அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது.
இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறிய தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்ற பிரச்சாரம் எடுபட்டதில்லை என்பதொடு மட்டுமல்லாமல் பல சகோதரிகளை நம் மார்க்க சகோதரிகளாக கொடுத்திருக்கின்றது இந்த பிரச்சாரம். அந்த வகையில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் நமக்கு மிகப்பெரும் உதவி புரிகின்றனர் என்றால் அது மிகையாகாது.
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன் "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன்.
- பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.
- லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
- இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார்.
இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.
அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ்.
அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.
1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London
இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது.
வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று.
ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அது அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.
ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது?
சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன்.
ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.
குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.
மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன்.
என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன.
ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".
நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்தி படுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.
அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.
படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.
என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா? எங்களால் முடியாது"
என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"
நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.
காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.
என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.
இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது.
முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.
நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.
2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey)
Solicitor, 30, Bradford
நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"
நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை.
2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"
நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".
பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.
முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.
லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது.
எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"
நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர்.
அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.
பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.
சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன்.
"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்".
சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார்.
"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?".
கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார்.
"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?.
அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.
நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது.
நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன். சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.
நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை.
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....
பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.
டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து.
"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டு கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.
இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.
இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை.
My Sincere Thanks to:
1. The Times.
Reference:
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரன் ஆஷிக்,
பெண்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கின்றதா என்ற கேள்விக்கு நெற்றியில் அடித்தது போன்றதொரு பதிலை அந்த சகோதரிகளின் வாழ்க்கை முறை சொல்லுகிறது. பிறப்பால் இஸ்லாத்தை பின்பற்றுகின்ற பெண்கள் இதை சொன்னாலாவது ஏதாவது சொல்லி சமாளிக்க இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முயலலாம். ஆனால் தேடலின் மூலம் இஸ்லாத்தை அடைந்த மேற்குலக பெண்களே ஹிஜாபின் மூலம் தாங்கள் பெருமையடைகின்றோம் என்று சொல்லுகின்ற போது பாவம் இந்த பெண்ணியவாதிகள். எதை சொல்லி சமாளிக்க முடியும்? மேலும் ஹிஜாப் இல்லையென்றால் தான் "நிர்வாணமாக" இருப்பதாக உணர்கிறேன் என்று சொல்லிய அந்த சகோதரியின் வார்த்தைகள் நிதர்சனமான உண்மை. இப்படி சொல்லிய இந்த பெண்ணை எதிர்த்து கவிதாயினிகள் தக்காளி சுண்டைக்காய் சட்னி கவிதை எழுதுவார்களோ?
மேற்குலகை சார்ந்த பெண்கள் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும்போது இங்கிருக்கின்ற பெண்கள் ஏன் இஸ்லாத்தின் பக்கம் வரவில்லை என்பதை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். ஸ்டெப்ஸ் சரிபா போன்ற சில முஸ்லிம் பெண்களே இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக குரல் கொடுத்து கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டது எதனால் என்பதையும் நாம் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை இங்கு நாம் அவர்களுக்கு கொடுத்திருக்கிறோமா? ஒவ்வொருவரும் தம் மனசாட்சியுடன் பதில் சொல்ல வேண்டிய கேள்வியிது. பள்ளிவாசல்களுக்கு அவர்கள் வருகிற வழிபாட்டு உரிமையை பறித்திருக்கிறோம். தவ்ஹீது அடிப்படையிலான பள்ளிவாசல்களும் மற்றும் சில மஸ்ஜிதுகளும் பெண்களை அனுமதிக்கின்றன.
ReplyDeleteஇஸ்லாம் வழங்கிய பெரும்பாலான உரிமைகளை இங்கிருக்கின்ற பெண்களுக்கு நாம் வழங்குவதேயில்லை. இதனையெல்லாம் காண்கின்ற பெண்கள் எவ்வாறு இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நாம் யோசித்து அவர்களுக்கு இஸ்லாம் வழங்கிய அத்துனை உரிமைகளையும் கொடுத்து விட வேண்டும். ஏனெனில் நமது செயல்பாடுகளால் தான் பலர் இஸ்லாத்திற்கு வரவே தயங்குகின்றனர். நாளை மறுமையில் இதற்கும் சேர்த்து நாம் தான் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.
ReplyDeleteஇஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?
ReplyDeleteகடவுளுக்கும் விளம்பரம் தேவைப்படுது .. உங்கட தொல்லை தாங்க முடியேல்லையே ...திருத்தவே முடியாதா ?..:P
ReplyDelete//S.Sudharshan said...
ReplyDeleteகடவுளுக்கும் விளம்பரம் தேவைப்படுது .. உங்கட தொல்லை தாங்க முடியேல்லையே ...திருத்தவே முடியாதா ?.//
சகோதரர் சுதர்ஷன் அவர்களே. இப்பதிவு எவ்வகையில் கடவுளின் விளம்பரம் என தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
//இப்பதிவு எவ்வகையில் கடவுளின் விளம்பரம் என தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்//
ReplyDeleteதொலை காட்சி சேனல்களில் பார்த்திருப்பீர்களே. உலக மஹா மருத்துவர்கள், தங்கள் பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்துக்கொண்டு தங்கள் திறமைகளை பக்கம் பக்கமாக கூறுவார்கள். இவருக்கு வருடக்கணக்கில் கை கால்களில் குடைச்சல் இருந்தது, என்னுடைய ஒரு வேளை மருந்தில் எல்லாம் சரியாகி விட்டது. என்னுடைய மருந்து தான் உலகத்திலேயே சிறந்தது என்கிற அளவுக்கு அளந்து கட்டுவார்கள். பக்கத்தில் இருப்பவரும் நன்றாக ஜால்ரா போடுவார். அது போன்று தான் இதுவும். பார்த்தீர்களா இவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறி கொண்டு இறக்கிறார்கள். நீங்கள் எப்போது மாறப்போகிறீர்கள் என்பது மாதிரி. திடீர் திடீர் என்று ஒரு செய்தியை பரப்புவார்கள். மைக்கேல் ஜாக்சன் இஸ்லாமியராகிவிட்டார். மைக் டைசன் இஸ்லாமியராகிவிட்டார், அவர் மாறி விட்டார் இவர் மாறி விட்டார் என்று. ஆனால் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. மைகேல் ஜாக்சன் இஸ்லாமியரகிவிட்டார் என்று செய்தி பரப்பி கொண்டு இருந்தார்கள். ஆனால் இறந்த பிறகு அவர் கிறிஸ்த முறைப்படி தான் அடக்கப்பட்டதாக செய்திகள் கூறின. அந்த நேரத்தில் இவர்கள் எங்கே போனார்களோ தெரியவில்லை.இதுவும் விளம்பரத்தில் ஒரு வகை தான் ,
தரமான பொருளுக்கு என்றைக்குமே விளம்பரம் தேவை இல்லை.
சகோதரர் அருண்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
அமைதி..அமைதி....தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுவதால் ஒரு உபயோகமும் இருக்க போவதில்லை. டைம்ஸ் ஊடகத்தில் வந்த செய்தி தான் இங்கே தரப்பட்டுள்ளது. முடியுமானால் டைம்ஸ் ஆன்லைன்னுக்கு ஒரு கண்டன மெயில் அனுப்பி விடுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியும் தந்தருள்வானாக...ஆமின்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நங்கள் அமைதியாகத்தான் தெளிந்த மனதுடன் தான் இருக்கிறோம் ஆஷிக் அவர்களே, இந்த அமைதி உலகெங்கிலும் உள்ள உங்கள் அமைதி மர்க்கதினற்கு தான் முதலில் தேவை. டைம்ஸ் ஆன்லைனில் வந்த செய்தியை தமிழில் வாந்தி எடுத்தவர் நீங்கள் தானே. இஸ்லாமிய மார்க்கத்தின் நிறுவனரான அல்லா குரான் முழுக்க தன்னுடைய கொள்கை பரப்பு செயலாளரான முகமது மூலமாக இந்த விளம்பரத்தை தானே செய்து கொண்டிருக்கிறார். என்னை நம்புங்கள் நாந்தான் ஒரே கடவுள். முகமது தான் என்னுடைய தூதர் என்று. பெற்ற தாயை ஒரு பிள்ளை பிறர் கூற தெரிய வேண்டியது இல்லை. இந்த குரானை நீங்கள் சிந்திக்க வேண்டாமா நான்தான் கடவுள் என்று சிந்திக்க வேண்டாமா என்று ரொம்பவே கடவுள் வேதனையுடன் கேட்கிறார். பாவம் கடவுளுக்கு கூட தன்னை வெளிப்படுத்த ஒரு புத்தகமும் அத்துடன் ஒரு கொள்கை பரப்பு செயலாளரும் தேவைப்படுகிறார்.
ReplyDeleteஎல்லாம் வல்ல அன்பும் கருணையும் உள்ள உங்கள் அல்லா பெண்களை பற்றி தான் ரிலீஸ் செய்த புத்தகத்தில் (குரான்: 4:34 ) அவர்களை அடிக்க சொல்கிறார். அதுவும் லேசாக அடிக்க சொல்கிறார். ஏன் என்றால் அவர் கருணை கடல் அல்லவா அதனால் தான் அந்த லேசான அடி. இதிலும் மேலாக உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் (2:223) என்ன அற்புத கடவுளின் வார்த்தைகள். குரான் 3:14 கூறுகிறது " தங்கம், வெள்ளி, குதிரைகள், கால்நடைகள், நிலம் போல பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்தரும் பொருள்தான்" என்று. என்ன பரவசமூட்டும் வார்த்தைகள் இவை. இன்னும் நிறய இது போல பெண்களை பற்றி மிக உயர்ந்த வார்த்தைகளை குர்ஆனில் காணலாம்.
//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.//
அப்படியா !
//இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து,//
எங்கயோ இடிக்குதே
சகோதரர் அருண்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
அமைதி..அமைதி....தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.மேலும் மேலும் உணர்ச்சிவசப்படுவதால் ஒரு உபயோகமும் இருக்க போவதில்லை.நீங்கள் மெனக்கெட்டு சேகரித்த 4:34 வசனத்தின் முழு அர்த்தம் இதோ.
//(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.//
கொடுத்தது இஸ்லாம்
//பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். 4:7//
SOURCE ; http://www.tamililquran.com/qurandisp.php?start=4
அப்புறம் இன்னொரு விஷயம் . குரான் முழுவதும் நீங்கள் தேடி பார்த்தாலும் எங்கேயும் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்ற சொல்லியோ,மொட்டை அடிக்க சொல்லியோ,அல்லது வெள்ளை சேலையை மட்டும் கட்ட சொல்லியோ வசனங்கள் இருக்காது என ஆணித்தரமாக கூற முடியும்,
<-Arun said...
//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation.//
அப்படியா !->
அப்புடிதேன்
/எங்கயோ இடிக்குதே/
நீங்கள் சுட்டிகாட்டியவைகள் இஸ்லாத்தில் உள்ளதா? அல்லது சில முஸ்லிம்கள் செய்வதா??
CLICK AND READ
ReplyDeleteஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
.......
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ReplyDelete///ஸ்டெப்ஸ் சரிபா போன்ற சில முஸ்லிம் பெண்களே இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக குரல் கொடுத்து கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டது எதனால் என்பதையும் நாம் திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்.///
கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டிய விஷயமிது
அதே சமயத்தில் சிலர் பிரபலம் அவதற்கு இஸ்லாத்தை கையில் எடுக்குகிறார்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்தால் மேற்கு உலக அனைத்து மீடியக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன
திரு shanawazkhan.......
ReplyDeleteவசனத்தின் முழு அர்த்தமும் ஒரே கருத்தை தானே சொல்கிறது ஆணுக்கு கீழ்தான் பெண் என்பது தானே அது. இதில் விசேசமாக எதையும் சொல்ல வில்லையே.
///எங்கயோ இடிக்குதே/
நீங்கள் சுட்டிகாட்டியவைகள் இஸ்லாத்தில் உள்ளதா? அல்லது சில முஸ்லிம்கள் செய்வதா??//
அந்த சில முஸ்லிம்களும் குரானிலும் ஹதீஸிலும் சொல்லி இருப்பதை தானே தாங்கள் செய்வதாக சொல்லிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தில் சொல்லாததை சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று ஒதுக்கி வைத்து விடுவீர்களா. அப்படி எங்கேயும் பார்க்கவில்லையே. இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா? உங்களுக்குள்ளேயே ஒத்த கருத்து இல்லையே நீங்கள் ஏன் பிறரை குறை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். பிறருக்கு அறிவுரை சொல்பவன், தான் முதலில் யோக்கியனாக இருக்க வேண்டும். உங்கள் மார்க்க அறிஞர்களுக்கு இடையிலேயே எந்த விசயத்திலும் ஒத்த கருத்து இல்லை. முதலில் உங்களுக்கு உள்ளில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து விட்டு பிற மதத்தினரை பார்த்து கூச்சல் போடுங்கள்.
இஸ்லாமியர்கள் தவறு செய்தால் 'ஐயோ அது இஸ்லாமில் கூறவில்லை, அது அவனுடைய தவறு' என்று தப்பித்து கொள்வீர்கள். பெண்களை மொட்டை அடிக்க சொல்லியும் உடன்கட்டை ஏற சொல்லியும் கடவுள் சொல்லவில்லை.
shanawazkhan.
உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0
நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா.
சகோதரர் அருண்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//வசனத்தின் முழு அர்த்தமும் ஒரே கருத்தை தானே சொல்கிறது ஆணுக்கு கீழ்தான் பெண் என்பது தானே அது. இதில் விசேசமாக எதையும் சொல்ல வில்லையே.//
உங்களை நீங்களே போட்டு குழப்பி கொண்டிருக்கின்றீர்கள்.
ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?
தாங்கள் நிலையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றதா அல்லது விடுவித்திருக்கின்றதா? பின்வரும் வீடியோவையும் சற்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=eRs7Us-a6CU
//உங்களிடமே ஓன்று கேட்கிறேன், ''இஸ்லாத்தை விட்டு வெளி ஏறியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்'' என்று இஸ்லாம் கூறுவதாக என்று உலக மகா இஸ்லாமிய அறிஞர்? ஜாகிர் நாய்க் சொல்கிறார்.
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0//
பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன். முதலில் பெண்கள் குறித்த கேள்விகளுக்கு விடை கண்ட பின் மற்ற கேள்விகளுக்கு போனால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு. அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரரே, உங்களிடம் ஒரு கேள்வி....இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகின்றது என்று கூறும் தாங்கள், ஆயிரகணக்கான பெண்கள் இஸ்லாத்தை தழுவுவதாக டைம்ஸ் கூறியிருப்பது எதனால் என்று நினைக்கின்றீர்கள்?
பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் அருண்,
ReplyDeleteசலாம்...
//அந்த சில முஸ்லிம்களும் குரானிலும் ஹதீஸிலும் சொல்லி இருப்பதை தானே தாங்கள் செய்வதாக சொல்லிக்கொள்கிறார்கள்.//
அப்படி அவர்கள் சொன்னால், அவர்கள் இஸ்லாமிற்கு முரணாக நடக்கின்றார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
//இஸ்லாத்தில் சொல்லாததை சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்களை இஸ்லாமியர்கள் இல்லை என்று ஒதுக்கி வைத்து விடுவீர்களா//
"நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?
//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//
நிச்சயமாக...
//உங்களுக்குள்ளேயே ஒத்த கருத்து இல்லையே நீங்கள் ஏன் பிறரை குறை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள். பிறருக்கு அறிவுரை சொல்பவன், தான் முதலில் யோக்கியனாக இருக்க வேண்டும். உங்கள் மார்க்க அறிஞர்களுக்கு இடையிலேயே எந்த விசயத்திலும் ஒத்த கருத்து இல்லை.//
கருத்து வேறுபாடுகள் சுன்னத்தான ஒரு விஷயம் தான். எந்தெந்த விஷயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறதென சொல்லுங்கள். அவை எதனால் வந்தன, அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா என்று சொல்கிறேன்.
@அருண்,
ReplyDelete//முதலில் உங்களுக்கு உள்ளில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து விட்டு பிற மதத்தினரை பார்த்து கூச்சல் போடுங்கள்.//
எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, இஸ்லாமில் நுழையும் கணிசமானோர் முஸ்லிம்களை சந்தித்து கூட இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரிந்தது குரான் மற்றும் சுன்னாஹ். படிக்கின்றார்கள், அறிவுக்கு ஒத்து வருகின்றது, தழுவுகின்றார்கள்.
"பிற மதத்தினரை பார்த்து கூச்சல் போடுங்கள்" என்று கூறுவது மூலம் என்ன சொல்ல வருகின்றீர்கள்? மற்ற மத கடவுள்களை திட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால் தாங்கள், நாங்கள் என்ன மாதிரி மற்ற மதத்தினரை பார்த்து கூச்சல் போடுகின்றோம் என்று கூறினால் விளக்க எளிதாக இருக்கும்.
//இஸ்லாமியர்கள் தவறு செய்தால் 'ஐயோ அது இஸ்லாமில் கூறவில்லை, அது அவனுடைய தவறு' என்று தப்பித்து கொள்வீர்கள்.//
உங்கள் மனம். நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் நினைத்து கொள்ளலாம்.
//பெண்களை மொட்டை அடிக்க சொல்லியும் உடன்கட்டை ஏற சொல்லியும் கடவுள் சொல்லவில்லை.//
ஷாநவாஸ் அவர்களும் அப்படி சொல்லவில்லை.
உங்களுக்கும் ஷாநவாசுக்கும் ஒரு வேண்டுகோள். விவாதப் பொருளை பற்றி மட்டும் உரையாடல் இருக்கட்டும்.
நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteமுதலில் சகோதரர் ஆஷிக் அஹ்மத் உங்களுடைய பனி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு வெளியீடும் நன்றாக உள்ளன.
திரு அருண் இது உங்களுக்காக.
திருமறையாம் குர்ஆனில் எல்லாம் வல்ல அல்லாஹ் பெண்களைப் பற்றி 150 அத்தியாயத்தில் 237 தடவை பெண்களைப் பற்றி கூறுகிறான், அதில் எந்த ஒரு இடத்திலேயும் பெண்களை தவறாக கூறவில்லை. எல்லா மதத்தை விடவும், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருகிறதினால் தான் அனைக பெண்கள் இஸ்லாத்தின்பால் கவரப்படுகிறார்கள். தயவு செய்து உங்களிடம் ஒரு வேண்டுகோலை விடுகிறேன் முடிந்தால் செயல்படுத்தவும். அது என்னவென்றால், முதலில் அல்குர்ஆனை முலுமையாக ஆராய்ந்துவிட்டு, உங்கள் கேள்விகணைகளை கேட்கும் படி கேட்டுக்கொள்கிறேன். யாரும் சொல்வதை வைத்து, நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
எந்த ஒரு வேதத்திலும் வெளிகொணராத ஒரு அரிய செய்தியை குர்ஆன் நம்மிடையே முன்வைக்கிறது, நீங்கள் தயாராக இருந்தால், குர்ஆன் உங்களுடன் விவாதம் பன்ன தயாராக இருக்கிறது.
"மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?" (47:24)
Dear Aashiq Ahamed,
ReplyDeleteMay ALLAH(swt)reward you for your work ...
When i was in London, i saw too many women wearing the HIJAB, also in their workplace. British people are tolerent that's why they convert to islam. In ENGLAND, there is a big place for Muslims,they created a website for them : http://www.revert2reality.com !!
I also remember that evry friday in Masjid,non-muslims come to ask their doubt/questions, then those who find their answer convert just after ...
We can see that muslims girls can wear Hijab in school there.
But some celebrity are also convert to ISLAM in britain, like Tonay Blair's sister in law(read this : http://muslimvillage.com/2010/11/09/why-are-so-many-british-career-women-converting-to-islam/).
Hope that more people will go to the straight path INSHA'ALLAH ...
ஸலாம்..சகோ ஆஷிக்.
ReplyDeleteஅருமையான பதிவு,மற்றும் சிறப்பான் பின்னூட்ட கலந்துரையாடல்.அதில் பொருமையான பதில்கள்..அல்லாஹ்,தங்களின் அறிவை மேலும் விஸ்தீரனப்படுத்த போதுமானவன்
அன்புடன்
ரஜின்
//பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது //
ReplyDelete////இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி மேலே போய்
அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது.இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?//
1400 வருடக் கேள்விகள் ..
இந்தக் கேள்விகளுக்கு நானும் கூட ஒரு பதில் சொன்னேன். வாசித்துப் பாருங்கள்.
உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாரேனும் இருந்தால் அவர்களிடமும் அதை வாசிக்க வைத்து அவர்கள் மதிப்பீட்டையும் கேட்டுப் பாருங்களேன்.
PART 1
ReplyDelete1950/03/30
இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை! பெரியார் களஞ்சியம் - தொகுதி : 6
பெண்ணுரிமை
புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்திரகாவ்ய திரு.வித்யாலங்கார் எம்.ஒ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11-ஆம் பக்கம் முதல் 26-ஆம் பக்கத்திற்குள் உள்ளவற்றிலிருந்து எடுத்துப் பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள், புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:
1- 'பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்.'(ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது - ரிக்வேதம் - 8-3-17)
2- பெண்கள் நட்பு நீடித்ததல்ல; அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.(ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது. ரிக்வேதம் - 10-95-10)
3- இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்.
(இந்திரன் ரிஷிகள் பிராத்திப்பது. ரிக்வேதம் - 4-17-18)
4- இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை. ஏனெனில், மனைவியில்லாதவருக்கு மனைவிகளை- காதல் கிழத்திகளைத் தருகிறாய்.
(ரிக்வேதம் - 5-31-3)
5- வேதகாலத்தில் போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் ஒன்றாகப் பெண்கள் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள்.
6- வெற்றிக்குப் பிறகு வெற்றியாளர்களால் பெண்கள் கணவரிடமிருந்து பலாத்காரமாகப் பிரிக்கப்பட்டுக் கொள்ளைப் பொருள்களைப் போல் பங்கு போடப்படுவார்கள்.
இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை – 149.
(பேராசியர் லட்விக் கூறுகிறார். இவைகளுக்கு வேதங்களில் ஆதாரம் இருக்கிறது என்று)
7- ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். (ரிக்வேதம் - 8-48-88)
8- வேதங்களின் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைமைப் போல் சொத்துபோல் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர் கருத்து)
9- பொதுவான கணவன் ஒருவன், தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பது போல் தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். (இந்திரன் சொல்லியிருக்கிறார். ரிக்வேதம் - 7-2-63)
10- இதே கொள்கையைத் தான் பின்னால் சட்டம் செய்தவர்களும், காவியங்கள் இயற்றியவர்களும் கையாண்டிருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர்)
11- உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்.
12- மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.(யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி)
13- வேதசாஸ்திரி கட்டளைப்படி, புருஷர்கள் தங்கள் மனைவிகளை பூர்வீக புண்ணியத்தினாலோ அல்லது தெய்வ சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும். (பீஸ்மர் கூறிய வாக்கு)
14- பெண்கள் தங்கள் கவுரவத்தைப் படிப்படியாக இழந்து ஆண்களின் போகப் பொருளாக மாறி வந்ததை வேதங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். (புத்தக ஆசிரியர்)
15- ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும், கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
16- மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை, கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள். (அதர்வண வேதம். 14-1-52)
17- பிற்காலத்திலும் பெண்கள் போகத்திற்குரியவர்களாக மாத்திரம் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். (புத்தக ஆசிரியர்)
18- மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள். (என்று உபநிஷத்தர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்)
19- மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனக்கு இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை எல்லா இன்பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்.(பிண் ஹதரரயாக 1-4)
20- பின்னால் தர்ம சாஸ்திரங்களில் பெண்களின் நிலை திகைப்பை உண்டு பண்ணும் ஷீண நிலைமைக்குப் போய் விட்டதைக் காணலாம். (ஆசிரியர் கருத்து)
21- அறிவுக்குப் பொருந்தாத முறையில் அவர்கள் மீது இழிவுகள் வசைகள் கற்பிக்கப்படிருக்கின்றன. இவைகளுக்கு அளவேயில்லை.(ஆசிரியர் கருத்து)
22- பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.
23- பெண்கள் தட்டு முட்டுச் சாமான்களைப்போல் கருதப்படுவதால் அவர்களைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.(இதற்கு ஆதாரங்கள் பல உண்டு)
24- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
CONTINUED....
PART 2
ReplyDelete23- பெண்கள் தட்டு முட்டுச் சாமான்களைப்போல் கருதப்படுவதால் அவர்களைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளத் தேவையில்லை.
(இதற்கு ஆதாரங்கள் பல உண்டு)
24- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
25- இந்த விதத்தில் படித்த ஆண்களையும், பெண்கள் வசியப்படுத்தித் தப்பான வழியில் செலுத்தி, இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள். (மேற்படி: 2-24)
26- மனு, பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை, என்பவைகளைக் கற்பித்ததோடு, களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும், அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும், துர்நடத்தையையும் பெண்களின் இலட்சணமாக வருணித்திருக்கிறார். (புத்தக ஆசிரியர்)
27- பாம்பு விஷத்தைக் கக்குவது போல் பெண்ணினத்தின் மீது இப்பெருங்காவியம் இழிவைக் கக்குகிறது; கொட்டுகிறது. (மஹாபாரதம் அனுஷாசனம் - 38-12-25-26)
28- பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை.
29- எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை.
ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும், நீரினாலும், கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுப்போலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
30- நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.(மகாபாரதம் - இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) பெண்கள் நிலை)
31- இதிகாசங்கள் காலத்தில் இருந்த சாதுவாகிய மன்னன் யுதிஷ்டனும் பெண்களின் இயல்பை மிகக் கேவலமாக வெறுக்கத் தகுந்த முறையில் கண்டித்திருக்கிறான். (புத்தக ஆசிரியர்)
32- அதாவது : பெண்ணின் அறிவு, கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது. (மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39-8)
33- பெண்களின் அறிவைப் பார்த்துத் தான் பிரகஸ்பதியும் இதர பெரும் அறிவாளிகளும் அறிவுக்கான கொள்கைகளை வகுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. (மேற்படி: 39-40)
34- பெண்ணை விடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்புப் போன்றவள்; பெண் மயக்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
35- பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்கமாட்டார்கள் - விரும்பமாட்டார்கள்.(மேற்படி: 432-23)
36- உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (பேற்படி: 43-24)
37- ஒருவன் கூடி வாழ ஒத்துக் கொண்டாலும், பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள்.(மேற்படி:43-24)
38- அவர்கள் ஒர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். (மேற்படி 43-24)
39- ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்லதன்மை) ஒன்னுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களிடம் சம்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறு விதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்துப் போவான்.
(மேற்படி: 43-24)
40- எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களை சிருஷ்டி செய்தார்.
41- ஆகவே, பெண்கள் மனித சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
42- பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.
43- இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும், இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.
(மனு:9-15)
44- உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர் போலச் சலனப் புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள். (இராமாயணம் ஆரண்ய காண்டம் - 13-5-6)
CONTINUED...
PART 3.
ReplyDelete45- பெண்களின் முகங்கள் பூக்களைப் போன்றவர்கள், அவர்கள் மொழிகள் தேன் போன்றவைகள்; அவர்களது உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக் கூடியது; அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை. (இராமாயணத்திற்குப் பிந்திய காவியங்களில்)
46- ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.
47- ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.
48- பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள்.(பாகவத ஸ்கந்தம் - 4-14, 42-8-4-36)
49- பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள், அவர்கள் குற்றமுள்ளவர்கள்.
50- பெண் இனத்திற்கே கீழ்கண்ட 8-குணங்களும் உரிமையானவைகள்: பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம். (சுக்ரா 3-163)
51- பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள் கொடுக்கலாம். (அர்த்த சாஸ்திரம் - 3-3-50)
52- ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளாப்பினாலோ அடிக்கலாம்.
53- சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களைக் கொன்று விடலாம்.
54- உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார்.
55- உலகம் தூங்கக் கூடாது என்று விரும்பியதற்காகக் காவ்ய மாதா என்ற பெண் விஷ்ணு கையினால் கொல்லப்பட்டாள்.
56- "ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்கள், சடங்குகளை தடுத்ததற்காகத் தாரகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்."
(இராமாயணம்: 25-17)
57- "குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதன்று, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது."
58- "அதர்வண வேதத்தில் ஆண் மகவை விரும்புறதேயல்லாது பெண் மகவை விரும்புகிறதில்லை.
59- "பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு பிறக்கட்டும்." (அதர்வண வேதம் - 6-2-3)
60- "புங்கபா கடவுளை வணங்குவதன் மூலம் ஆண்மகவே பிறக்கட்டும். பெண் மகவு பிறக்க வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. (மேற்படி - 8-6-25)
61- "பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்." (காதபாசன் ஹிதா - 27-ஏ)
62- "ஆனால், இது பழக்கத்தில் மகளைக் கலியாணம் செய்து கொடுப்பதனால் தொடர்பற்றதாக இறந்தவர்களாகக் கருதப்படுகிறது."
63- "யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ, அல்லது விவாக சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டு முட்டுச் சாமான்களைப் போலவே நடத்த வேண்டும்."
(ரிக் வேதத்தைக் குறித்து எழுதிய பிரபல ஆசிரியரான டாக்டர். அபினாஷ் சந்திரதாஸ் கூறுகிறார்)
64- "இதை இதிகாச காலத்திலும் காணலாம். அதாவது பஞ்ச பாண்டவர்களின் மனைவியாகிய துரௌபதியை யுதிஷ்டிரான் சகுனியுடன் சூதாடும் போது பணயமாக வைத்தான்." (மேற்படி)
65- "யாரும் கேட்காமலே, தனது மனைவியையும், தான் மதிக்கும் எல்லாவற்றையும், இராஜ்ய உரிமையையும், தாமாகவே பரதனுக்கு அதுவும் சந்தோஷமாகக் கொடுப்பதாக இராமன் வாயால் சொல்லுவதாக வால்மீகி எழுதியிருக்கிறார். (இராமாயணம் ஆசிரியர்)
66- அந்தாளில் மனைவியைச் சாமானை விட மேலாக மதிக்கவில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்?(புத்தக ஆசிரியர்)
67- "ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியளாகவுமிருப்பதனால்."(ரிக்வேதம்: 10-3124)
68- "சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவியின் மீது போடுகிறார்கள் என்று அந்தச் சூதாடி பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறான்."(ரிக்வேதம் - 10-31-24)
CONTINUED...
PART 4
ReplyDelete69- "அந்த நாளில் (பண்டைய நாளில்) மனைவியின் நிலைமை அடிமையின் நிலைமையை விட நல்ல நிலைமையே என்று சொல்லுவதற்கில்லை." (மேற்படி)
70- பெண்ணின் நேசம் ஒரு பொழுதும் நிலையானதன்று. அவளுடைய மனம் கழுதை போன்றது.
இந்து மதத்தில் (ஆரிய மதத்தில்) அவர்களது வேத சாஸ்திர புராண இதிகாசத்தில் காணப படுபவைகளிலிருந்து பொறுக்கியெடுத்த சில குறிப்புகளாகும் இவை.
இனியும் இதுபோலவும், இன்னும் மோசமாகவும் எவ்வளவோ குறிப்புகள் வேறு பல ஆதாரங்களில் இருக்கின்றன.
பொதுவாக எல்லா மதங்களும், பெண்களைச் சிறிதாவது தாழ்மையாகத் தான் மதிக்கின்றன. வட நாட்டில் பெண்கள் எல்லா மதத்தாலும் பெரிதும் மறை பொருளாகவே கருதப்படுகின்றார்கள்.
- (தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன்' என்ற புனை பெயரில் தொகுத்து வெளியிட்டது, 30-03-1950. 'விடுதலை' இதழில் வெளிவந்தது)
நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ReplyDeleteதருமி ஐயா நலமா., நீங்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவா.,வழக்கம்போல உங்கள் குர்-ஆன் அறிவை பதிவிட்டு இஸ்லாத்திற்கு மறுப்ப(?) தெரிவித்து உள்ளீர்கள் அதற்கு வீடியோ காட்சிகள் ஆதாரமாகவும் வைத்திருக்கிறீர்கள் ஐயா., சலுகைகள் வேறு-தவறுக்கான தண்டனை என்பது வேறு தெளிவாக குழப்பி குழம்பி இருக்கிறீர்கள் இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்து பல ஆக்கங்கள் தெளிவாக இணையத்தில் அணிவகுத்து தான் நிற்கின்றன., மீண்டும் ஒரு முறை பாருங்கள் அனேக உங்கள் கேள்விக்கு அங்கே பதில் பரந்து கிடக்கிறது., அதற்கான சுட்டியையும் கீழே இணைத்துள்ளேன்
சரி உங்கள் பரிணாம பார்வைக்கு சில புரிதல்கள்.,
இஸ்லாத்தை அடுத்து பார்ப்போம் உலக பார்வையில் பெண்களும் -ஆண்களும் சமமா? உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் சமமாக நடத்தப்படுகிறார்களா? , உதாரணத்திற்கு, விவாகரத்து வேண்டி கணவனோ, மனைவியோ நீதிமன்றம் சென்றால் விவாகரத்தானால் மனைவி(பெண்ணு)க்கு மட்டுமே ஜீவானம்சம் தர சொல்கிறார்கள்., ஆணுக்கு...? ஏன் இந்த நிலை ஆணும் பெண்ணும் சமம் என்று அல்லவா எனவே எங்களுக்கு (பெண்களுக்கு) இழப்பீட்டு தொகை வேண்டாமென அல்லவா மாதர்சங்கங்கள் முழங்க வேண்டும்... சரி விடுங்கள்., ஒரு பெண்ணின் இன்ஷியல் தன் தந்தை அல்லது தன் கணவனுடையதாக இருக்கிறது அதுப்போல எத்தனை ஆண்களின் இன்ஷியல் தாயுடையது ஐயா...? இதற்கு பெயர் தான் ஆணும் பெண்ணும் இந்த சமுகம் கொடுக்கும் சமத்துவமா? அல்லது உங்கள் பார்வையில் இதுதான் சமமா?
ஆணையும், பெண்ணையும் படைத்தவன் அல்லாஹ் அவனுக்கு நன்றாய் தெரியும் எந்த செயல்கள் ஆணுக்கும் எந்த செயல்கள் பெண்ணுக்கும் பொருந்தும் அதுப்போல கடமைகளும்,உரிமைகளும் இருவருக்குமே அவர்களின் உடல் ரீதியான தகுதிக்கேற்ப சில விஷயங்களில் ஆணுக்கு முன்னிரிமை சில விசயங்களில் பெண்ணுக்கு முன்னிரிமை., குர்-ஆனில் பெண்களை குறித்து விமர்சனமாக வைக்கப்படும் வசனங்களில் எல்லாம் நீங்கள் கூறிய அடிப்பது சம்பந்தமாக இருக்கட்டும் அல்லது சாட்சி சொல்வது சொத்து வழங்குவது ஆகிய அனைத்து வசனங்களிலும் அஃது அவ்வாறு செயல்படுத்துவதற்கு உரிய காரணங்கள் அந்தந்த வசனங்களிலேயே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு இறை வசனமே உங்கள் அனைத்து கேள்விக்களுக்கும் போதுமானது என நினைக்கிறேன்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)
இதுவும் குர்-ஆனில் தான் இருக்கிறது ஐயா.,பார்க்க முயற்சி செய்யுங்கள்
நரகத்தில் பெண்கள், நபிகளாரின் திருமணம் குறித்து ஓராயிரம் முறை மிக தெளிவாக பதிவிட்டும் ஓராயிரத்து ஒருமுறை கொடுக்கும் லிங்கின் தலைப்பை மட்டும் வெறுமனே படித்தால் பதில் கிடைக்காது ஐயா., உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு உயிர் கொடுங்கள்.
ReplyDeleteநபிகளாரின் இள வயது திருமணம்
http://tamilislam-qa.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
பலாதார மணம் குறித்து
http://iniyaislam.blogspot.com/2007/01/blog-post.html
நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்
http://abumuhai.blogspot.com/2006/06/blog-post_19.html
நபிகள் (ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378
பெண்களை அடிமைப்படுத்துகிறாதா இஸ்லாம்?
http://www.tamilislam.com/TAMIL/misunderstood/oppresses_women.htm
சரி., ஒரு ஆண் நான்கு பெண்களை கட்டிக்கொள்ளலாம் என்று இஸ்லாம் பெண்ணுக்கு அநீதி இழைத்தாத அபய குரலாக எழுப்பும் ஐயா இந்த நிகழ்விற்கு சமத்துவம் காணுவதாக இருந்தால் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஆணுக்கு- பெண் சமம் என்ற அடிப்படையில் ஒரே நேரத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போல அதே நிலையை அல்லது குறைந்த பட்சம் இரண்டு திருமணாமவது செய்து வைக்க முன்வர வேண்டும் வருவீர்களா?
இங்கு பதிவு குறித்து மட்டுமே பேசுங்கள் ஏனெனில் பேசு பொருள் திசைமாறி போகும் இறை நாடினால் இந்த தலைப்பின் கீழ் என் தளத்தில் விவாதம் புரியலாம். இஸ்லாம் பெண்களுகளை அடிமையாக நடத்துவதாக இருந்தால் ஏன் இஸ்லாத்தை நோக்கி பெண்கள் வரவேண்டும் என்பதே இப்பதிவின் கேள்வி...?
//ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:35)//
ReplyDeleteஇதிலும் ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்ன கிடைக்கும் என்று உள்ளதே .. அதே போல் பெண்ணுக்கு என்னென்ன கிடைக்கும் என்றும் ஏற்கெனவே கேட்டிருக்கிறேனே... யாரும் பதில் தரவேயில்லையே ...
நபிகளின் திருமணத்தைப் பற்றிக் கூட வேண்டாம். எல்லோருக்கு நாலு என்றவர் தனக்கு மட்டும் கணக்கைத் தாண்டி விட்டு அதனை அல்லா சொன்னார் என்பது குற்றவாளியே சாட்சி சொல்வது போல்தானே என்றும் கேட்டிருந்தேனே!!
ReplyDeleteகுலாம்
நானும் பல இஸ்லாமியப் பதிவுகளைப் படித்து விட்டேன் - பலதார மணத்தைப் பற்றி. இதற்கும் ஒரே ஒரு வேண்டுகோள். இஸ்லாமில் இல்லாத நண்பர் யாரும் உங்களுக்கிருந்தால் அவரிடம் இதைச் சொல்லிப் பார்த்து உரைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
குலாம்
ReplyDelete//ஒரே நேரத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போல அதே நிலையை அல்லது குறைந்த பட்சம் இரண்டு திருமணாமவது செய்து வைக்க முன்வர வேண்டும் வருவீர்களா? //
நல்ல ஜோக்கு சார்!
ஆண்களும் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நியதி உங்கள் மனதில் தோன்றவில்லையே. திருகலான யோசனை உங்களுடையது!
//தருமி said...
ReplyDeleteநல்ல ஜோக்கு சார்!
ஆண்களும் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நியதி உங்கள் மனதில் தோன்றவில்லையே. திருகலான யோசனை உங்களுடையது//
தருமி ஐயா , தங்கள் குறிப்பிட்ட நான்கு திருமணம் சம்பந்தமான வசனம் இதோ ;
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
இந்த வசனத்தை கவனமாக படியுங்கள். சக்தி இருந்தால் இரண்டோ மூன்றோ நான்கோ திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் அதே வசனம்தான்
----ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)___
ஒரு திருமணத்தை மட்டும் வலியுறுத்துகிறது. ஆம் உலகத்தில் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள் என்று எந்த மதமும் சொன்னதில்லை.
இதுவும் தங்களுக்கு உபயோகப்படும் என்று நினைக்கிறேன்.
ReplyDeletehttp://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/106-palatharamanam/
//நானும் பல இஸ்லாமியப் பதிவுகளைப் படித்து விட்டேன்//
ReplyDeleteஐயா., தனக்கு இப்படிதான் பதில் வேண்டும் என்ற நோக்கில் கேள்வியை அணுகும்போது கண்டிப்பாக கிடைக்கும் பதிலில் திருப்தி இருக்காது. மீண்டும் இங்கு நபிகளாரின் திருமணம் குறித்து தான் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் மறுபடியும் சொல்கிறேன் /கொடுக்கும் லிங்கின் தலைப்பை மட்டும் வெறுமனே படித்தால் பதில் கிடைக்காது ஐயா., உங்கள் பகுத்தறிவு பார்வைக்கு உயிர் கொடுங்கள் / அங்கே நபிகளாருக்கு அதிக திருமணம் ஏன் என்பனவற்றிற்கு பதில் இருக்கிறது
//நல்ல ஜோக்கு சார்!//
இல்லங்க இது சீரியஸ்...
பலதார மணம் இஸ்லாத்தில் ஒரு ஆப்சன்.கண்டிப்பாக நான்கு பெண்களை மணமுடித்தால் தான் ஒருவன் முழுமைப்பெற்ற முஸ்லிம் என்றெல்லாம் எங்கும் அல்லாஹ் சொல்லவில்லை. எவருக்கு அஃது தேவை இருக்கிறதோ அவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் (அதுவும் பல நிபந்தனைக்கு உட்பட்டு) செய்து க்கொள்ளட்டும்., இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா? பெண்களுக்கு அஃது ஒரே நேரத்தில் நான்கு கணவர் இருந்தால் என்னாகும்? உடல் ரீதியாகவும் சமுக ரீதியாகவும் அவளுக்கு என்ன பிரச்சனை வரும் என்பதை என்னை விட உங்களுக்கு நன்றாய் தெரியும்., ஆக பெண்கள் மேல் கரிசனம் காட்டுவதாக என்ணி ஒருவனுக்கு ஒருத்தி என கூறும் நீங்கள் விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்., அப்போது சொல்லுங்கள் பலதார மணம் தேவையா என்று? உங்கள் அறிவோடு உங்களை படைத்த இறைவனின் அறிவை பொருத்தி பார்க்காதீர்கள் ( இந்த வாக்கியத்தை // ஹை லைட் // பண்ணி நல்ல ஜோக் தான் போங்க... என்று வேண்டுமானால் எழுதிக்கொள்ளுங்கள்)
//அதே போல் பெண்ணுக்கு என்னென்ன கிடைக்கும் என்றும் ஏற்கெனவே கேட்டிருக்கிறேனே... யாரும் பதில் தரவேயில்லையே ... //
ஒகே பதில் தரும் வரை இக்கேள்வி தான் உங்கள் பிரதான வாதமாக இருக்கும் பதில் தந்தால் உடனே அடுத்த கேள்விக்கு தாவி ஸாரி... மாறி விடுவீர்கள்..
அல்லாஹ் சொர்க்கத்தில் ஆண்களுக்கு கண்ணழகிகளை தருவதாக தான் சொல்கிறானே தவிர அஃது அதைப்போல பெண்ணிற்கு தர மறுப்பதாகவா சொல்கிறான். ஐயா ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை... ஏனெனில் ஒரு நபரின் ஒரு சிறப்பை குறிப்பிட்டால் அஃது ஏனையோருக்கு அந்நிலை பொருந்தாது என்பது அறிவுடையவர்கள் எண்ண மாட்டார்கள். மாறாக அங்கு அவரை முன்னிலைப்படுத்தியை அச்செய்தி கூறப்பட்டாதாகவே எண்ணுவர். எனவே பெண்ணிற்கு அஃது கொடுக்கும் அந்த நிலை குறித்து அல்லாஹ் விவரிக்க நாடாமல் இருக்கலாம் (அல்லாஹ் மிக்க அறிந்தவன் -அல்லாஹ் நாடினால் இது குறித்து மேலதிக விளக்கம் தருகிறேன்)
சரி., சமுக ரீதியான சமத்துவ பார்வை குறித்த கேள்விக்கு பதில் எங்கே ஐயா?
இந்த பதிவு குறித்த கேள்விக்கும் பதில் இல்லை...
SO WHAT என்று சொல்லி விடாதீர்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDelete"ஆண்களும் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நியதி உங்கள் மனதில் தோன்றவில்லையே. திருகலான யோசனை உங்களுடையது!"
திரு தருமி அவர்களே, சகோதரர் குலாம் சொன்னதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் அவர் பல வலைதளங்களை மேற்கோல் காட்டியும் விதண்டாவாதமாக ஒரு முகமாக நீங்கள் பார்கிரீர்கள். அதை தவிர்த்து புரிந்து கொள்வதற்காவது மறு முறை அதனை திருப்பிபார்க்கும் படி உங்களிடம் ஒரு வேண்டுகோலை வைக்கிறேன்.
இஸ்லாத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு ஆணும் 4 கல்யாணம் பண்ணிதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமுமில்லை, வழக்கமுமில்லை. எந்த ஒரு ஆணும் உடல் வழிமையும், பொருள் வழிமையும் பெற்றிருந்தால், தான் முறைப்படி (திருட்டுதனமாக அல்ல) கல்யாணம் செய்த அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்த முடிந்தால், 4 கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று தான் கூறி இருக்கிறது. தவிர நீங்கள் கூறுவதுப்போல் இருந்தால்............
இக்காலத்தில் பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், அதனாலேயே, தான் கல்யாணம் செய்துக்கொண்ட மனைவியை மறந்து, அப்பெண்ணை விட்டுவிட்டு போய் விடுகிறார்கள். இதனால் அப்பெண் சிறு வயதிலேயே கணவனை பறிக்கொடுத்து தவிக்கிறாள். இதுப் போன்ற அவல நிலை தோன்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கூறிய செய்தி தான் இந்த 4 திருமணம். குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் பெண்களுக்கு அநீதி விலைவிக்கும் நோக்கில் சொல்லபடவில்லை என்பது கருத்து. திருமறையாம் அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவாக விளக்குகிறது. தயவு செய்து அதை உற்றுப்பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
http://albaqavi.com/home/?p=1366
http://www.islamkalvi.com/religions/polygamy.htm
இந்த தளங்களுக்கு சென்று விரிவாக அறிய வேண்டும்.
.
ReplyDeleteசுட்டியை அழுத்தி விடியோ உரை கேளுங்கள்.
இஸ்லாம் பலதார மணத்தை ஏன் அனுமதியுளிக்கிறது?
பலதார மணம் பெண்களுக்கு பாதிப்புதானே?
.
shanawazkhan,
ReplyDelete//உலகத்தில் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள் என்று எந்த மதமும் சொன்னதில்லை.//
4 + உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்
இப்படியும் எந்த மதமும் சொல்லவில்லை! ஏன்?
இப்படியும் இல்லையே ஏன்?
ReplyDeleteதான் படைத்த பெண்ணையே மோகித்து சூரையாடிய கடவுள், தன் குருவின் மனைவியை சூறையாடியதன் பலனாய் உடம்பெல்லாம் பெண்குறியான கடவுள், தன்னை சதா துதித்து கொண்டிருக்கும் முனிவர்களின் மனைவியரை மாறு வேடத்தில் சூரையாடிய கடவுளர்கள், அம்மணமான பெண்களை ஒளிந்திருந்து பார்த்து ரசித்த கடவுளர்கள், தன் சடைக்குள்ளே வைப்பாட்டியை ஒளித்து வைத்துக்கொண்டிருந்த கடவுள், ஒருவரை ஒருவர் மோகித்து உறவாடி 60 பிள்ளைகளை பெற்ற ஆண் கடவுளர்கள் இத்தியாதி இத்தியாதிகளெல்லாம்.. ...
Also read this
கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?
இவ்வாறெல்லாம் மனிதர்கள் கடைபிடிக்க வழிமுறை உதாரணங்கள் அருளப்பட்டிருக்கும் பொழுது
// 4 + உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் //
இப்படியும் எந்த மதமும் சொல்லவில்லை! ஏன்?
அதெல்லாம் சரியா என கேள்வி தவறில்லை தான்.
" ஆடை அணிந்து மானத்தை மறைப்பவனை நிர்வாண ராஜ்யத்தில் பைத்தியம் என தூற்றப்படுவதில் ஆத்திரப்படுவதற்கோ வருத்தப்படுவதற்கோ ஒன்றுமில்லை"
...........
//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?//
ReplyDeleteஇரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
//பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்//
shanawazkhan, கேட்ட கேள்விக்கான பதிலாகதான் அதை கூறினேன். ஒரு பொருளை பற்றிய விவாதம் என்றால் அது நான்கு பக்கமும் திரும்பத்தான் செய்யும்.
//இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு//
சுவனத்தில் ஆண்களுக்கு அலலா பலவற்றையும் தருவதாக சொல்கிறார். மேலும் பூவுலகில் தடை செய்யப்பட்ட டாஸ்மாக் ஐட்டத்தை சொர்க்கத்தில் குடம் குடமாக வழங்குகிறார். ஆனால் பெண்களுக்கு என்ன தருவார் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லையே. தருமி என்பவரும் இத கேள்வியை கேட்டிருக்கிறார்.
மேலும் உங்கள் இறைதூதரின் வாழ்கை முறையை பின்பற்றி வாழும் நீங்கள் அவர் ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா?
//பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்//
அலங்காரம் செய்யப்பட்ட வெளித்தோற்றம் எப்போதும் பிறரை கவர்வது இயற்கை தான். உள்ளே போய் பார்த்தால் தானே வண்டவாளம் தெரியும்.
//நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?//
ஓ, ஒரு முஸ்லிமுக்கே உங்களால் விளக்க முடியாதா? அப்படிஎன்றால் ஏன் பதிவு போட்டு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்கள் ஆட்களுக்கு விளக்க முயற்சி செய்யலாமே.
//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//
நிச்சயமாக... //
முதலில் உங்களுக்கு உள்ளேயே குரானை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக பிறரை பார்த்து சொல்வீர்களே 'குரானை முழுசா படிங்க, புரிஞ்சு படிங்க என்று' அதை சொல்லலாம்.
//அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா, எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள்//
ஜவ்ஹீத் ஜமா அத், ஜாக் ஜமா அத் , த.மு.மு.க, இவர்கள் ஊர் ஊராக மேடை போட்டு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்களே. உங்களுக்கு தெரியாதா. இவர்கள் போடுவது குடும்ப சண்டையோ பங்காளி சண்டையோ அல்ல. மாறாக குரான் மற்றும் ஹதீஸில் உள்ள ஒரு விசயத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறி தங்களுக்குள் போட்டுக்கொளும் சண்டை தான் அது.
//ஆணுக்கு பெண் சமமில்லை என்பது இங்கு உரையாடலா? அல்லது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது உரையாடலா?//
ReplyDeleteஇரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
//பதிவு பொருளை விட்டு திசை திரும்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கின்றேன்//
shanawazkhan கேட்ட கேள்விக்கான பதிலாகதான் அதை கூறினேன். ஒரு பொருளை பற்றிய விவாதம் என்றால் அது நான்கு பக்கமும் திரும்பத்தான் செய்யும்.
//இஸ்லாமில் அனைத்திற்கும் பதில் உண்டு//
சுவனத்தில் ஆண்களுக்கு அலலா பலவற்றையும் தருவதாக சொல்கிறார். மேலும் பூவுலகில் தடை செய்யப்பட்ட டாஸ்மாக் ஐட்டத்தை சொர்க்கத்தில் குடம் குடமாக வழங்குகிறார். ஆனால் பெண்களுக்கு என்ன தருவார் என்பது பற்றி ஏதும் சொல்லவில்லையே. தருமி என்பவரும் இத கேள்வியை கேட்டிருக்கிறார்.
மேலும் உங்கள் இறைதூதரின் வாழ்கை முறையை பின்பற்றி வாழும் நீங்கள் அவர் ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா?
//பெண்களை அடிமைப்படுத்தும் ஒரு மார்க்கம் எப்படி பெண்களை கவர்கின்றது? இஸ்லாமை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்கள் இஸ்லாமை தழுவுவது எதனால்//
அலங்காரம் செய்யப்பட்ட வெளித்தோற்றம் எப்போதும் பிறரை கவர்வது இயற்கை தான். உள்ளே போய் பார்த்தால் தானே வண்டவாளம் தெரியும்.
//நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?" என்று கேட்க முடியும். "இறைவனுக்கு அஞ்சி கொள்" என்று சொல்லமுடியும். அவரை விளக்குவதற்கு நான் யார்?//
ஓ, ஒரு முஸ்லிமுக்கே உங்களால் விளக்க முடியாதா? அப்படிஎன்றால் ஏன் பதிவு போட்டு பிறருக்கு விளக்கி கொண்டிருக்கிறீர்கள். முதலில் உங்கள் ஆட்களுக்கு விளக்க முயற்சி செய்யலாமே.
//இவர்கள் குரானை சரியாக புரிந்து படிக்கவில்லையா?//
நிச்சயமாக... //
முதலில் உங்களுக்கு உள்ளேயே குரானை ஒழுங்காக படித்து புரிந்து கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக பிறரை பார்த்து சொல்வீர்களே 'குரானை முழுசா படிங்க, புரிஞ்சு படிங்க என்று' அதை சொல்லலாம்.
//அப்படி இருப்பதால் எங்கள் ஒற்றுமைக்கு இழுக்கு வந்துவிடுமா, எங்களுக்குள் என்ன குழப்பம் இருக்கிறதென சொல்லுங்கள்//
ஜவ்ஹீத் ஜமா அத், ஜாக் ஜமா அத் , த.மு.மு.க, இவர்கள் ஊர் ஊராக மேடை போட்டு சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்களே. உங்களுக்கு தெரியாதா. இவர்கள் போடுவது குடும்ப சண்டையோ பங்காளி சண்டையோ அல்ல. மாறாக குரான் மற்றும் ஹதீஸில் உள்ள ஒரு விசயத்திற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறி தங்களுக்குள் போட்டுக்கொளும் சண்டை தான் அது.
//மற்ற மத கடவுள்களை திட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று//
அப்படியா!
'மார்க்க விளக்க பொது கூட்டம்' என்ற பெயரில் ஊரில் உள்ள சந்து பொந்துகளில் உங்கள் அறிஞர் பெருமக்கள் கூட்டம் நடத்துவார்கள். அவற்றில் போய் அவர்கள் பேசுவதை கேட்டு பாருங்கள். அங்கே பிற மதங்களை திட்டுகிறார்களா அல்லது ஆராதிக்கிரார்களா என்பது தெரியும்.
மேலும் இஸ்லாமியர்களின் இணைய தளங்களை பார்த்தால் அங்கே ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள் பிற மதங்களை குறை கூற, 'பார்த்தீர்களா இந்த மதங்களில் எல்லாம் நொட்டை இருக்கிறது நாங்கள் தான் ஒழுங்காக இருக்கிறோம்' என்று வியாக்கியானம் கொடுப்பார்கள்.
//எல்லா மதத்தை விடவும், இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருகிறதினால்//
உலக அளவில் இஸ்லாமிய பெண்களின் கல்வி விகிதம் தான் மிக குறைவாக இருக்கிறது என பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். இது உங்கள் முழு சுதந்திரத்தின் விளைவா?
//எந்த ஒரு வேதத்திலும் வெளிகொணராத ஒரு அரிய செய்தியை குர்ஆன் நம்மிடையே முன்வைக்கிறது, நீங்கள் தயாராக இருந்தால், குர்ஆன் உங்களுடன் விவாதம் பன்ன தயாராக இருக்கிறது.
"மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?" (47:24)//
எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்றல் உள்ள கடவுள் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, ரொம்ப கஷ்டம்!
திரு வாஞ்சூர் என்பவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்லி இருக்கிறார். அமைதி மார்க்கத்தை பின்பற்றும் அவர் அமைதியை கடை பிடிக்க கடவுளை வேண்டுகிறேன். அவருக்காக கடவுள் சொர்க்கத்தில் வைத்திருப்பவற்றை இந்த தளத்தில் சென்று பார்த்து அமைதிஅடையட்டும்.
ReplyDeletehttp://www.flex.com/~jai/satyamevajayate/heaven.html
This comment has been removed by the author.
ReplyDeleteG u l a m, Haja
ReplyDelete//இந்த பதிவு குறித்த கேள்விக்கும் பதில் இல்லை... //
இந்த பதிவுக்குத்தான் so what என்று ஒரு பதில் கொடுத்து விட்டேனே. இன்னும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண்கள் உங்கள் மதத்திற்குப் பாய்ந்து வந்து விட்டார்கள் என்கிறீர்கள்; அதனால் என்ன என்று கேட்டேன். எனக்குத் தெரிந்து கிறித்துவ மதத்திற்கு நித்தம் நிறைய பேர் சேர்வதைப் பார்த்திருக்கிறேன்.
அவங்கவங்களுக்கு அம்புட்டுதான் ...
உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அந்த அளவு மோசமான ஒரு பின்னூட்டம்.
ReplyDeleteஆமாம்,,, நீங்கள் சொல்லும் மதங்கள் மோசம்தான்; இப்படியா இருக்கும்?
ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது? 4 மனைவி + போனசாக அடிமைகள் ... கேட்டால் கடவுளே கொடுத்த 'நல்ல விஷயம்' என்கிறீர்கள். என்ன சொல்ல...? இதில் 'இது ஆடை அணிந்து மானத்தை மறைக்கும்' மதம் என்ற தற்புகழ்ச்சி வேறு. ம்ம்.. முகமதுவின் sexual ability பற்றிகூட வாசிக்க நிறைய விஷயம் இருக்கிறது. அதையும் நினச்சி பாருங்க.
உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை எடு,... பைபிள்
ARUN said ...//எல்லாம் வல்ல மதிப்பிட முடியாதா ஆற்றல் உள்ள கடவுள் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தான் தன்னை நிரூபிக்க வேண்டுமா, ரொம்ப கஷ்டம்! //
ReplyDeleteதன்னால் படைக்கப்பட்டவன் கையால் தன்னால் அளிக்கப்பட்ட சக்தியினாலேயே அழிந்தொழிந்து விடுவோமோ என்று ஒடோடி ஒரு பெண்ணால் காப்பாற்றபட்ட கடவுள், தூக்கி செல்லப்பட்ட தன் மனைவியை மீட்க குரங்குகளின் உதவி நாடிய கடவுள், பத்தினிகளின் சாபங்களால் அலைக்கழிந்த கடவுள்கள், போர்க்களத்தில் தேரோட்டிய கடவுள், பூமியை காப்பாற்ற பூமியயே பாயாக சுருட்டி எடுத்துக் கொண்டு கடலுக்குள் தஞ்சம் புகுந்த கடவுள் இத்தியாதி இத்தியாதி ...
ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தானே தன்னை நிரூபித்தார்கள். ஆனந்தம் பரமானந்தம் தானே?
//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா? //
ReplyDeleteஇது எப்படியிருக்கு?
எட்டு வயதுக்குள் மகளுக்கு திருமணம் செய்து பிடித்துக் கொடுத்துவிடு.!!!..அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரரின் இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. 45. 46 ல் இருந்து சுருக்கம்
கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள்.மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?
இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அந்த அப்பாக்கள்.
அது என்ன தண்டனை? “மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா பிதா பிபதி கோனிதம்...”
இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.
அது என்னவென்றால்...அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள். ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.
பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.
மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?...
உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை (மாதவிலக்கை) சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?... அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?
அடுத்த ஒருவருஷம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்? அக்னி காரியம்/ தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை... அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்... கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்... ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.
ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம். இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.
நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்….
------------------------------
கருத்து சுருக்கப்பட்டிருக்கின்றது. விரிவாக அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்துமதம் எங்கே போகினறது ? என்ற புத்தகத்தில் படிக்கலாம்.
இந்த சுட்டியிலும்
இந்து மதம் எங்கே போகினறது?
http://thathachariyar.blogspot.com/
பகுதிகளாக வந்து கொண்டிருக்கின்றது.
...
வாஞ்சூர் அவர்களுக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள், தருமி ஐயாவின் "sexual ability" பற்றிய கருத்துக்கு அளித்த பதிலை என்னால் பிரசுரிக்க இயலாது. உங்களுடைய கருத்து தருமி ஐயாவை மிகுந்த சங்கடத்தில் ஆழ்த்தும் என்று கருதுகின்றேன்.
நன்றி.
THARUMI said….//ம்ம்.. முகமதுவின் sexual ability பற்றிகூட வாசிக்க நிறைய விஷயம் இருக்கிறது. அதையும் நினச்சி பாருங்க.//
ReplyDeleteஒருவரின் "sexual ability" பற்றி தெரியாமல் இருப்பதால் யாருக்கு என்ன நஸ்டம்?
ஒருவரின் "sexual ability" பற்றி தெரிந்து கொள்வதால் யாருக்கு என்ன லாபம்?
தெரிய வந்தாலும் SO WHAT? என்றுவிட்டால்?
சிந்தனை செய் மனமே!!
...
vanjoor
ReplyDeleteother than this time, luckily we never crossed each other.
let it be so always.
நன்றி ஆஷிக்
ReplyDeleteசகொ அஷிக்
ReplyDelete//ஆனால் உலகத்திலேயே உன்னதமான உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது? 4 மனைவி + போனசாக அடிமைகள் ... கேட்டால் கடவுளே கொடுத்த 'நல்ல விஷயம்' என்கிறீர்கள். என்ன சொல்ல...? இதில் 'இது ஆடை அணிந்து மானத்தை மறைக்கும்' மதம் என்ற தற்புகழ்ச்சி வேறு.//
இப்படி தருமி அவர்கள் எந்த விளக்கத்தையும் பெறும்
மனநிலையில் இல்லாமல் அவதூறு எழுதுவது எந்த
விதத்தில் நியாயம் என்பதை சொல்லூங்கள்
457. நம் கண்ணைத் திறக்க நமக்கு ஓர் உரைகல் தேவை என்ற என் இடுகையில் இப்பின்னூட்டங்களுக்குரிய பதில்களைக் கொடுத்துள்ளேன்.
ReplyDeleteசகோதரர் ஹைதர் அலி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
----
இப்படி தருமி அவர்கள் எந்த விளக்கத்தையும் பெறும்
மனநிலையில் இல்லாமல் அவதூறு எழுதுவது எந்த
விதத்தில் நியாயம் என்பதை சொல்லூங்கள்
-----
இன்று முதல் உங்களுடைய துஆவில் அவரையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நன்றி..
//ஆற்றல் உள்ள கடவுள்கள் எல்லாம் இப்படி எல்லாம் சவால் விட்டுத்தானே தன்னை நிரூபித்தார்கள். ஆனந்தம் பரமானந்தம் தானே?//
ReplyDeleteஉண்மைதான், ஆனால் அந்த கடவுள்கள் எல்லாம் என்னை வணங்கினால் உனக்கு சொர்க்கத்தில் டாஸ்மாக் பாரும் இன்ன பிற சமாச்சாரங்களும் தருவேன் என்று சொர்க்கத்தில் கூத்தடிக்க ஆள் சேர்க்கவில்லை.
//இது எப்படியிருக்கு?//
ரொம்ப கேவலமா இருக்கு. 'ஓடி வாங்க எங்ககிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு' என்று அழைக்கிறீர்கள், ஆனால் சில கேள்விகளை கேட்டால் 'ஏன் அங்கே அப்படி இல்லையா, இங்கே இப்படி இல்லையா' என்று பிறரை கை காட்டுகிறீர்கள். பிறகு ஏன் நாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள். எங்களுக்கு அல்லாவே இந்த மார்க்கத்தை தந்திருக்கிறார் என்று ஓவராக சவுண்ட் விடுகிறீர்கள். சரியான பதில் சொல்ல இயலாத போது இப்படித்தான் அல்லா செய்ய சொல்லி இருக்கிறாரா. மது அருந்துவது சரியா? தவறா? என்று கேட்டால் சரி அல்லது தவறு என்பது தான் நேரிடையான பதிலே அன்றி 'ஏன் அங்கே அவன் குடிக்கவில்லையா, இங்கே இவன் குடிக்கவில்லையா, என்கிற ரீதியில் பதில் சொல்வது முட்டாள் மட்டுமே. உங்கள் பதிலும் அப்படித்தானே இருக்கிறது வாஞ்சூர் சார்.
தாத்தாச்சாரி என்பவர் சொல்லி இருப்பது மனு என்பவர் எழுதி இருப்பதாக சொல்லி இருக்கின்ற புத்தகத்தில் சொல்லி இருப்பதாக குறிப்பிடப்படுவது. ஆனால் 'மனுவோ' அல்லது தாத்தாச்சாரியோ எங்களுக்கு கடவுள் அல்ல.
//இக்காலத்தில் பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், அதனாலேயே, தான் கல்யாணம் செய்துக்கொண்ட மனைவியை மறந்து, அப்பெண்ணை விட்டுவிட்டு போய் விடுகிறார்கள்.//
எது எதுக்கோ திடீர் திடீர் என்று வசனத்தை இறக்கும் அல்லா. ஒரே ஒரு வசனத்தை இறக்கி பிற பெண்களுடன் ஆண்கள் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்திருக்கலாமே. அல்லாவின் எல்லா வசனத்தையும் கடை பிடிக்கும் நீங்கள் அதை கடை பிடிக்க மாட்டீர்களா? ஏன் அல்லாவிற்கு இஸ்லாமியர்கள் மீது நம்பிக்கை இல்லையா அல்லது தனது வார்த்தைகளின் மேல் நம்பிக்கை இல்லையா? நன்கு பெண்களை திருமணம் செய்து தான் ஒருவன் யோக்கியனாக இருக்க முடியுமா. அல்லா வெறுத்து போய் 'உங்கள் அந்த ஆசையை கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை அதனால் ஒருவன் நாலு பேரை மனைவியாக்கி கொள்ளலாம்' என்று சொன்னது போல் உள்ளது இது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை விட இது எவ்வகையில் உயர்ந்தது? திரு தருமி அவர்கள் இதை விளக்கமாக கூறி இருக்கிறார். கொஞ்சம் படித்து தெளிவு பெறுங்கள்.
"அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார்". (அல் குர்ஆன் 33:36).
இது தனது மருமகளை முகமது திருமணம் செய்து கொள்ள அல்லா இறக்கிய வசனம். நல்ல இருக்குது உங்க அல்லாவோட சம உரிமை.
நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ReplyDeleteசகோதரர் அருண் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்., உங்களுக்கு யார் மீது கோபம்? இவ்வாக்கதின் கீழுள்ள அனேக பின்னூட்டங்களை ஒரு முறை பாருங்கள் தருமி ஐயா விடுத்த வினாக்களை தான் நீங்கள் சற்று கோபத்துடன் கூறீயிருக்கிறீர்கள். எனது பின்னூட்டத்திலே மிக தெளிவாக சில லிங்கும் (நபிகளார் திருமணம் குறித்து) அனேக பதில்களும் பதிந்து இருக்கிறேன் . கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டுமொருமுறை படித்து பின்பு பதிவிடுங்கள்.,
//ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டை விட இது எவ்வகையில் உயர்ந்தது?//
இந்த தமிழர் பண்பாட்டை எந்த பரிணாம மூலத்திலிருந்து எடுத்தீர்கள் ஐயா., கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா...?
//எது எதுக்கோ திடீர் திடீர் என்று வசனத்தை இறக்கும் அல்லா. ஒரே ஒரு வசனத்தை இறக்கி பிற பெண்களுடன் ஆண்கள் தொடர்பு கொள்ள கூடாது என்று தடுத்திருக்கலாமே. //
அதற்கு அவசியமில்லை. அனைத்தையும் அறிந்தவன் தான் அல்லாஹ் நீங்கள் சொல்வது போல் இவ்வாறு வசனங்களை தருவதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இனபெருக்கத்திற்கு வேறு வழியை ஏற்படுத்தி ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள தேவையில்லை என்ற மன நிலையில் இறைவன் படைத்திருக்கலாமே அது எல்லா வித தேவையற்ற பிரச்சனைக்கும் தீர்வாக அமையுமே., இங்கு கேள்வி பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே? (மேலுள்ள பின்னூட்டங்களை படித்து உங்கள் வினாக்களை சந்தேகங்களாக பதியுங்கள் கோபமாக வேண்டாம் ஏனெனில் கோபத்திற்கு நிச்சயம் பதில் கிடையாது@ கிடைக்காது)
//ARUN said….ஆறு வயது குழந்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் இருந்து என்ன நல்ல வாழ்கை பாடத்தை கற்றுக்கொண்டீர்கள். பதில் கிடைக்குமா? //
ReplyDeleteஇது எப்படியிருக்கு?
//எட்டு வயதுக்குள் மகளுக்கு திருமணம் செய்து பிடித்துக் கொடுத்துவிடு.!!!..அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரரின் இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. 45. 46 ல் இருந்து சுருக்கம்//
அப்ப மற்ற மதங்கள் போலவே அப்படி இப்படித்தான் இருக்கும் எங்க இஸ்லாமிய மதமும் அப்படின்னு சொல்ரீங்களா?
என்னங்க மனித குலத்திற்கே அனுப்ப பட்ட இறுதி வேதம்,க்டைசி தூதர் ஒரு வித்தியாசமும் இல்லையா? இல்லை மற்ற மதங்கள் எந்த அளவுக்கு உண்மையோ அவ்வளவுதான் என் மதமும் உண்மை என்று சொல்லி விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் அல்லவா?
// இங்கு கேள்வி பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே?//
ReplyDeleteநண்பர் ஆஷிக்கிற்கு எதிக்கும் குரல்களை கூட வெளியிடுவதற்கு பாராட்டுகள்.
வ்
பல தார மணம் என்பதை ப்ற்றி செய்தவர்கள் அதன் அருமை பெருமைகளை விளக்கட்டும். ஏதோ ஒரு காலத்தில் எதற்காகவோ சொல்லப் பட்டதை, நான் ஆதரிப்பேன் என்பது சரியில்லை.
மத்தில் உள்ள எல்லோருக்கும் பொருந்தக் கூடிய நல்ல விஷயங்க்ளை பின்பற்றவே முடியுமானாலே பெரிய விஷயம்.
ஒரு மனிதனாக பேசுங்கள்.எனது சகோதரியோ,மகளோ முதல் மனைவி இருக்கும் ஒருவனுக்கு இரண்டாம் தாராமாக வாழ்க்கைப்பட அனுமதிப்பேன் என்று சொல்லக்கூட உங்களுக்கு உரிமை இல்லை.அந்த பெண்ணின் வாழ்க்கை அவளுடையதே.
உங்களுக்கு பெண் மீது ஆசை என்றால் அதற்கு திருமணம் ஒரு வழி என்றால் அதற்கு மதம் சம்பிரதாயம் என்றா பூச்சுகள் எல்லாம்.மதத்தில் சொன்ன நல்ல விஷயம் எல்லாம் செய்து முடித்துவிட்டு பிறகு இரண்டு கட்டலாம இல்லை நாலு கட்டலாமா என்று பார்க்கலாம்.
முகலாயர் ஆட்சியின் கீழ் இந்தியா சுமார் 300 வருடம் இருந்தது.அவர்களும் இப்படித்தான் மதம் புண்ணக்கு என்று முஸ்லிம்ம்களை முன்னேற்றாமல் போந் சேர்ந்னர்.அப்படி இர்ந்தும் முஸ்லிம்களின் நிலைமை தலித் மக்களின் நிலைமையை விட மோசமாக உள்ளது .தலித் மக்களில் பெண்கள் அதிக மாக கல்வி அறிவு பெறுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு காரண்ம். உஙக்ள் கருத்துகள் எங்கே கொண்டு போய் விடப் போகிறதோ? அய்யோ பாவம்
இந்த சுட்டியை பாருங்கள்.உங்களின் சமூக நிலைமை புரியும்.
http://www.iiav.nl/epublications/1999/muslimwomenindia.pdf
யார் மீதும் எனக்கு கோபம் இல்லை குலாம் அவர்களே,
ReplyDeleteஇங்கே கொஞ்சம் திசை மாறி வேறுவிதமாக விவாதத்தை தொடங்கியது வாஞ்சூர் என்பவர். அவருக்கே முதலில் அமைதி தேவை.
//தருமி ஐயா விடுத்த வினாக்களை தான் நீங்கள் சற்று கோபத்துடன் கூறீயிருக்கிறீர்கள்//
ஆனால் எந்த வினாவுக்குமே உங்களிடம் இருந்து தெளிவான பதில் இல்லையே,
//இந்த தமிழர் பண்பாட்டை எந்த பரிணாம மூலத்திலிருந்து எடுத்தீர்கள் ஐயா., கொஞ்சம் தெளிவுபடுத்துகிறீர்களா...?//
ஒருவருக்கு நான்கு மனைவி என்ற அரபி பண்பாட்டை தூக்கி பிடித்து பேசும் உங்களிடம், தமிழ் பண்பாட்டை கூறியது தவறுதான். நீங்கள் தமிழர் என்று தான் நான் நினைக்கிறேன். அது எந்த பரிணாம மூலத்தில் இருந்து வந்தால் என்ன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது சிறந்ததா அல்லது ஒருவனுக்கு நான்கு பேர் என்பது சிறந்ததா என்பதை நேரடியாக கூறுங்களேன்.
//அதற்கு அவசியமில்லை. அனைத்தையும் அறிந்தவன் தான் அல்லாஹ்//
புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள். அனைத்தையும் அறிந்த அல்லா முகமது அவர்களின் மருமகள் தனது திருமணம் குறித்து சுயமாக முடிவு எடுக்க கூட விடாமல் அதற்கும் ஒரு வசனத்தை இறக்குகிறார். இப்படி எது எதற்கோ வசனத்தை இறக்குபவருக்கு இந்த முக்கியமான விசயத்திற்கு ஒரு வசனத்தை இறக்க என்ன கஷ்டம்.
//பலதாரமணம் சமுக ரீதியாக என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே? //
எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று நூறு சதம் உறுதியாக கூறுகிறீர்களா.
நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ReplyDeleteசகோதரர்., பெயரில்லா ... பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு சலுகை மட்டுமே மாறாக அது ஒரு நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய கடமையல்ல எனபதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இதை தான் முந்தைய பின்னூட்டத்திலும் கூறியிருக்கிறேன். //பலதார மணம் இஸ்லாத்தில் ஒரு ஆப்சன்.கண்டிப்பாக நான்கு பெண்களை மணமுடித்தால் தான் ஒருவன் முழுமைப்பெற்ற முஸ்லிம் என்றெல்லாம் எங்கும் அல்லாஹ் சொல்லவில்லை. Monday, November 15, 2010// பலதார மணம் குறித்து இதுவே போதும் என நினைக்கிறேன்.
முகலாயர்கள் ஆட்சி இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்தா? அல்லது இஸ்லாத்திற்காக அமைந்தா இரண்டும் இல்லை சகோதரரே அவை குறித்து அறிய முற்படுங்கள்., உண்மை தான் கல்வியறிவில் இஸ்லாமிய பெண்கள் பின் தங்கியிருக்கிறார்கள் உண்மை தான்., இதற்கு இஸ்லாமா காரணம்? சரியான புரிதலற்ற இஸ்லாமியர்களே காரணம்.அல்ஹம்துலில்லாஹ் பெண்களும் தற்போது இந்தியாவில் கல்வியறிவு அதிகம் பெற்று தான் வருகிறார்கள். ஒன்று புரியவில்லை சகோதரே இங்கு இந்தியாவோடு தான் இஸ்லாத்தை ஒப்பிடுகிறீர்கள் காரணமென்ன? இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் அதன் சட்டங்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானது., இஸ்லாத்தை இந்தியாவிற்குள் சுருக்கி விட வேண்டாம்
//இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் //
ReplyDeleteநல்ல இருக்கே கதை, உலகத்தில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா. ஒருவர் தன்னுடைய நலனுக்காக உருவாக்கிக்கொண்ட ஒன்றை ஒட்டுமொத்த உலகத்தின் தலையிலும் திணிக்க பார்ப்பது ரொம்ப டூ மச்...
//அதன் சட்டங்கள், உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானது.//
யார் சொன்னது. நீங்கள் சொன்னால் போதுமா? மதம் மாறினால் கொலை செய்ய சொல்லும் உங்கள் ஒரு சட்டம் போதுமே உங்கள் மார்க்கத்தின் மொத்த சட்டங்களும் எப்படி இருக்கும் என்பதை சொல்ல. இப்படிபட்ட சட்டங்கள் உலகம் மொத்தத்திற்கும் பொதுவாகஇருந்தால் .....
அம்மாடி நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
//
கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?
இவ்வாறெல்லாம் மனிதர்கள் கடைபிடிக்க வழிமுறை உதாரணங்கள் அருளப்பட்டிருக்கும் பொழுது //
உங்களுக்கும் பங்கு வேண்டுமென்றால் கேளுங்கள் வாஞ்சூர் சார், கண்டிப்பா கிடைக்கும். ஆனாலும் உங்களுக்கு இந்த பொறாமை ஆகாது.
பிரிட்டன் மக்களுக்கு கேடுகாலம்தான்
ReplyDelete//"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"//
ReplyDeleteஉலக மக்கள் அனைவரும் எங்க எப்ப குண்டு வெடிக்கும்னு பயந்து செத்துக்கிட்டு இருக்காங்க.
தற்போதைய பயங்கரம் ஒன்றை பாருங்க
http://edition.cnn.com/2010/WORLD/europe/12/12/sweden.explosion/index.html?hpt=T2
இதுல இப்படி ஒரு கம்பெனி விளம்பரம் தேவையா?
தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்பிவிடும் வீண் முயற்சி எமக்கு வேண்டாம்..ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிறதென்பது எமக்கு தெரியும்.. இஸ்லாத்தின் சிறப்பான இணையற்ற பெண்ணுரிமையை பெண்களான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்..சாட்சி சொல்கிறோம்..
ReplyDeleteஅறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்..
மூடர்கள் எங்களுடன் தர்க்கம் பண்ண வந்தால் எங்கள் இறைவன் கூறச் சொன்னதை நாங்கள் செயற்படுத்துகிறோம், அது..
''உங்களுக்கு சலாம், நாங்கள் மூடர்களை விரும்பமாட்டோம்''!!!
சகோதரி ஜல்ஹா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
----------
ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிறதென்பது எமக்கு தெரியும்.. இஸ்லாத்தின் சிறப்பான இணையற்ற பெண்ணுரிமையை பெண்களான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்..சாட்சி சொல்கிறோம்..
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்..
------------
நச்....நச்......சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. தங்களைப் போன்ற எண்ணற்ற சகோதரிகள் இருக்கும் வரை அவர்களது வாதம், அவர்களது வாய் மற்றும் கைகளுக்கு exercise தருவதை தவிர வேறெந்த பலனையும் தரப்போவதில்லை.
அவர்களுக்காக துவா செய்யுங்கள். இப்படி இருந்த பலர் பின்னாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏக இறைவன் அமைதியையும். மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமீன்
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ