Friday, December 3, 2010

இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

பரிணாமத்தின் ஓட்டைகளை தொடர்ந்து பார்த்துவருகின்றோம். அதிலிருந்து ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்த பதிவு. இதுவும் பரிணாமம் சம்பந்தப்பட்ட பதிவுதான். ஆனால், பரிணாமவியலாளர்களின் நேர்மையின்மையை பிரதிபலிக்கும் பதிவு. 

இந்த பதிவு, பரிணாமத்தை எதிர்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக தோன்றலாம். பரிணாம ஆதரவாளர்களுக்கு அசவுகரியத்தை தரலாம். மற்றவர்களுக்கோ, எதார்த்தத்தை பிரதிபலித்து சிந்தனையை தூண்டலாம்.    

டாக்டர் கார்னிலியஸ் ஹன்டர் (Dr.Cornelius Hunter), பரிணாமத்தை கடுமையாக எதிர்த்து வரும் அறிவியலாளர்களில் ஒருவர். Intelligent Design கோட்பாட்டை (இந்த கோட்பாட்டை பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்பவர். தன்னுடைய சமீபத்திய பதிவொன்றின் துவக்க பத்தியில், பரிணாம ஆதரவாளர்களை கடுமையாக கிண்டல் செய்திருந்தார் ஹண்டர். எதார்த்தத்தை பிரதிபலிக்கும் அந்த கருத்து இங்கே உங்கள் பார்வைக்கு...  

"Being an evolutionist means there is no bad news. If new species appear abruptly in the fossil record, that just means evolution operates in spurts. If species then persist for eons with little modification, that just means evolution takes long breaks. If clever mechanisms are discovered in biology, that just means evolution is smarter than we imagined. If strikingly similar designs are found in distant species, that just means evolution repeats itself. If significant differences are found in allied species, that just means evolution sometimes introduces new designs rapidly. If no likely mechanism can be found for the large-scale change evolution requires, that just means evolution is mysterious. If adaptation responds to environmental signals, that just means evolution has more foresight than was thought. If major predictions of evolution are found to be false, that just means evolution is more complex than we thought. So today’s falsification, though it falsifies one of evolution’s most treasured predictions, will be no different."




"1.பரிணாம ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு கெட்ட செய்தி என்று ஒன்றுமில்லை. உயிரினப்படிமங்களில் திடீரென புதிய உயிரினங்கள் தோன்றியிருந்தால், பரிணாமம் வேகமாக நடப்பதாக அர்த்தம்.

2.மிக நீண்ட காலங்களுக்கு உயிரினங்கள் வெகு சில மாற்றங்களோடு அப்படியே தொடர்ந்திருந்தால்,  பரிணாமம் நீண்ட இடைவெளியை எடுத்து கொள்கின்றது என்று அர்த்தம்.    

3.புத்திசாலித்தனமான இயக்கமுறைகள் உயிரியலில் கண்டுபிக்கப்பட்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட சாமர்த்தியமாக இருக்கின்றது என்று அர்த்தம்.

4.ஒன்றுக்கொன்று தொலைவில் உள்ள உயிரினங்களில் ஒரே மாதிரியான வடிவமைப்பு காணப்பட்டால், பரிணாமம் தன்னை மறுபடியும் ரிபீட் செய்கின்றது என்று அர்த்தம்.

5.ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயிரினங்களில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் காணப்பட்டால், பரிணாமம் சில நேரங்களில் புதிய வடிவமைப்புகளை வேகமாக அறிமுகப்படுத்துகின்றது என்று அர்த்தம்.

6.பரிணாமத்திற்கு தேவைப்படும், பெரிய அளவிலான மாற்றங்களுக்கு சாதகமான இயக்கமுறைகள் காணப்படாவிட்டால், பரிணாமம் மர்மமான முறையில் நடக்கின்றது என்று அர்த்தம்.

7.சுற்றுச்சூழல் சைகைகளை (ஒரு உயிரினம்) தழுவி கொண்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட விவேகமாக செயல்படுகின்றது என்று அர்த்தம்.

8.பரிணாமத்திற்கான முக்கிய ஆருடங்கள் தவறென கண்டுபிடிக்கப்பட்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட சிக்கலாக இருக்கின்றது என்று அர்த்தம்.

9.ஆக, இன்று தவறென நிரூபிக்கப்பட்டது, அது பரிணாமத்தின் மிக முக்கிய பொக்கிஷ ஆருடத்தை பொய்பித்திருந்தாலும், ஒரு வித்தியாசத்தையும் (பரிணாமவியலாளர்களிடையே) அது ஏற்படுத்த போவதில்லை."


டாக்டர் ஹன்டரின் கருத்தை சுருக்கமாக கூற வேண்டுமென்றால், டார்விநிஸ்ட்களை பொறுத்தவரை, இதுவும் சரி அதுவும் சரி.

உதாரணத்துக்கு, உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்றும் கூறுவார்கள். உயிரினங்கள் குறுகிய கால இடைவெளியில் வேகமாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்றும் கூறுவார்கள். இதற்கும் ஆதாரம் இருக்காது, அதற்கும் ஆதாரம் இருக்காது. ஆனால் பரிணாமம் மட்டும் உண்மை. அவர்களை பொறுத்தவரை இதுவும் சரி அதுவும் சரி.

உயிரியலில் ஏற்படும் முன்னேற்றங்களை பரிணாமத்துடன் தொடர்புபடுத்தி பேசுவார்கள். பரிணாமம் இல்லையென்றால் மருத்துவமே இல்லையென்று கதையும் விடுவார்கள்.

ஒரு செயல்படக்கூடிய சிஸ்டத்தில், inputகள் மாறினால் outputகளும் மாறும். ஆனால் பரிணாமத்தை பொறுத்தவரை inputகள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, output மட்டும் மாறவே இல்லை. அதாவது, "பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும்" என்ற output மட்டும் மாறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.   
  
ஒரு உயிரினம் திடீரென பரிணாமவாதிகள் கண்முன்னே தோன்றினாலும், "அட, பரிணாமம் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது பாருங்களேன்" என்று ஆச்சர்யப்பட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். நீங்கள் அப்படியே பிரம்மித்து போய் அவர்களை பார்த்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

பரிணாம கதை - ஹாரி பாட்டர் கதைகளை விட நிச்சயம் சிறந்தது....

இறைவன் நன் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


My Sincere thanks to:
1. Dr.Cornelius Hunter.


Reference:
1. Arsenic-Based Biochemistry: Turning Poison Into Wine - Cornelius Hunter. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    ஹாரி பாட்டர் கதைகள் காப்பி ரைட் சட்டத்திற்கு உட்பட்டவை. ஆனால் பரிணாம கதைகள் எத்தகைய காப்பி ரைட் சட்டத்துக்கும் உட்படாதவை. ஆகையால் தான் நமது தமிழக பரிணாமவியல் ஆதரவு கொழுந்துகள் இஷ்டத்திற்கு கதையடிக்கின்றார்கள். ஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார். பாவம் பரிணாமவாதிகள்.

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம்....

    சகோதரர் ஷேக் தாவூத்,

    -----
    ஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார்
    -----

    அவர் உபயோகப்படுத்திய வார்த்தைகளை பாருங்கள்.

    evolution,
    operates in spurts
    takes long breaks
    smarter than we imagined
    repeats itself
    sometimes introduces new designs rapidly
    more foresight
    more complex

    :)

    ReplyDelete
  3. இன்னொரு முத்தான பதிவு

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    அன்பின் சகோதரரே!
    உங்கள் பதிப்பும் அனைத்தும் அருமை, நாத்திகராக இருந்தாலும் சரியே அல்லது ஒருவர் கிறித்தவராக இருந்தாலும் சரியே அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் வாதங்கள் அனைத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை இவர்கள் குர்ஆனில் இருந்து எந்த ஒரு பிழையினையும் காட்ட முடியாமல், முஹம்மது நபி மீது அவதூறுகளை அள்ளி எறிய ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு அந்த அவதூறுகளை குறித்து தெளிவான பதில் கொடுத்தாலும் அவர்களின் உள்ளம் அதை ஏற்க மறுக்கிறது. நம்மை பார்த்து BRAIN WASHED முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களின் மூளையை எதை கொண்டு தூய்மை படுத்துவது அல்லாஹ் தான் தூய்மை படுத்த வேண்டும். இவர்கள் நேரான வழியை அடைய பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete