Pages

Tuesday, November 23, 2010

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   





ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி)

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 



சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய "Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse’s cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 



இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  



மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain’s overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

38 comments:

  1. salam to all..subhanallah ...superb article sir...i dont knw what to say..just reading this inshaalah atleast one can get hidhayath...

    ReplyDelete
  2. கடவுள் இருக்கிறார் என்றால் நல்லவர்களும் கஷ்டபடுவது ஏன்.கிண்டலுக்காக கேக்கவில்லை.வருத்தத்துடன் கேட்கிறேன் .அவர் மீதான நம்பிக்கையில் தான் வாழவே முடிந்தது.இன்று ஏன் என்ற பரிதவிப்பு ஒரு விடை சொல்லுவீர்களா

    ReplyDelete
  3. இவ்வளோ கஷ்டப்பட்டு கடவுள் இருகர்ந்னு நிருபிச்ச மட்டும் உங்களுக்கு என்ன கேடக்கபோகுது ..... பதிவ படிக்க ஆரம்பிச்சப்போ எதோ அறிவியல் பதிவுன்னு நெனச்சு தான் படிசிகிட்டு வந்தேன்....கடைசில இதுவும் ஒரு கடவுள் இருக்காரா இல்லியான்னு கேக்குற ஒரு வெட்டி பதிவுன்னு தெரியவந்தது....அவரு இருந்த உங்களுக்கு என்ன இலேன்ன உங்களுக்கு என்ன .....நீங்க வேல செஞ்சா உங்களுக்கு சாப்பாடு... இல்லேன்னா இல்ல.....

    அப்படியே கடவுள் தான் உலகத்த படச்சர்ந்னே வச்சிக்குவோம்...எதுக்கு படைச்சார்...நாம வாழதனே....வாழ்ந்திட்டு போவோம்....

    ReplyDelete
  4. அனானி சகோதரருக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    இறைவன் நல்லவர்களுக்கு உதவி செய்யவில்லை என்பதால் அவன் இல்லையென்று முடிவெடுத்து விட முடியுமா? என்று தாங்கள் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு, நம் தாய் தந்தையர் நமக்கு உதவி செய்யவில்லை என்பதற்காக அவர்கள் நம்மை பெற்றெடுக்கவில்லை என்று முடிவு செய்துவிட முடியாதல்லவா?. வேண்டுமென்றால் "கெட்ட பெற்றோர்/உதவாத பெற்றோர்" என்று கூறிக்கொள்ளலாம்.

    அதுபோல, இறைவன் நல்லவர்களுக்கு உதவி செய்யவில்லை என்பதற்காக அவன் இல்லையென்று ஆகி விடாது. இந்த பூமி, அதிலுள்ள உயிரினங்கள், பிரபஞ்சம் என்று இவை அனைத்திலும் அவனுடைய அத்தாட்சிகள் இருக்கின்றன. வேண்டுமென்றால் "கெட்ட கடவுள்" என்று கூறிக்கொள்ளலாம்.

    சரி, ஏன் அவன் நல்லவர்களுக்கு சோதனைகளை கொடுக்கின்றான், ஏன் அநியாயம் செய்பவர்களை விட்டு வைக்கின்றான் என்பது போன்ற கேள்விகள் ஒவ்வொருவருக்கும் எழுவது இயல்பு. ஆனால் இது போன்ற கேள்விகளுக்கு இங்கு விடையளித்தால் அது பதிவை திசை திருப்பி விடும் என்று அஞ்சுகின்றேன். அதனால் தாங்கள் உங்களுடைய மெயில் id யில் இருந்து எனக்கு ஒரு மெயில் அனுப்பினால் (aashiq.ahamed.14@gmail.com) இது குறித்து விளக்க ஏதுவாய் இருக்கும்.

    இறைவன் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை - குரான் 2:286

    தங்களுடைய கண்ணியமான அணுகுமுறைக்கு என்னுடைய நன்றி...

    இறைவன் கூடிய விரையில் உங்களுக்கு கொடுத்திருக்கும் சோதனையை விலக்கி வைப்பானாக என்று பிரார்த்திக்கும்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. சகோதரர் ராஜா,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    எதற்கு டென்ஷன்?

    முதலில், பாரம்பரியமிக்க பல்கலைகழகத்தில் இருந்து வெளியான தகவல்களை தெரிவித்து விட்டு, பிறகு சிலருக்கு சில கேள்விகளை கண்ணியமான முறையில் எழுப்பியிருக்கின்றேன். இதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? உங்களை எந்த விதத்தில் இது பாதிக்கின்றது?...நீங்கள் அந்த சிலரில் வரவில்லை என்றால் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் தகவல்களை மட்டும் எடுத்து கொண்டு மற்றதை விட்டு விடலாமே? அதை விட்டு விட்டு, வெட்டி பதிவு என்று வசை பாடுவது நன்றாகவா இருக்கின்றது? சிந்தியுங்கள்...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியை தந்தருள்வானாக. ஆமின்

    நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. மன்னிக்கவுன் ஆஷிக் .வெட்டி பதிவுன்னு சொல்லி இருக்க கூடாது....அனால் நான் கூறிய கருத்துக்களில் எனக்கு மாற்றம் இல்லை...உங்கள் மனதை புன்படுதியத்ற்கு மன்னிக்கவும்....

    Raja

    ReplyDelete
  7. சகோதரர் ராஜா,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    ---
    மன்னிக்கவுன் ஆஷிக்
    ----

    பரவாயில்லை சகோதரரே. வருத்தம் தெரிவித்த உங்கள் உயர்ந்த உள்ளத்தை எண்ணி நெகிழ்ச்சி அடைகின்றேன்.


    ----
    அனால் நான் கூறிய கருத்துக்களில் எனக்கு மாற்றம் இல்லை
    ----

    கருத்து வேறுபாடுகள் இயல்பான ஒன்றுதான். அதில் மாற்று கருத்து இல்லை.


    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...ஆமின்.

    நன்றி...

    ReplyDelete
  8. ஏன் எலிகளின் மூளையை சோதித்து பார்த்துவிட்டு மனித மூளை பத்தி கருத்து சொல்கிறார் ஸ்மித்??

    ReplyDelete
  9. சகோதரர் கையேடு,

    சலாம்,

    ---
    ஏன் எலிகளின் மூளையை சோதித்து பார்த்துவிட்டு மனித மூளை பத்தி கருத்து சொல்கிறார் ஸ்மித்??
    ---

    இரண்டுமே பாலுட்டிகள் என்பதால்...மனித மூளையின் திசுக்கள் கிடைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம் என்பதால்...சுண்டெலியின் மூளைத்திசு "Bioengineering" செய்யப்பட்டதால்...இவை நான் அறிந்த தகவல்கள். ஏதாவது விடுபட்டிருந்தால் தாங்கள் சொல்லவும் அல்லது சுட்டி காட்டவும்.

    நன்றி...

    ReplyDelete
  10. நிச்சயம் வியப்பான தகவல்களே.

    //மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது//

    அதை விட ஆச்சர்யம் என்னவெனில் இவை அனைத்தும் எந்த விச அசம்பாவிதமும் இல்லாமல் சரியான முறையில் நடப்பதே.

    ReplyDelete
  11. சகோதரர் கையேடு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ----
    ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?
    ----

    கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட பதில் சொல்ல வில்லையே?...பொறுமையாக என்னிடமிருந்து தகவல்களை வாங்கி கொண்டு பதில் சொல்வீர்கள் போல...இம்ம்

    பொறுமையுடன் காத்திருக்கின்றேன், நீங்கள் அந்த சில கேள்விகளுக்கு பதில் சொல்வீர்கள் என்று...இன்ஷா அல்லாஹ்

    நன்றி...

    ReplyDelete
  12. //இரண்டுமே பாலுட்டிகள் என்பதால்...மனித மூளையின் திசுக்கள் கிடைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம் என்பதால்...சுண்டெலியின் மூளைத்திசு "Bioengineering" செய்யப்பட்டதால்...//

    எலி மனிதன் இரண்டுமே ஒரு மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை, ஒரே மாதிரியான கட்டமைப்பு கொண்டவை, மனிதனுக்கு தயாரிக்கும் மருந்துகள் முதலில் எலிகளுக்கு கொடுத்தே சோதிக்கப்படும் என்பது குறுப்பிட தக்கது.

    ReplyDelete
  13. ம்ம்ம்ம் ரைட் தொடருங்கள்.

    ReplyDelete
  14. வஜீர் அலி அஹ்மதுWednesday, November 24, 2010

    சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ,

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    மூளையின் தகவலைப்பற்றி மூளையே இல்லாதவரிடம்(பரிணாமத்தை நம்பும் சகோதரர்களிடம்)அறிவித்தல் எப்படி பதில் அறிவிப்பார்கள்? அல்லாஹ் நாடினாலன்றி அறிவிக்கமாட்டார்கள்

    பரிணாமத்தை நம்பும் சகோதரர்களே உங்கள் பதிலை எதிர்பார்க்கும் உங்கள் சகோதரர்

    அல்லாஹ் உங்களின் சிந்தனைகள் மற்றும் அதை செயல்படுத்தும் ஆற்றலை உங்களுக்கு (ஆஷிக்அஹ்மத்) அதிகரிப்பானாக

    ReplyDelete
  15. சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நிச்சயம் இது ஒரு சிறப்பான ஆராய்ச்சி. ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.
    பிரம்மிக்க வைக்கும் நுண்ணோக்கி படங்கள்.

    படிக்க படிக்க சொல்லிக்கொண்டே வந்தேன்...
    சுபஹானல்லாஹ்...
    சுபஹானல்லாஹ்...
    சுபஹானல்லாஹ்... என்று... கணக்கின்றி.

    பரிணாமத்திற்கு எதிரான உங்களின் இந்த விடாமுயற்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    @ராஜவம்சம்,
    ////அல்லாஹ் உங்களின் சிந்தனைகள் மற்றும் அதை செயல்படுத்தும் ஆற்றலை உங்களுக்கு (ஆஷிக்அஹ்மத்) அதிகரிப்பானாக ////---ஆமீன்.


    @கார்பன் கூட்டாளி...
    ========================================
    //மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது//

    அதை விட ஆச்சர்யம் என்னவெனில் இவை அனைத்தும் எந்த விச அசம்பாவிதமும் இல்லாமல் சரியான முறையில் நடப்பதே.

    ===========================================

    அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால்....
    இது பன்னெடுங்காலமாய்
    பலகோடி ஜீவராசிகளுக்கும்
    மிகத்துல்லியமாக தொடர்ந்து நடந்து வந்து கொண்டே வருகிறதே...!!!

    அல்லாஹ் அக்பர்... அக்பர் கபீரா...

    ReplyDelete
  16. சிறு பிழை நேர்ந்து விட்டது...

    @ராஜவம்சம் என்ற இடத்தில்...

    @வஜீர் அலி அஹ்மது

    என்று இருந்திருக்க வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  17. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் (வரஹ்)...

    ---
    பரிணாமத்திற்கு எதிரான உங்களின் இந்த விடாமுயற்சி
    ----

    எல்லாப் புகழும் இறைவனிற்கே...தொடர்ந்து நம் வாதங்களை எடுத்து வைப்போம்...இன்ஷா அல்லாஹ்...

    நன்றி...

    ReplyDelete
  18. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - Biology
    வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் - Zoology
    துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் - Physics
    அதிசயமே அசந்து போகும் குர்ரானும் அதிசயமே - ஹிஹிஹிஹி

    ReplyDelete
  19. வஜீர் அலி அஹ்மதுThursday, November 25, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //சகோதரர் Anonymous

    பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - Biology
    வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் - Zoology
    துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் - Physics
    அதிசயமே அசந்து போகும் குர்ரானும் அதிசயமே - ஹிஹிஹிஹி //

    திரைப்பட பாடலுடன் அல்-குரானை இணைப்பதை தவிர்க்கவும்

    நன்றி

    ReplyDelete
  20. தொகுக்கப்படும் விஷயம் அனைத்தும் இது வரி தீண்டப்படாத துறையாகவும், இன்னும் அதிக விளக்கங்களுடனும் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது சகோதரரே. அல்லாஹ் இதை எளிதாகவும், உம்மத்தினர்க்கு பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பானாக. இந்த கட்டுரையை தொடராக் ஏதாவது இதழில் வெளியிட்லாமே இதனால் வசகர் வட்டமும் விரியும், நீங்கள் ஏதாவது விஷயத்தை மறந்து விட்டிருந்தாலோ, தொடவில்லையென்றாலோ, அந்த வட்டம் மூலம் இன்னும் மெருகேற வாய்ப்புகள் உண்டே??

    ReplyDelete
  21. ஒரே ஒரு ஆச்சர்யம் ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம் காபிர் பசங்களே செய்யுறாங்க. குரான் அளிக்கப்பட்ட அரபிகள் இன்னும் எளிதாக செய்யலாம். இந்த ஆராய்ச்சியை கடவுளோடு முடிச்சு போடுவது என் பார்வையில் நகைப்புக்குரியது, இதனை ஒரு மூமினே செய்திருந்தாலும் கூட. மதம், அறிவியல், அரசியலை ஒன்றாக கலந்து சிந்திக்கும் வரை இதெல்லாம் மாறப்போவதில்லை

    ReplyDelete
  22. அண்ணே குடுகுடுப்பை
    //ஒரே ஒரு ஆச்சர்யம் ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம் காபிர் பசங்களே செய்யுறாங்க//
    காபிருன்ன யாரு அதுவும் காபிர் பசங்கன்ன யாருன்னு கொஞ்சம் வெளக்குங்க அதுக்கப்புறம்
    ஒங்க கடுகடுப்பை பத்தி பேசுவோம்

    ReplyDelete
  23. ஜக்கம்மா சொல்றா இந்த வீடியோவை பார்த்தா குடுகுடுப்பையின் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று. பாருங்க.
    http://www.youtube.com/watch?v=kycygVycys0&feature=related

    ReplyDelete
  24. தங்களுடைய வித்தியாசமான அறிவுப்பூர்வமான பதிவுகளும் சில விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு இயல்பான சகோதரத்துவ பதிலும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. உங்கள் ப்ளாக்கிற்கு இதுபோன்ற பதிவுகள் சிறப்பு சேர்க்கிறது. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!//

    ஆமின்

    ReplyDelete
  26. may allah help you to help more for deen al-Islam

    ReplyDelete
  27. may allah help you to spread his deen al-Islam

    ReplyDelete
  28. //ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம் காபிர் பசங்களே செய்யுறாங்க//
    GOOD QUESTION
    //காபிருன்ன யாரு அதுவும் காபிர் பசங்கன்ன யாருன்னு கொஞ்சம் வெளக்குங்க //
    NICE JOKE
    பதில் சொல்ல தெரியலேன்னா தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. எதுக்கு இந்த சமாளிப்பு

    ReplyDelete
  29. Hello Mr. Aashiq Ahamed,

    No one ever said such complex brain structure straight away - spontaneously - came into existence.

    Hope you are aware that single celled organism dominated the planet for almost 3 billion years, before multi cellular and other complex creatures - like humans - evolved on earth.

    Given the time scale we are talking about it is conceivable that such complex structures would indeed be possible.

    So, this scientific observation/finding doesn't mean God exists ...nor God doesn't exist. It is like twisting a finding to accommodate our own wishes!

    By the way, thanks for posting the article.

    Note: Sorry, I'm not fluent in typing in Tamil and hence my comments in English.

    ReplyDelete
  30. Dear brother Anony,

    Assalaamu alaikum (varah), May peace and blessings of the Almighty be upon you and your family..aameen.

    1. ----------
    No one ever said such complex brain structure straight away - spontaneously - came into existence.
    -----------

    Even I didn't say evolution tells like that. Let me repeat what I said in the post,

    பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

    did you get that brother?

    2. --------
    Hope you are aware that single celled organism dominated the planet for almost 3 billion years, before multi cellular
    ---------

    If you say eukaryotes evolved from prokaryotes, I will simply ask "Where are the evidences?"

    3.-------
    and other complex creatures - like humans - evolved on earth.
    -----------

    Pure speculations. Not a single evidence exists so far...Pure Speculations...

    4.--------
    Given the time scale we are talking about it is conceivable that such complex structures would indeed be possible.
    --------

    How come?...what is the probability?...We got millions and millions of fossils from history. Not a single fossil bears the witness that "evolution happened in the past".

    5.------
    So, this scientific observation/finding doesn't mean God exists ...nor God doesn't exist. It is like twisting a finding to accommodate our own wishes!
    --------

    True...I accept. I used this one (and plenty of other researches in my other posts) to justify the presence of God.

    6.-----
    By the way, thanks for posting the article.
    ------

    Welcome brother...All praise to Almighty. My simple request to you is, Please spent some time in analyzing Evolution Theory. I don't want people to accept my words readily. Go back to the evolution and make a research on your own and then decide.

    Finally, Why don't you have a look at Qur'an?, If you are interested, Pls send me (aashiq.ahamed.14@gmail.com) a mail, I will send you the soft copy of tamil translation (of meanings) of Qur'an.

    May Allah(swt) help you to find the truth...

    Thanks for your comments and may the Almighty bless you and your family with peace and happiness.

    Take care,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  31. Hello Mr. Aashiq Ahamed,

    Thanks for your responses.

    Just to clarify my previous post, human/mammals brains didn't come into existence. It took roughly 400 crore years. As per evolution theory only very simple one-celled organisms (like bacteria) originate "spontaneously"! It took over 300 crore years to become multi-cellular organisms.

    So your argument that Evolution theory suggests spontaneous origination of complex structures like our brain is wrong/incorrect. Of course there is no direct evidence to prove this - to date no one has seen evolution in a laboratory, if that is what you want as a proof. May be existence of humans in various sizes, skin colours, shapes etc could be the result of adaptation - one of the essential pillars of evolution.

    Having said that, none of the existing religions understand or explain the true nature of God - assuming He exists. Not the Biblical ones for sure!

    When time comes I will definitely go through all religious texts to ensure my after-life is secure! :)

    To conclude, like Evolution Theory, even the argument for God is mere speculation, belief or faith. I have not at least seen or been shown any direct evidence for the existence.

    God or no God doesn't matter as long as human beings understand each other, do only good to one another.

    ReplyDelete
  32. Dear brother Anony,

    Assalaamu alaikum,


    1. ---------
    It took roughly 400 crore years.
    ----------

    How did you tell that?

    2. -----
    As per evolution theory only very simple one-celled organisms (like bacteria) originate "spontaneously"
    --------

    Again, where are the evidences?, fine...why did u put that word spontaneous within quotes?

    3. ---------
    Of course there is no direct evidence to prove this
    ------------

    That is my point..

    4.------
    May be existence of humans in various sizes, skin colours, shapes etc could be the result of adaptation - one of the essential pillars of evolution.
    ---------

    Just see your answer, what do you mean when you say "MAY BE" & "COULD BE"....(evolutionary key words..immm)
    so, adaptation is a proof for evolution...funny...define evolution please...

    5.------
    Having said that, none of the existing religions understand or explain the true nature of God - assuming He exists. Not the Biblical ones for sure!
    When time comes I will definitely go through all religious texts to ensure my after-life is secure! :)
    To conclude, like Evolution Theory, even the argument for God is mere speculation, belief or faith. I have not at least seen or been shown any direct evidence for the existence.
    -------------

    See brother, we all have intelligence and it is up to us to find out the truth... Go ahead and search on your own...

    Thanks for your comments...

    Take care,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  33. அருமையான ஆய்வு கட்டுரை பதீவுக்கு நன்றீ
    மேலும் வர துவா செய்கிறேன்

    ReplyDelete
  34. i want to add u in facebook i need like u people to know something from u.

    ReplyDelete
  35. Dear brother Dawah Islam,

    Assalaamu Alaikum,

    Really proud of having people like u in our ummath. sorry brother, i don't a facebook account.

    thanks and take care,

    urs,
    aashiq ahamed a

    ReplyDelete
  36. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
    அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ்! இறைவன் உங்களை போன்றோர்களை அறிவில் உயர்த்துவானாக..
    தாங்கள் அனுமதி அளித்தால் இதை என் பிளாகில் உங்கள் பெயர் மற்றும் பிளாக் அடையாளத்துடன் பதிவேற்றுவேன்...

    அபூஃபைஸல்
    புதுவை

    ReplyDelete
  37. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    சகோதரர் பைசல்,

    தாராளமாக நீங்கள் பதிவு செய்துக்கொள்ளலாம்..தங்களின் இந்த உதவிக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  38. Jazakkallah for sspending your time in explaining Allah's one of the wonders. Really exciting. Alhamdulillah.

    /400 crore , 300 crore years, /ssappa....mudila....i think it should be crore crore years.....hi...hi...

    Banu

    ReplyDelete