நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
-------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:
உயிரியல் அல்லது பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life): ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.
-------
அரிசோனா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்த "உயிர் என்றால் என்ன?" என்ற விவாதத்தில் பல சுவாரசிய காட்சிகள் நடந்தேறின. உயிரியல் மரம் குறித்து வென்டர் கூறிய கருத்துக்கள் பலரது புருவத்தை உயர செய்துள்ளது.
(வென்டர் குறித்த இந்த தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்)
டாகின்சின் வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உயிரியல் மரத்தை "புனைவு/கட்டுக்கதை (fiction)" என்று வர்ணித்துள்ளார் வென்டர்.
இந்த செய்தி உங்களது ஆர்வத்தை தூண்டியிருந்தால் மேற்கொண்டும் படியுங்கள்.
டாகின்ஸ், வென்டர், பால் டேவிஸ், லாரன்ஸ் க்ராஸ், க்றிஸ் மெக்கே உள்ளிட்ட ஏழு அறிவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த உரையாடல் நிகழ்ச்சியில் "உயிர் என்றால் என்ன?, உயிர் தோன்றியது எப்படி?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ரோஜர் பின்ஹம் விவாதத்தை நடத்தினார்.
உரையாடலில் கலந்து கொண்டவர்களில் பலர், இவ்வுலகில் உயிர் என்பது ஒரே வகை தான் என்று கூறினர். அதாவது, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதையரில் இருந்து வந்துள்ளதால் இவ்வுலகில் உயிர் என்பது ஒரு வகை மட்டுமே என்பது பலரது கருத்தாக இருந்தது, ஒருவரைத் தவிர...
ஆம்....கிரேக் வென்டரை தவிர.
அப்போது நடந்த சுவாரசிய உரையாடல் இங்கே உங்கள் பார்வைக்கு,
வென்டர்: இவ்வுலகில், உயிர் என்பது ஒரு வகைதான் என்ற (இங்குள்ள) என் சக தோழர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். நம்மிடையே பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன.
pH 12 baseசில் உங்களை தூக்கி போட்டால் உங்களது தோல் கரைந்து விடும். ஆனால் அதில் வாழக்கூடிய உயிரினங்களும் உள்ளன. இந்த இரண்டையும் ஒரே வகையான உயிரினங்கள் என்று நான் கூற மாட்டேன்.
பால் டேவிஸ்: (ஆனால்) நமக்கெல்லாம் ஓரே மரபணு குறியீடு (Genetic code) தானே இருக்கின்றது? நமக்கெல்லாம் ஒரே பொதுவான மூதாதையர் தானே...
வென்டர்: இல்லை, நமக்கெல்லாம் ஒரே மாதிரியான மரபணு குறியீடுகள் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், Mycoplasma பாக்டீரியாக்களில் உள்ள மரபணு குறியீடு உங்களது செல்களில் வேலை செய்யாது. ஆக, உயிரினங்களுக்குள்ளாக நிறைய வேறுபாடுகள் உள்ளன.
உரையாடல் படுசுவாரசியமாக சென்றது...
டேவிஸ்: அவை (Mycoplasmas) வேறு உயிரியல் மரத்தை சார்ந்தவை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
வென்டர்: உயிரியல் மரம் என்பது ஆரம்ப கால அறிவியல் அறிவை கொண்டு புனையப்பட்டது. அது நிலைத்து நிற்கவும் இல்லை. (ஆக) உயிரியல் மரம் என்று ஒன்றுமில்லை.
வென்டரின் அதிரடியான இந்த பதில்கள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும்.
பரிணாம உலகின் அடிப்படையான "பரிணாம மரம்" குறித்த வென்டரின் கருத்துக்கள் டாகின்ஸ் உள்ளிட்ட அனைவரையும் திணறடித்திருக்க வேண்டும். அதனை டாகின்ஸ் வெளிப்படுத்தவும் செய்தார்.
டாகின்ஸ்: உயிரியல் மரம் என்பது கட்டுக்கதை/புனைவு என்ற வென்டரின் கருத்துக்கள் என்னை ஆச்சர்யமடைய செய்கின்றன. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏ குறியீடுகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆக, இவையெல்லாம் தொடர்புடையவை என்று தானே அர்த்தம்?
இதை அவர் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓரிரு நொடிகள் அமைதி. ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர்.
.
.
.
சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர்.
.
.
.
சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர்.
பின்னர், உரையாடலை நடத்திய ரோஜர் வேறு கேள்விக்கு செல்ல விஷயம் முடிவுக்கு வந்தது. டாகின்சின் பதில் குறித்து வென்டரை கருத்து கேட்டிருந்தால் விவாதம் இன்னும் படு சூடாக இருந்திருக்கும். வென்டர் தானாக முன்வந்தாவது கருத்து சொல்லியிருக்கலாம். எதற்கு இங்கே பிரச்சனை என்று சிரிப்போடு நிறுத்தி கொண்டார் போல...
டாகின்சின் இத்தகைய பதிலை "பெரிய பொய் (Whopper)" என்று வர்ணிக்கின்றது "பரிணாம செய்திகள் (Evolutionary News)" தளம்.
ஏனென்றால், சற்று முன் தான் வென்டர் தெளிவாக கூறினார், Mycoplasma பாக்டீரியாக்களின் மரபணு குறியீடுகள் வேறானவை என்று. இத்தனைக்கும், வென்டர் கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ஆய்வுக்கு பயன்படுத்தி வருவது இந்த பாக்டீரியாக்களை தான். ஆனால் டாகின்சோ வேறு மாதிரியாக சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை?
எது எப்படியென்றாலும், வென்டரின் கருத்துக்கள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் உண்மை.
உயிரின் தேடலைப்பற்றிய இந்த கலந்துரையாடலில் என்னை கவனிக்க வைத்த இரண்டு கருத்துக்கள்,
1. ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.
உயிரின் தேடலைப்பற்றிய இந்த கலந்துரையாடலில் என்னை கவனிக்க வைத்த இரண்டு கருத்துக்கள்,
1. ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.
2. உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயற்சிக்கலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.
அறிவுக்கு நல்ல தீனியாய் அமைந்த இந்த உரையாடலை காண விரும்புபவர்கள், விவாதத்தின் முதல் பகுதியை கீழே காணலாம் (வென்டர்-டாகின்ஸ் குறித்து நான் மேலே குறிப்பிட்டவை 8.48வது நிமிடத்திலிருந்து தொடங்குகின்றது).
மற்ற இரண்டு பகுதிகளை பார்க்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
References:
1. The Great Debate - What is life? (part 2 of 3). link
2. The Great Debate - What is life? (part 3 of 3). link
3. Venter vs. Dawkins on the Tree of Life -- and Another Dawkins Whopper. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
ReplyDeleteஅருமையான பதிவு. எப்படியும் யஃஜூஜ்,மஃஜூஜ் வருவதற்குள்
கண்டு பிடித்து விடுவார்கள். மேலே யாரோ இருந்து கொண்டுதான்
எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்று அம்புகள்/ஏவுகணைகள்
விட்டுப் பார்ப்பார்கள். அவைகளும் இரத்தம் தோய்த்துத் திருப்பி
அனுப்பப் படும். 'ஆஹா, முஸ்லிம்களின் இறைவனைக் கொன்று
விட்டோம்' என்று அல்ப புளகாங்கிதம் அடைவார்கள்.
ஒன்று விஞ்ஞானிகள் இஸ்லாத்தை நம்ப வேண்டும் அல்லது
முஸ்லிம்கள் விஞ்ஞானிகளாக வேண்டும். அப்போதுதான்
விஞ்ஞானம் சரியான திக்கில் செல்லும்.
// ஒன்று விஞ்ஞானிகள் இஸ்லாத்தை நம்ப வேண்டும் அல்லது
Deleteமுஸ்லிம்கள் விஞ்ஞானிகளாக வேண்டும். அப்போதுதான்
விஞ்ஞானம் சரியான திக்கில் செல்லும்.//
அரபு தமிழன்... அப்துல் கலாம் யாரு???? நீங்கள் கூரலாம் அவர் nuclear expert, அவருக்கு இந்த micro-biology பற்றி ஒன்றும் தெரியாது என்று.... அப்படி என்றால் நான் ஒன்று கேட்கிறேன்??? நிங்க யாரு????
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் அரபுத்தமிழன்,
ReplyDeleteஅதிரடியான கருத்துக்கள் உங்களுடையவை...விஞ்ஞாநிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இயல்புதான். ஆனால் இங்கு அடிப்படையே அல்லவா பிரச்சனையாக இருக்கின்றது...
தங்களது கருத்துக்களுக்கு நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
//ஒன்று விஞ்ஞானிகள் இஸ்லாத்தை நம்ப வேண்டும் அல்லது முஸ்லிம்கள் விஞ்ஞானிகளாக வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானம் சரியான திக்கில் செல்லும்//
ReplyDeleteஇதுதான் உண்மை. ஏனெனில் மெய்ஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம், புனித வேதமாகிய அல் குர்ஆனில் இருப்பதைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் புதிதாக? கண்டு பிடித்ததாக புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று ஆய்வு செய்வதை விட இப்படி ஆய்வு செய்து (திக்கித் தடுமாறி) பின் இஸ்லாத்தை ஏற்பதுதான் மேல். காரணம் அப்போதுதான் அவர்களின் இஸ்லாம் பற்றிய நம்பிக்கை மிகவும் வலுவானதாக அமையும்.
உயிரைப் பற்றிய சர்ச்சை நபியவர்கள் காலத்திலே கேட்கப் பட்டு அதற்கான தெளிவை இறைவன் வழங்கியும் விட்டான்.
”முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மி்டம் கேட்கின்றனர். “உயிர்“ என்பது எனது இறைவனின் கட்டளைப் படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப் பட்டுள்ளீர்கள். என்று கூறுவீராக.”(17-85)
என இறைவன் தீர்ப்பு வழங்கி விட்டான்.
எனவே இவ்விஞ்ஞானிகளுக்கு இருதியாக இதுதான் தீர்வாக அமையும்.
நன்றி
அன்ஸார்-தோஹா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.ஆஷிக் அஹ்மத்,
வென்டர் கருத்து அறிவியல்பூர்வமாக நெத்தியடி..!
டாகின்ஸ் 'கருத்து'... அடாடா...பரிதாபம் நிலை..!
//சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர்//---ஆனால்...அவர் டாக்கின்சை பார்த்த விதம்... "செத்த பாம்பை அடிப்பது வீரனுக்கு மட்டுமல்ல...விஞ்ஞானிக்கும் அழகல்லவே" ...ரகம்..!
செம சூடான பதிவு சகோ. மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteசகோ. ஆஷிக்! மற்றுமொரு சிறந்த பரிணாமம் பற்றிய பதிவை தந்திருக்கிறீர்கள். சிறந்த அறிவுஜீவிகள் கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை இன்னும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதுதான் வேதனை. இது போன்ற பதிவுகள் சிலரின் சிந்தனையையாவது மாற்றினால் சந்தோஷமே!
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDelete---------
”முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மி்டம் கேட்கின்றனர். “உயிர்“ என்பது எனது இறைவனின் கட்டளைப் படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப் பட்டுள்ளீர்கள். என்று கூறுவீராக.”(17-85)
---------
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.
தங்களது கருத்துக்களுக்கு நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
-----
சிறந்த அறிவுஜீவிகள் கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை இன்னும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதுதான் வேதனை.
------
யாரை சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை. அப்படியிருந்தால் அது வருந்தத்தக்க விஷயம் தான். பரிணாமம் உண்மை என்று டார்விநிஸ்ட்கள் மட்டுமே தீர்க்கமாக நம்புவார்கள். அப்படி நம்புவது அறிவியலுக்கு எதிரானதும் கூட. அறிவியலை பொறுத்தவரை கோட்பாடு அளவில் இருக்கும் ஒன்றை உண்மை என்று சொல்லுவது அபத்தம்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வரஹ்,
------
ஆனால்...அவர் டாக்கின்சை பார்த்த விதம்... "செத்த பாம்பை அடிப்பது வீரனுக்கு மட்டுமல்ல...விஞ்ஞானிக்கும் அழகல்லவே" ...ரகம்..!
------
ஹா ஹா ஹா...
நான் கீழே கொடுத்துள்ள லின்க்கில் சென்று படித்து பாருங்கள். அவர் ஏன் உயிரினங்கள் அனைத்திற்கும் மரபணு குறியிடுகள் ஒன்றானவை அல்ல என்று சொன்னாரென்று விளங்கும்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோதரர் ஆஷிக்., இறை அருளால் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வழக்கம்போல் பரிணாமம் குறித்த தெளிவான பதிவு. இணையத்தில் உலவி வெகு நாட்கள் ஆகிறது தங்களின் ஏனைய பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன்.இன்ஷா அல்லாஹ்...
அஸ் ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.
ReplyDeleteமிக மிக அருமையான பதிவு. எப்படி தேடி தேடி இத்தகைய தகவல்களை சேமிக்கிறீர்கள், பின்பு பதிவும் இடுகிறீர்கள் என்றுதான் புரியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.
வஸ்ஸலாம்.
//அருமையான பதிவு. எப்படியும் யஃஜூஜ்,மஃஜூஜ் வருவதற்குள்
ReplyDeleteகண்டு பிடித்து விடுவார்கள். மேலே யாரோ இருந்து கொண்டுதான்
எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்று அம்புகள்/ஏவுகணைகள்
விட்டுப் பார்ப்பார்கள். அவைகளும் இரத்தம் தோய்த்துத் திருப்பி
அனுப்பப் படும். 'ஆஹா, முஸ்லிம்களின் இறைவனைக் கொன்று
விட்டோம்' என்று அல்ப புளகாங்கிதம் அடைவார்கள்.//
பதிவை போலவே, சூடான சுவையான பதில், சகோ.அரபுத்தமிழன். :)
சகோதரர் குலாம்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் மீண்டும் பதிவுலகம் பக்கம் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். இறைவன் உங்களுடைய வேலை பளுவை இலேசாக்கி வைப்பானாக..ஆமீன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரி அன்னு,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
--------
எப்படி தேடி தேடி இத்தகைய தகவல்களை சேமிக்கிறீர்கள், பின்பு பதிவும் இடுகிறீர்கள் என்றுதான் புரியவில்லை
-----------
இதற்கு என்ன பதிலை சொல்வது எல்லாப் புகழும் இறைவனிற்கே என்பதை தவிர!!!!!!!!!!
தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர நீங்கள் அடுக்கி கொண்டே செல்லுங்கள்
ReplyDeleteஅவர்கள் தினறிகொண்டே இருக்கட்டும் .நல்ல பதிவு நண்பரே !!!
யா அல்லாஹ் இவர்ரூக்கு கல்வி அறிவை மென் மேலும் அதிகபடுட்டி தருவாயகே! ஆமின் ஆமின் யா ரப்பில் ஆலமின். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.
http://kovaivasi.blogspot.com/, sj2khans@gmail.com. my page and email id pls see my blogs
ReplyDeleteசகோதரர் ஜாபர் கான்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அல்ஹம்துலில்லாஹ். தங்களுடைய வலை தளத்தை பார்த்தேன். இஸ்லாமிற்காக குரல் கொடுக்க இத்தனை உள்ளங்களை நமக்கு தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாவதாக...ஆமீன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சரி அதனால் என்ன?....பரிணாமம் இல்லை என்றால் கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதாகிவிடுமா? அல்லது இதுதான் கடவுள் என்பதற்கு ஆதாரமாகிவிடுமா?
ReplyDeleteசகோதரர் அனானி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
-----
பரிணாமம் இல்லை என்றால் கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதாகிவிடுமா?
-----
ஆகாது....
------------
அல்லது இதுதான் கடவுள் என்பதற்கு ஆதாரமாகிவிடுமா?
-------------
ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.
அப்புறம், intelligent design என்று ஒரு கோட்பாடு உள்ளது..அது பற்றி கொஞ்சம் படிச்சு பாருங்களேன் ..உங்கள் கேள்விக்கு பதிலாய் அது அமையலாம்...
தங்கள் கருத்துக்கு நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத்
விளக்கமளித்த சகோதரர் ஆசிக்கிற்கு நன்றி intelligent design. பற்றிய தகவலை தமிழில் தர தங்களால் இயலுமா?
ReplyDeleteசகோதரர் அனானி,
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் அமைதி நிலவுவதாக...
இங்கே சென்று பாருங்கள் சகோதரர்..
Intelligent Design
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Assalamualeykum,
ReplyDeletedear brother Aashiq Ahamed,
I'm always learning something new in your blog !!!
Masha'allah your blog is really interesting, more and more !!!
Continue on this way... Insha'allah
Your sister,
M.Shameena
Dear Shameena,
ReplyDeleteWa alaikum salaam,
Thanks for ur comments....all praise due to Allah(swt)...
Infact I take inspiration from you too....masha allah...
your brother,
Aashiq Ahamed
மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்
ReplyDeleteIslam and Christianity amongst others do not have a space programme.....
ReplyDeleteLeave the science to the scientists, you keep on dreaming about moon splitting,jinns,montains stabilizing earth,sperm from ribs,magical men nailed to trees,prophets....
There is no bigger organisation of FAIL than the creationists!
Thank You,
Lord Voldemort.
Dear Voldemort,
ReplyDeleteAssalaamu Alaikum,
///Leave the science to the scientists///
to whom, the faith based ones???.....to the ones, who approach science according to their faith??? (these are not my words by the way, pls see my hawking article).
///you keep on dreaming about moon splitting,jinns,montains stabilizing earth,sperm from ribs,magical men nailed to trees,prophets....///
?????...thanks mate...
///There is no bigger organisation of FAIL than the creationists!///
it will be more appropriate to say "There is no bigger organisation of FAIL than the evolutionists!"
In Dawkins' words, venter says evolutionary tree is a 'fiction'...quite a interesting point indeed
thanks and regards,
Your brother,
Aashiq Ahamed A
Kill atheism using Islam and atheists themselves
Hi Aashiq,
ReplyDeleteCalling scientists 'faith based' is the joke of millenium.
You proved that creationists like you don't have any mere idea of what is known as science.
Ignorance is bliss. Enjoy!
\\"There is no bigger organisation of FAIL than the evolutionists!"\\
Yes. The reason is:
1. Evolution is thaught in science classes and not the mythology of adam & eve.
2. There is nothing called M.B.B.S without studying Evolution.
3. Even after 150 years Evolution keeps on validating
4. Modern Evolutionary Synthesis knoted particularly genetics, cytology, systematics, botany, morphology, ecology and paleontology.
5. Nothing in biology makes sense except in the light of evolution.
I think the above said reasons are well enough for a normal person like you.
I am ready to debat on this post with strict rules:
1. Stay till end. I don't want you to run away from answering the questions. (As you did in Quran Embryology)
2. The empirical evidence provided must be from authentic source.
3. I.D, Christian, Islam, Atheists article contents will not be accepted.
\\In Dawkins' words, venter says evolutionary tree is a 'fiction'...quite a interesting point indeed\\
This sentence is not a rocket science. I can manifest to you if you allow me.
BTW it is very easy to comprehend wrt your jinns,embryology,mountains and moon splitting stunts performed by your prophet.
\\Kill atheism using Islam and atheists themselves\\
I can feel your frustration. Next time pray to your sky daddy to stop Lord Voldemort from annoying you.
Thank You Science Deniers,
Lord Voldemort.