Monday, July 19, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - IV




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 



Punctuated Equilibria


இந்த பதிவிற்கு செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:
1.தொல்லுயிரியலாளர் - உயிரினப்படிம (fossils) ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
   
          பழமையான உயிரினப்படிமங்களில் காணப்படும் சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள், எப்படி எந்தவொரு பரிணாம வளர்ச்சியும் இல்லாமல் திடீரென தோன்றியிருக்கின்றன என்று சென்ற பதிவில் பார்த்தோம். 

பரிணாமத்தை உறுதிப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் உயிரினப்படிமங்கள், பரிணாமவியல் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து வருகின்றன. 

சிறுகச் சிறுக உயிரினங்கள் (Gradualism) வேறொன்றாக மாறின என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவை தரவில்லை. இந்த ஏமாற்றம் தான் பரிணாமவியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

அப்படி ஏற்பட்ட குழப்பம் தான் "Punctuated Equilibria" என்ற கோட்பாட்டை, ஸ்டீபன் ஜே குட் (Stephen Jay Gould) அவர்கள் முன்வைக்க காரணமாய் அமைந்தது.          


ஸ்டீபன் ஜே குட் (1942-2002), சிறந்த தொல்லுயிரியலாளராக (Paleontologist) அறியப்பட்டவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (American Museum of Natural History) உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறப்புமிக்க விருதுகளை பெற்றவர். இவரது பெயரில் பரிணாமவியல் கழகம் (The Society for Study of Evolution) ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.     




பரிணாமவியல் உலகில் நீங்கா புகழை பெற்றுள்ள இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இதற்கு காரணம் இவர் முன்வைத்த "punctuated Equilibria" என்ற டார்வினின் கூற்றுக்கு எதிரான கோட்பாடு.

டார்வினின் கூற்று என்ன?

உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் ஆதாரங்கள் டார்வினின் இந்த கூற்றுக்கு எதிராக உள்ளதாக சொல்லி தன் கோட்பாட்டை முன் வைத்தார் ஜே குட்.
  
Puntuated Equilibria என்றால் என்ன?, அந்த கோட்பாடு எந்த அளவிற்கு உண்மை? என்பது போன்ற கேள்விகளுக்கு (ஆழமாக சென்று) விடைக்காண முயலும் பதிவல்ல இது. மாறாக அந்த கோட்பாடு கொண்டு வரப்பட்டதற்கு என்ன காரணம் என்று அலசும் முயற்சியே இது. 

டார்வின் தன்னுடைய கோட்பாட்டை முன்வைக்கும் போதே உயிரினப்படிமங்கள் தன் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதை அறிந்திருந்தார். இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டும் உள்ளார். ஆனால், தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் மிகக்குறைவே என்றும், எதிர்காலத்தில் அதிக அளவிலான உயிரினப்படிமங்கள் கிடைக்கும் போது, உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிடும் என்றும் நம்பினார்.


டார்வினுடைய நம்பிக்கை இன்றளவும் நம்பிக்கையாகவே உள்ளது.

அன்று டார்வினுக்கு பரிணாமவியலை உறுதிப்படுத்தும் உயிரினப்படிமங்கள் கிடைக்கவில்லை, இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் அது கிடைக்கவில்லை.

உயிரினங்கள் திடீரென படிமங்களில் தோன்றியிருப்பது (Abrupt Appearance), அவை சிறுகச் சிறுக மாற்றமடைந்ததற்கான ஆதாரங்கள் உயிரினப்படிவங்களில் தென்படாதது மற்றும் பல உயிரினங்கள் நீண்ட காலமாக மாற்றமடையாமல் இருப்பது (stasis) போன்றவற்றை சுட்டிக்காட்டிய ஸ்டீபன், தன்னுடைய "Puntuated Equilibria" கோட்பாட்டை,  நைல்ஸ் எல்ரெச் (Niles Eldredge, American Museum of Natural History) என்பவரோடு சேர்ந்து 1972 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார்.     


இந்த கோட்பாட்டின் படி, உயிரினங்களில், பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறைந்த கால இடைவெளியில் ஏற்பட்டு அவை உருவாகியிருக்கவேண்டும். பிறகு எந்தவொரு மாற்றமும் அடையாமல் அவை தொடர்ந்திருக்க வேண்டும். இப்படி உருவான உயிரினங்களில் (தனிமைப்படுத்தப்பட்ட) சிறு பகுதியினருக்கு மறுபடியும் பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறுகிய காலத்தில் ஏற்பட்டு மேலும் பல உயிரினங்கள் உருவாகி எந்தவொரு மாற்றமும் அடையாமல் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படியாக இந்த முறை தொடர்ந்து பல்வேறு உயிரினங்களும் வந்திருக்கவேண்டும். 


Punctuated equilibrium predicts that a lot of evolutionary change takes place in short periods of time tied to speciation events --- evolution.berkeley.edu 

சுருக்கமாக சொல்லப்போனால், படிக்கட்டில், எப்படி படிகள் உயர்ந்து, பிறகு சமமாக அமைந்து, பிறகு மறுபடியும் எழும்புகின்றனவோ அப்படி. தான் உயிரினங்கள் வந்திருக்க வேண்டும் என்று விளக்கியது இந்த கோட்பாடு.




சிறிய அளவிலான (தொகையிலான) உயிரினங்கள் விரைவாக மாற்றமடைந்ததால் அவை உயிரினப்படிமங்களில் தென்படவில்லை என்பது இந்த கோட்பாட்டின் நிலை. 

உலகின் மிகச் சிறந்த தொல்லுயிரியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் ஜே குட் அவர்கள், உயிரினப்படிமங்கள் எந்த அளவு டார்வினின் கூற்றை பொய்யாக்குகின்றன என்பதை நன்கு அறிந்திருந்தார். அதனாலேயே தன்னுடைய கோட்பாடு, டார்வினின் "சிறுகச் சிறுக உயிரினங்கள் மாற்றமடைந்து வந்திருக்க வேண்டுமென்ற" கூற்றிற்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டார்.

"Paleontologists have paid an enormous price for Darwin's argument.....The history of most fossil species includes two features particularly inconsistent with gradualism:  
1. Stasis.  Most species exhibit no directional change during their tenure on earth. They appear in the fossil record looking much the same as when they disappear; morphological change I usually limited and directionless.  
2. Sudden appearance. In any local area, a species does not arise gradually by the steady transformation of its ancestors; it appears all at once and 'fully formed"  Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182.
தொல்லுயிரியலாளர்கள் டார்வினின் வாதத்திற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டனர்.... பெரும்பாலான உயிரினப்படிமங்களில் காணப்படும் இரண்டு விஷயங்கள், "சிறுகச் சிறுக" உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்ற கருத்துக்கு முரணாக உள்ளன.
1. Stasis (மாற்றமடையாதது) . பெரும்பாலான உயிரினங்கள், பூமியில் இருந்த காலம்வரை மாற்றமடையவில்லை. அவைகள் உயிரினப்படிமங்களில் எப்படி தோன்றினவோ அப்படித்தான் மறையும் போதும் இருந்திருக்கின்றன.
2. Sudden Appearance (திடீர் தோற்றம்). ஒரு உயிரினம், தான் வாழ்ந்த இடத்தில் தன் மூதாதையரில் இருந்து சிறுகச் சிறுக மாற்றமடைந்து வரவில்லை. அது திடீரென முழுமையாக தோன்றியிருக்கின்றது. --- (Extract from the original quote of) Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182. 
           
ஜே குட் அவர்களும் பரிணாமவியலாளர் தான். அவரும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுவான மூதாதையர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான். ஆனால் டார்வின் மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் (முக்கிய) கருத்தான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாற்றமடைந்து வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்பதை நிராகரித்தவர்.  

It is gradualism we should reject, not Darwinism - Gould, Stephen Jay 1980. "The Episodic Nature of Evolutionary Change" The Panda's Thumb. New York: W. W. Norton & Co., p. 181-182.

தொல்லுயிரியலாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு ஜே குட் அவர்களின் கோட்பாடு உற்சாகத்தை தந்தது. பலமாக இந்த கோட்பாட்டை ஆதரித்தார்கள்.

ஏன்? 

காரணம் எளிமையான ஒன்று தான். ஜே குட் அவர்களின் கோட்பாடு படி தான் உயிரினப்படிம ஆதாரங்கள் இருந்தன, டார்வினின் கூற்று படியல்ல.    

"The Eldredge-Gould concept of punctuated equilibria has gained wide acceptance among paleontologists.....
The punctuated equilibrium model has been widely accepted, not because it has a compelling theoretical basis but because it appears to resolve a dilemma" --- Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.
எல்ரெச் மற்றும் குட் ஆகிய இருவரின் கோட்பாடான "punctuated Equilibria" தொல்லுயிரியலாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.....
இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அது தீர்க்கமான வாதங்களை முன்வைத்தது என்பது காரணமல்ல, (பரிணாமத்தில்) இருந்த குழப்பத்தை தீர்ப்பதாக தெரிந்ததால் தான் --- (Extract from the original quote of) Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.      

அது என்ன குழப்பம்?, 

வேறென்ன....டார்வினின் கூற்றுப்படி (உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதாக) இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லையே என்ற குழப்பம் தான்.  

"Paleontologists ever since Darwin have been searching (largely in vain) for the sequences of insensibly graded series of fossils that would stand as examples of the sort of wholesale transformation of species that Darwin envisioned as the natural product of the evolutionary process. Few saw any reason to demur - though it is a startling fact that, of the half dozen reviews of the On the Origins of Species written by paleontologists that I have seen, all take Darwin to task for failing to recognize that most species remain recognizably themselves, virtually unchanged throughout their occurrence in geological sediments of various ages." --- Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57. 
நீண்ட காலங்களாகவே தொல்லுயிரியலாளர்கள், டார்வினின் கற்பனையான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கூற்றிற்கான தொடர் நிகழ்வுகளை தேடி வருகின்றனர் (ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது)...
ஆனால் வியப்பளிக்கும் உண்மை என்னவென்றால், Origin of Species குறித்து நான் பார்த்த அரை டஜன் விமர்சனங்களில், அவற்றை எழுதிய தொல்லுயிரியலாளர்கள், பெரும்பாலான உயிரினங்கள் தாங்கள் இருந்த காலங்களில் மாற்றமடையாமல், தாங்களாகவே இருந்துள்ளன என்பதை டார்வின் உணரத் தவறியதாக விமர்சித்துள்ளனர் --- (Extract from the original Quote of) Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.         
      
இந்நேரம் நீங்கள் ஒன்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, ஒரு கோட்பாடை முன்வைத்து விட்டு அதற்கான ஆதாரத்தை தேடுகிறார்கள் டார்வின் ஆதரவாளர்கள். ஜே குட் அவர்களோ, இருக்கும் ஆதாரத்தை வைத்து அதற்கேற்றார்போல் ஒரு கோட்பாடை உருவாக்கி கொண்டார்.    

படிக்கும் உங்களுக்கு இது நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கும். 


டார்வின் தன் கோட்பாட்டை விளக்க ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்பது அது. இதற்கு ஆதாரங்கள் இல்லையென்று மற்றொரு பிரபல பரிணாமவியலாளர் வேறொரு கோட்பாட்டை முன் வைக்கிறார். உயிரினங்கள், குறுகிய காலத்தில் விரைவாக மாற்றமடைந்து பின்னர் நீண்ட காலங்களுக்கு மாற்றமைடையாமல் இருந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறது இந்த கோட்பாடு.


நேரெதிர் திசையில் பயணிக்கும் இந்த இருவரது கருத்தில் எது சரி? எது தவறு?  

ஜே குட் அவர்களது கோட்பாடு சரியென்றால் டார்வினின் கூற்று தொலைந்து போய் விடும். அதே சமயம், டார்வினின் கூற்று உண்மையென்றால், அதற்கு எதிரான ஆதாரங்களைத் தான் உயிரினப்படிமங்கள் கொடுக்கின்றன என்ற ஜே குட் அவர்களின் வாதங்கள் பொய்யாகிவிடும்.    

பரிணாமவியலாளர்களிடையே மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது இந்த கோட்பாடு.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்திருக்க வேண்டுமென்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்தால், பரிணாமவியல், காலப்போக்கில் அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜே குட் எண்ணியிருக்க வேண்டும். தன்னுடைய கோட்பாடு, இருக்கும் ஆதாரங்களோடு ஒத்துப்போவதால் பரிணாமத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரலாம் என்று நம்பினார்.

ஆக, தன்னுடைய கோட்பாட்டின் மூலம்,
  • உயிரினங்கள் திடீரென உயிரினப்படிமங்களில் தோன்றியது, 
  • அவைகள் சிறுகச் சிறுக மாறியதற்கு உயிரினப்படிவங்களில் ஆதாரங்கள் இல்லாதது, 
  • உயிரினங்கள் பல காலங்களாக மாற்றமடையாமல் இருப்பது,
போன்ற பரிணாமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக நம்பினார் ஜே குட்.

ஆனால், அவருடைய முயற்சி குழப்பங்களை தீர்க்காமல் அவற்றை அதிகமாக்கி பரிணாமவியலாளர்களிடையே பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. அவர்களிடம் உள்ள குழப்பங்களை வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஜே குட் அவர்களது கோட்பாட்டை விமர்சிக்க தொடங்கிய பரிணாமவியலாளர்கள், அந்த கோட்பாடு எந்த அளவு அறிவியலின் மற்ற துறைகளுக்கு முரணாக உள்ளது என்று விளக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் பரிதாபம், தாங்கள் ஆதரிக்கும் டார்வினின் கோட்பாட்டிற்கும் (ஜே குட் சொல்லுவது போல) ஆதாரங்களில்லை, அதுவும் அறிவியலில்லை என்பதை ஏனோ வசதியாக மறந்து விட்டனர்.

நான் முன்னமே சொன்னது போன்று, இந்த பதிவு punctuated Equilibria என்றால் என்னவென்று தெளிவாக விளக்கும் பதிவல்ல. மாறாக, அந்த கோட்பாடு ஏன் முன்வைக்கப்பட்டது என்று ஆராயும் முயற்சி தான் இது.

நீங்கள் இந்நேரம் அறிந்துக்கொண்டிருக்கலாம். டார்வினின் கூற்று தவறு என்பதை உயிரினப்படிம ஆதாரங்கள் மூலம் உணர்ந்த ஒரு பரிணாமவியலாளரின் செயல் தான் "puctuated Equilibria" என்ற கோட்பாடு. 

இப்போது நான் பரிணாமவியலாளர்களிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகள்,            

  • இதுவரை கண்டெடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள், உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும் அவைகளில் பெரும்பாலானவை மாற்றமடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நீங்கள் ஏற்கின்றீர்களா? மறுக்கின்றீர்களா? 
  • ஜே குட் மற்றும் நைல்ஸ் எல்ரெச் ஆகிய இருவரின் கோட்பாடான "puntuated Equilibria" கொண்டுவரப்பட்டதற்கு டார்வினின் கூற்று தவறு என்பதுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா? இல்லையா? 
  • டார்வின் மற்றும் ஜே குட், இந்த இருவரது கோட்பாட்டில் எது சரி? எது தவறு?.  இதே கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால், உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாற்றடைந்து வேறொன்றாக மாறினவா? அல்லது குறுகிய கால இடைவெளியில் விரைவாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறி பிறகு மாற்றமடையாமல் தொடர்ந்தனவா?     
  • ஜே குட் அவர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் டார்வினின் "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
  • "இல்லை, இல்லை, டார்வின் சொன்னது தான் சரி" என்றால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் அவரது கருத்துக்கு எதிராக உள்ளனவே? அதற்கு உங்களது பதிலென்ன?
  • மேற்கண்ட கேள்விக்கு, "உயிரினப்படிமங்கள் இன்னும் முழுமையான அளவில் கிடைக்கவில்லை , அதனால் தான் பரிணாமம் தென்படவில்லை" என்று நீங்கள் கூறினால், பிறகு எந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து நாங்கள் பரிணாமத்தை நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
  • பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காத போது, சென்ற காலத்தில் இப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்படி நம்பமுடியும்?            
  • இன்றைய நிலவரப்படி, வரலாற்று ஆதாரங்கள் "உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும், அவை சிறுகச் சிறுக வேறொன்றாக மாறவில்லை" எனவும் சொல்கின்றன. இன்றைய ஆதாரங்கள் இப்படி சொல்கின்ற நிலையில் இவற்றை நம்புவது சரியா? அல்லது ஆதாரங்களே இல்லாத, நீங்கள் சொல்கின்ற கொள்கையை நம்புவது சரியா?     
  • எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பின்னப்பட்ட ஒரு கருத்தை கதை என்று கூறுவது ஏற்புடையதா? அல்லது அறிவியல் என்று கூறுவது ஏற்புடையதா?

பரிணாமவியலில் உள்ள ஓட்டைகள் காலப்போக்கில் தங்களுடைய அளவிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

ஓட்டைகள் பல நிறைந்த இப்படியான ஒரு கோட்பாட்டை நம்ப மறுப்பவர்களை "அறிவியலை எதிர்க்கின்றார்கள்" என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை பரிணாமவியலாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.   

ஆதாரங்களை தெளிவாக கொடுத்த பிறகு அதை நம்பவில்லை என்றால் பரிணாமவியலாளர்கள் சொல்லுவதில் நியாயம் இருக்கிறது. வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கான எந்த ஆதாரத்தை கொடுத்து விட்டீர்கள் நாங்கள் நம்பாமல் இருப்பதற்கு?

பரிணாமத்தை நம்பும் சகோதரர்கள், இனி மேலும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பரிணாமவியலை நம்பாமல் (உதாரணத்துக்கு, குதிரை பரிணாமம் அடைந்த கதை, ஊர்வன பறவையான கதை (Archaeopteryx)...etc) தாங்களாக இந்த கோட்பாட்டின் உண்மை நிலையை ஆராய்ந்தறிய முன்வர வேண்டும். பரிணாமவியலுக்கும், அறிவியலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த நிலை வராதவரை பரிணாமவியலை "அறிவியல்" என்று கருதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

இன்ஷா அல்லாஹ், தொடரும்....

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக....ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


பரிணாமம் தொடர்பான மற்ற பதிவுகள்:



My sincere thanks to:
1. Stephen Jay Gould.
2. Niles Eldredge.
3. evolution.berkeley.edu

References: 
1. Punctuated Equilibria: An alternative to Phyletic Gradualism - Stephen Jay Gould and Niles Eldredge.
2. The Panda's Thumb - Stephen J. Gould. 1980, p. 181-182.
3. Paleontologists Confronting Macroevolution - Ricklefs, Robert E., Science, vol. 199, 1978, p. 59.
4. "Progress in Evolution? - Niles Eldredge, New Scientist, vol. 110, 1986, p. 55.
5. Stephen Jay Gould - Wikipedia.
6. Phyletic Gradualism - Wikipedia.
7. Punctuated Equilibrium Theory - Appalachian State university, last updated on 13th April 2006.
8. Punctuated Equilibrium - Principia Cybernetica Web, F.Heylinghen, dated 22nd July 1999.
9. The Structure of Evolutionary Theory  - Stephen Jay Gould
10. The Theory of Punctuated Equilibrium - Academy of Achievement, revised on 17th November, 2009.
11. Punctuated Equilibria - Talkorigins.org, Wesley Elsberry, last updated 4th February 1996.
12. The Quote Mine Project Or, Lies, Damned Lies and Quote Mines, "Sudden Appearance and Stasis" - Talkorigins.org (Quote # 14).
13. The Stephen Jay Gould Prize - The society for the Study of Evolution.
14. Stephen Gould and the Neo-Darwinians - Science and You, Henry Mulder.
15. Evolution as Fact and Theory - Stephen Jay Gould, (originally appeared in Discover 2 (May 1981): 34-37) and re-published as Hen's Teeth and Horse's Toes, New York: W. W. Norton & Company, 1994, pp. 253-262.
16. Stasis - Wikipedia.
17. More on Punctuated Equilibrium - evolution.berkeley.edu


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ







Friday, July 2, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - III



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
  

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில் நாம் "பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life)" குறித்து பார்க்கவிருக்கின்றோம்.   

பதிவிற்கு செல்லும் முன் பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.  

1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).

உதாரணத்துக்கு, ஒரு வகையான நிலவாழ் உயிரினம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவைகளுக்கு பறக்கும் தேவை ஏற்படுகிறது. (அவைகளில் பகுதியோ அல்லது முழு இனமோ) பறக்க முயற்சிக்கிறது. இப்படியாக பரம்பரை பரம்பரையாக முயற்சிக்கையில், சிறகுகள் (மற்றும் இதர மாற்றங்கள்) சிறிது சிறிதாக ஒவ்வொரு தலைமுறையாக வளர்ந்து, 100 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 1000 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 10000 பரம்பரைகளுக்கு பிறகோ etc etc, அந்த உயிரினம் பறக்கும் சக்தியை பெற்று பறவையாகி விடும். 

3. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    
Fossils are the remains or evidence of animals and plants which have been preserved naturally - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.   


4. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

5. செல் (Cell) -  உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. ஒரே ஒரு செல் கொண்ட உயிரினங்கள் மற்றும் பலசெல் கொண்ட உயிரினங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. பலசெல் உயிரினங்களான நம் உடம்பில் மட்டும் சுமார் 60-90 ட்ரில்லியன் செல்கள் (1 trillion = 100,000 crores or 1000 Billion) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Cells are the building blocks of life - "Ask a Biologist" Website

பதிவிற்கு செல்வோம்... 

பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution): 

துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒருமித்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. 

அதனால் நேரடியாக பரிணாமவியல் என்ன சொல்ல வருகிறது என்று கருத்துக்கு சென்று விடுவோம். 

பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது)  ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

பிறகு அவற்றிலிருந்து பலசெல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பிறகு இவை முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாக, அவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக என்று படிப்படியாக சிறுக சிறுக மாறி இப்போது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு உயிரினங்களாக வந்திருக்க வேண்டும்.


"No one knows how this happened. But Scientists think that energy from sunlight and lighting strikes triggered the formation of chemicals that could copy themselves. This may have taken place in the chemical "soup" that existed in the oceans, in shallow polls, or around volcanoes. The next crucial step was when the self-copying chemicals became trapped in "bubbles" of oil, which hold them together. These tiny blobs of chemicals were the beginnings of the first living cell. ....Over hundreds of millons of years, some simple animals without backbones, which looked like jelly fish or worms, developed into animals with backbones, including the first fish" - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.      


உதாரணத்துக்கு, பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).



    
சுருக்கமாக சொல்லப்போனால், இன்று நாம் பார்க்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர் தான்.               

இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலான பரிணாமவியலாளர்களின் கருத்துப்படி, பரிணாமவியல் என்பது, முதல் வாழும் செல் எப்படி உருவானது என்பது பற்றிய கோட்பாடு அல்ல. வேறு விதமாக சொல்லுவதென்றால், பரிணாமவியல், முதல் செல் எப்படி உருவானது என்றெல்லாம் விளக்காது. 

மாறாக, முதல் செல் உருவானப் பிறகு, அதிலிருந்து உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று மட்டும் தான் கூறும்.

டெக்னிகலாக கூறுவதென்றால் Ribosomes+DNA (these are major components of a cell) உருவானப் பிறகு, NS+RM (Natural selection and Random Mutation) போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களைத்தான் அது பேசும். 

"பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species" - சகோதரர் இரஞ்சித், கையேடு வலைப்பூ.   

NS மற்றும் RM போன்றவை, Ribosomes+DNA உருவானப் பிறகுதான் செயல் பட ஆரம்பிக்கும் என்ற கூற்றை "NON-SENSE" என்று வர்ணிக்கிறது Uncommon Descent இணையதளம். இது பற்றி மேலும் படிக்க இங்கே...
   
ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும்? (Abiogenesis) என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இன்றைய தேதிவரை, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட, பரிணாமவியலாளர்களால் ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியவில்லை. 

ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் என்று தெரியாததால் தான் அதை பரிணாமவியலில் ஒரு பகுதியாக சேர்க்கவில்லையோ? 

நாளையே ஒரு செல்லை இவர்கள் உருவாக்கிவிட்டால், அதை பரிணாமவியலின் ஒரு பகுதியாக சேர்த்து, "பரிணாமவியல் பூரணமடைந்து விட்டது" என்று கூறினாலும் கூறுவார்கள்.

இது குறித்து பிரபல அறிவியலாளரான Sir Fred Hoyle அவர்கள் கூறியது,

The random emergence of even the simplest cell is equal to "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein." - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105. (Emphasis added)
ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.   

அவர் இத்தோடு நிறுத்தவில்லை, ஒரு புரதம் (ஒரு செல் என்பது பல்வேறு புரதங்களால் ஆனது) கூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்று சொன்னவர்.
   
எது எப்படியோ, பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் Abiogenesisசை பரிணாமவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாதபடியால், அதை தற்போதைக்கு தள்ளி வைப்போம். பரிணாமவியலாளர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்களோ அதையே நாம் விமர்சிக்க முயல்வோம். இன்ஷா அல்லாஹ்...  

பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமென்றால் அது பரிணாம மரம். 

பரிணாமத்தின் முக்கிய தூணான இதுவும் பரிணாமவியலாளர்களின் கற்பனைத் திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றே.  இதற்கும் எந்தவொரு ஆதாரமும் வரலாற்றில் இல்லை. 

பரிணாம மரம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.

"ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது" - சகோதரர் ரஞ்சித், கையேடு வலைப்பூ.  

உதாரணத்துக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்.  





ஒரே மூதாதையரில் இருந்து அனைத்து உயிரினங்களும் வந்திருக்க வேண்டும் என்று விளக்கும் பரிணாம மரத்தில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது ஒரு யூகத்தில் அமைந்த ஒன்று என்பது தான். இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணத்துக்கு...



Cambrian  - சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Ordovician - சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Pre-cambrian - உலகம் தோன்றியதிலிருந்து cambrian வரையிலான காலக்கட்டம். உலகம் தோன்றியது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராம். ஆக precambrian காலக்கட்டம் என்பது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் கொண்டது.

ஏன் பரிணாம மரம் தவறென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு எதிராகத்தான் உள்ளன. அதாவது, ஒரு மரத்தை தலைகீழாக திருப்பிபோட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் விவகாரங்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்னும் தெளிவாக கூறப்போனால், மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (Fossils) முதன் முதலாக தென்படும் (complex) உயிரினங்கள், முழுமையான உருவங்களில், திடீரென தோன்றியிருக்கின்றன.

உலகின் மிகப் பழமையான உயிரினப்படிமங்கள் என்றால் அவை cambrian காலக்கட்டத்தை சேர்ந்தவை (சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை). அந்த படிமங்களின் படி, அந்த கால கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் திடீரென தோன்றியிருக்கின்றன.

"A half-billion years ago, ...the remarkably complex forms of animals we see today suddenly appeared" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
"அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நாம் இன்று பார்க்கக்கூடிய சிக்கலான வடிவமைப்பை கொண்ட விலங்குகள் திடீரென தோன்றியிருக்கின்றன" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.    

ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்கள் சொல்வதும் இதையேத்தான் பிரதிபலிக்கின்றது,

"we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is as though they were just planted there, without any evolutionary history" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. 
"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.  

டாகின்ஸ் சொல்லுவது போல, இப்படி திடீரென்று தோன்றியிருக்கும் உயிரினங்கள் பரிணாமத்தை கடந்து வந்ததாக வரலாறு இல்லை.

  

இது குறித்து எழுதிய "Science" ஆய்விதழ், பின் வரும் தகவலை கூறுகிறது,

"The beginning of the Cambrian period, some 545 million years ago, saw the sudden appearance in the fossil record of almost all the main types of animals (phyla) that still dominate the biota today." - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 
சுமார் 545 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், Cambrian காலக்கட்டதின் துவக்கத்தில், இன்று நாம் பார்க்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய விலங்குகளும் உயிரின படிமங்களில் திடீரென தோன்றியிருக்கின்றன - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

அதே இதழ் மற்றொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. அதாவது இந்த காலக்கட்டத்திற்கு முன் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான (Gradual Increase) படிம  ஆதாரங்கள் இல்லை என்பது தான் அது.

"This differential evolution and dispersal, too, must have required a previous history of the group for which there is no fossil record" - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், cambrian காலக்கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை இல்லை.

இது பற்றி குறிப்பிடும் "Science Daily",

"If Darwin’s theory of natural selection was right, life evolved gradually over millions of years. However, the Cambrian period, which began around 542 million years ago, seemed to herald a sudden rapid increase in species diversity, an event which has come to be known as the ‘Cambrian explosion’"- Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.    

பரிணாமவியலாளர்கள் சொல்வது போன்று, ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் சிறுகச் சிறுக பெருகின என்பது போன்ற வாதங்கள் கற்பனை அளவில் மட்டுமே உண்மை. நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் அவர்களுடைய வாதங்களுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன.      

ஆக, முதன் முதலாக காணப்படும் விலங்கினங்கள், பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை. பொதுவான மூதாதையர் என்ற கோட்பாடுக்கும் அவைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.  







ஆக மொத்தத்தில் பரிணாம மரத்தின் அடிப்படையே தவறு. 

இன்ஷா அல்லாஹ், எதிர்க்காலத்தில், இந்த மரத்தின் கிளைகளையும் விமர்சிப்போம். அதாவது, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று கூறுவார்களே அதைத்தான் குறிப்பிடுகிறேன்.    (மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின, டைனாசரிலிருந்து பறவைகள் வந்தன என்று கூறப்படும் கதைகளெல்லாம் படு சுவாரசியமானவை).

அதெல்லாம் சரி, பரிணாமத்தின் அடிப்படையிலேயே இத்தனை கோளாறுகள் இருப்பது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? 

cambrian காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மிக மிருதுவான தோல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால் உயிரினப்படிவங்களில் பரிணாமம் தென்படாமல் இருந்திருக்கலாம் என்பது அவர்களது முக்கிய வாதம்.

ஆனால் இதுவும் அவர்களது கற்பனையே தவிர உண்மையில்லை. சுமார் மூவாயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினப்படிவங்களில் ஒருசெல் பாக்டிரியாக்கள் காணக்கிடைக்கின்றன (Micro Fossils). இன்றைய தேதிவரை, cambrian காலத்திற்கு முற்பட்ட பல microfossils கிடைத்துள்ளன.

ஆக, இவைகள் மிருதுவாக இருப்பதால் பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற இவர்களின் வாதங்கள் அறிவியலுக்கு ஒத்துவராது.

இவர்கள் கூறும் மற்றொரு காரணமான "Molecular Phylogeny" யும், பரிணாமத்தை நிரூபிப்பதற்கு பதிலாக அதற்கு எதிரான தகவல்களையே தருகின்றது.

So, இவ்வளவு ஆதாரங்கள் பரிணாம மரம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்தும், இன்னும் ஏன் இதை பரிணாமவியலாளர்கள் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றனர்? 

இது, நாம் பரிணாமவியலாளர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி....

"1999 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த, cambrian கால உயிரினப்படிவங்களில் தனித்துவம் பெற்ற தொல்லுயிரியலாளர் (Paleontologist) ஒருவர், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். அவருடைய ஒரு உரையை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.
     அந்த உரையில், cambrian கால உயிரினப்படிவங்கள், டார்வினின் கோட்பாட்டிற்கு எப்படி நேர் எதிராக உள்ளன என்று சுட்டி காட்டினார் அவர். 
      உரை முடிந்ததும், அந்த அரங்கத்தில் இருந்த பல்வேறு விஞ்ஞானிகள் அவரிடம் உயிரினப்படிவங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் டார்வினின் கோட்பாடு குறித்து அவர் சொன்ன தகவல்கள் தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து விட்டனர். 
   நிகழ்ச்சி முடிந்ததும் அவர் என்னிடம் இது பற்றி கேட்டார். நான் கூறினேன்,"டார்வினின் கோட்பாடை விமர்சிப்பது அமெரிக்காவில் விரும்பத்தக்கதல்ல" என்று.
   இதை கேட்டவுடன் சிரித்து விட்டார் அவர். பிறகு அவர் கூறினார், " சீனாவில் டார்வினை விமர்சிக்கலாம், ஆனால் அரசாங்கத்தை தான் விமர்சிக்க கூடாது. ஆனால் இங்கே அமெரிக்காவில் அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் டார்வினை விமர்சிக்க கூடாது" - Jonathan Wells, Icons of Evolution, 2000, pp-58. 

என்ன?, பரிணாமம் இல்லையென்றால் உயிரியல் இல்லையென்று சிலர் சொல்லுகிறார்களா?.....................ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....

நிச்சயமாக, பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது..........  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


குறிப்பு: 
           தயவுக்கூர்ந்து, நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்காமல், நீங்களும் இவை சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாமும் நமக்கு அதைத்தான் கற்று கொடுக்கிறது.


My Sincere Thanks to:
1. Br.Ranjith.
2. Talk Origins Website.
3. Dr.Jonathan Wells.

Pictures Taken from: 
1. The young oxford library of science.
2. Academic American Encyclopedia.
3. Berkeley University (tailored).
4. Icons of Evolution.
5. Atlas of Creation.
6. Encyclopedia Brittannica.

References: 
1. Definition of fossils - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.
2. Cells, Building blocks of life - "Ask a Biologist" Website
3. Origin of Life - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.
4. "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.
5. Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
6. Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.
7. Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439.
8. Solution To Darwin's Dilemma Of 1859 - Science Daily Dated January 9, 2009.
9. Tree of life - Jonathan Wells, Icons of Evolution, pp-29-58.
10. Evolution - Encyclopedia Brittannica.
11. Evolution - Academic American Encyclopedia
12. Cells - Wikipedia.
13. The Fossil Record Refutes Evolution - alberteinstein.ro


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.