அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்
1.கடவுள் இல்லையென்பதற்கு ஆதாரமாக நாத்திகர்களில் கணிசமானவர்களால் முன்வைக்கப்படும் ஆதாரங்களில் முக்கியமானது பரிணாம வளர்ச்சி கோட்பாடு (Evolution Theory). இது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் ஒன்று. ஏனென்றால், அந்த கோட்பாடு கடவுளை மறுக்கிறதாயென்றால், இல்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லுகிறது Talk Origins தளம். நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த தளம் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் பிரபல தளங்களில் ஒன்று.
நீங்கள் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால், அதை மறுப்பதற்கு நாத்திகர்கள் துணையாகக்கொள்ளும் தளங்களில் ஒன்று. பலரும் இந்த தளத்தின் சுட்டியை கொடுப்பதை பார்க்கலாம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் ஒரு கேள்வி, அது:
பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா?
Does Evolution deny the existence of God?
இதற்கு என்ன தெரியுமா விடையளிக்கிறது அந்த தளம்?
No. See question 1. There is no reason to believe that God was not a guiding force behind evolution. While it does contradict some specific interpretations of God, especially ones requiring a literal interpretation of Genesis 1, few people have this narrow of a view of God.
There are many people who believe in the existence of God and in evolution. Common descent then describes the process used by God. Until the discovery of a test to separate chance and God this interpretation is a valid one within evolution.
அதாவது, இந்த தளத்தை பொறுத்தவரை, கடவுள் இல்லை என்றெல்லாம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டால் கூறமுடியாது அல்லது மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், கடவுள் இந்த பரிணாம வளர்ச்சியை பின்னாலிருந்து இயக்குகிறார் என்பதை மறுப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.
கடைசியாய் சொல்லி இருப்பதுதான் இன்னும் சூப்பர். அதாவது, கடவுளையும், எல்லாம் தானாக ஏற்ப்பட்டது (chance) என்பதையும் பிரிக்கும் ஒரு உக்தி கண்டிபிடிக்கப்படும்வரை, கடவுள் இல்லை என்று மறுக்க முடியாது.
அட, நல்லாத்தான் இருக்கு.
இதுமூலமாக நான் அந்த கணிசமான மக்களை கேட்க விரும்புவதெல்லாம்,
- கடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை கொண்டு வந்து நீங்கள் எப்படி கடவுளை மறுக்கிறீர்கள்?
- நீங்கள் குரானையோ அல்லது பைபிளையோ கடவுளின் வார்த்தைகள் இல்லை என்று மறுக்கலாம், வாதிக்கலாம். ஆனால் கடவுளே இல்லை என்று எப்படி சொல்லுவீர்கள்?
ஆக,
- கடவுள் இல்லையென்பதற்கு இந்த கோட்பாடை உதவிக்கு கொண்டுவருபவர்கள் இந்த கோட்பாட்டைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்களா?
- அவர்களுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லையா?
புரியாதப் புதிர்தான்...
2. அடுத்து, நான் ஏற்கனவே ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய "The God Delusion" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல்.
"We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology"
அதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (???), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது.
சுருக்கமாக சொல்லப்போனால், இந்த பூமி எப்படி இவ்வளவு perfect ஆக வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியாக தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி அது கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகமாக கடவுளை மறுக்கலாம் என்பது.
இதை படித்தவுடன் மிகுந்த ஆச்சர்யம். நான் அவரிடம் (அதுமூலமாக நாத்திகர்களிடமும்) கேட்க விரும்புவது:
"மிஸ்டர் டாகின்ஸ்,
- இது உங்களுக்கு குருட்டு நம்பிக்கையாக (Blind Faith) தெரியவில்லை?
- சரியான காரணங்கள் இல்லாமலேயே நீங்கள் கடவுளை மறுக்கிறீர்களா?
- உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவில்லாத போது அதை எப்படி நீங்கள் சரி என்று சொல்ல முடியும்? "
புரியாதப் புதிர்தான்...
அதனால் தான் "டாகின்சுடைய இந்த புத்தகத்தால் ஒரு நாத்திகன் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று மைக்கல் ரூஸ் (Michael Ruse) கூறினார் போலும்...
"...unlike the new atheists, I take scholarship seriously. I have written that The God Delusion made me ashamed to be an atheist and I meant it. Trying to understand how God could need no cause, Christians claim that God exists necessarily. I have taken the effort to try to understand what that means. Dawkins and company are ignorant of such claims and positively contemptuous of those who even try to understand them, let alone believe them. Thus, like a first-year undergraduate, he can happily go around asking loudly, "What caused God?" as though he had made some momentous philosophical discovery.” --- Michael Ruse, Atheist Philosopher of Science.
சும்மா சொல்லக்கூடாது, டாகின்சை நல்லா தான் கேட்டிருக்கிறார் ரூஸ்...
டாகின்ஸ் அவர்கள், நமக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும், ரூஸ் போன்ற அவரது சக தோழர்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்...
இதையெல்லாம் விட, டாகின்ஸ், முடிவாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார் பாருங்கள்....
God Almost Certainly Does not Exist.
கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை
அடடா, கடவுள் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் ஏன் இப்படி மழுப்பலாக சொல்லியிருப்பார்?, ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ?.
என்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ?
என்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ?
புரியாதப் புதிர்தான்.
இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் மேலும் பல புரியாதப் புதிர்களை எதிர்காலத்தில் எடுத்து வைக்க முயல்வோம்.
ஆக இந்த பதிவின் மூலம், நான் என் நாத்திக சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்:
- உங்களால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் (அது உண்மையாக இருந்தாலும் கூட) மூலம் கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாது. அல்லது டாகின்ஸ் சொன்னது போன்று இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது.
- "கடவுள் இருந்தால் உலகில் அநியாயம் நடக்குமா?" என்பது போன்ற கேள்விகள் உளவியல் (Psychological Question) ரீதியான கேள்விகள் தானே தவிர, அறிவியல் ரீதியாக இந்த கேள்விகள் ஒத்து வராது. இது போன்ற கேள்விகள் "கெட்ட கடவுள்" என்று சொல்லத்தான் வழி வகுக்குமே தவிர, கடவுள் இல்லை என்று மறுப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படாது.
ஆக, கடவுளை மறுப்பதற்கு உங்களிடம் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது. அதே சமயம், ஒரு வேலை கடவுள் இருக்கலாமோ என்று ஒரு சதவிதம் சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி ஆராய்வது தான் சிந்திப்பவர்களின் செயல். சொல்லவேண்டியது எங்கள் கடமை. மேற்கொண்டு ஆராய்வது உங்கள் கடமை/இஷ்டம்.
"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன" --- குர்ஆன் 2:164.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
First Picture Taken from:
1. Atlas of Creation, First Volume - Page No.20.
My Sincere Thanks To:
1. Br.Hamza Andreas Tzortzis.
2. Br.Michael Ruse.
References:
1. Talk Origins Website - talkoriginsdotorg.
2. "The God Delusion" - Richard Dawkins, page number 157-158.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDeleteமீண்டும் ஒரு நல்ல பதிவு. இந்த முறை உங்கள் எழுத்து நடை மாறியிருப்பது போல் தெரிகிறது. நல்ல மாற்றம் தான். நாத்திகர்களின் அடிப்படை வாதமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு தான். அதை தகர்த்தெறிந்து விட்டால், "இறைவன் இருக்கின்றான்" என்பதனை அவர்களுக்கு எளிதில் உணர்த்திவிடலாம்(அல்லாஹ் நாடினால்.
அன்பு சகோதரர் அப்துல் பாசித் அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//நாத்திகர்களின் அடிப்படை வாதமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு தான். அதை தகர்த்தெறிந்து விட்டால்...//
1. முதலில், கடவுள் இல்லையென்று மறுப்பதற்கு Evolution Theory எந்த விதத்திலும் உதவாது.
2. இரண்டு, இனிமேல் தான் இந்த கோட்பாட்டை தகர்த்தெறிய வேண்டும் என்ற அவசியமில்லை. அது ஏற்கனவே தகர்த்தெறிய பட்டுவிட்டது.
3. மூன்று, அறிவியல் விஞ்ஞானிகள் பலரும் இந்த கோட்பாட்டை ஒத்துக் கொள்வதில்லை.
4. நான்கு, ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு நாத்திகம் ஒரு மதம், டார்வின் அதன் கடவுள். அதனை கட்டிக்காப்பதற்கு எந்த ஒரு அறிவியல் பொய்யையும் கூற அவர்கள் தயங்கமாட்டார்கள். அதுதான் வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.
5. ஐந்து, நம்மூரில், இந்த கோட்பாடை பற்றி இதனை ஆதரிக்கும் நபர்களை கேட்டீர்கலென்றால் அவர்களிடம் இருந்து தெளிவான பதில் வருமா என்பது சந்தேகம் தான். அவர் சொல்லி இவர் சொல்லி தான் இவர்கள் இந்த கோட்பாட்டை நம்புகிறார்கள். இவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், தங்களது சிந்திக்கும் திறனைக் கொண்டு இந்த கோட்பாட்டை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது அறிந்து கொள்வார்கள்.
6. ஆறு, இனிமேலும் இந்த கோட்பாட்டை பிடித்து தொங்கினால், அவர்களிடம், அதிகமல்ல, சில அடிப்படையான கேள்விகள் கேட்பதன் மூலம் இந்த கோட்பாட்டின் உண்மை நிலையை விளக்க முயற்சிக்கலாம் (இன்ஷா அல்லாஹ்).
தங்களுடைய கருத்துக்கு நன்றி.
அல்லாஹு அக்பர்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அன்பு சகோதரர் ஆஷிக்,
ReplyDeleteபரிணாமவியல் கொள்கையின் தோல்விகளை நீங்கள் தொடர்ந்து தங்களின் எழுத்துக்களின் வாயிலாக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். டார்வினின் நிரூபிக்கப்படாத, நிரூபிக்கவே முடியாத பரிணாமவியல் கொள்கையை தூக்கி பிடித்து கொண்டு முழு உலகையும் படைத்து இரட்சிக்கும் சர்வ வல்லமை கொண்ட இறைவனை மறுக்கும் நாத்திகர்களே சிந்தித்து பாருங்கள். உங்களின் பகுத்தறிவை பயன்படுத்துங்கள். நேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்.
சில சுட்டிகள் தங்களின் பார்வைக்கு:
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/368/
http://onlinepj.com/books/arthamulla_kelvikal/ ( தலைப்பு 11 மற்றும் 12 ஐ பார்க்க)
http://onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/nathika_vivathaththin_pinnani/
இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteமுயற்சி நம்முடையது ஹிதாயத் அவனோடது ...
Hi Sir,
ReplyDeleteEvolution need a long time, which cannot be comprehend by human mind. It takes a very long time to evolve. If you want to know the time taken is may be more than 1500 yrs.The earth is more than 3 billion years old . And we do not have that much scientific data to tell you this is what this. Because human life time is much more small.
May be given sufficient time, the future kids may have carbon filters embedded in their nose :),
Cheer up, Open your mind.
pugazh
Dear Brother Pugazh,
ReplyDeleteAssalaamu Alaikum...
May Peace and Blessings of the Almighty be upon you and your family....
Hearty Welcome brother,
See, as far as we concerned, Evolution Theory is just a fairy tale of few magicians. The first was indeed Darwin. Why? because Darwin couldn't give proper answers when he put forth his theory (see his "difficulties in theory"), nor did today's few scientists who support the theory. Just check out how many frauds few have done to prove this jumbo-bumbo theory.
Let it take long time, no problem. After all, science doesn't bother about time, it bothers about Scientific Method. Where are those intermediate fossils?, they are one of the evidences right?, where are those half-evolved fossils?, there should be millions and millions of them, either yesterday or today...
What is the need of Punctuated Equilibrium?, why few scientists supported it?, which model of evolution today's those few scientists follow? The Neo-Darwism Model or punctuated equilibrium or intelligent design or what else?
If Evolution is true, why scientists are divided amongst themselves regarding this theory?, What about mutations? Did they ever found mutations cause positive changes or add informations to gene code?
I can ask lot of questions brother. As you said to open my mind, let me read the theory again. Anyhow it will be fair if you also open your mind regarding this fantasy theory...
If I said something wrong, please forgive me for God's sake.
Thanks and Take care...
Your brother,
Aashiq Ahamed A
MASHAALLAH ARUMAIYAANA PADHIVU..
ReplyDeleteYENNUDAIYA BLOGIL INAITHUKOLLA ANUMADHI KORUGIREN ?
nagoreflash.blogspot.com
அன்பு சகோதரர் அப்துல்லா அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனுக்கே...
தாராளமாக என்னுடைய பதிவுகளை தங்களுடைய தளத்தில் மீள்பதிவு செய்து கொள்ளலாம்.
Jazakkallaahu Khair...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி சகோதரே... அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக !
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தற்போதுதான் தங்களுடைய தளத்தை பார்வையிட நேர்ந்தது உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeletescience cannot understand birth secret. its beyond science capability.. god is creat
ReplyDeletesorry please change crate as Great
ReplyDelete//பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா?
ReplyDeleteDoes Evolution deny the existence of God?//
Indeed I request you to explain / define "GOD"
there is no proof for the existence of god.
ReplyDeleteDear Brother Anony,
ReplyDeleteAssalaamu alaikum (may peace and blessings of the Almighty be upon you)
---
there is no proof for the existence of god.
---
there are enough proofs for the existence of God. it might be more appropriate if you have said "there is no proof for evolution theory"
Thanks,
Your brother,
aashiq ahamed a
இதற்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியாகியுள்ளது. தேடலுள்ளவர்கள் பரிசீலிக்கலாம்.
ReplyDeleteபுரிதலை மறுக்கும் புதிர்கள்
http://nallurmuzhakkam.wordpress.com/2012/09/21/ashiq-senkodi-2/
செங்கொடி