Sunday, April 4, 2010

இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சாரா மாலினி பெரேரா...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

இலங்கை சகோதரர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அது பற்றிய செய்தி முதலில் பிரசுரிக்க படுகிறது. நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு மூன்றாம் பகுதி இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்....


இலங்கையில் சகோதரி சாரா அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சனை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. 

சகோதரி சாரா மாலினி பெரேரா (Sister Sarah Malini Perera) பஹ்ரைனில் வாழ்ந்து வருபவர். மூன்று மாத விடுமுறையில் இலங்கை வந்தவர் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதியன்று இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.  

38 வயதாகும் சகோதரி சாரா புத்தமத பெற்றோர்களுக்கு பிறந்தவர். 1985 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனில் வசித்து வருகிறார். "Discover Islam" அமைப்பின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொண்டவர், 1999 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவினார். இவரது பெற்றோரும் நான்கு சகோதரிகளும் பின்னர் வெவ்வேறு காலக்கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்... 

மூன்று மாத விடுமுறைக்காக இலங்கை வந்தவர், தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சிங்கள மொழியில் எழுதியிருந்த இரண்டு நூல்களை வெளியிட்டார். 
    
அவை, "From Darkness to Light" மற்றும் "Questions and Answers" என்பதாகும். இந்த நூல்களில் புத்தரைப் பற்றி மனதை புண்படுத்தும் கருத்துக்கள் (Offensive to Buddha) இருப்பதாக புத்தமத அடிப்படைவாத கட்சியான  JHU (Jethika Hela Urumaiya) கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் சகோதரி சாரா கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 
  
ஆனால் இது பற்றி காவல்துறை எந்த ஒரு தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது. தற்போது முப்பது நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சகோதரி சாரா மாலினி. 

தன்னுடைய இந்த புத்தகங்களை கார்கோ மூலம் பஹ்ரைனுக்கு அனுப்பும் போது தான் கைது செய்யப்பட்டதாக அவருடைய மூத்த சகோதரி மர்யமும் அவரது குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர். 

அந்த புத்தகங்களை அனுப்பும் பொறுப்பை  ஏற்றுக்கொண்ட நிறுவனத்துக்கும் புத்தமத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) விற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் சகோதரி சாராவை கைது செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் சகோதரி சாரா பஹ்ரைனுக்கு திரும்பும் சமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் இருபத்தி நான்காம் தேதி அவரது பஹ்ரைன் "Residency Permit" முடிவடைகிறது. அவர் போய் அதை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் கைது நடவடிக்கையால் அது முடியாமல் போய்விட்டது. தற்போது அவரால் மீண்டும் பஹ்ரைன் வர முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பஹ்ரைனில் உள்ள அமைப்புகள் இதற்கு தாங்கள் உதவுவதாக அறிவித்துள்ளன.   

சகோதரி சாரா மாலினியின் கைதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்கு கைது செய்யப்பட்டார் என்று அவருக்கு தெரிவிக்கப்படவில்லை, கைது செய்த பிறகு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தப்படவில்லை, அவரது உறவினர் யாருக்கும் அவரைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. முப்பது நாட்கள் காவல் என்றாலும் இது இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் தெரியாது.  

பஹ்ரைனைச் சார்ந்த "Discover Islam" அமைப்பு மற்றும் பஹ்ரைன் மனித உரிமைகள் சங்கம் (Bahrain Human Rights Society, BHRS) ஆகியவை, இலங்கை அரசின் இந்த செயல் நியாயமற்றது என்றும், சகோதரி சாராவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு உலகிலுள்ள மனித உரிமை அமைப்புகள் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக இலங்கையைச் சேர்ந்த அரசு சாராத  அமைப்புகளுடன் (NGO - Non Government Organisations) சேர்ந்து பணியாற்ற போவதாகவும் அறிவித்துள்ளன.  அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பஹ்ரைன் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

சகோதரி சாரா மாலினியின் புத்தகங்கள் புத்த மதத்திற்கு எதிரானதாக இருக்காது என்று தான் நம்புவதாக BHRS ன் தலைமைச் செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல் தீரசி (Doctor Abdulla Al Deerazi) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணையக்குழு (Sri Lankan Human Rights Commission) தேவையான உதவியை செய்து வருகிறது.     

காரணங்கள் கூறாமல் ஒரு பெண்ணை காவலில் வைத்திருக்கும் இலங்கை அரசின் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது.   

கூடிய விரைவில் சகோதரி விடுவிக்கப் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆச் செய்வோம்....

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Thanks:
1. Brother Rishan Shareef

Source of Information:
1. SL writer who wrote why she embraced Islam was detained for 30 days - Lanka eNews, dated 1st April 2010. 
2. Author Sara Malini Perera held 'for offending Buddhists' in Sri Lanka - Times Online, dated 29th March 2010. 
3. Sri Lanka urged to free Bahrain Writer - Bahrain Human Rights Society Website.     


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  







5 comments:

  1. I’m a Sri Lankan, இது உன்மையாக இருக்கலாம், JHU என்பது ஒரு புத்த மத கட்சி எனக்கூரினீர்கள் அப்படி இல்லை அது ஒர் இனவாத ,மதவெரி பிடித்த, நாசிச கட்சியாகும். கிட்டத்தில் (2009 &2011) 2 பள்ளிகள் தரைமட்டப்பட்டன. இதக்கும் JHU காரனமாக இருக்கலாம். இலங்கையில் தமிலர்களும், முஸ்லிம்களும் எதிர்ணோக்கும் அணைத்து பிரட்சினைகளுக்கும் இதுவும் இதன் தொலமைக்கட்சிகள்மெ காரனம்.

    ReplyDelete
  2. கருத்துச் சுதந்திரம், மதசுதந்திரம் உள்ள நாட்டில், தனது கருத்தை வெளிப்படுத்தியமைக்காக விஷேடமாகப் பெண் ஒருவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்படாத நிலையில், கைதுக்காளாகி, ஒரு மாதம் சிறையில் வைத்திருப்பது என்பது கண்டிக்கப்பட வேண்டியது.

    உண்மையில் அப்பெண்மணி புத்தமதத்துக்கு அவதூறை ஏற்படுத்தியிருந்தால், அது நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்வு கண்டிருக்க வேண்டும்.

    உண்மையில் யாரோ ஒருவரின் முறைப்பாட்டுக்காக ஒரு பஹ்ரைன் முஸ்லிம் பெண் எழுத்தாளர், புத்தத்திற்கு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற யூகத்தில் கைது செய்வதாயின், இலங்கையில் பகிரங்க மேடைகளில், இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு அவதூறுகளைக் கூறிய பொது பல சேன ஞானசாரா தேராரைக் கைது செய்திருக்க வேண்டும். பகிரங்கமாக பள்ளிவாசல் உடைத்த காவியுடைக் கடையர்களைக் கைது செய்திருக்க வேண்டும். அப்படி ஒன்று நடைபெறவில்லை.

    ReplyDelete
  3. எதிர்குரலினூடக இந்த இந்த தகவலை அறிந்து கொண்டேன் . எந்த ஒரு இலங்கையை சேர்ந்த ஊடகமும் இந்த தகவலை வெளியிடவில்லை .
    அனால் இனவாதம் உச்சத்தில் இருக்கும் இரு நாட்டில் தான் நாங்கள் இன்று வாழ்த்து கொண்டு இருக்கிறோம் .
    bodu bala sena, jathika hela urumaya, ravana balaya, sinhala rawaya
    போன்ற அமைப்புகள் ஹலால் , ஹிஜாப் போன்ற வற்றிற்கு எதிராக இன்று போர் கொடி தூக்கியுள்ளன

    ReplyDelete