நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.
தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.
சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது.
"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.
முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி(??) அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று"
அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".
பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் சலபி(??) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.
தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,
1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)
2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)
தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?
3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)
4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)
5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)
6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)
இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
References:
1. Islamist campaign against Egypt shrines focus fears - Reuters, dated 6th April, 2011. link
2. Shrine - Wikipedia. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்!
ReplyDelete//என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.//
சரியாக சொன்னீர்கள். மக்களிடம் தீவிர பிரசாரத்தை கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு மக்களே இது போன்ற தர்ஹாக்களை அகற்றி விடுவார்கள். நம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்!
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
இன்ஷா அல்லாஹ். துவா செய்வோம். கூடிய விரைவில் அந்த சந்தோசமான நிகழ்வு நடக்க வேண்டும்.
தங்களுடைய கருத்துக்கு நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
ReplyDelete//இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...//--ஆமீன்.
இறைவா, அவ்வாறு முழு முஸ்லிம் சமுதாயமும் நேர்வழி பெற்றபின்னர் அவர்களே தாமாக முன்சென்று தர்கா எண்ணும் இஸ்லாமிற்கு எதிரான மக்களே இன்றி காலியாக கிடக்கும் அக்கட்டிடங்களை எல்லாம் இடித்து தரை மட்டமாக்க அருள்புரிவாயாக..!
இறைவா, அதை இப்போது வாழும் என் காலத்து சமுதாயம் கண்ணால் காணும் நற்பாக்கியத்தை எங்களுக்கு அருள்புரிவாயாக..!
இஸ்லாமிற்கு புறம்பான-தர்ஹா எனும் மூடநம்பிக்கைக்கு எதிரான-ஓரிறைவாதிகளின் இதுபோன்ற பிரச்சாரத்திற்கும் அனைத்து வித கள முயற்சிக்கும் முழுவெற்றி அளித்து, தர்ஹாவை இடிக்க சொல்கிறர்களுக்கும், நேர்வழிக்கு மாறியபின்னர் இடிப்பவர்களுக்கும் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் வழங்கி இவர்களை உன் நல்லாடியார்களில் பொருந்திக்கொள்வாயாக..!
தர்காக்கள் ஒழிவது சரி ! கூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா? கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா? சமதர்ம சமூகமாய் எகிப்து மாற வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக சிறுபான்மையினரின் நலனைப் பழிக்கேட்பது நியாயமில்லை
ReplyDeleteசகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
---
இறைவா, அவ்வாறு முழு முஸ்லிம் சமுதாயமும் நேர்வழி பெற்றபின்னர் அவர்களே தாமாக முன்சென்று தர்கா எண்ணும் இஸ்லாமிற்கு எதிரான மக்களே இன்றி காலியாக கிடக்கும் அக்கட்டிடங்களை எல்லாம் இடித்து தரை மட்டமாக்க அருள்புரிவாயாக..!
---
ஆமீன்.
---
இறைவா, அதை இப்போது வாழும் என் காலத்து சமுதாயம் கண்ணால் காணும் நற்பாக்கியத்தை எங்களுக்கு அருள்புரிவாயாக..!
---
ஆமீன்.
----
இஸ்லாமிற்கு புறம்பான-தர்ஹா எனும் மூடநம்பிக்கைக்கு எதிரான-ஓரிறைவாதிகளின் இதுபோன்ற பிரச்சாரத்திற்கும் அனைத்து வித கள முயற்சிக்கும் முழுவெற்றி அளித்து, தர்ஹாவை இடிக்க சொல்கிறர்களுக்கும், நேர்வழிக்கு மாறியபின்னர் இடிப்பவர்களுக்கும் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் வழங்கி இவர்களை உன் நல்லாடியார்களில் பொருந்திக்கொள்வாயாக..!
----
ஆமீன்.
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரர் இக்பால் செல்வன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
---
தர்காக்கள் ஒழிவது சரி
---
நன்றி.
---
கூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா?
---
நியாயமில்லை...பின்வருவது நான் முன்னர் எழுதியது.
//தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள். கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.//
இவை அல்லாமல், வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம் இல்லையென்றால் ஒன்றாகவே சாவோம் என்று கோஷமிட்டவர்கள் எகிப்து முஸ்லிம்கள். இந்த பதிவில் தர்காக்கள் குறித்து தானே பேசியிருக்கின்றோம். தேவாலயங்களை ஏன் உள்ளே கொண்டு வந்திருக்கின்றீர்கள் சகோதரர்?
---
கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா?
---
??????
---
அதற்காக சிறுபான்மையினரின் நலனைப் பழிக்கேட்பது நியாயமில்லை
---
நியாயமில்லை.
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்
ReplyDeleteஆமீன்
ஆமீன்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
"அசத்தியம் அழிந்தே தீரும்"
ReplyDeleteஎகிப்தில் ஏற்பட்டத்தை போல் இந்தியாவில் நடக்க இறைவன் அருள் புரிவாணாக.ஆமின்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரன் ஆஷிக்,
இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத தர்ஹாக்கள் ஒழிய / ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அவை மக்களின் மனமாற்றத்தில் நிகழ்ந்தால் அதிக சந்தோசமே. ஒருவேளை ஆட்சியாளர்களால் தர்ஹாக்கள் அகற்றப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.
அன்பின் இக்பால் செல்வன்,
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியங்களில் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வசிக்கும் நாடுகளில் ஏற்பட்ட / ஏற்பட்டுக் கொண்டிருக்கிற எந்தவொரு கிளர்ச்சிக்கும் / போராட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை அடித்து சொல்லி விடலாம். ஏனெனில் தற்போதைய புரட்சியினால் மலர்ந்த / மலரப் போகின்ற எந்தவொரு ஆட்சியும் இஸ்லாமிய சட்டதிட்டங்களை தமது புதிய அரசின் சட்ட திட்டங்களாக ஆக்கப் போவதுமில்லை. அங்கே தவறுகள் நடப்பின் அது தனிமனித அல்லது ஒரு குழுவின் தவறாகவே இருக்கும். இஸ்லாத்திற்கும் அதற்கும் கிஞ்சிற்றும் சம்பந்தமிருக்காது. நீங்கள் குறிப்பிட்டபடி தேவாலயத்தை தாக்கியிருந்தால் அது அநாகரிகமானது. இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் கிறித்தவ தேவாலயங்களை எப்படி பாதுகாத்தார்கள் என்பதை வரலாற்றினூடாக நாம் அறிந்து கொள்ளலாம்.
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
ReplyDeleteசுட்டியை சொடுக்கி இந்த விடியோவையும் காணுங்கள்.
===>நவீன ஷைத்தானின் உளறல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். தரீக்கா என்பது இதுதானா? <===
....
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
நம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை
ReplyDeleteசரியான ஒரு வாக்கு! இன்ஷா அல்லாஹ்!
சகோதரர் ஆகில் முசம்மில்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரர் யதார்த்தி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும். நினைவுபடுத்தியதற்கு நன்றி சகோதரர்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
நண்பர் இக்பால் செல்வன் அவர்களுக்கு
ReplyDelete//தர்காக்கள் ஒழிவது சரி !//
தர்ஹாக்களை ஒழிப்பதைக் க்கூட ஒரு குழுவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார் கவனிக்க
//கூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா?//
நியாயமே இல்லை இது முஹம்மது நபி ஸல் அவர்கள் காட்டி தந்த பதைக்கு எதிரானது அப்படி செய்பவர்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி மத துரோகிகள் பார்க்க ஹதீஸ்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ- அவனது உரிமைகயைப் பறித்தாலோ அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான் மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன் “(நூல்:அபூதாவூத்)
//கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா?//
குரானுக்கு எதிரானது அல்ல எதிரானதாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சி இருந்தால் அதற்கான சுதந்திரம் கிடைக்கும்
இஸ்லாமிய வரலாற்றில் இதனை பார்க்கலாம்
பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது
அதனை பார்க்க;
உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:
’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே! அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது.
// சமதர்ம சமூகமாய் எகிப்து மாற வேண்டும் என்பதே எனது ஆசை.//
உண்மையில் கஃலிபாக்கள் ஆட்சியில் எகிப்து அப்படித்தன் இருந்தது
எடுத்துக்காட்டாக திருச்சபை குறித்த வரலாற்றூசிரியரான ரெனேயுட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
”எகிப்தில் முதல்வர்கள், பிசப்புகள் மத குருக்கள் அகியோரின் பதவிகளும் அவர்களின் சட்டக் காப்புரிமைகளுக்கும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் நீதிபதிகள் பாதுகாப்புத் தந்திருந்தனர். படித்த கிருஸ்த்துவர்களுக்கு செயலர், மருத்துவர் ஆகிய பதவிகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இந்த ஆதாயமான பணி வாய்ப்புகள் மூலம் அவர்கள் தங்கள் செல்வ செழிப்பை வளமாக்கி கொண்டனர். மாநிலம் அல்லது நகரத்தை அதிகாரம் செய்யுமளவிற்கு இவர்களின் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தது”
(நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)
நடுநிலையாளர் என்று அறியப்படுகின்ற நீங்களே இப்படி இஸ்லாத்தை தவறாக விளக்கி வைத்திருப்பது வருத்தமாளிக்கிறது நண்பரே
சகோதரர் பராரி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
---
எகிப்தில் ஏற்பட்டத்தை போல் இந்தியாவில் நடக்க இறைவன் அருள் புரிவாணாக
---
ஆமீன். எகிப்தில் ஏற்பட்டது போன்று மக்கள் மனதில் தெளிவு பிறந்து இவை ஒழிக்கப்பட வேண்டும்...
தங்கள் கருத்துக்கு நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரர் ஷைக் தாவுத்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
---
இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத தர்ஹாக்கள் ஒழிய / ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
----
உண்மைதான்.
----
அவை மக்களின் மனமாற்றத்தில் நிகழ்ந்தால் அதிக சந்தோசமே. ஒருவேளை ஆட்சியாளர்களால் தர்ஹாக்கள் அகற்றப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.
----
இஸ்லாமிய அரசாங்கம் என்று ஒன்று உருவாகுமெனில், இந்த தர்காக்களை ஒழிப்பது அவர்களது தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அன்பு வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
---
நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
----
நன்றி. அல்ஹம்துலில்லாஹ்...
----
சுட்டியை சொடுக்கி இந்த விடியோவையும் காணுங்கள்.
===>நவீன ஷைத்தானின் உளறல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். தரீக்கா என்பது இதுதானா? <===
----
இன்ஷா அல்லாஹ் பார்க்கின்றேன்/படிக்கின்றேன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
as salamu alaykum wa rahmathullah brother aashiq,
ReplyDeletemasha allah, that's a good news. like you said, taking law in hands is not preferred, but if govt itself can remove those bid'ahs, alhamthulillah egypt will once again be in straight path. jazakallahu khayr for sharing the news. :)
சகோதரி ஆயிஷா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
---
நம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை
சரியான ஒரு வாக்கு! இன்ஷா அல்லாஹ்!
---
இன்ஷாஅல்லாஹ். அந்த சமயம் கூடிய விரைவில் வர வேண்டும் அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்..தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் ஹைதர் அலி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான விளக்கங்கள். அல்ஹம்துலில்லாஹ். உங்களுடைய இந்த பின்னூட்டம் பல தெளிவான விளக்கங்களை கொண்டுள்ளது.
இறைவன் உங்கள் கல்வி அறிவை விசாலமாக்க போதுமானவன்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரி அன்னு,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
ReplyDeleteநல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.
Assalamu Aleykum,
ReplyDeleteDear brother Aashiq Ahamed A,
Masha'allah ! What a nice post !!!
Jazakallah kheir for all your articles.
You always impress me, with your work !
May ALLAH(swt) reward you for your good deeds...Aamin...
Keep going in this way !
Yours,
M.Shameena
சகோதரர் அந்நியன் 2,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...
----
நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்.
-----
அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அந்த இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Dear Shameena,
ReplyDeleteWa alaikum salaam,
Thanks for your support and encouragement. May Allah(swt) bless you for the work you are doing for our ummah...aameen.
Take care,
Your brother,
Aashiq Ahamed
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஅன்பின் சகோதரரே! அருமையான பதிவு! ஜஸாகல்லாஹ் ஹைரன்! இணைவைப்பு எனும் கொடிய பாவத்திலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இதுபோன்ற பதிவுகள் மிக அவசியம்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
சகோதரர் Jafar Safamarva,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
-------
இணைவைப்பு எனும் கொடிய பாவத்திலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இதுபோன்ற பதிவுகள் மிக அவசியம்!
-------
தொடர்ந்து சத்திய மார்க்கத்தை சொல்லிக்கொண்டே இருப்போம். தர்காகளுக்கு முன்னர் இருந்த ஆதரவு இப்போது இல்லை. இருக்கும் மிச்ச சொச்ச பேரையும் தூய இஸ்லாத்தின்பால் கொண்டு வர தொடர்ந்து செயலாற்றுவோம்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அன்பு வாஞ்சூர் அப்பா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களுடைய சுட்டியை படித்தேன். சாட்டையடி பதிவு. புக்மார்க் செய்து விட்டேன்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமையான பகிர்வு சகோ.
//இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்//
சகோதரி ஆயிஷா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
எல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
என்னமோ பேசிகிறீங்கனு தெரியுது... ஆனா என்னனுதான் புரியல. வர்ர்ட்டா...
ReplyDelete