Pages

Friday, April 23, 2010

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, அது பல கட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. அது உண்மையா, பொய்யா என்கின்ற விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன. 

அதெல்லாம் சரி, மக்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்? எத்தனை பேர் இந்த கோட்பாட்டை ஏற்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்?. 

இது சார்பாக மக்களிடம் நடத்தப்பட்ட சில ஆய்வு (Survey) முடிவுளைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்...


ஆய்வு 1:

சென்ற ஆண்டு, பத்து நாடுகளில் பரிணாம வளர்ச்சி கோட்பாடு குறித்து மக்களின் எண்ணங்களை திரட்டியது பிரிட்டிஷ் கவுன்சில் (British Council). அந்த நாடுகள் Argentina, China, Egypt, India, Mexico, Russia, South Africa, Spain, Great Britain and USA. 

பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில், சுமார் 54% மக்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

அதிலும், இந்த பத்து நாடுகளில் நான்கில் (USA, South Africa, Russia and Egypt) இந்த கோட்பாட்டை பற்றி சந்தேகத்தில் இருப்பவர்களே மெஜாரிட்டி. உதாரணத்துக்கு சொல்லப்போனால், ரஷ்யாவில் மட்டும் சுமார் 48% பேர் இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ள தகுந்த ஒன்று இல்லை, ஆதாரங்களை பற்றிய சந்தேகம் (Skeptical) இருக்கிறது  என்று தெரிவித்துள்ளனர். 

ஆய்வு 2:

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 34 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 

Iceland, France, Denmark மற்றும் swedan நாடுகளைச் சேர்ந்த சுமார் 80% மக்கள், பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை ன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். 

அதே சமயம், Poland, Croatia, Austria, Romania, Greece, Bulgaria, Lithuania மற்றும் Latvia நாடுகளைச் சேர்ந்த 45-55% மக்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

மிக ஆச்சர்யமாக, அமெரிக்காவில் 40% மக்கள் மட்டுமேந்த கோட்பாட்டை உண்மை என்று நம்புகின்றனர். 

ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளிலேயே மிக அதிக மக்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்றால் அது துருக்கி மக்கள்தான். சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல என்று நிராகரித்துள்ளனர். இது பரிணாம வளர்ச்சி கோட்பாடை ஆதரிக்கும் அறிவியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. காரணம், மெத்த படித்த மக்கள் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளில் துருக்கியும் ஒன்று  என்பதுதான்.        


ஆய்வு 3: 

அமெரிக்கர்களிடம், 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 
  • சுமார் 44% மக்கள், கடவுள் மனிதனை இப்போதுள்ள நிலையிலேயே படைத்தார் என்றும்; 
  • சுமார் 36% மக்கள், உயிரினங்கள் மாறி மாறி மனிதன் வந்திருக்கலாம், ஆனால் அதற்கு பின்னால் கடவுள் இருக்கிறார் என்றும்; 
  • சுமார் 14% மக்கள் மட்டுமே, மனிதன் கடவுள் துணையில்லாமல் பரிணாம வளர்ச்சி அடைந்தான் 
என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.



ஆச்சர்யமாக, கடந்த 25 ஆண்டுகளாக இதே போன்று தான் அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


ஆய்வு 4: 

ஆய்வாளர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தான் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. 

2008 ஆம் ஆண்டு, Egypt, Pakistan, Malaysia, Indonesia, Turkey மற்றும் Kazakhstan நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8% எகிப்தியர்கள், 11% மலேசியர்கள், 14% பாகிஸ்தானியர்கள், 16% இந்தோனேசியர்கள் மற்றும் 22% துருக்கியர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையாக இருக்கலாம் அல்லது நிச்சயமாக உண்மை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 



கஜகஸ்தான் நாட்டில் சுமார் 28% மக்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாடு உண்மையல்ல என்று கூறியிருக்கின்றனர். அதேசமயம் அந்த கோட்பாடு உண்மை என்றும் பெரும்பாலானோர் கூறவில்லை. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை அல்லது தெரியாது என்ற பதிலே பெரும்பான்மை. 

ஆக, பரிணாம வளர்ச்சி கோட்பாடு மிகப்பெரிய அளவில் முஸ்லிம் நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 


மொத்தத்தில், மக்களிடையே உள்ள இந்த கருத்து வேற்றுமை, பரிணாமவியல் அறிவியலாளர்களை திணறடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் சூடான் நாடுகளின் பள்ளிக்கூடங்களில் பரிணாமவியல் பாடங்கள் கற்பிக்க மறுக்கப்படுவதும், மேலும் பல நாடுகளில் அதிகரித்து வரும் பரிணாமவியலுக்கு எதிரான கோஷங்களும் அவர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.             

இந்த மாற்றங்களுக்கு அவர்கள் கூறும் காரணம்,
  • பரிணாமவியல், பள்ளிகளில் சரியாக கற்பிக்கப்படுவதில்லை. 
  • அறிவியலை மக்கள் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. 
  • அடிப்படைவாத மத நம்பிக்கைகள்.
  • மதம் சார்ந்த அரசியல்.


இதற்கு பரிணாமவியலை மறுப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்? 
  • பரிணாமவியல், Scientific Method டை பின்பற்றவில்லை. 
  • அதனை ஆதரிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. 
  • நிரூபிக்கப்படாத கோட்பாடு பள்ளிகளில் கற்பிக்கப்பட கூடாது. 
  • அப்படியே அது கற்பிக்கப்பட்டாலும், அதனுடன் கடவுள் உருவாக்கினார் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இரண்டையும் படித்து எது உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


எது எப்படியோ, பரிணாமவியலை ஆதரிக்கும் அறிவியலாளர்களுக்கு, அவர்கள் முன்னே மாபெரும் சவால் இருக்கிறதென்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
These Results Should be troubling for Science Educators at all levels --- Miller Et Al, Public Acceptance of Evolution, 2006. p.766 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச்செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...       


My Sincere Thanks To:
1. Austrian Academy of Sciences. 

References: 
1. Public Acceptance of Evolution - Austrian Academy of Sciences, wwwdotoeaw.ac.at.
2.The British Council Survey - Submitted on 30th June, 2009 at World Council of Science  Journalists. wwwdotbritishcouncil.org.  
3. Evolution, Creationism, Intelligent Design - Gallup Poll Daily tracking, surveyed on May 8-11, 2008. wwwdotgallup.com    
4. On Darwin's Birthday, Only 4 in 10 believe in Evolution - Gallup Poll Daily tracking, surveyed on Feb 6-7,2009.
5. Creation-Evolution Controversy - Wikipedia. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ           
  

97 comments:

  1. அன்பு சகோதரர் ஆஷிக்,
    பரிணாமவியல் கோட்பாடு என்பது நிரூபிக்கப்படாத ஒரு தியரி மட்டுமே. இதை எப்படி மக்களில் பலர் நம்புகின்றனர் என்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கின்றது. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளையே பள்ளிகளில் கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே. வெறும் நிரூபிக்கப்படாத தியரியாக மட்டுமே இருக்கின்ற பரிணாமவியல் கோட்பாடு பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்று சொல்லுபவர்கள் அப்படியே நம்மூர் ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கதையையும் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்லுவார்களா?

    ReplyDelete
  2. //சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல என்று நிராகரித்துள்ளனர்.//

    குழந்தைங்க பேச ஆரம்பிக்கிறதுல இருந்தே மதத்தை ஊட்டி வளர்த்தும் 25% பரிணாமத்தை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது! நல்லவேளை 25% பேருக்காவது சுய அறிவு இருக்கே!

    ReplyDelete
  3. @பி.ஏ.ஷேக் தாவூத்
    //பரிணாமவியல் கோட்பாடு என்பது நிரூபிக்கப்படாத ஒரு தியரி மட்டுமே//

    அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள்) முதலில் postulates அல்லது theories ஆகியவற்றை முன்வைப்பார்கள். அதனை அடிப்படையாக வைத்து, postulate அல்லது theory- யின் தன்மையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ பல கட்டங்களாகவோ ஆராய்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு கட்ட முடிவிலும், ஆராய்ச்சி அந்தக் கோட்பாடுகளை எந்த அளவிற்கு உறுதிபடுத்துகின்றது என்று அறிவிக்கப்படும். உதாரணம்: Arthur Clarke அவர்களால் முன்வைக்கப்பட்ட Geostationery Orbit. 1945- ல் அவர் கூறிய ஒரு தியரியின் அடிப்படையில், பல்வேறு விஞ்ஞானிகளால் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று பல ஆயிரக்கணக்கான தொலை தொடர்பு சாட்டிலைட்டுகள் Geostationery orbit- ல் சுற்றி வருகின்றன.

    Origin of species என்னும் பரிணாமவியல் கோட்பாடு பல கூற்றுக்களையும் (Facts), பல அறிதல்களையும் (Inferences) உள்ளடக்கியது.
    Facts/ கூற்றுக்கள் நிரூபிக்கப்பட்டவை. உதாரணம்: இனப்பெருக்க தன்மை உடைய உயிரினங்களின் இனப்பெருக்கம்.
    பரிணாமவியல் கோட்பாட்டின் மையக்கருவான 'Process of Natural Selection' ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாக வைத்த அறிதல் (Inference).

    டார்வின் அவர்களும் பல்வேறு செடி கொடிகளையும் பறவைகளையும் 'ஆராய்ந்து', Process of Natural Selection என்பதை 'ஆதாரங்களோடு' முன்வைத்தார். அவருக்குப் பிறகும் பல்வேறு அறிவியலாளர்களும், பல்வேறு முறை Process of Natural Selection உண்மை என்பதை நிரூபித்துள்ளனர். (Moth, Black Cap உள்ளிட்ட பல பறவை இனங்கள்). பரிணாமவியலின் மையக்கரு தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

    அவர் தான் ஆராய்ந்த உயிரினங்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களும் அதன் அடிப்படையில் இருக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
    பரிணாமவியல் கோட்பாடு 1859- ல் முன்வைக்கப்பட்டாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் 1950 - லிருந்து தான் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடரும் ஆராய்ச்சிகள் 'Process of Natural Selection' என்பதை முழுதுமாக ஏற்றுக்கொள்கின்றன.

    எனவே, பரிணாமவியல் கோட்பாடு என்பது நிரூபிக்கப்பட்டு வரும் ஒரு அறிவியல் உண்மை.

    இதற்கிடையில், ஏதேனும் ஒரு படிமம் கிடைத்தால் அதன் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவர ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகும். ஆனால், ஹாருன் யாஹ்யா போன்ற சிலர் 'Ardi' குறித்த 'முழுமையான' ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரும் முன்னரே, இவர்கள் 'Ardi' -யை வைத்து ஆராய்ச்சி செய்து விட்டதை போல், எழுதும் சில கட்டுரைகளை நீங்கள் வாசித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அறிவியல் விஷயங்களை அறிவியலாளர்களிடம் இருந்து அறிந்து கொள்ள முயலுங்கள். Cellular Darwinism என்று ஒரு துறை இருக்கிறதே; அதைப் பற்றி அறிந்தால் அசந்து விடுவீர்கள்.

    ReplyDelete
  4. @ஆஷிக் அஹ்மத் அ
    மக்களின் நிலைப்பாடு தெரிவது அரசமைப்பதற்கோ; அரசு நிர்வாகத்திற்கோதான் தேவைப்படுமே தவிர, அறிவியல் முடிவகளுக்கு அல்ல என்று electronics தெரிந்த தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். Vacuum Tubes are better than Transistors என்று 90 சதவிகித மக்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? அது போலவே, பரிணாமக் கொள்கை ஏற்புடையது அல்ல என்று 75 சதவிகித மக்கள் கூறுவது ஏற்புடையது அல்ல.

    உயிரியல் விஞ்ஞானிகள் மத்தியில் பரிணாம கொள்கை ஏற்புடையதா என்று ஒரு சர்வே எடுத்து வெளியிட்டால், நாம் அதனைப் பற்றி பேசலாம். :-)

    ReplyDelete
  5. அன்பு சகோதரர் வால்பையன் அவர்களுக்கு,

    தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    //குழந்தைங்க பேச ஆரம்பிக்கிறதுல இருந்தே மதத்தை ஊட்டி வளர்த்தும் 25% பரிணாமத்தை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது!//

    மத நம்பிக்கைகள் ஒரு காரணமாக இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், ஒரு கோட்பாடு நிரூபிக்கப்பட்டால், அதற்கு முன்னால் மத நம்பிக்கைகள் நிற்காது. இன்று எத்தனை கிருத்துவர்கள் உலகம் தட்டை என்று ஒப்புக்கொள்வார்கள்?

    ஆனால் உலகம் முழுவதும் பரிணாமவியல் கோட்பாட்டுக்கு எதிராக பலரும் இருப்பதற்கு காரணம், அதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று நினைப்பதுதான். உதாரணத்துக்கு ரஷ்யா, தென் ஆப்ரிக்கா என்று பல நாடுகளை சொல்லலாம்.

    ஆக, மதம் ஒரு காரணம் என்றாலும், தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று மக்கள் நினைப்பதே இந்த கோட்பாட்டை எதிர்க்க முக்கிய காரணம்.

    //நல்லவேளை 25% பேருக்காவது சுய அறிவு இருக்கே!//

    உங்கள் பார்வையில் பரிணாமத்தை நம்பாதவர்கள் சுய அறிவு இல்லாதவர்கள். அப்படித்தானே?

    இது எனக்கென்னவோ சரியாகப் படவில்லை சகோதரரே...

    உங்களுக்கு பரிணாமம் பற்றி என்ன தெரியும் என்று தெரிந்துக் கொள்ள ஆசை ஆசைப்படுகிறேன்.

    பரிணாமத்தை நான் முழுவதுமாக எதிர்க்கவில்லை, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மறுக்கமாட்டார்கள்/மறுக்க முடியாது.

    மைக்ரோ பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதை சொல்வதற்கு டார்வினும் தேவை இல்லை.

    மேக்ரோ பரிணாமத்தை எதிர்ப்பதற்கு காரணம் அது முற்றிலும் அறிவுக்கு ஒத்து வராதது, ஆதாரங்கள் இல்லாதது என்பதே. என்னைப் பொறுத்தவரை, தவளை இளவரசன் ஆன பேன்டசி கதைகள் இருக்கின்றனவே, அதற்கு சற்றும் சளைத்ததில்லை இந்த பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்ற கதை.

    நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், உங்களால் முடிந்தால், பரிணாமம் என்ன சொல்கிறது என்று ஆழமாக சென்று ஆராயுங்கள். முடியவில்லை என்றால், அடுத்தவர்க்கு சுய புத்தி இல்லை என்பது போன்ற வார்த்தைகளையாவது தவிர்க்க முயலுங்கள்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
    Replies
    1. வால் பையனுக்கு வால் தான் இருக்கிறது..மூளை இல்லை..!

      Delete
  6. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    //மக்களின் நிலைப்பாடு தெரிவது அரசமைப்பதற்கோ; அரசு நிர்வாகத்திற்கோதான் தேவைப்படுமே தவிர, அறிவியல் முடிவகளுக்கு அல்ல என்று electronics தெரிந்த தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். Vacuum Tubes are better than Transistors என்று 90 சதவிகித மக்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? அது போலவே, பரிணாமக் கொள்கை ஏற்புடையது அல்ல என்று 75 சதவிகித மக்கள் கூறுவது ஏற்புடையது அல்ல//

    இது மக்களின் மன ஓட்டத்தை சொல்லக்கூடிய ஒரு ஆய்வு. நீங்கள் துருக்கியை மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். அமெரிக்கா, ரஷ்யா, பல ஐரோப்பிய நாடுகள் என்று பலவற்றிலும் பரிணாமத்திற்கு ஆதரவு இல்லை. அதை எதிர்ப்பவர்கள் தான் அதிகம்.

    மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள், மக்களின் இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம் என்று பரிணாமத்தை ஆதரிக்கக்கூடிய அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் என்று இந்த பதிவிலேயே இருக்கிறது. இரு தரப்பு வாதத்தையும் நேர்மையாகவே பதிவு செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஆய்வின் மூலம், பரிணாமம் உண்மையாக இருந்தால் அது பொய்யென்று ஆகி விடாது, மக்களிடம் விஷயம் சரியாக போய் சேரவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டி வரும்.

    //உயிரியல் விஞ்ஞானிகள் மத்தியில் பரிணாம கொள்கை ஏற்புடையதா என்று ஒரு சர்வே எடுத்து வெளியிட்டால், நாம் அதனைப் பற்றி பேசலாம்//

    இன்ஷா அல்லாஹ், Genetics, Micro Biology, Bio-Chemistry என்று இந்த பிரிவுகளில் தனித்தன்மை பெற்ற அறிவிலாலர்களிடம் ஆய்வு மேற்க்கொள்ளபட்டால் சந்தோசம்தான்.

    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    நான் இங்கு பேசப் போவதெல்லாம் Macro Evolution பற்றி மட்டும்தான். Micro Evolution பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை. ஆக, நான் பரிணாமம் என்றால் அது Macro Evolution னை தான் குறிக்கும். முதலில் இதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    //அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள்) முதலில் postulates அல்லது theories ஆகியவற்றை முன்வைப்பார்கள். அதனை அடிப்படையாக வைத்து, postulate அல்லது theory- யின் தன்மையைப் பொறுத்து, ஒரு கட்டமாகவோ பல கட்டங்களாகவோ ஆராய்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு கட்ட முடிவிலும், ஆராய்ச்சி அந்தக் கோட்பாடுகளை எந்த அளவிற்கு உறுதிபடுத்துகின்றது என்று அறிவிக்கப்படும்//

    நீங்கள் Scientific Method பற்றி பேசுகிறீர்கள். இது நிச்சயமான உண்மை. இந்த method டை பின்பற்றிவரும் ஆராய்ச்சிகள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு hypothesis முழுமைப் பெறுவதும் இந்த method டை வைத்துத்தான். செய்முறைகள் செய்யப்பட்டு, ஒரே சீராக வரக்கூடிய முடிவுகள் தான் இதில் கணக்கில் கொள்ளப்படும்.

    ஆனால் பரிணாமவியல் தோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். பரிணாமவியலைப் பொறுத்த வரை அது scientific method டை பின்பற்றவில்லை. நூற்றுக்கணக்கான செய்முறைகள் செய்யப்பெற்றும் ஆய்வு முடிவுகள் ஒரே சீராக, Hypothesis க்கு ஆதரவாக வரவில்லை.

    அதுமட்டுமல்லாமல், பரிணாமம் போன்ற கோட்பாடுகள் தற்காலத்திலும் நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுபவை. Big Bang போல ஒரு தடவை நடந்து முடித்தவை அல்ல. Big Bangகை நீருபிக்க ஆய்வு கூடங்களில் செயற்கையாக ஆய்வுகள் நடத்தி தான் நிரூபிக்க வேண்டும். ஆனால் பரிணாமம் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பது இதனை ஆதரிப்பவர்களின் நிலை. ஆக, செயற்கையாக மட்டுமல்ல, இயற்கையாகவும் பரிணாமத்தை நிரூபிக்க வேண்டும். பரிணாமவியலைப் பொறுத்தவரை, அது செயற்கையாகவும் சரி, இயற்கையாகவும் சரி scientific method டை பின்பற்றவில்லை.

    இந்த கோட்பாடை பலரும் எதிர்ப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்...

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  8. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    //Origin of species என்னும் பரிணாமவியல் கோட்பாடு பல கூற்றுக்களையும் (Facts), பல அறிதல்களையும் (Inferences) உள்ளடக்கியது.
    Facts/ கூற்றுக்கள் நிரூபிக்கப்பட்டவை. உதாரணம்: இனப்பெருக்க தன்மை உடைய உயிரினங்களின் இனப்பெருக்கம்.
    பரிணாமவியல் கோட்பாட்டின் மையக்கருவான 'Process of Natural Selection' ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாக வைத்த அறிதல் (Inference).

    டார்வின் அவர்களும் பல்வேறு செடி கொடிகளையும் பறவைகளையும் 'ஆராய்ந்து', Process of Natural Selection என்பதை 'ஆதாரங்களோடு' முன்வைத்தார்//

    டார்வின் அவர்களின் ஈடுபாடு, ஆர்வம் போற்றத்தக்கது. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த Natural Selection ஒரு உயிரினத்தையே வேறொன்றாக மாற்றும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்கு தெளிவான ஆதாரத்தையும் அவர் எடுத்து வைக்கவில்லை.

    உதாரணத்துக்கு, ஒரு காட்டில் புலிகளும் மான்களும் இருந்தால், வேகமாக ஓடி தப்பித்து கொள்ள முடியாத மான்கள் அழிந்து விடும், அதாவது Strong will survive, Weak will be destroyed என்பது ஏற்றுக் கொள்ளதக்கது.

    ஆனால், அந்த புலிகளிடமிருந்து தப்பிக்க, அந்த மான்கள் வேறொன்றாக உருவெடுக்க இயற்கை உதவும் என்பது டார்வினின் வாதம். ஆனால் இயற்கைக்கு அந்த சக்தி இருக்கிறதா? அதாவது ஜீன்களில் உள்ள தகவல்களை மாற்றும் அளவு இயற்கைக்கு சக்தி இருக்கிறதா?

    இந்த ஜீன் எல்லாம் டார்வினுக்கு தெரியாத ஒன்று. அவருடைய Microscope க்கு தெரிந்ததெல்லாம் ஒரு செல்லின் வெளிப்புறம் தான்.

    Fossils பற்றி அவர் குறிப்பிடும் போது கூட, அது எதிர்காலத்தில் நிரூபிக்க படலாம் என்றுதான் கூறி இருக்கிறார்.

    Natural Selection எப்படி ஒரு உயிரினத்தை மாற்றும் என்பதும் அவருக்கு தெளிவாகவில்லை. தன்னையே போட்டு அதிகமாக குழப்பிக்கொண்டவர் அவர். அவருடைய புத்தகத்தில் இதற்கென்றே தனியாக ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கிறார் (மிக நேர்மையானவராக தெரிகிறார்).

    இன்று பரிணாமத்தை ஜீன்களை (யும் ஒரு காரணமாக) வைத்துதான் அணுகிறார்கள். அதுவும் அவருக்கு தெரியாது.

    ஆக, டார்வின் அவருடைய வாதத்தை தெளிவாக விளக்கவில்லை, ஆதாரங்களை வைக்கவில்லை. எதிர்காலம் பதில் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார். அவரும் Scientific Method டை சரி வர பின்பற்றவில்லை.

    ஆக, டார்வின் வைத்த கோட்பாடு அவர் பார்த்து தனக்குள்ளேயே போட்டுக்கொண்ட ஒரு கணக்கே தானே தவிர, அவர் சொல்ல வந்த கருத்தை ஆதாரங்களோடு தெளிவாக சொல்லவில்லை.

    நீங்கள் சொல்லுவது போன்று செடிகள், பறவைகள் என்று அனைத்தையும் அவர் கணக்கில் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் மூலம் அவருடைய மைய கருத்தை (Macro Evolution) அவர் ஆதாரங்களோடு முன்வைக்கவில்லை என்பதே உண்மை.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  9. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    //அவருக்குப் பிறகும் பல்வேறு அறிவியலாளர்களும், பல்வேறு முறை Process of Natural Selection உண்மை என்பதை நிரூபித்துள்ளனர். (Moth, Black Cap உள்ளிட்ட பல பறவை இனங்கள்)//

    இல்லை, டார்வினுக்கு பின் வந்த அறிவியலாளர்கள், பரிணாமத்தை நிரூபிக்க முயன்று (அந்த காலத்திலேயே அல்லது எதிர் காலத்திலேயோ) தோல்வி அடைந்தனர் என்பதுதான் உண்மை.

    எனக்கு Black Cap பற்றி சமீப காலங்களாக தான் தெரிய வருகிறது. அதனால் அதைப் பற்றி எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும், அவை வேறு இனங்களாக மாறினவா? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.

    நீங்கள் எந்த moth எடுத்துகாட்டைப் பற்றி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. Kettlewell அவர்களுடைய ஆய்வைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா?, அதுதான் என்றால், அது பித்தலாட்டம் என்று ஏற்கனவே நிரூபிக்க பட்டதல்லவா? ஏன் அதை குறிப்பிடுகிறீர்கள்?

    ஒரு வேலை அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது பரிணாமவியலின் மைய கருத்தை நிரூபிக்கவில்லையே? ஒரு நிற moth மற்றொரு நிற moth தாக தானே மாறியதாக குறிப்பிட்டார் Kettlewell. இது எப்படி பரிணாமவியலை நிரூபிக்கும்?

    நீங்கள் "மற்றும் பல பறவை இனங்கள்" என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? விளக்கமாக சொன்னால் பதிலளிக்க ஏதுவாய் இருக்கும்.


    //பரிணாமவியலின் மையக்கரு தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது.//

    இல்லை, பரிணாமவியலின் மையக்கரு தவறு என்று தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.


    //அவர் தான் ஆராய்ந்த உயிரினங்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களும் அதன் அடிப்படையில் இருக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
    பரிணாமவியல் கோட்பாடு 1859- ல் முன்வைக்கப்பட்டாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் 1950 - லிருந்து தான் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடரும் ஆராய்ச்சிகள் 'Process of Natural Selection' என்பதை முழுதுமாக ஏற்றுக்கொள்கின்றன//

    இல்லை, தொடரும் ஆராய்ச்சிகள் மிகப் பெரிய தோல்விகளைத்தான் தந்து கொண்டிருக்கின்றன
    .

    //எனவே, பரிணாமவியல் கோட்பாடு என்பது நிரூபிக்கப்பட்டு வரும் ஒரு அறிவியல் உண்மை//

    இல்லை, பரிணாமவியல் கோட்பாடு தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வரும் ஒரு அறிவியல் பொய் என்பதுதான் உண்மை.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  10. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    //அறிவியல் விஷயங்களை அறிவியலாளர்களிடம் இருந்து அறிந்து கொள்ள முயலுங்கள்//

    மிகச் சரியான வார்த்தை. அல்ஹம்துலில்லாஹ், நாங்களும் இப்படித்தான் சொல்லுவோம். இஸ்லாத்தை பற்றி முஸ்லிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று. உங்கள் கருத்து நியாயமானதே...


    //Cellular Darwinism என்று ஒரு துறை இருக்கிறதே; அதைப் பற்றி அறிந்தால் அசந்து விடுவீர்கள்//

    சொன்னால் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம். இஸ்லாம் என்றும் அறிவியலுக்கு எதிரானதல்ல. ஒவ்வொரு ஆய்வும், கண்டுபிடிப்புகளும் இறைவனின் மகத்தான ஆற்றலை நிரூபித்து கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் சொல்வதை கேட்க ஆர்வமாய் உள்ளோம்.


    தங்களுடைய நேரத்தை ஒதுக்கி பரிணாமத்தை பற்றி விளக்க முயன்றதுக்கு மிக்க நன்றி. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

    தங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    நான் உங்களை, எனக்குத் தெரியாமல் எந்த வகையிலாவது இந்த பதிவில் புண்படுத்தி இருந்தால் இறைவனுக்காக மன்னித்து விடுங்கள்...

    "நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன" --- குர்ஆன் 2:164.


    இறைவன் நம் அனைவருக்கும் மன அமைதியை வழங்குவானாக...ஆமின்

    அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  11. நல்ல கட்டுரை .

    ReplyDelete
  12. நாளை, நான் ஒரு திருமணத்திற்கு செல்லவிருப்பதால், திங்கள் அன்று மாலை, நிச்சயமாக நாம் உரையாடுவோம்.

    ReplyDelete
  13. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    //நாளை, நான் ஒரு திருமணத்திற்கு செல்லவிருப்பதால், திங்கள் அன்று மாலை, நிச்சயமாக நாம் உரையாடுவோம்//

    இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால்....

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  14. அன்பு சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ. அவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.
    Darwin's "THEORY" of evolution, Darwin's "THEORY" of natural selection என்றுதான் நான் படித்திருக்கிறேன். இதுநாள் வரை யாரும்... உலக evolutionists எவரும்..., அவ்வளவு ஏன்... டார்வின், டாக்கின்ஸ் உட்பட எவரும், எதிலும், எப்போதும், எங்கும், என்றும், எதற்காகவும் Darwin's "FACTS" of evolution, Darwin's "FACTS" of natural selection என்று சொல்லியதோ, எழுதியதோ கிடையாது. இப்போதெல்லாம் பல கல்லூரி சிலபஸ்களிலேயே தூக்கிக்கொண்டிருக்கிரார்கலாம். இந்த நாத்திகர்கள்தான் இதனை குருட்டுத்தனமாய் அறிவியலாய் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அந்த மூடநம்பிக்கையின் அடிப்படையையும் மிக அழுத்தமாய் இக்கட்டுரை மூலம் தகர்க்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  15. அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்...

    //இந்த நாத்திகர்கள்தான் இதனை குருட்டுத்தனமாய் அறிவியலாய் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்//

    சரிதான்.

    என்னைப் பொறுத்தவரை பரிணாமவியல் அறிவியலே கிடையாது. ஏனென்றால் அறிவியலின் இதயமான Scientific Method டை அது பின்பற்றவே இல்லை.

    என்னைப் பொறுத்தவரை அது, Arabian Nights போன்ற கற்பனை கதை தொகுப்புகளுக்கு சவால் விடக்கூடிய அற்புத கதை தொகுப்பு. அவ்வளவுதான்.

    அப்படியே அது சரியென்று வைத்துக்கொண்டாலும், நாத்திகர்கள் அதை ஏன் கடவுளை மறுக்க பயன்படுத்துகிறார்கள் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது. அப்படி அவர்கள், கடவுளை மறுக்க பரிணாமவியலை துணைக்கு அழைத்தால், அது பரிணாமவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலையே காட்டுகிறது.

    கடவுளை மறுக்க எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவர்கள் கடவுளைப் மறுப்பது இன்னும் வேதனை அளிக்கிறது.

    அவர்களும் ஒரு faith ஐ பின்பற்றுகிறார்கள், ஆம் அது BLIND FAITH...

    இறைவன் அவர்களுக்கு நேர்வழியை காட்டட்டும்...ஆமின்..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. தோழர் Aashiq Ahamed அவர்களுக்கு.
    //இது மக்களின் மன ஓட்டத்தை சொல்லக்கூடிய ஒரு ஆய்வு.....
    மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள், மக்களின் இந்த எதிர்ப்புக்கு என்ன காரணம் என்று பரிணாமத்தை ஆதரிக்கக்கூடிய அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் என்று இந்த பதிவிலேயே இருக்கிறது. இரு தரப்பு வாதத்தையும் நேர்மையாகவே பதிவு செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்//

    இந்த விஷயத்தில் மக்களின் மன ஓட்டம் முக்கியமல்ல; உயிரியல் விஞ்ஞானிகளின் மன ஓட்டம்தான் முக்கியம். இத்தனை சதவிகித மக்கள் எதிர்க்கிறார்கள்; அதனால் இது ஏற்புடையது அல்ல போன்ற வாதங்களை விடுத்து, பரிணாமவியல் கோட்பாட்டின் உள்ளடக்கத்தைப் பற்றி விவாதித்தால் உங்கள் தொடரின் மையப்பொருள் மாறாமல் இருக்கும்.


    //டார்வின் அவருடைய வாதத்தை தெளிவாக விளக்கவில்லை, ஆதாரங்களை வைக்கவில்லை. எதிர்காலம் பதில் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார். அவரும் Scientific Method டை சரி வர பின்பற்றவில்லை. //

    நீங்களும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டுள்ள Micro Evolution தொடர்பான அவரது ஆதாரங்களை மறந்து விட்டீர்கள் போலும். அவர் அளித்த அந்த ஆதாரங்கள் அனைத்தும் Scientific Method- ன் அடிப்படையில் அமைந்தவையே. நீங்கள் பரிணாமம் என்று பேசினாலே அது macro evolution பற்றி மட்டுமே என்று கூறியிருந்தீர்கள். ஆனாலும், டார்வின் ஆதாரங்களை வைக்கவில்லை என்று கூறுவது பொதுமைப்படுத்தப்பட்டுவிடும். Scientific Method அடிப்படையில் Micro Evolution தொடர்பாக அவர் முன்வைத்த ஆதாரங்கள், நிரூபிக்கப்பட்டவை.

    தொடர்வோம் தோழமையுடன்,
    கும்மி.

    ReplyDelete
  17. தோழர் Aashiq Ahamed அவர்களுக்கு.
    //எனக்கு Black Cap பற்றி சமீப காலங்களாக தான் தெரிய வருகிறது. அதனால் அதைப் பற்றி எனக்கு தெரியாது.//

    அறிவியலாளர்கள் ஆய்ந்து ஏற்றுக்கொண்ட ஒரு நிகழ்கால உண்மையைக் கூட, உங்கள் மதத்திற்கு எதிரான கருத்தைக் கூறுகிறது என்பதற்காக, ஏற்றுக்கொள்ள மறுப்பது அறிவியல் படித்தவர்களுக்கு அழகல்ல.

    ----
    //Kettlewell அவர்களுடைய ஆய்வைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா?, அதுதான் என்றால், அது பித்தலாட்டம் என்று ஏற்கனவே நிரூபிக்க பட்டதல்லவா?//

    Kettlewell அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான விமர்சனங்கள் குறித்து Majerus அவர்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் Judith Hooper எழுதிய புத்தகத்தை வைத்து, பித்தலாட்டம் என்று கூறுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஏனெனில், Hooper எழுதிய அந்த புத்தகத்திற்குப் பிறகே மதவாதிகள், Kettlewell அவர்களின் ஆராய்ச்சி குறித்து பேசத் தொடங்கினார்கள்.

    Majerus அவர்களின் ஒரு வரியை நான் இங்கே மேற்கோள் இடுகின்றேன்.
    "If the rise and fall of the peppered moth is one of the most visually impacting and easily understood examples of Darwinian evolution in action, it should be taught. It provides after all the proof of evolution"

    இந்த ஒரு வரி போதும் Kettlewell அவர்களின் ஆராய்ச்சியையும், மதவாதிகளின் வார்த்தைகளையும் மக்களுக்கு விளக்க.

    தொடர்வோம் தோழமையுடன்,
    கும்மி

    ReplyDelete
  18. தோழர் Aashiq Ahamed அவர்களுக்கு.
    //நீங்கள் "மற்றும் பல பறவை இனங்கள்" என்று எதை குறிப்பிடுகிறீர்கள்? விளக்கமாக சொன்னால் பதிலளிக்க ஏதுவாய் இருக்கும். //

    Hawthorn Fly போன்று பல பறவை இனங்கள் பல்வேறு காலகட்டங்களில், ஆராயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன.

    மேலும், பத்திரிகையாளர் பத்ரி தனது வலைத்தளத்தில், Dawkins அவர்களின் புத்தகம் ஒன்றிற்கான தனது விமரிசனத்தில் கூறிய வார்த்தைகளை அப்படியே இங்கே இடுகின்றேன்.

    "குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது. "

    பத்ரியின் பதிவு
    http://thoughtsintamil.blogspot.com/2010/03/blog-post_9611.html

    அந்த செய்தி:
    http://news.nationalgeographic.com/news/2008/04/080421-lizard-evolution.html


    தொடர்வோம் தோழமையுடன்,
    கும்மி

    ReplyDelete
  19. தோழர் Aashiq Ahamed அவர்களுக்கு

    //பரிணாமவியலின் மையக்கரு தவறு என்று தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.
    //
    //இல்லை, தொடரும் ஆராய்ச்சிகள் மிகப் பெரிய தோல்விகளைத்தான் தந்து கொண்டிருக்கின்றன//
    //இல்லை, பரிணாமவியல் கோட்பாடு தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வரும் ஒரு அறிவியல் பொய் என்பதுதான் உண்மை.

    இத்தனை ஆதாரங்களைப் பார்த்த பின்பும், Process of Natural Selection தவறு என்று எப்படி கூறுகின்றீர்கள்? தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஏதும் இருந்தால் கொடுங்களேன்.


    //இஸ்லாத்தை பற்றி முஸ்லிம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று.//

    என்னுடைய பிறப்பு மதம் பற்றி பல முறை நான் கூறிவிட்டேன், நான் குர் ஆனையும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்திருக்கின்றேன். அதனால்தான் இஸ்லாத்தில் இருக்கும் குறைகளை, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக, என்னால் கூற முடிகின்றது.

    //சொன்னால் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம். இஸ்லாம் என்றும் அறிவியலுக்கு எதிரானதல்ல. ஒவ்வொரு ஆய்வும், கண்டுபிடிப்புகளும் இறைவனின் மகத்தான ஆற்றலை நிரூபித்து கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் சொல்வதை கேட்க ஆர்வமாய் உள்ளோம்.//

    Cellular Darwinism என்பது புதிதாக வளர்ந்து வரும் துறை; Molecular அளவில் Natural Selection நடைபெறுவதை ஆராயும் துறை. பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    தொடர்வோம் தோழமையுடன்,
    கும்மி

    ReplyDelete
  20. @mohamed ashik

    //டார்வின், டாக்கின்ஸ் உட்பட எவரும், எதிலும், எப்போதும், எங்கும், என்றும், எதற்காகவும் Darwin's "FACTS" of evolution, Darwin's "FACTS" of natural selection என்று சொல்லியதோ, எழுதியதோ கிடையாது.//

    நான் எழுதிய பதிலை முழுதுமாக படிக்காமல், மேலோட்டமாக ஒரு சில வரிகளை மட்டும் படித்துவிட்டு, பதில் எழுதியதற்கு நன்றிகள். அதே போல் பரிணாமவியலின் கோட்பாட்டை படிக்காமல், அதன் தலைப்பை மட்டும் படித்துவிட்டு, அதில் Facts எதுவும் கிடையாது என்று பேசும் உங்களிடம், நுனிப்புல் மேயாதீர்கள் என்று மட்டும்தான் கூறமுடியும்.

    ReplyDelete
  21. தோழர் Aashiq Ahamed அவர்களுக்கு

    //கடவுளை மறுக்க எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவர்கள் கடவுளைப் மறுப்பது இன்னும் வேதனை அளிக்கிறது. //

    கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று கூறுங்கள்; கடவுளின் குணம், தன்மை (Attributes and Properties) எவையெவை? கடவுளை அளவிடுவதற்கு அல்லது உணர்வதற்கு அல்லது அறிவதற்கு பின்பற்ற வேண்டிய Scientific method பற்றியும் கூறுங்கள்.

    தொடர்வோம் தோழமையுடன்,
    கும்மி

    ReplyDelete
  22. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    தங்களுக்கு பதில் அளிக்கும் முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த நினைக்கிறேன். நான் ஏற்கனவே கூறியது போல, நான் பேசுவதல்லாம் மேக்ரோ பரிணாமத்தை பற்றிதான். நான் உங்களை ஆதாரம் எடுத்து வையுங்கள் என்று சொன்னது மேக்ரோ பரிணாமத்திற்கு தான்.

    மைக்ரோ பரிமாணம் நாம் நம்முடைய வாழ்க்கையில் பார்த்து கொண்டிருப்பதுதான். அதனால் அது ஒரு பிரச்சனை இல்லை.

    தயவு கூர்ந்து சொல்லுங்கள், நீங்கள் கொடுத்திருக்கிற ஒரு ஆதாரமாவது மேக்ரோ பரிணாமத்திற்க்குண்டானதா? உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    அதுமட்டுமல்லாமல், உங்களுடைய வாதத்தில் சில குறிப்பிடத்தக்க தவறுகளை தெரிந்தே செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதை நான் சுட்டி காட்டுகிறேன்...இன்ஷா அல்லாஹ்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  23. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //இத்தனை சதவிகித மக்கள் எதிர்க்கிறார்கள்; அதனால் இது ஏற்புடையது அல்ல போன்ற வாதங்களை விடுத்து//

    என்னுடைய பதிவு மேலேயே இருக்கிறது. தயவு கூர்ந்து பார்த்து, நான் எப்போது அப்படி சொன்னேன் என்று சொல்லுங்கள்.

    நான் என் பதிவில் அப்படி சொல்லவில்லை என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தாங்கள் ஏன் இப்படி சொல்லுகிறீர்கள்?.

    இது மக்கள் பரிணாமத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற பதிவு. இது மூலமாக மக்கள் இப்படி சொல்கிறார்கள், அதனால் இது சரி அல்லது தவறு என்று விளக்க வரவில்லை.

    British council, gallup poll, austrian academy of sciences என்ன செய்தார்களோ அதையேதான் நானும் செய்தேன். அதாவது, மக்களின் மன ஓட்டத்தை பதிவு செய்தேன். அவ்வளவுதான்.

    தங்களுடைய குற்றச்சாட்டில் சிறிதளவும் நியாயமில்லை.

    மறுபடியும் சொல்கிறேன், இந்த ஆய்வின் மூலம், பரிணாமம் உண்மையாக இருந்தால் அது பொய்யென்று ஆகி விடாது, மக்களிடம் விஷயம் சரியாக போய் சேரவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டி வரும்.

    இப்போது நீங்கள் தான் யோசிக்க வேண்டும், நன்கு படிப்பறிவுள்ள நாடுகளிலேயே மக்கள் பெரிய அளவில் பரிணாமத்தை நம்ப மறுக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று?

    ஒரு கோட்பாடு உண்மை என்றால், ஏன் அதைப்பற்றி விஞ்ஞானிகள் தங்களுக்குள்ளாகவே இத்தனை கருத்து வேற்றுமைகள் கொள்ள வேண்டும் என்று?

    ஒரு கோட்பாடு உண்மையென்றால், அது மத நம்பிக்கைகளை தகர்த்து எரிந்து விடும். அது மட்டுமல்லாமல் அது தொடர்பாக அறிவியலாளர்களிடம் ஒற்றுமை இருக்கும். பரிணாமத்தை பொறுத்தவரை இது இரண்டிலும் பிரச்சனை என்றால், என்ன காரணம் இருக்க வேண்டும் என்று நீங்கள் தான் உங்களுக்குள் கேட்டுக் கொள்ளவேண்டும்.

    ஆக, உங்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அது உஉங்களுக்கே தெரியும்....


    2. //இந்த விஷயத்தில் மக்களின் மன ஓட்டம் முக்கியமல்ல; உயிரியல் விஞ்ஞானிகளின் மன ஓட்டம்தான் முக்கியம்//

    நிச்சயமாக. Genetics, Micro Biology, Bio-Chemistry, paleontology என்று இந்த பிரிவுகளில் தனித்தன்மை பெற்ற அறிவியலாலர்களிடம் ஆய்வு மேற்க்கொள்ளபட்டால் சந்தோசம்தான்.

    இன்ஷா அல்லாஹ் தொடரும்...

    ReplyDelete
  24. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //நீங்களும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டுள்ள Micro Evolution தொடர்பான அவரது ஆதாரங்களை மறந்து விட்டீர்கள் போலும். அவர் அளித்த அந்த ஆதாரங்கள் அனைத்தும் Scientific Method- ன் அடிப்படையில் அமைந்தவையே. நீங்கள் பரிணாமம் என்று பேசினாலே அது macro evolution பற்றி மட்டுமே என்று கூறியிருந்தீர்கள். ஆனாலும், டார்வின் ஆதாரங்களை வைக்கவில்லை என்று கூறுவது பொதுமைப்படுத்தப்பட்டுவிடும். Scientific Method அடிப்படையில் Micro Evolution தொடர்பாக அவர் முன்வைத்த ஆதாரங்கள், நிரூபிக்கப்பட்டவை//

    என்ன ஆயிற்று கும்மி உங்களுக்கு, நான் எப்போது டார்வின் மீது இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தினேன். நான் கூறியதெல்லாம், அவர் மேக்ரோ பரிணாமத்திற்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை என்று தானே. பரிணாமம் என்றாலே மேக்ரோவை தான் குறிப்பிடுகிறேன் என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேனே? பிறகு ஏன் தவறான பிம்பத்தை உருவாக்க முயல்கிறீர்கள்?

    ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறியது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதை ஆதாரத்துடன் சொல்ல வேண்டாமா? டார்வின் என்ன ஆதாரத்தை இதற்கு வைத்தார்? தயவு கூர்ந்து கூர்ந்து கூறுங்கள்...

    அவருடைய கோட்பாட்டை நிரூபிக்க வேண்டிய முக்கிய ஆதாரம், fossils. அதைப்பற்றி அவர் என்ன சொன்னார்?. அவருடைய புத்தகத்தை பாருங்கள்.

    இன்று பரிணாமத்தை நிரூபிக்க gene mutations முக்கியமானது. அதுவும் அவருக்கு தெரியாது.

    ஆக, தெளிவான ஆதாரங்கள் இல்லாமலேயே ஒரு கோட்பாடை முன் வைத்தார் அவர்.

    அவர் மேக்ரோ பரிணாமத்திற்கு என்ன ஆதாரத்தை முன் வைத்தார் என்று தாங்கள் கூறினால் கேட்டுக்கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  25. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //அறிவியலாளர்கள் ஆய்ந்து ஏற்றுக்கொண்ட ஒரு நிகழ்கால உண்மையைக் கூட, உங்கள் மதத்திற்கு எதிரான கருத்தைக் கூறுகிறது என்பதற்காக, ஏற்றுக்கொள்ள மறுப்பது அறிவியல் படித்தவர்களுக்கு அழகல்ல//

    எப்படி இப்படியெல்லாம் நினைக்கிறீர்கள்?

    ஒரு விஷயத்தை பற்றி சமீபகாலங்களாகத் தான் கேள்விப்படுகிறேன், தெளிவில்லாத விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று சொன்னால் அதற்கு மத சாயம் பூசுகிறீர்கள். அருமை.

    இன்னும், நீங்கள் சொல்லும் கருத்து அபத்தம். அப்படி என்ன அந்த Black Cap பறவை ஆதாரம் எங்கள் மதத்திற்கு எதிராக இருக்கிறது? ஒரு பறவை தன் சுற்று சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்வது மைக்ரோ பரிணாமம் தானே. அது என்ன வேறு ஒரு உயிரினமாகவா மாறி விட்டது? அதாவது, அதனுடைய genone மில் தகவல்கள் அதிகமாகி விட்டனவா? தயவு கூர்ந்து சொல்லுங்கள்.

    முதலில் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைக்காதிர்கள். அப்படி செய்தால் நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இஸ்லாம் என்றென்றும் அறிவியலுக்கு எதிரியல்ல. பரிணாமவியல், அறிவியலே கிடையாது. அது ஒரு கதை. அதிலும் புரியாத கதை.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  26. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //Kettlewell அவர்களின் ஆராய்ச்சி தொடர்பான விமர்சனங்கள் குறித்து Majerus அவர்கள் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் Judith Hooper எழுதிய புத்தகத்தை வைத்து, பித்தலாட்டம் என்று கூறுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். ஏனெனில், Hooper எழுதிய அந்த புத்தகத்திற்குப் பிறகே மதவாதிகள், Kettlewell அவர்களின் ஆராய்ச்சி குறித்து பேசத் தொடங்கினார்கள்.

    Majerus அவர்களின் ஒரு வரியை நான் இங்கே மேற்கோள் இடுகின்றேன்.
    "If the rise and fall of the peppered moth is one of the most visually impacting and easily understood examples of Darwinian evolution in action, it should be taught. It provides after all the proof of evolution"

    இந்த ஒரு வரி போதும் Kettlewell அவர்களின் ஆராய்ச்சியையும், மதவாதிகளின் வார்த்தைகளையும் மக்களுக்கு விளக்க//

    அப்படி போடுங்க. முதலில் hooper அவர்களுடைய புத்தகத்தை வைத்து நான் அப்படி கூறவில்லை.

    இன்னொன்றையும் உங்களிடம் கேட்க வேண்டும். உங்கள் பாசையில், பரிணாமவியலை எதிர்ப்பவர்களெல்லாம் மதவாதிகளா? பரிணாமவியலை கேள்வி கேட்கும் அறிவியலாளர்கள் லிஸ்ட்டை தரவா?

    முதலில், மோத் ஆராய்ச்சி உண்மையாக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால், that process did not produce any new species of moths. அவ்வளவுதான்...

    Cyril Clarke, Rory Howlett, Tony Liebert and Paul Brakefield இவர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள் தெரியுமா?

    "in Kettlewell's experiment, moths were forced to act atypically, therefore, the test results could not be accepted as scientific".

    அடடா...

    இதுமட்டுமல்ல, kettlewell இறந்த மோத் களை மரத்தில் ஒட்டவைத்து, படம் எடுத்து அதை வைத்து ஏமாற்றினார். இதை தான் பித்தலாட்டம் என்று கூறினேன். இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது இதில். கூகிளிட்டு பாருங்கள், அறிந்து கொள்வீர்கள். இன்னும் இந்த ஆதாரத்தை சிலர் எடுத்து வருவது ஆச்சர்யமளிக்கிறது.

    அதையெல்லாம் விடுங்கள், நீங்கள் சொன்ன Majerus அவர்கள் இது சம்பந்தமாக பேசியதை கேட்டிருக்கிறீர்களா? அவர் சொல்லி இருக்கிறார், "shortcomings of Kettlewell’s classic experiments are corrected" என்று. இதற்கு என்ன அர்த்தம்?

    Kettlewell ஆராய்ச்சி பற்றி Wallace Arthur அவர்கள் என்ன சொன்னார் தெரியுமா,

    "There is much current debate on whether the ‘micro-evolutionary’ studies of population geneticists, which deal with minor evolutionary changes occurring within present-day species, provides the whole story (or even an important part of the story) of ‘macroevolution’….equally one can argue that there is no direct evidence for a Darwinian origin of a body plan — black Biston betularia [melanic moths] certainly do not constitute one! Thus in the end we have to admit that we do not really know how body plans originate"

    அப்படி போடுங்க...இதில் அவர் பல விஷயத்தை சொல்லி விட்டார்.

    a) kettlewell ஆராய்ச்சி பரிமாணத்திற்கு ஒத்துவராது என்று,
    b) மேக்ரோ பரிணாமவியலுக்கு ஆதாரம் இல்லையென்று.

    ஆக, kettlewell அவர்களுடைய ஆராய்ச்சி பித்தலாட்டமே தவிர அறிவியல் இல்லை. அப்படியே அது உண்மை என்றாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...அது மேக்ரோ பரிணாமத்தை எந்த விதத்திலும் நிரூபிக்காது. .

    அதெல்லாம் சரி, தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறேன். ஏன் அந்த moth ஆராய்ச்சியை மறுபடியும் செய்து பார்க்க கூடாது, அதே போன்ற சூழ்நிலையை உருவாக்கி. sceintific method என்றால் திரும்ப திரும்ப செய்து பார்ப்பது தானே...

    இப்போது நானும் சொல்லலாமா, இந்த ஒரு விளக்கம் போதும் Kettlewell அவர்களின் ஆராய்ச்சியையும், பரிணாமவியல் ஆதரவாளர்களின் வார்த்தைகளையும் மக்களுக்கு விளக்க என்று...

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  27. http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_28.html

    விவாதத்திற்கு அழைத்திருக்கிறேன்!

    ReplyDelete
  28. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //Hawthorn Fly போன்று பல பறவை இனங்கள் பல்வேறு காலகட்டங்களில், ஆராயப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன//

    என்ன சொல்ல வருகிறீர்கள்?, Hawthom fly போன்றவைகள் (மேக்ரோ) பரிமாணத்திற்கு ஆதாரமா? இல்லவே இல்லை.

    மற்ற பல பறவை இனங்கள் என்று எதை சொல்கிறீர்கள், மொத்தமாக எல்லாத்தையும் சொல்லி விடுங்கள். பதில் சொல்லுவதற்கு ஏதுவாய் இருக்கும்.

    அது சரி, அது என்ன பறவை இனமாய் கொண்டு வருகிறீர்கள்? ஊர்வன, பாலூட்டிகள் என்று மற்றவற்றையும் கொண்டு வாருங்கள். இன்ஷா அல்லாஹ்..


    2. ///மேலும், பத்திரிகையாளர் பத்ரி தனது வலைத்தளத்தில், Dawkins அவர்களின் புத்தகம் ஒன்றிற்கான தனது விமரிசனத்தில் கூறிய வார்த்தைகளை அப்படியே இங்கே இடுகின்றேன்///

    சரி, அதுல என்ன பிரச்சனை?. மனித இனம் கூடத்தான் நிறைய வித்தியாசத்த பார்த்திருக்கு. இது ஒன்னும் புது விசயமில்லையே. இந்த பல்லி மாதிரி நிறைய எடுத்துக்காட்டுகளை நீங்க கூறலாமே. moth, black cap, hawthorn fly எல்லாம் அந்த வகையை சேர்ந்தது தானே. இதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.

    நீங்க சொல்லலாம், இப்படி சிறுக சிறுக change ஆகி தானே மற்றொரு உயிரினமா ஆகும்னு... அப்படி நீங்க சொன்னா அதுதான் பிரச்சனையே. சிறுக சிறுக வரட்டும். அது ஒரு பிரச்சனையே இல்லை. இது வரை ஒரு உயிரினம் இப்படி சிறுக சிறுக change ஆகி மற்றோன்ரா ஆனதா ஆதாரம் இல்ல. அதத்தான் சொல்றோம்.

    உங்களிடத்தில் நான் கேட்பதெல்லாம்,

    Do lots of examples of teeny changes add up to a demonstration of macroevolution? Of course not. Do lots of card shuffles add up to an encyclopedia?

    நீங்க மறுபடியும் சொல்லலாம், இதுக்கெல்லாம் நிறைய டைம் எடுக்கும்னு. டைம் எடுக்கட்டும், அதுவும் பிரச்சனை இல்லை. ஆன இப்படி change ஆகி இருந்தா வரலாறுல நமக்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்திருக்கும். ஆன ஒன்னுமே இல்ல. ஒரு fossil கூட பரிணாமத்த நிரூபிக்கவில்லை.

    இல்ல gene மூலமா ஏதாச்சும் கிடைச்சதா என்றால், அதுவும் இல்ல. இன்னும் positive mutation நடத்த முயற்சி செய்துகிட்டு தான் இருக்காங்க...

    ஒரு உயிரினம் வேறொன்றா மாற வேண்டும் என்றால், அதன் genome, positive ஆக மாற வேண்டும் (Information should be increased in genome to produce new species). அப்படி நெகடிவ் ஆக மாறினால் அது அந்த உயிரினத்துக்கு பெரும்பாலும் பிரச்சனையை தான் தருமே ஒழிய அந்த உயிரினம் வேறொன்றாக மாறாது.

    உதாரணத்துக்கு, பூகம்பத்தால் ஒரு கட்டிடம் சேதம் தான் அடையுமே தவிர, வேறொரு அட்டகாசமான கட்டிடமாக மாறாது. genome பற்றி நீங்கள் சொல்லுவதும் அப்படிதான். ஆக, genome மூலமாக அவர்களால் எதுவும் நிரூபிக்க முடியவில்லை.

    அதனால் தான் அறிவியலாளர்கள் punctuated equilibrium என்ற கான்செப்ட்ட கொண்டு வந்தார்கள். intelligent design ன்னு மற்றொன்றையும் கொண்டு வந்தார்கள்.

    ஏன் இதெல்லாம்? ஏனென்றால், அவங்களுக்கு neo-darwism மாடல்ல எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கல...

    இந்த பல்லி, பூச்சி இதையெல்லாம் அவங்க மேக்ரோ பரிமாணத்திற்கு ஆதாரமா ஒப்புக்கொள்ளல.

    Colin Patterson சொன்னார்,

    "No one has ever produced a species by mechanisms of natural selection. No one has ever got near it and most of the current argument in neo-Darwinism is about this question."

    எவ்வளவு தெளிவா சொல்லி இருக்கார். ஆதாரத்துக்கு கிட்ட கூட போகலையாம் இவர்கள் .

    ஆக, நீங்க எடுத்த வைத்த எந்த ஒரு ஆதாரமும் நான் கேட்டது இல்லை. அது உங்களுக்கும் தெரியும். இன்னும் புரியவில்லை என்றால், கேள்வி எடுத்து வையுங்கள், பதிலளிக்க இறைவன் நாடினால் முயல்கிறேன்...

    இன்ஷா அல்லாஹ், தொடரும்....

    ReplyDelete
  29. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //இத்தனை ஆதாரங்களைப் பார்த்த பின்பும், Process of Natural Selection தவறு என்று எப்படி கூறுகின்றீர்கள்? தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஏதும் இருந்தால் கொடுங்களேன்//

    அதுவே தான் என்னுடைய கேள்வியும், ஒரு ஆதாரமும் இல்லாத போது, Process of Natural Selection சரி என்று எப்படி கூறுகின்றீர்கள்?

    நான் அவ்வளவு தெளிவாக கேட்ட பின்பும், நீங்கள் இப்படிப்பட்ட ஆதாரங்களை வைத்தால் நான் என்ன செய்ய முடியும்.


    2. //இத்தனை ஆதாரங்களைப் பார்த்த பின்பும், Process of Natural Selection தவறு என்று எப்படி கூறுகின்றீர்கள்? தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஏதும் இருந்தால் கொடுங்களேன்//

    a) இதுவரை சுமார் நூறு மில்லியன் fossils சை எடுத்திருப்பார்கள். ஒன்றும் பரிணாமத்தை நிரூபிக்க வில்லை என்றால், அந்த ஆராய்ச்சிகள் தோல்வி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்?

    b) gene mutation பற்றி நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகளை செய்திருப்பார்கள், ஒன்றும் பரிணாமத்தை நிரூபிக்க வில்லை என்றால் அந்த ஆராய்ச்சிகள் தோல்வி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்?

    c) நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, பரிணாமம் என்பது தற்காலத்திலும் நடப்பதாக கூறப்படுவது. இதற்கு ஆராய்ச்சிகூட ஆய்வுகள் மட்டும் போதாது, இயற்கையாகவே நடப்பதாகவும் நிரூபிக்க வேண்டும். அதுவும் இதுவரை நிரூபிக்க படவில்லை என்றால் அதை தோல்வி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்?

    நீங்கள் கேட்டது போன்றே நானும் கேட்கிறேன், சரி என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவு ஏதும் இருந்தால் கொடுங்களேன்? பின்னர் பேசலாம்...

    முடிவாக இதையும் கணக்கில் கொள்ளுங்கள், Talk Origins தளம் மேக்ரோ பரிணாமத்தை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா....

    "Biological evolution is a change in the genetic characteristics of a population over time. That this happens is a fact. Biological evolution also refers to the common descent of living organisms from shared ancestors. The evidence for historical evolution -- genetic, fossil, anatomical, etc. -- is so overwhelming that it is also considered a fact"

    என்ன அழகா சொல்லி இருக்காங்க, அதாவது மைக்ரோ பரிமாணம் உண்மையாம் (fact). ஆனால், மேக்ரோ பரிணாமம் உண்மையென்று நினைக்கிறார்களாம் (It is also considered a fact).

    இதை பார்த்தால் படிப்பவர்களுக்கு என்ன தோன்றும்?, ஆதாரங்கள் தெளிவாக இருந்தால், அது உண்மையென்று பொட்டில் அடித்தார் போல சொல்ல வேண்டியது தானே (மைக்ரோ பரிணாமத்திற்கு சொன்னது போல). உண்மையென்று நினைக்கிறார்களாம், நினைத்து கொண்டே இருக்கட்டும்.


    3. //Cellular Darwinism என்பது புதிதாக வளர்ந்து வரும் துறை; Molecular அளவில் Natural Selection நடைபெறுவதை ஆராயும் துறை. பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளன//

    இதை பற்றி தெரியாது, படித்து விட்டு பேசுகிறேன்.


    4. ஆக மொத்தத்தில்,

    a) டார்வின் அவருடைய கோட்பாடை எதை வைத்து நிரூபித்தார்?
    b) நீங்கள் கொண்டு வந்த எந்த ஒரு ஆதாரமும் நான் கேட்டது இல்லை. அவை எல்லாம் மைக்ரோவை தான் பேசுகின்றன.
    c) பரிணாமவியலை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.
    d) உலகில் நடந்த அனைத்து ஆராய்ச்சிகளும் பரிணாமவியலுக்கு எதிராகத் தான் இருக்கின்றன.
    e) talk origins முதற்கொண்டு யாரும் பரிணாமவியல் உண்மையென்று தெளிவாக, ஆணித்தரமாக சொல்ல வில்லை.

    முடிவாக, நீங்கள் இதுவரை உங்கள் வாதத்திற்கு எந்த ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. விஷயம் முடிந்தது...


    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  30. //நீங்கள் இதுவரை உங்கள் வாதத்திற்கு எந்த ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை. விஷயம் முடிந்தது...//

    ஆதாரங்கள் உங்கள் கண்முன்னே இறைந்து கிடக்கிறது, உங்களுக்கு தெரியல என்பதற்காக அவைகள் ஆதாரம் இல்லை என்றாகிவிடாது! என் பதிவில் நான் கொடுத்தள்ள ஆதாரத்திற்கும், கேள்விகளுக்கும் உங்கள் யாரிடமிருந்தும் பதில்லை!, உங்களுக்கு எல்லாமே முடிந்தது, விஷயம் மட்டுமா முடிந்தது!

    ReplyDelete
  31. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,


    ///கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று கூறுங்கள்; கடவுளின் குணம், தன்மை (Attributes and Properties) எவையெவை? கடவுளை அளவிடுவதற்கு அல்லது உணர்வதற்கு அல்லது அறிவதற்கு பின்பற்ற வேண்டிய Scientific method பற்றியும் கூறுங்கள்///

    முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சகோதரே, கேள்விக்கு கேள்வி பதிலாகாது. இதோ என்னுடைய கேள்விகள். நேரடியாக, தெளிவாக இருக்கின்றன. கேள்வியை திசை திருப்பாமல் நேரடியாக பதில் சொல்லுங்கள்.

    a) நீங்கள் நாத்திகரா?
    b) இல்லை agnostic க்கா?

    நீங்கள் agnostic என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. அப்படி ஒரு வேலை நீங்கள் நாத்திகர் என்றால், மேற்கொண்டு படியுங்கள்...

    1. பரிணாமம் உண்மையென்றே வைத்துக்கொள்வோம். அப்படியே ஆனாலும் பரிணாமவியல் கடவுளை மறுக்காது என்று Talk Origins தளம் கூறுகிறது. அப்படி இருக்க, நீங்கள் ஏன் கடவுளை மறுக்க பரிணாமவியலை துணைக்கு அழைத்து வர வேண்டும்? அப்படி நீங்கள் அதை துணைக்கு அழைத்தால், உங்களுக்கு பரிணாமவியல் பற்றி தெளிவான புரிதல் இல்லை என்று தான் அர்த்தமாகிறது.

    கடவுளை மறுக்க பரிணாமவியல் போதும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்களுடைய தனிப்பட்ட கருத்தாகுமே தவிர, அதற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமில்லை. ஆக, கடவுளை மறுக்க பரிணாமவியல் ஒத்துவராது.

    2. கடவுளை மறுக்க இயற்பியல் ரீதியாக என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்? உலகம் என்றால் உயிரினம் மட்டுமில்லையே?

    டாகின்ஸ் ஒரு ஆதாரமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.

    "We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology" --- Richard Dawkins in his book, The God Delusion, page 157...

    இப்போது சொல்லுங்கள், கடவுளை மறுக்க அறிவியல் ரீதியாக ஒரு ஆதாரமும் இல்லை உங்களிடம். அப்புறம் எப்படி கடவுள் இல்லை என்று சொல்லுகிறீர்கள்?

    தயவு கூர்ந்து நேரடியாக பதில் சொல்லுங்கள். பேச்சை திசை திருப்பாதிர்கள். நீங்கள் எதை வைத்து நாத்திகராக இருக்கிறீர்கள்? ஒருவேளை கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்று நீங்கள் சொன்னால், அது வேற பிரச்சனை.

    ஆக மொத்தத்தில், கடவுளை மறுக்க அறிவியல் ரீதியாக ஒரு காரணமும் இல்லை உங்களிடம். தயவு கூர்ந்து ஆராய்ந்து நேரடியான பதிலோடு வாருங்கள். அதுவரை "agnostic" ஆக இருங்கள். எந்த வித ஆதாரமும் இல்லமால் வறட்டு கொவ்ரவத்துடன் நீங்கள் atheist என்று சொன்னால் அதற்கு பெயர் "குருட்டு நம்பிக்கை"...

    இப்போது இதற்கு பதில் அளித்து விட்டு மேற்கொண்டு நீங்கள் கேட்ட கேள்விக்கு போகலாம். கேள்விக்கு கேள்வி பதிலாகாது....புரிந்து கொள்ளுங்கள்...

    முடிவாக, நீங்கள் நாத்திகரா அல்லது Agnostic kka, நாத்திகர் என்றால் கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரத்தை கொண்டுவாருங்கள், இல்லையென்றால் agnostic என்று ஒத்துக்கொள்ளுங்கள்.

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  32. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்,

    1. //என்னுடைய பிறப்பு மதம் பற்றி பல முறை நான் கூறிவிட்டேன், நான் குர் ஆனையும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்திருக்கின்றேன். அதனால்தான் இஸ்லாத்தில் இருக்கும் குறைகளை, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக, என்னால் கூற முடிகின்றது//

    தாங்கள் தற்போது என்ன நிலையில் இருக்கிறீர்களோ அதுதான் இரு வருடத்திற்கு முன் என்னுடைய நிலைமையும். தோழர் என்ற வார்த்தை உபயோகத்திலிருந்து சகோதரர் என்ற வார்த்தை உபயோகத்திற்கு வந்தவன் நான். நான் சார்ந்திருந்த கொள்கையின் மேல் இன்றளவும் மரியாதை இருக்கிறது. ஆனால் இஸ்லாத்திற்கு முன் அவையெல்லாம் ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டேன்.

    நிச்சயமாக முஸ்லிம்கள் குரானைப் படிக்கும் போது அதனைப் பார்த்து ஒரு கேள்வியாவது கேட்டிருப்பார்கள். இறைவனும் அதைத்தான் சொல்லுகிறான். சிந்தித்து நம்புங்கள் என்று.

    நீங்கள் உண்மையை அறிய வேண்டும் என்று வேட்கை கொண்டவராக இருந்திருந்தால், குரானை அரபியிலும் படித்து தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். குரானின் அழகை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். அது உங்களுக்கும் தெரியும். எந்த ஒரு மொழிபெயர்ப்பும் அந்த அழகை தராது. நீங்கள் உண்மையிலேயே இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், அந்த ஒரு அடியையும் எடுத்து வைத்திருப்பீர்கள். அரபி கற்றுக்கொண்டு குரானை புரிந்து கொள்ள முயன்றிருப்பீர்கள்.

    எது எப்படியோ, இறைவன் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். அதனால், உங்களுடைய முடிவை நான் பெரிதும் மதிக்கிறேன். இறைவன் எனக்கு வழிகாட்டியது போல உங்களுக்கும் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் ஒத்துழைத்தால், என்னால் உங்களுக்கு சிறு உதவி செய்ய முடியும். நீங்கள் நேர்மை உடையவராக தெரிகிறீர்கள். உங்களுக்கு இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான தேடல் இருப்பதாகவே உணர்கிறேன். அதனால், பின்வரும் மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ செயல்படுத்த முயலுங்கள்.

    ReplyDelete
  33. தாங்கள் குரானை எடுத்துக்கொள்ளுங்கள், முதல் சூராவிலிருந்து கடைசி சூரா வரை, எதுவெல்லாம் உங்களுக்கு கருத்து வேறுபாட்டை கொடுக்கிறதோ, அதை குறிப்பெடுத்து கொள்ளுங்கள், கூடவே எதனால் உங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்ற கருத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். முடிந்தால் அந்த அரபி வார்த்தைக்கு தாங்கள் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறீர்கள் என்றும் எழுதிக்கொள்ளுங்கள்.

    a) எழுதியதை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள், இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால், அவன் எனக்கு அந்த ஞானத்தை கொடுத்தால் பதிலளித்து அனுப்புகிறேன்.

    b) இல்லையென்றால், சில தளங்களின் முகவரியை தருகிறேன். அந்த தளங்களில் உங்களுக்கு பதில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். அந்த தளங்கள்,

    http://www.muslim-responses.com/
    http://www.call-to-monotheism.com/
    http://www.bismikaallahuma.org/
    http://www.time4truth.com/
    http://answering-christianity.org/
    http://www.thedeenshow.com

    இவைகளில் உங்களுக்கு பதில் இல்லை என்றால், பதில் சொல்லாத கேள்விகளை குறித்து கொண்டு என்னிடம் கேட்கலாம்.

    3. மூன்றாவது மிகவும் சுலபமானது. உங்களுக்கு எப்படியாவது இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் எனபது தான் எண்ணம் என்றால், உங்களுடைய கைப்பேசி நம்பரை என் mail id க்கு அனுப்புங்கள். நீங்கள் சென்னையில் இருப்பதாகவே அறிகிறேன். அப்படி நீங்கள் கொடுத்தால், என் சகோதரர்கள் உங்களை நேரிலேயே பார்த்து விளக்கம் கொடுக்க முயல்வார்கள். இன்ஷா அல்லாஹ். அப்படி அவர்களால் முடியவில்லை என்றால் அறிஞர் பெருமக்களிடம் கூட்டிச் செல்வார்கள். நீங்கள், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வது தான் முக்கியம், யார் சொன்னால் என்ன என்ற நிலையில் இருந்தால் இதை நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.

    ஒரு நாத்திகனுடைய மனநிலையை சிறிதளவு அறிவேன். அவர்களுக்கு முன் கடவுள் என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டாலே அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்பதையும் அறிவேன்.

    ஆக, நான் மேலே சொல்லியுள்ள யாவும் நீங்கள், திறந்த மனதோடு முன் வந்தால் மட்டுமே சாத்தியம். இந்த தளத்திலேயே, இஸ்லாத்திற்கு வந்த பலரது கதைகள் உள்ளன. படித்து பாருங்கள், அவர்களது வார்த்தைகளோடு உங்களது நிலையையும் தொடர்பு படுத்தலாம்.

    youtube பில், dr.jeffrey lang, br.joshua evans, dr.lawrence brown, br.shabir ally, br.nouman ali khan ( இருவரை தவிர மற்றவர்கள் நாத்திகத்திலிருந்து வந்தவர்கள்) போன்றவர்களது பேச்சுக்களை கேட்கலாம்.

    br.hamza andreas, br.adam deen போன்றவர்கள் நாத்திகர்களுடன் நடத்திய விவாதங்களை பார்க்கலாம்.

    ஆக, நான் பல வழி முறைகளை இங்கு சொல்லியுள்ளேன். முடிந்தால் செயல் படுத்த முயலுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள். இஸ்லாம் யாரையும் கட்டாய படுத்துவதில்லை.

    நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை அழிக்கும் மார்க்கம், இஸ்லாம். அல்லாஹு அக்பர்.

    முடிவாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதோ, இந்த மறுமொழியை படிக்கும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இந்த நிமிடத்திலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தங்களுடைய துஆக்களில் சேர்த்துக்கொள்வார்கள். உங்கள் குடும்பத்தினருக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் என்றும், உங்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும் என்றும் இறைவனிடம் கேட்பார்கள்.


    தங்களுடைய பொறுமையான பதில்களுக்கும், கண்ணியத்திற்கும் என்னுடைய நன்றிகள் பல.

    நான் எந்த வகையிலாவது உங்களை புண்படுத்தி இருந்தால் இறைவனுக்காக மன்னித்து விடுங்கள்.

    அஸ்ஸலாமு அலைக்கும்,


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  34. //கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரத்தை கொண்டுவாருங்கள்,//


    இல்லாத ஒரு விசயத்துக்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் கேட்கும் நான் பார்த்த முதல் புத்திசாலி நீங்கள் தான்!, கண்ணை மூடிகிட்டி நீ எதை காட்டினாலும் நம்ப மாட்டேன் என்பவர்களுக்கு எதுவும் புரிய வைக்க வாய்ப்பில்லை!

    லாஜிக்கே இல்லாத ஆறு நாள் உலக படைப்பு,
    இபிலீஸ்,
    நரகம் போன்ற கட்டுகதைகளை உண்மை என்று நம்புபவர்கள் அறிவியல் பற்றி பேசவே கொஞ்சம் யோசித்தல் நலம்!

    ReplyDelete
  35. நண்பர் Aashiq Ahamed அவர்களுக்கு,
    எனக்கு அலுவலகப் பணிகள் சற்று அதிகமாக இருப்பதால், ஓரிரு நாட்கள் கழித்து பதிலளிக்கின்றேன். உங்கள் தரப்பு கருத்துகள், எண்ணங்கள் அனைத்தையும் தெளிவாக சொன்னதற்கு நன்றிகள். :-)

    ReplyDelete
  36. நண்பர் Aashiq Ahamed அவர்களுக்கு,
    காலம் தாழ்ந்து பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

    மதவாதிகள் என்று யாரை கூறுகிறேன் என்று கேட்டுள்ளீர்கள். தன்னுடைய மதம் மட்டுமே சிறந்தது; அறிவியல் ஏற்புடையது அல்ல என்று கூறும் அனைவரையும் நான் மதவாதிகள் என்றே கூறுகின்றேன். என்னுடைய பார்வையில் மதவாதிகளில் இரு வகையினர் உண்டு.

    முதல் வகையினர் பிஜே போன்றோர். சில ஆண்டுகளுக்கு முன்,(தமுமுகவில் பிளவு ஏற்படும் முன்னர்) நடைபெற்ற ஒரு 'இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்' நிகழ்ச்சியில் பிஜே அவர்கள் பரிணாமம் குறித்து உரையாடினார்கள். அப்பொழுது அவர் பேசியது: "குரங்கிலிருந்து மனுஷன் பொறந்தான்னு சொல்லுறாங்க. இது முழுக்க முழுக்க பொய். இது உண்மையா இருந்தா, இன்னைக்கி மயிலாடுதுறைல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்திச்சு; நேத்து கும்பகோணத்துல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்துச்சு அப்படின்னுதானே நியூஸ் வரணும்? ஏன் வரலே? இதுலேந்து என்ன தெரியுதுனா டார்வின் சொன்னது முழுக்க முழுக்க பொய்." இவர்களைப் போன்றோர், அறிவியலை என்னவென்றே அறிந்துகொள்ளாமல், அறிவியல் விளக்கம் கொடுப்பார்கள்.

    இரண்டாம் வகையினர் அறிவியல் அறிந்தவர்கள்; ஆனால் தங்களுடைய மதக்கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அறிவியல் பொய் என்று கூறுபவர்கள்.

    ReplyDelete
  37. கடவுளை மறுக்க ஆதாரங்கள் இல்லை என்று கூறினீர்கள். அப்படியானால் கடவுளை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும் அல்லவா? நான் அதைதான் கேட்டேன். கேள்விக்கு பதில் கேள்வி கேக்கவில்லை.

    நான் நாத்திகரா அல்லது agnostic -ஆ என்று கேட்டுள்ளீர்கள். நான் நாத்திகன். இங்கே நான் பதில் கூறுவது உங்களுடைய பரிணாமவியல் பதிவு தொடர்பாகத்தான். நான் கடவுள் குறித்து பேசியதே நீங்கள் பேசிய பின்பே.

    agnostic- ஆகவாவது இருங்கள் நாத்திகராய் இருக்காதீர்கள் என்று நீங்கள் கூறுவதை பார்த்து எனது புரிதல்:- கடவுள் குறித்த கற்பிதங்கள் தவறு என்று தெரிந்தபின்பும், கடவுள் இல்லை என்று கூறாதீர்கள்; கடவுளை அறிய முடியாது என்று கூறுங்கள்.

    எனக்கு சிறுவயதில் கற்பிக்கப்பட்ட ஒரு செயல். தும்மியபின்பு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவேண்டும். தும்மல் கடவுளின் செயல் அல்ல என்று தெரிந்தபின்பு, அப்படி சொல்வதை நிறுத்திவிட்டேன். தும்மல் ஏன் ஏற்படுகிறது என்று உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  38. நண்பர் Aashiq Ahamed அவர்களுக்கு,
    நீங்கள் பரிணாமவியலில் மைக்ரோ பரிணாமத்தை ஏற்றுக்கொள்கின்றீர்கள்; நிகழ்கால வாழ்வியலில் அதற்கான ஆதாரங்கள் மிகுதியாக இருப்பதால் அதனை மறுக்க இயலாது. மேக்ரோ பரிணாமம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனபின்பே தெரியவரும் என்பதால், அதனை மறுக்க முயல்கிறீர்கள். அதுவும் வார்த்தைகளின் துணை கொண்டே. நீங்கள் மேக்ரோ பரிணாமத்தை மறுக்கும்பொழுது, பரிணாமவியல் என்று மட்டும் கூறினால், உங்கள் பதிவை புதிதாக வாசிக்கும் ஒரு நபர் பரினாமவியலுக்கேஆதாரம் இல்லை போலும் என்று நினைத்துக்கொள்ளக்கூடும். உங்களுடைய நோக்கம் அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன். :-)

    Macro Evolution is an extrapolation of MicroEvolution - என்பதுததான் Origin of Species - ன் அடிநாதம். அறிவியல் உலகில் extrapolation இல்லாத துறை என்ன உள்ளது? Extrapolation -ஐ அடிப்படையாக வைத்தே இன்றைய அறிவியல் உலகின் பல விஷயங்கள் திட்டமிடப்படுகின்றன.

    பல்லிகள் ஆராய்ச்சி, உலகில் அதுவரை இல்லாத ஒரு புதுவகை உயிரினத்தின் தொடக்கம் என்பதை பறைசாற்றியுள்ளது. நியாண்டர்தால், மனிதனாக மாறிய சூழல் என்னவென்று ஆராய்ந்தால், இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்.

    ReplyDelete
  39. நண்பர் Aashiq Ahamed அவர்களுக்கு,

    //குரானின் அழகை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம்.//
    இதைக் கேட்டு கேட்டு புளித்துப்போய்விட்டது. அழகை மொழிபெயர்க்க இயலாவிட்டால் கருத்தையுமா மொழிபெயர்க்க இயலாது.? நமக்குத் தேவை கருத்துதானே? அறிவியல் உண்மை என்று ஒரு வசனத்தை கூறும்போது மொழி அழகு முக்கியம் இல்லை; கருத்தாழமே முக்கியம்.

    //எழுதியதை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள்,//

    ஜூன் முதல் பதிவாக இடுகின்றேன்.

    // சில தளங்களின் முகவரியை தருகிறேன். //
    அவற்றுள் பலவற்றை ஏற்கனவே நான் பலமுறை பார்த்துள்ளேன்.

    //, உங்களுடைய கைப்பேசி நம்பரை என் mail id க்கு அனுப்புங்கள்//
    சில காரணங்களுக்காக இப்பொழுது வெளியிடும் நிலையில் நான் இல்லை.

    //அறிஞர் பெருமக்களிடம் கூட்டிச் செல்வார்கள்.//
    8 ஆண்டுகளுக்கு முன்பு, பிஜேயின் அடுத்தகட்ட பிரச்சாகராக இருந்த ஒருவரோடு நான் பலமுறை குர் ஆன் தொடர்பாக உரையாடியிருக்கிறேன். வழக்கம்போல், பிஜே எழுதிய சில நூல்களை கொடுத்துப் படிக்கச் சொன்னார். மீண்டும் நான் அதிலிருந்தே சில கேள்விகள் கேட்டேன். அவரிடம் பதில் இல்லை.

    நீங்கள் கூறும் அறிஞர் பெருமக்கள், ஒன்று பிஜே புத்தகத்தை கொடுப்பார்கள்; அல்லது அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று கூறுவார்கள். பிஜேயின் பேச்சு குறித்து நான் முந்தைய பதிலில் இட்ட தகவலே போதும் என்று நினைக்கின்றேன், அவருடைய அறிவியல் அறிவை அறிய.

    ReplyDelete
  40. அருமையான உரையாடல் கும்மி!

    ReplyDelete
  41. படித்துப் பாருங்கள்.
    http://www.newscientist.com/article/dn18869-neanderthal-genome-reveals-interbreeding-with-humans.html?page=1

    Don't read in between words. இது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியின் இடைக்கால முடிவுகள் குறித்த செய்தியே!

    ReplyDelete
  42. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    1. நான் கேட்ட முதல் கேள்வி, "டார்வின் தன் மேக்ரோ பரிணாமத்தை எந்த ஆதாரத்தை வைத்து கூறினார்" என்பது...

    அதற்கு உங்களிடமிருந்து எந்த பதிலும் இது வரை வரவில்லை. மைக்ரோ பரிணாமத்தை சொல்ல டார்வின் தேவையில்லை. அவருடைய புத்தகத்தின் பெயர், "Origin of Species". ஒரு உயிரினம் மற்றொன்றாக காலப்போக்கில் மாறுகிறது என்பது அவருடைய வாதம். அதுதான் மிக முக்கியமானதும் கூட. அதற்கு என்ன ஆதாரம் கொடுத்தார்? அவருடைய புத்தகத்தில் இருந்து காட்டுங்கள்...

    இன்ஷா அல்லாஹ் தொடரும்...

    ReplyDelete
  43. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    salaam...

    2. அடுத்து மேக்ரோ பரிணாமத்திற்கு ஆதாரம் கேட்டேன். சென்ற பதிவு வரை நீங்கள் எதையும் எடுத்து வைக்கவில்லை. நீங்கள் இப்போது கொண்டு வந்திருக்கிற நியாண்டர்தால் விசயத்தை பார்ப்பதற்கு முன்னால் ஒரு சிறு தகவலை கூற விரும்புகிறேன். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

    உலகில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பழமையான உயிரினப்படிவங்கள் சுமார் 500-550 மில்லியன் (5000-5500 லட்சம்) ஆண்டுகளுக்கு முந்தியவை (Cambrian). அந்த மிகப் பழமையான படிவங்கள், முழுமையான உயிரினங்களின் படிமங்களாக தான் இருக்கின்றன.

    இது பற்றி டாகின்ஸ் கூறிகிறார்...

    "For example the Cambrian strata of rocks... are the oldest ones in which we find most of the major invertebrate
    groups. And we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is
    as though they were just planted there, without any evolutionary history"

    மிகத் தெளிவாக கூறியிருக்கிறார் டாகின்ஸ். அவையெல்லாம் அப்படி அப்படியே இருந்ததாம்.

    அன்றிலிருந்து இன்று வரை, சுமார் ஐந்தாயிரம் லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன.

    சரி, மிகப் பழமையான படிமங்கள் தான் பரிணாமத்தை நிரூபிக்க வில்லை. இந்த ஐந்தாயிரம் லட்சம் ஆண்டுகளில் ஏதாவது ஒரு உயிரினம் மற்றொன்றாக சிறுக சிறுக மாறியதாக ஆதாரம் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை.

    இதுவரை எடுக்கப்பட்ட லட்சக்கணக்கான படிமங்கள் பரிணாமத்தை நிரூபித்திருக்க வேண்டுமே? ஏன் அப்படி படிமங்கள் கிடைக்கவில்லை?

    இதுப்பற்றி Derek V. Ager கூறுகிறார்,

    "The point emerges that if we examine the fossil record in detail, whether at the level of orders or of species, we
    find-over and over again-not gradual evolution, but the sudden explosion of one group at the expense of
    another"

    அழகாக கூறிவிட்டார் அகர். சிறுக சிறுக வந்ததற்க்கான ஆதாரங்களே இல்லையாம்.

    நீங்கள் எப்போதும் சொல்லுவீர்களே, இதெல்லாம் நடக்க லட்ச லட்ச ஆண்டுகள் ஆகுமென்று...ஐந்தாயிரம் லட்சம் ஆண்டுகள் போதாதா பரிணாமத்தை நிரூபிக்க?. இல்லை, இன்னும் காலம் ஆகும் என்று நீங்கள் சொன்னால், அதையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இப்போது சொல்லுங்கள், Macro Evolution is an extrapolation of MicroEvolution என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்? வார்த்தைகள் போதாது. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நாம் விவாதிப்பது பரிணாமவியலைப் பற்றிதான். நீங்கள் சொல்லக்கூடிய இந்த வாக்கியம் மற்ற துறைகளில் பொருந்தி வந்திருக்கலாம். ஆனால் ஆதாரமே இல்லாமல், அது மற்ற எல்லா துறைகளிலும் சரியாக வந்து விட்டது, அதானால் இதிலும் சரியாக இருக்கும் என்று நீங்கள் சொன்னால் அது வார்த்தை விளையாட்டு. ஆதாரங்களுக்கு முன் இந்த வாக்கியங்கள் நிற்காது...

    ஆக, நீங்கள் சிறுக சிறுக என்று சொல்லுவதெல்லாம் ஒரு நம்பிக்கைதான், இதுவரை 5000 லட்ச ஆண்டுகளில் அப்படி இதுவும் நடக்கவில்லை. இயற்கை ஒரு உயிரினத்தை மற்றொன்றாக மாற்றவில்லை.

    இப்போது நீங்கள் கொண்டு வந்திருக்கிற பல்லியை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

    சரி, இப்போது நியாண்டர்தால் விசயத்திற்கு வருவோம்,

    இன்ஷா அல்லாஹ் தொடரும்...

    ReplyDelete
  44. 3. நீங்கள் இப்போது சொல்லி இருக்கிற இந்த நியாண்டர்தால் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த மனித இனம், குரங்கினத்துக்கும் மனித இனத்துக்கும் இடைப்பட்டதென்ரா?

    இல்லை, நியாண்டர்தால் ஒரு மனித இனம்.

    இது பற்றி Erik Trinkaus கூறுகிறார்,

    "Detailed comparisons of Neanderthal skeletal remains with those of modern humans have shown that there is
    nothing in Neanderthal anatomy that conclusively indicates locomotor, manipulative, intellectual, or linguistic
    abilities inferior to those of modern humans"

    ஆக, அவர்கள் மனித இனம்தான். நீங்கள் கூறுவது போல மனிதனுக்கு முன் வந்த இனமல்ல.

    உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், சில தினங்களுக்கு முன் எழுதிய மறு மொழிகளில் கேட்க வேண்டுமென்று நினைத்தேன், ஆனால் மறந்து விட்டேன்.

    நீங்கள் kettlewell ஆராய்ச்சி தொடர்பாக எழுதியது,

    //Majerus அவர்களின் ஒரு வரியை நான் இங்கே மேற்கோள் இடுகின்றேன்.
    "If the rise and fall of the peppered moth is one of the most visually impacting and easily understood examples of Darwinian evolution in action, it should be taught. It provides after all the proof of evolution"//

    இங்கு எனக்கு ஒரு சந்தேகம். என்னவென்றால், அது என்ன "if" என்று ஆரம்பத்தில் போட்டிருக்கிறார். அதாவது "kettlewell ஆராய்ச்சி உண்மையாக இருந்தால்...." என்று சொல்ல வருகிறாரா?. கொஞ்சம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியுமா?

    இன்ஷா அல்லாஹ், தொடரும்...

    ReplyDelete
  45. படைப்புவாதக் கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதற்காக, பரிணாமவியலுக்கு ஆதாரமே இல்லை என்று நீங்கள் கூறுவதை, உங்கள் மனசாட்சியே ஏற்காது. மேக்ரோ பரிணாமவியலின் முக்கியக் கூறுகளில் ஒன்று Transitional forms. பல படிமங்களின் ஆராய்ச்சிகள் இதனை நிரூபித்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்று: கால்களை உடைய திமிங்கிலங்கள். இந்த ஆராய்ச்சிச் சுட்டி சில தகவல்களை அளிக்கும்.
    http://news.nationalgeographic.com/news/2008/09/080911-whale-legs.html

    ஆதாரங்களை அளிக்கும்போது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறுவீர்களே, அதுபோல் இந்த ஆதாரத்திற்கும் அதுதான் பதிலா?

    //ஒரு உயிரினம் மற்றொன்றாக காலப்போக்கில் மாறுகிறது என்பது அவருடைய வாதம். அதுதான் மிக முக்கியமானதும் கூட. அதற்கு என்ன ஆதாரம் கொடுத்தார்? அவருடைய புத்தகத்தில் இருந்து காட்டுங்கள்... //
    டார்வின் அவர்கள், மேக்ரோ பரிணாமத்திற்கு ஏதும் ஆதாரம் கொடுக்கவில்லை; அவர் கொடுத்த ஆதாரங்கள் மைக்ரோ பரிணாமத்திற்கு என்பதை ஒத்துக்கொள்கிறோம். அதற்காக, இப்பொழுது மேக்ரோ பரிணாமத்திற்கு ஆதரவாக வரும் ஆதாரங்கள் ஏற்புடையன அல்ல என்று கூறவருகின்றீர்களா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நியூட்டன் சில ஆதாரங்களை அளிக்காததால், Newton's Theory of Gravity கூட ஏற்கமுடியாது என்று கூறுவீர்கள் போல. :-)

    ReplyDelete
  46. 4. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்...

    //அதுவும் வார்த்தைகளின் துணை கொண்டே. நீங்கள் மேக்ரோ பரிணாமத்தை மறுக்கும்பொழுது, பரிணாமவியல் என்று மட்டும் கூறினால், உங்கள் பதிவை புதிதாக வாசிக்கும் ஒரு நபர் பரினாமவியலுக்கேஆதாரம் இல்லை போலும் என்று நினைத்துக்கொள்ளக்கூடும். உங்களுடைய நோக்கம் அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன்//

    இனி மேக்ரோ என்றே ஒவ்வொரு முறையும் பயன்படுத்துகிறேன். எடுத்து சொன்னதற்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ்...தொடரும்.

    ReplyDelete
  47. //அது என்ன "if" என்று ஆரம்பத்தில் போட்டிருக்கிறார். அதாவது "kettlewell ஆராய்ச்சி உண்மையாக இருந்தால்...." என்று சொல்ல வருகிறாரா?. கொஞ்சம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியுமா? //

    most visually impacting and easily understood examples - என்பதற்குதான் if. வாக்கியத்தைப் படியுங்கள்; வார்த்தைகளுக்கு இடையில் அல்ல. அது நேரடியான அர்த்தத்தைத்தான் கொடுக்கின்றது.

    ReplyDelete
  48. //இல்லை, நியாண்டர்தால் ஒரு மனித இனம். //

    படைப்புவாதக் கொள்கை நியாண்டர்தாலை ஏற்றுக்கொள்கிறதா?

    நியாண்டர்தாலுக்கும், மனிதனுக்கும் சில வேற்றுமைகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறதே. Homo neanderthalensis என்றுதான் அறிவியல் அழைக்கிறது .

    //நீங்கள் சொல்லக்கூடிய இந்த வாக்கியம் மற்ற துறைகளில் பொருந்தி வந்திருக்கலாம். ஆனால் ஆதாரமே இல்லாமல், அது மற்ற எல்லா துறைகளிலும் சரியாக வந்து விட்டது, அதானால் இதிலும் சரியாக இருக்கும் என்று நீங்கள் சொன்னால் அது வார்த்தை விளையாட்டு.//

    Extrapolation எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும். மற்ற துறைகளில் பொருந்தி வந்திருந்தாலும், இதற்கு பொருந்தாது என்று நீங்கள் கூறுவது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  49. 5. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்...


    உங்கள் பின்னூட்டங்களில் வேறெதுவும் பரிணாமவியலைப் பற்றி இல்லை.

    நானும் மீண்டும் சொல்கிறேன். ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறியது என்று சொல்லும் பரிணாமவியலுக்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. படிமங்களும் நிரூபிக்கவில்லை, genome மும் நிரூபிக்க வில்லை.

    ஒரு கட்டிடம் பூகம்பத்தால் வேறொரு அழகான, பிரமாண்டமான கட்டிடமாக மாறும் என்று நீங்கள் நம்பலாம். ஆனால் எங்களால் நம்ப முடியாது. genome மில் தகவல்கள் சேர்ந்தால்/அதிகரித்தால் தான் அது வேறொரு உயிரினமாக மாற வாய்ப்புண்டு.

    ஒரு ஆதாரமும் இல்லாமல், நீங்கள் எங்களை மேக்ரோ பரிணாமத்தை நம்ப சொல்வது என்ன நியாயம்? பரிணாமம் உண்மையென்றால் ஏன் Punctuated Equilibria என்ற concept டை அறிவியலாளர்கள் கொண்டு வர வேண்டும். ஏன் Intelligent design என்று ஒன்று இருக்க வேண்டும். பரிணாமவியலில் ஆதாரம் இல்லையென்பதால் தானே?

    பரிணாமவியல் உண்மையென்றால் ஏன் இவ்வளவு அறிவியலாளர்கள் அதை எதிர்க்க வேண்டும்?.

    என்னைப் பொறுத்த வரை, ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை நம்ப சொல்வதில் சிறிதும் நியாயமில்லை.

    இன்ஷா அல்லாஹ்...தொடரும்

    ReplyDelete
  50. //ஒரு கட்டிடம் பூகம்பத்தால் வேறொரு அழகான, பிரமாண்டமான கட்டிடமாக மாறும் என்று நீங்கள் நம்பலாம்//

    சற்றும் பொருத்தமில்லாத உதாரணம். நாம் ஆதாரங்களை அளிக்கும்போது ஒன்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறுகின்றீர்கள் அல்லது Transitional Forms இக்கால உயிரினங்களே என்று கூறுகின்றீர்கள். அல்லது சம்பந்தமே இல்லாத இதுபோன்ற உதாரணங்களை அளிக்கின்றீர்கள்.

    //பரிணாமம் உண்மையென்றால் ஏன் Punctuated Equilibria என்ற concept டை அறிவியலாளர்கள் கொண்டு வர வேண்டும். ஏன் Intelligent design என்று ஒன்று இருக்க வேண்டும்//

    படைப்புவாதக் கொள்கை கொண்டோரின் பங்கு இதில் என்னவென்று அறிவியல் உலகிற்கு தெரியும்.

    ReplyDelete
  51. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    1. //டார்வின் அவர்கள், மேக்ரோ பரிணாமத்திற்கு ஏதும் ஆதாரம் கொடுக்கவில்லை; அவர் கொடுத்த ஆதாரங்கள் மைக்ரோ பரிணாமத்திற்கு என்பதை ஒத்துக்கொள்கிறோம்//

    தங்களுடைய நேரடியான பதிலுக்கு மிக்க நன்றி.

    தன்னுடைய மைய கருத்தை (How Species Originated through process of natural selection) ஒரு ஆதாரமும் இல்லாமல் முன்வைத்த டார்வினுடைய செயலானது, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாகி விட்டது.

    ReplyDelete
  52. 2. //அதற்காக, இப்பொழுது மேக்ரோ பரிணாமத்திற்கு ஆதரவாக வரும் ஆதாரங்கள் ஏற்புடையன அல்ல என்று கூறவருகின்றீர்களா?//

    இதன் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள் சகோதரரே?. இதுநாள் வரை எந்த ஆதாரங்களும் இல்லை, இப்போது கிடைத்து விட்டது என்றா?. அல்லது தாங்கள் "இப்பொழுது" என்று சொன்ன வார்த்தைக்கு கடந்த 25, 50, 75 வருடங்கள் என்று அர்த்தமா?.

    தாங்கள் கடந்த 75 ஆண்டுகள் என்று குறிப்பிட்டிருப்பதாக வைத்து கொள்வோம். அப்படி என்ன ஆதாரத்தை முன் வைத்து விட்டீர்கள் இந்த ஆண்டுகளில்?. நீங்கள் முன் வைத்த ஒவ்வொரு ஆதாரமும் பரிணாமவியலுக்கு எதிராகத்தானே இருக்கின்றன? உதாரணத்துக்கு இதுவரை கிடைத்த படிமங்கள், ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியாதது, ஒரு உயிரினத்தை வேறொன்றாக மாற்ற gene mutation பண்ணியது என்று அனைத்து முடிவுகளும் பரிணாமவியலுக்கு எதிராகத்தானே இருக்கின்றன?

    நான் தெளிவாகத்தானே கூறினேன். தங்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல் இருக்கிறீர்களா?.

    மிகப் பழமையான படிமங்கள், உயிரினங்கள் அப்படி அப்படியே இருந்ததாக சொல்கின்றன என்று டாகின்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த 5000 லட்ச ஆண்டுகளில், லட்சக்கணக்கான உயிரின படிமங்கள் பரிணாமவியலை நிரூபித்திருக்க வேண்டும். அப்படி ஏதும் இதுவரை இல்லை. நீங்கள் என்னவென்றால் ஒன்று, இரண்டு என்று எடுத்து வருகிரீர்கள், சரி அதாவது பரிணாமவியலை நிரூபிக்கிறதா என்றால், இல்லை. வரலாறு அதை தான் காட்டுகிறது.

    மீன்கள் ஊர்வன ஆயின, பின்னர் ஊர்வன பாலூட்டிகள் ஆயின என்ற இதுபோன்ற பரிணாமவியலின் விளக்கங்களுக்கு என்ன ஆதாரம் என்று தான் தெளிவாக கேட்டிருக்கிறேன். சென்ற மறுமொழிகள் வரை அப்படி எதையும் நீங்கள் கொண்டு வர வில்லை.

    நான் அந்த பல்லி உதாரணத்துக்கு ஏற்கனவே பதிலளித்து விட்டேன். அது மைக்ரோ பரிணாமம் தான், மேக்ரோ இல்லை. ஒரு உயிரினம் மற்றொன்றாக மாற அதன் genome மில் தகவல்கள் சேர வேண்டும். ஆக, இந்த பல்லி உதாரணம் எந்த விதத்திலும் மேக்ரோ பரிணாமத்தை விளக்காது.

    இல்லை என்று நீங்கள் சொன்னால், அது genome ரீதியாக வேறு ஒரு உயிரினமாக மாறும் வரை பொறுத்திருப்போம்.

    சரி, இப்போது நீங்கள் கொண்டு வந்திருக்கிற ஆதாரத்துக்கு வருவோம்...

    //பல படிமங்களின் ஆராய்ச்சிகள் இதனை நிரூபித்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்று: கால்களை உடைய திமிங்கிலங்கள். இந்த ஆராய்ச்சிச் சுட்டி சில தகவல்களை அளிக்கும்.
    http://news.nationalgeographic.com/news/2008/09/080911-whale-legs.html
    ஆதாரங்களை அளிக்கும்போது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறுவீர்களே, அதுபோல் இந்த ஆதாரத்திற்கும் அதுதான் பதிலா?//


    தாங்கள் கொண்டுவரும் தற்காலத்திய ஆதாரங்களை ஏன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறேனென்ரால், பரினாமவியலாளர்கள் இதுவரை கொண்டு வந்த அனைத்து ஆதாரங்களும் காலபோக்கில் உளுத்துபோய் விட்டன என்பதால் தான். இதற்கு எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?. Piltdown man, Nebraska Man, urey-miller experiment, Haeckel's drawings etc etc என்று இவை அனைத்தும் ஒரு காலத்தில் பரிணாமவியலுக்கு ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிறகு சில காலங்களுக்கு பின்னர் நிராகரிக்க பட்டது உங்களுக்கு தெரியாதா என்ன?

    ஏன், நீங்களே இப்படி சொன்னவர் தானே?, இதோ உங்களுடைய ஒரு மறுமொழி..

    //இதற்கிடையில், ஏதேனும் ஒரு படிமம் கிடைத்தால் அதன் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவர ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகும். ஆனால், ஹாருன் யாஹ்யா போன்ற சிலர் 'Ardi' குறித்த 'முழுமையான' ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரும் முன்னரே, இவர்கள் 'Ardi' -யை வைத்து ஆராய்ச்சி செய்து விட்டதை போல், எழுதும் சில கட்டுரைகளை நீங்கள் வாசித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்//


    இதை நீங்கள் தானே சொன்னீர்கள்?, அதாவது ஒரு படிமம் கிடைத்தால் அதை முழுமையாக ஆராய்வதற்கு 20 ஆண்டுகள் ஆகுமென்று?, இப்போது நான் பொறுத்திருந்து பார்ப்போம் என்று சொன்னால், நான் உண்மையை ஏற்க மறுக்கிறேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

    இத்தனை காலமாய் ஒரு ஆதாரமும் இல்லாமல், இப்போது ஆதாரம் வந்துவிட்டது என்றால், யாருக்கும் சிறிதளவு சந்தேகம் வரும். அந்த நியாயமான சந்தேகம் தான் எனக்கு. அதுமட்டுமல்லாமல், பரினாமவியலாளர்கள் கடந்த ஆண்டுகளில் செய்த பித்தலாட்டங்கள் பசுமையாக இருக்கும்போது, பொறுத்திருந்து பார்ப்போம் என்பதில் என்ன தவறு?

    ReplyDelete
  53. 3. //படைப்புவாதக் கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்பதற்காக, பரிணாமவியலுக்கு ஆதாரமே இல்லை என்று நீங்கள் கூறுவதை, உங்கள் மனசாட்சியே ஏற்காது//

    இது போன்ற வாக்கியங்களால் தாங்கள் உணர்ச்சி வசப்படுபவராக தெரிகிறீர்கள். இது போன்ற வாக்கியங்கள் வாதங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது சகோதரரே... நான் பலமுறை சொல்லி விட்டேன். ஒரு விஷயம் உண்மையென்றால் அது மத நம்பிக்கையை தாண்டி நிற்கும் என்று.

    4. //most visually impacting and easily understood examples - என்பதற்குதான் if. வாக்கியத்தைப் படியுங்கள்; வார்த்தைகளுக்கு இடையில் அல்ல. அது நேரடியான அர்த்தத்தைத்தான் கொடுக்கின்றது//

    தவறு. வாக்கியத்தை படித்ததால் தான் கேட்கிறேன். அந்த வாக்கியத்தை யார் படித்தாலும் அப்படி தான் அர்த்தம் கொள்வார்கள். உங்களால் முடிந்தால், அந்த வாக்கியத்திற்கு முன் என்ன சொன்னார், அல்லது பின் என்ன சொன்னார் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள். அப்போது இன்னும் தெளிவாக புரிந்து விடும்.

    5. //படைப்புவாதக் கொள்கை நியாண்டர்தாலை ஏற்றுக்கொள்கிறதா?
    நியாண்டர்தாலுக்கும், மனிதனுக்கும் சில வேற்றுமைகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறதே. Homo neanderthalensis என்றுதான் அறிவியல் அழைக்கிறது//

    வேற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் அது போன்ற வேற்றுமைகள் இன்றுள்ள மனிதர்களிடமும் தான் இருக்கின்றன. அதற்காக நாமெல்லாம் வேறு வேறு உயிரினம் என்று சொல்லிவிடுவீர்களா? அறிவியலாளர்கள் neanderthal ளை மனித இனமாகத் தான் காண்கிறார்கள். குரங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் இடை பட்டதாக இல்லை. அதற்காகத்தான் eric Trinkaus அவர்கள் இது பற்றி குறிப்பிட்டதை கூறினேன்.

    6. //Extrapolation எந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும். மற்ற துறைகளில் பொருந்தி வந்திருந்தாலும், இதற்கு பொருந்தாது என்று நீங்கள் கூறுவது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது//

    நான் மறுபடியும் சொல்கிறேன், வார்த்தை விளையாட்டு வேண்டாம் சகோதரரே. ஒரு ஆதாரமும் இல்லாமல், Macro Evolution is an extrapolation of MicroEvolution என்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன், சிறுக சிறுக ஒரு உயிரினம் வேறொன்றாக மாறியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இருந்தால் கொடுங்கள்.

    ReplyDelete
  54. 7. //சற்றும் பொருத்தமில்லாத உதாரணம். நாம் ஆதாரங்களை அளிக்கும்போது ஒன்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறுகின்றீர்கள் அல்லது Transitional Forms இக்கால உயிரினங்களே என்று கூறுகின்றீர்கள். அல்லது சம்பந்தமே இல்லாத இதுபோன்ற உதாரணங்களை அளிக்கின்றீர்கள்//

    என்னது?, பொருத்தமில்லாத உதாரணமா?, B.G.Ranganathan அவர்கள் gene mutation பற்றி குறிப்பிடும்போது சொன்னது இது,

    "First, genuine mutations are very rare in nature. Secondly, most mutations are harmful since they are random, rather than orderly changes in the structure of genes; any random change in a highly ordered system will be for the worse, not for the better. For example, if an earthquake were to shake a highly ordered structure such as a building, there would be a random change in the framework of the building which, in all probability, would not be an improvement"

    எதற்காக அதை பொருத்தமில்லாத உதாரணம் என்று சொல்லுகிறீர்கள்? அப்படி நீங்கள் சொன்னால் பரிணாமவியலாளர்கள் இத்தனை காலமும் அதை தான் முயன்று கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு லாரி உங்கள் மீது மோதினால் உங்கள் genome என்ன ஆகும்?, அதிலுள்ள தகவல்கள் என்ன ஆகும்? லாரி மோதியதால் உங்கள் genome மில் தகவல்கள் அதிகம் சேர்ந்து நீங்கள் வேறொரு உயிரினமாக மாறி விடுவீர்களா? அல்லது genome மாற்றி அமைக்கப் பட்டு உடல் ரீதியாக தொல்லைகளை அனுபவிப்பீர்களா?

    ஒரு கட்டிடம் பூகம்பத்தால் பாதிக்க பட்டால் அதை விட பளபளப்பான ஒன்றாக மாற முடியுமா? இல்லை அது உருக்குளையுமா?

    ஒரு உயிரினம் வேறொன்றாக மாற வேண்டுமென்றால், அதனுள் இருக்கும் genome மில் தகவல்கள் சேர வேண்டும் (Information should be added to genome to produce new species). இதற்காகத்தான் பரிணாமவியலார்கள் பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் positive வாக வரவில்லை.

    பரிணாமவியளுக்கு genetics துறையில் எந்த ஒரு ஆதரவும் கிடைக்க வில்லை. இது வரை இந்த துறையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் பரிணாமவியளுக்கு எதிராகத் தான் இருக்கின்றன. பரிணாமவியல் பொய் என்றுதான் நிரூபித்து கொண்டிருக்கிறது genetics துறை.

    இது பற்றி Warren Weaver கூறுகிறார்,

    "Many will be puzzled about the statement that practically all known mutant genes are harmful.For mutations are a necessary part of the process of evolution. How can a good effect - evolution to higher forms of life - results from mutations practically all of which are harmful?"

    இவருடைய இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

    இது பற்றி Gordan Taylor என்ன சொன்னார் தெரியுமா?

    "It is a striking, but not much mentioned fact that, though geneticists have been breeding fruit-flies for sixty years or more in labs all around the world-flies which produce a new generation every eleven days-they have never yet seen the emergence of a new species or even a new enzyme"

    அறுபது வருடங்களாக genetics துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம். இதுவரை ஒன்றும் கிடைக்கவில்லையாம், ஏன் ஒரு enzyme மை கூட உருவாக்க முடியவில்லையாம்.

    இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

    ஆக, நான் சொன்ன உதாரணம் பொருத்தமானதுதான் சகோதரரே...பரிணாமவியல் குறித்த உங்களுடைய எண்ணங்கள் தான் தெளிவாக இல்லை.

    ReplyDelete
  55. 8. //Transitional Forms இக்கால உயிரினங்களே என்று கூறுகின்றீர்கள்//


    Transitional Forms எங்கே என்று தானே கேட்கிறேன். பரிணாமவியல் உண்மையென்றால் இதுவரை லட்சக்கணக்கான Transitional Forms கிடைத்திருக்க வேண்டுமே. எங்கே அவை? அதுதானே எங்களுடைய கேள்வி. கிடைத்த அத்தனை படிமம்களும் உயிரினங்கள் முழுமையாக இருந்ததாக தானே கூறுகின்றன. டார்வினுக்கு வந்த இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்காலம் பதில் சொல்லலாம் என்று அவர் சொன்னார். ஆனால் இன்றளவும் அது கானல் நீராகவே இருக்கிறது.

    டார்வினுக்கு அந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இன்றைக்கு வரை பரிணாமவியலாலர்களுக்கும் அது கிடைக்க வில்லை.

    9. //படைப்புவாதக் கொள்கை கொண்டோரின் பங்கு இதில் என்னவென்று அறிவியல் உலகிற்கு தெரியும்//

    அடடா..என்ன ஒரு பதில்?. சரி இருக்கட்டும். அவர்கள் கேள்விகளுக்கு என்ன பதில்?.

    a) ஒரு உயிர்வாழும் செல் தானாக உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அவர்கள். அதற்கு உங்கள் பதிலென்ன?. அங்கேயே பரிணாமம் தோற்று விட்டது என்கிறார்கள் அவர்கள்.

    b) fossils மூலமாக ஒன்றும் கிடைக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். அதற்கு உங்களுடைய என்ன?

    c) gene mutation ஒரு உயிரினத்தை உருவாக்காது என்கிறார்கள் அவர்கள். அதற்கு உங்கள் பதிலென்ன?

    ஆக, இப்படி கேள்விகள் கேட்டு விடை கிடைக்காததால் தான் அவர்கள் வேறொரு கோட்பாட்டை கொண்டு வந்தார்கள். முடிந்தால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

    10. மொத்தத்தில், பரிணாமவியலுக்கு இதுவரை எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை நம்ப சொல்வதில் சிறிதும் நியாயமில்லை. பயனுமில்லை.

    இன்ஷா அல்லாஹ்...தொடரும்

    ReplyDelete
  56. அன்பு சகோதரன் ஆஷிக்,
    பரிணாமவியல் பற்றி பல தகவல்களை அறியத் தந்திருக்கின்றாய் அல்ஹம்துலில்லாஹ். தொடரட்டும் உன்னுடைய பணி. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை பற்றி விடை தெரியாத பற்பல வினாக்கள் அணிவகுத்து நிற்பினும் அதை ஆதரிப்பவர்களின் அறிவியல் அறிவை என்னவென்று சொல்லுவது?

    கீழ்கண்ட ஒரு தகவலை ஒரு வலைப்பூவில் படித்தேன். தகவல் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் தகவல் சுவாரசியமாக இருந்தது.

    சர். ஐசக் நியுட்டன் ஒரு முறை பூமியின் வடிவத்தை உருவாக்கினார். அப்போது அங்கே வந்த அவருடைய நாத்தீக நண்பர் இது எப்படி வந்தது என்று பூமியின் வடிவத்தை பார்த்து நியூட்டனிடம் கேட்க அதற்கு சர். ஐசக் நியுட்டன் “இது தானாகவே உருவாகியது என்று கூறினார்” . அந்த பதிலை கேட்டு கோபமடைந்த நண்பர் எதற்காக என்னை கின்டல் செய்கின்றீர்கள் என்று கேட்டதற்கு நியூட்டன் சொன்னாராம் “இந்த பிரபஞ்சம் தானாகவே உண்டானது என்று நம்பும் நீங்கள் ஏன் இந்த சிறிய பொருள் தானாக வந்தது என்று நம்ப மறுக்கின்றீர்கள்".

    ReplyDelete
  57. நண்பர் ஆஷிக் அஹமது அவர்களுக்கு,
    //தாங்கள் உணர்ச்சி வசப்படுபவராக தெரிகிறீர்கள்//

    ஹா ஹா ஹா.

    ---
    Professor Majerus அவர்களின் வரிகள் தொடர்பாய் நீங்கள் கேட்டவை.
    Professor Majerus அவர்கள் அந்த புத்தகத்தின் கடைசி மூன்று வரிகளில் குறிப்பிட்டவை.
    I conclude that differential bird predation here is a major factor responsible for the decline of carbonaria frequency in Cambridge between 2001 and 2007. If the rise and fall of the peppered moth is one of the most visually impacting and easily understood examples of Darwinian evolution in action, it should be taught. It provides after all the proof of evolution

    இன்னும் கூட புரியவில்லை என்றால், அவரது பேட்டி ஒன்று.
    The peppered moth story is easy to understand, because it involves things that we are familiar with: vision and predation and birds and moths and pollution and camouflage and lunch and death. That is why the anti-evolution lobby attacks the peppered moth story. They are frightened that too many people will be able to understand.

    மிக அழகாக சொல்லிவிட்டார். மக்களுக்கு பரிச்சயமான விஷயங்களின் மூலம் கூறப்படுவதால், Peppered Moth நிகழ்வு, எளிமையாக புரிந்துக் கொள்ளக்கூடியது. அதனால்தான் படைப்புவாதக் கொள்கை கொண்டவர்கள் அதனை எதிர்க்கின்றனர்; மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள் என்று அச்சப்படுகின்றனர்.

    மேலும் ஒரு தகவல். Professor Majerus அவர்கள் ஆய்வு செய்து kettlewell அவர்களின் ஆராய்ச்சி குறித்து தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதனை அறிவியல் சமூகமும் அங்கீகரித்துவிட்டது. Moth தொடர்பாய் பேசும், எழுதும் வேறு யார் "ஆராய்ச்சிகள் செய்தது" என்று கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். உண்மை தெரியும்.

    ஆதாரங்களை நாம் முன்வைக்கும்போது உங்களிடமிருந்து வரக்கூடிய முன்முடிவு பதில்கள் என்னவென்று மீண்டும் விளக்கி விட்டீர்கள். நன்றி.

    நீங்கள் படைப்புவாதக் கொள்கை குறித்து என்னதான் பேசினாலும், எழுதினாலும், agnostic ஆகவாவது இருங்கள் என்று நீங்கள் கூறியுள்ள ஒன்று போதும், உங்களுடைய நிலையைத் தெரிந்துகொள்ள. மதவாதிகளில் இரண்டாம் வகையினருக்கு நான் உதாரணம் ஏதும் அளிக்காதது நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த உரையாடல்களின் மூலம் உதாரணம் தெரிந்திருக்கும். நன்றி.

    முன்முடிவுகளைத் தவிர்த்துவிட்டு, திறந்த மனதோடு வாருங்கள். இறைந்து கிடக்கும் ஆதாரங்களை தெரிந்து கொள்வோம். உண்மைகளை விளங்கிக் கொள்வோம்.
    http://dharumi.blogspot.com/2010/05/1.html

    ReplyDelete
  58. @ பி.ஏ.ஷேக் தாவூத்
    //டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை பற்றி விடை தெரியாத பற்பல வினாக்கள் அணிவகுத்து நிற்பினும் அதை ஆதரிப்பவர்களின் அறிவியல் அறிவை என்னவென்று சொல்லுவது?//

    அட அறிவியலைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்; அறிவைப் பற்றியும் கேள்வி கேட்கத்தானே வேண்டும்! குர் ஆனுக்கு பிறழ்வாக உள்ள அறிவியலையும் அதனை அறிந்தவர்களையும் பிஜே மொழியில் 'அரைவேக்காடுகள்' என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளுங்கள். :-)

    ReplyDelete
  59. இப்போது தாங்கள் கேள்விக்கு வருகிறேன் ஐயா .,
    //கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று கூறுங்கள்; கடவுளின் குணம், தன்மை (Attributes and Properties) எவையெவை? கடவுளை அளவிடுவதற்கு அல்லது உணர்வதற்கு அல்லது அறிவதற்கு பின்பற்ற வேண்டிய Scientific method பற்றியும் கூறுங்கள். //
    கடவுள் என்பவர் மனித ஆய்வுக்கு உட்படுத்த கூடிய பொருளோ செயலோ அல்லர் ., ஏனெனில் மனித ஆய்வுக்கு கட்டுப்படக்கூடிய தன்மைகள் இருந்தால் அதற்கு பெயர் கடவுள் இல்லை.எனவே அறிவியல் ரீதியாக கடவுளை அளக்க எந்த அளவுகோலும் இதுவரை அல்ல, உலகம் அழியும் வரை கண்டுபிடிக்கபடாது.,
    கடவுளை எப்படி உணர்வது? - அதற்கு தானையா., பகுத்தறிவு .
    கடவுளின் தன்மைகளை விளக்கும் வசனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டு காணக்கிடைகின்றன. தாங்கள் குர்-ஆன் முழுக்க படித்தவர் என கூறினிர்களே ஐயா ., உங்கள் கண்களுக்கு ஒன்று கூடவா கிடைக்கவில்லை.,ஆச்சரியம் தான் போங்கள்!
    அதற்கு முன் சிறு ஐயம் ஐயா .,நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,தனக்கோ தன் சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணமென எங்கோ படித்ததாக நினைவு தங்களின் மறுப்புக்கு காரணமென்ன ஐயா? கல்லும்,மண்ணும்,கதிரவனும்,சூரியனும், கண்டதும்,கேட்டதும் அனலும்,புனலும் ஏன் எலிக்கூட கடவுள் தன்மை பெற்ற கரை சேரா மதமல்ல.,பாவ கடலில் தத்தளிப்போரை காப்பற்ற கடவுளே உயிர் தந்தார் என கனவு கொள்கையே கையில் கொண்ட மதமல்ல., மாறாக .மனித உள்ளங்களை ஓரிறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட சொல்லி உலக மக்கள் அனைவரும் ஒரே மூல தாய்க்கும்,தந்தைக்கும் பிறந்தவர்கள் என உரக்க சொல்லிய மார்க்கம் ., மனிதனை மனிதான (அவன் டவுசர் போடா விட்டாலும் ,போட சொல்லி) பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்., சரி நீங்கள் கேட்டது நினைவுக்கு வருகிறது.,
    கடவுளின் தன்மைகள் குறித்து ....
    (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (THE HOLY QUR’AN 114: 1 to 4)
    அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (THE HOLY QUR’AN 2:255)
    ஐயா ., இன்னும் இது போன்று இறை தன்மையை விளக்கும் ஏராளமான வசனங்கள் இருக்கின்றன ., தாங்கள் விரும்பின் பட்டியலிட்டு தருகிறேன் (இன்ஷா அல்லாஹ்)
    இறுதியாக., பரிணமாவியல் பற்றி என்னை போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ள எளிமையாக,தெளிவாக ஒரு சிறு இலக்கணம் தாருங்கள் ஐயா!
    இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  60. ஓரிறையின் நற்பெயரால் ...
    அன்பு சகோதரர் அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! எதிர்க்குரலில் என் குரலும் இணைய விரும்புகிறேன். கும்மி அய்யா அவர்களுக்கு., கடவுள் மற்றும் குர்-ஆன் சார்ந்த சில சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் பதில் இல்லை என குறிப்பிட்டு இருக்கிறிர்கள்.அய்யா ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். ஒன்றை குறித்து விவாதிக்கும் பொழுது இஸ்லாம் அல்லாத ஏனைய தரப்பு ஆதாரங்களை காட்ட எந்த அறிவியல் மற்றும் ஏனைய துறை சார்ந்த நூல்களை மேற்கோள் கட்டலாம்., மேலும் பிறிதொரு காலத்தில் அதன் நம்பத்தன்மையில் குறைபாடு இருப்பதாக உணர்ந்தால் மற்றொரு ஆதார நூலை சமர்ப்பிக்கலாம்., ஆனால் இஸ்லாத்தை பொறுத்தவரை எந்த ஒரு ஆதாரங்களையும் குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வுநெறி ஆகிய இரண்டின் அடிப்படையில் மட்டுமே எந்நிலையிலும் விளக்க வேண்டும். ஆகவே இத்தகைய நிலை இருப்பதால் ஒருவேளை தங்களுக்கு பதில் தர தாமதமாகலாம்.அல்லது அக்கேள்வி குறித்தே பதிலுக்கு (அவருக்கு) சற்று தெளிவான விளக்கம் தெரியாமல் இருக்கலாம்.ஏனெனில் எந்த ஒரு தனிமனிதருக்கும் ஒரு துறை குறித்த செயல்கள் முழுவதும் அறியாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது அதுபோல ஒருதுறையில் சிறந்து விளங்கும் ஒரு நபர் மற்றொரு துறையில் அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் இருப்பதை என்பதை பகுத்தறிவுள்ள எவரும் மறுக்க முடியாது.
    ஒருவருக்கு தெரியாத துறை குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு கிடைக்கப் பெறும் பதில்களால் திருப்தியுறவில்லையென்றால் திரும்ப அவரிடமோ அல்லது அத்துறை சார்ந்த வேறு யாரிடமோ அதிக விளக்கம் பெற வேண்டும் மாறாக தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதற்காக அத்துறை சார்ந்த கோட்பாடுகள் தவறென கருதக் கூடாது.தனக்கு ஏற்பட்ட ஐயத்திற்கு அதுவரை பதில் தரப்படவில்லை என கொள்ளவேண்டும்.ஏனெனில் தேடல் என்பது மனித வாழ்வின் முழுவதும் உள்ள ஒரு நிகழ்வு. உதாரணமாக, இஸ்லாம் சம்பந்தமாக கேட்கப்படும் சில கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லையென்றால்., அது என்னறிவின் குறையே ஒழிய இஸ்லாத்தில் இல்லையென்றாகி விடாது. ஆகவே ஐயா., தங்களுக்கு உண்மையாக தேடல் அடிப்படையில் அமைந்த கேள்விகளுக்கு சகோதரர் ஆஷிக் அஹமது சொன்ன வழிமுறைகளை ஏராளம்! (PJ பற்றி ஒரு குறிப்பு தந்ததால்- அவரது தளத்தில் உங்களை போன்றோர்களை விவாத பங்கேற்க அழைக்கிறார்.தாங்கள் பங்கு பெற்று அழகிய முறையில் பலர் முன்னிலையில் விவாதம் புரியலாமே., தேட சிரமம் வேண்டாம் முதல் பக்கத்திலேயே உங்கள் பார்வைக்கு இருக்கிறது) எனவே மற்ற எந்த மத மற்றும் ஏனைய துறைக்கு அளிக்கப்படும் விளக்கத்தை விட மேலதிகமாக விளக்கங்கள் இஸ்லாமிய இணையங்களில் காணக்கிடைகின்றன.தயவு செய்து மீண்டும், ஒருமுறை பதில் கிடைக்கவில்லை என்று சொல்லாதிர்கள் ஐயா! கிடைக்கும் பதிலில் உடன்பாடு இல்லை என்பது உங்கள் உரிமை சார்ந்த விஷயம்.

    ReplyDelete
  61. @G u l a m
    //நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,தனக்கோ தன் சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணமென எங்கோ படித்ததாக நினைவு தங்களின் மறுப்புக்கு காரணமென்ன ஐயா?//

    பல இடங்களில் அப்படி இருக்கக்கூடும். ஆனால் என் நிலை அப்படி ஏற்பட்டது இல்லை.

    கடவுளின் செயல்கள் என்று சிறுவயதில் கற்பிதம் செய்யப்பட்டவை, உண்மை அல்ல என்று தெரியவந்த பின்பு நான் நாத்திகனாக மாறினேன். இந்த மாற்றம் ஒரு நாளிலோ, ஓரிரு மாதங்களிலோ ஏற்படவில்லை. கற்பிதங்கள் குறித்து பல ஆண்டுகள் சிந்தித்த பின்பே நான் மாறினேன்.

    இதே தளத்தில் ஏற்கனவே சில சம்பவங்களைக் கூறினேன். ஒரு வேளை, நீங்கள் படிக்காமல் இருந்திருந்தால், உங்களுக்காக மீண்டும்:

    தும்மல் கடவுளின் செயல் என்றும் தும்மியபின்பு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவேண்டும் என்றும் கூறப்பட்டது. அறிவியல் படிக்கத் தொடங்கிய பின்பு, தும்மல் எதனால் ஏற்படுகிறது என்று அறிந்தேன். சிறு வயது கற்பிதம் தவறு என்று உணர்ந்தேன்.

    சிறு வயதில் மலக்குகள் பற்றியும் கூறப்பட்டது. ஒரு கணம் கூட என் தோளின் மீது யாரும் இருப்பதாய் எனக்குத் தோன்றியதில்லை; எந்த குறிப்பேடும் என் தோள்களுக்கு அருகில் இருந்ததாய் அறியவில்லை. என் முதுகுத் தண்டு மற்றும் கழுத்துப் பகுதிகளில் எடுக்கப்பட்ட MRI Scan மற்றும் X-Ray ரிபோர்ட்களில் தோள் பகுதியில் ஏதும் அன்னியப் பொருள் இருந்ததாகவும் இல்லை. இவற்றிற்குப் பின்பும் என் தோள்களின் மீது மலக்குகள் இருப்பார்கள் என்றும் என் செயல்கள் அனைத்தையும் அவர்களிடம் இருக்கும் பதிவேட்டில் பதிவார்கள் என்றும் என்னால் நம்ப இயலவில்லை.

    இதுபோன்று பல விஷயங்கள் இருக்கின்றன. அல்லாஹ் குறித்தான கற்பிதங்கள் தவறென்று தெரிந்தபின்பும், நம்புவது எப்படி என்றுதான் தெரியவில்லை. :-)

    ReplyDelete
  62. //கடவுளை எப்படி உணர்வது? - அதற்கு தானையா., பகுத்தறிவு//
    //கடவுளின் தன்மைகள் குறித்து ....//

    காதல் என்பதும் ஒரு உணர்வு. மூளையில் சுரக்கும் டோபமைன் அளவில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, ஒருவர் காதல் வயப்படுவதை உறுதிப்படுத்த முடியும். கடவுளை உணரும்போது அதுபோன்று ஏதேனும் சுரப்பியையோ, வேதிபொருளையோ அளந்து, அறியமுடியுமா?

    //மனிதனை மனிதான (அவன் டவுசர் போடா விட்டாலும் ,போட சொல்லி) பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்//

    பிறகு ஏன் காபிர்கள் என்றும் முமீன்கள் என்றும் மனிதர்களை அழைக்கின்றீர்கள்.?


    // பரிணமாவியல் பற்றி என்னை போன்ற பாமரர்கள் அறிந்து கொள்ள எளிமையாக,தெளிவாக ஒரு சிறு இலக்கணம் தாருங்கள்//

    சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்.

    நிகழ்கால வாழ்வியல் உணர்தல்களோடு வால்பையன் அவர்களின் பதிவுகள் இங்கே மற்றும் இங்கே

    ReplyDelete
  63. //PJ பற்றி ஒரு குறிப்பு தந்ததால்- அவரது தளத்தில் உங்களை போன்றோர்களை விவாத பங்கேற்க அழைக்கிறார்.தாங்கள் பங்கு பெற்று அழகிய முறையில் பலர் முன்னிலையில் விவாதம் புரியலாமே//

    //ஒருவருக்கு தெரியாத துறை குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு கிடைக்கப் பெறும் பதில்களால் திருப்தியுறவில்லையென்றால் திரும்ப அவரிடமோ அல்லது அத்துறை சார்ந்த வேறு யாரிடமோ அதிக விளக்கம் பெற வேண்டும்//

    குர்ஆனில் அறிவியல் கருத்துகள் என்று கூறப்படுபவற்றை அறிவியலாளர்களிடம்தானே கேட்க வேண்டும். அங்கே பிஜேவிற்கு என்ன வேலை? (பிஜேவின் அறிவியல் அறிவு என்னவென்று அறிவியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். )

    ReplyDelete
  64. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    மறுபடியும் உங்களிடமிருந்து ஒரு முரண்பாடு...


    நீங்கள் முன்னர் சொன்னது...

    //சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். நிகழ்கால வாழ்வியல் உணர்தல்களோடு வால்பையன் அவர்களின் பதிவுகள்இங்கே மற்றும் இங்கே//

    அதே கும்மி பின்னர் சொன்னது...

    //குர்ஆனில் அறிவியல் கருத்துகள் என்று கூறப்படுபவற்றை அறிவியலாளர்களிடம்தானே கேட்க வேண்டும். அங்கே பிஜேவிற்கு என்ன வேலை? (பிஜேவின் அறிவியல் அறிவு என்னவென்று அறிவியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். ) //


    (உங்கள் கருத்து படி) பரிணாமத்தை பற்றி அறிவியலாளர்களிடம் தானே கேட்க வேண்டும்? நீங்கள் என்ன சகோதரர் வால்பையன் அவர்களின் வலைப்பூ லிங்கை கொடுத்திருக்கிறீர்கள்?

    இது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா?

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  65. //மறுபடியும் உங்களிடமிருந்து ஒரு முரண்பாடு..//

    குர் ஆனில் இருப்பதை விடவா? :-)

    //(உங்கள் கருத்து படி) பரிணாமத்தை பற்றி அறிவியலாளர்களிடம் தானே கேட்க வேண்டும்? நீங்கள் என்ன சகோதரர் வால்பையன் அவர்களின் வலைப்பூ லிங்கை கொடுத்திருக்கிறீர்கள்? //

    துறைசார் வல்லுனர்களின் லிங்குகளை நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன். குலாம் அவர்கள் எளிமையாக புரிந்துக் கொள்ளுமாறு, விளக்கம் கேட்டார். வால்பையனின் பதிவில் இருக்கும் விளக்கங்கள், நிகழ்கால உதாரணங்களோடு இருந்ததால், அவற்றைக் கொடுத்தேன். இன்னும் விளக்கங்கள் வேண்டுமானால், இங்கேயும், இங்கேயும் பாருங்கள்.

    ReplyDelete
  66. அன்பு சகோதரர் ஆசிக் அஸ்ஸலாமு அலைக்கும்-வரஹ்
    என்னின் பதிவிற்கான ,தங்களின் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  67. 3-// அல்லாஹ் குறித்தான கற்பிதங்கள் தவறென்று தெரிந்தபின்பும், நம்புவது எப்படி என்றுதான் தெரியவில்லை.//
    எங்கு ,எப்படி என கூறுங்கள் ஐயா நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
    4-//கடவுளை உணரும்போது அதுபோன்று ஏதேனும் சுரப்பியையோ, வேதிபொருளையோ அளந்து, அறியமுடியுமா?//
    ஐயா!நமது கட்டுப்பாட்டில் வந்தால் அதற்கு பெயர் கடவுள் இல்லை (ஏற்கனவே பதில் சொல்லியுள்ளேன் )
    5-//கடவுளை எப்படி உணர்வது? - அதற்கு தானையா., பகுத்தறிவு//
    பொறுங்கள் ,அதற்கு,உங்கள் பதிவுகளிலிருந்தே மெல்ல மெல்ல விடை தருகிறேன் ஐயா
    5-// மனிதனை மனிதான பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்//
    எந்த சுழலிலும்,எந்த நிலையிலும் தன்னிடம் உள்ள பொருள்,செல்வாக்கு மற்றும் சமுக அந்தஸ்து முதலிய காரணங்களால் ஒரு மனிதன் சக மனிதனை காட்டிலும் உயந்தவன் இல்லை என சொல்கிறதே,ஓரிறைவனுக்கு அல்லாது எவருக்கும் எக்காரணத்திருக்கும் சிரம் தாழ்த்தாதே. தன்னை தாழ்த்தி யாருக்கும் கூழை கும்மிடு போடதே, என தனி மனித சுய மரியாதைக்கு வித்திட்டத்தே, எவரும் எத்தகைய நாட்டிலும், நிறத்திலும், இனத்திலும்,இருக்க பெறினும் அனைவரும் கடவுள் முன் சமம் என பொது நிலை ஏற்படுத்தி கருப்பர்க்கும்-வெள்ளையருக்கும்,அரேபியருக்கும்-அகுதில்லதவர்க்கும் இடையே நீதத்தை ஏற்படுத்திய முறைமைக்கு, எந்நாடு,என் மொழி என் குறுகிய வட்டத்துக்குள் நிற்கும்., மனிதர்களை பார்த்து உலக மக்கள் அனைவரும் சகோதரர்களே! என எல்லை தாண்டிய உணர்வு தொடர்பை ஏற்படுத்தியதை தான் நான் மனிதனை மனிதான பார்க்கும் மார்க்கம் இஸ்லாம் என கூறினேன் அதில் என்ன தவறு ஐயா ?
    6-// பிறகு ஏன் காபிர்கள் என்றும் முமீன்கள் என்றும் மனிதர்களை அழைக்கின்றீர்கள்.?//
    எதற்காக இந்த கேள்வி ஐயா? ஓரிறைவனை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிம்கள்,அவனை நிராகரிப்பவர்கள் காபிர்கள், அவனுக்கு மகன் உண்டென கூறுவோர்கள் கிறித்துவர்கள்.,அதற்கு முந்தைய சமூகத்தவர்கள் யூதர்கள். அது போலவே ஏனைய பெயர்களும் - மனிதர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அடிப்படையில் (இனத்தின்,பிறப்பின் அடிப்படையில் அல்ல) இவைகள் சமுக,செயல் சார்ந்த குறியீட்டுப்பெயர்கள்- இவ்விடத்தில் ஐயாவுக்கு ஒரு விளக்கம்:தாடி வைப்பதோ தொப்பி அணிவதோ,முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முமீன் என்பதற்கு போதுமானதன்று.இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான்.மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் "ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைபடுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் -"முமீன்கள்" (ஐயா., முமின்கள் குறித்து தாங்கள் இப்போது சரியாக விளங்கி இருப்பிர்கள் என கருதுகிறேன்)

    ReplyDelete
  68. ஓரிறையின் நற்பெயரால் ...
    அன்பு சகோதரர் அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!
    தாங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளும் புரிதலின் அடிப்படையில் ஏற்பட்ட தவறென்றே நினைக்கிறேன்
    1-//தும்மல் கடவுளின் செயல் என்றும் தும்மியபின்பு அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவேண்டும் என்றும் கூறப்பட்டது. அறிவியல் படிக்கத் தொடங்கிய பின்பு, தும்மல் எதனால் ஏற்படுகிறது என்று அறிந்தேன். சிறு வயது கற்பிதம் தவறு என்று உணர்ந்தேன்.//
    இங்குதான் தங்கள் சிந்தனையில் மாறுபாடுகிறிர்கள்.நீங்கள் ஐயா., தும்மல் ஏற்படும் காரணம்,அதன் விளைவு குறித்து அல்லாஹ். கூறி அதற்கு அறிவியல் ரீதியாக முரண்பாடு ஏற்பட்டிருந்தால் அல்லாஹ் கூறியது தவறென கொள்ளலாம்., ஆனால் தும்மல் என்ற ஒரு தன்மையே(அதன் பயன்பாடு என்னை விட உங்களுக்கு நன்றாய் தெரியும் ஐயா!) ஏற்படுத்தினானே (காரண காரியத்தோடு)அதற்காகத்தான் தனக்கு நன்றி செலுத்த சொல்கிறான்.
    2-//சிறு வயதில் மலக்குகள் பற்றியும் கூறப்பட்டது. ஒரு கணம் கூட என் தோளின் மீது யாரும் இருப்பதாய் எனக்குத் தோன்றியதில்லை; எந்த குறிப்பேடும் என் தோள்களுக்கு அருகில் இருந்ததாய் அறியவில்லை. என் முதுகுத் தண்டு மற்றும் கழுத்துப் பகுதிகளில் எடுக்கப்பட்ட MRI Scan மற்றும் X-Ray ரிபோர்ட்களில் தோள் பகுதியில் ஏதும் அன்னியப் பொருள் இருந்ததாகவும் இல்லை. இவற்றிற்குப் பின்பும் என் தோள்களின் மீது மலக்குகள் இருப்பார்கள் என்றும் என் செயல்கள் அனைத்தையும் அவர்களிடம் இருக்கும் பதிவேட்டில் பதிவார்கள் என்றும் என்னால் நம்ப இயலவில்லை. //
    ஐயா., மலக்குகளின் எடையின் அளவு குறித்து குர்-ஆனில் எங்கேயும் சொல்லப்படவில்லை? அவர்கள் ஒரு படைப்பு என சொல்லபடுவதால் அவர்களை மனித படைப்போடு ஒப்பிட்டு பார்த்துள்ளிர்கள் போலும்.அவர்களின் பிரத்தியேக தோற்றம்,செயல் பாடுகள் குறித்து தாங்கள் அறியாதிருக்க அவர்களை மனிதனால் உருவாக்கப்பட்ட அளவீட்டில் நிறுத்த பார்ப்பது என்ன நியாயம்? ஏனெனில் திட திரவ வாயு (பருமன் அடிப்படையில் அமைந்த பொருட்கள்) போன்றவைகளுக்கு மட்டுமே அதன் எடை மற்றும் இன்ன பிற தன்மைகளை அறிந்து கொள்ள முடியும். சுருங்கக்கூறின்.,மூளையின் செயல்பட்டு திறனை (செயல் படும் முறை அல்ல)எவ்வாறு எடையில் நிறுக்க இயலாதோ,மனதின் எண்ண ஓட்டங்களை எவ்வாறு நிறுக்க இயலாதோ அதுபோலத்தான் மலக்குகளையும் அவர்கள் செய்யும் மனித எண்ணப்பதிவுகளையும் எடை போட முடியாது., சராசரி மனித உயிரின் எடை எவ்வளவு ஐயா?

    (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.( 82:11)

    ReplyDelete
  69. பிறகு...என கேட்பதிலிருந்து ஒன்றை புரிந்துக் கொள்ளமுடிகிறது., காபிர்- எதோ கெட்ட வார்த்தை போல் மதம் சார்ந்த /சாரா மக்களால் பார்க்க படுகிறது. ஓரிறைவனை நிராகரிப்போரை,அவனுக்கு இணை கற்பிப்போரை அவன் கூறும் வழிமுறைகளை பின்பற்றாதவர்களை அவன் காபிரென விளிக்கிறான் இதில் என்ன தவறு? இதே ஒப்பிட்டு பார்வையில் அவர்களை பொறுத்தவரை அவர்களின் கடவுள் கொள்கையை நாங்கள் ஏற்காததால் அவ்வார்த்தை அவர்களின் பார்வையில் எங்களுக்கு பொருத்தலாம்., காபிர் என்பது தவறான வார்த்தை அல்ல என்பதற்காக தான் இந்த ஒப்பிட்டு பார்வை (அவனை மறுப்பவர்கள் நாத்திகர்கள், என நாங்கள் கூறுகிறோமே, தங்கள் பார்வையில் எங்களுக்கு வேறு பெயர்)
    ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (2:62)
    யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (4:69)
    தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா (2:181)
    PJ யும்,வால் பையனும் இங்கு வேண்டாம் என நினைக்கிறேன்

    //சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். //
    தகவமைத்துக்கொள்வதின் அர்த்தம் -சற்று விரிவாக., ஐயா
    தங்களின் பதிலுக்காக இப்பதிவில் என் இரு வேள்விகள்
    1. பரிணாம அடிப்படையில் முதலில் தோன்றிய உயிரி அது எவ்வாறு தோன்றியது?
    2. உயிர் என்றால் என்ன?
    எளிதான கேள்விகள், தெளிவான பதிலுடன் பாமரனுக்கு விளக்குங்கள்
    மற்றவை தங்களின் மீள் பதிவு கண்டு
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  70. @ G u l a m

    //தும்மல் என்ற ஒரு தன்மையே(அதன் பயன்பாடு என்னை விட உங்களுக்கு நன்றாய் தெரியும் ஐயா!) ஏற்படுத்தினானே (காரண காரியத்தோடு)அதற்காகத்தான் தனக்கு நன்றி செலுத்த சொல்கிறான்.//

    தும்மலை ஏற்படுத்துவது இறைவன் என்று கூறிவிட்டீர்கள். சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும்போது, மருத்துவரிடம் சென்று, மருந்தின் துணையோடு, அதை நிறுத்திவிடுகின்றனர். அப்படியானால், இறைவன் ஏற்படுத்திய தும்மலை நிறுத்தும் அளவிற்கு திறமை படைத்த மருத்துவர்கள், இறைவனை விடவும் ஆற்றல் மிக்கவர்களா?

    //அவர்களின் பிரத்தியேக தோற்றம்,செயல் பாடுகள் குறித்து தாங்கள் அறியாதிருக்க அவர்களை மனிதனால் உருவாக்கப்பட்ட அளவீட்டில் நிறுத்த பார்ப்பது என்ன நியாயம்?//

    மலக்குகளைப் பற்றி அறிந்துகொள்ள இருக்கும் வழிமுறைகளைகளைக் கூறுங்கள். தெரிந்துகொள்கின்றேன். முக்கியமாக, அவர்கள் எழுதும் குறிப்பேடு பற்றியும் கூறுங்கள்.

    //மூளையின் செயல்பட்டு திறனை (செயல் படும் முறை அல்ல)எவ்வாறு எடையில் நிறுக்க இயலாதோ,மனதின் எண்ண ஓட்டங்களை எவ்வாறு நிறுக்க இயலாதோ //

    fMRI (Functional Magnetic Resonance Imaging) மூலம் நீங்கள் குறிப்பிடும் விஷயங்களை அளக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், உலகின் பல்வேறு பகுதிகளில், மூளையின் சிந்தனையோட்டம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. (குறிப்பாக பெரும் அளவிலான ஆய்வுகள் ஸ்வீடனில் நடைபெறுகின்றன). Decoding Brain Signals என்பது சாத்தியப்படக்கூடியதே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    //அதுபோலத்தான் மலக்குகளையும் அவர்கள் செய்யும் மனித எண்ணப்பதிவுகளையும் எடை போட முடியாது//

    அவர்களைப் பற்றி அறிவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாதபோது, எப்படி நம்ப இயலும்? ஒரு புத்தகத்தில் கூறியிருக்கிறது, அதனால் நம்ப வேண்டும் என்று கூறுவது, நிச்சயமாய் ஏற்புடையது அல்ல. இந்து மதத்தில் இருக்கும் புராணக் கதைகளை நம்புவதற்கு எள்ளளவும் சாத்தியமில்லாததைப் போலவே, இஸ்லாத்தில் இருக்கும் மலக்குகளும், மிராஜும், சொர்க்கமும், நரகமும் மிகப்பெரும் கதைகள்.

    //சராசரி மனித உயிரின் எடை எவ்வளவு ஐயா?//

    அமெரிக்காவில் 86.6 Kg. ஜெர்மனியில் 82.4 Kg. இவை இரண்டும் அளவிடப்பட்டவை.

    //எங்கு ,எப்படி என கூறுங்கள் ஐயா நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்//

    தும்மலை இறைவனோடுத் தொடர்புபடுத்துவதையும், மலக்குகளையும் நம்ப முடியாத கற்பிதங்கள் என்று கூறுகின்றேன். இது போன்று இன்னும் பலவும் உள்ளன.

    //ஐயா!நமது கட்டுப்பாட்டில் வந்தால் அதற்கு பெயர் கடவுள் இல்லை//

    பிறகு எதுதான் கடவுள்? நம்பும்படி ஏதாவது சொல்லுங்கள். நம்புவோம்.

    ReplyDelete
  71. @ G u l a m

    முமீன்கள் பற்றியும், காபிர்கள் பற்றியும் நிறையக் கூறியுள்ளீர்கள்.

    முமீன்களுக்கு சொர்க்கமும், காபிர்களுக்கு நரகமும்தான் கிடைக்கும் என்று கூறுவதே ஏற்றத்தாழ்வுதானே! இஸ்லாம் அல்லாத மாற்று மதக் குடும்பத்தில் பிறந்தார் என்பதற்காக ஒருவரை வேறுபடுத்திப் பார்க்கின்றதே இஸ்லாம்! அனைவரும் மனிதர்களே என்னும் சமதர்மம் எங்கே?

    வாருங்கள் நண்பரே, மதத்தை மறந்து மனிதம் வளர்ப்போம்!

    ReplyDelete
  72. @ G u l a m


    தகவமைத்துக்கொள்வதின் அர்த்தம் -சற்று விரிவாக

    இதே பதிவில் ஏற்கனவே இட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி, மீண்டும் இங்கே உங்களுக்காக

    குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டே, போட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம், போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971-ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008-ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்? கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில், அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்தது; பற்கள் சற்றே பெரிதாக, கடினமாக இருந்தன. ஆக, வெறும் 37 ஆண்டுகளிலேயே, சூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறு, ஓர் உயிரினத்தின் கிளையில், கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது

    சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்வதே தகவமைப்பு.

    ReplyDelete
  73. @ G u l a m

    //பரிணாம அடிப்படையில் முதலில் தோன்றிய உயிரி அது எவ்வாறு தோன்றியது?//

    பரிணாமம் உயிரின் தோற்றத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல. முதலில் தோன்றிய உயிரியைப் பற்றி அது எதுவும் பேசவில்லை. இது தொடர்பான எளிய அறிமுகம் இங்கே.

    //உயிர் என்றால் என்ன?//

    ஒரு உயிரினத்தின் உடலினுள் இருக்கும் பல்வேறு செல்களும் ஒரு ஒழுங்கிற்குள் செயல்படுவதை உயிர் என்கிறோம். இது தொடர்பான எளிய அறிமுகம் இங்கே.

    ReplyDelete
  74. // அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்//
    இரசாயன வேதிப் பொருட்கள் ஏற்படுத்திய விளைவால் ஒரு தவளைக்கே அசாதாரண தன்மை ஏற்படும்போது சூழலுக்கேற்ப தன்னை பாதுகாப்பு அரணுக்குள் வகைபடுத்தி வாழ்வை மேற்கொள்ளும் மனிதனுக்கு உறுப்பு அதிகரிப்பு ஒரு சாதாரண செயலே..
    //தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!,//
    தன்னிலை மாற்றதிற்கு ஒரு உயிரினத்துக்கு முயற்சியின் அடிப்படைகளிலான செயல் பாடுகளை விட உந்துதல் ரீதியான காரணிகள் அமைந்தால் போதும் என்றால் பரிணாமத்தின் உச்ச படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதன்,., நீந்துதல், ஊர்தல், நடத்தல், ஓடுதல், பாய்தல், தாவுதல், பாலுட்டுதல் வரையிலான பிற உயிரின இயல்புகளை தாங்கியிருந்தும் மனிதன் "பறத்தல்" என்ற பறவையினங்களின் ஒரு சாதாரண இயல்பை பெறாதது பரிணாம அடிப்படையில் ஆச்சரியமே! -மனிதன் பறக்க வேண்டும் என்பது ஒரு உந்துதல் என்ற நிலைக்கு மேலாக இன்றுவரை மனதிற்குள் நீடித்து போன தொன்றுத்தொட்ட நிலையான எண்ணம்
    //இவையனைத்தும் எனது சுய புரிதல்களே! //
    //முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!//
    இவையனைத்தும் எனது சுய பதிதல்களே
    முடிந்த அளவு ஆதாரங்கள் (தர்க்க ரீதியாக) கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  75. ஓரிறையின் நற்பெயரால் ...
    அன்பு சகோதரர் அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!
    இது கும்மி ஐயா அவர்களுக்கான பதிவு அல்ல., தங்கள் பதிவில் மேற்கோள் காட்டிய (முதல்) இங்கேயும்,இங்கேயும் பதிவுக்கான என் எதிர் பதிவு,முடிந்தால் தங்களின் இரண்டாம்(இங்கேயும்,இங்கேயும்)பதிவை பார்வையிட்டு பிறகே உங்களுக்கான என்பதிவை தருகிறேன்.
    வால் பையன் அவர்கள்
    //ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!//
    ., மனித இனக் குழுக்கள்., தங்களது எண்ணங்களின் அடிப்படையில் வாழும் குழலுக்கு தகுந்தார் போல் செயல்பட ஏற்பட்ட மாற்றத்தை சுட்டி காட்டியுள்ளார்,ஆனால் மனிதனின் பிறவி குணமான ஆசை மற்றும் தமது தேவையை அடைவதற்கு போராடும் குணம் அகியவற்றின் மூலம் ஏற்பட்ட எந்த ஒரு பரிணாம வளர்ச்சி பற்றியும் குறிப்பிட வில்லையே? ஐயா ., மேற்கூரிய காரணிகளால் முக மற்றும் ரோமத்தின் அளவில் மாறுபாடுகள் அடைந்ததை போல அவர்களின் சுயதேவை ,வேலை,பொருளிட்டும் அடிப்படை தேவைகளுக்காக அவர்களின் உறுப்புகள் ஏன் மாறுபாடு அடையவில்லை?கால்களின் அடிப்படையில் அதிக (சுய )தேவையுடைவர்களுக்கு அதிக படியான கால்களோ,கைகளின் அடிப்படையில் அதிக (சுய )தேவையுடைவர்களுக்கு அதிகபடியான கைகளோ ஏன் வளர்ச்சி அடையவில்லை?அதுபோலேவே ஏனைய உறுப்புக்களும்., ஏனெனில்,
    // ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம்,//
    // இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!//
    நாகரிக மாற்றங்களின் அடிப்படையில் ஏற்படும் தேவைகளை விட மனிதன் இலகுவாக வாழ்வதற்கு தேவையான மாற்றங்களே இயற்கை சுழலில் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  76. ஓரிறையின் நற்பெயரால் ...
    அன்பு சகோதரர் அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!
    கும்மி ஐயா அவர்களுக்கு.,
    //அமெரிக்காவில் 86.6 Kg. ஜெர்மனியில் 82.4 Kg. இவை இரண்டும் அளவிடப்பட்டவை//
    தவறு., அமெரிக்காவில் 84.90 Kg. ஜெர்மனியில் 81.24 Kg இரண்டும் மூன்று நாட்களுக்கு முன்பாக நான்கு முறை ஐந்து அறிவியலாரின் முன்னிலையில் உண்மைப்படுத்தபட்டுள்ளது
    இந்த சாதாரண கேள்விகே பதில் தெரியா உங்களுடன் விவாதம் புரிவதில் அர்த்தம் இல்லை .தங்கள் பதிலில் சிந்தனை வெளிபாட்டை விட சினத்தின் வெளிப்பாடே அதிகம்., எனவே இந்த உரையாடலினால் எவருக்கும் பயன் இல்லை என்பது தெளிவு!., மேலும் உங்கள் அளவுக்கு என்னால் கோபப்பட வும் இயலாது., வழக்கமாக பகுத்தறிவாளர்கள் (?) தங்கள் இயலாமையே கோப ஆயுதமாய் கையிலெடுக்கும் போது எதிரில் நிற்கும் என்னை போல் பாமரன் வேறென்ன செய்வான்.,
    மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்ச (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது நிச்சயமாக அல்லாவின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும். (31:33)
    ஐயா இறுதியாக ஒன்று.,
    நீங்கள் சொல்வது உண்மையன்றால் அதை நாங்கள் பின்பற்றாததால் எங்களுக்கு இவ்வுலகத்தில் எந்த பாதிப்பும் இல்லை ., ஆனால் ஒருவேளை நாங்கள் சொல்வது உண்மையன்றால் இறந்த பின்பு ...உங்கள் நிலைமை

    ReplyDelete
  77. ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தான் அலசபட்டிருக்கிறது, ஏன் மாறலன்னு தனியா தான் அலசனும்! மேலும் பதிவிலேயே இருக்கு, மாற்றம் சுயதேவை சம்பந்தமானதுன்னு, தேவை ஏற்பட்டிருந்தால் மாற்றமும் ஏற்பட்டிருக்கும்!

    பாலூட்டியான வவ்வால் பறக்கும், ஆனால் அது பறவை அல்ல, அதற்கு இறகுகளும் இல்லை, கை நுனியிலிருந்து கால் நுனி வரை இணைக்கபட்ட தோலை பயன்படுத்தி பறக்கிறது, அது அதான் தேவை இருந்ததால் பறக்கிறது!

    ReplyDelete
  78. @G u l a m
    //தவறு., அமெரிக்காவில் 84.90 Kg. ஜெர்மனியில் 81.24 Kg இரண்டும் மூன்று நாட்களுக்கு முன்பாக நான்கு முறை ஐந்து அறிவியலாரின் முன்னிலையில் உண்மைப்படுத்தபட்டுள்ளது//

    நான் அளித்த விபரங்களுக்கான சுட்டி . தெளிந்துகொள்ளுங்கள்.

    //இந்த சாதாரண கேள்விகே பதில் தெரியா உங்களுடன் விவாதம் புரிவதில் அர்த்தம் இல்லை //

    பதில் இல்லாதபோது மேற்கொள்ளும் சமாளிபிகேஷன் டெக்னாலஜியில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றிருப்பீர் போலும். :-)

    //நீங்கள் சொல்வது உண்மையன்றால் அதை நாங்கள் பின்பற்றாததால் எங்களுக்கு இவ்வுலகத்தில் எந்த பாதிப்பும் இல்லை ., ஆனால் ஒருவேளை நாங்கள் சொல்வது உண்மையன்றால் இறந்த பின்பு ...உங்கள் நிலைமை //

    நீங்களே 'ஒரு வேளை' என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள். பாருங்கள் உங்கள் கொள்கை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை.

    ReplyDelete
  79. //இது கும்மி ஐயா அவர்களுக்கான பதிவு அல்ல.//

    என்னை பதில் கூற வேண்டாம் என்று கூறிவிட்டார். வால்பையனின் பதிலில்தான் திருப்தியுறுவாராம். வால்பையன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்.

    ReplyDelete
  80. ஓரிறையின் நற்பெயரால் ...
    அன்பு சகோதரர் அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!
    //மலக்குகளைப் பற்றி அறிந்துகொள்ள இருக்கும் வழிமுறைகளைகளைக் கூறுங்கள தெரிந்துகொள்கின்றேன். முக்கியமாக அவர்கள் எழுதும் குறிப்பேடு பற்றியும் கூறுங்கள்,.//
    ஐயா , முதலில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்., அறிவியல் கோட்பாடுகளுக்கும்,இறைவனின் வார்த்தைகளான குரானிய கோட்பாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்., அறிவியல் (நிருபிக்கப்பட்ட )உண்மைகள் என நம் கைகளில் உள்ளவைகளை, அவை எவ்வாறு ஏற்பட்டது,ஏற்படுத்திய விளைவு முதலிய காரணிகளை கையில் வைத்து கொண்டே பிறகே நாம் அதை உண்மை என்கிறோம்.உதாரணமாக, இன்று நம் கையில் இருக்கும் வானவில் குறித்த வரைவிலணத்தின் படி அவை எப்படி ஏற்படும், ஏன் ஏற்படும்,எவ்வளவு நேரம் ஏற்படும் போன்ற தகவல்களை மிக துல்லியமாக தர முடியும்., அதற்கு (மாறுபடாமல் இருப்பதற்கு) பெயர் தான் அறிவியல், காரணம் பல்வேறு கால சூழ்நிலைகளில்,நேரங்களில்,இடங்களில் ஏற்பட்ட வானவில் தோற்றங்கள் குறித்த செயல்களை ஒருசேர இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் வானவில் குறித்து அறிகிறோம்.
    இவ்விடத்தில் ஒன்றை நன்றாக கவனியுங்கள் ஐயா, நமக்கு கிடைக்கபெற்ற ஒரு முழுமைப்பெற்ற செயலின் அடிப்படையே வைத்து கொண்டே அதன் தொடர் செயலாக்கம் மற்றும் ஏற்கனவே அவை செயல் பட தொடங்கிய விதம் குறித்து உண்மையே வெளிபடுத்த முடியும்., மாறாக உலகில் முன்முதலில் வானவில் தோன்றுவதற்கு முன்பே இன்னன காலங்களில் நேர அளவில் நிறங்களில் வானவில் தோன்றும் என யாரும் கூறவில்லை .காரணம் வானவில் குறித்து அவர்கள் அறியாததே- என்ற ஒரு காரணமே நமக்கு போதும் என ஆக்கிக் கொண்டதால்! மேலும் இன்று நம் வகுத்திருக்கும் வானவில் குறித்த கோட்பாடுகள் அனைத்தும் நம் கண்ட ஆய்வின் அடிப்படையில் மட்டுமே உண்மை படுத்துகிறோம்.மேலும் இதற்கு மேல் எந்தவித கோட்பாடும் வானவில் குறித்து மாறாது என சொல்லவும் முடியாது. இன்னும் பல ஆண்டுகள் கழித்து வானவில்லில் நிறப்பிரிகை மாறுபாடோ,தோன்றும் கால அளவில் ,சுழலில் மாறுபாடு ஏற்பட்டாலோ யாரும் இதுகுறித்து ., ஏற்கனவே வானவில் குறித்து கூறப்பட்ட கோட்பாடுகள் பொய்யென கூற மாட்டார்கள் .மாறாக "அறிவியல் கண்டுப்பிடிப்பில்" ஒரு மேலும் மைல்கல் என பெருமிதம் கொள்வார்கள். ஆக,நம் கண முன் தெரியும் நிதர்சனமான உண்மைகளுக்கேற்ற வகையில் காரணத்தை மெல்ல மெல்ல அறிவதே அறிவியல்!, மேலும் அதன் கிளை தொடர்பான வேறு விசயங்களுக்கு ஆய்வை மற்றொரு கோணத்தில் தொடங்க வேண்டும்., இதை சகோதரர் வால் பையனும்
    //ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தான் அலசபட்டிருக்கிறது, ஏன் மாறலன்னு தனியா தான் அலசனும்!//
    தம் பதிவில் உண்மைப்படுத்துகிறார். அதே போலத்தான் சந்திர /சூரிய கிரகணங்களும் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட எப்போது ஏற்படும் என்பதை மிக துல்லியமாக சொல்ல முடிந்த நமக்கு முதல் கிரகணங்கள் ஏற்படுவதற்கு முன்பு இப்படி ஒரு கிரணக செயல் பாடுகள் ஏற்படுதல் குறித்த தகவல்கள் இல்லை., அதேபோலத்தான் ஏனைய பிற அறிவியல் செயல் பாடுகளும். எனவேதான் நம்மால் EXPIRY தேதிக்கு முன்னே கெட்டு போகும் உணவு பொருட்கள் மற்றும் EXPIRY தேதி முடிந்தும் செயல் படும் பாட்டரி போன்ற வேதி பொருட்களுக்கு அறிவியல் முரண்பாட்டு அடிப்படை விதியை பயன்படுத்துவதில்லை.

    ReplyDelete
  81. இதற்கு நேர்மாறாக இஸ்லாத்தின் அடிப்படை இருக்கிறது.(அறிவியலுக்கு மாற்றமாக அல்ல,மேற்குறிப்பட்ட செயல்முறை விதிக்கு மாற்றமாக) இஸ்லாம் தன்னுடைய கோட்பாடுகளையும்,கொள்கைகளையும் மிக அழகாக,தெளிவாக மற்றும் விரிவாக முன்மொழிந்து, மேலும் அக்கொள்கைகள் எக்காலத்திருக்கும்,யாருக்காகவும் எதற்க்காகவும் நெகிவுதன்மையடையாது என பிரகடனபடுத்திய பிறகே மனித சமுகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்துகிறது.அவ்வாறு விளக்கப்பட்ட அக்கொள்கைகளை செயல்படுத்த காரணங்களையும் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானது "மறைவானவற்றின் மீது நம்பிகை வைப்பது" இதன் கீழாக தான் தாங்கள் குறிப்பிடும் மலக்குகள் மற்றும் மறுமை சார்ந்த ஏனைய கோட்பாடுகளும்.ஆக மேற்குறிபிட்டவற்றின் தன்மையும்,அவற்றை இந்த உலகில் யாரும் நிகழ்வின் அடிப்படையில் அறிந்து கொள்ளமுடியாது என தெளிவுறுத்திய பின்னரே இன்னபிற நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்கிறது. குர்-ஆன் இத்தெரிவை யாரும் கேள்வி எழுப்பாமலே அவை குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறது. எனவே இன்று நீங்களும் நானும் மலக்குகள் குறித்து பேசுகிறோம் என்றால் அவை தொடர்பான மூலங்கள் குர்-ஆன்லிருந்தே பெறப்பட்டன என்பதை மறந்து விடாதீர்கள்., எனவே நீங்களோ,நானோ அறியாத ஒன்றை பற்றி அதற்கு ஒரு வரைவிலக்கணமும் கொடுத்து (அதுவும் யாரும் அதுகுறித்து கேள்வி கேட்காமலே)நிகழ்வின் அடிப்படையில் இவ்வுலகத்தில் யாரும் உணர்ந்து கொள்ளவும் முடியாது என அச்செயலுக்கு முழு வரையறை தரும் போது அறிவியல் ரீதியாக என்ன முரண்பாடு இருக்கிறது ஐயா? ஏனெனில் அறிவியலுக்கு முரண்படும் செயலானது,நிருப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வோடு நாம் ஒப்பிடும் ஒரு சோதனை முற்றிலும் வேறுபடுவதே ஆகும். மலக்குகள் குறித்து விஞ்ஞான ரீதியான ஒரு வரைவிலக்கணமோ அல்லது எந்த ஒரு அறிவியல் சோதனையோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்கு அறிவியல் முரண்பாட்டிற்கு வேலையே இல்லை.அதுபோலவே ஏனைய மறுமை கோட்பாடுகள் குறித்த அறிவியல் நடவடிக்கையும்.,

    //தும்மலை ஏற்படுத்துவது இறைவன் என்று கூறிவிட்டீர்கள். சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும்போது, மருத்துவரிடம் சென்று, மருந்தின் துணையோடு, அதை நிறுத்திவிடுகின்றனர். அப்படியானால், இறைவன் ஏற்படுத்திய தும்மலை நிறுத்தும் அளவிற்கு திறமை படைத்த மருத்துவர்கள்,//
    ஏனைய்யா அதோடு நிறுத்தி விட்டீர்கள்., ஒருவேளை மருத்துவ பலனின்றி அவர் உயிர் இழக்க நேரிட்டால் அல்லாஹ்வால் அவரை ஏன் காப்பாற்ற முடியவில்லை? என தொடரலாமே... ஐயா., ஒருவன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவனுக்கு ஏற்படுகின்ற எல்லா செயல்களும் முன்கூட்டியே இறைவன் தீர்மானித்து விடுகிறான். எனவே மருத்துவரிடம் சென்று நலம் பெறுவது மட்டுமல்ல ., தடுக்கி விழுந்து மரணிப்பதும் அவன் நாடிய படித்தான் நடக்கும்.(எல்லாம் அவன் செயல் என்றால் நமக்கு ஏன் சுவர்க்கம் /நரகம் என கேட்பீர்களானால் -அதற்கு பெயர் தான் பகுத்தறிவு.அது குறித்து தாங்கள் விரும்பின் தனி பதிவு தருகிறேன்- இன்ஷா அல்லாஹ்)

    ReplyDelete
  82. //தும்மலை இறைவனோடுத் தொடர்புபடுத்துவதையும்,//
    ஐயா மீண்டும் சொல்கிறேன் தும்மல் மட்டுமல்ல சோர்வின் அல்லது தூக்க மிகுதியால் கொட்டாவி ஏற்படும் அந்நேரங்களில் கூட இறைவனிடம் பாதுகாவல் தேட சொல்கிறான்.இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் தேட தேவையில்லை.கடவுளின் நினைவு எந்நேரங்களிலும் நம் மனதில் இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான், ஏனெனில் மேற்குறிய செயல்கள் மட்டுமல்ல காலையில் விழிக்கும் போதும்,கழிவறைக்கு செல்லும்போதும்,ஆடை அணியும் போதும் வீட்டை விட்டு வெளியேறும் போதும்,உணவுகள் உண்ணும்போதும்,வேலைகளில் ஈடுபடும்போதும்,பிறரை பாராட்டும் போதும்,பிறரால் இகழப்படும் போதும்,துன்பத்தில் உழலும் போதும், மகிழ்ச்சியால் உள்ளம் பூரிக்கும், ஒன்றை செய்ய நாடும்போதும், அமைதியாக இரவில் உறங்க செல்லும்போதும், சுருங்கக்கூறின்,நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் செயல்கள் அடிப்படையில் நபிகள் (ஸல்)அவர்கள் சில ஒழுக்கங்களையும், பிரார்த்தனைகளையும்கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
    தும்மல் குறித்து மட்டும் கூறப்பட்ட உங்களுக்கு மேற்குரியவை குறித்து கூறப்படாதது ஆச்சரியமே! (ஐயா மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இஸ்லாம் குறித்த உங்கள் புரிதலில் தான் தவறிருக்கிறது மீண்டும் ஒருமுறை குர்-ஆனை குறை காணும் நோக்கில் வேண்டுமானாலும் படியுங்கள் ஆனால்,காழ்புணர்ச்சியின் அடிப்படையில் வேண்டாம் ஐயா)

    // முமீன்களுக்கு சொர்க்கமும், காபிர்களுக்கு நரகமும்தான் கிடைக்கும் என்று கூறுவதே ஏற்றத்தாழ்வுதானே! இஸ்லாம் அல்லாத மாற்று மதக் குடும்பத்தில் பிறந்தார் என்பதற்காக ஒருவரை வேறுபடுத்திப் பார்க்கின்றதே இஸ்லாம்! அனைவரும் மனிதர்களே என்னும் சமதர்மம் எங்கே?//
    // முமீன்கள் பற்றியும், காபிர்கள் பற்றியும் நிறையக் கூறியுள்ளீர்கள். //
    பிறகு ஏன் இப்படி ஒரு கேள்வி? காபிர்கள் மேல் இவ்வளவு கரிசனம் காட்டும் தாங்கள் காபிரை விட குர்-ஆன் கடுமையாக சாடும் "முனாபிக்" பற்றி கேள்வி எழுப்பவிலையே? ஏற்கனவே காரண பெயர் கூறி விட்டேன் ஐயா, (விரிவஞ்சி மேலும் இங்கு காபிர் குறித்து குறிப்பிட விரும்பவில்லை பொறுத்திருங்கள்., சொர்க்கம்-முஸ்லிம்களுக்கு மட்டுமா? தனிப்பதிவு தயாராகிறது-இன்ஷா அல்லாஹ் )

    // நீங்களே 'ஒரு வேளை' என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள். பாருங்கள் உங்கள் கொள்கை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை.//
    ஐயா அந்த ஒரு வேளை உங்கள் பார்வையில் ., எங்களுக்கு அல்ல (100% நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது)

    ReplyDelete
  83. ஓரளவிற்கு தாங்கள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கம் தந்ததாக உணர்கிறேன்., இனி சில தெளிவுகள் நீங்கள் கொள்ளயிருக்கும் ஐயங்களுக்காக .,
    ஐயா., நானோ இங்கிருக்கும் ஏனைய முஸ்லிம் சகோதரர்களோ அரேபிய பாலையிலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். இந்திய பிரஜையாக, இனத்தால் தமிழராக உங்கள் மத்தியில் உலா வரும் உங்கள் சகோதரர்கள் தான்.ஆனால் அந்த அரேபிய மண்ணில் முஹம்மது (ஸல்)அவர்களால் தொடரப்பட்ட (தொடங்கப்பட்ட அல்ல) அந்த இஸ்லாத்தை எங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றிருக்கிறோம். ஐயா,தாங்கள் என்னை அரேபிய வந்தேறியாக ஒருவேளை நினத்தால் கூட என்னை பொறுத்தவரை நீங்கள் என்னின் சகோதரனே ., ஏனெனில் இஸ்லாம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்துருக்கிறது தங்களின் (குமுதமும்,அனந்த விகடனும் கிடைக்காத) ஒய்வு நேரங்களில் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்கையே படித்துப் பாருங்கள்., (அவர்களை இறைத்தூதர் என்ற எண்ணத்தில் இல்லாவிட்டால் கூட ஒரு சராசரி மனிதர் என்ற முறையில்.)அவர்களின் தனிமனித வாழ்வில் நடைப்பெற்ற எந்த ஒரு நிகழ்வும் இன்றும் உலகத்தின் இருக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் அறிந்து கொள்ளா வகையில் மூடி மறைக்கப்பட வில்லை அவர்களின் வாழ்வு திறந்த புத்தகமாக உள்ளது. அதுவும் அவர் செயல் குறிப்புகள் ஆதார அடிப்படையில்! மற்ற தலைவர்களுக்கும்,இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் சொன்னதையும் செய்தார்கள்,இவர்களோ சொன்னதை மட்டுமே செய்தார்கள். ஐயா., தாங்கள் என்னை விட அறிவு மிக்கவர்கள்., எனவே இஸ்லாம் மீதான தாங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.உங்கள் அறிவு வெளிச்சத்தை சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் இருண்ட பக்கத்தில் பரப்புவதை விட,முஹம்மத் எனும் முழு மனிதரின் வரலாற்று பக்கத்தில் நிரப்புங்கள். மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும்,அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி., உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

    ReplyDelete
  84. பொதுவாக,நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், உங்களுக்கும் ஏனைய என் பிற சகோதரர்களுக்கும் கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட ஐயங்கள்,என்பதை விட வெறுப்புகள்., ஐயா நீங்கள் மட்டுமல்ல உலக இறுதி நாள்வரை உள்ளவர்களின் கேள்விக்க்கான பதில்கள் மனித மூலங்கள் மண்ணில் படைக்க படுவதற்கு முன்பே தெளிவாக வரையறுக்கபட்டிருகின்றன. தனக்கு இப்படித்தான் பதில் வேண்டும் என்ற நோக்கில் நமது தேடுதல் தொடரும்போது நடுநிலையான பதில்களில் கூட நம்பிகை இழக்க நேரிடும்.ஐயா., ஏனைய மதம் சார்ந்த நம்பிகைகள் இஸ்லாமிய (மார்க்க) கண்ணாடிகளில் பிம்பமாய் தெரியலாம் அதற்கு சில முஸ்லிம்களின் தவறான புரிதல்களே காரணம் தவிர இஸ்லாமிய கோட்பாடுகளில் அல்ல. நாங்கள் அறிந்து கொண்ட தூய இஸ்லாத்தை தாங்களும் அறிய முற்படுங்கள்.என்னை இஸ்லாம் தேர்ந்தெடுத்தது உங்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என சொல்லவில்லை,இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனத்தான் அழைப்பு விடுகிறேன். ஏனெனில் “ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதை பிறிதொருவனுக்கு விரும்பாதவரை உண்மை முஸ்லிமாக முடியாது”., என்ற நபிகளின் சொல்லிற்கிணங்க நான் உணர்ந்த மார்க்கத்தை நீங்களும் அறியவேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. முடிந்தவரை என் எண்ணங்களுக்கு எழுத்து முலாம் பூசி தங்கள் முன் வைத்திருக்கின்றேன் (சகோதரர் அசிக் அவர்களின் அனுமதியுடன்).என் கருத்து பதிவுகளில் கண்ணியமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தியதாக உணர்கின்றேன்.அதையும் மீறி என் வார்த்தைகள் வன்முறைகளை சுமந்து வந்திருந்தால் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,(ஏனெனில் இதற்காகவும் நான் என் இறைவனிடம் நாளை பதில் சொல்லவேண்டும்) என் பணியிட மாற்றம் மற்றும் மாத இறுதி கணக்கு தொடர்பான வேலைகள் இருப்பதாலே இத்தகைய நீண்ண்ண்ண்ண்ண்ண்ட... பதிவு ஏனெனில் நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போகலாம்.சகோதரரே! வறட்சி வாதத்தை விட பசுமையான பகிர்வு பரிமாற்றத்தால் விளையும் நன்மை பயிர்கள் ஏராளம்! இக்கருத்தை தாங்கள் படித்தபின் நீங்கள் கட்டிவைத்த இஸ்லாம் என்னும் இருட்டு கூடாரத்தின் வழி ஒரேஒரு ஒற்றை வெளிச்சப்புள்ளி உங்கள் மனதின் ஓரத்தில் விழுந்தால் போதும்.-அதுவே என் ஆவா.,
    PAGE CLOSE-க்கு முன்பு...
    “”முதல்ல.. பேசி பார்த்தான் முடியலேனுதோம்...சமாதானத்திற்கு வரான் பாரு... என சக நண்பர்களிடம் கிண்டல் அடித்து //சமாளிபிகேஷன் டெக்னாலஜியை // நான் மேற்கொள்வதாக தாங்கள் உணர்ந்தால் இதற்கு பதில் தந்து பிறகு பேசி கொள்ளுங்கள்
    1.இஸ்லாமிய கடவுளால் இந்த உலகத்திற்கு விளையும் தீமைகள் /அவர் இல்லையென்றால் விளையும் நன்மைகள்?
    2. மனித சட்டத்தால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளால் நீதியை சமுதாய முழுமைக்கும் சமமாக வழங்க முடியுமா?
    3.,குறைந்த அல்லது குறிப்பிட நோக்கத்திற்காக மட்டுமே வாழும் சிலவகை ஆமைகள்,முதலைகள் மற்றும் இன்னபிற உயிரனங்களின் சராசரி ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது உலகின் அனைத்து தேவைகளையும் அத்தியவசியமாக கொண்ட மனிதர்களின் ஆயுள் சராசரி 60 லிருந்து 70 வரை மட்டுமே இருப்பது ஏன்?
    ஐயா மீண்டும் சொல்கிறேன்
    நீங்கள் சொல்வது உண்மையன்றால் அதை நாங்கள் பின்பற்றாததால் எங்களுக்கு இவ்வுலகத்தில் எந்த பாதிப்பும் இல்லை ., ஆனால் ஒருவேளை நாங்கள் சொல்வது உண்மையன்றால் இறந்த பின்பு ...உங்கள் நிலைமை
    தோழமையுடன் காத்திருங்கள்., இறைவன் நாடினால் இனியும் தொடர்வோம்...
    அந்த ஓர் இறையின் அடிமை
    இந்த கும்மியின் சகோதரன்

    ReplyDelete
  85. அன்பு சகோதரர் குலாம் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

    jazakkallaahu Khair....

    தங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக...ஆமின்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  86. @குலாம்
    நண்பரே உங்கள் வேலைகளை கவனியுங்கள். அதன்பிறகு கிடைக்கும் நேரத்தில், தங்கள் வலைத்தளத்தில், என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை பதிவாக இடுங்கள். அங்கு உரையாடுவோம். பதிவிட்டதும் மறக்காமல் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

    ReplyDelete
  87. //உலகில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பழமையான உயிரினப்படிவங்கள் சுமார் 500-550 மில்லியன் (5000-5500 லட்சம்) ஆண்டுகளுக்கு முந்தியவை
    (Cambrian). அந்த மிகப் பழமையான படிவங்கள், முழுமையான உயிரினங்களின்
    படிமங்களாக தான் இருக்கின்றன.//
    நண்பர்களே பரிணாமம் இன்று மனித குல வரலாற்றை அறிவியலின் துனையோடு விளக்க முனைகிறது.இந்த விளக்கம் கூட பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்றே பயனிக்கிறது.இது குறித்த சில கேள்விகளும் விமர்சனங்களும் எழுவது இயல்பே.இந்த கேள்விகளே அறிவியலை வளர்த்து நுட்பமாக்கியது.பரிணாம வளர்ச்சி விளக்கம் நூறு விழுக்காடு சரியானது என்று நான் கூற மாட்டேன்.ஒருவேளை நாளை வேறு ஒரு அறிவியலின் கோட்பாடு மனித குல வரலாற்றை ஐயந்திரிபற விளக்கினால் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயஙக மாட்டோம். ஆனால் நீங்கள் எல்லாம் குரானிலேயே சொல்லி விட்டது.குரானில் சொல்வது மட்டுமே அறிவியல் ,ஒருவேலை அறிவியல் விதி நிரூபிக்கப் பட்டால் குரானிலும் அதான் இது என்கிறீர்கள் For example உலகம் உருண்டை என்று தெரிந்து விட்டதால் குரானும் அதையே ஆமோதிக்கிறது.

    இந்த விவாதத்தில் இருநது நான் புரிந்து கொள்வது
    மதவாதிகள் ஏற்றுக் கொண்ட அறிவியல் உண்மைகள்.
    1.உலகம் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    பைபிளின்(குரானுக்கு முந்திய வேதம்) படி உலகம் சுமார் 10000ல் இருந்து
    15000 ஆண்டுகளுக்கு முன்பே படைகப்பட்டது.( பைபிளை திருத்த பட்டது
    ,குரானில் படைப்பு காலமே சொல்லப்டவில்லை என்று சொல்வீர்கள் தெரியும்.)
    குரானில் எந்த வருடமும் குறிபிடப்படவில்லை.
    “உலகம் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது” என்று நீஙகள் சொல்வது குரானில் எஙகாவது சொல்லப் பட்டு உள்ளதா?

    அப்படி என்றால் அந்த காலத்திலேயெ மனிதன் இப்போது உள்ள உருவத்தில்( உஙக‌ ஆளுங்க ஆதம் 60 அடி இருந்தார்னு சொல்ராங்க) இருந்திருக்க வேண்டும்.இதை குறித்து ஏதாவது ஆராய்சி இஸ்லாமியர்களால் முன்னெடுக்கப் படுகிறதா (website please)?


    மனித குல வரலாறு உங்கள் வேதப் படி சொல்ல முடியுமா?

    2.மைக்ரோ பரிமாணம்.

    இதற்கு ஆதாரமான குரான் வசன‌ங்கள்.

    ReplyDelete
  88. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஆசிக் மற்றும் ஏனைய சகோதரர்களுக்கு., பணியிட மாற்றம் காரணமாக தற்போது என் கண்ணியில் நெட்வொர்க் இணைப்பு இல்லை.எனவே ஆன்லைனில் டைப் செய்ய என்னால் இயலாது. தாங்கள் தயவு செய்து இணையத்திலிருந்து தமிழில் டைப் செய்யும் மென்பொருளின் பதிவிறகதிற்கான லிங்கை இன்ஷா அல்லாஹ் தரவும்., அதன் மூலம் இணைய தொடர்பில்லாமல் டைப் செய்து பின் இணையத்தில் பேஸ்ட் செய்ய முடியும்.கும்மி அய்யா மற்றும் ஆடலரசு அவர்களுக்கு தங்களுக்கான பதிவு மற்றும் பதில்களுடன் விரைவில் சந்திக்கின்றேன்
    - இறை நாடினால்

    ReplyDelete
  89. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    சகோதரர் குலாம் அவர்களுக்கு,
    கூகிளின் தமிழில் டைப் செய்யும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். பதிவிறக்கம் செய்யும் முன் instructionsஐ படிக்கவும்.

    ReplyDelete
  90. வா அலைக்கும் சலாம் நன்றி சகோதரர் பாஸித்.,
    கும்மி அவர்களுக்கான பதிவு இங்கே http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post.html

    ReplyDelete
  91. இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.இவ்விரு நிகழ்வுகளில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,எனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது.இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென கூறலாம்.
    மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும்,பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.இதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.
    இன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்பிக்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.ஆறு நாள் உலக படைப்பை பிரதான முரண்பாடாக சொல்வோர் டாக்டர். ஜாகிர் நாயக் அகப்பக்கத்தில் பேரா.வில்லியம் கேம்பலுடன் நடைபெற்ற விவாதமான "விஞ்ஞான ஒளியில் குர்-ஆனும் பைபிளும் என்ற விடியோ பதிவை பார்வையிடவும்., அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.
    கருவியல் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/KARU.HTM
    மலைகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/malai.htm
    உலகத் தோற்றம் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/world.htm
    மனித மூளை குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/brain.htm
    ஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/sea.htm
    ஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/ulalai.htm
    மேகங்கள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/eraimaililscience.htm
    மனித வளர்ச்சியின் படிநிலை குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_creation_human.htm
    கரு வளர்ச்சி குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_embryology.htm
    சிசுவின் உள்/வெளித்தோற்றம் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_in_out.htm
    வலி உணரும் நரம்புகள் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_skin.htm
    வானவியல் குறித்து
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/truth_astronomy.htm
    ஒட்டக படைப்பைக்குறித்து
    http://www.tamilislam.com/science/camel_science.htm
    மேலும் அறிய... http://www.tamililquran.com/quranscience.asp
    துறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO
    http://www.tamilislam.com/TAMIL/SCIENCE/scientist.htm

    அநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,
    //அப்படி என்றால் அந்த காலத்திலேயெ மனிதன் இப்போது உள்ள உருவத்தில்( உஙக‌ஆளுங்க ஆதம் 60 அடி இருந்தார்னு சொல்ராங்க) இருந்திருக்க வேண்டும்.இதை குறித்து ஏதாவது ஆராய்சி இஸ்லாமியர்களால் முன்னெடுக்கப் படுகிறதா (website please)?// ஆதம் (அலை) அவர்கள் 60 அடியோ,70 அடியோ இருந்தாலும் அது விஞ்ஞானத்திற்கு எந்த வகையில் முரண்படுகிறது?அப்படி இருந்தாலும் அறிவியல் ரிதீயாக இப்போதும் மனிதர்கள் அதே அடி உயரத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே...மேலும் குர்-ஆனில் அவர்கள் உயரம் குறித்து எந்த தவலும் இல்லை.ஏனெனில் அதனால் மனித சமுகத்திற்கு எந்த பலனும் இல்லை.மனிதர்களுக்கு பயன் தராத எந்த விசயமும் குர்-ஆன் கூறுவதில்லை.இதற்காக எந்த ஒரு ஆராய்ச்சியும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ள தேவையுமில்லை.
    -இறை நாடினால் இனியும் தொடர்வோம்

    ReplyDelete
  92. நம் அனைவரின் மீதும் ஒரிறையின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக!
    அன்பு நண்பர் ஆடலரசு அவர்களுக்கு.,
    //ஆனால் நீங்கள் எல்லாம் குரானிலேயே சொல்லி விட்டது.குரானில் சொல்வது மட்டுமே அறிவியல் ,ஒருவேலை அறிவியல் விதி நிரூபிக்கப் பட்டால் குரானிலும் அதான் இது என்கிறீர்கள் For example உலகம் உருண்டை என்று தெரிந்து விட்டதால் குரானும் அதையே ஆமோதிக்கிறது.//
    திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு இறை புறத்திலிருந்து வழங்கப்பட்ட வேத வெளிபாடு.மேலும்,தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் அவன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும்,தீமைகளையும் பிரித்தறிவிக்கும் ஒரு தூய வழிக்காட்டி! மாறாக குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.(அஹா! இந்த ஒரு வார்த்தையே போதும்,என சொடுக்கு போட்டு கிளம்ப வேண்டாம்)அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும்,சிந்தித்துணரும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என்பதை
    பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை, ஆழிய
    கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும்,எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கத்துடன்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க!
    எனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருகிறது அதில் 1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும், 2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும், 3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும் விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.அதனை கீழ்காணும் இறை வசனம் மூலம் உறுதிப்படுத்தலாம் சூரா அந்நம்ல்(27) வசனம்18 மற்றும்19
    இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.
    அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.









    ,

    ReplyDelete
  93. கலிலீலியோ காலத்தில் அவருடைய சூரிய மையக் கொள்கை 100% மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மதவாத அறிவியலார்களால், இதற்காக அவர் சிறையில் அடைக்கப் பட்டு கண்கள் பிடுங்கப் பட்டார். மக்கள் தீர்ப்பும், மதசம்பந்தப் பட்டவர்கள் அறிவியல் பேசுவதும் அறிவியலுக்கு ஒத்து வராது என்பது மட்டுமில்லாமல் ஆபத்தானதும் கூட என்பது பழங்காலத்திலேயே நிரூபிக்கப் பட்டது.

    ReplyDelete
  94. நான் இப்பொழுது பரிமாண‌க் கொள்கை 100% சரியாக மனித குல தோற்றத்தை விளக்குகிறது என்று கூறவில்லை.அந்த வழியில் பயனிக்கிறது.நிச்சயமாக மனித குலம் தன் தோற்றத்தின் ரகசியம் கண்டு பிடிக்கும்.
    பரிமாணத்தின் மேல் எழும் சந்தேகங்கள் எல்லாம் அதை மேம்படுத்தும் வழிமுறைகள்.ப‌ரிமான‌த்தை ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் குரானை ந‌ம்புவ‌ர்க‌ள் அல்ல‌.
    நீங்கள் பரிமாணம் தவறு ஆகையால் குரான் சரி என்க்றீர்களா?நீங்கள் சொல்லும் கருத்துகள் குரானை சார்ந்தே இருக்க வேன்டும்.
    நான் கேட்ட கேள்விகள்.

    1.“உலகம் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது” என்று நீஙகள் சொல்வது குரானில் எஙகாவது சொல்லப் பட்டு உள்ளதா?

    2.குரான தோன்றிய‌ கால‌த்தையே அதில் இருந்து காட்ட‌ முடியுமா?.

    3.இதுவ‌ரை க‌ண்டு பிடிக்காத‌ அறிவிய‌ல் உண்மை ஏதா‌வ‌து
    குரானில் இருந்து க‌ண்டு பிடித்து நோப‌ல் ப‌ரிசு வாங்க‌‌லாமே?
    4.குரானில் சொல்ல‌ப‌டும் செய‌ல்களுக்கு வ‌ர‌லாற்றில் ஆதார‌ம் காட்ட‌ முடியுமா?
    (உ.ம்)
    யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (9:30)

    கிறித்தவர்கள் ஈசா(இயேசு)வை அல்லா(கடவுள்)வின் குமாரன் என்று கூறுகிறார்கள் சரி.ஆனால் ஓரிறை கொள்கையை பின்பற்றும் யூதர்கள் நபி உஐரை(எஸ்ரா)வை எப்போது அல்லா(கடவுள்)வின் குமாரன் என்று கூறினார்கள்?.கிறித்தவர்களின் அல்லாவின் குமாரன்(ஈசா) பற்றி நிறைய வசனம் வரிகிறது.ஏன் யூதர்களின் அல்லா(கடவுள்)வின் குமாரன் (உஜைர்) பற்றி எந்த வசனமும்(இதை தவிர) இல்லை?.
    நீங்கள் விரும்பினால் விவாதம் தொடரும்.

    ReplyDelete
  95. ஆற்றலரசு அவர்களுக்கு,
    முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவும். குர்ஆன் ஒரு அறிவியல் புத்தகமோ அல்லது வரலாற்று புத்தகமோ இல்லை.
    குர்ஆனை பற்றி இறைவன் (குர்ஆனிலேயே) கூறுவது:

    இது, அகிலத்தாருக்கெல்லாம் நல்உபதேசமே அன்றி வேறில்லை. குர்ஆன் 6:90

    நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். குர்ஆன் 86:13

    ஆனால் இதில் அறிவியலும் இருக்கிறது, வரலாறுகளும் இருக்கிறது.

    குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது. குர்ஆன் 45:20

    //குரான் தோன்றிய‌ கால‌த்தையே அதில் இருந்து காட்ட‌ முடியுமா?//
    குர்ஆன் தோன்றிய (இறக்கப்பட்ட) காலம் கி.பி 610 முதல் கி.பி 632 வரை. குர்ஆனில் வருடம் குறிப்பிடப்படவில்லை.

    //இதுவ‌ரை க‌ண்டு பிடிக்காத‌ அறிவிய‌ல் உண்மை ஏதா‌வ‌து குரானில் இருந்து க‌ண்டு பிடித்து நோப‌ல் ப‌ரிசு வாங்க‌‌லாமே?//
    அதற்கான அவசியமில்லை, அது குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கமும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் உண்மைகளை பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பலர்.

    ReplyDelete
  96. விவாதம் அருமை..! இறுதி வரை கும்மி அவர்கள் ஆதாரம் எதையும் வைக்க வில்லை .. இஸ்லாத்தை எதிர்த்து கேட்ட சில கேள்விகளும் கூட, அதில் அவரது அறியாமை தான் தெரிகிறது ..!

    ReplyDelete