அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
நிச்சயமாக இந்த தலைப்பு மிகைப்படுத்தப் பட்டதல்ல...
ஆம். பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மிகச் சிறந்தது. இந்த தொடரின் ஒவ்வொரு பதிவிலும் அதை உணர்ந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்.
பரிணாமம் குறித்த இந்த தொடர் பதிவுகளின் நோக்கம், தலைப்பை நியாயப்படுத்துவது தான்.
"This is one of the worst cases of scientific fraud. It’s shocking to find that somebody one thought was a great scientist was deliberately misleading. It makes me angry"
"மோசமான அறிவியல் பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறந்த விஞ்ஞானி என்று கருதப்பட்ட ஒருவர் வேண்டுமென்றே இப்படி செய்தது அதிர்ச்சியை தருகிறது. என்னை இது கோபப்பட வைக்கிறது"
இது, "The Times" நாளிதழில் 11th August, 1997ல் ஒரு பிரபல பரிணாமவியலாளர் குறித்து வெளிவந்த செய்தி. பரிணாமத்திற்கு ஆதரவாக அவர் எடுத்து வைத்த ஆதாரம் மிகப் பெரிய பித்தலாட்டம் என்று தெரிய வந்த போது வெளியானச் செய்தி.
நீங்கள் பரிணாமத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இது போன்ற பித்தலாட்டங்களை, மோசடிகளை, பொய் புரட்டுக்களை பார்க்கலாம்.
இவ்வளவு ஏன்? ஒரு பரிணாமவியலாளர் அவர் செய்த மோசடி அம்பலப்படுத்த பட்ட போது என்ன தெரியுமா கூறினார்?, நான் மட்டுமா இப்படி செய்தேன். இதற்கு முன் இது போன்றவற்றை விஞ்ஞானிகள் செய்ததில்லையா? என்று கேட்டு அதிர்ச்சியை உண்டாக்கினார்.
யார் இவர்கள்? இவர்கள் செய்த பித்தலாட்டங்கள் என்னென்ன?, இது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதும் இந்த பதிவுகளின் மற்றொரு நோக்கம். இன்ஷா அல்லாஹ்...
இந்த பதிவுகள் யாருக்கு உபயோகமாக இருக்கப் போகின்றன (இன்ஷா அல்லாஹ்)?
யாருக்கென்றால், அவர்கள் பரிணாமவியலை நம்புபவர்கள். அதே சமயம், தெளிவான, நியாயமான, அறிவியல் பூர்வமான வாதங்கள் பரிணாமவியலுக்கு எதிராக வைக்கப்பட்டால், அதனை நிராகரிக்காமல் பரிசீலிப்பார்கள். அவர்கள் தான் இந்த பதிவுகளின் இலக்கு.
பரிணாமத்தை நம்பாதவர்களுக்கு பரிணாமம் குறித்த அவர்களது கருத்துக்களை இந்த பதிவுகள் மேலும் வலுப்படுத்தலாம். இன்ஷா அல்லாஹ்.
இந்த பதிவுகளை அப்படியே நம்பாமல், இது சரியா என்று நீங்கள் ஆராயுங்கள். அப்படி சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த இந்த செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். இன்ஷா அல்லாஹ்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
"இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டாம்" --- குர்ஆன் 5:2
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பு சகோதரன் ஆஷிக் ,
தலைப்பே பல செய்திகளை சொல்லி விடுகின்றது. அடுத்து என்ன வர போகின்றது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நான் அரேபிய இரவுகள் கதைகளை படிக்க ஆசைப் பட்டிருக்கின்றேன். ஆனால் படித்ததில்லை ஆஷிக். அதையும் தாண்டிய கதைகளாக பரிணாமவியல் கதைகள் இருக்கும் என்று நம்புகின்றேன். தொடரட்டும் தங்களின் பணி.
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் ஆஷிக்,
ReplyDeleteஅடி சக்கை... இத..இத...இதத்தான் எதிர்பார்த்தேன்...
அவர்களின் பித்தலாட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்துவிடுங்கள்... முக்கியமாக அவர்கள் ஆதாரம் என சொல்லும் படிமன்களில் அவர்கன் செய்த பிராடுகள்...
//நீங்கள் பரிணாமத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் இது போன்ற பித்தலாட்டங்களை, மோசடிகளை, பொய் புரட்டுக்களை பார்க்கலாம்//
அங்கொன்றும் இன்ககொன்றுமாக படித்திருந்தாலும் மொத்தமாய் ஒரே இடத்தில் படிக்க ஆவலாய் உள்ளேன், சகோதரர்...
தலைப்பே அட்டகாசம்...!
Evolution St(he)ory > Harry Potter Stories - I
{ ஸ்டோரிக்கும் தியரிக்கும் இணைத்து பிறாக்கட் போடுவதில் இடமாறி உள்ளது என நினைக்கிறேன்.. st(the)ory .. இது சரியா?}
Dear Brother mohammed ashik,
ReplyDeletewa alaikum salaam (varah)...
//{ஸ்டோரிக்கும் தியரிக்கும் இணைத்து பிறாக்கட் போடுவதில் இடமாறி உள்ளது என நினைக்கிறேன்.. st(the)ory .. இது சரியா?}//
what I wrote is correct. Instead of 2 't's i made it appear once. st(he)ory, story as well as theory...
Thanks and take care...
Your brother,
Aashiq Ahamed a
//Evolution St(he)ory > Harry Potter Stories - I//
ReplyDeleteசுயசொறிதல் என்பது இதுதானோ?
பதிவிற்கு தொடர்பில்லாதது. இருப்பினும் வாசிப்புக்காக
ReplyDeletehttp://today.msnbc.msn.com/id/37256799/ns/technology_and_science-science/
Synthetic Biology பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். மறுப்புத் தொடர் எழுத வேண்டி வரலாம். :-)
கும்மி ஐயா.. நீங்களும் ஆஷிக்கும் பரிணாமவியலைப் பற்றி அழகிய முறையில் விவாதிப்பீர்கள் நாமும் நாலு விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் அவ்வப்போது வந்து தலையை காட்டுவதோடு சரி.. விவாதத்தை தொடங்குங்கள் ஐயா.
ReplyDelete//விவாதத்தை தொடங்குங்கள் ஐயா. //
ReplyDeleteஅறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டவைகளையே ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றார் என்னும்பொழுது அவ்வப்போது வந்து சிரித்துவிட்டுத்தான் செல்ல முடியும்.
பரிணாமவியல் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்ள துறைசார்ந்தவர்களான தருமி அய்யா மற்றும் கையேடு ஆகியோர்களின் பதிவுகளை பாருங்கள்
http://dharumi.blogspot.com/2010/05/1.html
http://kaiyedu.blogspot.com/2010/04/blog-post.html
http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html
அன்பு சகோதரர் உதயம் அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
//கும்மி ஐயா.. நீங்களும் ஆஷிக்கும் பரிணாமவியலைப் பற்றி அழகிய முறையில் விவாதிப்பீர்கள் நாமும் நாலு விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் அவ்வப்போது வந்து தலையை காட்டுவதோடு சரி//
என்னை பொறுத்தவரை சகோதரர் கும்மி அவர்கள் வந்து போகவில்லை. விவாதித்து கொண்டுதான் இருக்கிறார். எனக்கும் அவருக்கும் பரிணாமவியல் குறித்து நடந்த உரையாடல் கீழ்காணும் லிங்கில்...
http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html
இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ