாத சிலர்

  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

- இப்படியான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்...

  • இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?
  • ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்கவிடாமல் செய்தனர்?

"நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்பவர்களுக்கு, ஸ்டான்லி பல்கலைகழகத்தின் மொழி மற்றும் தகவல் துறை தலைவரான கீத் டவ்ளின் கூறுவதை முதலில் தெரிவித்துவிடுவோம். 

அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.


குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.

இந்த காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் அறிவியலுக்கான பங்களிப்பு என்பது அளப்பறியது. முஸ்லிம்களில் நூற்றுக்கணக்கான அறிவியல் மேதைகளையும், கணித மேதைகளையும் உருவாக்கிய காலகட்டம். அறிவியலின் பல பிரிவுகளில் தங்களின் தனி முத்திரையை முஸ்லிம்கள் பதித்தனர். பாக்தாத்தும் (Baghdad), ஸ்பெயின்னும் (Spain) உலகின் தலைச்சிறந்த கல்வி கற்கும் இடங்களாக இருந்தன. பல்வேறு நாட்டு மாணவர்கள் படிப்பதற்காக  இந்த இடங்களுக்கு தான் வருவார்கள். அரபி மொழியில் தான் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.  

இந்த காலக்கட்டத்தில் தான், முஸ்லிம்கள் எழுதிய பல ஆராய்ச்சி நூல்கள் லத்தீன் (Latin) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய தேசங்களுக்கு சென்றன. இந்த நூல்கள் தான் ஐரோப்பிய தேசங்களின் நூலகங்களை அலங்கரித்தன. இந்த நூல்களை  தான் ஐரோப்பிய அறிவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாக பயன்படுத்தினார்கள். முஸ்லிம்களின் பல ஆராய்ச்சிகளை பயன்படுத்திதான் ஐரோப்பியர்கள் அறிவியலில் முன்னேறினார்கள்.

ஐரோப்பியர்களின் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய்  விளங்கியது முஸ்லிம்களின் ஆராய்ச்சிகள்தான்.  

முஸ்லிம்களின் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாய் விளங்கியது குர்ஆன் தான், அதன் "ஆராய்ந்து செயல்படுங்கள்" என்ற வார்த்தைகள்தான்.  
                                  
முஸ்லிம்களின் பங்களிப்பை முழுமையாக எழுதுவதற்கு மிக அதிக  பக்கங்கள் தேவைப்படும். அதனால் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருப்பது ஒரு பிரிவைப்பற்றிதான். இதனை அடிப்படையாக வைத்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பதிவின் நோக்கம் ஒன்றுதான், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு நம்மவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதுதான்.

இதனை நான் சொல்லவில்லை, வரலாற்று ஆசிரியர்கள் தான் சொல்லுகிறார்கள்.       

இந்த பதிவில் கணிதத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

கணிதம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதில் பங்காற்றிய முஸ்லிம்களின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு கணிதத்துறையில் முஸ்லிம்களின் மிக முக்கியமான சில பங்களிப்புகளை மட்டும் காண்போம்...இன்ஷா அல்லாஹ்

கணிதத்தின் பிரிவுகளில் முக்கியமானவை நான்கு, அவை
  1. எண் கணிதம் (Arithmetic)
  2. அட்சர கணிதம் (Algebra)
  3. கேத்திர கணிதம் (Geometry)
  4. கோணவியல் (Trignometry)
இந்த நான்கிலும் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒவ்வொன்றாக காண்போம்.       

1. எண் கணிதம் (Arithmetic):


எண் கணிதம் என்பது எண்களைப்பற்றியும் (0 to 9), எண்ணும் முறைகளைப் (like 11, 874, 9001) பற்றியும் மற்றும் அதனைச் சார்ந்த கூட்டல் (Addition), கழித்தல் (subtraction), பெருக்கல் (Multiplication) மற்றும் வகுத்தல் (Division) பற்றியும் விளக்கும் கணிதத்தின் ஒரு பிரிவாகும்.    

எண்கள்:

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்கள் "0,1,2,3,4,5,6,7,8,9", இந்த எண்களுக்கு பெயர் "அரேபிய எண்கள் (Arabic Numerals)" என்பதாகும். அதாவது இன்று நாம் பயன்படுத்தக்கூடிய எண்களை முதன்முதலில் ஐரோப்பிய தேசங்களுக்கு அறிமுகப்படுத்தியது முஸ்லிம்கள்தான்.


நீங்கள் தற்போதுள்ள அரபி எண்களையும், இப்போது நாம் பயன்படுத்தும் எண்களையும் பார்த்தீர்களானால், இவ்விரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துக்கொள்வீர்கள். ஐரோப்பியர்கள் அரபி எண்களை எடுத்து அதில் மாற்றங்களை செய்து தற்போதுள்ள எண்களாக மாற்றிவிட்டனர்.

இந்த "சைபர் (Cipher/Cypher, '0') " என்ற வார்த்தையை கூர்ந்து கவனியுங்கள். அரபியில் இந்த சைபரை குறிக்க "சிபர் (Sifr)" என்ற எண்ணை பயன்படுத்துவோம். இன்று நாம் '0' வை குறிக்க பயன்படுத்தும் சைபர் என்ற வார்த்தை அரபியில் உள்ள சிபர் (Sifr) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான்.

அரபியில் இருந்து வந்த எண்கள் என்பதால் ஐரோப்பியர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எண்களுக்கு அரேபிய எண்கள் என்று பெயர் சூட்டிவிட்டனர்.  

அதனாலயே இந்த எண்கள் இன்று வரையும் அரேபிய எண்கள் (Arabic Numerals) என்று அழைக்கப்படுகின்றன.

எண்ணும் முறை:

மேற்கொண்டு செல்லும்முன் இங்கே சற்று நிறுத்தி சில முக்கிய தகவல்களை பார்க்கவேண்டியது இந்த பதிவிற்கு அவசியமாகிறது.  

அரேபிய எண்களுக்கு முன்னமே உலகில் எண்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அவைகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்
  • கிரேக்கர்கள்
  • எகிப்தியர்கள் 
  • ரோமானியர்கள் மற்றும்
  • ஹிந்துக்கள் 

இவர்களில் ரோமானியர்கள் மற்றும் ஹிந்துக்களின் எண்கள் முறைதான் பிரபலமானது. முதலில் ரோமானியர்களின் எண்களை பார்ப்போம். இந்த வகை எண்கள் இன்றளவும் புழுக்கத்தில் இருக்கின்றன. நமக்கும் நன்கு அறிந்த ஒன்று.

1-I, 2-II, 3-III, 4-IV, 5-V, 6-VI ...... 10-X, 11-XI, 12-XII....

இந்த வகையான எண்களில் உள்ள மாபெரும் பிரச்சனை என்னவென்றால், மூன்று வரை எண்களை அடையாளம் காண்பது எளிது. ஆனால் அதன் பிறகு மிகவும் கடினமாகிவிடுகிறது, பெரிய தொகையென்றால் அவ்வளவுதான்...உதாரணத்துக்கு 323 என்ற எண்ணை எழுதவேண்டும் என்றால், ரோமானிய முறைப்படி CCC XX III (C=100, X=10, I -1) என்று எழுதவேண்டும். இது ஒரு கடினமான முறை தான். 

மற்றுமொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், '0' நடுவில் வந்தால் மாபெரும் குழப்பம்தான். உதாரணத்துக்கு 302  என்று எழுதவேண்டுமானால் CCCII என்று எழுதவேண்டும். ஆனால் XXX II என்று எழுதினாலும் அதனை 302 ஆக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. 

ஆக, எந்த ஒரு எண்ணையும் ரோமானிய வடிவங்களால் குறிக்க முடியும் என்றாலும், அது ஒரு கடினமான கணிதமுறையாகவே இருந்தது.

அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர். 


இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது. 

ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹிந்துக்களின் இந்த முறையில் '0' வை குறிக்கும் எந்த ஒரு வடிவமும் இல்லை. பின்னர் ஹிந்துக்களால் '0' என்ற வடிவம் கண்டுபிடிக்க பட்டதாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஒன்பதாம் நூற்றாண்டுவரை எந்த ஒரு சான்றுமில்லை. குவாலியரில் கண்டுபிடிக்கப்பட்ட 876 ஆம் காலத்திய கல்வெட்டில் தான் '0' இருந்தது (தற்போது நாம் பயன்படுத்தும் சைபர் போலல்லாமல் சிறிதாக இருந்தது), இதுதான் முதல் தெளிவான சான்று. இதற்கு முன் என்றால் ஆர்யபட்டர் 'க (Kha)' என்ற எழுத்தை "ஒன்றுமில்லாததை (Void/empty place)" குறிக்க பயன்படுத்தி இருக்கிறார். உதாரணத்துக்கு 302-ஐ குறிக்க வேண்டுமானால் 3க2 என்று பயன்படுத்தி இருக்கிறார். 

ஆக, ஹிந்துக்கள் முதலில் கண்டுபிடித்த எண்களில் '0' கிடையாது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சைபரையும் (0) அவர்கள் ஒரு எண்ணாக (நம்பர்ராக)  கருத இல்லை. அதனை "ஒன்றுமில்லாததை (Hindus used zero to represent a empty place but didn't include it in the set of Numbers) " குறிக்க மட்டுமே பயன்படுத்தினர். ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.

பதிவிற்கு வருவோம்....

சரி, முஸ்லிம்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். முஸ்லிம்களுக்கு கணிதத்தில்    பயன்படுத்த வடிவங்கள் தேவைப்பட்டது. ரோமானிய, கிரேக்க மற்றும் எகிப்திய எண்கள் கடினமானதாகப்பட்டது. 

ஹிந்துக்களின் எண்கள் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தின. தாங்களும் ஏன் ஒவ்வொரு எண்ணையும் குறிக்க ஒவ்வொரு வடிவத்தை பயன்படுத்த கூடாது என்றெண்ணி தற்போதுள்ள அரேபிய எண்களை (ஹிந்துக்களின் வடிவமைப்பை பார்த்து தங்கள் எண்களை உருவாக்கியதால், இந்த அரேபிய எண்கள் அரபி-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) வடிவமைத்தனர். 

முஸ்லிம்கள் ஒன்றுமில்லாததை குறிக்க "சிபர் (sifr)" என்ற வடிவத்தை பயன்படுத்தினர், ஆனால் அவர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் "சிபர் (sifr)" வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). 

அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9  என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது.

இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.

அதாவது, ஒன்று முதல் ஒன்பது வரை எண்ணிவிட்டு பின்னர் "பத்து" என்றால் ஒன்று போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம், பின்னர் பதினொன்றிலிருந்து பத்தொம்பது வரை எண்ணி பிறகு "இருபது" என்பதை இரண்டு போட்டு பக்கத்தில் சைபர் போடுகிறோம் அல்லவா, இதெல்லாம் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் வந்ததுதான். அதுபோலவே 20, 3000, 400000 etc....

இன்றைய எண்ணும் முறைகளை எளிமையாக, நேர்த்தியாக கொண்டு வந்தது முஸ்லிம்கள் தான்   அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் சைபரை ஒரு எண்ணாக சேர்த்ததால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை மிக எளிமையாக, நேர்த்தியாக கணக்கிடப்பட்டன. 

"Hindu Mathematicians in Southern India first created zero but did not recognise it as Number. They used Zero only as a place holder when no number existed. Add 4+6, you get 10, one in tens column and 0 in one's column. The Hindus realised that they needed a way to indicate that there was no number in units position.
For 400 years, that was the only use of Zero. No one added, subracted, multiplied, or divided it. It was only used to hold an empty place for a missing Number. So, 2003 could be written differently than 2030 or 23.
Before 800 AD the Hindu number system migrated west into Arab world. There a brilliant Mathematician, Al-Khwarizmi, invented Zero as a Number. He realised that it has to be a number in order for the emerging system of algebric equation to work"  --- Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.            

ஹிந்து கணக்கியலாளர்கள், சைபரை முதன் முதலாக உருவாக்கினாலும், அதனை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. 4+6 = 10, இப்பொழுது ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள். 400 வருடங்களாக அதுதான் சைபரின் பயன்பாடாக இருந்தது. சைபரை யாரும் கூட்டவில்லை, கழிக்கவில்லை, பெருக்கவில்லை அல்லது வகுக்கவில்லை. 
8-ஆம் நூற்றாண்டில் ஹிந்து எண்கள் அரேபிய உலகிற்கு சென்றன. அங்கே அல்-கரிஷ்மி என்ற அற்புதமான கணித மேதை, சைபரை ஒரு எண்ணாக கண்டுபிடித்தார் --- (ectract from the original quote of) Kendall F.Haven, in his book Marvels of Math, Fascinating reads and awesome activites, page no.13.   

முஸ்லிம்களின், சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்ட இந்த முறைதான் இன்று நாம் கணிதத்தை எளிமையாக எடுத்து செல்ல உதவுகிறது. இது வரலாற்றில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக புகழவும் படுகிறது. 

அதுமட்டுமல்ல, "தசம பின்னல் (Decimal Fractions)" முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான்.உதாரணத்துக்கு,கணிதத்தில் 10/4 என்றால் 2.5  என்று உபயோகப்படுத்துகிறோமே, இந்த தசம பின்னல் முறையை கண்டுபிடித்ததும் முஸ்லிம்கள்தான். 

பின்னாட்களில் முஸ்லிம்களின் அரபி கணித புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பாவிற்கு சென்றன. அதனை ஐரோப்பியர்கள் தங்கள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்...   

ஆக, எண் கணிதத்தை (Arithmetic Maths) பொறுத்தவரை நாம்தான் இன்றைய கணிதத்திற்கு முன்னோடி. இன்று இருக்ககூடிய 
  • எண்களாகட்டும் (0 to 9), 
  • எண்ணும் முறைகளாகட்டும் (10,30,8000...), 
  • கூட்டல் போன்ற செயல்களாகட்டும், 
  • தசம பின்னல் முறைகளாகட்டும் முஸ்லிம்களின் பங்களிப்பு முதன்மையானது                                                                                
இப்போது நான் மேலே சொன்ன தகவல்களை எல்லாம் யார் கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

சிபர் (sifr) வடிவத்தை ஒரு எண்ணாக கணக்கிட்டது:   

சைபரை ஒரு எண்ணாக கணக்கிட்டு கணித துறையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவர், உலகின் மிகச்சிறந்த கணிதமேதைகளில் ஒருவர் என்று புகழப்படும் அபு அப்துல்லாஹ் முஹம்மது இப்ன் மூஸா அல் கரிஷ்மி (Abu Abdullah Muhammed ibn Musa al Khwarizmi, 780-850) அவர்கள். அல்ஜீப்ராவை (Algebra) கண்டுபிடித்ததும் இவரே. 

இவர் படம் பொறித்த தபால் தலையை சோவியத் ரஷ்யா 1983 ஆம் ஆண்டு வெளியிட்டு இவருக்கு பெருமை சேர்த்தது.      

இவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கிறார். இங்கு நாம் கணித துறையை மட்டும் பார்ப்போம். இவர் ஹிந்துக்களின் எண்களை எடுத்து அதில் சிபரை சேர்த்து கணிதத்துறையை மற்றுமொரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்றார். இவருடைய நூல்களில் இந்த எண்களை பயன்படுத்தி கூட்டல் மற்றும் கழித்தல் போன்றவற்றை மிக எளிதாக, நேர்த்தியாக விளக்கி காட்டினார். இவருடைய இந்த பங்களிப்பே இன்றைய எண்கணித முறைக்கு முன்னோடி. 

தசம கணித (Decimal Fractions) முறையை கண்டுபிடித்தது அல்-கசி (Al-Kashi) அவர்கள், பதினைந்தாம் நூற்ற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடித்தார். கணிதத்தில் இவருடைய பணி மிகச்சிறந்தது.   

இந்த துறைக்கு இவர்களைத்தவிர பல முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை தந்திருக்கின்றனர், நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் அறிந்து கொள்வீர்கள். 

2. அட்சர கணிதம் (Algebra)

இன்று பல துறைகளில் இன்றியமையாததாய் இருக்கும் அட்சர கணிதத்தை கொண்டு வந்தது நாம் முன்னே பார்த்த அல் கரிஷ்மி அவர்கள் தான். அட்சர கணிதத்தின் தந்தை (Father of Algebra) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இதைப் பற்றி எழுதிய புத்தகம் "கிதாப் அல்-ஜபர் வல் முகாபுலா (Kitab al-jabr wa-l-Muqabulaa, Book on calculation by completion and balancing, 830 AD)". இந்த "அல்-ஜபர்" என்ற வார்த்தைதான் "அல்ஜீப்ரா" ஆனது. அதுபோல இவருடைய பெயரை லத்தீன் மொழியில் மாற்றம் செய்யும் போது உருவான வார்த்தை தான் "அல்காரிதம் (Algorithm)" என்பது.

மிக அழகாக, எளிமையாக, நேர்த்தியாக, பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய வாதத்தை விளக்கினார். இவருடைய இந்த பணி கணிதத்தில் ஒரு மாபெரும் புரட்சி. சதுக்கம் (Square) மற்றும் வர்க்கமூலங்களை (Square root) மிக அழகாக பயன்படுத்தி காட்டினார்.

இவர் மட்டுமல்லாமல் இந்த துறையில் சாதித்த முஸ்லிம்கள் பலர், இவர்கள் அல்- கரிஷ்மி அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. சரித்திரம் பின்வரும் கணித மேதைகளையும் மிக அதிகமாகவே புகழ்கிறது. 
  • சிறந்த புலவராக அறியப்பட்ட ஓமர் கையாம் (Omar Khayyam) அவர்கள் ஒரு மிகச்சிறந்த கணிதமேதையும் ஆவார்.  
  • அபுல் கமில் (Abul Kamil) அவர்கள் 
  • அபு பக்கர் கார்கி (Abu Bakr Karkhi) அவர்கள் என்று ஏராளமானோர்...   
இவர்கள் அனைவரும் அல்-கரிஷ்மி அவர்களின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அட்சர கணிதத்தை மேலும் பளபளப்பாக்கினர். இவர்களுடைய நூல்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, கணிதத்துறையில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இன்றைய அட்சர கணிதத்தை முழுமையாக கண்டுபிடித்தது முஸ்லிம்கள் என்றால் அது மிகையாகாது.    


3. கேத்திர கணிதம் (Geometry) 

கணிதத்தின் மற்ற துறைகளைப் போலவே கேத்திர கணிதத்தில் முஸ்லிம்களின் பங்கு அளப்பறியது.

முஸ்லிம்களுக்கு முன்னே இதில் சிறந்து விளங்கியவர்கள் எகிப்தியர்கள், பிரமீட்களை கேத்திர கணித முறையை பயன்படுத்தி கட்டியவர்கள் அவர்கள். அதுபோலவே கிரேக்கர்களும் இந்த துறையில் தனி ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த துறையில் சிறந்து விளங்கிய யுக்லிட் (Euclid) அவர்கள் ஒரு கிரேக்கர்.

முஸ்லிம்கள் இந்த துறையில் ஆற்றிய ஒரு பெரிய பங்களிப்பாக உலகம் பார்ப்பது, அவர்கள் அந்த கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை அரபியில் மொழிபெயர்த்து அந்த நூல்களை அழிய விடாமல் காத்தது தான். மொழிபெயர்ப்பு என்றால் சாதாரணமில்லை. இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களால் மட்டுமே செய்ய முடியும். கிரேக்க மற்றும் எகிப்திய நூல்களை மொழி பெயர்க்குமளவு முஸ்லிம்கள் கணித அறிவை  கொண்டிருந்தனர்.

முஸ்லிம்கள் அந்த நூல்களை மொழிபெயர்க்க காரணம், அவற்றை தங்கள் மொழியில் புரிந்துக்கொண்டு மேலும் இந்த துறையில் முன்னேற்றங்களை கொண்டுவரவேண்டும் என்பதற்காகத்தான்.

முஸ்லிம்கள் அரபியில் மொழி பெயர்த்த இந்த நூல்கள்தான் பின்னர், அரபியில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ஐரோப்பியர்கள் அதனை எடுத்துக்கொண்டனர். ஆக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை என்றால் கிரேக்க மற்றும் எகிப்திய நூல்கள் அழிந்துபோயிருக்கும். இது ஒரு சிறப்பான பணியாக கணித துறையில் பாராட்டப்படுகிறது.

மொழி பெயர்த்து தங்களுடைய பங்களிப்பை இந்த பிரிவில் காட்டியது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் தங்களின் தனி முத்திரையையும் இந்த பிரிவில் பதித்தனர். பல புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.
"It had a large number of, geometrical problems for the fundamental construction of plane geometry to the constructions of the corners of a regular polyhedron on the circumscribed sphere of special interest is the fact that a number of these problems are solved by a single span of the compass, a condition which we find for the first time here." --- H.Suter 
இந்த துறையில் முஸ்லிம்களின் பணியானது கிரேக்கர்கள் மற்றும் ஹிந்துக்களின் பணியை விட மிக மேன்மையானதாக இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (Muslims were much in advance of Hindus and Greeks in the development and use of geometry).

கேத்திர கணிதத்தில் "பை (Pi)" என்ற சொல்லுக்கு தசம பின்னல் (Decimal Fractions) முறைப்படி ஒன்பது எண்களைக்கொண்டு விடையளித்தவர் நாம் முன்னே பார்த்த அல்-கசி (Al-Kashi) அவர்கள்.  
"In 1424 Al-Kashi published a treatise on circumference, in which he calculated "pi", the ratio of a circle's circumference to its diameter, to nine decimal places. Nearly two hundred years would pass before another mathematician surpassed this achievement"
முஸ்லிம்கள், எண்ணற்ற நூல்களை இந்த பிரிவில் எழுதினர், அவை முஸ்லிம்களின் கணித அறிவுக்கு மற்றுமொரு சான்று.

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • முஹம்மது, ஹசன் மற்றும் அஹ்மத் சகோதரர்கள் 
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi)
  • தபித் பின் குர்ரா (Thabit bin qurra)
  • அல்-இஸ்பாஹனி (Al-Isfahani)             


4. கோணவியல் (Trigonometry)


கோணவியல், பல்வேறு பொருள்களுக்குண்டான தூரத்தை அளக்க பயன்படும் கணிதத்தின் ஒரு பிரிவு. முஸ்லிம்களுக்கு முன்னால் பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ஹிந்துக்கள் என்று பலரும் இந்த பிரிவைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். ஆனால் நாம் இப்போது அறிந்திருப்பது போல அது கணிதத்தின் ஒரு பிரிவு கிடையாது. வான சாஸ்த்திரத்தில் ஒரு பகுதியாகவே அறியப்பட்டிருந்தது.

முதன் முதலில் கோணவியலை வான சாஸ்த்திரத்தில் இருந்து பிரித்து அதனை கணிதத்தின் ஒரு பிரிவாக கையாண்டது முஸ்லிம்கள்தான். இதனை செய்தவர் நசீருதின் அல்-தூசி (Nasiruddin al-Tusi), இவர் தான் இன்று நாம் பயன்படுத்தக்கூடிய உருண்டை கோல கோணவியலை (Spherical Trigonometry) தற்போதைய நிலைக்கு உருவாக்கியவர். அதனாலயே இவர் கோணவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 

கோணவியலில் பல புதுமைகளை புகுத்தியவர்கள் முஸ்லிம்கள்தான். 
"It was after this development in Islamic mathematics that the first real trigonometry emerged"             --- E. S. Kennedy       
  • சமதள கோணவியலை (Plane Trigonometry) உருவாக்கியதும் நாம்தான். 
  • சைன் மற்றும் கோசைன் (Sine and Cosine tables) குறித்த தகவல்களை துல்லியமாக கணக்கிட்டது முஸ்லிம்கள்தான்.
  • டேஜன்ட் டேபல்ஸ் (Tangent tables) முறையை முதலில் கொண்டுவந்தது முஸ்லிம்கள் தான்....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கோணவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இன்றைய கோணவியலுக்கு வழிகாட்டி..

இந்த துறையில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களில் சிலர்
  • அல் கரிஷ்மி (Al-Khwarizmi)
  • அல் பதானி (Al-Battani)
  • ஜபிர் பின் ஆபியா (Jabir bin Afiah)
  • அபுல் வாபா அல்-பஸ்ஜனி (Abul wafa al-Buzjani)
  • அபுல் ஹசன் கொஷியர் (Abul Hasan Koshiar)
  • அபு ரய்ஹன் பிருணி (Abu Rayhan Biruni)
  • தகி அல்-டின் (Taqi Al-din)
  • ஜம்ஷெட் அல்-கசி (Jamshed al-Kashi)
  • ஓமர் கையாம் (Omar Khayyam)              

இப்படிப்பட்ட மேதைகளை தான் இஸ்லாமிய உலகம் கணிதத் துறைக்கு கொடுத்தது. அவர்கள், அவர்களது காலத்தில் கணிதத்தில் முன்னோடிகளாக இருந்தது மட்டுமில்லாமல் இன்றைய பல கணித முறைகளுக்கும் அவர்கள் தான் வழிகாட்டி. ஐரோப்பிய உலகம் இவர்களது நூல்களை பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை மொழிபெயர்த்து கொண்டு, தங்களது ஆராய்ச்சிகளை இவர்களது உதவியைக் கொண்டு முன்னேற்றி சென்றது. 

"சமீபத்திய ஆராய்ச்சிகள் நாம் அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளுக்கு கடன் பட்டிருப்பதாக கூறுகின்றன. நாம் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இன்றைய கணிதத்தின் பல அற்புதமான எண்ணங்களை 16,17,18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கணிதமேதைகள் கண்டுபிடித்ததாக, அவையெல்லாம் நிச்சயமாக அரேபிய/இஸ்லாமிய எண்ணங்கள் என்று இப்போது தெரிய வருகின்றன. பல கோணங்களிலும், இன்று நாம் படிக்கக்கூடிய கணித முறைகளின் பாணி, கிரேக்கர்களின் கணித பாணியை விட  அரேபிய/இஸ்லாமிய கணித முறைகளையே மிகவும் ஒத்துவருகிறது"  --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics             
"Recent research paints a new picture of the debt that we owe to Arabic/Islamic mathematics. Certainly many of the ideas which were previously thought to have been brilliant new conceptions due to European mathematicians of the sixteenth, seventeenth and eighteenth centuries are now known to have been developed by Arabic/Islamic mathematicians around four centuries earlier. In many respects the mathematics studied today is far closer in style to that of the Arabic/Islamic contribution than to that of the Greeks" --- John J.O'Conner and Edmund F.Robertson, The MacTutor History of Mathematics
 
ஆக, கீத் டெவ்ளின் (Keith Devlin) அவர்கள் சொன்னது போல, முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகவில்லை. 

அப்படிப்பட்ட தாக்கத்தை முஸ்லிம்கள் கணிதத்துறையில் ஏற்படுத்தியுள்ளனர். இதனை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. 

மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின்   இந்த சாதனைகள் இஸ்லாத்தை சுற்றியே வந்துள்ளன. உதாரணத்துக்கு பிறையை கணக்கிட தொடங்கியே வான சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினர்.

அவர்களுக்கு பெரும் ஊக்கமாய் இருந்தது குரான். சற்று சிந்தித்து பாருங்கள், நான் மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் எல்லோரும் குரான் அருளப்பட்ட காலத்திற்கு பிந்தியவர்கள் தான். குரான் அருளப்படுவதற்கு முந்தைய அரேபியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இந்த தலைக்கீழ் நிலைமைக்கு காரணம் இஸ்லாம்.

இங்கே நான் குறிப்பிட்டுள்ளவை மிகச் சிறிதே. நீங்கள் அறிவியலின் எந்த ஒரு முக்கிய துறையை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் உணர்ந்து கொள்வீர்கள். வியப்பின் எல்லைக்கு செல்வீர்கள்.

இதையெல்லாம் ஏன் நம் சகோதரர்கள் பள்ளிகளில் படிப்பதில்லை? ஏன் சில தகவல்கள் திட்டமிட்டு திசைதிருப்ப படுகின்றன? இறைவனே எல்லாம் அறிந்தவன். 

  • நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

இனி இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினமாக இருக்காது...ஆம் பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொம்பதாம் நூற்றாண்டு வரை, சுமார் 300 ஆண்டுகள் நமக்கு இருண்ட காலம்தான். இதற்கு பல காரணங்களை சொல்லலாம். ஒவ்வொரு சமுதாயமும் இது போன்ற காலங்களை சந்தித்து தான் வந்துள்ளன.

தற்போது நிலைமை மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்றது. உதாரணத்துக்கு,  நான் தனித்துவம் பெற்றுள்ள துறையில் (VLSI design, Semiconductor Physics) அதிக அளவிலான ஆய்வுக்கட்டுரைகள் முஸ்லிம்களால் சமர்பிக்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவியலின் பல்வேறு துறைகளிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்க ஏக இறைவன் உதவுவானாக...ஆமீன். 

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

இறைவனே எல்லாம் அறிந்தவன்... 

My Sincere thanks to:
1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada. 

References:
1. Tamil translations of Mathematical terms taken from online Tamil dictionary site, tamildictdotcom.
2. Islam: A thousand years of Faith and Power - Jonathan Bloom and Sheila Blair.
3.ARAMCO and Its World: Arabia And The Middle East - Edited by Ismail I. Nawwab, Peter C. Speers & Paul F. Hoye.
4. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America
5. Arabic Mathematics: Forgotten Brilliance? - MacTutor History of Mathematics.
6. Arabic-Hindu numerals - Encyclopedia Brittanica
7. Origin of the Arabic Numerals: A natural history of numbers - Adel S.Bishtawi
8. Marvels of Math: Fascinating reads and Awesome Activities - Kendall F.Haven
9. Muslims Contribution to Mathematics - Shirali Kadyrov.
10. Al-Khwarizmi Biography - Biography base.
11. Muslims Contributions - Net Muslims
 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

25 comments:

  1. Dear brother Aashiq Ahmad,
    Assalaamun alaikkum warahmatullaahi wabarakkatuh....

    I'm following your blog. You are doing a monumental work which will reserve a high place for you in aakhira, inshaAllah.
    Yours this article is worthy enough to preserve and as the answer link for the questions //* நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? * அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?//

    Regarding this subject, I kindly request you to extend your work in exploring muslims' achievements not only in the field of mathematics but also in every other fields, please.

    Yours lovingly,
    Mohamed Ashik.

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் ஆஷிக்,
    மிகச் சிறந்த கட்டுரை. தற்காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்றை எடுத்து மிகச் சிறப்பாக பதில் கொடுத்து விளக்கியிருக்கின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமியர்களின் இத்தகைய பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு காரணம் இரண்டை சொல்லலாம்.

    முதலாவது ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தின் மேல் இருக்கின்ற வெறுப்பு. அறிவியலில் இஸ்லாத்தின் பங்களிப்பை பற்றி மிகச் சரியாக சொல்லாமல் இருட்டடிப்பு செய்ததற்கு காரணங்களில் ஒன்று. குர்ஆன் பற்றிய தாக்கம் ஏற்பட்டு ஐரோப்பியர்கள் அதை நோக்கி சென்று விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருட்டடிப்பு செய்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.

    இரண்டாவது காரணம் முஸ்லிம்கள். ஆம் கண்டிப்பாக முஸ்லிம்கள் தான் இதற்கு முக்கிய காரணம். உலக கல்வி மார்க்க கல்வி என்று கல்வியை பிரித்த புரோகித உலமாக்கள் தான் இந்த அவல நிலைக்கு காரணம். இன்று வரை இஸ்லாமிய மதரசாக்களில் உலக கல்வியை குறிப்பாக அறிவியலை போதிக்க விடாமல் தடுக்கின்றவர்கள் இவர்கள் தான். மதராசவில் பயிலும் மாணவன் எந்த ஒரு உலக அறிவையும் பெறாமலேயே வந்து விடுவதால் அந்த மாணவன் இமாமாக பணியாற்றுகின்ற பெரும்பாலான பள்ளிவாசல்கள் வெறுமனே சடங்குகளை மட்டுமே போதிக்கின்ற தளங்களாக மாறியிருக்கின்றன. இந்த அவல நிலை களையப்படவேண்டுமேன்றால் இஸ்லாமிய சமூகம் முதலில் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். வெறுமனே சடங்குகளுக்கான மார்க்கமல்ல இது என்பதை முதலில் உலமாக்கள் உணர வேண்டும். இத்தகைய மாற்றம் வராத வரைக்கும் பழைய பெருமைகளை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருப்போம்.

    "எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றி கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாறுவதில்லை (திருக் குர்ஆன் 8 : 53 )

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்! அருமையான ஆக்கம். வழக்கத்தில் நாம் பாவித்துக் கொண்டிருக்கும் இந்த அரபி எண் வடிவங்களை நம் முஸ்லிம் சகோதரர்களே, அதனுடைய பூர்வீகம் ஆங்கிலத்திலிருந்து வந்ததுதான் என்று சொல்லக் கேட்டு , அவர்களிடம் இல்லை அது அரேபிய எண்கள் என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை காட்டி இருக்கிறேன். தங்களுடைய ஆக்கம் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜஸாகல்லாஹ் கைரன்!!!

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரரே.மாஷாஅல்லாஹ்.ஆக்கபூர்வமான அருமையான கட்டுரை.இஸ்லாமிய உலகம் இன்று பின் தங்கி உள்ளமைக்கு சகோதர் பி.ஏ.ஷேக்தாவூத் அவர்களின் கருத்தை முழுவதும் வழிமொழிகிறேன்.
    தங்களின் இந்த சேவைக்கு எல்லாம் வல்ல ரஹ்மானின் கூலி தங்களுக்கு மறுமையில் கிடைக்க துவா செய்யும் அன்பன் ஜாஹிர்

    ReplyDelete
  5. edu pondra akkamana akangal than indraya generation yedirparkiradu

    ReplyDelete
  6. அன்பு சகோதரர் ஆஷிக்,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    தாங்களுடைய இந்த மிகச் சிறந்த கட்டுரையை என்னுடைய "இளையாங்குடி குரல் பிளாக்ஸ்பாட்" டில்

    "நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? "

    என தலைப்பிட்டு மீள்பதிவு செய்து மேலும் பல வாசகர்களை படிக்க வகை செய்திருக்கின்றேன்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

    ReplyDelete
  7. dear vanjoor bai,

    wa alaikum salaam...

    //"நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு? "

    என தலைப்பிட்டு மீள்பதிவு செய்து மேலும் பல வாசகர்களை படிக்க வகை செய்திருக்கின்றேன்//

    Jazakkallahu khair...

    yours,
    aashiq ahamed a

    ReplyDelete
  8. Thanks for your brief summary, pls continue to do more and more.

    Regards,
    Adirai Siraj

    ReplyDelete
  9. zero came before islam

    ReplyDelete
  10. Dear brother anony,

    assalaamu alaikum...

    I didn't say "zero" was invented by Muslims (ofcourse zero came before Muslims) . I said they are the first to use it in "number system"...please read the article completely...

    May Allah(swt) bless u and ur family with good fortunes...

    Thanks,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  11. தங்கள் பதிவு படித்தது பெருமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் VLSI, Semiconductors துறையைச் சார்ந்தவர் என்பதும் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் Simulation தங்களுக்குத் தெரிந்தால் தெரிவிக்கவும்.

    சில நண்பர்கள் 1,2,3...... இந்த வடிவம் இன்றைய அரேபியாவில் இல்லையே, எப்படி இதை அரேபிய எங்கள் எண்று சொல்லலாம் என்று கேட்டுள்ளார்கள அதற்க்கு தங்களால் பதில் தர முடியுமா? முடிந்தால், என் பதிவில் அவர்கள கேள்விக்கு கீழே பதில் தரவும் நன்றி.

    ReplyDelete
  12. சகோதரர் ஜெயதேவ்தாஸ்,

    உங்கள் மீதும், குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    //சில நண்பர்கள் 1,2,3...... இந்த வடிவம் இன்றைய அரேபியாவில் இல்லையே, எப்படி இதை அரேபிய எங்கள் எண்று சொல்லலாம் என்று கேட்டுள்ளார்கள அதற்க்கு தங்களால் பதில் தர முடியுமா?//

    நான் பதிவில் கூறியுள்ளது போன்று, ஒவ்வொரு எழுத்தையும் ஒரு வடிவமாக கணக்கிடும் முறையை, ஹிந்து எண்களின் தாக்கத்தாலேயே அரேபியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் இந்த எண்கள் அரேபிய-ஹிந்து எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதே நேரம், இன்று நாம் பயன்படுத்தும் எண்கள் அரேபிய எண்களின் நேரடி வார்ப்பே. அரேபிய எண்களையும், இன்றைய எண்களையும் பார்த்தால் ஒற்றுமையை அறியலாம். ஐரோப்பியர்கள், அரேபியர்களின் எண்களை பின்பற்றி மாற்றங்கள் செய்து தற்போதைய எண்களை கொண்டுவந்தனர். இருப்பினும் எண்ணும் முறைகளை முதன்முதலில் கொண்டுவந்தது அரேபியர்கள் என்பதால் அவர்களுக்கே பெருமை சேர்க்கப்படுகின்றது.

    மேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது. இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன.

    இத்தகைய காரணங்கலுக்காக தான் எண்கள் குறித்து பேசும் போது, இதற்குரிய அதிக முக்கியத்துவத்தை அரேபியர்கள் மீது சுமத்துகின்றது இன்றைய அறிவியல்.

    // இதில் Simulation தங்களுக்குத் தெரிந்தால் தெரிவிக்கவும்.//

    இதுக்குறித்த உங்கள் கேள்விகளை aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் சகோ.,

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  13. //Aashiq AhamedNovember 5, 2012 3:43 PM
    சகோதரர் ஜெயதேவ் தாஸ்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    நல்லதொரு பதிவு. இன்றைய கணித முன்னேற்றங்களுக்கு அரேபியர்களே முன்னோடி. எண்கள், அல்ஜீப்ரா, கேத்திர கணிதம் (algebra) என்று பல்வேறு பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர்கள் அவர்கள். இதுக்குறித்த என்னுடைய பதிவை நேரம் கிடைத்தால் பார்க்கவும்...

    நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ//

    சகோ உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.
    நீங்கள் ஒன்றை சிந்திக்க தவறி விட்டீர்கள்
    Muḥammad ibn Mūsā al-Khwārizmī ஏன் தன்னுடைய ஒரு புத்தகத்திற்கு


    Kitāb al-Jamʿ wa-l-tafrīq bi-ḥisāb al-Hind என்று பெயரிட்டார் அதாவது On the Calculation with Hindu Numerals என்று. சிந்திப்பதற்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன .அவரே சொல்லிவிட்டார் தான் இந்தியாவிலிருந்துதான் தன்னுடைய கருத்துக்களை பெற்றுள்ளதாக. இருப்பினும் அவரும் பாராட்டுக்குரியவர் என்பதை மறுப்பதற்கில்லை

    ReplyDelete
  14. @ புரட்சிமணி,

    பாத்தீங்களா எப்படி திசை திருப்புறீங்க என்று. அரேபிய எண்கள் ஹிந்து எண்களின் தாக்கத்தில் உருவானது தான் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மேலும், இதனை அரேபிய-ஹிந்து எண்கள் என்றும் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன். இதையே அல் கரிஷ்மி நூலின் பெயரும் நமக்கு பறைசாற்றுகின்றது.

    நான் "மேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் எண்கள் 0,1,2,3,4,5,6,7,8,9 என்று நாம் இப்போது பயன்படுத்தக்கூடிய அனைத்து எண்களையும் கொண்டிருந்தது. இந்த எண்களை கொண்டுதான் நாம் இன்று பயன்படுத்தக்கூடிய எண்ணும் முறைகள் கொண்டுவரப்பட்டன" - இப்படியாக கூறியதை தாங்கள் தவறான புரிதல் என்றீர்கள். அதற்கு தான் ஆதாரம் கேட்டேன்.

    பாருங்க, கேட்டதுக்கு ஆதாரம் தராம நான் ஏற்கனவே ஒத்துக்கிட்ட ஒன்ன எடுத்துவந்து நேரத்த வீனடிக்குறீங்க. என்னத்த சொல்ல :-)

    மறுபடியும் சொல்கின்றேன். ஹிந்துக்கள் எண்களை கொடுத்தார்கள். ஆனால் சைபரை அவர்கள் எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. இதனால் அதனை வைத்து கூட்டல் கழித்தல் போன்றவற்றிற்கும் வாய்ப்பில்லாமல் போனது. அரேபியர்களோ, ஹிந்து எண்களின் தாக்கத்தால் எண்களை உருவாக்கி அதில் சைபரை ஒரு எண்ணாக சேர்த்தார்கள். இந்த அற்புத கண்டுபிடிப்பினால் தான் நாம் எண்ணும் முறைகள் அடுத்த பரிணாமத்திற்கு போகமுடிந்தது, இன்று நான்ம எண்ணக்கூடிய முறைகளும் வந்தது. இதைதான் நான் முன்பு கொடுத்த (மற்றும் நீங்கள் கொடுத்த) ஆதாரங்கள் தெளிவாக விளக்குகின்றன.

    //The Hindu-Arabic numeral system is a decimal place-value numeral system that uses a zeroglyph as in "205".[1]
    Its glyphs are descended from the Indian Brahmi numerals. The full system emerged by the 8th to 9th centuries, and is first described in Al-Khwarizmi's On the Calculation with Hindu Numerals(ca. 825), and Al-Kindi's four volume work On the Use of the Indian Numerals (ca. 830).[2] Today the name Hindu-Arabic numerals is usually used.
    http://en.wikipedia.org/wiki/History_of_the_Hindu%E2%80%93Arabic_numeral_system#cite_note-0
    இந்திய கண்டுபிடிப்பை உலகறியச்செய்த Al-Khwarizmi புகழ் உண்மையில் பரப்பபடவேண்டியதுதான்//

    ஆண்டவா..இதனை தான் தானே நான் திரும்ப திரும்ப கூறுகின்றேன். ஹிந்துக்கள் சைபரை கண்டுபிடித்தாலும் அதனை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை. அரேபியர்கள் தான் அதனை எண்களில் சேர்த்து அதனைக்கொண்டு எண்ணும் முறைகளை கொண்டுவந்தது..

    ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது. நாம் என்ன பேசுகின்றோம் என்பது குறித்த புரிதல் உங்களிடம் இல்லை. வாதத்திற்காக கருத்துக்களை எடுத்து வைத்துகொண்டிருக்கின்றீர்கள்.

    அடுத்தமுறையேனும் தயவுக்கூர்ந்துகேட்டதுக்கு பதில் சொல்லுங்க...

    நன்றி...

    ReplyDelete
  15. இரண்டு ஆசிக்குக்கும் காலை வணக்கங்கள்,//நான் "மேலும், சைபரை இந்தியர்கள் கண்டுபிடித்திருந்தாலும் அதனை எண்களில் ஒன்றாக கொண்டுவந்தது அரேபியர்களே. அதாவது, ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது. அரேபியர்கள் செய்த ஒரு அளப்பரிய செயல் சைபர் வடிவத்தை எண்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டது தான் (They added Zero in the list of Numbers). அதாவது சைபரை (0) ஒரு எண்ணாக முதன்முதலில் கண்டுபிடித்தது முஸ்லிம்கள் தான்.//

    கீழே பாருங்கள் நண்பர்களே பூச்சியம் இந்தியர்களால் பயன்படுத்தப்படுள்ளதை கூறுகிறது

    The oldest known text to use zero is the Jain text from India entitled the Lokavibhaga, dated 458 AD.[11] Ifrah wrote that a sentence in Lkavibhaga "panchabhyah khalu shunyebhyah param dve sapta chambaram ekam trini cha rupam cha" meant "five voids,then two and seven, the sky, one and three and the form" was the expression of the number 13107200000, was the earliest place value decimal number with the concept of zero.
    அப்படியே இதில் இருக்கும் படத்தையும் பார்த்து விடுங்கள்.
    http://en.wikipedia.org/wiki/Bakhshali_manuscript

    அந்த சுட்டியில் பூச்சியம் கொடுக்கப்பட்டுள்ளதா இல்லையா? அப்படி இருக்க //ஹிந்துக்களை பொறுத்தவரை 1,2,3,4,5,6,7,8,9 மட்டும்தான் எண்கள், '0' கிடையாது.//
    என்று கூறுவது எப்படி சரியாகும்?

    //ஹிந்துக்கள் சைபரை கண்டுப்பிடித்தார்கள். ஆனா அதை வெற்றிடத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தினார்கள். உதாரணம் 4+6 = 10. இப்ப ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள்.// முடியல....புரியல

    இது எப்படி வந்தது
    The oldest known text to use zero is the Jain text from India entitled the Lokavibhaga, dated 458 AD.[11] Ifrah wrote that a sentence in Lkavibhaga "panchabhyah khalu shunyebhyah param dve sapta chambaram ekam trini cha rupam cha" meant "five voids,then two and seven, the sky, one and three and the form" was the expression of the number 13107200000, was the earliest place value decimal number with the concept of zero.

    ///அதே நேரம் சைபரை கொண்டு கூட்டல் கழித்தல் என்று இன்று நாம் செய்வதுபோல எதையுமே செய்யவில்லை. செய்ய முடியாதற்கு காரணம், அவர்கள் சைபரை எண்களில் ஒன்றாக சேர்க்கவில்லை என்பது தான். //
    நன்றாக பின்வருவனவற்றை படித்து பாருங்கள் நண்பர்களே

    //Brahmagupta was the first to use zero as a number. He gave rules to compute with zero. Brahmagupta used negative numbers and zero for computing. The modern rule that two negative numbers multiplied together equals a positive number first appears in Brahmasputa siddhanta. It is composed in elliptic verse, as was common practice in Indian mathematics, and consequently has a poetic ring to it. As no proofs are given, it is not known how Brahmagupta's mathematics was derived.[1]//

    //He gave rules to compute with zero// என்று மிகவும் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது
    இன்னும் சந்தேகமா?
    contd...

    ReplyDelete
  16. cont....
    இதையும் படித்து விடுங்கள்

    Zero
    Brahmagupta's Brahmasphuṭasiddhanta is the very first book that mentions zero as a number, hence Brahmagupta is considered as the man who found zero. He gave rules of using zero with negative and positive numbers. Zero plus a positive number is the positive number and negative number plus zero is a negative number etc. The Brahmasphutasiddhanta is the earliest known text to treat zero as a number in its own right, rather than as simply a placeholder digit in representing another number as was done by the Babylonians or as a symbol for a lack of quantity as was done by Ptolemy and the Romans. In chapter eighteen of his Brahmasphutasiddhanta, Brahmagupta describes operations on negative numbers. He first describes addition and subtraction,
    18.30. [The sum] of two positives is positives, of two negatives negative; of a positive and a negative [the sum] is their difference; if they are equal it is zero. The sum of a negative and zero is negative, [that] of a positive and zero positive, [and that] of two zeros zero.
    [...]
    18.32. A negative minus zero is negative, a positive [minus zero] positive; zero [minus zero] is zero. When a positive is to be subtracted from a negative or a negative from a positive, then it is to be added.[5]
    He goes on to describe multiplication,
    18.33. The product of a negative and a positive is negative, of two negatives positive, and of positives positive; the product of zero and a negative, of zero and a positive, or of two zeros is zero.[5]
    But his description of division by zero differs from our modern understanding,
    18.34. A positive divided by a positive or a negative divided by a negative is positive; a zero divided by a zero is zero; a positive divided by a negative is negative; a negative divided by a positive is [also] negative.
    18.35. A negative or a positive divided by zero has that [zero] as its divisor, or zero divided by a negative or a positive [has that negative or positive as its divisor]. The square of a negative or of a positive is positive; [the square] of zero is zero. That of which [the square] is the square is [its] square-root.[5]
    Here Brahmagupta states that and as for the question of where he did not commit himself.[11] His rules for arithmeticon negative numbers and zero are quite close to the modern understanding, except that in modern mathematics division by zero is leftundefined.
    http://en.wikipedia.org/wiki/Brahmagupta

    இப்பொழுதாவது புரிகிறதா கூட்டலும் கழித்தலும் ஏன் வகுத்தலையும் தந்தவன் இந்தியன். அரபியன் அல்ல.அரபியர்கள் இதை சிறிது மெருகேற்றியிருக்கலாம். ஆஅனால் நீங்கள் கூறுவது போல இந்தியர்கள் 0 ய் எண்ணாக பயன்படுத்தவில்லை என்பது தவறான வாதமாகும் .
    தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

    நன்றி நண்பர்களே :)

    ReplyDelete
  17. நண்பர்களே ,
    சுழியத்தைகொண்டு கூட்டலும்,கழித்தலும், பெருக்கலும்,வகுத்தலும் பிரம்மா குப்தா கணக்கிட்டிருந்தாலும்
    ஒன்று முதல் ஒன்பது எண்களுக்கான கணக்கீடை இந்தியர்கள் அறியவில்லை என்று நீங்கள் கூறலாம்.

    //ஹிந்துக்கள் சைபரை கண்டுப்பிடித்தார்கள். ஆனா அதை வெற்றிடத்தை நிரப்ப மட்டுமே பயன்படுத்தினார்கள். உதாரணம் 4+6 = 10. இப்ப ஒன்றுக்கு பக்கத்தில் போடுவதற்காக மட்டுமே, அதாவது வெற்றிடத்தை சுட்டிக்காட்ட மட்டுமே சைபரை பயன்படுத்தினார்கள்.//

    நான்கு பந்தையும் ஆறு பந்தையும் கூட்டினால் இந்தியர்கள் கணக்குப்படி ஒன்றுதான் ஆனால் சும்மா அவர்கள் சுழியத்தை போட்டுக்கொண்டார்கள் என்பதுபோலவே உள்ளது உங்கள் வாதம்.

    அதனால் தான் சொல்கிறேன் சுழியத்தை பயன்படுத்தித்தானே பின்வரும் இலக்கத்தை கண்டறிந்துள்ளனர் .

    "panchabhyah khalu shunyebhyah param dve sapta chambaram ekam trini cha rupam cha" meant "five voids,then two and seven, the sky, one and three and the form" was the expression of the number 13107200000, was the earliest place value decimal number with the concept of zero.
    இல்லை இதுவும் சும்மா வெற்றிடத்தை காட்ட பய்னப்டுத்தினார்கள் என்கிறீர்களா. சுழியம் வேறு வெற்றிடம் வேறு ஜீரோ வேறு அல்ல என்பதை புரிந்து கொண்டால் இதுவும் புரியும் என நினைக்கின்றேன்.
    தவறு இருந்தால் புரியவையுங்கள்
    நன்றி :)

    ReplyDelete
  18. @ புரட்சிமணி,

    பவர் கட் ப்ரோப்லம். அதனால் தான் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.

    //கீழே பாருங்கள் நண்பர்களே பூச்சியம் இந்தியர்களால் பயன்படுத்தப்படுள்ளதை கூறுகிறது///

    ஸ்பாஆஅ...சுத்தம். இதற்கு தான் நான் ஏற்கனவே சொன்னேன் நாம என்ன பேசுரோம்னே விளங்காம பேசுறீங்க என்று. சைபரை ஹிந்துக்கள் கண்டுபிடித்தார்கள் என்று நான் கூறிவிட்டு அதனை இல்லை என்று சொல்வேனா? நான் சொன்னது, சைபர் வடிவங்களில் ஒன்றாக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் ண்களில் ஒன்றாக அது சேர்க்கப்படவில்லை. அதனை கொண்டு கணக்கிற்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அரேபியர்கள் தான் கண்டுபிடித்து, சைபரின் பயன்பாட்டை விளக்கி உலகறிய செய்தது. இதனை விளக்கும்விதமாகத்தான் மேற்சொன்ன உதாரணத்தை கொடுத்தேன். நீங்க என்னடா என்றால்....சகோ நீங்க தவறா புரிந்துக்கொள்வதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

    அப்புறம் நான் கேட்டதற்கு நீங்கள் இன்னும் ஆதாரங்களை தரவில்லை. முன்னாடி சில ஆதாரங்களை எடுத்து போட்டேன். மேலும் நீங்க கொண்டு வந்த விக்கி லின்க்கில் இருந்தே ஆதாரங்களை காட்டினேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. அதைவிட்டுட்டு இப்போது இன்னும் சில லிங்க்களுக்கு தாவிவிட்டீர்கள். இப்போது பிரம்மகுப்தா குறித்து லின்க்கிற்கு போய்விட்டீர்கள். இதற்கு நான் பதிலளித்தால் அதற்கு பதில் சொல்லாமல் வேறொன்றிற்கு ஒடுவீர்கள். முதலில் பிரம்மகுப்தா குறித்து கூறும்போது //on its own right// என்று விக்கி கூருகின்றதே அதற்கு முதலில் என்ன அர்த்தம் என்று பாருங்கள். தயவுக்கூர்ந்து என் நேரத்தை வீணாக்காதீர்கள்.

    அப்படியே ரைஸ் மற்றும் பாரம்பரியமிக்க செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைகழக தளங்களில் இருந்தும் ஆதாரங்களை பாருங்கள்.

    //While these mathematicians grasped the concept of zero, Al-Khwarizmi formally recognized zero as a number as well as its use symbolically. Although this idea seems fundamental to the math students of today, the use of zero as a number was pioneering and proved immensely useful in the field of mathematics// - Rice university. http://catalyst.rice.edu/discoveries/2012/03/13/

    //The first use of zero as a place holder in positional base notation was probably due to al-Khwarizmi in this work// - St Andrews university, Scotland
    http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Al-Khwarizmi.html

    அரேபியர்களின் புத்தகங்கள் தெளிவாக, சைபரை பயன்படுத்தி கணக்கை மேற்கொண்டு எடுத்து சென்றிருப்பதற்கு ஆதாரங்களை தருகின்றன. அதுபோல ஹிந்துக்கள், சைபரை பயன்படுத்தி calculate செய்ததாக equation-களை அவர்கள் புத்தகத்தில் இருந்து காட்டுங்கள். அதாவது கூட்டல் கழித்தல் வகுத்தல் போன்றவற்றில் சைபரை பயன்படுத்தி கணித முடிவுகளை கொண்டுவந்ததாக காட்டுங்கள். ஆய்வாளர்களின் முடிவு தவறு என்று அவர்களுக்கு மெயில் அனுப்பிவிடலாம்.

    உங்கள் விதண்டாவாதத்திற்கு நேரமளிக்க என்னால் முடியாது. அதனால் அடுத்த முறை நான் கேட்டதற்கு நீங்கள் ஆதாரங்களுடன் வந்தால் பதிலளிக்க வருகின்றேன். இனியும் இதில் நேரத்தை வீணடிக்க என்னால் முடியாது..

    நன்றி..

    ReplyDelete
  19. நிறைய தகவல்கள் நன்றி

    ReplyDelete
  20. சலாம் சகோ ஆஷிக்!

    காலத்துக்கு ஏற்ற மிக முக்கியமான பதிவு. அடுத்து 'இந்து' என்று வரக் கூடிய இடங்களில் இந்தியர்கள் என்று வந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆரிய படையெடுப்புக்கு பிறகுதான் இந்தியர்களை இந்து மதம் என்ற கோட்பாட்டுக்குள் அடைத்தனர். அதற்கு முன்னால் நமது முன்னோர்கள் அறிவியலிலும் ஆன்மீகத்திலும் மிகச் சிறந்த இடத்தையே பெற்றிருந்தனர். ஆரியர்களின் வருகைக்கு பிறகு தான் மனிதர்களில் ஏற்றதாழ்வுகள் கற்பிக்கப்பட்டு மூடப்பழக்கங்களில் நமது நாட்டு மக்கள் வீழ்ந்தனர். எனவே இந்து என்பதற்கு பதில் இந்தியர்கள் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
  21. சலாம் சகோ ஆசிக்...

    மாஷா அல்லாஹ்...அற்புதமான ஆக்கம்.... ஐரோப்பா அறிவியலின் இருண்ட காலத்தில் இருந்த பொழுது, அவர்களுக்கு அறிவியல் வெளிச்சத்தை காட்டியவர்கள் அரேபியர்களே என்ற உண்மையை மனசாட்டி உள்ள, உண்மையான வரலாற்றை தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்வார்கள்....

    அல் காரிதம், ஆல் கஹால், அல் ஜிப்ரா இவை அனைத்தும் கணிதம் மற்றும் வேதியியல் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்... இன்றளவும்... இவற்றை கண்டுபிடித்தது அரேபியர்களே.....

    ஒரு இனத்தின் மீதான வெறுப்பு அவர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதில் இருந்து ஒருவரை தடுக்கிறது என்றால் அவர் அறிவியலின் விரோதியாக மட்டுமே இருக்க முடியும்....

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அழைக்கும் ஆசிக் பாய் ....அருமையான கட்டுரை அல்ஹம்துலில்லாஹ் ஆஷிக் பாய் எனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை இந்த கேள்வியை கேட்டது ஒரு நாத்திகர் .இந்த கட்டுரைக்கு சம்பத்தம் இல்லாதக் கேள்வியாய் இருந்தாலும் எனக்கு குரான் ஹதீஸ் முறையில் ஓர் அளவுக்கு விளக்கம் சொல்ல முடியும் .ஆனால் இதற்க்கு அறிவியல் பூர்வமாகவும் குரான் ஹதீஸ் மூலமாகவும் விளக்கம் தேவை என்கிறார் ..தயவுசெய்து எனக்கு விடை தாருங்கள் .அந்த கேள்வியை அவர் எப்படி எனக்கு தந்தாரோ அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் ...கேள்வி இதோ குரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று ஒரே குழப்பமாக இருக்கிறதே....

    இந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

    உங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா? என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).

    நாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்....இதுதான் பாய் கேள்வி ...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ,

      தொடர் வேலைகளால் இந்த கமெண்ட்டை மறந்துவிட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) கூறியது சரியே சகோ. embryology துறையை பொறுத்தமட்டில் ஆண் பெண் பாகுபாட்டை பிரிக்கும் நிகழ்வு ஆறாவது வாரத்தின் பிற்பகுதியில் நடக்கின்றது. பிரபல PBS ஊடகத்தின் அறிவியல் கட்டுரையில் இருந்து ஆதாரம் இதோ: http://www.pbs.org/wgbh/nova/body/how-sex-determined.html#. இந்த பக்கத்தில் "launch" என்பதை சுட்டி "week 6" என்பதை பாருங்கள். கவனிக்க: இது குறித்து வரும் ஹதீஸ்கள் 40-45 நாட்களையும் குறிப்பிடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

      வஸ்ஸலாம்,

      உங்கள் சகோதரன்,
      ஆஷிக் அஹ்மத் அ

      Delete
  23. அடுத்தது ஹிந்து எண்கள். இவை மிக வித்தியாசமானவை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள ஒவ்வொரு எண்களையும் ஒவ்வொரு வடிவத்தால் குறிப்பிட்டனர்.



    இந்த முறை மிக சுலபமானது, எண்ணுவதற்கும் எளிதானது. நீங்கள் மேலே பார்க்கக்கூடிய வடிவங்கள் ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது.
    """"" hello sir.... kindly refer tamil number.... tamil number is related with arabic number which is now a days used......... ( tamil is a ancient language... naan enna solla varenum puruium.... 1 2 3 4 5 6 7 8 9 ivatrail tamil number udan oppitu paarungal unmai purium... dont divert others)

    ReplyDelete