Friday, March 12, 2010

நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு? - II


 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

  •  நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்...அப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த தொடர் பதிவுகள்...இன்ஷா அல்லாஹ்...  

நான் முன்னமே கூறியது போல், அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை பார்த்தோமானால் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம். அவர்களுடைய அறிவியல் சார்ந்த எண்ணங்கள் அற்புதமானவை, ஆச்சர்யமூட்டுபவை, அசாதாரணமானவை.

"Muslim scientists have made all discoveries of the current age" --- Prof.George Saliba, Arabic and Islamic Studies, University of Columbia.  

இந்த பதிவில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது, அறிவியலின் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றியல்ல. அதாவது, நாம் அறிவியலின் இந்த துறையில் என்ன செய்தோம், அந்த துறையில் என்ன செய்தோம் என்பது பற்றியல்ல. இதையெல்லாம் விட முக்கியமானது, அடிப்படையானது.

அது, அறிவியலை அணுகும் முறை (The scientific Method).

அதாவது, நாம் ஒன்றை கண்டுபிடிக்க/ஆராய முயல்கிறோமென்றால் அதனை எப்படி அணுகவேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்று படிப்படியாக விளக்குவதுதான் அறிவியலை அணுகும் முறை.
"The scientific method is a way to ask and answer scientific questions by making observations and doing experiments"
உதாரணத்துக்கு, நாம் ஒரு பரீட்சை எழுத போகிறோமென்றால் என்னென்ன செய்வோம்,
முதலில் பரீட்சைக்கு தேவையான புத்தங்களை தேடிப் படிப்போம், பின்னர் தேர்வுக்கு தேவையான பொருள்களை தயார் செய்வோம், தேர்வுக்கு செல்வோம், படித்ததை பதிவு செய்வோம், பதிவு செய்யும்போது அதிக மதிப்பெண்/சுலபமாக உள்ள கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுவோம், பதிவு செய்தபிறகு ஒன்றுக்கு பல முறை எழுதியதை திருப்பிப்  பார்ப்போம், கடைசியாக சமர்ப்பிப்போம்.

ஆக, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டுமென்றால் நாம் மேல பார்த்தவையெல்லாம் அவசியம் தேவை. இதுதான் அணுகும் முறை. என்னதான் நாம் நன்கு படிப்பவராக இருந்தாலும் தேர்வை அணுக தெரியவில்லையென்றால் அது நாம் எதிர்ப்பார்த்த முடிவைத் தராது. இதனால் தான் பல கல்விக்கூடங்களும் எப்படி தேர்வை அணுகுவது என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ஒரு தேர்வுக்கே இப்படியென்றால் அறிவியலை எடுத்தோம், கவுத்தோம்மென்று அணுகிவிட முடியாது. அப்படி செய்தால் அது நல்ல முடிவையும் கொடுக்காது.

முஸ்லிம்கள் இங்கு தான் சிறந்து விளங்கினார்கள். உலகிற்கு முதன்முதலில் அறிவியலை எப்படி அணுகவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான். எப்படி அணுகினால் நல்ல முடிவை (Result) பெறலாம் என்று விளக்கியவர்கள் முஸ்லிம்கள்தான்.

முஸ்லிம்களின் இந்த கண்டுபிடிப்பை அறிவியலாளர்கள் மனதார பாராட்டுகின்றனர். இதனாலேயே நவீன அறிவியலுக்கு முஸ்லிம்கள்தான் அடிக்கோளிட்டவர்கள் என்றும் புகழ்கின்றனர்.  

முஸ்லிம்கள் அறிவியலை அணுகிய இந்த முறையைத்தான் ஐரோப்பியர்கள் பின்னர் எடுத்துக்கொண்டனர். இன்று நாம் பயன்படுத்தக்கூடிய அணுகும் முறைகளும் கிட்டத்தட்ட அன்றைய கால முஸ்லிம்கள் பயன்படுத்தியது போன்றுதான் உள்ளது.

இன்று நாம் அறிவியலை அணுக பின்பற்றும் முறைகள் பின்வருபவை...


1. நாம் எதைப்பற்றி ஆராய எண்ணுகிறோமோ அதைப்பற்றிய கேள்விகளை நம்மையே கேட்டுகொள்வது. (Ask a Question)

உதாரணத்துக்கு,
  • இது என்ன? 
  • நான் ஏன் இதை செய்ய வேண்டும்?
  • எப்படி செய்ய வேண்டும்? 
  • இது எங்கே பயன்படும்? 
  • எப்போது பயன்படும்?
இப்படி இதுபோன்ற கேள்விகளை நமக்குள்ளே கேட்டுக்கொள்வது.


2. அடுத்தது, நாம் நமக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு ஆராய்ந்து விடை காண முயல்வது (Do Background Research)  

இது ஒரு முக்கியமான பகுதி, இங்கு பலவற்றை நாம் கணக்கில் கொள்ள வேண்டும், 

உதாரணத்துக்கு, 
  • நாம் ஆராய்கின்ற ஒன்று ஏற்கனவே ஆராயப்பட்டதா? அல்லது புதிதா? 
  • அப்படி ஏற்கனவே ஆராயப்பட்ட ஒன்று என்றால் அது ஏன் தோல்வியுற்றது? அல்லது அதில் நாம் புதிதாக என்ன சேர்க்கலாம்?  
இப்படி நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்வது இரண்டாவது படி.


3. கிடைத்த பதில்களை கொண்டு ஒரு தோராயக்கருத்தை உருவாக்குவது. (Construct a Hypothesis). 

"தோராயக்கருத்தை உருவாக்குவது" என்றால் இது இப்படித்தான் வேலை செய்யும் என்று நமக்குள்ளே தோராயமாக கணக்கிடுவது.  
"A Hypothesis is an educated guess about how things work"
உதாரணத்துக்கு,
நான் இதை செய்தால் பிறகு இப்படி நடக்கலாம் (If _____[I do this] _____, then _____[this]_____ will happen) என்று கணக்கிடுவது.  

4. பின்னர் நம்முடைய தோராயக்கருத்தை செய்முறை மூலம் பரிசோதனை செய்வது (Test Your Hypothesis by doing an Experiment).

நம் பரிசோதனை முடிவுகள் நம் தோராயக்கருத்தை எந்த அளவு ஒத்துபோகின்றன என்று கணக்கிடுவது. பின்னர் மேலும் மேலும் பல பரிசோதனைகள் செய்வது. 

5. அடுத்தது, பரிசோதனைகளின் முடிவுகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது (Analyse Your data and Draw conclusion)  

செய்முறைகளின் முடிவுகள் எல்லாம் ஒரே மாதிரி வருகின்றனவா? அப்படி வந்தால் அவை நம் தோராயக்கருத்தோடு ஒத்துபோகின்றனவா? என்று ஆராய்வது.

அப்படி பரிசோதனை முடிவுகள் நம் கருத்தோடு ஒத்துப் போகவில்லை என்றால் வேறொரு தோராயக்கருத்தை முன்வைத்து மறுபடியும் மேல பார்த்த முறைகளை பின்பற்றுவது.

பரிசோதனை முடிவுகள் நம் கருத்தோடு ஒத்து வந்துவிட்டால் வெவ்வேறு புதிய  முறைகளைக்கொண்டு மேலும் பரிசோதிப்பது.

அப்படியும் சரியென்றால், நாம் கொண்டுவந்த முடிவுகளை கொண்டு ஒரு முடிவை எட்டுவது.


6. கடைசியாக,நம்முடைய முடிவுகளை அறிவியல் கூட்டங்களிலோ அல்லது அறிவியல் இதழ்களிலோ பிரசுரிப்பது/வெளியுடுவது...(Communicate your results by publishing your report in a scientific Journal or in a Scientific meeting)

இவைதான் நாம் இன்று பயன்படுத்தும் அறிவியல் அணுகுமுறைகள். இப்படி நேர்த்தியாக நம் ஆராய்ச்சியை மேற்கொண்டால் நாம் பெறும் பயன்களும் தெளிவானதாக இருக்கும். இந்த முறைகளை பின்பற்றிவரும் அறிவியல் ஆராய்ச்சிகளைத்தான் இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது.

கிரேக்கர்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க செயல்களை செய்திருந்தாலும் அவற்றை இன்றைய அறிவியலாளர்கள், நவீன அறிவியலில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள் (Today's Scientists call Greek period as pre-scientific).

இவற்றுக்கு அவர்கள் கூறும் காரணங்கள், கிரேக்கர்கள் என்ன தான் புதிய முறைகளை யோசித்திருந்தாலும் அவற்றை தெளிவாக நடைமுறை படுத்தவில்லை. அதற்கு காரணம் அவர்கள் அறிவியலுக்கான அணுகுமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் அவர்களுக்கு இதுப்பற்றிய யோசனையும் கிடையாது என்பதுதான்.

கிரேக்கர்கள் நேர்த்தியான அணுகுமுறைகளை பின்பற்றாதானாலேயே அவர்களுடைய பல எண்ணங்கள் பின்னர் அறிவியலுக்கு ஒத்துவராதவை என்று விலக்கப்பட்டதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
    
முஸ்லிம்கள் இங்குதான் தனித்து நின்றனர். அவர்களுடைய எண்ணங்களை அவர்கள் செயல் முறைப்படுத்திய விதம்தான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடி. நாம் மேலே கண்ட அறிவியல் அணுகுமுறைகளை உலகிற்கு தெள்ளத்தெளிவாக எடுத்து கூறியதும் அவர்கள்தான்.இந்த அடிப்படையை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியதால்தான் முஸ்லிம்களை இன்றைய அறிவியல் உலகம் வானார புகழ்கிறது. இந்த அடிப்படை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகவும் இருந்தது/இருக்கிறது.  

முஸ்லிம்களின் பெரும்பாலான ஆய்வுகள் நன்கு சிந்திக்கப்பட்டு, வரைமுறைகள் வகுக்கப்பட்டு, கவனமாக கண்காணிக்கப்பட்டு, பல செய்முறைகள் செய்யப்பட்டு, முடிவுகள் நன்கு ஆராயப்பட்டு, ஆராயப்பட்ட முடிவுகள் தெளிவாக புத்தகங்களில் எழுதப்பட்டு வெளிவந்தன.

இதிலுள்ள மிகப் பெரும் பயன் என்னவென்றால், அவர்களுடைய நூல்களை எதிர்காலத்தில் படிப்பவர்கள், முஸ்லிம்கள் செய்த செய்முறைகளை தாங்களும் செய்து அவர்களுடைய ஆய்வுகளை சரிபார்த்துக் கொள்ளலாம், அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில் தங்களுடைய ஆய்வுகளை இந்த நூல்களை அடிப்படையாக கொண்டு முன்னேற்றி செல்லலாம்.      

இதனாலேயே நவீன அறிவியல் முஸ்லிம்களிடத்திலிருந்து தான் துவங்கியது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
"இன்றைய நம் அறிவியல், அரேபியர்களுக்கு பட்டிருக்கும் கடனென்பது அவர்களுடைய அதிசயத்தக்க கண்டுபிடிப்புகளிலோ அல்லது புரட்சிகர கோட்பாடுகளிலோ இல்லை, அதைவிட மேலாக அரேபிய கலாச்சாரத்துக்கே மிகவும் கடன்பட்டுள்ளது. கிரேக்கர்கள் கோட்பாடுகளை முறைப்படுத்தினார்கள், பரவலாக்கினார்கள். ஆனால் அவற்றை முறையான ஆய்வோ, கண்காணிப்போ, பரிசோதனைகளோ கொண்டு உறுதி செய்வதெல்லாம் அவர்களுக்கு அந்நியமானது.
அந்த புத்துணர்ச்சியையும், முறைகளையும் ஐரோப்பிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது அரேபியர்கள்தான்" --- (Extract from original quote of) Robert Briffault in his book The Making of Humanity.

"The debt of our science to that of the Arabs does not consist in startling discoveries or revolutionary theories; science owes a great deal more to Arab culture, it owes its existence. 
The ancient world was, as we saw, pre- scientific. The astronomy and mathematics of the Greeks were a foreign importation never thoroughly acclimatized in Greek culture. The Greeks systematized, generalized and theorized, but the patient ways of investigation, the accumulation of positive knowledge, the minute methods of science, detailed and prolonged observation, experimental inquiry, were altogether alien to the Greek temperament.... 
What we call science arose in Europe as a result of a new spirit of inquiry, of new methods of investigation, of the method of experiment, observation, measurement, of the development of mathematics in a form unknown to the Greeks. That spirit and those methods were introduced into the European world by the Arabs." --- Robert Briffault in his book The Making of Humanity.

முஸ்லிம்களின் ஆய்வுகளுக்கு பெரும் உதவியை இருந்தது அவர்களுடைய ஒரு புரட்சிகர எண்ணம்தான், அது கணிதத்தை அறிவியலில் முழுமையாக பயன்படுத்தியது. இந்த ஒரு எண்ணம்தான் அறிவியல் அணுகுமுறைகளை அவர்கள் உருவாக்க காரணமாய் இருந்தது. சாதகமான முடிவுகளை எட்டவும் துணையாய் இருந்தது.

இரு உதாரணங்களை மேற்கோள் காட்டினால் முஸ்லிம்களின் அறிவியல் அணுகுமுறைகள் எப்படி இருந்தன என்பதை விளக்கி விடலாம்.

1. ஒளியியல் (Optics)

இயற்பியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான இதில் முஸ்லிம்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

இந்த துறையில் சிறந்து விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் அபு அலி அல் ஹசன் இப்ன் அல் ஹசன் இப்ன் அல் ஹய்தம் (Abu Ali Al Hasan Ibn Al Hasan Ibn Al Haytham, 965 - 1039) அவர்கள். உலகின் முதல் விஞ்ஞானி என்றும், ஒளிவியலின் தந்தை என்றும், நவீன அறிவியல் இவரிடமிருந்து தான் துவங்கியது என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.           
"உலகின் முதல் விஞ்ஞானி இப்ன் அல் ஹய்தம் அவர்கள்" --- Bradley Steffens. 
Ibn Al Haytham is the First Scientist --- Bradley Steffens. 
நாம் ஒரு பொருளை பார்க்கிறோமென்றால்  அதற்கு காரணம், அந்த பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்களை எட்டுவதுதான் என்பதை கண்டுபிடித்தவர் இப்ன் அல் ஹய்தம் தான். இது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு.

ஏனென்றால் அன்றைய உலகம் எப்படி நம்பிக்கொண்டிருந்தது என்றால், நாம் ஒரு பொருளை பார்க்கிறோமென்றால் அதற்கு காரணம், நம் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் அந்த பொருளை எட்டுவதுதான் என்பது.

இது அறிவியலுக்கு புறம்பானது. ஆக, Ptolemy, Euclid மற்றும் Aristotle போன்றவர்களுடைய எண்ணங்களை உடைத்தெறிந்தார்.

அவர் அந்த முடிவை எட்ட அணுகியமுறை தான்  இன்றைய அணுகுமுறைகளுக்கு முன்னோடி.

முதலில், அவர் தன்னைத் தானே கேட்டுக்கொண்ட கேள்விகள் (Ask a Question) இவைதான்...

  • கண்களில் இருந்து ஒளிக்கதிர்கள் சென்று பொருளை அடைவதால் நாம் பார்க்கிறோமென்றால், நாம் பார்க்க கூடிய அனைத்தும் ஒரே விளைவைத்தானே தரவேண்டும்? ஆனால் நாம் சூரியனை பார்க்கும்போது கண் எரிச்சல் வருகிறது, அதே சமயம் ஒரு எரியும் மெழுகுவர்த்தியை பார்க்கும்போது கண் எரிச்சல் ஏற்படுவது இல்லையே. இது ஏன்?
  • கண்களில் இருந்து ஒளிக்கதிர்கள் சென்று பொருளை அடைவதால் நாம் பார்க்கிறோமென்றால், இரவில் தூரத்தில் இருக்கும் பொருள்களை நாம் எப்படி பார்க்கமுடிகிறது? எடுத்துக்காட்டாக, நாம் நிலவை பார்க்கிறோமென்றால்  நம் கண்களில் இருந்து ஒளிக்கதிர்கள் அவ்வளவு தூரமா பயணம் செய்கின்றன?    

இதுப்போன்ற கேள்விகளை தமக்குள் கேட்டுக்கொண்டு, அதற்கான பதில்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு (Doing Background research), அந்த பதில்களை வைத்து ஒரு தோராயக்கருத்தை உருவாக்கிக்கொண்டார் (Construct a Hypothesis).

அவருடைய தோராயக்கணக்கு இதுதான்,
  • கிரேக்கர்களின் ஒளி சம்பந்தமான புரிந்துணர்வு அறிவியலுக்கு ஒத்துவராது, 
  • நாம் ஒரு பொருளை காண்கிறோமென்றால் நிச்சயமாக நம் கண்களில் இருந்து அந்த பொருளுக்கு செல்லும் ஒளிக்கதிர்களால் அல்ல, 
  • அந்த பொருளில் இருந்து நம் கண்களுக்கு வரும் ஒளிக்கதிர்களால் தான்.  

அடுத்து, அவருடைய தோராயக்கருத்தை உறுதி செய்ய செய்முறைகளில் இறங்கினார் (Test your Hypothesis by doing a Experiment). பலவிதமான செய்முறைகளை கையாண்டார். இங்கு தான் கணிதத்தை பயன்படுத்தினார். ஒவ்வொரு செய்முறைகளின் முடிவையும் குறிப்பெடுத்து, அடுத்தடுத்த பரிசோதனைகளின் முடிவுகளும் சரியாக, ஒரேச்சீராக வருகின்றனவா என்று கவனித்தார் (Analyse Your data and Draw conclusion).


பின்னர் அவர் பின்பற்றிய அனைத்து முறைகளையும், உத்திகளையும், முடிவுகளையும் தெள்ளத்தெளிவாக எழுதி வைத்தார். ஒளியியல் பற்றி அவர் எழுதிய நூல், கிதாப் அல் மனாசிர் (Kitab Al Manazir, Book of Optics) என்பதாகும்.

இன்றும் இவருடைய நூலை படிப்பவர்கள் அவர் கையாண்ட செய்முறைகளை தாங்களும் செய்து பார்த்து முடிவுகளை உறுதிப்படுத்தி கொள்ளலாம். இதுதான் அன்றைய/இன்றைய அறியலாளர்களை திக்குமுக்காட செய்தது/செய்கிறது.

இப்படி ஒரு தெளிவான அணுகுமுறைதான் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இந்த தெளிவான அணுகுமுறை தான் இன்று நாம் பார்க்க கூடிய அனைத்து அறிவியல் மாற்றங்களுக்கும் காரணம்.

இதுமட்டுமல்ல, இப்ன் அல் ஹய்தம் அவர்கள், ஒளிவியலின் பல்வேறு அங்கங்களையும்  ஆராய்ந்து பல்வேறு செய்முறைகள் செய்து பதிவேற்றினார். உதாரணத்துக்கு 

  • ஒளி நேர்க்கோட்டில் பயணம் மேற்கொள்கிறது என்பதாகட்டும், 
  • ஒளிவியலின் முக்கிய அங்கங்களான பிரதிபளிப்பு (Refection), ஒளிவிலகல் (Refraction) ஆகட்டும். 


என ஒளிவியலின் பல்வேறு அங்கங்களையும்,  செய்முறைகளுக்கும் கணிதமுறைக்கும் உட்படுத்தி முடிவுகளை கொண்டுவந்தார்.

இவர் துவக்கிவைத்த இந்த அறிவியல் அணுகுமுறையை பல்வேறு முஸ்லிம் விஞ்ஞானிகளும் பல்வேறு துறைகளில் பின்பற்றினர், தெளிவான முடிவுகளை கொண்டுவந்தனர். அவர்களில் சிலர்,

  • அபு மூஸா ஜபீர் இப்ன் ஹய்யான் அல் அஸ்டி (Abu Musa Jabir Ibn Hayyan Al Azdi,), வேதியியல் (Chemistry),    
  • முஹம்மது அல் புஹாரி (Muhammed Al Bukhari), வரலாறு மற்றும் ஹதித்களை தொகுத்த முறை (Histroy and compilation of Hadith),
  • அல் கிண்டி (Al-Kindi), புவி விஞ்ஞானம் (Earth Sciences). 
  • அபு அலி இப்ன் சினா (Abu Ali Ibn Sina), மருத்துவம் (Medicine) 
  • அல் பிருணி (Al Biruni), வானசாஸ்த்திரம் மற்றும் இயந்திரவியல் (Astronomy and Mechanics)
  • அப்டல் மாலிக் இப்ன் ஜுஹ்ர் (Abdal Malik Ibn Juhr), அறுவை சிகிச்சை (surgery)    
  • இப்ன் கல்துன் (Ibn Khaldun), சமூக அறிவியல் (Social Science)                    

இப்படி முஸ்லிம்கள் அறிவியலில் சிறந்து விளங்கியதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் அறிவியலை அணுகிய முறை தான்.
"என்னை பொறுத்தவரை, அறிவியல் அணுகுமுறை தான், மனித குலத்தால் கண்டுபிடிக்கப் பட்டதிலேயே மிகச் சிறந்த யுக்தி. வேறெந்த யுக்தியின் மூலமாகவும் அகிலம் எப்படி வேலை செய்கிறது என்றோ அல்லது வேறு பல எப்படி வேலை செய்கின்றன என்றோ சொல்ல முடியாது. அதனால், நீங்கள் அடுத்த முறை பயணம் மேற்க்கொள்ளும்போதோ அல்லது கைப்பேசியில் பேசும்போதோ அல்லது தீவிரமான நோய்க்கு மருத்துவம் பார்க்கும்போதோ, இப்ன் அல் ஹய்தம், இப்ன் சினா, அல் பிருணி மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்களால் அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் நிச்சயமாக எப்படி சரியான கேள்வியை கேட்பது என்று நமக்கு கற்றுக் கொடுத்தது அவர்கள்தான்" --- (Extract from the speech of) Prof. Jim Alkhalili, Department of Physics, University of Surrey.
"The Scientific Method, is I believe, the single most important idea the human race is ever come up with. There is no other strategy that tells us how to find out how the universe works and other things. So the next time you travel or you use a mobile phone, or you get vaccinated against a deadly disease, remember Ibn Al Haytham, Ibn sina, Al Biruni and countless other Islamic scholars who struggled to make sense of the universe using crude mirrors and astrolabes, they didn't get all the right answers, but they did teach us how to ask the right question" --- Prof. Jim Alkhalili, Department of Physics, University of Surrey.
இதுவரை நாம் மேலே பார்த்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும் தந்திருக்குமானால், இப்போது நான் சொல்லப்போகும் மற்றொரு வியப்பான தகவலுக்கும் தயாராகி கொள்ளுங்கள்.

2. புவிச்சுற்றளவு (Circumference of Earth)

புவிச் சுற்றளவை முதன் முதலில் துல்லியமாக கணக்கிட்டது அல்-பிருணி (973-1048) அவர்கள்.

அவர் கணக்கிட்டு சொன்ன எண்ணுக்கும் இன்றைய எண்ணுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?

ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான் ( < 1%).

  • இன்றைய ஆய்வுகள் மூலம் நமக்கு தெரியவரும் புவிச்சுற்றளவு: 24,859.82 மைல்கள் (40,008 Kms). 
  • அல்-பிருணி அவர்கள் கணக்கிட்ட புவிச்சுற்றளவு: 24,778.24 மைல்கள் (39,876.7 Kms). 

அல்-பிருணி அவர்கள் இதனை கணக்கிட கையாண்ட அறிவியல் அணுகுமுறைகளும்,   யுக்திகளும், கருவிகளும், கணிதத்தை (He used Algebra and Trigonometry to find out the circumference of Earth) வான சாஸ்த்திரத்தில் உபயோகப்படுத்திய நேர்த்தியும் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தின.

அல்-பிருணி அவர்கள் பூமியை ஒரு பூரணமான உருண்டை (He assumed Earth as a perfect Sphere) என்றே எண்ணினார், இன்று நம்மிடம் இருக்கக்கூடிய தகவலின் படி, பூமி உருண்டை தானென்றாலும், அது அதன் பூமத்திய ரேகையில் (Equator) சிறிது விரிவதாக அறிகிறோம் (Today, We know that Earth bulges out at its Equator). அதனால் தான் அவரது கண்டுபிடிப்பிற்கும் இன்றைய கண்டுபிடிப்பிற்கும் ஒரு சிறு வித்தியாசம்.

இங்கு நிச்சயமாக உங்களுக்கு ஒரு குழப்பம் வந்திருக்கும், என்ன...பூமி உருண்டை என்று முஸ்லிம்கள் நினைத்தனரா? கலீலியோ (சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்னர்) தானே பூமி உருண்டை என்று சொன்னதாக படித்திருக்கிறோம்?

உண்மைதான், ஆனால் இதைப்பற்றி நான் இன்னும் தெளிவாக ஆராயவில்லை. இப்போதைய என்னுடைய எண்ணம் என்னவென்றால் கலீலியோ அவர்கள் உலகம் உருண்டை என்பதற்கு முஸ்லிம்களை விட வலிமையான ஆதாரங்களை முன்வைத்தார் என்பது. முஸ்லிம்கள் பூமி உருண்டை என்று சொன்னது அவர்களது ஒரு ஆராய்ச்சியை வைத்துதான்.           


இறைவன் நாடினால், எதிர்காலத்தில் துறை வாரியாக எழுதும்போது அல்-பிருணி அவர்கள் பயன்படுத்திய யுக்திகளை பற்றியும், கருவிகளை பற்றியும், பூமி உருண்டை என்று எப்படி எண்ணினார் என்பது பற்றியும் விவரிக்கிறேன்.

அல்-பிருணி அவர்கள் துல்லியமாக புவிச்சுற்றளவை கணக்கிட காரணம் அவர் அறிவியலை அணுகிய முறைதான்.

இதையெல்லாம் பற்றி பேசும்போது நாம் ஒன்றை நிச்சயமாக மறக்கக்கூடாது. அது, இஸ்லாமிய அறிஞர்களின் இந்த சாதனைகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருந்தது இறைவேதமும், நபிமொழியும் தான். ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுங்கள் என்ற இறைவரிகளும், சீனாவிற்கு சென்றாவது கல்வியை தேடிக்கொள்ளுங்கள் என்பது போன்ற நபி மொழிகளும்தான்.

இந்த தொடரில் நாம் பார்த்த அனைத்து விஞ்ஞானிகளும் இறைநேசர்கள், நல்லடியார்கள். எந்த அளவிற்கு என்றால், ஆய்வுக்காக மலை உச்சியில் ஆய்வுக்கூடம் அமைத்தாலும், அதில் ஒரு சிறிய மசூதி தனியே இருக்குமாறு பார்த்துக்கொண்டவர்கள்.

முஸ்லிகளின் இந்த ஆய்வுகளுக்கு பின்னணியில் குர்ஆனும், சுன்னாவும் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

இனி இதுப்போன்ற கேள்விகளை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் கேட்டு அவர்களது  நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

  • இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு இல்லையென்றால் இன்றைய கணிதத்துறை எப்படி இருந்திருக்கும் என்ற சந்தேகம் வருமளவு கணிதத்தில் சாதனைகள் புரிந்தவர்கள் முஸ்லிம்கள். 
  • இன்றைய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முதுகெலும்பாய் இருக்கக்கூடிய அறிவியல் அணுகுமுறைகளை உலகிற்கு கற்பித்தவர்கள் முஸ்லிம்கள்.
  • இன்ஷா அல்லாஹ், இறைவன் வாய்ப்பளித்தால் இந்த இடத்தை எதிர்க்காலத்தில் மேலும் நீடிப்போம்...

"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன.அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC    
"Its legacy is tangible, with terms like algebra, algorithm and alkali all being Arabic in origin and at the very heart of modern science - there would be no modern mathematics or physics without algebra, no computers without algorithms and no chemistry without alkalis" --- BBC 

இந்த பதிவை முடிப்பதற்கு முன் ஒரு சிறு தகவல்...இஸ்லாமிய ஆட்சி 1492 ல் ஸ்பெயினில் வீழ்ந்தபிறகு, 1499 ல் ஸ்பெயினில் இருந்த நூலகங்களில் இருந்த அரபியில் எழுதப்படிருந்த பெரும்பாலான புத்தகங்கள் அழிக்கப்பட்டன. அவை லட்சகணக்கில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆக, எத்தனை வெளிவராத அறிவியல் உண்மைகள் அப்போது அழிக்க பட்டனவோ, இறைவனே அறிவான். 

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி நல்குவானாக...ஆமின்

இறைவனே எல்லாம் அறிந்தவன்....      



My Sincere Thanks to:

1. Br.Shabir Ally - President, Islamic Information & Dawah Centre International, Toronto, Canada.
2. Science Buddies.
3. British Broadcasting Corporation (BBC).

References:

1. Tamil meanings for scientific terms taken from online Tamil dictionary site - tamildictdotcom
2. The Scientific Method - Science Buddies.
3. Islam and Science - A three series BBC documentary broadcasted on Jan, 2009.
4. Islam: A thousand years of faith and power: Jonathan Bloom and Sheila Blair.
5. Lost history: The enduring legacy of Muslim Scientists, Thinkers and Artists - Michael H.Morgan
6. Ibn Al-Haytham: First scientist - Bradley Steffens.
7. Al Biruni: Master Astronomer and Muslim Scholar of the Eleventh century - Bill Scheppler
8. Circumference of Earth Information taken from aboutdotcom.
9. All discoveries are made by Muslim Scientists - Daily Times dated Nov 6, 2007.
10. Science in Medieval Islam - Wikipedia
11. Muslims Contributions - Net Muslims
12. Ibn Al Haytham: Scientist who first explained optics and the Laws of refraction - Suite101 dated Nov 24,2009.          

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹ்மத் அ






8 comments:

  1. அஸ்ஸலமு அலைக்கும்

    சகோதரர் ஆசிக் அவர்களுக்கு,
    நான் இளையான்குடி வலைபூவில் உங்கள் கட்டுரையின் மீள்பதிவை கண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியின் மூலம் எதிர்குரலை வந்து அடைந்தேன்.இஸ்லாதிற்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் எழுப்ப படுகின்ற கேள்விகளுக்கு உங்களின் ஆராய்ச்சிபூர்வமான பதில்கள் மிக அருமை.வாழ்த்துக்கள். இன்னும் யூசுப் எஸ்டஸ் ,ஆமினா ஆசில்மி போன்ற மார்க்க அறிஞர்களையும் எதிர்குரல் மூலம் அறிந்து கொன்டேன்.பல நல்ல கருத்துகளை தாங்கி நிற்கும் இந்த வலைபூ எழுதத்துடிக்கும் நமது சகோதாரர்களுக்கு ஒரு கருத்து பெட்டகமாகும்.உங்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக ஆமீன்.மேலும் உங்கள் கட்டுரைகளை எனது வலைப்பூவான www.mallippattinamfriends.blogspot.com ல் மீள்பதிவு செய்ய உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
    பாசத்துடன் உங்கள் சகோதரன்
    முஹம்மது முக்தார்
    மல்லிப்பட்டினம் (கேம்ப்:அபு தாபி)

    ReplyDelete
  2. Wa alaikum salaam,

    Dear Br.Muhammed Mukthar,

    Thanks for your Compliments...All praise due to Allah(swt)...

    //உங்கள் கட்டுரைகளை எனது வலைப்பூவான www.mallippattinamfriends.blogspot.com ல் மீள்பதிவு செய்ய உங்கள் அனுமதி வேண்டுகிறேன்//

    Kindly go ahead and re-publish...Insha Allah

    May Allah(swt) show us the right path always...Aamin...

    Thanks...

    Your Brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  3. //அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை பார்த்தோமானால் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம்.//

    ஏன் அத்துணை வியப்பு!

    அது ஒரு பக்கம் இருக்கட்டும். நம் இந்திய நாட்டில் இதுவரை நோபல் பரிசு வாங்கியவர்கள்:
    Rabindranath Tagore
    Raman
    Hargobind Khorana
    Subrahmanyan Chandrasekhar
    Venkatraman 'Venki' Ramakrishnan

    அனைவரும் இந்தியர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் எல்லோரும் -- இந்து மதக்காரர்களா?
    இல்லை ..ஏதும் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களா?
    எதற்காக இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இம்ரான்Sunday, February 09, 2014

      "ஏதும் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களா?"..ஓ அப்படி இல்லையா...புதிய செய்திதான்..

      Delete
  4. அன்பு சகோதரர் ஆஷிக்,
    தங்களுடைய இந்த கட்டுரையின் மூலம் மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட பல உண்மைகளை தோண்டி எடுத்துக் கொண்டு வருகிறீர்கள். இன்னும் உங்களின் பணி வீரியமாக ஏக இறைவன் அருள் புரிவானாக.

    /* தருமி said...
    அனைவரும் இந்தியர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் எல்லோரும் -- இந்து மதக்காரர்களா?
    இல்லை ..ஏதும் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களா?
    எதற்காக இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்கிறேன்.*/

    சகோதரர் தருமி, முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் முஸ்லிம்கள் எந்த ஒரு பங்களிப்பையும் செய்ய வில்லை என்ற பொய் பிரச்சாரத்துக்கு தான் சகோதரர் ஆஷிக் பதில் அளித்திருக்கின்றார். நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்தீர்கள் நவீன அறிவியல் யுகத்திற்கு என்ற கேள்விக்கு பதில் தான் இந்த கட்டுரை.

    தருமி, ஒரு வேளை இந்தியர்கள் அறிவியல் யுகத்திற்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுமானால் அப்போது சகோதரர் ஆஷிக் நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளர்களை பட்டியலிடுவார். கட்டுரையின் மையப் பொருள் எது என்று தெரிந்து கொண்டு பின்னர் உங்களுடைய கருத்துக்களை வெளியிடுவது சால சிறந்தது. நீங்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் நின்று விட்டீர்கள். அதையும் தாண்டி மனிதர்கள் என்ற மையப் புள்ளியில் இருந்தும் நாங்கள் சிந்திக்கின்றோம்.

    ReplyDelete
  5. எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்,

    அன்பு தருமி அய்யா அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

    தங்கள் மீதும், தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

    //
    //அறிவியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை பார்த்தோமானால் வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம்.//

    ஏன் அத்துணை வியப்பு!//

    என்ன வியப்பு இல்லை என்கிறீர்கள்? அதற்கான ஆதாரங்கள் அந்த பதிவுகளிலேயே உள்ளன. உங்களுக்கு அவை ஏன் வியப்பை தரவில்லை என்று கூறினால் நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம்...


    //அனைவரும் இந்தியர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்கள் எல்லோரும் -- இந்து மதக்காரர்களா?
    இல்லை ..ஏதும் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களா?
    எதற்காக இந்தியர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்கிறேன்//


    உலகில் உள்ள அனைவருமே நம் சகோதரர்கள் தான். எல்லாம் இறைவன் கொடுத்ததுதான். இந்த உலகில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து வசதிகளையும் உருவாக்கியதில், உலகில் உள்ள அனைத்து மக்களின் பங்கும் இருக்கிறதென அனைவரும் சொல்லியிருந்தால், ஒரு பகுதி மனிதர்கள் மற்றொரு பகுதி மனிதர்களுக்கு செய்த அநீதியை வெளிப்படுத்துவதோடு அந்த பதிவு முடிந்திருக்கும். முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது...

    ஆனால் இங்கு கேள்வியே, முஸ்லிம்கள் என்ன செய்தீர்கள் அறிவியலுக்கு என்றல்லவா சில முஸ்லிமல்லாத சகோதரர்கள் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்கும் போது முஸ்லிம்கள் இதை செய்தனர், அதை செய்தனர் என்று விளக்கமளிக்காமல் பிறகு எப்படி பதிலளிப்பது...

    உங்கள் மீது ஒருவர் குற்றம் சாட்டினால், அது தவறாக இருக்கும் பட்சத்தில் தாங்கள் அதனை நிரூபிக்க முயலமாட்டீர்களா?...

    எங்கள் மீது இங்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதனை தவறு என்று நிரூபிக்க முயற்சித்திருக்கிறோம்...அவ்வளவுதான்...

    இன்ஷா அல்லாஹ்...இறைவன் நாடினால் மேலும் முயற்சிப்போம்....

    இறைவன் நம் அனைவருக்கும் நல்வழியை காட்டுவானாக...ஆமின்


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்

    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்விஞானத்தை தர பிரார்த்திக்கும் உங்கள் அன்புச் சகோதரன்

    சிராஜ் ஏர்வாடி

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்

    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்விஞானத்தை & நல்வழியை காட்டுவானாக...ஆமின்

    ReplyDelete