அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.
செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?
இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), "செயற்கை செல்" உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?
"Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an "artificial" life form" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.
நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.
இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை"யென்று. இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.
இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.
"He has not created life, only mimicked it” - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.
அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.
ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.
மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்,
செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?
ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.
அதே கட்டுரையில் மருதையன் பின்வருமாறு எழுதுகின்றார்,
அதே கட்டுரையில் மருதையன் பின்வருமாறு எழுதுகின்றார்,
"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா" - வினவு, 8/7/2010.
இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா? அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ்.
செயற்கை செல் என்றால் என்ன?
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.
இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.
JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".
இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.
முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர். பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.
இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.
இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது.
இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.
இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.
பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.
அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.
இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன.
இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்)
சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.
ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.
மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.
இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.
JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".
இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.
முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர். பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.
இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.
இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது.
"The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.
இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.
இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.
பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.
அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.
இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன.
இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்)
சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.
ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.
மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?
உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?
உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?
"First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?
இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...
"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.
இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.
இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?)
இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.
செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.
ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.
வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.
வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.
"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது.
ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூற முடியாது.
செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா?
இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.
மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.
உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).
"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch." - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.
வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.
இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?
மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.
ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.
ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.
வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.
"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?
அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்).
ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.
"Without life, Synthia wouldn't be alive" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது - (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.
செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.
மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது.
இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.
இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ?
செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?
என்னை பொறுத்தவரை, ஆம்.
உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி.
பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர்.
ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?
ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?
ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.
இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும்.
மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?
பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம்.
ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார்.
"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research." - President Obama, in a letter to the chair of his new bioethics commission.
இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது.
இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
முடிவாக...
உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.
ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.
ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார்.
இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது.
நான் நாத்திக சகோதரர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....
முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம்.
"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.
விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி......
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
My Sincere thanks to:
1. Dr.Craig Venter.
2. The Wall Street Journal daily.
3. The Scientist magazine.
4. The New York Times daily.
5. Science magazine.
6. Reuters.
7. JCVI.org
8. Vinavu.
9. Nature Journal.
References:
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome - Science, Vol. 329. no. 5987, pp. 52 - 56, dated 2nd July 2010.
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future - Science 2.0, dated 20th May 2010.
3. Cell door opens on fantastic future - The Sydney Morning Herald, dated 27th May 2010.
4. How We Created the First Synthetic Cell - J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.
5. Artificial life? Synthetic genes 'boot up' cell - Reuters, dated 20th May 2010.
6. First Self-Replicating Synthetic Bacterial Cell - J.Craig Venter Institute.
7. What Synthia means to me - Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.
8. Is the Synthetic Cell about Life? - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
9. Scientists create first synthetic cell - Hindustan Times, dated 22nd May 2010.
10. Synthetic Cell - Man playing God or plagiarising God? - Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.
11. Is Craig Venter's Synthetic cell really life? - Uncommon descent.
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ - The New york Times, dated 20th May.
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure - Wikipedia
14. How many genes are there in an average human? - Answers.com
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010.
16. Vinavu's Article on Synthetic cell, 8th July 2010.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Assalamu alaikum,
ReplyDeleteDear Brother Ashiq,
May ALLAH shower his Mercy on you.
I couldnt find the said article in vinavu. If it has been removed, by ALLAH truth has been won.
Masha ALLAH.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).
ReplyDeleteசகோதரர் ஆஷிக் அஹ்மத்,
நீங்கள் இந்த தகவல்களை தந்த விதம் மற்றும் தங்கள் அணுகுமுறை இன்னும் எனக்கு வியப்பாக இருகிறது....
மாஷா அல்லாஹ்....
அல்லாஹ் தங்களின் சேவையை மென்மேலும் தொடர அருள் புரிவானாக.....ஆமீன்
குறிப்பு : இந்த மாதிரியான தகவல்களை நாங்கள் செய்ய எங்களுக்கும் கொஞ்சம் "டிப்ஸ்" தாங்களேன்!!!!!
நண்பர் ஆஷிக்,
ReplyDeleteஇந்த பதிவு நாத்திகவாதிகளை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன், பொய்யை பல முறை சொன்னால் அது உண்மை ஆகும் என்ற கொள்கையில் இருக்கும் வினவு இதற்கு பதில் தருமா?
அப்படியே ஒரு செல் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, இவ்வளவு கடின உழைப்பில் உருவான செல் திடிரென தானாக வந்தது என்று கூறுவது என்ன விஞ்ஞானம் என்று புரியவில்லை, இதில் தங்களை அறிவாளி என்று நினைத்து கொள்வது தான் வேடிக்கை.
சற்றும் அறிவுக்கு ஒவ்வாத அந்த நாத்திக கொள்கையை விட்டு அதன் சீடர்கள் வெளி வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
இரண்டு பேரு பாராட்டிடாங்களா... இன்னும் கொஞ்ச நேரத்திலே சிலர் "கும்மியடிக்க" வந்துடுவாங்க.....இவங்களுக்கு யாரையாவது பாராட்டினால் பொருக்காதே!
ReplyDeleteஅருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் அதை யார் படைத்திருப்பார்கள்?
ReplyDeleteஇங்குண்டான உயிரன உருவாக்கம் குறித்து டார்வினின் கொள்கையே மட்டும் பிடித்து தொங்கும் உங்களைப்போன்றோர்கள் தான் //அருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் // போன்றவற்றிற்கு இனிமேல் புதிதாக பதில் தேட வேண்டும். அப்படி ஒரு நிலையில் அங்கும் உயிர்வாழும் செல்கள் இருந்தால் சர்வ வல்லமையுள்ளவனுக்கு இது சர்வ சாதாரண செயலே ஆகும்.
ReplyDeleteஐயா உங்களிடம் நாம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான் சும்மா வெறுமனே ஆக்கத்திற்கு எதிராக சொல்லவேண்டுமென்பதற்காக எதையாவது தர்க்க ரீதியாக கேட்பதாக நினைத்துக்கொண்டு அவ்வபொழுது தலையே காட்டாதீர்கள்., விவாதம் என்பது முன்னிருத்தும் கேள்விகளுக்கு முறையான பதில் தருவதே! இதுவரை எதிர்க்குரலில் பரிணாம் பற்றி எத்தனை எதிர் கேள்விகள் உங்களின் பதில்கள் எங்கே?அவைகளுக்கு பதிலை முதலில் தெளிவுறுத்தி பின் தொடருங்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...).
ReplyDeleteசகோதரர் ஆஷிக் அஹ்மத்,
மாஷா அல்லாஹ்....
நெத்தியடியான...இல்லை...நாத்திகத்திற்கெதிரான அதிரடியான மரணஅடி பதிவு...
//ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர்.//
--பகுத்தறிவற்றவர்களின் மூட நம்பிக்கை அது.
//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?//---பகுத்தறிவற்ற மூடநம்பிக்கையாளர்களின் வெட்டி பிழைப்புவாதம்.
ஆனால், இந்த மூட நம்பிக்கையாளர்கள் தங்களைத்தாங்களே 'பகுத்தறிவாளர்கள்' என்று கூறிக்கொல்வதுதான் என் வாழ்க்கையில் நான் அறிந்த காமெடிகளிலேயே மிகப்பெரிய காமெடி.
இந்த பிரபஞ்சம் எப்படி தானாக தோன்றி இருக்க முடியும்?
ReplyDeleteஇப்புவியில் மட்டும் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் எப்படி தானாக ஏற்பட்திருக்க முடியும்?
உயிர்கள் எப்படி தானாக உருவாகி இருக்க முடியும்?
... என்று எந்த ஒரு கேள்விக்கும் அறிவியல்பூர்வமற்ற அல்லது பகுத்தறிவுக்கு பொருத்தமற்ற லாஜிக் இல்லாத நம்பமுடியாத பதில்களை மட்டுமே அவர்கள் இதுவரை அளிக்கும் நிலையில், பகுத்தறிவுக்கு முற்றிலும் எத்தகுதியும் அற்ற தங்களை
...'பகுத்தறிவாளர்கள்' (???!!!)
:) :) :)
...என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.
மற்ற மொழிகளில்-நாடுகளில் இவர்களுக்கு நாத்திகர்கள்,கடவுள் மறுப்பாளர்கள்,பரிணாமவியலாளர்கள், கம்யுநிசவாதிகள் என்றுதான் பெயர்.
நம் தமிழகத்தில் மட்டும்தான் இவர்கள் இப்படி தமக்குத்தாமே 'பகுத்தறிவாளர்கள்' என்ற பொருந்தா பெயர் ஒன்றை வைத்துக்கொண்டு விட்டனர்.
இது எப்படி இருக்கிறதென்றால்... ஒரு கிழட்டு நத்தை, தமக்கு 'அல்ட்ரா மாடல் சூப்பர்சாணிக் ஜெட் ராக்கெட்' என்று பெயர் வைத்துக்கொள்வதை விட அநியாயம், அக்கிரமம், அராஜகம்.
கண்டறிதல், கேட்டறிதல், நுகர்ந்தறிதல், சுவைத்தறிதல், தொட்டறிதல் மற்றும் பகுத்தறிதல் இவைதான் மனிதற்குறிய ஆறறிவு என்கிறார்கள்.
'பகுத்தறிவாளர்கள்' என்று சொல்பவர்கள், 'கடவுளை பார்த்தால்தான் அறிவேன்' என்றால் இனி அவர்கள் தங்கள் பெயர்களை...
...(பகுத்தறிவற்ற) “பார்த்தறிவாளர்கள்”
...என்று மாற்றி வைத்துக்கொள்வதுதான் நலம், நியாயம், நீதி, நேர்மை.
ASHRAF said..
ReplyDeleteபரிணாமம் குறித்தும் செயற்கை உயிர் குறித்தும் வாதங்கள் செய்ய எதிர்க்குரல் தயாராகவே இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதை பற்றி விவாதம் செய்ய பகுத்தறிவாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் எவரும் தயாரில்லை அல்லது முன்வரவில்லை. ஏன்? தூரத்தில் இருந்து கல்லெறிவதோடு சரி. உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வையுங்கள் தோழர்களே. இஸ்லாத்தில் இருந்து விலகி கும்மியடிக்கும் தோழர் எங்கேப்பா?
//அருகில் இருக்கும் கோளிலோ அல்லது எதாவது ஒரு வால்நட்சத்திரத்திலோ உயிர் வாழும் செல்கள் இருந்தால் அதை யார் படைத்திருப்பார்கள்?//---இன்னும் எத்தனை கேளக்சிகளில் இருந்தாலும் இந்த மல்டிவெர்சில் எங்கிருந்தாலும் எங்களுக்கு விடை தெரியும், அது இந்த மல்டிவெர்சை படைத்த இறைவன் வேலை என்று. கடவுளை மறுக்கும் நீங்கள்தான் ஒவ்வொன்றுக்கும் புதுக்கதை புனைய வேண்டும்.
ReplyDeleteரொம்ப கஷ்டம்...
நிற்க...
இப்போது இங்கே இந்த இடுகையில் அதுவா பேசுபொருள்? பதிவின் மையக்கருத்துக்கு உங்கள் மறுப்பென்ன? 'பரிணாமம்..; பரிணாமம்', 'தானாக உருவாகியது..' என்று தினமும் ஒப்பாரி வைத்துவிட்டு, திசை திருப்பல், மழுப்பல், நழுவுதல்... இதெல்லாம் அழகாவா இருக்கிறது? மனிதற்கு கொஞ்சமாவது வெட்கம் அவசியம்.
வினவுக்கு தேஞ்சுபோன செருப்பாக இருப்பதில் பெருமை இல்லை நாத்திகரே...
ஒருநாள் வாழும் அற்ப ஈசளுக்கு உதிர்ந்து விழும் இறக்கையாகவாவது இருக்க முயன்று பாருங்கள்.
படைப்பின் மகிமை புரியும். இறையை அறியலாம்.
ஏக இறைவனின் திருப்பெயரால்...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நானும் எத்தனை முறை தான் உங்களை பாராட்டிக்கொண்டிருப்பது?
சகோதரர் வஜீர் அலி அஹமது சொன்னதையே திரும்ப சொல்கிறேன்,
//நீங்கள் இந்த தகவல்களை தந்த விதம் மற்றும் தங்கள் அணுகுமுறை இன்னும் எனக்கு வியப்பாக இருகிறது.//
பரிணாமவியலை எப்படி புரிந்துக் கொண்டார்களோ அது போல் தான் செயற்கை செல்லை பற்றியும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
//
உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. //
நாத்திகர்களை பார்த்து நான் கேட்பது,
"இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதோ?"
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...).
ReplyDeleteசகோதரர் ஆஷிக் அஹ்மத்,
அருமையான அற்புதமான பதில் இடுகை.
அல்லாஹ் தங்களின் சேவையை மென்மேலும் தொடர அருள் புரிவானாக.....ஆமீன்
//கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?//
//மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?//
//ரூடர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?//
//ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.//
====>>>என்றெல்லாம்... மிக மிக தெளிவாக சரியாக ஆதாரத்துடன் 'செயற்கை செல்' என்பது ஒரு பொய் என எழுதிவிட்டு, தாங்களும் இந்த சிறப்பான ஆக்கத்திற்கு 'யாராவது ஒரு குறையாவது சொல்லட்டுமே' என்று எதிர்பார்ப்பதுபோல...
\\\\செயற்கை செல் (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?\\\\ ----என்று தலைப்பு இட்டு விட்டீர்களே...
நம்ம தமிழ் நாளிதழ்களுக்கு ஒரு பழக்கம் உண்டு...
// குண்டு வெடித்தது : 'ஆன்ட்ரமீட்டா முஜாஹிதீன்' நாசவேலை ? //---என்று கொட்டை எழுத்தில் தலைப்பு இடுவார்கள்.
இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்கள் :
'____' இப்படி கொட்டேஷனுக்குள் போட்டால், அந்த கொட்டேஷனுக்குள் இருப்பவை...,
ஒன்று இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம் ...என்று அர்த்தம்.
அப்புறம்... அந்த "?" : இதை போட்டு விட்டால்... அது ஜஸ்ட் ஒரு சந்தேகம் என்றுதான் அர்த்தமே ஒழிய, அதற்கு ஆதாரமுள்ள நிருபணம் கிடையாது என்று பொருள்.
------> இதே வழியில், தாங்களும்...
'செயற்கை செல்' (?) ['synthetic cell' (?)] எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?
என்று தலைப்பிடலாமே...!
மற்றவர் செய்த அதே தவறை தவறென்று நன்கு தெரிந்தும் நாமும் அதையே பின்பற்ற வேண்டுமா?
அன்பு சகோதரர் UFO அவர்களுக்கு,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்...
நீங்கள் சொன்ன தகவலைப் பற்றி நான் யோசிக்காமல் இல்லை. வென்டர் தன்னுடைய ஆய்வை "Synthetic cell" என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன் (இந்த தலைப்பை இடுவதற்கு முன் பலமுறை யோசித்தேன்)
என்றாலும் நீங்கள் குறிப்பிட்டது போல இது பலருக்கும் குழப்பத்தை தரக்கூடியது என்பதால் (என்னடா, இவர்கள் இதனை மறுக்கிறார்கள் ஆனால் தலைப்பை அப்படியே வைத்திருக்கிறார்களே என்று நிச்சயமாக எண்ணக்கூடும்) நீங்கள் சொன்னது போன்றே மாற்றியுள்ளேன்.
ஆலோசனைக்கு நன்றி....
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மாஷாஅல்லாஹ்...
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் க்ஹைர்...(தலைப்பிற்காக)
//நானும் எத்தனை முறை தான் உங்களை பாராட்டிக்கொண்டிருப்பது?//---தப்பில்லை சகோதரா... இதில் மட்டும் அயற்சி வேண்டாம்... அ(எ)த்தனை பாராட்டுக்கும் தகுதி வாய்ந்த பதிவர் தான் இவர்...
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரன் ஆஷிக்,
அல்ஹம்துலில்லாஹ். மிக சிறந்த மற்றும் தேவையான ஓர் ஆய்வு பதிவிது. மருதைய்யன்களும் மற்றவர்களும் போகிற போக்கில் பொய் சொல்லி கதையடித்துவிட்டு சென்ற செயற்கை மரபணு விசயத்தை நன்கு ஆராய்ந்து பதிவிட்டிருக்கின்றீர்கள். இங்கு பல சகோதரர்கள் சொன்னது போன்று அதற்காக எத்தனை உங்களை முறை பாராட்டினாலும் தகும். இப்போது பதில் சொல்ல வேண்டிய இடத்தினில் ம.க.இ.க மருதய்யன் மற்றும் அதை வெளியிட்ட வினவு தளம் இருக்கின்றது. அவர்கள் நேர்மையாளர்கள் என்றால் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
சகோதரர் முஹம்மது ஆஷிக் சொன்னது போன்று தமக்கு தாமே "பகுத்தறிவாளர்கள்" என்ற பெயரை வேறு சூட்டிக் கொண்ட கடவுள் மறுப்பாளர்கள் காமெடி பீஸ்களே. அவர்களை பொதுவாக நான் போலி பகுத்தறிவாளர்கள் என்றே அழைப்பேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
ReplyDeleteசகோதரர் ஆஷிக் அவர்களுக்கு இது உங்கள் ஆக்கம் குறித்து இல்லயென்றாலும் இதை இங்கு பதியவும் சகோதரர் U F O அவர்களுக்கு பல்வேறு ஆக்கம் தொடர்பான தங்களின் பல பின்னூட்டங்களை நான் பல்வேறு தளங்களில் கண்டிருக்கிறேன்.ஆனால் உங்களை அங்கெல்லாம் தொடர்புக்கொள்ள முடியவில்லை.இத்தளம் நம்பகத்தன்மை வாய்ந்ததால் இன்ஷா அல்லாஹ் உங்களை தொடர்புக்கொள்ள மெயில் ID தரவும்.அல்லது சகோதரர் ஆஷிக்,சேக்தாவூது,அப்துல் பாஸித் இவர்களில் யாரை வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளவும். (அவ்வாறு தொடர்புக்கொண்டால் "உம்மத்" பற்றி சகோதரர்கள் விளக்கவும்)
//பகுத்தறிவாளர்கள்' என்று சொல்பவர்கள், 'கடவுளை பார்த்தால்தான் அறிவேன்' என்றால் இனி அவர்கள் தங்கள் பெயர்களை...
ReplyDelete...(பகுத்தறிவற்ற) “பார்த்தறிவாளர்கள்”
...என்று மாற்றி வைத்துக்கொள்வதுதான் நலம், நியாயம், நீதி, நேர்மை.//
ஓ நீங்க பார்த்துடிங்களா?
அப்போ நீங்க பார்த்தறிவாளர்!
சரி அல்லாவுக்கு உருவம் இல்லைன்னு சொன்னாங்க, பின்ன எப்படி பார்த்திங்க?
பின்னாளில் ஒருவர் பூமியில் தோன்றி அற்புதங்கள் பல செய்து நான் தான் கடவுள் என்று சொன்னால் கூட உண்மை முஸ்லிம்கள் அவனை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனெனில் கடவுளை அனைவரும் தமது மரணத்திற்கு பிறகே சந்திக்க முடியும்.நீங்கள் உட்பட ., சகோதரர் மேற்கோள் காட்டியது எதையும் கண்டால் தான் உண்மைப்படுத்துவோம் என கூறும் உங்களைப்போன்ற பார்த்தறிய விரும்பும் பகுத்தறிவாளர்கள் சிந்தையே(?)குறித்துத்தான்...ஐயா., இதற்கு பெயர் தான் குறுகிய சிந்தனை.,இப்படித்தான் உங்கள் ஆய்வின் லட்சணம் இருக்கிறது முதலில் என்ன சொல்கிறார்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.பிறகு பதிலளிக்க முற்படுங்கள்.கடவுளால் படைக்க முடியாத கல். தற்செயலாக உருவான புத்திசாலித்தனம் போன்ற அறிவியலை மிஞ்சும் தர்க்க ரீதியான கேள்விகளும் ,குர்-ஆனின் மூலமொழி உருது என சொல்லும் உங்கள் இஸ்லாம் குறித்த ஆராய்ச்சிகளும் மெய்சிலிர்க்கத் தான் செய்கின்றன.அறியாமைக்கும் ஒரு எல்லையுண்டு இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
ReplyDeleteவழக்கம்போல் இங்கே கேள்வி., பொறுமையாக உங்கள் அராய்ச்சி முடித்து பின்பு பதில் சொல்லுங்கள்
தான் தோன்றியான முதல் உயிரிலிருந்து மனிதன் வரையிலான ஏனைய உயிரனங்கள் உருவாக்கம் தொடரும்போது எந்த உயிரினத்தின் கிளையிலிருந்து "தாவரங்கள் "உருவாயிற்று.,?
அவ்வாறு உருவாக அதற்கு சுய தேவையென்ன?
எந்த கால சூழலில் தாவரங்களாக பரிணமித்தது?
ரெண்டு நாளா இந்தப்பக்கம் வரல. இங்க ஒரே உய் உய் விசிலா இருந்திருக்கு. வழக்கம்போல் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள். அதிலையும் நம்ம வரவ எதிர்பார்த்து வேற காத்துக்கிட்டு இருந்திருக்காங்க. கொஞ்சம் லேட்டாயிருச்சு.
ReplyDeleteநிஜாமும், UFOவும் எனக்கு பதில் சொல்ல வேணாம்ன்னு வேண்டுகோள் விடுத்திருக்காங்க. இங்க ஒரு சிலர் என்னுடைய கருத்தை எதிர்பார்த்து இருக்காங்க. அதனால, நம்ம கருத்த சொல்லுவோம். பதில் சொல்லுறவங்க சொல்லட்டும் அப்படின்னு இருந்துர வேண்டியதுதான்.
ஆஷிக், உங்களுடைய உழைப்பிற்கு பாராட்டுக்கள். வினவு தளத்தையும், உங்கள் பதிவையும், நீங்கள் கொடுத்திருக்கும் தரவுகளையும் படித்துவிட்டு, தேவையெனில் வேறு தளங்களையும் படித்துவிட்டு பதில் சொல்கின்றேன். (அநேகமாக திங்கள் அன்று பதில் கொடுப்பேன்)
No prejudice.
.
//இங்க ஒரே உய் உய் விசிலா இருந்திருக்கு. வழக்கம்போல் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்.//
ReplyDeleteஅப்ப அங்க மட்டும் என்ன நடக்குது, சகோதரரே!
"டியுப் லைட் ராஜனும் டுபாக்கூர் கும்மியும்" தற்போது விற்பனையில் படித்து விட்டீர்களா!!
ReplyDeleteஅன்புடன் ஃபா (fa)
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் அஷ்ரப்,
//இஸ்லாத்தில் இருந்து விலகி கும்மியடிக்கும் தோழர் எங்கேப்பா?//
நீங்க வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறீங்க போல அஷ்ரப். அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள். தற்போது இப்படி சொல்லிக்கிட்டு பாப்புலர் ஆக ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்ச காலத்திற்கு முன்னாடி ஆபரேசன் சல்மா மூலம் ஒருத்தனை இப்படி தான் கண்டுபிடிச்சாங்க. அவன் தன்னை இஸ்லாமிய பெண் என்று சொல்லி தான் எழுதிக் கொண்டிருந்தான். பின்னர் வசமாக மாட்டினான். கடைசியில் அது ஒரு குடுமி என்பதும் நிருபனமானது. எனவே எந்த ஒன்றையும் தீர விசாரிக்காமல் முடிவுக்கு வர வேண்டாம் அஷ்ரப்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் fa,
உங்களுடைய பதிவை பார்த்தேன். எனக்கு இருக்குற ஒரு சந்தேகம் உங்களுக்குமிருக்கின்றது. அந்த சந்தேகம் உண்மையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அப்புறம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொள்ளவும். பதிவை படிக்கவே கடினமாக இருக்கின்றது. நம்ம ஆஷிக் கூட ஒரு வருடத்திற்கு முன்னாள் தமிழ் தெரியாதவராக தான் இருந்தார். அப்போதெல்லாம் ஆங்கிலம் மட்டுமே ஆஷிக்கிடம் புழக்கத்தில் இருக்கும். இப்போது சிக்கலான தமிழ் சொற்களை கூட சுலபமாக கையாள்கிறார் ஆஷிக். நீங்களும் சீக்கிரம் நல்ல தமிழை கற்றுக் கொள்ளவும்.
@fa
ReplyDelete//தற்போது விற்பனையில் படித்து விட்டீர்களா!! //
பரபரப்பான விற்பனை கிடையாதா?
@Ashiq
ReplyDeleteSynthetic Biology துறையில் synthia ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
// அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள்//
ReplyDeleteஎன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.
என்னுடைய உறவினர்கள் சிலரது பெயர், உங்கள் இணைய நண்பர்கள் வட்டாரத்திலேயே சிலருக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரியும் என்னுடைய பிறப்பு மதம் என்னவென்று.
நன்றி!
//என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. //
ReplyDeleteஹா ஹா . நல்ல நகைச்சுவை. நோன்பு வைத்துக் கொண்டு என்னால் அளவுக்கதிகமாக சிரிக்க முடியவில்லை.
ஐயா., உங்களுடைய பிறப்பின் மதம் மட்டுமல்ல., உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களின் பிறவி மார்க்கமும் இஸ்லாம் தான்,தங்களை கடவுள் மறுப்பாளார்கள் என கூறுவோர்கள் உட்பட.பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலேயே ஒருவன் யூதனாகவோ,கிறித்துவராகவோ,இந்துவாகவோ, அல்லது வேறு மத மற்றும் மதம் சாரா கொள்கைகளில் உருவாக்கப்படுகிறார்கள்.எனவே உங்களைப்போன்றோர்களின் மத மாற்றத்தால் இஸ்லாத்திற்கு ஒன்றும் இழப்பல்ல உங்களுக்கு வேண்டுமானால் இதை ஒரு விளம்பரமாக அமைத்து கொள்ளலாம்.எனவே இஸ்லாத்தில் பிறப்பதும் ஏனைய மதங்களில் பிறப்பதும் இங்கு முக்கியமல்ல. அதுவும் உங்களைப்போன்ற முன்னாள் இஸ்லாமிய(?) பெயர் தாங்கிகள் இஸ்லாத்தை விமர்சிப்பது வேடிக்கையல்ல இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் விமர்சிக்க முற்படுவது தான் வேடிக்கை அதுவும் வேதனை கலந்த வேடிக்கை.அதற்கு தாங்களின் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டான தும்மல் மற்றும் மலக்குகள் குறித்து கொண்ட தவறான புரிதல்களே சாட்சியாக இருக்கிறது.இஸ்ஸ்லாத்தை எதிர்ப்பதால்,நீங்கள் அடைய போகும் பயன்பாடு என்ன?அல்லது இஸ்லாம் இல்லையென்றால் உலக மக்கள் அடையபோகும் பயன் தான் என்ன? சொல்வீர்களா....? இஸ்லாம் மார்க்கம் அல்லாத ஏனைய சட்டத்தால் உலக வாழ்க்கைகு தேவையான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளை உங்களால் இல்லை இல்லை..உங்களை போன்ற இலட்சக்கணக்கானோரை(?) ஒன்றுக்கூட்டி வேண்டுமானால் ஏற்படுத்துங்கள்., அதன் பின் இஸ்லாம் தேவைதானா என்பதை பற்றி சிந்திப்போம்.அதுவில்லாமல் ஆதாரம் என்று எதையாவது சொல்லிக்கொண்டு (அதுவும் விவாதம் என வரும்போது பாதியிலேயே) போய் விடாதீர்கள் ஏனெனில வெறும் வாயால் ஒளியே அணைக்க பார்க்கிறீர்கள்., அது முடியாது என்பதையும் கவனத்தில் வையுங்கள்
ReplyDelete@பி.ஏ.ஷேக் தாவூத்
ReplyDeleteவா அழைக்கும் அஸ்ஸலாம்.
//அப்புறம் கொஞ்சம் தமிழை கற்றுக் கொள்ளவும். பதிவை படிக்கவே கடினமாக இருக்கின்றது//
சீக்கிரமா கத்துக்குறேன் காக்கா.
@கும்மி
//பரபரப்பான விற்பனை கிடையாதா? //
டியுப் லைட் ராஜன் வாயையே தொறக்க மாட்றான். தொரந்தாதான் பரபரப்பாகும்.
@பி.ஏ.ஷேக் தாவூத்
//அதனால் தான் அவர் இஸ்லாத்தில் இருந்து வெளியேறியதா சொன்ன பொய்யை அப்படியே நம்புகின்றீர்கள்.//
இதுலாம் RSS காரன் கிட்டருந்து காப்பி அடிச்சா ட்ரிக்.
//இஸ்லாமிய(?) பெயர் தாங்கிகள் //
ReplyDeleteஇத்தனை நாட்களாய் இப்படி அழைக்கப்படவே இல்லையே என நினைத்தேன். நல்ல வேளை, நீங்கள் அழைத்துவிட்டீர்கள். நன்றி!
நான் ஒன்றும் என்னுடைய பிறப்பு மதத்தைப் பற்றி விளம்பரம் செய்துகொள்ளவில்லை. என்னிடம் அத்தகைய கேள்விகளை முன்வைக்கும்போது பதில் சொல்ல வேண்டியுள்ளது.
//டியுப் லைட் ராஜன் வாயையே தொறக்க மாட்றான். தொரந்தாதான் பரபரப்பாகும்.//
ReplyDeleteநாளைக்கு வருவாரு. அப்பறம் பரபரப்பா, பப்பரப்பாவான்னு தெரியலே.
//என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பட்சத்தில் நீங்கள் எடுத்திருக்கும் இன்னொரு வழிமுறை. நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.//
ReplyDeleteநீங்க அப்பறமா வெளில வாங்க, முதல்ல ஆஷிக் கேக்குற கேள்விக்கு பதிலா சொலுங்க. இதுல கார்போன் கூட்டாலி னு வேற ஒருத்தரு பகுதி பகுதிய எழுதிகிட்டு இருக்காரு, எல்லத்தையும் கேட்டுகிட்டே இருந்தா எப்ப பதில் சொல்ல போறீங்க.
//முதல்ல ஆஷிக் கேக்குற கேள்விக்கு பதிலா சொலுங்க//
ReplyDeleteஎன்னது பதிலா!!! சமாளிபிகேசன் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். நான் சொல்வதில் நம்பிக்கையில்லையென்றால் கடந்த பல பதிவுகளில் அவர்களால் போடப்பட்டிருக்கின்ற பின்னூட்டங்களை சகோதரர் fa போய் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஐயா., பார்த்தீர்களா இதுவரைக்கும் உங்களிடத்தில் கேள்விக்கான பதில் இல்லை
ReplyDelete//இஸ்லாமிய(?) பெயர் தாங்கிகள் // இந்த ஒன்றுக்கு மட்டுமா உங்கள் மேற்கோள்கள் நன்றி அதற்கு பின்னுள்ளவைகளுக்கும் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்., ஸாரி எதிர்ப்பார்க்கிறேன்
அப்பறம் சகோதர் fa அவர்களுக்கு, மரியாதை குறைவான வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்துவதாக உணர்கிறேன்., இது பலரின் பார்வையே பார்க்கும் பதிவு என்பதால் சற்று திருத்திக்கொள்ளவும் இது எனது வேண்டுகோளாக கருதவும்
சகோதரர் fa அவர்களுக்கு,
ReplyDeleteசலாம்,
நான் சொல்ல வந்ததையே குலாம் சொல்லிவிட்டார்...வார்த்தைகளில் கண்ணியம் காத்து கொள்ளுங்கள் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்....
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//அப்பறம் சகோதர் fa அவர்களுக்கு, மரியாதை குறைவான வார்த்தைகளை தாங்கள் பயன்படுத்துவதாக உணர்கிறேன்.,//
ReplyDeleteகாக்கா, நான் யாரையும் சொல்லமாட்டேன், ராஜன மட்டும் தான் சொல்வேன், அவன் பெசுனதலாம் நீங்க பாக்கல அதான் இப்டி சொல்றிக. இனிமே என்னோட ப்ளாக்ல மட்டும் அதுமாரி எழுதுறன்.
@ Gulam
ReplyDeleteஉங்களுடைய மற்ற கேள்விகளுக்கு பதில் கூறவில்லை என்று வருத்தப்பட்டீர்கள்.
அல்லாஹ் என்னும் கற்பனை கதாபாத்திரம் இல்லாவிட்டால், அனைத்தையும் மூடத்தனமாய் அணுகுவதை விடுத்து அறிவுபூர்வமாய் சிந்திக்கும் மனிதர்கள் இருப்பார்கள்.
நான் 'பிறைபார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்' என்னும் பதிவில், அறிவியலை ஏற்றுக்கொள்ளாமல் பிற்போக்குத்தனமாய் இருப்பார்கள் என்று கூறியிருந்தேன். நீங்கள் அறிவியல் வழிமுறைகளை அந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த விஷயத்திலேயே அறிவுபூர்மாய் சிந்திக்க இயலாத நீங்கள், அல்லாஹ் என்னும் கற்பனை கதாபாத்திரம் இருக்கும் வரை சிந்திக்கமாட்டீர்கள்.
@fa & பி.ஏ.ஷேக் தாவூத்
ReplyDeleteஎன்னுடைய பதில்கள் சமாளிபிகேஷனா, இல்லை பொருத்தமான பதிலா என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். உங்களுடைய முடிவுகளை வலிந்துத் திணிக்க முயற்சிக்காதீர்கள்.
உங்களுடைய கருத்தையும் வையுங்கள். என்னுடைய கருத்தையும் வைக்கிறேன். வாசிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.
இந்தப் பதிவில் இருப்பது போல், பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் சண்டை போடும் பழக்கம் எனக்குக் கிடையாது. பி.ஏ.ஷேக் தாவூத்திற்கு ஆத்திரம் கண்ணை மறைத்துவிட்டது போலும்.
அன்பு சகோதரர் fa அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுடைய பதில் எனக்கு மேலும் வருத்தத்தை அளிக்கின்றது. "நான் இங்கு சொல்ல மாட்டேன், என்னுடைய தளத்தில் சொல்லுவேன்" என்பது சரியல்ல.
இஸ்லாம் என்பது சகோதரத்துவத்தை முன் நிறுத்தும் மார்க்கம். "நீங்கள் உங்கள் தளத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், இங்கு வேண்டாம்" என்றல்லாம் என்னால் சொல்ல முடியாது. சகோதரன் என்ற முறையில் உங்கள் மேல் அக்கறை கொள்வது என் மீது கடமையாகிறது. அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள்.
சொல்வது என் கடமை, ஏற்றுக்கொள்வதும் கூடாததும் உங்கள் இஷ்டம்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
@ashik,
ReplyDeleteகலைத்துறையில் ஐஸ்வர்யா ராய் அழகானவர் என்பதை ஒத்துக் கொள்கின்றீர்களா?
( ஏன் கும்மி மட்டும் தான் பதிவுக்கு சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்பாரா? நான் கேட்க கூடாதா? கும்மிக்கு பதில் சொன்னால் எனக்கும் பதில் சொல்லணும் ashik. )
விளம்பி பதிவில் (பி.ஜைனுல் ஆபிதீன் என்னும் இஸ்லாமிய மார்க்க அறிஞரை சூபி மதத்தை சார்ந்த மாலிக் என்பவர் பொய்யன் என்று தரக்குறைவாக விமர்சித்த பதிவு ) பதிவிற்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிட்டது உண்மை தான். ஆனால் மாலிக் அவர்களின் கொள்கை சார்ந்து தான் பல கேள்விகளை அங்கே எழுப்பியிருக்கின்றேனேயொழிய உங்களை மாதிரி குருட்டுக் கும்மி அங்கே அடிக்கவில்லை.
ReplyDelete(குறிப்பு - இது பதிவின் பேசுபொருள் அல்ல. எனவே இதையே பேசுபொருளாக்கி பதிவின் தலைப்பிலிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்ய வேண்டாம்.)
//உங்களுடைய கருத்தையும் வையுங்கள். என்னுடைய கருத்தையும் வைக்கிறேன். .//
ReplyDeleteபதிவை சார்ந்து கருத்து வையுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். இப்போது கூட பதிவின் மையப் பொருளை தாண்டி தான் தாங்கள் பேசுகின்றீர்களேயொழிய பதிவின் மையப் பொருளான பழைய கடவுளர் எவ்வாறு காலி என்பதை இன்னும் நீங்கள் விளக்கவேயில்லை.
//வாசிப்பவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்//
இங்கே நான் , fa எல்லாம் வாசிப்பவர்கள் இல்லையா? ஆஷிக் கேள்விகளை முன்வைத்திருக்கின்றார். அதற்கு நாத்திக தரப்பில் உங்கள் பதில் இன்னும் வரவில்லை என்று சொல்லுவது எவ்வாறு கருத்தை வலிந்து திணிப்பதாகும்?
நம் அனைவரின் மீதும் ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ReplyDeleteசகோதர் fa அவர்களுக்கு "நீங்கள் உங்கள் தளத்தில் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள், இங்கு வேண்டாம்" என்றல்லாம் என்னால் சொல்ல முடியாது. சகோதரன் என்ற முறையில் உங்கள் மேல் அக்கறை கொள்வது என் மீது கடமையாகிறது. அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது சகோதரர்ஆஷிக் உடைய வேண்டுகோள்.
என்னுடைய வேண்டுகோளும் அது தான்
இது குறித்து இனி மேலும் பேச வேண்டாம்., இங்கு பேசுப்பொருள் இதுவல்ல.,
@Ashiq
ReplyDeleteஇப்பதிவின் பேசுபொருள் synthetic biology துறையில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியும், அதனுடைய விளைவுகளும்.
synthetic biology துறையில் அந்த ஆராய்ச்சி (synthia) ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா என்று கேட்டேன். நீங்கள் இன்னும், உங்கள் கருத்து என்னவென்று கூறவில்லை.
அதற்குள், அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத விசிலடிச்சான், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாக உளறிக்கொண்டிருக்கின்றது.
ஐயா., கும்மி அவர்களுக்கு., நாம் அரம்பத்திலிருந்து கேட்பது ஒன்று தான் "அல்லாஹ் என்பது ஒரு கற்பனை பாத்திரம் என்றால் அல்லாஹ் இருப்பது உண்மையென நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் அவன் எப்படி இருந்தால் நம்புவீர்கள்?" நாங்கள் வெறுமனே கடவுள் பெயரால் களிமண்ணை சோற்றில் கலந்து உண்பவர்கள் அல்லர்., பக்தி பரவசத்தில் மான கேடானவற்றையோ,தகாத செயலையோ மேற்கொள்வதில்லை. சுருக்கமாக உங்கள் முன் கேள்வியாக வைக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லாத உலகத்திற்கு விளையும் நன்மைகள், அல்லாஹ்வால் உலகத்திற்கு விளையும் தீமைகள் எனென்ன என்பதை தாங்கள் பட்டியலிட தயாரா...? முதலில் இக்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அடுத்தவை பற்றி பின்பு பேசலாம்., சும்மா அறிவியலை மட்டப்படுத்தி அல்லாஹ்வை தூக்கி பிடிப்பதாக சப்பைக்கட்டு கட்ட வேண்டாம் இப்பவும் சொல்கிறேன் மேற்கூறிய வினாவிற்கு ஏதாவது சொல்வீர்களே தவிர தர்க்க ரீதியான வாதம் ஏதும் உங்களிடம் வராது., இருந்தாலும் பரவாயில்லை எதையாவது சொல்லுங்கள்
ReplyDelete//பதிவை சார்ந்து கருத்து வையுங்கள் என்று தான் நான் கேட்கிறேன். இப்போது கூட பதிவின் மையப் பொருளை தாண்டி தான் தாங்கள் பேசுகின்றீர்களேயொழிய பதிவின் மையப் பொருளான பழைய கடவுளர் எவ்வாறு காலி என்பதை இன்னும் நீங்கள் விளக்கவேயில்லை. //
ReplyDeleteநான் கேட்டிருக்கும் கேள்வி பதிவிற்கு சம்பந்தம் உள்ளதா இல்லையா என்பதை ஆஷிக் சொல்லட்டும்.
//அதனால் நீங்கள் உங்கள் தளத்திலும் கண்ணியம் குறைவான வார்த்தைகளை பதிய வேண்டாம் என்பது சகோதரர்ஆஷிக் உடைய வேண்டுகோள்.
ReplyDeleteஎன்னுடைய வேண்டுகோளும் அது தான்//
இன்ஷா அல்லாஹ், மாத்திக்கிறேன்.
@ G u l a m
ReplyDeleteஉங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன். (ஏற்கனவே இடவேண்டிய பதிவுகள் சில உள்ளன. அவற்றை இட்ட பின்பு உங்களுக்கான பதிவை இடுகின்றேன்)
இங்கே அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூறுகின்றேன். உடனே, ஒரு சிலர், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாகக் கூறுகின்றனர். எனவே, இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி மட்டுமே இங்கு பேசுவோம்.
எனது கேள்விக்கான பதிலை ஆஷிக் கூறுவார் என்ற எதிர்பார்ப்பில்...
//synthetic biology துறையில் அந்த ஆராய்ச்சி (synthia) ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா என்று கேட்டேன்.//
ReplyDeleteஆமாங்க மைல் கல்லுதான், நாளைக்கே ஒரு DNA புல்லா உருவாக்குனா அதுவும் மைல் கல்லுதான். விசயத சொல்லுங்க.
//ஆமாங்க மைல் கல்லுதான், நாளைக்கே ஒரு DNA புல்லா உருவாக்குனா அதுவும் மைல் கல்லுதான். விசயத சொல்லுங்க. //
ReplyDeleteஆஷிக்கோட கருத்து என்னன்னு தெரிஞ்சிக்குவோம் தம்பி. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.
நண்பர் திரு ஆசிக்,
ReplyDelete//மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ இயற்கையானது.
ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.//
கருத்துக்களில் பார்வையை இட்ட வண்ணமே உள்ளேன். என்னுடைய பதிவில் கவனம் செலுத்தியதால் தங்களின் சில கருத்துக்களில் மாற்று கருத்து இருந்தும் அதை சுட்டி காட்ட மறந்துவிட்டேன்.
ஒரு செல்லை உருவாகினால் ஒரு உயிரினத்தை உருவாக்கியது போன்று என்பது ஒரு செல் உயிரினங்களுக்கு மட்டுமே பொருந்தும், பல செல் உயிரினங்களில் அதாவது மனிதனை எடுத்துகொண்டால் (100 ட்ரில்லியன் செல்கள் உள்ளன) அதில் எதாவது ஒரு செல்லை உருவாகினால் மனிதனை உருவாக்கி விடலாம் என்பதும் தவறு. நூற்றுக்கு அதிகமான செல் வகைகள் உள்ளன. மனிதனின் முழு மரபும் கொண்டுள்ள stem cell உருவாகினால் மட்டுமே அந்த உயிரினத்தை உருவாக்கமுடியும். அதை வளர்பதற்கும் தேவை படுவது தாயின் கருவே, incubator இல் மனித செல்கள் வளர மறுப்பது குறுப்பிட தக்க செய்தி.
செல்கள் என்பது மரபணுக்கள் மட்டும் உள்ளது அல்ல, அதற்கும் மேலாக golki complex, mitochondria, ribosome, cytoplasm, lysosome, recticulam போன்ற பல பொருள்கள் உள்ளன.
இவை அனைத்தையும் தாண்டி மனிதன் ஒரு காப்பி அடித்து செல்லை உருவாக்கினால் (100 ஆண்டுகளுக்கு பிறகு) கூட அது கடவுளை மறுப்பது ஆகாது. மாறாக மனிதனை சிந்திக்க தூண்டும். இவ்வளவு கடினமான ஒரு செயல் தானாக வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்வான்.
கடின உழைப்பில் உருவானதை மிகவும் எளிமையாக தங்களின் கடவுள் மறுப்பு கொள்கைக்கு தேவையான சாயம் பூசி பயன்படுத்தி கொள்வது மிகவும் தவறான விஷயம். நடுநிலை வாதிகள் இவர்களின் போலி கொள்கையில் சிக்கிவிடகூடாது என்பதில் நானும் கவனமாக என்னுடைய பதிவின் மூலம் விளக்க முயல்கிறேன்.
தொடர்வோம்.
சகோதரர் கும்மி அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//
@Ashiq Synthetic Biology துறையில் synthia ஒரு மைல் கல் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
//
நான் தான் பதிவில் //உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை// என்று தெரிவித்து இருக்கின்றேனே...நீங்கள் பார்க்கவில்லையா?
உயிரியல் துறையில் இந்த ஆய்வு ஒரு மைல் கல் தான். எப்படி என்றால்...
"...the ability to synthesize DNA sequences chemically and insert them into already living cells has existed for decades, the JCVI achievement simply changes the scale..." - Christina Agapakis, What synthia means to me, Oscillator, Science Blogs, dated 21st May 2010.
இப்படித்தான்....அதாவது அளவுக்கோலில் தான்...
இப்போது இதுவா பதிவின் மையப்பொருள்?, சின்தியா மைல் கல்லா இல்லையா என்பதா பேசு பொருள்? பதிவின் தலைப்பு, "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?, இதற்கு சம்பந்தமாக ஏதாவது பேசலாமே...
நான் பதிவில் தெளிவாக சொன்ன ஒரு விஷயத்தை மறுபடியும் கேட்டு என் நேரத்தை வீணாக்குவது சரியா?
அடுத்த கேள்வியாவது பதிவிற்கு சம்பந்தமாக கேளுங்கள்...
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Ur contact number bro
DeleteSis. Nishath Begum,
DeleteAssalamu Alaikum, Pls mail me at aashiq.ahamed.14@gmail.com to get my contact number. jazakkallah
//உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை//
ReplyDeleteஇது யாருடைய கருதுகோள் என்று தெளிவாக இல்லாததால்தான் கேட்டேன். உங்கள் தரப்பிலும் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதுகின்றீர்கள். நன்று.
இந்த விஷயம் பற்றி உங்கள் தளத்தில் மே மாதம் நான் இட்ட
பின்னூட்டம் ஒன்று. இந்தப் பின்னூட்டத்தைப் பற்றியும், மற்றவற்றையும் பார்ப்பதற்கு முன், அடிப்படை விஷயம் இன்னொன்றைப் பற்றியும் தெளிந்து கொள்வோம்.
Synthia பற்றிய சில விஷயங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள சிலவும், எனது சில கேள்விகள் சிலவும். எளிமையான புரிதலுக்காக, பாக்டீரியாக்களின் பெயர்களுக்கு பதில் எண்களை உபயோகிக்கிறேன்.
உயிரி 1 லிருந்து, அதனுடைய மரபுரேகை மாதிரியை decode செய்து, (சில மாற்றங்களும் செய்து) வேதிப்பொருட்களைக் கொண்டு, அதனை மீண்டும் உருவாக்கிக்கொண்டனர்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிரி 1 ன் செயற்கை மரபுரேகை மாதிரியை உயிரி 2 கூட்டுக்குள் செலுத்தினர். அவ்வாறு செலுத்தும் முன் உயிரி 2ன் மரபு ரேகையையும் இன்னும் சிலவற்றையும் நீக்கிவிட்டு, கூட்டை மட்டும் வைத்துக்கொண்டனர்.
பிறகு உயிரி 2 , பிரதியெடுக்கத் தொடங்கியது. அவ்வாறு பிரதிஎடுத்தபின்பு வந்த உயிரியை synthia ( உயிரி 3) என்று அழைத்தனர்.
இப்பொழுது சில கேள்விகள்.
1. உயிரி 3 எத்தகையக் கூட்டினை கொண்டிருந்தது?
2. உயிரி 3ன் தன்மைகளில், உயிரி 1ன் தன்மைகள் என்னென்ன இருந்தன? உயிரி 2ன் தன்மைகள் என்னென்ன இருந்தன?
ஆராய்ச்சியில் என்னவெல்லாம் நடைபெற்றன என்று எழுதியுள்ளீர். ஆராய்ச்சியின் முடிவுகளை (outcome) விரிவாக எழுதவில்லை. அதனால்தான் இந்த கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது நேர விரயம் என்று நீங்கள் கருதினால், I can't help it.
நண்பர் திரு. கும்மி,
ReplyDelete//கும்மி said...
1. உயிரி 3 எத்தகையக் கூட்டினை கொண்டிருந்தது?//
முதலில் உயிரி 3 என்பதே கிடையாது. உயிரி 2ன் மரபு மாற்ற பட்டதால். உயிரி 2 ல் உயிரி 1 ன் குணங்கள் வந்துவிடும்.
//2. உயிரி 3ன் தன்மைகளில், உயிரி 1ன் தன்மைகள் என்னென்ன இருந்தன? உயிரி 2ன் தன்மைகள் என்னென்ன இருந்தன?//
தன்மைகள் என்பது மரபணு எதைப்பற்றி உள்ளதோ அதுவே, ஆக உயிரி 1 எப்படி இருக்குமோ அதன் பிரதியே உயிரி 2.
சுருக்க கூற வேண்டுமானால், இது ஒரு க்ளோனிங் போன்றதே, ஆனால் புதிய மரபணுக்கள் பழைய மரபனுக்கலை பார்த்தே ஒன்றுசேர்க்கபட்டுள்ளன. அந்த வேலையை செய்தது yeast என்ற ஒரு உயிரியே. புதிய உயிர் ஒன்றும் உருவாகவில்லை.
//சுருக்க கூற வேண்டுமானால், இது ஒரு க்ளோனிங் போன்றதே//
ReplyDeleteநீங்கள் சாதாரண பத்திரிகைகளில் வந்த செய்திகளை மட்டும் படித்துவிட்டு பேசுகின்றீர்கள். Science பத்திரிகையில் வந்த ஆய்வுக்கட்டுரை இங்கே இருக்கின்றது. அதை ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள். பிறகு விவாதிப்போம்.
உங்களுக்கு உயிரி 3 என்னும் வார்த்தை பிடிக்காவிட்டால் synthia என்றே அழையுங்கள். ஆய்வுக் கட்டுரையில் new cell என்று ஒன்றை கூறுகின்றார்கள். நான் அதனை பற்றி பேசுகின்றேன்.
//உங்கள் கேள்விகளுக்கு, எங்கள் தளத்தில் தனிப்பதிவில் பதில்களை இடுகின்றேன்//
ReplyDeleteஇறை நாடினால் காத்திருக்கின்றேன்
சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
நம் இருவரது கருத்துக்களிலும் நான் வேறுபாட்டை காணவில்லை. நான் ஒரு செல்லை உருவாக்கினாலே அது உயிரை உருவாக்கியதாய் அமையும் என்று கூறியது நுண்ணுயிரிக்களை வைத்து தான். மேலும் வென்டர் கழகத்தின் ஆய்வு நுண்ணுயிரிக்களை மையமாக வைத்து இயங்கியதும் ஒரு காரணம்.
என்னுடைய அந்த வாக்கியம் படிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்கள் கருதினால் அதனை எப்படி திருத்தி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினால் மாற்றம் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் கும்மி அவர்களுக்கு,
ReplyDeleteசலாம்,
என்ன சகோதரரே, சின்தியா உருவான முறை குறித்த விஷயங்களுக்கே இன்னும் விடை தெரியாத நிலையில் நீங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளுக்கு சென்று விட்டீர்களே....
சுற்றி வளைக்காமல் பின்வரும் கேள்விக்கு தெளிவாக பதில் அளிக்க முடியுமா?
ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்?
இது தான் பதிவின் மையமும் கூட...திசை திருப்பல்கள் வேண்டாம்....பதில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்து கொள்ளலாமே....
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//இது தான் பதிவின் மையமும் கூட...திசை திருப்பல்கள் வேண்டாம்....பதில் சொல்லிவிட்டு விஷயத்தை முடித்து கொள்ளலாமே..//
ReplyDeleteஆராய்ச்சி நடைபெற்ற விதத்தைப் பற்றி எழுதிவிட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை 'மட்டும்' வழக்கம்போல் எழுதாமல் விட்டுவிட்டீர். ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பேசாமல் எப்படி மற்றவற்றை பற்றி பேச முடியும்?
ஆராய்ச்சி குறித்த ஆய்வுக்கட்டுரையின் சுட்டி கொடுத்திருக்கின்றேன். விவாதிக்க விருப்பமில்லைஎன்றால் ஒன்றும் பாதகமில்லை. எவற்றையெல்லாம் , வெளியிடாமல் விட்டுவிட்டீர் என்ற பட்டியலை மட்டும் கொடுத்துவிட்டு நானும் சென்று விடுகின்றேன்.
---
பதிவுக்கு தொடர்பில்லாதது; இருப்பினும் தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி நிறுவனம் ரூடர்ஸ் அல்ல ராய்ட்டர்ஸ் (Reuters). (உச்சரிப்பை சரி செய்துகொள்வதற்காகவே கொடுத்தேன்)
சகோதரர் கும்மி அவர்களுக்கு,
ReplyDeleteசலாம்,
1. //ஆராய்ச்சி நடைபெற்ற விதத்தைப் பற்றி எழுதிவிட்டு, ஆராய்ச்சியின் முடிவுகளை 'மட்டும்' வழக்கம்போல் எழுதாமல் விட்டுவிட்டீர். ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி பேசாமல் எப்படி மற்றவற்றை பற்றி பேச முடியும்?//
ஒ அப்படியா, ஆராய்ச்சி முடிவுகளுக்கும் நான் கேட்ட கேள்விக்கும் சம்பந்தம் இருக்கா? அப்படி இருந்தால் தாராளமாக தொடரலாம்.
2. //ஆராய்ச்சி குறித்த ஆய்வுக்கட்டுரையின் சுட்டி கொடுத்திருக்கின்றேன்//
என்னோட Reference பகுதியில் முதல் reference சே அதுதான்...பார்க்கவில்லையா?
3. //எவற்றையெல்லாம் , வெளியிடாமல் விட்டுவிட்டீர் என்ற பட்டியலை மட்டும் கொடுத்துவிட்டு நானும் சென்று விடுகின்றேன்//
தாராளமா...எங்கே எடுத்து விடுங்க பார்ப்போம்... நீங்க போக வேண்டாம், பதிவிற்கும் நீங்கள் சொல்லப் போகும் ஆராய்ச்சி முடிவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெளிவு படுத்திய பிறகு சென்றால் போதும்.
4. //பதிவுக்கு தொடர்பில்லாதது; இருப்பினும் தகவலுக்காக: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி நிறுவனம் ரூடர்ஸ் அல்ல ராய்ட்டர்ஸ் (Reuters). (உச்சரிப்பை சரி செய்துகொள்வதற்காகவே கொடுத்தேன்) //
மாற்றி விட்டேன். உதவிக்கு நன்றி...
முடிவாக ஒன்று, நீங்கள் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக சொல்லி விட்ட பிறகு, என்னுடைய கேள்விக்கும் உங்களது பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் பதிலுக்கும் பதிவின் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்றும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்.
ready start....
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
கும்மி has left a new comment on your post ""செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கி...":
ReplyDeleteமுதலில் நாம் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்துவிடுவோம்.
JCVI அளித்த ஆய்வுக்கட்டுரையில் இருந்து ஒரு பத்தி.
We refer to such a cell controlled by a genome assembled from chemically synthesized pieces of DNA as a "synthetic cell," even though the cytoplasm of the recipient cell is not synthetic. Phenotypic effects of the recipient cytoplasm are diluted with protein turnover and as cells carrying only the transplanted genome replicate. Following transplantation and replication on a plate to form a colony (>30 divisions or >109-fold dilution), progeny will not contain any protein molecules that were present in the original recipient cell (10, 24). This was previously demonstrated when we first described genome transplantation (10). The properties of the cells controlled by the assembled genome are expected to be the same as if the whole cell had been produced synthetically (the DNA software builds its own hardware).
----
பிரதி எடுக்கும் செல்கள், உயிரி 2 ன் சைட்டோப்லாசத்தையும் (கூட்டினையும்), இதர சுவடுகளையும் முழுமையாக அழித்துவிடுகின்றன. அவ்வாறு பிரதி எடுக்கும் செல்கள், உயிரி 2 ன் தன்மைகளுள் எந்த ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. மேலும் உயிரி 1 ன் மரபுகளில் இருந்தும் வேறுபடுகின்றது. ஏனெனில், செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபு ரேகையில் 382 ஜீன்களே இருக்கின்றன. ஆனால், உயிரி 1 ன் மரபு ரேகையில் 482 ஜீன்கள் இருக்கின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபு ரேகை வாட்டர் மார்க்கும் செய்யப்பட்டு உள்ளது, எளிதில் அடையாளம் காண்பதற்காக. இவ்வாறு உருவாகி, பிரதி எடுக்கும் தன்மை பெற்ற இத்தகைய செல்கள், தனது நெருங்கிய உறவினரோடு கூட பல மரபுகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
இதுதான் ஆராய்ச்சியின் முடிவு. அந்த ஆய்வுக்கட்டுரை தவிர இங்கும், வெண்டர் பேச்சின் மூலம் அறியலாம்.
இந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, மேலும் பல மரபுரேகை மாற்றங்கள் மூலம், மருந்துகளுக்கும், உயிரி எரிபொருளுக்கும், தகுந்த பேக்டீரியாக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உயிர்களை உருவாக்குவது, கடவுளின் வேலை என்று கூறப்பட்டு வந்தது. தற்பொழுது, இத்தகைய பேக்டீரியாக்களை உருவாக்க வழிகண்டுபிடித்ததன் மூலம், கடவுளின் ஏரியாவுக்குள் மனிதன் காலடி எடுத்துவைத்துள்ளான். இதனைத்தான், வினவு பதிவில் "பழைய கடவுள் காலி" என்று கூறியுள்ளனர்.
அடுத்தது, அவ்வாறு உருவாக்கப்படும், இவ்வகை பேக்டீரியாக்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று வினவில் ஆராய்ந்துள்ளனர். மேற்கத்தியப் பன்னாட்டு நிறுவங்களோ, அமெரிக்க ராணுவத் துறைகளோ இவற்றைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வரும். அதனைத்தான், 'புதிய கடவுளர் யார்?' என்று கேட்டுள்ளனர்.
உங்கள் பதிவில் நீங்கள் எடுத்திருக்கும் முதல் விஷயம், (வினவு பதிவுத் தலைப்பு) இத்துடன் முடிவுறுகிறது என்று எண்ணுகின்றேன். முதல் விஷயத்தில் வேறு எதுவும் பேச வேண்டியது இல்லை என்றால், இரண்டாவது விஷயத்திற்குச் செல்வோம்.
Publish
Delete
Mark as spam
Moderate comments for this blog.
சகோதரர் கும்மியின் பின்னூட்டம் பிளாக்கரில் வரவில்லை....அதனால் என் பெயரில் பதிக்கப்பட்டுள்ளது
ReplyDeleteசகோதரர் கும்மி,
ReplyDeleteசலாம்,
என்ன கும்மி, நான் கேட்ட கேள்வி முன்னமே இருக்க நீங்கள் பிற்பகுதிக்கு சென்று விட்டீரே...
அதாவது,
1. ஒரு பாக்டீரியாவை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஈஸ்ட் செல்களின் துணை கொண்டு 1.08 மில்லியன் Base pairs கொண்ட மரபுரேகையை உருவாக்கினார்கள் அல்லவா?
2. assemble செய்வதில் ஏற்பட்ட ஒரு சிறு பிழை ஆராய்ச்சியை பல மாதங்களுக்கு முடக்கி போட்டது அல்லவா...
3. மிக கடின உழைப்பில் பலரும் பார்த்து பார்த்து, அதி நவீன இயந்திரங்களின் துணையோடு உருவாக்கியது இந்த செயற்கை மரபணு ரேகை. சரி தானே?
4. ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா?
இந்த கேள்வி நீங்கள் சொன்ன விசயத்திற்கு முன்னமே வருகிறது. அதனால் இந்த சந்தேகத்தை தீர்த்து விடுங்களேன் முதலில்...
அப்படி நீங்கள் செய்தால் பெரும் உதவியாய் இருக்கும்....
நன்றி...
சகோதரர் கும்மி,
ReplyDeleteஉங்களுடைய கடைசி பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்,
1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா? அல்லது
2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா?
What are you trying to tell me, Did venter team created a "Artificial life form" or did they transformed a existing life into new one?
நன்றி...
ஆஷிக் அஹ்மத் அ
.
ReplyDelete@Ashiq
உங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே! அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும்?
புதிய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் தருமா? அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா? என்பதுதான் வினவு பதிவின் மைய இழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார்?' என்று கேட்டிருக்கின்றனர். நீங்கள் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான், செங்கொடியிடமும் பேசினீர்கள்; இந்தப் பதிவையும் இட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று.
நீங்கள், ஆராய்ச்சியின் முடிவுகளை எழுதாமல் விட்டுவிட்டதால், நான் அதனைப் பற்றி எழுதிவிட்டு, புதிய செல் பற்றி சில விஷயங்களை கேட்கின்றேன். எப்பொழுது நான் புதிய செல்லின் தன்மைகளைப் பற்றி பேசினாலும், ஏன் உடனே வேறு விஷயங்கள் பக்கம் சென்று விடுகின்றீர்? மீண்டும் கேட்கின்றேன்: புதிய செல், உயிரி 2ன் தன்மைகளை முற்றும் இழந்திருந்தது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?
.
//உயிர்களை உருவாக்குவது, கடவுளின் வேலை என்று கூறப்பட்டு வந்தது. தற்பொழுது, இத்தகைய பேக்டீரியாக்களை உருவாக்க வழிகண்டுபிடித்ததன் மூலம், கடவுளின் ஏரியாவுக்குள் மனிதன் காலடி எடுத்துவைத்துள்ளான். இதனைத்தான், வினவு பதிவில் "பழைய கடவுள் காலி" என்று கூறியுள்ளனர். //
ReplyDelete//அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று.//
ஒரு குழப்பமான ஒரு தலைப்பை வைத்து விட்டு அதற்கு தங்களே ஒரு விளக்கத்தையும் வைத்துகொண்டால் அதை என்னவென்று கூறுவது. உங்கள் வாததிற்கே வருகிறேன், கடவுளின் ஏரியா உக்குள் மனிதன் நுழைந்துவிட்டான் என்று கூறுவதன் மூலன், மறைமுகமாக தங்களோ அல்லது வினவு கட்டுரையை எழுதியவரோ உயிரை உருவாக்குவது என்பது கடவுளின் ஏரியா என்பதை ஒப்பு கொள்கிறீரா? சரி இதனால் பழைய கடவுள் காலி என்று எப்படி ஆகும் அதை சற்று விளக்க முடியுமா?
//அமெரிக்க ராணுவத் துறைகளோ இவற்றைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு வரும். அதனைத்தான், 'புதிய கடவுளர் யார்?' என்று கேட்டுள்ளனர். //
அமெரிக்க ராணுவத்துறை எப்படி கட்டுபடுத்தும். க்ளோனிங் என்பது யார் கட்டுபாட்டில் தற்போது இருக்கிறது என்று கூற முடியுமா? தற்போது மனித க்ளோனிங் கூட சில நாடுகள் மறைமுகமாக முயற்சிசெய்து கொண்டுறுகின்றன. ஆக இது எந்த ஒரு நாட்டின் கட்டுபட்டிலும் இருக்காது. தங்களின் தலைப்பு ஒரு அர்த்தம் இல்லாத தலைப்பு என்று புரிகிறதா?
இனிமேலாவது அர்த்தம் இல்லாத தலைப்பை வைத்து புது விளக்கம் கொடுப்பதை விடுத்து பரிணாமத்தை மெய்பிக்க எதாவது இருக்கிறதா என்பதை தேடி பாருங்கள்.
சகோதரர் கும்மி அவர்களுக்கு,
ReplyDeleteசலாம்,
1.//உங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே! அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும்? புதிய தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் தருமா? அல்லது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன் தருமா? என்பதுதான் வினவு பதிவின் மைய இழை. அதனைத்தான், யாருடைய கட்டுப்பாட்டில் அது இருக்கும் என்பதை, 'புதிய கடவுளர் யார்?' என்று கேட்டிருக்கின்றனர். நீங்கள் அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான், செங்கொடியிடமும் பேசினீர்கள்; இந்தப் பதிவையும் இட்டுள்ளீர்கள். அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று//
வினவின் தலைப்பு "செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?" என்பது...
மருதையன் எழுதிய கட்டுரைக்கு ஜெயதேவ தாஸ் என்பவர் எழுதிய பின்னூட்டதிற்கு பதில் சொல்லிய வினவு பின்வரும் கருத்தை தெரிவிக்கிறது....
//இந்தக் கட்டுரை படைப்புத் தொழிலிலிருந்து கடவுள் காலி செய்யப்பட்டதை மட்டுமல்ல அந்த இடத்தை முதலாளிகள் எடுத்துக் கொள்வதைப் பற்றியும் விமரிசனம் செய்திருக்கிறது. முதலில் கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு சண்டைக்கு வரலாமே?//
ஆக, இந்த ஆய்வின் மூலம் படைப்பு தொழிலில் இருந்து கடவுள் காலி செய்யப்பட்டதாக இவர்கள் நினைத்து கொண்டார்கள். இதற்காகத்தான், சகோதரர்களா, காலி செய்யப்பட்டது கடவுள் அல்ல, உங்கள் (நாத்திக) கொள்கை தான் என்று விளக்கமளித்தேன்.
எப்படியென்றால்,
கடவுள் எப்போது படைப்பு தொழில் இருந்து காலியாவார்?, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே? இவர்கள் உயிரை உருவாக்கினார்களா?, வென்டர் ஒப்புக்கொண்டார் "நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று. பின்னர் எங்கிருந்து வந்தது "பழைய கடவுள் காலி" என்பது போன்ற வாதங்கள்?
இறைவன் படைத்த ஒன்றை காப்பி அடித்து விட்டு, இறைவன் படைத்த ஒன்றை assemble செய்ய துணையாக எடுத்துக்கொண்டு, இறைவன் படைத்த ஒன்றுக்குள் அதனை செலுத்திவிட்டு என்று அனைத்திலும் இறைவனின் படைப்பை துணையாகக் கொண்டு செய்து விட்டு "செயற்கை உயிர்" உருவாகி விட்டது என்று கூறுவதில் லாஜிக் இருக்கிறதா? இதைத்தானே அறிவியலாளர்கள் விமர்சித்தார்கள்?
அட்லீஸ்ட் இவர்கள் உருவாக்கிய மரபுரேகையாவது இவர்களாக டிசைன் செய்ததா? இல்லை...ஏற்கனவே இருந்த ஒன்று தான். காப்பி அடித்ததில் இருந்த சிறு பிழை பல மாத காலத்திற்கு ஆய்வுகளை முடக்கிவிட்டது. ஆக, இறைவன் படைத்தது போன்ற ஒன்றை தான் செய்தாக வேண்டும். இது எப்படி கடவுளை காலி செய்ததாக ஆகும்?
மருதையன் என்ன நினைத்து கொண்டார் என்றால் ////சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி - சிந்தடிகா// என்று..
இதற்காகத்தான், //இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா?// என்று sub-title வைத்து விளக்கி, அது மருதையன் போன்ற சகோதரர் முகத்தில் தான் கரியை பூசியிருப்பதாக விளக்கமளித்தேன்.
என்னுடைய பதிவு வினவுக்கு பதிலாக மட்டுமல்லலாமல், உண்மையில் இந்த ஆய்வு எதனை பொய்பிக்கின்றது என்பது பற்றியது, அதனால் தான் தலைப்பு வைத்தேன், //"செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?// என்று...
வினவிடம், "பழைய கடவுள் காலி...." என்று தலைப்பு வைத்ததில் லாஜிக் இல்லை, இந்த ஆய்வு கடவுளை பொய்பிக்கவில்லை என்று விளக்கி விட்டு , பின்னர் இந்த ஆய்வு நாத்திகத்தை எப்படி பொய்பிக்கின்றது என்றும் விளக்கியுள்ளேன்.
நீங்கள் என்னவென்றால், என்னுடைய பதிவிற்கு வந்து விட்டு, பதிவின் மற்றொரு மைய கருத்தான, //ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா?// என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் திசை திருப்பி கொண்டிருக்கின்றீர்கள்....
அடுத்த பதிலிலாவது சொல்வீர்களா?
@கும்மி,
ReplyDelete1. //உங்கள் பதிவே வினவு தளத்தில் வந்த பதிவுக்கான எதிர்வினைதானே! அதிலும், உங்களுக்கு அப்பதிவின் தலைப்புதானே, பெரிதும் உளைச்சலை அளித்த ஒன்று. அப்படி இருக்க, முதலில் அதைப் பற்றிதானே பேசவேண்டும்?//
அது பற்றி தானே பதிவில் பேசினேன், இந்த உரையாடல்களில் உங்களிடமும் பேசுகிறேன். கடவுளுடைய படைப்புகளை பயன்படுத்திக்கொண்டு, அவனுடைய படைப்புகள் இல்லாமல் சின்தியா வந்திருக்காது என்ற நிலையை வைத்துக்கொண்டு, செயற்கை உயிரை அறிவியலாளர்கள் உருவாக்கி கடவுளை காலி செய்து விட்டார்கள் என்று கூறுவது நியாயமா?
ஒரு செல்லை, இறைவனுடைய படைப்பை மாதிரியாக கொள்ளாமல், தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்?
ஒரு உயிரினத்தை வேறொன்றாக உருமாற்றி விட்டு கடவுளை காலி செய்து விட்டதாக கூறுவது அறிவுக்கு ஒத்து வருகின்றதா?
2. //அதனால்தான் நான் முதலில் அதுபற்றி பேசியுள்ளேன். நீங்கள்தான் சொல்ல வேண்டும், அந்தப் பதிவின் தலைப்பு மைய இழையோடு ஒட்டியுள்ளதா இல்லையா என்று//
மைய இழையோடு ஒட்டவில்லை என்றுதானே பதிவை போட்டு விளக்கம் கூறியுள்ளேன்.
3. //எப்பொழுது நான் புதிய செல்லின் தன்மைகளைப் பற்றி பேசினாலும், ஏன் உடனே வேறு விஷயங்கள் பக்கம் சென்று விடுகின்றீர்? மீண்டும் கேட்கின்றேன்: புதிய செல், உயிரி 2ன் தன்மைகளை முற்றும் இழந்திருந்தது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?//
ReplyDeleteஏன் என் மீது இப்படி ஒரு குற்றசாட்டு என்று புரியவில்லை...புதிய செல்லின் தன்மைகளை பற்றி பேசியதால் தான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில், உங்களது கருத்துக்கு பதிலாக // 1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா? அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா? What are you trying to tell me, Did venter team created a "Artificial life form" or did they transformed a existing life into new one?// என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதில் சொல்லவே இல்லை. இப்போது மறுபடியும் வந்து கேட்கின்றீர்களே?
என்னுடைய பதிவில், வென்டர் குறிப்பிட்டுள்ளதாக நான் எழுதியது,
//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம்....We transformed existing life into new life//
இருந்த ஒரு உயிரை வேறொரு "புது" உயிராக உருமாற்றி உள்ளதாக வென்டர் கூறுவதிலிருந்து இந்த உயிரின் தன்மைகள் வேறுபடுகின்றன என்பது தெரிகிறது. இதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை? நாளையே இவர்கள் மனிதனையும் இது போல செய்து "வேறொரு" புது உயிரினமாக மாற்றினால் அப்போதும் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என்று தாங்கள் எண்ணுகின்றீர்கள் என்று புரியவில்லை...இது எப்படி கடவுளை காலி செய்யும் என்றும் புரியவில்லை....
இப்போது நான் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்,
i) Did venter team created a "Artificial life form" or did they transformed a existing life into new one?
ii) ஒரு உயிரை உருவாக்குவது அல்லது இறைவன் உருவாக்கிய ஒரு உயிரை உருமாற்றுவது, இதில் எது இறைவனை காலி செய்ததாக அமையும்?
iii) இறைவனின் படைப்புகள் இல்லாமல் சின்தியா வந்திருக்க முடியுமா?
iv) மிக கடின உழைப்பில் பலரும் பார்த்து பார்த்து, அதி நவீன இயந்திரங்களின் துணையோடு உருவாக்கியது இந்த செயற்கை மரபணு ரேகை. ஒரு மரபுரேகைக்கே இவ்வளவு உதவியும், கண்காணிப்பும் தேவைப்படும் போது, ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்க முடியுமா? (இனி மேலும் இந்த கேள்விக்கு காலம் தாழ்த்தாமல் பதில் சொல்லுவீர்கள் என்று எண்ணுகிறேன்).
ஆக, உங்கள் முன் தெளிவாகவே கேள்விகளை தொகுத்திருப்பதாக எண்ணுகின்றேன். அதனால் தாங்கள் இனி மேலும் விஷயத்தை திசை திருப்பாமல் இந்த உரையாடல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று
கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
வினவிற்கு நான் போட்ட கமென்ட்:
ReplyDelete//கட்டுரை ஆசிரியர் தோழர் மருதையன் அவர்களே...
சிந்தடிக்கா(Synthetica) என்பது சரியா? சிந்தியா(Synthia) என்பது சரியா?
http://en.wikipedia.org/wiki/Synthia
Synthia என்றுதானே சொகிறார்கள்?
உயிர் என்பது இயற்கையாக தோன்றுவது என்றால், எதற்கு அதை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்? அது பாட்டுக்கு இயற்கையாக உருவாவதை வேடிக்கை பார்க்க மட்டும் குந்த வச்சு சும்மா உக்காந்து இருந்திருக்க வேண்டியதுதானே?
ஆக இயற்கையாக ஒரு உயிர் தோன்ற வாய்ப்பே இல்லை என்று நன்றாக --உண்மையாக விளங்கித்தானே, இன்று இந்த முயற்சியில் கிரேக் வேன்ட்டர் குழு இறங்கி இருகிறது?
இது எதை காட்டுகிறது?
'உயிர் என்ற ஒன்று தானாக உருவாகாது, யாராவது அதை உருவாக்க வேண்டும்' என்பதைத்தானே?
எனில், நாத்திகம் தானே செத்து விட்டது?
இன்று கிரேக் வேன்ட்டர் குழுவை கடவுளாக சுட்டும் நீங்கள், தானாக உருவாக வாய்ப்பில்லாத - கிரேக் வேன்ட்டர் குழு என்ற எதோ ஒன்று தேவைப்படும் அந்த முதல் உயிரை உருவாக்கியது எந்த கிரேக் வேன்ட்டர் குழு ?
ஆத்திகர்கள் அந்த 'குழுவை' கடவுள் என்கிறார்கள்... நாத்திகர்கள் 'இயற்கை' என்கிறார்கள்... எனில் அந்த இயற்கை எதற்கு இன்று கைகொடுக்க வில்லை?
செயற்கையாகத்தான் ஒரு உயிர் உருவாக்கப்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உயிர் என்பது யார் முயற்சியும் இல்லாமல் தானாவே உருவாவது என்ற நாத்திக வாதம் செத்து விட்டது என்று தானே பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது?
ஒருமுறை படைத்த கடவுள் மீண்டும் படைக்கவில்லை. ஏனெனில் இனப்பெருக்கம் நடப்பதால். ஆனால், அது தெரியுமா இயற்கைக்கு? ஏன் அது மீண்டும் மீண்டும் பலமுறை... அட்லீஸ்ட் ஒரு முறையாவது வேறு ஒரு உயிரை இயற்கையாக படைக்கவில்லை? அவ்வாறேனில் நீங்கள் கடவுளுக்கு வைத்திருக்கும் மறு பெயர்தான் 'இயற்கையா'? நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் ஆத்திகரா?
உண்மையில் தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்...
" செயற்கை உயிர்: நாத்திகம் காலி! புதிய நாத்திக கொள்கை என்ன? "///
இப்போது திரு.ஆஷிக், உங்களுக்கு...
ஒரு மனிதன், இப்போதில்ல என்றாலும் பற்பல ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில்.. சப்போஸ்... ஒரு உயிரை உருவாக்கினால், உண்மையிலேயே கடவுள் காலியா?
///////தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்?
////--என்று சொல்லும் நீங்கள்,
'உயிரை உருவாக்குவது கடவுள் வேலை மட்டும்தானா?' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா?' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா?' என்றும் விளக்க வேண்டும்.
.
ReplyDelete@Ashiq
நீங்கள் இவ்வளவு நீண்ட 3 பின்னூட்டங்களிலும் உங்கள் பதிவில் இருக்கும் விஷயங்களையே திரும்பவும் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயத்தைப் பற்றி கேட்கின்றேன் நான். நான் கேட்பது புதிய செல்லின் தன்மைகள் குறித்து.
நான் இதனைப் பற்றி பேசினால் வேறு கேள்விகளை கேட்கின்றீர் அல்லது பதிவில் இருப்பதை திரும்பவும் சொல்கின்றீர் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்.
ஒன்று, புதிய செல்லின் தன்மைகள் பற்றி பேசலாம் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம்.
Now, the ball is in your court!
.
சகோதரர் கும்மி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
1. //நீங்கள் இவ்வளவு நீண்ட 3 பின்னூட்டங்களிலும் உங்கள் பதிவில் இருக்கும் விஷயங்களையே திரும்பவும் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயத்தைப் பற்றி கேட்கின்றேன் நான். நான் கேட்பது புதிய செல்லின் தன்மைகள் குறித்து. நான் இதனைப் பற்றி பேசினால் வேறு கேள்விகளை கேட்கின்றீர் அல்லது பதிவில் இருப்பதை திரும்பவும் சொல்கின்றீர் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று கூறுகின்றீர்கள்//
நீங்கள் புதிய செல்லின் தன்மைகளை பற்றி கேட்டதற்கு தான்,
*************************************************************
//புதிய செல்லின் தன்மைகளை பற்றி பேசியதால் தான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில், உங்களது கருத்துக்கு பதிலாக // 1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா? அல்லது 2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா? What are you trying to tell me, Did venter team created a "Artificial life form" or did they transformed a existing life into new one?// என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதில் சொல்லவே இல்லை. இப்போது மறுபடியும் வந்து கேட்கின்றீர்களே?
என்னுடைய பதிவில், வென்டர் குறிப்பிட்டுள்ளதாக நான் எழுதியது,
//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம்....We transformed existing life into new life//
இருந்த ஒரு உயிரை வேறொரு "புது" உயிராக உருமாற்றி உள்ளதாக வென்டர் கூறுவதிலிருந்து இந்த உயிரின் தன்மைகள் வேறுபடுகின்றன என்பது தெரிகிறது. இதில் என்ன பிரச்சனை என்று புரியவில்லை? நாளையே இவர்கள் மனிதனையும் இது போல செய்து "வேறொரு" புது உயிரினமாக மாற்றினால் அப்போதும் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என்று தாங்கள் எண்ணுகின்றீர்கள் என்று புரியவில்லை...இது எப்படி கடவுளை காலி செய்யும் என்றும் புரியவில்லை//
*************************************************************
என்று பதில் கூறினேன். ஆனால் நீங்களோ இது குறித்து நான் எழுப்பிய கேள்விகளான
//1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா? அல்லது
2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா? What are you trying to tell me, Did venter team created a "Artificial life form" or did they transformed a existing life into new one?//
போன்றவற்றிக்கு இன்னும் பதில் கூறவே இல்லை. திசை திருப்பவே முயற்சிக்கின்றீர்கள். மற்றொரு கருத்தான "இந்த ஆய்வு நாத்திகத்தை பொய்பிக்கின்றது" என்றதற்கு இது வரை பதில் கூறவே இல்லை.
@ கும்மி,
ReplyDelete2. //ஒன்று, புதிய செல்லின் தன்மைகள் பற்றி பேசலாம் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம்//
சரி கும்மி, புதிய செல்லின் தன்மைகள் குறித்து கூறுங்கள். மறக்காமல் அது மூலமாக என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதையும், அது எப்படி கடவுளை காலி செய்கின்றது என்பதையும் சொல்லி விடுங்கள்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete@கும்மி,
//நான் பொதுவெளிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் வெளிக்காட்டிக்கொள்வேன்.//
இடைப்பட்ட காலங்களில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. குளோபல் வார்மிங் வேற அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. எனவே நீங்கள் இப்போதே பொதுவெளிக்கு வந்து விசயத்தை சொல்லலாம் செங்கொடியார் போல. (குறிப்பு: குளோபல் வார்மிங் பேசுபொருள் கிடையாது. ஆகவே அதிலிருந்து ஆஷிக்கிற்கு கேள்விகள் எழுப்பி பதிவை திசை திருப்ப வேண்டாம்)
//அதற்குள், அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத விசிலடிச்சான், பதிவிற்கு சம்பந்தமில்லாமல் நான் பேசுவதாக உளறிக்கொண்டிருக்கின்றது //
இந்த வார்த்தை அப்படியே உங்களுக்கு நன்றாக பொருந்தி போகின்றது பாருங்கள். உங்களை நோக்கி ஆஷிக் என்ன பதிலை சொல்லியிருக்கின்றார் என்பதை கொஞ்சம் படித்து பாருங்கள்.
""" இதற்கு சம்பந்தமாக ஏதாவது பேசலாமே...
அடுத்த கேள்வியாவது பதிவிற்கு சம்பந்தமாக கேளுங்கள்.."""
நீங்கள் தான் அறிவியல் துறை அத்தாரிட்டியா? இவருக்கு அறிவியல் தெரியும் இவருக்கு தெரியாது என்று முடிவு செய்வதற்கு. பரிணாம மாயாஜால கதைகளை அறிவியல் என்று உதார் விடும் உங்களின் அறிவியல் அறிவை நினைத்து புல்லரிக்கின்றது.
மீண்டும் ஒரு முறை உங்களிடம் சொல்லுவது பதிவிற்கு சம்பந்தமாக பேசுங்கள் என்பது தான். ஆசிக்கும் இதே வேண்டுகோளை தான் உங்களிடம் பல இடங்களில் வைத்திருக்கின்றார். அறிவியல் மாமேதையான நீங்கள் அடிப்படையில் ஆஷிக் எழுப்பியிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.
நாளை பதிலிடுகின்றேன்
ReplyDelete@ கும்மி,
ReplyDeleteசலாம்,
//நாளை பதிலிடுகின்றேன்//
இன்ஷா அல்லாஹ்...ஆவலுடன் காத்திருக்கின்றேன்....
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
புதிய செல்லில் உயிரி 2ன் தன்மைகள் எதுவும் இல்லை. செயற்கை மரபு ரேகை, உயிரி 2ன் தன்மைகளை அழித்துவிட்டு, பிரதி எடுக்கின்றது. அதாவது, ஆய்வுக்கூடத்தில், வேதிப்பொருட்களின் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை மரபு ரேகை, புதிய செல்லின் தன்மைகளையும், பிரதி எடுக்கும் தன்மையையும் தோற்றுவிக்கின்றது. அந்த புதிய செல் முழுமையாக வேதிப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால்தான், அது Synthetic Cell என்று அழைக்கப்படுகின்றது.
ReplyDeleteஇதற்கு முன்னர் நடைபெற்ற ஆராய்ச்சிகளில், வேறு உயிரியின் மரபு ரேகையை செலுத்துவது வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆராய்ச்சியில்தான், பிரதி எடுக்கும் தன்மையும், முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மையும் உடைய மரபுரேகை உருவாக்கப்பட்டது. அதனால்தான், இந்த ஆராய்ச்சி, Synthetic Biology துறையில் ஒரு முக்கியமான மைல் கல் எனக் கூறப்படுகின்றது. அதனை நீங்களும் ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.
இந்த ஆராய்ச்சி நடைபெற்றதன் மூலம், படைப்புகள் ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கமுடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. படைப்புத் தொழில் இறைவனுக்கு உரியது என்று கூறியது, இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. படைப்புத் தொழிலை ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தும், Synthetic Biology துறையின் மைல் கல்லாக கருதப்படும் இந்த ஆராய்ச்சி கடவுளின் ஏரியாவுக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
இந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது. இல்லை, இதற்கு மேல் இவ்வகை ஆராய்ச்சிகள் நடைபெற்று பல புதுவகை உயிரினங்கள் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டாலும், கடவுளின் கொள்கையை தகர்க்கவில்லை என்று கூற விரும்புபவர்கள், தாராளமாகக் கூறிக்கொள்ளலாம்.
இந்தப் பதிவில் ஆராய்ச்சியின் முடிவு தொடர்பாய், விடுபட்ட இன்னும் சில செய்திகள்.
1.The man-made genome was then transplanted into a related bacterium, Mycoplasma capricolum. This “rebooted” the cell so that it was controlled by the synthetic genome, transforming it into another species. The cell has since divided more than a billion times.
2.இந்த செய்தியில் இருக்கும் படத்தைப் பாருங்கள்.
3.இந்த வீடியோவும்
4.இதுவும்
.
பதிவில் மிக முக்கியமாய் Christina Agapakis என்னும் பெண்ணின் கருத்தை பல இடங்களில் போட்டு, ஏதோ சொல்ல முனைந்திருக்கின்றீர். அப்பெண் யாரென்று பார்த்தால், அவர் ஒரு ஆராய்ச்சி மாணவி. வெண்டரோடு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தன் ப்ளாக்கில் போட்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு சாதாரணமானவர். அவர் கூறியதால், இந்த ஆராய்ச்சி ஒன்றும் பெரிய ஆராய்ச்சியல்ல என்னும் ரீதியில் கூறியுள்ளீர்கள். இந்தத் துறையில், அவரை விட பெருமளவு சாதனைகள் செய்த விஞ்ஞானிகளின் கருத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு, இவரது கருத்தை மட்டும் ஏன் போட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. இசைக்கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவன், இளையராஜா அமைத்த சிம்பொனி ஒன்றும் சிறப்பானது அல்ல என்று கூறுவது போல் உள்ளது. Arthur Caplan, PhD, director of the Center for Bioethics, University of Pennsylvania, Philadelphia, saw the study as a demonstration that "the material world can be manipulated to produce what we recognize as life. In doing so they bring to an end a debate about the nature of life that has lasted thousands of years," he writes.
ReplyDeleteTo his mind, the metaphysical views of the major religions are "cast into doubt by the demonstration that life can be created from non-living parts, albeit those harvested from a cell. Venter's achievement would seem to extinguish the argument that life requires a special force or power to exist.
Bioethicist Art Caplan, a friend of mine, thinks it puts forever to rest the idea that living things are “endowed with some sort of special power, force, or property.” It is conclusive proof that life is nothing more than interacting chemicals.
David Deamer
Using the tools of synthetic biology, perhaps DNA and proteins can be discarded — RNA itself can act both as a genetic molecule and as a catalyst. If a synthetic RNA can be designed to catalyse its own reproduction within an artificial membrane, we really will have created life in the laboratory, perhaps resembling the first forms of life on Earth nearly four billion years ago.
மற்றவர்களின் பேட்டிகள்.
------------
My views are subject to reader's comprehension. PERIOD.
.
//குளோபல் வார்மிங் வேற அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. //
ReplyDeleteஜல்லியில் கில்லி.
சகோதரர் கும்மி அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//புதிய செல்லில் உயிரி 2ன் தன்மைகள் எதுவும் இல்லை. செயற்கை மரபு ரேகை, உயிரி 2ன் தன்மைகளை அழித்துவிட்டு, பிரதி எடுக்கின்றது. அதாவது, ஆய்வுக்கூடத்தில், வேதிப்பொருட்களின் கலவையைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை மரபு ரேகை, புதிய செல்லின் தன்மைகளையும், பிரதி எடுக்கும் தன்மையையும் தோற்றுவிக்கின்றது. அந்த புதிய செல் முழுமையாக வேதிப்பொருட்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால்தான், அது Synthetic Cell என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஆராய்ச்சிகளில், வேறு உயிரியின் மரபு ரேகையை செலுத்துவது வெற்றி பெற்றிருந்தாலும், இந்த ஆராய்ச்சியில்தான், பிரதி எடுக்கும் தன்மையும், முழுமையாகக் கட்டுப்படுத்தும் தன்மையும் உடைய மரபுரேகை உருவாக்கப்பட்டது. அதனால்தான், இந்த ஆராய்ச்சி, Synthetic Biology துறையில் ஒரு முக்கியமான மைல் கல் எனக் கூறப்படுகின்றது. அதனை நீங்களும் ஒத்துக்கொண்டுள்ளீர்கள்//
தங்களுடைய பதிலுக்கு நன்றிகள் பல. தாங்கள் தன்மைகளை விளக்கியதன் மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்,
1. வென்டர் கழகம் ஒரு செயற்கை உயிரை உருவாக்கிவிட்டது என்றா? அல்லது
2. இருந்த ஒரு உயிரினத்தை modify செய்து வேறு ஒரு உயிரினத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றா?
What are you trying to tell me,
1. Did venter team created a "Artificial life form" or
2. did they transformed a existing life into new one?
தாங்கள் இந்த கேள்விக்கு நேரம் தாழ்த்தாமல் பதில் கூறினால் உங்களது அடுத்த கருத்தான
//இந்த ஆராய்ச்சி நடைபெற்றதன் மூலம், படைப்புகள் ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கமுடியும் என்று நிறுவப்பட்டுள்ளது. படைப்புத் தொழில் இறைவனுக்கு உரியது என்று கூறியது, இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. படைப்புத் தொழிலை ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தும், Synthetic Biology துறையின் மைல் கல்லாக கருதப்படும் இந்த ஆராய்ச்சி கடவுளின் ஏரியாவுக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது//
என்பதற்கு செல்ல ஆவலாக இருக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அது போலவே உங்கள் அடுத்த கருத்துக்களுக்கும்....
நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//இந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.// என்று நான் கூறிவிட்டேன். நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும் பாதகமில்லை.
ReplyDelete@ கும்மி,
ReplyDeletesalaam,
////இந்த முதல் அடியின் நீட்சி அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.// என்று நான் கூறிவிட்டேன். நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும் பாதகமில்லை//
சகோதரரே இந்த இரண்டில் எது சரி என்று நீங்கள் புரிதல் வைத்திருக்கின்றீர்கள்?
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//"செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?//
ReplyDeleteஇரண்டையும் அல்ல, வினவு பதிவில் ஒருவர் அவ்வாறு எழுதினால் அவர் அனைத்து நாத்திக கொள்கைகளுக்கான பிரதிநிதி / ஆணையர் அல்ல. (He ain't the representative / authority of atheism)
Quote:
செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?
ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.
அது எவ்வாறு சுக்குநூறாக நொருக்கியிருக்கிறது என்பதை விரிவாக்கவும். அதாவது செயற்கை செல் எவ்வாறு இந்த கொள்கையை பொய்யாக்குகின்றது. நாத்திகத்தின் முக்கியமான கொள்கை எனத் தாங்கள் கூறுவது, பரிணாம கொள்கையையா அல்லது கடவுள் அனைத்தையும் படைத்தான் / படைத்தார் / படைத்தது (உவமை வேறுபடும்) எனக் கூறும் ஆத்திகத்தின் கொள்கையை நிராகரிப்பதா ?
Quote:
ஒரு மனிதன், இப்போதில்ல என்றாலும் பற்பல ஆண்டுகள் கழித்து பிற்காலத்தில்.. சப்போஸ்... ஒரு உயிரை உருவாக்கினால், உண்மையிலேயே கடவுள் காலியா?
///////தங்களுடைய சொந்த டிசைனை கொண்டு உருவாக்கினால் தானே கடவுளை காலி செய்ததாக அமையும்?
////--என்று சொல்லும் நீங்கள்,
'உயிரை உருவாக்குவது கடவுள் வேலை மட்டும்தானா?' 'அதை மனிதன் செய்ய வாய்ப்பே இல்லையா?' 'அதுபோல ஒருவேளை அறிவியல் முன்னேற்றம் கண்டு அது நிகழ்ந்தால், ''நான் காலியாகி விடுவேன்'' என்று கடவுள் எங்காவது சொல்லி இருக்கிறாரா?' என்றும் விளக்க வேண்டும்.
எப்போதும் வென்றான் என்ற அன்பர் இவ்வாறு கேட்டுள்ளார், அதற்கான பதிலை இடவும். அதாவது பின்காலங்களில் செயற்கை செல் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அறிவியலில் வளர்ச்சி ஏற்படுமா ? (i.e Can a synthetic "cell" be created from scratch)
கும்மி இங்கேயும் பாதியிலேயே விட்டுட்டு போயாச்சா? திருந்த வாய்ப்பே இல்லையா? கும்மி எங்கேயாச்சும் நீங்க முழுசா விவாதிச்சு நான் பார்க்கவே இல்லை. சும்மா எதாச்சும் சால்ஜாப்பு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுறீங்க. ஏன் முழுசா விவாதிக்க மாட்டேங்குறீங்க கும்மி?
ReplyDeleteby
Faizal
அன்புக்குரிய ஆசிரியர்க்கு, பரிணாமம் என்பது ஒரு தத்துவமே தவிர ஒரு முடிவல்ல. அதுபோல கடவுள் என்பதும் ஒரு கான்செப்ட் அல்லது தத்துவமே. ஒரு எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கும் ஒரு பேராற்றலே இறைவன் (இறைந்து இருப்பது, பிரமன் பெருகி கொண்டே இருப்பது) என்று நாம் நம்பிக்கை கொண்டு அதனை வழிபடுகிறோம். அதே போல் பரிணாமம் என்பது உயிரினத்தில் இல்லை. காரணம் ஒரு செல் உயிரினம் கால போக்கில் அல்லது இறை நாட்டப்படி இரு செல் உயிரினமாக மூன்று, நான்கு என்று பெருகி மாறி ஒரு அறிவு இரு அறிவு என்றும் மாற்றம் பெற்றது என்றும் ஒரு தத்துவம் உள்ளது. இதனை ஆழியாரில் மனவளக்கலை என்னும் பெயரில் தியானம் கற்று கொடுத்துவரும் மகரிஷி அவர்கள் மிக எளிய முறையில் கற்று கொடுத்து வருகிறார்கள். அவர்கள் பரிணாமம் என்னும் வார்த்தைக்கு பதில் தன்மாற்றம் என்னும் பதத்தை உபயோக படுத்தி வருகிறார்கள். அவர்களின் பிரபஞ்ச தோற்றமும் உயிரின பரினமமும் என்னும் தலைப்பிலான தத்துவ உரைகளின் முடிவில் இறைவன் ஒருவன் இறக்கிறான் என்பதனை அறிவு பூர்வமாக உணர்த்தும் வகையில் சொல்லிதருகிரர்கள்.
ReplyDeleteMOHAMED ISMAIL @ well said bro
ReplyDeleteஆத்தீகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறேன் பிரபஞ்சம் தானாகத் தோன்றியது என்பதை எம்மால் நம்ப முடிவதில்லை ...ஆனால் கடவுளுடன் ஒப்பிடுகையில் பிரபஞ்சம் அவரின் கால் தூசுக்கு கூட இணையாகாது ஆனால் பிரபஞ்சம் தானாக தோன்றியது என்றால் நம்ப மறுக்கும் நாம் கடவுள் தானாக தோன்றியவர் என்றால் உடனே மறு கேள்வி கேட்காது நம்பி விடுகிறோமே ஏன்? எல்லாவற்றையும் தோற்றுவிக்க ஒருவர் வேண்டும் அவர் கடவுளாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் இந்த ஒரே ஒரு விடயத்தை வைத்துத்தான் ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கையையும் உருவாக்கி உள்ளார்கள் ....ஆனால் இந்த லாஜிக் கடவுளிடம் மட்டும் நாம் பயன் படுத்துவதில்லை எனக்கு எந்த கேள்விக்கு விடை தரவும் ..நான் ஆத்திகனுமல்ல நாத்திகனுமல்ல இரண்டும் நிரந்தர இருக்கைகள் நான் அவற்றில் அமர விரும்புவதில்லை எனக்கு பெற்றோர் சொன்னதற்காக ..எனது பாடப்புத்தகம் எனக்கு படிப்பித்தத்ற்காக கடவுளை என்னால் உணர முடிய வில்லை வேறு விதமாக சொன்னால் அவளவு பெரிய கடவுளை ஒரு சில மனிதர்களும் புத்தக்ம் மட்டும் விளக்கிவிட முடியாது ...அப்படி விளக்கி கடவுள் நம்பிக்கை வந்தால் அவர் கடவுளே அல்ல ஏனென்றால் கடவுளை அவளவு தூரம் உயர்த்தி வைத்துள்ளோம் அதாவது எமக்கு எட்டிய உயரம் வரை ...விளக்கம் தரவும்
ReplyDelete