Pages

Saturday, May 15, 2010

நாம் அந்நியர்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


சகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், "Strangers" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.



"சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள். 

அப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, 'ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா?' என்று கேட்ட போது,  

'ஆம், நம்புவோம்' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள். 

பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், 'அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர்', என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது

இது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார். 

ஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள். 

நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.       

மக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார்.


இன்றைக்கு அந்நியராக இருக்கும் நாம், அந்த அந்நியர்களுடன் தான் நம்மை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்களை செய்த அவர்களோடுதான் நம் குழந்தைகளை தொடர்பு படுத்த வேண்டும். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார்' என்று கூறி, முதல் குணமாக கூறியது, 'அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார்' என்பது. 

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார், 

'தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன்' 

அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், 'வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரிகள் கூட்டத்தில் இருந்தாய்'.  

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.

இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் இன்னும் இஸ்லாத்தை பற்றிய தீப்பொறி இருக்கிறது. ஆனால் அவர்களோ குப்பைகளில் உழல்கிறார்கள், அதையே உண்கிறார்கள், அந்த குப்பைகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் யாரைப்பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இங்கே இருப்போரில் அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும்.  அல்ஹம்துலில்லாஹ்.ஏனென்றால் இதுதான் உங்களுக்கு வேறு எங்கிருப்பதை காட்டிலும் சிறந்த இடம். நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்.    

ஆக, முஸ்லிம்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும். 

அவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும், மைக்கல் ஜோர்டனோ, மைக்கல் ஜாக்சனோ, கால்பந்து விளையாட்டு வீரர்களோ, கூடைப்பந்து விளையாட்டு வீரர்களோ அல்ல.

தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இப்படியே ஒரு 90 நாட்கள் செய்து பாருங்கள். அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் காணலாம். அவர்களுக்கு பரிசளிப்பதை ஒரு முதலீடாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீட்டை நீங்கள் செய்யத் தயங்கினால், வெளியே இருந்து தவறான செயல்களுக்கு அவர்களை தூண்ட, வேறு சிலர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம் பிள்ளைகளுக்கு ஒசாமா இப்ன் ஜைத் (ரலி) யாரென்பதை சொல்லித்தருவோம். அந்த பதினாறு வயது சிறுவனை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, அலி (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) என்று அனைவரும் இருந்தபோதும், இவர்தான் சிறந்தவர் என்று கூறி ஒப்படைத்தார்களே அந்த சிறுவனைப் பற்றி சொல்லி கொடுப்போம்.

அபிசீனியாவில், மன்னர் நஜ்ஜாசியிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அவரை கவர்ந்தாரே ஜாபர்(ரலி), அவரைப் பற்றி சொல்லித் தருவோம்.

களவில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களிடமிருந்து வந்தாரே அபூதர் (ரலி), அவரைப் பற்றி சொல்லித்தருவோம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கா நகர மக்களிடம் சென்று, 'லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் என்று உரக்கச் சொல்ல போகிறேன்' என்று அபூதர் (ரலி) சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், 'வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் அவர்கள் உங்களை தாக்குவார்கள்' என்று கூறியபோதும், 'இல்லை நான் சென்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும்' என்று சென்று, அந்த மக்கள் முன் ஷஹாதாவை உரக்க கூறினார்கள். கூறியதற்கு தண்டனையாக தாக்கப்பட்டார்கள். மயங்கி விழுந்தார்கள். அடுத்த நாள் மறுபடியும் சென்று கலிமாவை உரக்க கூறினார்கள். மறுபடியும் தாக்கப்பட்டார்கள். பின்னர் நாயகம் (ஸல்) அவர்கள், அபூதரை மக்காவை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள். 

இதோ இவர்கள் தான் அந்நியர்கள். தங்கள் வாழ்க்கை முறையை நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவர்கள். இறைச் செய்தியையும், நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் மட்டுமே ஏற்று வாழ்ந்தவர்கள். 

முஹம்மது என்ற சகோதரர் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் இஸ்லாமை சரி வர பின்பற்றவில்லை. அதனால் அந்த அலுவலக மேலாளரால் மிதவாத முஸ்லிம் என்று பாராட்டப்படுகிறார். 

ஒரு நாள் நிலைமை மாறுகிறது. முஹம்மது தன் மார்க்கத்தை நன்கு புரிந்துக் கொள்கிறார். மேலாளர் மதியம் மணி 12.30 க்கு, 'வாருங்கள் கீழ போய் சாப்பிட்டு வருவோம்' என்கிறார். ஆனால் முஹம்மதோ, 'இல்லை, இது லுஹர் நேரம், நான் தொழ செல்ல வேண்டும்' என்கிறார். மேலாளருக்கோ அதிர்ச்சி, 

'முஹம்மது என்ன ஆயிற்று உங்களுக்கு?' 

'இனி என்னால் முன் போல இருக்க முடியாது. இதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை'. 

எப்போது அவர் அப்படி சொன்னாரோ அந்த நிமிடத்தில் இருந்து அந்நியராகி விட்டார். 

அவர் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றுவதனால் அவரது மேலாளரால் மேலும் மதிக்கப்படலாம். ஆனால் முஹம்மதுக்கு அவர் அந்நியராகும் வரை இது புரிந்திருக்கவில்லை.    

நீங்கள் நினைக்கலாம், மிதவாத முஸ்லிம் என்று எதையும் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் உங்களை மதிப்போடு நடத்துவார்கள் என்று. இல்லை, நீங்கள் மிதவாதி என்று சொன்னாலும் அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களுக்கான உண்மையான மரியாதையெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. அவன் கட்டளையிட்டதை  நீங்கள் முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது. 

அதுபோல, ஒரு சகோதரி இருக்கிறார். அவர் இதுநாள் வரை ஹிஜாப் அணிந்ததில்லை, இஸ்லாம் சொல்கின்ற பெண்ணாக வாழ்ந்ததில்லை. அவருடைய கணவரும் அதை பெரிதாக அலட்சியப்படுத்தியதில்லை. ஒரு நாள், குரானைப் படிக்கிறார், சுன்னாஹ்வை படிக்கிறார். கண்களில் கண்ணீர் வழிகிறது. இத்தனை நாளாய் இப்படி வாழ்ந்து விட்டோமே என்று வருந்துகிறார். இனி ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்வது என்று முடிவெடுக்கிறார். 

அவருடைய மாற்றத்தை கண்ட அவரது கணவர், 'என்ன ஆயிற்று உனக்கு?' என்று கேட்கிறார். 

'இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொண்டேன், இனி என்னால் முன் போல்  வாழ முடியாது' 

'நீ அடிப்படைவாதியாகி விட்டாய். இனி நீ எனக்கு தேவையில்லை'.

ஆம், இப்போது அந்த சகோதரி அந்நியராகிவிட்டார். அவருடைய கணவர், அவரை விட்டு விலகினால், அல்லாஹ் அவருக்கு வேறொரு அந்நியரை துணையாகக் கொடுப்பான்.

அந்நியர்களாக இருப்பதற்குண்டான விருப்பமும், தைரியமும் நம்மிடம் இருக்க வேண்டும். நீங்கள் அந்நியராக இருப்பதனால் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தாரே கேட்கலாம்.       

அல்லாஹ்விடத்தில் அச்சம், நம்பிக்கை, தியாகம், ஒழுக்கம், தைரியம், விசுவாசம், மரியாதை, கல்வியைத் தேடுவது,ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது, சகோதரத்துவம், பொறுமை, ஒத்துழைப்பு ஆகிய இவைகள் தான் அந்நியருக்கான குணநலன்கள்.         

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்க வேண்டும். நாம் அந்நியராக இருந்தால், இஸ்லாத்திற்கெதிரான சிலரது எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.     

அவர்களிடம் அணுகுண்டு, Hydrogen குண்டு என்று பலவிதமான, மனித இனத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடிய குண்டுகள் இருக்கலாம். 

ஆனால் அல்லாஹ், நமக்கு அவைகளையெல்லாம் விட சக்தி வாய்ந்த குண்டை கொடுத்திருக்கிறான். அதற்கு பெயர் D-BOMB, ஆம் அது DAWAH BOMB. இந்த ஆற்றல் மிகுந்த குண்டு கட்டிடங்களை சிதறடிக்காது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இது அவர்கள் உள்ளங்களை ஊடுருவிச் சென்று அவர்களது மனதில் பலமான தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களையும் அந்நியர்களில் ஒருவராக மாற்றிவிடும் தன்மை கொண்டது.  

நீங்களும் நானும் இந்த குண்டை எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆம், நாம் பெற்ற இஸ்லாம் என்ற பொக்கிஷத்தை அவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். 

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக இருக்கச் செய்வானாக...

வழி தவறி சென்று கொண்டிருக்கும் சில முஸ்லிம்களை, இறைவன், கூடிய விரைவில் அந்நியர்களில் ஒருவராக திரும்பச் செய்வானாக....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு"

அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. பதிவின் நீளம் கருதி சகோதரர் காலித் யாசின் அவர்கள் கூறிய பல தகவல்கள் விடப்பட்டுள்ளன. இந்த உரையை முழுமையாக காண விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்க்கலாம்.


இந்த உரையை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

காலித் யாசின் அவர்கள் நிகழ்த்தி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு உரை,  "Purpose of Life" என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய உரை. 


அந்த உரையின் முடிவில், இருபதிற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவினார்கள். அந்த உரையையும் நீங்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக நிலைக்கச் செய்வானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


This Article Inspired by:
1. Sheik Khalid Yasin's Lecture "Strangers".

"Strangers" Video can be downloaded from:
1. http://www.kalamullah.com/khalid-yasin.html

My Sincere Thanks to: 
1. One Islam Productions, New South Wales, Australia. http://www.1islam.net
2. Br. Jafar Safamarva


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

71 comments:

  1. அல்லாஹ் மிகத் தூய்மையானவன்...
    மீண்டும் ஒரு அருமையான பதிவு. தங்களின் தமிழாக்கமும் அழகாக உள்ளது.

    //தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம்.//

    ஆனால் இன்று நடந்துக் கொண்டிருப்பவையோ வேதனை அளிக்கக் கூடியதாய் இருக்கிறது.

    பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய நாமோ, அதற்கு மாறாக தொலைக்காட்சி பார்ப்பதையே கற்றுக் கொடுக்கிறோம். பிள்ளைகள் சினிமா பாடல்களை பாடினால் அவர்களை கை தட்டி உற்சாகப் படுத்துகிறோம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகளோ, மாறாக சினிமா ஹீரோக்களையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    இந்த அவலங்கள் நீங்க வேண்டுமானால், தினமும் அவர்களுக்கு நபியின் வரலாறையும், நபித்தோழர்களின் வரலாறையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத் தருவோம்.

    மிதவாதி:
    இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றாமல், பெயரளவில் உள்ள முஸ்லிம்கள் தான் அவர்கள் பார்வையில் 'மிதவாதிகள்'. அது போன்றவர்களுக்கு தான் இங்கு பாராட்டுக்களும், விருதுகளும்(ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட)..

    ஆனால் இஸ்லாமிய வழிமுறைப்படி வாழ்ந்தால், அவர்களுக்கு ஆஸிப் அம்லா கூட தீவிரவாதி தான்..

    ReplyDelete
  2. மதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?

    The Purpose of Life உரை குறித்த ஒரு பதிவினை இடுங்களேன்.

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //மதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா?//

    இல்லை. சிந்தித்ததில்லை...


    //The Purpose of Life உரை குறித்த ஒரு பதிவினை இடுங்களேன்//

    இன்ஷா அல்லாஹ்...


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. Assalamu Alaikum Brother அப்துல் பாஸித்

    //விருதுகளும்(ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட)..// Do we have the rights to comment individuals like this in Islam. Without knowing them completely.

    ReplyDelete
  5. @pebble

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
    அவருடைய ஈமானைப் பற்றியோ, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ விமர்சிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நான் அவரை விமர்சிக்கவும் இல்லை. உதாரணத்திற்கு தான் அவர் பெயரை கூறினேன்.

    இஸ்லாத்தில் இசைக்கு தடை இருக்கும் போது, அவர் அதனையே தன் தொழிலாகக் கொண்டுள்ளார். இணைவைப்புக்கு கொண்டு செல்லக்கூடிய தர்ஹா வழிப்பாட்டுக்கு செல்கிறார். அவர் மட்டும் அல்ல, அவர் போல் இன்னும் பல பேர் இருக்கிறார்கள்.

    மற்றப்படி அவர் மேல் எனக்கு எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு சகோதரன் ஆஷிக்,
    நல்லதொரு பதிவு அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் அப்துல் பாசித் கருத்துக்களோடு நான் உடன்படுகின்றேன்.

    குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் யார் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்களோ அவர்கள் எல்லாம் அந்நியர்கள் தான். அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிரியாக இன்றைக்கும் பல முஸ்லிம்களால் பார்க்கப்படுபவர்கள். ஆனால் போலி ஒற்றுமை பேசும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சகோதரர் காலித் யாசின் உரையை கேட்ட பின்பாவது உண்மையை உணர வேண்டும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே ஒற்றுமை வர முடியும். அது தான் நிலைத்திருக்கும். அந்த ஒற்றுமையை தான் பெருமானார் (ஸல்) அவர்களும் உருவாக்கினார்கள்.

    "யார் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வை வெறுப்படைய செய்கின்றானோ அவன் மீது அல்லாஹ் வெறுப்படைகின்றான்.மேலும் அல்லாஹ்வை வெறுப்படைய செய்து எந்த மக்களை திருப்திபடுத்தினானோ அம்மக்களையும் அவன் மீது வெறுப்படையச் செய்வான்.

    யார் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த மக்களின் வெறுப்புக்கு ஆளானானோ அவரைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைகின்றான். எவர்களுடைய வெறுப்புக்கு ஆளானாரோ அவர்களுடைய உள்ளத்தில் இவருடைய அன்பை போட்டுவிடுகின்றான்.கோபங்கொண்ட அந்த மக்கள் அவரை நல்லவர் என்று பாராட்டுவர்.இன்னும் அவருடைய சொல் செயலை அந்த மக்களின் பார்வையில் அழகாக்கிவிடுகின்றான்". என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

    இறைவன் என்றென்றும் நம்மை அந்நியர்கள் கூட்டத்திலேயே நிலைத்திருக்கச் செய்வானாக.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி,
    /* மதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா? */
    கடின முயற்சிக்கு பின்னர் கிடைக்கின்ற எதுவானாலும் அதை நாம் அதன் மதிப்பு தெரிந்து பாதுகாப்போமல்லவா கும்மி அவர்களே . அதைபோன்றே கடின முயற்சிக்கு பின்னர் அவர்களுக்கு கிடைத்த இஸ்லாத்தை பிற சகோதர சகோதரிகளுக்கும் அதி தீவிரமாக எடுத்து செல்கின்றனர். எந்த ஒரு முயற்சியுமின்றி பிறப்பின் அடிப்படையில் கிடைத்ததால் எங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தின் உண்மையான மதிப்பு தெரியாமல் இருந்து விட்டு பிறருக்கும் ஒழுங்காக கொண்டு செல்லாமல் இருக்கின்றோம். உங்களுடைய இந்த கேள்வி எங்கள் தவறுகளை மிக சரியாக சுட்டி காட்டுகின்றது.

    எங்களிடம் நீங்கள் எடுத்து வைத்த இந்த கேள்வியில் உங்களுக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன கும்மி. மெய்ப்பொருள் காண்பதறிவு.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் Pebble
    /* Do we have the rights to comment individuals like this in Islam. Without knowing them completely.*/
    முஸ்லிம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஒருவருடைய வெளிப்படையான செயல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக இருந்தால் அவரை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த நபரை நரகவாசி என்று நாம் இவ்வுலகில் தீர்ப்பு சொல்லக்கூடாது என்றாலும் அவர் செய்கின்ற செயல் அவரை நரகத்திற்கு கொண்டு சென்று விடும் என்று சொல்லுவதில் எந்த தவறுமில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் ஏ.ஆர். ரஹ்மான் வெளிப்படையாக ஹராமான தொழிலை செய்கின்றார். அதைவிடவும் மிகக் கொடிய இறைவனுக்கு இணைவைத்தலின் கேந்திரமாக இருக்கின்ற தர்காக்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றார். எனவே அவர் பெயரை உதாரணமாக சகோதரர் அப்துல் பாசித் பயன்படுத்தியதில் தவறேதுமில்லை.
    அனைத்தையும் அறியும் ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவனே.

    ReplyDelete
  9. நண்பர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களுக்கு,
    MLM எனப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் அடிப்படையில் அமைந்த அனைத்து வியாபாரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள். தனக்கு வந்ததாகக் கூறி பல செக்குகளையும் காண்பிப்பார்கள். ஆனால், அடிப்படைப் பொருளின் மதிப்பு குறித்து தவறியும் பேசிவிடமாட்டார்கள்.

    அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்).

    சிந்தியுங்கள்.

    தருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    /* MLM எனப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் அடிப்படையில் அமைந்த அனைத்து வியாபாரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள். தனக்கு வந்ததாகக் கூறி பல செக்குகளையும் காண்பிப்பார்கள். ஆனால், அடிப்படைப் பொருளின் மதிப்பு குறித்து தவறியும் பேசிவிடமாட்டார்கள். */
    நீங்கள் கிறித்தவ தளத்திற்கு சென்று சொல்ல வேண்டிய கருத்துக்களை தடம் மாறி வந்து இங்கு பதிந்துவிட்டீர்கள் என்றெண்ணுகின்றேன். இஸ்லாத்தில் குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பகுத்தறிவுக்கு முரணாக சொல்லி எவரையும் தன்பால் அழைத்ததில்லை. மாறாக இஸ்லாம் எந்த ஒன்றையும் பகுத்தாய்ந்து ஏற்றுக் கொள்ள சொல்கின்றது.
    "அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் (25:73)"

    ReplyDelete
  11. தொடர்ச்சி
    /* சிந்தியுங்கள். */ உங்களிடம் நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டிய வாக்கியமிது.

    ReplyDelete
  12. தொடர்ச்சி
    /* அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்). */
    ஹா ஹா மீண்டும் சிரிப்பு மூட்டுகிறீர்கள் கும்மி. ஒருவன் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றால் அவனுக்கு இவ்வுலக வாழ்வு ஒரு சோதனைக்களம் என்றே இஸ்லாம் சொல்லுகின்ற போது நீங்கள் அதற்கு முரணாக சொல்லுவது என்னுடைய நகைச்சுவை உணர்வை கிளறி விடுகின்றது.
    "ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.அல்குர்ஆன் (2:155 -156)

    ReplyDelete
  13. தொடர்ச்சி
    [* கும்மி சொல்லியது (தருமி தளத்தில்) : அல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.
    குர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.
    39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/)
    உருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்? *]
    நாகூர் ஹனீபாவின் பாடலைக் கேட்டு நீங்கள் இஸ்லாத்தை அறிந்து முயலுவீர்களாயின் பின்னர் கருணாநிதி கூட தீர்க்கதரிசி என்று நீங்கள் எண்ணுகின்ற நிலைமை ஏற்பட்டு விடும் கும்மி. இறைவனுக்கு உருவமில்லை என்று இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருக்கின்றதா? ஆகையால் தான் பல தடவை சொல்லுகின்றோம் குர்ஆனையும் ஹதீசையும் படித்து இஸ்லாத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று. முடிந்தால் இந்த சுட்டியில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.
    http://onlinepj.com/kolkai-vilakkam/allah_uruvamatravana/

    ReplyDelete
  14. தொடர்ச்சி
    [* தருமி பதிவிலிருந்து: ம்வாவியா, ஹஸனை அவரது மனைவியின் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார். *]
    இதற்க்கு என்ன வரலாற்று ஆதாரம் கும்மி? ஒரு தகவலை சொல்லும்போது அதற்கான வரலாற்று ஆதாரங்களை குறிப்பிட வேண்டுமல்லவா? இதெல்லாம் தருமி எழுதியதல்ல வேறொருவர் எழுதியதை தருமி எடுத்து போட்டிருக்கின்றார் என்ற ஒரு வாதத்தை நீங்கள் முன்வைத்தால் எதையும் ஆய்வு செய்யாமல் வெளியிடுவது நல்ல செயலாக இருக்க முடியாதே என்ற ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதே கும்மி? உதாரணமாக தருமி திருடுவதை தொழிலாக கொணடவர் என்று நான் எழுதி வைக்க அதை ஆஷிக் எடுத்து தன் தளத்தில் ஆய்வு செய்யாமல் வெளியிட்டால் தருமி திருடன் என்று முடிவு செய்து விட முடியுமா? அல்லது தருமி இப்படி எழுதுவதை தான் ஒப்புக் கொள்வாரா?

    ReplyDelete
  15. தொடர்ச்சி
    /* தருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். */
    முதலில் சகோதரர் தருமி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் பல வரலாற்று முரண்பாடுகள் விரவிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்கின்றார்களாம். இதற்கு பின்னூட்ட கும்மியடிக்க பகுத்தறிவை பயன்படுத்தாத சில கூட்டம் வேறு.
    [* தருமி பதிவிலிருந்து: அலியின் மறைவுக்குப் பின் நபிகளின் ஒரே மகளான பாத்திமாவும், அலியின் இரு புத்திரர்களான ஹஸனும், ஹுசேனும் உய்ரோடிருக்கும்வரை நிம்மதியுடன் இருக்க முடியுமா? *] அலி(ரலி) அவர்களுக்கு முன்னரே பாத்திமா(ரலி) அவர்கள் மரணத்தை தழுவி விட்டார்கள் என்பது வரலாறாக இருக்க கட்டுரையாளரோ முரண்பட்ட தகவலைத் தருகின்றார். இந்த நிலையில் தான் இவர்களின் ஆராய்ச்சி லட்சணம்.

    ReplyDelete
  16. தொடர்ச்சி
    ஒரு சிறு நினைவூட்டல் கும்மி. ஏற்கெனவே ஆஷிக் உங்களுக்கு சொன்ன அதே யோசனை தான். குர்ஆனை எடுங்கள். முழுவதும் வாசியுங்கள். உங்களுக்கு சந்தேகம் வருகின்ற பகுதிகளை, வசனங்களை குறித்து வைத்துக் கொண்டு அதை மொத்தமாக கேள்வியாக எழுப்புங்கள். உங்களிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு குர்ஆனை நீங்கள் வாசிக்கும் போதே பதில் கிடைத்து விடும் கும்மி. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

    ReplyDelete
  17. தொடர்ச்சி
    [* கும்மி சொல்லியது (தருமி தளத்தில்) : குரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே
    16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
    இந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.
    மூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா? பொய்யா? *]
    ஆஹா! ஆஹா!! உங்கள் அறிவை மெச்சி ஆயிரமாயிரம் பொற்காசுகள் கொடுக்க கூட ஆசை தான். என்ன செய்வது நான் கருணாநிதி குடும்பத்தில் பேரனாக கூட பிறக்கவில்லையே. என்ன செய்வது?
    நன்றாக நினைவில் கொள்ளுங்கள் குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட திருமறை. அதில் உள்ள வசனங்கள் இறைவனால்தான் மாற்றப் பட்டிருக்கின்றதே தவிர மனிதர்களால் மாற்றப்படவில்லையே. அதை நீங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் (மேலே உள்ள உங்களின் பின்னூட்டத்தின் மூலம்). மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என்று நீங்கள் ஆதாரத்துடன் கேள்வி எழுப்ப முயற்சி செய்யுங்களேன் கும்மி.

    ReplyDelete
  18. நெத்தியடி முஹம்மத்Monday, May 17, 2010

    ///இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்)///.---இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிப்பதில் தாங்கள் எந்த அளவுக்கு கரை கண்டவர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது...

    வந்துவிட்டீர்கள்...என்றாலும், இஸ்லாம் பற்றி எதோ ஒரு விஷயத்தையாவது அறிந்துவிட்டு செல்லுங்கள்....

    ===>>>ஒரு மனிதன் முஸ்லிமாய் மாறுவது இறப்புக்குப்பின் இறைவனிடம் இருந்து கிடைக்க இருக்கும் மறு உலக வேகுமதிக்காகவே அன்றி இவ்வுலகில் கிடைக்கும் எந்த ஒரு சிறு துரும்பு நன்மைக்காகவும் அல்ல....
    -----என்ற அடிப்படையை மட்டுமாவது இன்று அறிந்து கொள்ளுங்கள்.... சகோதரர்... தருமி/கும்மியே...

    ----தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

    அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    //அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்)//


    அப்படியா சகோதரரே...

    நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்களிடமிருந்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை எதிர்பார்க்கிறேன்.

    இந்த தளத்தில் இதற்கு முன் வெளியான, இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல் இதோ,

    1. Sr.Amina Assilmi
    2. Br.Yusuf Estes
    3. Sr.Yvuonne Ridley
    4. Sr.Aysha
    5. Br.Josua evans
    6. Dr.Jerald Dirks
    7. Dr. Jeffery Lang

    இப்போது இந்த லிஸ்டில் எவர் தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று இப்போது நீங்கள் எனக்கு சொல்லியாக வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    அதுமட்டுமல்லாமல், தாங்கள் எதை ஆதாரமாக வைத்து எல்லா முஸ்லிம்களும் (//இஸ்லாமியர்களாய் மாறியவர்கள்//) இப்படிதான் என்று கூறினீர்கள் என்றும் தெரிந்து கொள்ள விழைகிறேன். "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் மட்டும் அவர்களை சோதிக்காமல் விட்டுவிடுவோமா" என்பது போன்ற குரான் வசனங்களை தாங்கள் கேள்வி பட்டதில்லையா...

    ஒருவர் முஸ்லிமாவது இறைவனின் சரியான மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்க்காகத்தான்.

    ஆக, நான் தங்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது இவைதான்,

    1. மேலே உள்ள லிஸ்ட்டில் தாங்கள் சொன்ன காரணங்களை சொல்லியுள்ள முஸ்லிம்களை தாங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.

    2. //அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள்//

    எந்த ஆதாரத்தை வைத்து இப்படி சொன்னீர்கள்? நீங்கள் சொன்ன காரணங்களுக்காகவும் ஒரு சிலர் இஸ்லாத்திற்கு வந்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்திருந்தால் அது அவர்களின் இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதலையே காட்டுகிறது. ஆனால் தாங்கள் எல்லா முஸ்லிம்களையும் சொன்னதால் இப்போது அதற்க்குண்டான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும்.

    நேரடியான பதில்களை தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்...

    //சிந்தியுங்கள்//

    அன்றிலிருந்து இன்று என் நண்பன் கார்த்திகேயன் வரை, இஸ்லாத்தை பல வித தியாகங்களுக்கு பின் தான் பலரும் ஏற்கிறார்கள். இவையெல்லாம் ஏன் என்று நீங்கள் தான் சிந்திக்கவேண்டும்....

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. //http://ethirkkural.blogspot.com/2010/02/2.html//

    "ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது."

    இதற்கு என்ன அர்த்தம் நண்பர்களே?

    ReplyDelete
  21. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    சலாம்...

    //http://ethirkkural.blogspot.com/2010/02/2.html//

    "ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது."
    இதற்கு என்ன அர்த்தம் நண்பர்களே?//


    என்ன ஆயிற்று உங்களுக்கு. இது அவர் இஸ்லாத்திற்கு வந்து, பலவற்றையும் இழந்த பிறகு, பல காலங்கள் கழித்து நடந்தது. பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாமா எழுதுவது?

    நன்றி ,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. இறைவனின் பரிசு என்று கூறுவீர்கள். சுட்டிக்காட்டினால் என்னாவாயிற்று என்று கேட்பீர்கள். ஹா ஹா ஹா

    ReplyDelete
  23. 42:11 there is nothing whatever like unto Him

    விளக்கத்திற்கு

    http://www.amislam.com/without.htm

    http://www.alsunna.org/Islamic-Beliefs/Allah-Exists-without-a-Place.html

    ReplyDelete
  24. From Wikipedia

    Furthermore, it is one of the fundamentals in Islam that God exists without a place and has no resemblance to his creations. For instance, God is not a body and there is nothing like him. In the Quran it says what mean "Nothing is like him in anyway," [see Quran 42:11]. Allah is not limited to Dimensions.

    http://en.wikipedia.org/wiki/God_in_Islam

    ReplyDelete
  25. தருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.

    ReplyDelete
  26. @ ஷேக் தாவூத்
    தருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.

    ReplyDelete
  27. // குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட திருமறை. அதில் உள்ள வசனங்கள் இறைவனால்தான் மாற்றப் பட்டிருக்கின்றதே தவிர மனிதர்களால் மாற்றப்படவில்லையே. அதை நீங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் (மேலே உள்ள உங்களின் பின்னூட்டத்தின் மூலம்). //


    அந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல; இட்டுக்கட்டுபவர் என்று முகம்மதையே மக்கள் கூறினர்.

    ReplyDelete
  28. //மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என்று நீங்கள் ஆதாரத்துடன் கேள்வி எழுப்ப முயற்சி செய்யுங்களேன் கும்மி. //

    நான் குறிப்பிட்டிருக்கும் வசனத்தின் மூலம் அல்லது சூழல் என்னவோ?

    ReplyDelete
  29. //இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிப்பதில் தாங்கள் எந்த அளவுக்கு கரை கண்டவர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது...//

    :-)

    ReplyDelete
  30. //உதாரணமாக தருமி திருடுவதை தொழிலாக கொணடவர் என்று நான் எழுதி வைக்க அதை ஆஷிக் எடுத்து தன் தளத்தில் ஆய்வு செய்யாமல் வெளியிட்டால் தருமி திருடன் என்று முடிவு செய்து விட முடியுமா? அல்லது தருமி இப்படி எழுதுவதை தான் ஒப்புக் கொள்வாரா? //

    உதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  31. //இஸ்லாத்தில் குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பகுத்தறிவுக்கு முரணாக சொல்லி எவரையும் தன்பால் அழைத்ததில்லை.//

    கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை?

    ReplyDelete
  32. //அவனுக்கு இவ்வுலக வாழ்வு ஒரு சோதனைக்களம் என்றே இஸ்லாம் சொல்லுகின்ற போது நீங்கள் அதற்கு முரணாக சொல்லுவது என்னுடைய நகைச்சுவை உணர்வை கிளறி விடுகின்றது.//

    முரணாக வந்த பதிவைச் சுட்டிவிட்டேன். சிரித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  33. //உதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள். //

    நீங்கள் நேசிக்கும் ஒருவரைப் பற்றி உதாரணத்திற்கு சொல்லும் போதே உங்களுக்கு கோபம் வருகிறதே, ஆனால் கோடிக்கனக்கானவர்கள் நேசிக்கும் கடவுளைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது உங்கள் வார்த்தைகள் எல்லை மீறுகிறதே? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    மற்றபடி அதில் உங்களுக்கு வருத்தம் இருந்தால் மன்னியுங்கள்.

    ReplyDelete
  34. //ஆனால் கோடிக்கனக்கானவர்கள் நேசிக்கும் கடவுளைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது உங்கள் வார்த்தைகள் எல்லை மீறுகிறதே?//

    என்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.

    ReplyDelete
  35. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    //இறைவனின் பரிசு என்று கூறுவீர்கள். சுட்டிக்காட்டினால் என்னாவாயிற்று என்று கேட்பீர்கள். ஹா ஹா ஹா//

    நல்லதொரு நகைச்சுவை. உங்கள் பதிலை நீங்கள் தான் மெச்சி கொள்ள வேண்டும். ஆமினாஹ் அவர்கள் இஸ்லாத்திற்காக பலவித தியாகங்களை செய்தவர்கள். குழந்தைகள் முதற்கொண்டு அனைத்தையும் இழந்து இஸ்லாத்தை தழுவியவர்கள்.

    அவர்களுக்கு என்ன நல்லது நடந்ததால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள்?

    ஆமினாஹ் அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்ற பிறகுதான் புற்று நோய் வந்தது. அதனால் அதற்கு காரணம் இஸ்லாம்தான் என்று விலகியா போய்விட்டார்கள்? அவர்களது கடைசி காலம் வரை ஒரு வீடு கூட இல்லாமல் வாழ்ந்தார்கள். அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்று விலகியா போய்விட்டாகள். அஹா என்ன அழகாக சுட்டி காட்டியிருக்கிறீர்கள்?

    பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக்கொண்டிருப்பீர்களா? இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள்?.

    என்னுடைய கேள்விக்கான பதிலை நீங்கள் இன்னும் சொல்லவில்லை.

    எதை ஆதாரமாக வைத்து //இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள்// என்று கூறினீர்கள்?

    எதை ஆதாரமாக வைத்து //இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்// என்று கூறினீர்கள்?

    சொத்தையான பதில்களை தவிர்த்து அறிவார்ந்த பதிலை உங்கள் வாதத்திற்கு ஆதரவாக தாருங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    நன்றி

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  36. நெத்தியடி முஹம்மத்Tuesday, May 18, 2010

    @இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிக்கும் சகோதரர் கும்மி:
    //அந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல//
    நீங்கள் குர்ஆனில் ஒரு பக்கம் கூட முழுதாய் படித்ததில்லையா? இதுதான் அல்லாஹ்வின் நடை...! அல்லாஹ், தன்னை பன்மையாக 'நாம்' அன்றும் அழைத்துக்கொள்வான், முன்னிலையாக சொல்வதற்கு பதிலாய் படர்க்கையாயகவும் தன்னை அல்லாஹ் என்றும் சொல்லிக்கொள்வான். மேலும் படித்தால் இதனை யாரும் விளக்கத்தேவை இன்றி நீங்களே விளங்க்கிக்கொலள்வீர்கள்.

    முன்முடிவுகளை களைந்துவிட்டு....நீங்கள் இன்னும் செல்ல வேண்டியதூரம் மிக அதிகம் அன்பரே....

    ReplyDelete
  37. //என்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.//

    நான் நீங்கள் என்று குறிப்பிட்டது உங்கள் போன்ற கடவுளை எதிர்ப்பவர்கள் அல்லது இல்லை என்பவர்களை.

    மீண்டும் சொல்கிறேன், தருமி ஐயாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை. வேண்டுமானால் தருமி ஐயா என்று இருக்கும் இடத்தில் என்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    //கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை?//

    நம்முடைய தமிழ்நாட்டிலேயே குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட சகோதரி ஒருவர் குழந்தையை ஈன்றேடுத்துள்ளார். அது சாத்தியமாகும் போது, இது சாத்தியமாகாதா?

    ReplyDelete
  38. நெத்தியடி முஹம்மத்Tuesday, May 18, 2010

    @ இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிக்கும் அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு.... சலாம் உண்டாவதாக...

    //கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை?// --- சரியான காமடியாக இருக்கிறது...

    இதைச்சொல்லி அவர் இஸ்லாத்திற்கு வந்தாரா? ...அல்லது...
    இதைச்சொல்லி அவரை இஸ்லாத்திற்கு அவரை யாரும் அழைத்து வந்தனரா?
    ...அல்லது...
    இதைச்சொல்லி அவர் மற்றவரை இஸ்லாத்திற்கு அழைத்தாரா?

    மேலும், பொதுவாய் மருத்துவர்கள் 'வாய்ப்பில்லை' என்று சொல்வதும் பிறகு அது நடப்பதும், 'வாய்ப்புண்டு' என்று சொல்லப்பட்டது நடவாமல் போவதும் அறிந்ததில்லையா?

    கல் தடுக்கி விழுந்து இறந்த இளைஞன் இறந்ததில்லையா? நடுக்கடலில் நொறுங்கி விழுந்த விமானத்திலிருந்து ஒரே ஒரு குழந்தை மட்டும் பிழைத்ததில்லையா?

    கொஞ்சம் சீரியஸாக-பொய்கள் இன்றி பின்னூட்டமிடலாமே கும்மி.

    எதை ஆதாரமாக வைத்து //இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்// என்று கூறினீர்கள்? மேலும், குற்றச்சாட்டை பன்மையில் ( /பிரச்சாரகர்ளின்/... /கட்டுரைகளை/...) கூறி ஒரே ஓர் உதாரணம் கொடுத்து அதுவும் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டதே... என்ன செய்யப்போகிறீர்கள் கும்மி? அந்தோ பரிதாபமே...
    Just for face saving, இனி வேறு பெயரில் வந்து கும்மி அடியுங்கள்.

    மா ஸலாமா....

    ReplyDelete
  39. இதை படிப்பவர்கள் அப்படியே 30 ப்ரிண்ட் அவுட் எடுத்து ஊரெல்லாம் விநியொகித்தால் சொர்க்கத்தில் 20 நித்தியகன்னிகைகள் சேர்த்து கிடைப்பார்கள் என்ற வரியும் கடைசியில் இணைத்திருந்தால் எஃபெக்ட் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

    ReplyDelete
  40. நெத்தியடி முஹம்மத்Tuesday, May 18, 2010

    கும்மி முன்னர் சொன்னது....
    ///தருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.///

    ====>>>>>////பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.////

    கும்மி பின்னர் சொன்னது...
    //@ ஷேக் தாவூத்
    தருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.//

    ?????????
    !!!!!!!!
    ??????

    ReplyDelete
  41. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
    //ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது.//
    //நம்முடைய தமிழ்நாட்டிலேயே குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட சகோதரி ஒருவர் குழந்தையை ஈன்றேடுத்துள்ளார். அது சாத்தியமாகும் போது, இது சாத்தியமாகாதா?//
    //இதைச்சொல்லி அவர் மற்றவரை இஸ்லாத்திற்கு அழைத்தாரா? //
    இங்கே நாம் மருத்துவத் துறை செயற்கரிய செயல் செய்தது என்று பேசவில்லை. இறைவனுடைய பரிசு என்பதுதான் பேசுபொருள். இஸ்லாமியராய் மாறியவருக்கு இறைவன் பரிசளித்தான் என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். அதனுடைய அர்த்தம் என்னவென்று இதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

    //அவர்களுக்கு என்ன நல்லது நடந்ததால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள்?//

    நான் முதலில் இட்ட பதிலை திரும்பவும் மேற்கோளிடுகின்றேன்
    //அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; //
    //அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை//

    பிஜே போன்று, பேசுவதை விட்டு வேறு விஷயங்களுக்குச் செல்லாதீர்கள்.

    //பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக்கொண்டிருப்பீர்களா? இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள்?. //
    //கொஞ்சம் சீரியஸாக-பொய்கள் இன்றி பின்னூட்டமிடலாமே கும்மி. //

    நான் சொன்ன கருத்திற்கு பதில் இல்லாதபோது ஒன்று வேறு விஷயங்களுக்குச் செல்வீர்கள் அல்லது இது போல் பேசுவீர்கள். என் கருத்தில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே!

    //எதை ஆதாரமாக வைத்து//

    பரிணாமத்தில் மட்டும்தான் ஆதாரங்கள் அளித்தால் இப்படி சொல்வீர்கள் என்று நினைத்தேன். எல்லா விஷயத்திலும் அப்படித்தானா?

    //அல்லாஹ், தன்னை பன்மையாக 'நாம்' அன்றும் அழைத்துக்கொள்வான், முன்னிலையாக சொல்வதற்கு பதிலாய் படர்க்கையாயகவும் தன்னை அல்லாஹ் என்றும் சொல்லிக்கொள்வான். மேலும் படித்தால் இதனை யாரும் விளக்கத்தேவை இன்றி நீங்களே விளங்க்கிக்கொலள்வீர்கள்.//

    'நீர் இட்டுக்கட்டுபவர்' என்னும் சொற்றொடருக்கான அர்த்தமும், சூழலும் என்னவென்று நீங்கள் கூறுங்களேன். முக்கியமாக சூழலைப் பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    //Just for face saving, இனி வேறு பெயரில் வந்து கும்மி அடியுங்கள். //
    :-)

    இப்பொழுது அல்லாஹ்வின் உருவம் குறித்து யாருமே பேசவில்லையே! ஒரு வேளை, நீங்களும் நாகூர் ஹனிபா பாடலை கேட்டுவிட்டீர்களோ?

    ReplyDelete
  42. தன்னால் படைக்கபட்ட அனேக மக்கள் தன்னால் தேர்தெடுக்கபட்டு அனுப்பட்ட தூதரை நம்பவில்லை என்றால், தேர்தெடுக்கபட்ட தூதர் தவறா!? படைக்கபட்ட மக்கள் தவறா!? அல்லது கடவுளே தவறா!?

    அவரும் பாவம் மாத்தி மாத்தி ஆள் அனுப்பி தான் பாக்குறாரு! ஆனா மக்களுக்கு தான் அறிவு வர மாட்டிங்குது, எல்லாத்துக்கும் காம்ப்ளான் வாங்கி கொடுக்கலாமா சகோதரர்களே!

    ReplyDelete
  43. //?????????
    !!!!!!!!
    ?????? //

    முதலில் கூறியுள்ளது எனது கேள்வி குறித்து; இரண்டாவது தருமி அய்யாவின் பதிவின் உள்ளடக்கம் குறித்து.

    ReplyDelete
  44. //எல்லாத்துக்கும் காம்ப்ளான் வாங்கி கொடுக்கலாமா சகோதரர்களே!
    //

    ஒன்லி பூஸ்ட்

    ReplyDelete
  45. //இதை படிப்பவர்கள் அப்படியே 30 ப்ரிண்ட் அவுட் எடுத்து ஊரெல்லாம் விநியொகித்தால் //

    30 பிரிண்ட் அவுட் எடுத்து எப்படி ஊரெல்லாம் விநியோகிக்க முடியும்? ஆயிரக்கணக்கில் தேவைப்படுமே. ஒரு வேளை...

    ReplyDelete
  46. //இஸ்லாமியராய் மாறியவருக்கு இறைவன் பரிசளித்தான் என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். அதனுடைய அர்த்தம் என்னவென்று இதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.//

    இந்த பரிசை இறைவன் தன்னை நம்புபவர்களுக்கும் தருகிறான், தன்னை நிராகரிப்போர்களுக்கும் தருகிறான்.

    "பாருங்கள், இவர் இஸ்லாத்திற்கு வந்ததால் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆகவே நீங்களும் இஸ்லாத்திற்கு வாருங்கள்." என்று நாங்கள் கூறவில்லை.

    உங்கள் கேள்வி //கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை?//
    அதற்கு பதில் அளித்துவிட்டேன். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ReplyDelete
  47. //இந்த பரிசை இறைவன் தன்னை நம்புபவர்களுக்கும் தருகிறான், தன்னை நிராகரிப்போர்களுக்கும் தருகிறான். //


    லூசா!,(உங்களை அல்ல அப்துல்)

    நிராகரிப்போர்க்கு ஏன் நரகம் தனியா, அவர்களையும் சொர்க்கத்துல அடைக்கலாமே! சரியான லூசு மதம்யா இது!, அது சரி உலகத்துல எல்லா மதமும் லூசு மதம் தானே!

    ReplyDelete
  48. தொடர்ச்சி
    /* அந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல; இட்டுக்கட்டுபவர் என்று முகம்மதையே மக்கள் கூறினர்.*/
    அந்த வசனத்தை நன்றாக படித்து விட்டேன் கும்மி. அதில் உங்களுடைய கருத்துகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லையே. இறைமறுப்பாளர்கள் எல்லா காலகட்டத்திலும் குர்ஆனை மறுப்பதற்கு ஒவ்வொரு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நபிகளாரை சூனியக்காரர் என்றும் பிறிதொரு முறை பைத்தியக்காரர் என்றும் கூட அழைத்தனர். சூனியக்காரர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் சூனியக்காரராக இருக்க முடியாது தானே கும்மி. அன்றிலிருந்து இன்று வரை இத்தகைய முரண்பாடுகளோடுதான் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களேயொழிய உண்மையை ஒரு போதும் உணர்ந்து பேசுபவர்களாக இருந்ததில்லை.
    அந்த வசனத்தில் "நாம்" என்ற சொற்றொடர் அல்லாஹ்வை தான் குறிக்கின்றது என்பதை சகோதரர் முஹம்மத் உங்களுக்கு விளக்கியிருக்கின்றார். இந்த வசனத்தில் மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உங்களின் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உண்டா கும்மி? மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு சவாலாகவே அறைகூவல் விடுகின்றேன். மனிதக்கரங்கள் இறைவசனத்தை மாற்றிவிட்டன என்பதை நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முயலுங்கள் கும்மி. எல்லாம் அறிந்த இறைவன் ஏன் வசனத்தை மாற்ற வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்களுக்குள் எழும். அந்த கேள்விக்கு இந்த சுட்டியில் சென்று நீங்கள் பதிலை அறிந்து கொள்ளுங்கள்.
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/30-sila-vasanangka-matrapattathu-yen/

    ReplyDelete
  49. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி,
    தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    /* @ ஷேக் தாவூத்
    தருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.*/
    சகோதரர் தருமியின் பதிவுகளில் எவ்வளவு முரண்பாடுகள் விரவிக் கிடக்கின்றன என்பதை உங்களுக்கு சில உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டினேன். ஆனால் அதைப்பற்றி நீங்கள் மூச்சுக் கூட விடவில்லை. இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மூட்டைகளை தான் ஆய்வாக தருமி போன்றவர்கள் இஸ்லாத்திற்கெதிரான வாதங்களாக எடுத்து வைக்கின்றார்கள். தேவையிருப்பின் தருமியை இந்த தளத்திற்கு வந்து கருத்திட சொல்லுங்கள்.

    ReplyDelete
  50. தொடர்ச்சி
    //என்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.//
    நான் தருமி பற்றி ஒரு உதாரணம் சொன்னதுக்கே கண்டனங்களா? அதுவும் தெளிவாக உதாரணம் என்று குறிப்பிட்டு தான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றேன். இருப்பினும் அந்த வார்த்தைகள் தருமி அவர்களின் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பை கோருகின்றேன். ஒரு தவறை செய்தால் மட்டும் தான் தப்பா? அதுக்கு துணை போவது கூட தவறு தானே கும்மி. இறைவனை பற்றி மிகவும் அருவெறுப்பான வாசகங்களை கொண்ட எத்தனயோ கட்டுரைகளுக்கு சென்று தாங்கள் (நெத்தியடி முஹம்மத் அவர்களின் வார்த்தையில் சொன்னால் குருட்டுக் கும்மி அடித்ததை ) பின்னூட்டமிட்டு மகிழ்ந்ததை என்னால் எடுத்துக் காட்ட முடியும்.
    எனவே மீண்டும் மீண்டும் உங்களிடம் நான் வேண்டுவது என்னவெனில் உங்களின் பகுத்தறிவை பயன்படுத்தி வாதங்களை எடுத்து வைக்க இனிமேலாவது முயற்சி செய்யுங்கள் கும்மி. தாமதமான மறுமொழிகளுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  51. தொடர்ச்சி
    /* 42:11 there is nothing whatever like unto Him */
    /* இப்பொழுது அல்லாஹ்வின் உருவம் குறித்து யாருமே பேசவில்லையே! ஒரு வேளை, நீங்களும் நாகூர் ஹனிபா பாடலை கேட்டுவிட்டீர்களோ?*/
    அட இறைவன் உருவமற்றவன் என்ற உங்கள் கூற்றுக்கு இது தான் ஆதாரமா கும்மி? இந்த வசனத்தில் எந்த இடத்தில் அலல்து நீங்கள் எந்த அடிப்படையில் இதில் இறைவன் உருவமற்றவன் என்ற வாதத்தை நிறுவ முயலுகின்றீர்கள்? இந்த வசனம் இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கே சொல்லுகின்றது கும்மி? இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று சொல்லுவதும் இறைவனுக்கு உருவமில்லை என்பதும் ஒன்றா கும்மி? இப்போது நாகூர் ஹனீபா பாடலின் அடிப்படையில் யார் முன்முடிவு எடுத்திருக்கின்றார்கள் என்பது விளங்கியிருக்கும். உங்களுடைய பகுத்தறிவை கொஞ்சம் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். மேலும் விளக்கத்திற்கு இந்த சுட்டியில் சென்றும் நீங்கள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
    http://onlinepj.com/kolkai-vilakkam/allah_uruvamatravana/

    ReplyDelete
  52. @ நண்பர் ஷேக் தாவூத்
    வசனம் 42 : 11 தொடர்பான இரண்டு சுட்டிகளை நான் கொடுத்திருந்தேனே! அவற்றைப் பார்த்தீர்களா? அந்த தளங்கள் இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்படுபவையே. அவற்றில் அல்லாவின் உருவம் குறித்து கூறியதைப் பற்றி பேசுங்களேன்.

    பிஜேயின் அறிவியல் அறிவு குறித்து இதே தளத்தில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அவர் இன்னொரு கூட்டத்தில் தனது தமிழ் இலக்கிய அறிவைக் காட்டியது.
    "இப்ப வர்ற பாட்ட பாருங்க
    முத்தமிட்ட நெத்தியில,
    மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு. இப்படியெல்லாம் பாட்டெழுதுரானுங்க. சாவுறதுக்கு வேற எடமா கெடைக்கல?"

    இது போன்று அறிவியல் அறியாத, மொழியின் சுவை தெரியாத ஒரு மதவாதியின் கருத்து எப்படி இருக்கும். குர் ஆன் மொழிபெயர்ப்பிலும் கூட தனது வியாபாரத்தின் அடிப்படை கெடாத அளவிற்கே மொழிபெயர்ப்பு செய்திருப்பார். மேலும் பிஜேயின் விளக்கங்கள் அனைத்தும் beating around the bush வகையே. அதனால், மேற்கோள்களை வேறு தளங்களில் இருந்து இடுங்கள். உங்கள் தகவலுக்காக மீண்டும் அந்த சுட்டிகள்.

    http://www.amislam.com/without.htm

    http://www.alsunna.org/Islamic-Beliefs/Allah-Exists-without-a-Place.html


    //இந்த வசனத்தில் மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உங்களின் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உண்டா கும்மி?//

    நான் கேட்ட கேள்விகளை மீண்டும் வரிசைப்படுத்துகின்றேன்.
    1 . நீர் இட்டுக்கட்டுபவர் என்னும் சொற்றொடர் யாரை குறிக்கின்றது?
    2 . அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழல் என்ன?
    3 . எந்தெந்த வசனங்கள் எப்படி எப்படி மாற்றம் பெற்றன என்று ஏதேனும் குறிப்புகள்?

    இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண 'திறந்த மனதோடு' முயற்சியுங்கள்.

    ReplyDelete
  53. //According to Shi'a historians, Muawiyah wished to pass the caliphate to his own son Yazid, and saw al-Hasan ibn Ali as an obstacle to his plans. And thus Muawiyah plotted to get rid of al-Hasan ibn Ali. He secretly contacted one of al-Hasan's wife Ja'dJa'da did as Muawiyah suggested, giving her husband poison mixed with honey. Madelung (pp. 331–333) notes other traditions suggesting that al-Hasan ibn Ali may have been poisoned by some another wife, the daughter of Suhayl ibn Amr, or perhaps by one his servants. Madelung also cites the early historians (Baladhuri, Waqidi, etc.) who recounted these traditions. Madelung, who is more accepting of Shi'a traditions than most Western academic historians, believes that al-Hasan ibn Ali was poisoned and that the famous early Islamic historian al-Tabari suppressed the tale out of concern for the faith of the common people. (Madelung pp. 331–332)

    Shi'a Muslims believe that Ja'da was promised gold and marriage to Yazid. Seduced by the promise of wealth and power, she poisoned her husband, and then hastened to the court of Muawiyah in Damascus to receive her reward. Muawiyah reneged on his promises and married her to some other man.[26]

    Al-Hasan ibn Ali died in Medina on Safar 7th or 28th, 50 AH. He is buried at the famous Jannatul Baqee‘ cemetery across from the Masjid al-Nabawi (Mosque of the Prophet).//

    what a great clear cut historical events ..! great to have discussions on this jumbled history!!

    ReplyDelete
  54. தொடர்ச்சி
    /* 2 . அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழல் என்ன? */
    இந்த வசனத்திற்கான சூழல் என்ன என்பதை நீங்களே விளக்கி விடுங்களேன். பின்னர் அதற்க்கு வேறு பின்னூட்ட ஜல்லியடிக்க வேண்டி வரும். எனவே நீங்கள் அந்த சூழலை விளக்கி விடுங்கள். அது சரியா தவறா என்பதை இங்கு பதிலளித்து விளக்குகின்றோம்.

    /*3 . எந்தெந்த வசனங்கள் எப்படி எப்படி மாற்றம் பெற்றன என்று ஏதேனும் குறிப்புகள்?*/
    இதையும் நீங்கள் தான் குறிப்பிட வேண்டும். குற்றச்சாட்டு நீங்கள் தான் வைத்திருக்கின்றீர்கள். இந்த இந்த வசனம் இப்படி இப்படி மாற்றம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.

    /* 'திறந்த மனதோடு' முயற்சியுங்கள்.*/ உங்களை நோக்கி நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டிய வசனமிது கும்மி.

    ReplyDelete
  55. தொடர்ச்சி
    /* 1 . நீர் இட்டுக்கட்டுபவர் என்னும் சொற்றொடர் யாரை குறிக்கின்றது? */
    என்னுடைய முந்தைய பின்னூட்டத்திணிலேயே இதற்க்கு நான் பதில் சொல்லி விட்டேன். நீங்கள் தெளிவாக அதை படிக்கவில்லையா? ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைமறுப்பாளர்கள் குர்ஆனை மறுப்பதற்கு ஒவ்வொரு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நபிகளாரை சூனியக்காரர் என்றும் பிறிதொரு முறை பைத்தியக்காரர் என்றும் கூட அழைத்தனர். அதில் ஒன்றாக இட்டுக்கட்டுபவர் என்றும் நபிகளாரை அழைத்தனர்.ஆனால் சூனியக்காரர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் சூனியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் இட்டுக்கட்ட முடியாது. முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இறைமறுப்பாளர்கள் இருந்திருக்கின்றனர் என்பது மேலே உள்ள வாதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இங்கே நீங்கள் குறிப்பிட்டது போன்று குர்ஆன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்கின்றன என்ன ஆதாரம்? அந்த ஆதாரத்தை நீங்கள் இங்கு எடுத்து வையுங்களேன் கும்மி.

    ReplyDelete
  56. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி,

    நீங்கள் குறிப்பிட்ட அந்த குர்ஆனின் 42 :11 வசனம் எந்த வகையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை விளக்குகின்றது என்று நான் கேட்டிருந்தேன். அதற்க்கு எந்த ஒரு பதிலையும் தாங்கள் அளிக்கவில்லை. அந்த வசனத்தில் "அவனைப் போல எதுவும் இல்லை" என்பது உருவம் இல்லை என்று எப்படி அர்த்தமாகும் கும்மி? உதாரணமாக "கும்மியை போன்று இந்த உலகில் யாரும் இல்லை" என்று சொன்னால் கும்மி என்ற நபரே இந்த உலகில் இல்லை என்று அர்த்தமா? கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா? 42 :11 வசனத்தை யாரிடம் கொடுத்து படிக்க சொன்னாலும் "இறைவனுக்கு நிகராக யாருமில்லை" என்ற இஸ்லாமிய அடிப்படையை அந்த வசனம் போதிக்கின்றது என்று தான் சொல்லுவார்களேயொழிய அந்த வசனத்தில் இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்லுவதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.

    இறைவனுக்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. நீங்கள் சொல்லுவது போன்று உருவமற்றவன் என்ற பொருளில் ஒரு பெயரும் அதில் இல்லையே கும்மி? அந்த வசனத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். அதில் உங்கள் கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள்.

    ReplyDelete
  57. தொடர்ச்சி
    /* பிஜேயின் அறிவியல் அறிவு குறித்து இதே தளத்தில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அவர் இன்னொரு கூட்டத்தில் தனது தமிழ் இலக்கிய அறிவைக் காட்டியது.
    "இப்ப வர்ற பாட்ட பாருங்க
    முத்தமிட்ட நெத்தியில,
    மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு. இப்படியெல்லாம் பாட்டெழுதுரானுங்க. சாவுறதுக்கு வேற எடமா கெடைக்கல?"
    இது போன்று அறிவியல் அறியாத, மொழியின் சுவை தெரியாத ஒரு மதவாதியின் கருத்து எப்படி இருக்கும். குர் ஆன் மொழிபெயர்ப்பிலும் கூட தனது வியாபாரத்தின் அடிப்படை கெடாத அளவிற்கே மொழிபெயர்ப்பு செய்திருப்பார். மேலும் பிஜேயின் விளக்கங்கள் அனைத்தும் beating around the bush வகையே. அதனால், மேற்கோள்களை வேறு தளங்களில் இருந்து இடுங்கள். */
    ஆஹா! ஆஹா!! உங்களைப் போன்ற நாத்திகவாதிகள் , கம்யூனிஸ்ட்டுகள். பெரியாரிஸ்ட்டுகள், சங்பரிவார்கள், கள்ளக் கிறித்தவர்கள் எல்லோரும் சகோதரர் பிஜே மீது காழ்ப்புணர்வு கொள்ளுவதும் அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்புவதும் தமிழகத்தில் நாங்கள் கண்டுதான் வருகின்றோம். அவருடைய அறிவியல் அறிவையும் தமிழ் அறிவையும் தாங்கள் தாராளமாக அவர் நடத்துகின்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியில் சென்று கேள்வி கேட்பதின் மூலம் உலகறியச் செய்யலாமே கும்மி? உங்களை போன்ற நபர்களுக்கு சம்மட்டியடி கொடுக்கின்றார் என்றதும் பிஜே மதவாதி ஆகிவிடுகிறார். என்ன செய்வது ஹாருன் யஹ்யாவின் பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத ரிச்சர்ட் டாகின்ச்க்கு ஹாருன் யஹ்யா மதவாதி ஆனது போல. அப்படி சொல்லி தானே இன்று வரை ரிச்சர்ட் டாகின்ஸ் ஹாருன் யஹ்யாவின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தப்பிக் கொண்டிருக்கின்றார். டாகின்ஸ் வழியில் கும்மியோ?

    ReplyDelete
  58. தொடர்ச்சி:
    நம்முடைய பேசுபொருள் இப்போது குர்ஆன். எனவே மீண்டும் பிஜே வைப் பற்றி அறிவியல் புவியியல் தமிழ் புலமை என்று திசை மாறி விடாதிர்கள் கும்மி.

    ReplyDelete
  59. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //பரிணாமத்தில் மட்டும்தான் ஆதாரங்கள் அளித்தால் இப்படி சொல்வீர்கள் என்று நினைத்தேன்//

    உச்சகட்ட நகைச்சுவை...

    என்ன? பரிணாமத்திற்கு ஆதாரங்கள் அளித்தீர்களா?. அந்த பதிவு அப்படியே இருக்கிறது. கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், என்ன ஆதாரம் அளித்தீர்கள் என்று...

    அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நீங்கள் என்ன செய்வீர்கள், பாவம். பரிணாமவியலுக்கு ஆதாரங்கள் இருந்தால் தானே எடுத்து வருவதற்கு....

    சரி சகோதரர் கும்மி. விஷயத்திற்கு வருவோம். ஒரு ஒரு கேள்வியாக செல்வோம்.

    முதல் கேள்வி,

    சகோதரி ஆமினாஹ் அவர்கள் தாங்கள் கூறிய //தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது// என்ற இந்த மூன்றில் எந்த காரணத்துக்காக இஸ்லாத்தை தழுவினார்?

    நேரடியாக, மழுப்பாமல் பதில் சொல்லிவிடுங்கள் சகோதரரே...

    நன்றி,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  60. Dear brother Kummi,

    Assalaamu Alaikum (varah)...

    Due to technical issues i could not able to publish your last comment. Could you please sent it again...insha allah...

    or shall i publish it in my name.

    Inconvenience deeply regretted...

    Thanks and Take care,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  61. சகோதரர் கும்மி அவர்கள் எழுதிய கடைசி மறுமொழி சில தொழில்நுட்ப காரணங்களால் பிரசுரிக்க முடியாததால் என் பெயரில் இங்கு பதியப்படுகிறது...



    கும்மி has left a new comment on your post "நாம் அந்நியர்கள்...":

    //உதாரணமாக "கும்மியை போன்று இந்த உலகில் யாரும் இல்லை" என்று சொன்னால் கும்மி என்ற நபரே இந்த உலகில் இல்லை என்று அர்த்தமா? கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா?//

    பிஜேயை பார்த்து பார்த்து பக்கீர் முகமது அல்தாபி அவர்களுக்கு உச்சரிப்பு, வார்த்தைப் பிரயோகம் என்று அனைத்தும் பிஜேவைப் போலவே வந்துவிட்டது. அதுபோல் பிஜே தளத்தை படித்து படித்து, சம்பந்தமே இல்லாமல் உதாரணங்கள் அளிப்பது உங்களுக்குக் கை வந்துவிட்டது. வாழ்த்துகள்.
    ---
    42:11 there is nothing whatever like unto Him
    இந்த வசனத்திற்கான விளக்கம் இத்தாலிய முஸ்லிம் பேரவை தளத்தில் இருந்து
    "This ayah declares Allah to be immune from resembling His creation. It includes that Allah, Ta'ala, is different from the creations in Essence, Attributes, and Deeds. Hence, it shows that Allah, Ta'ala, exists without a place for His existence, because the one who exists in a place would, by nature, be composed of atoms, i.e., he would be a body, occupying a space, and Allah, Ta'ala, is clear of occupying spaces."

    உருவமற்றவன் என்று விளக்கம் கொடுத்துள்ள இன்னொரு தளத்தின் முகவரியையும் கொடுத்திருந்தேன். படித்தீர்களா?

    ஜாகீர் நாயக்கிற்கு (வேறு விஷயத்திற்கு) மெயில் அனுப்பியது போல் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியத் தள நிர்வாகிகளுக்கும், அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று மெயில் அனுப்புவீர்களோ?
    ---
    //அதில் ஒன்றாக இட்டுக்கட்டுபவர் என்றும் நபிகளாரை அழைத்தனர்.//

    ஒத்துக்கொண்டதற்கு நன்றி. முகம்மது வாழ்ந்த காலகட்டத்தில் சிலர் அவரை இட்டுக்கட்டுபவர் என்று கூறினர். ஏன்? இறைவனிடமிருந்து வந்த வசனம் என்று முதலில் ஒன்றைக் கூறுகின்றார். பிறகு, இந்த வசனத்திற்கு பதில் இந்த வசனத்தைக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். இந்த சூழலில்தான் அந்த 16:101 வசனம் 'அருளப்படுகின்றது'.

    எந்த வசனத்திற்கு பதில் எந்த வசனம் இடம்பெற்றதால், இந்த சூழல் ஏற்பட்டது என்று ஆராய்ந்து சொல்வீர்கள் என்று எதிர்ப்பார்கின்றேன்.

    --

    // அவருடைய அறிவியல் அறிவையும் தமிழ் அறிவையும் தாங்கள் தாராளமாக அவர் நடத்துகின்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியில் சென்று கேள்வி கேட்பதின் மூலம் உலகறியச் செய்யலாமே கும்மி?//

    ஏற்கனவே இட்ட பதில்:
    சில ஆண்டுகளுக்கு முன்,(தமுமுகவில் பிளவு ஏற்படும் முன்னர்) நடைபெற்ற ஒரு 'இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்' நிகழ்ச்சியில் பிஜே அவர்கள் பரிணாமம் குறித்து உரையாடினார்கள். அப்பொழுது அவர் பேசியது: "குரங்கிலிருந்து மனுஷன் பொறந்தான்னு சொல்லுறாங்க. இது முழுக்க முழுக்க பொய். இது உண்மையா இருந்தா, இன்னைக்கி மயிலாடுதுறைல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்திச்சு; நேத்து கும்பகோணத்துல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்துச்சு அப்படின்னுதானே நியூஸ் வரணும்? ஏன் வரலே? இதுலேந்து என்ன தெரியுதுனா டார்வின் சொன்னது முழுக்க முழுக்க பொய்."

    அவருக்கு அறிவியல் அறிவு இருக்கிறது என்று இப்பொழுதும் கூறுவீர்களா?

    --
    இங்கே மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால்(மழையின் காரணமாக) தொடர்ச்சியாக பதிலிட முடியவில்லை. மின் இணைப்பு சீரானதும் கடைசி கேள்விகளுக்கு பதிலளிக்கின்றேன்.

    Publish this comment.

    Reject this comment.

    Moderate comments for this blog.

    Posted by கும்மி to எதிர்க்குரல் at Thursday, May 20, 2010



    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  62. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி,
    /* 42:11 there is nothing whatever like unto Him */
    இனி நாம் ஒவ்வொரு கேள்வியாக விவாதித்து விட்டு அடுத்த கேள்விக்கு நகர்வது நல்லது என்று நினைக்கின்றேன். ஏனெனில் நீங்கள் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான பதிலை தராமல் அடுத்த கேள்விகளை நோக்கி மிக லாவகமாக நகர்ந்து விடுகின்றீர்கள். 42:11 இந்த வசனத்தில் எதன் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் சொல்லுகின்றீர்கள்? இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்தோ எந்த ஆதாரமும் காட்டாமல் வெறுமனே வாய்ஜாலத்தை வைத்து நிரூபிக்க முயலுகின்றீர்கள்.

    இறைவன் தன்னைப் பற்றி தனித்தவன், எந்த துணையும் தேவையில்லாதவன் என்ற தன்னுடைய பல தன்மைகளை குர்ஆனில் சொல்லுகின்ற இறைவன் தன்னை உருவமற்றவன் என்று குர்ஆனில் சொல்லியிருக்கின்றானா? இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்லியிருக்கின்றார்களா? இறைவனுக்கு உருவமில்லை என்று நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை இங்கு தர வேண்டும் கும்மி.

    எனவே நீங்கள் இறைவனுக்கு உருவமில்லை என்பதை குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். இது தான் நான் இங்கு உங்களுக்கு நான் வைத்திருக்கின்ற முதல் கேள்வி. இதற்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு அடுத்த கேள்வியை நோக்கி நாம் நகர்வோம் கும்மி.

    ReplyDelete
  63. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

    //உதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள்//


    சகோதரர் பாஸித் சொன்னது போல எங்கள் யாருக்கும் தருமி ஐயாவை புண்படுத்தும் எண்ணம் இல்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அது அவர் மீதான காழ்ப்புணர்ச்சி என்று தாங்கள் கருதுவதால் மேற்கொண்டு இதற்கு விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எங்களை மன்னியுங்கள். தருமி ஐயாவிடமும் நாங்கள் கூறியது அவரை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

    ஒரு மனிதரை தவறாக சித்தரிப்பதாக எண்ணி அதற்கு கண்டனம் தெரிவித்த உங்களது நல்ல உள்ளத்துக்கு எனது பாராட்டுக்கள்.

    ஆனால், சில நாட்களுக்கு முன், படு கேவலமான, அசிங்கமான, நாகரிகமற்ற ஒரு காழ்ப்புணர்ச்சி செயல் ஒரு தளத்தில் நடந்தேறியிருந்தது. அதாவது, கிருத்துவர்களால் பெரிதும் மதிக்கப்பட கூடிய ஏசு கிறிஸ்துவை மிக மோசமாக, பண்பற்ற முறையில் சித்தரித்து அவர் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ண வைத்த பதிவு அது.

    அதற்கு தாங்கள் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

    மாறாக //அங்கு வேலை செய்யும் அல்லது வருகைப் புரியும் சிறுவர்கள் அல்லது இளைஞர்களின் டவுசர்களை, பாதிரிகள் 'கழற்றுவது' தனிப்பதிவாக வருமா?// என்று மறுமொழி போட்டு மகிழ்ந்தீர்கள்.

    ஏசு கிறிஸ்துவை பற்றி அவர்கள் வெளியிட்ட அந்த படம் சரியா தவறா?

    தவறு செய்தால் தான் தவறா?, தவறுக்கு துணை போவதும் தவறுதானே.

    ஒரு உதாரணத்தை காழ்ப்புணர்ச்சியாக கருதி அதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு, ஏசு பற்றிய அந்த படம் ஏன் காழ்ப்புணர்ச்சியாக தெரியவில்லை? தருமி ஐயாவை பற்றி சொன்னது உங்கள் மனதிற்கு கொடுத்த வலியை, அந்த படம் எத்தனை கிருத்துவர்களுக்கு ஆறாத வலியை கொடுத்திருக்கும் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை?

    சொல்ல வேண்டிய விஷயத்தை மனசாட்சியற்ற இது போன்ற படங்கள் இல்லாமல் சொல்ல முடியாதா?

    உங்கள் மீதான என் தனிப்பட்ட மரியாதை அசைக்கப்பட்ட தருணம் அது. நேரடியாகவே சொல்லப்போனால் உங்கள் மீது தவறான எண்ணத்தையே அது உருவாக்கியது.

    தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  64. @ நண்பர் ஆஷிக் அஹமது
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிவராத எனது பதிலை, தங்கள் பெயரில் வெளியிட்டதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  65. @ நண்பர் ஷேக் தாவூத்
    //ஏனெனில் நீங்கள் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான பதிலை தராமல் அடுத்த கேள்விகளை நோக்கி மிக லாவகமாக நகர்ந்து விடுகின்றீர்கள். 42:11 இந்த வசனத்தில் எதன் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் சொல்லுகின்றீர்கள்?//

    புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. இந்த வசனத்திற்கான விளக்கத்தை மீண்டும் அளிக்கின்றேன்.

    "This ayah declares Allah to be immune from resembling His creation. It includes that Allah, Ta'ala, is different from the creations in Essence, Attributes, and Deeds. Hence, it shows that Allah, Ta'ala, exists without a place for His existence, because the one who exists in a place would, by nature, be composed of atoms, i.e., he would be a body, occupying a space, and Allah, Ta'ala, is clear of occupying spaces."

    உங்கள் பார்வைக்கு இதே மாதிரியான வசனங்கள்
    112:4 And there is none like unto Him.
    மேலும் ஒரு வசனம்
    2:115 To Allah belong the east and the West: Whithersoever ye turn, there is the presence of Allah. For Allah is all-Pervading, all-Knowing.

    omnipresent அதாவது எங்கும் வியாபித்து இருக்கும் ஒன்றிற்கு உருவம் இருக்காது

    இன்னும் விளக்கம் வேண்டுமா? ஹாருன் யாஹ்யா சொல்கிறார்.

    He cannot be any material being present within the universe, because His must be a will that existed before the universe and created the universe thereupon
    http://www.harunyahya.com/A_tr.php

    அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று எண்ணுவது தவறான நம்பிக்கை என்று Correct Islamic Faith தளம் சொல்லுகிறது,

    http://www.correctislamicfaith.com/howallahviewssalafis.htm

    அந்த வசனங்களுக்கான விளக்கங்கள் இன்னும் சில தளங்களில்
    http://www.central-mosque.com/aqeedah/where.htm

    http://alsunna.org/The-Hanbali-Salafi-Proofs-in-Clearing-Allah-from-Being-a-Body-or-contained-in-a-Place.html

    எப்பொழுதும் நீங்கள்தான் Home Work கொடுப்பீர்கள். இம்முறை ஒரு மாற்றத்திற்கு நான் கொடுத்துள்ளேன். :-) (Jus' Kidding)

    இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடான அல்லா உருவமற்றவன் என்பதற்கான வசனங்களையும், அவற்றிற்கான விளக்கங்களையும் இங்கே கொடுத்துவிட்டேன். இதே நம்பிக்கைதான் உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் (பிஜேயின் வழித்தோன்றல்கள் தவிர) கொண்டிருக்கின்றன. இல்லை மூன்று கால் மட்டுமே என்று வாதம் செய்வீர்களானால், உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய அமைப்புகளையும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பீர்களோ?

    உங்கள் நிலை இன்னொரு கேள்வியையும் எழுப்புவதால், அதுவும் இங்கே.

    அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்றால், நீங்கள் உருவத்தைத்தான் வணங்குகின்றீர்களா? உருவ வழிபாடு கூடாது என்பது ஒரு வேளை இஸ்லாமியக் கோட்பாடு இல்லையா?

    புதன் அன்று சந்திப்போம்.

    ReplyDelete
  66. @ நண்பர் ஆஷிக் அஹமது

    //அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நீங்கள் என்ன செய்வீர்கள், பாவம். பரிணாமவியலுக்கு ஆதாரங்கள் இருந்தால் தானே எடுத்து வருவதற்கு....//

    அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களையே, நீங்கள் ஆதாரங்கள் இல்லை என்னும்போது, Intelligent Design போன்று, அறிவியலை ஏற்கக்கூடாது என்னும் இன்னொரு கொள்கையும் கைகொண்டு விட்டீர்கள் போலும். வாழ்த்துகள்.

    //சகோதரி ஆமினாஹ் அவர்கள் தாங்கள் கூறிய //தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது// என்ற இந்த மூன்றில் எந்த காரணத்துக்காக இஸ்லாத்தை தழுவினார்? //

    நண்பரே மீண்டும் நான் கூறியவற்றைப் படித்துப் பாருங்கள். 'புதிதாக' ஆட்களை சேர்ப்பதற்கு, தான் அடைந்த பலன்களை பட்டியலிடுவார்கள் என்று கூறினேன்.
    "அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள்."
    "அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். "

    கவனிக்கவும் 'மாறியவர்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஆமினா அவர்களைப் பற்றி பேசும்போது அனைவரும் மறக்காமல் கூறுவது அவர் இறைவனின் பரிசால் கருவுற்றார் என்பது. வாசிப்பவர்கள் புரிந்துக் கொள்ளட்டும் .

    //மாறாக //அங்கு வேலை செய்யும் அல்லது வருகைப் புரியும் சிறுவர்கள் அல்லது இளைஞர்களின் டவுசர்களை, பாதிரிகள் 'கழற்றுவது' தனிப்பதிவாக வருமா?// என்று மறுமொழி போட்டு மகிழ்ந்தீர்கள்.//

    பாதிரிகள் அதுபோன்ற செயல்களை செய்வதே இல்லை என்கிறீர்களா? அல்லது அப்படி செய்தாலும் அது தவறு இல்லை என்கிறீர்களா? மதத்தைப் போர்வையாக்கி நடைபெறும் அனைத்து சீர்கேடுகளையும் நான் எதிர்க்கிறேன்.

    //உங்கள் மீதான என் தனிப்பட்ட மரியாதை அசைக்கப்பட்ட தருணம் அது. நேரடியாகவே சொல்லப்போனால் உங்கள் மீது தவறான எண்ணத்தையே அது உருவாக்கியது. //

    நேரடியாக சொன்னதற்கு நன்றிகள் நண்பரே!

    //தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...//
    cliché வாக மாறிவிட்டதுபோல் உள்ளது நண்பரே.

    புதன் அன்று சந்திப்போம்.

    ReplyDelete
  67. //அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்றால், நீங்கள் உருவத்தைத்தான் வணங்குகின்றீர்களா? உருவ வழிபாடு கூடாது என்பது ஒரு வேளை இஸ்லாமியக் கோட்பாடு இல்லையா?//

    இதே தான் நானும் கேட்கனும்னு நினைச்சேன்!

    மிஸ்லீம் அல்லான்னு சொல்றான், கிறிஸ்டீன் கர்த்தரேங்கிறான், ஒருத்தன் சிவனேங்கிறான், ஒருத்தன் பெருமாளேங்கிறான்!.

    உருவமுள்ள கடவுள் தானே, பின் எப்படி உங்களை தவிர மற்றவர்கள் எல்லாம் காஃபிர்கள்!

    ReplyDelete
  68. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் கும்மி,
    நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிகின்றதா இல்லையா சகோதரரே? இறைவனுக்கு உருவமில்லை என்று குர்ஆனில் எந்த வசனத்திலாவது இருக்கின்றதா அல்லது இறைத்தூதர் நபிகள் நாயகம் தான் அவ்வாறு எங்காவது சொல்லியிருக்கின்றார்களா? நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனத்திலாவது இறைவனுக்கு உருவமில்லை என்று பொருள் கொள்ள முடியுமா? என்னுடைய இந்த கேள்விக்கு நீங்கள் நேரடியாக பதிலளிக்காத வரை அடுத்த கேள்விக்கு நாம் நகர போவதில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி ஒரு கேள்வியை முடித்து விட்டு தான் அடுத்த கேள்விக்கு நாம் கடந்து செல்ல முடியும். நீங்கள் எழுப்பிய மற்ற கேள்விகளுக்கு இறைவனின் உருவம் குறித்த கேள்வியை முடித்து விட்டு செல்வதே உத்தமம் கும்மி. எனக்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்தே நீங்கள் ஆதாரத்தை தர வேண்டும்.

    இறைவன் தன்னைப் பற்றி தனித்தவன், எந்த துணையும் தேவையில்லாதவன் என்ற தன்னுடைய பல தன்மைகளை குர்ஆனில் சொல்லுகின்ற போது இறைவன் தன்னை உருவமற்றவன் என்று எங்கேயாவது குர்ஆனில் சொல்லியிருக்கின்றானா? இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்களாவது இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கேயாவது சொல்லியிருக்கின்றார்களா? இறைவனுக்கு உருவமில்லை என்று நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை இங்கு தர வேண்டும் கும்மி.

    எனவே நீங்கள் இறைவனுக்கு உருவமில்லை என்பதை குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும் கும்மி.

    ReplyDelete
  69. @ ஷேக் தாவூது

    நண்பா, கடைசியா போட்டிருக்க கமென்ட ஏற்கனவே பேஸ்ட் பண்ணிட்டீங்க. :-)

    ReplyDelete
  70. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு சகோதரர் கும்மி,
    நான் குர்ஆன் ஹதீசிலிருந்து உங்களிடம் ஆதாரத்தை கேட்டேன். அப்படி ஏதாவது ஒரு ஆதாரத்தை நீங்கள் எனக்கு இங்கு கொடுத்திருக்கின்றீர்களா? உங்களால் குர்ஆன் ஹதீசிலிருந்து ஆதாரம் தர முடிந்தால் கொடுங்கள் கும்மி. அப்படி நீங்கள் ஆதாரம் தருவீர்களேயாயின் நம்முடைய கருத்துப் பரிமாற்றத்தை தொடரலாம். அவ்வாறு ஆதாரம் கொடுக்க முடியாத பட்சத்தில் உங்களுடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாமென்று தாழ்மையுடன் உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  71. @பி.ஏ.ஷேக் தாவூத்
    Home Work செய்யவில்லை என்பதை மிகவும் நாசூக்காகத் தெரிவித்துவிட்டீர். நன்றி!

    ReplyDelete