நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 1 of 2):
--------------
Please Note:
சீன பெயர்களின் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் தவறுகள் இருக்கலாம். சுட்டி காட்டப்படும்பட்சத்தில் தவறுகள் திருத்தப்படும்.
--------------
நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.
அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.
பல ஆவணங்களை முன்வைத்து தன்னுடைய வாதத்தை வைத்தார் அவர். ஆனால் அவருடைய கோட்பாடு மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் அவர் போன்ற துறைச்சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது.
ஷெங் ஹி என்ற சீன முஸ்லிம் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ இல்லையோ, அவர் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சீன முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை, ஆச்சர்யமூட்டுபவை. தங்களின் வசிப்பிடத்தால், அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு இருந்தாலும், கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக பல தடைகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்திருக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).
சீன முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையை, அவர்களின் தற்போதைய நிலையை ஆராய முற்படுவதே இந்த பதிவுகள். இன்ஷா அல்லாஹ்.
சீன இனங்கள்:
சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள்.
உய்குர் இன மக்கள் (வீகுர் எனவும் உச்சரிக்கப்படுகின்றது) அதிகமாக வாழும் பகுதி சின்ஜிஅங் உய்கூர் தன்னாட்சி பகுதி (Xinjiang Uyghur Autonomous Region) என்று அழைக்கப்படுகின்றது. அது போல, ஹுய் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி நின்க்சியா ஹுய் தன்னாட்சி பகுதி என்றழைக்கப்படுகின்றது (Ningxia Hui Autonomous region).
உய்குர் இன மக்கள்:
சீன முஸ்லிம்கள் குறித்து பேசும் போது பலரும் எதிர்ப்பார்க்கக்கூடிய முதல் தகவல் சின்ஜிஅங் பகுதி குறித்தே இருக்கும். இந்த பகுதி கடந்த சில வருடங்களாக ஊடங்களில் அதிகம் வலம் வருகின்றது. அங்கு நடக்கும் கலவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.
இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% - 7.5%-மாக இருக்கின்றது.
சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.
ஆம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய சின்ஜிஅங் பகுதி, சீனாவின் நிலப்பரப்பில் பதினாறு சதவிதத்தை கொண்டது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், பிரிவினைவாதிகளுக்கு இணங்கி இந்த பகுதிக்கு சீனா சுதந்திரத்தை வழங்கினால் தன் நிலப்பரப்பில் கணிசமான அளவை அது இழக்க வேண்டிவரும்.
இங்குள்ள உய்குர் இனத்தவரின் எண்ணிக்கை 45%. இந்த பகுதியில் உள்ள மற்ற முஸ்லிம் இனத்தவரையும் சேர்த்தால், சின்ஜிஅங் பகுதியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் முஸ்லிம்கள். மீதம் இருப்பவர்கள் ஹன் இன சீன மக்கள்.
தமிழ் பேசுவதால் நாம் தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போல, உய்குர் மொழி பேசுவதால் இவர்கள் உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை கையெழுத்து படிவமாக (Script) கொண்ட மொழியாகும்.
உய்குர் இனத்தவரை பொறுத்தவரை, இவர்கள் மதத்தால், கலாச்சாரத்தால், மொழியால் ஹன் இனத்தவரிடமிருந்து (இவர்கள் மாண்டரின் மொழி பேசுபவர்கள்) வேறுபட்டவர்கள். உய்குர் இனத்தவரின் முன்னோர்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்கள்.
எப்படி ரஷ்யாவிற்கு ஒரு செசன்யாவோ (பார்க்க <<செசன்யா - என்ன தான் பிரச்சனை?>>) அது போல தான் சீனாவிற்கு சின்ஜிஅங். எப்படி ரஷ்யாவால் செசன்யாவை விட்டு கொடுக்க முடியாதோ அது போல சீனாவினாலும் சின்ஜிஅங்கை விட்டு கொடுக்க முடியாது. எண்ணை, இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இந்த பகுதியில் மிகுந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.
1949-ஆம் ஆண்டுக்கு முன், சின்ஜிஅங்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவின் உதவிக்கொண்டு தங்களை குடியரசாக அறிவித்து கொண்டார்கள் உய்குர் இன மக்கள். அந்த குடியரசின் பெயர் கிழக்கு துர்கெஸ்தான் (East Turkestan). அந்த ஆண்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இந்த பகுதியை மீண்டும் பிடித்தது. இதனை தன்னாட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கிருந்த ஹன் இன மக்களின் எண்ணிக்கை ஆறு சதவிதம் மட்டுமே. உய்குர் இன மக்களோ 80-90% இருந்தனர். இன்றோ ஹன் இனத்தவர் 40% இருக்கின்றார்கள், உய்குர் இனத்தவரோ 45% இருக்கின்றார்கள்.
இது எப்படி சாத்தியம்?
இந்த பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை நீர்த்துப்போக செய்ய அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது சீன அரசு என்பது உய்குர் மக்களின் குற்றச்சாட்டாகும்.
ஆனால் சீன அரசு இதனை மறுக்கின்றது. இயற்கை வளங்கள் அதிகம் வாய்ந்த சின்ஜிஅங்கில், பொருளாதார நடவடிக்கைகள் பெருகும்போது, இயல்பாகவே, மற்ற இடங்களில் வசிக்கும் ஹன் இன சீன மக்கள் அந்த பகுதியை நோக்கி நகர்வது வாடிக்கையானது தான் என்பது சீன அரசின் வாதமாக இருக்கின்றது.
சீன அரசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும் அதே நேரத்தில், நாம் மற்றொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். உய்குர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி சின்ஜிஅங். இவர்கள் அறிந்ததெல்லாம் தங்களுடைய தாய்மொழியும், அரபியும் மட்டுமே. அப்படியிருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மாண்டரின் (சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி) மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
(இதுமட்டுமல்லாமல், 2002-ஆம் ஆண்டு, சின்ஜிஅங் பல்கலைகழகத்தில் உய்குர் மொழி பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்தது அரசு)
இதனால், இயல்பாகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் உய்குர் இன மக்கள். தங்களுடைய பொருளாதார வாய்ப்புகள் ஹன் இனத்தவருக்கு போகின்றன என்பது உய்குர் இனத்தவரின் நீண்ட கால ஆதங்கமாக இருக்கின்றது. சின்ஜிஅங் பகுதியை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாக புரியக்கூடிய விஷயம் இது.
பல ஆண்டுகளாக பனிப்போராக நீடித்து வந்த உய்குர்-ஹன் இனத்தவருக்குள்ளான பிரச்சனையின் வெளிப்பாடே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரமான இனக்கலவரங்கள் (July, 2009). இதில் சுமார் 156 பேர் இறந்தார்கள், 800-ருக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இந்த கலவரத்திற்கு பிரிவினைவாதிகளே காரணமென சீன அரசு குற்றஞ்சாட்டியது. சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1400 பேர் கைது செய்யப்பட, தங்களின் கணவர்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதாக கூறி பெண்கள் போராட்டங்களில் குதிக்க, பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
பிரிவினைவாதம் குறித்து பேசும்போது சில சுவாரசிய செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. சின்ஜிஅங்கில் சுதந்திர கோஷம் கேட்பதென்பது அறுபது ஆண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால், 2001-க்கு பிறகு இதில் முக்கிய திருப்புமுனையாக, இந்த பிரிவினைவாதத்தை பயங்கரவாதத்தோடு (அதிகளவில்) தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்தது சீன அரசு. தன்னுடைய சின்ஜிஅங் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தை காரணம் காட்டி உலகளவில் ஆதரவை தேட ஆரம்பித்தது சீனா.
ஆனால் சீனாவின் இத்தகைய அணுகுமுறையை கடுமையாக கண்டித்தன மனித உரிமை இயக்கங்கள். தீவிரவாதத்தின் மீதான நடவடிக்கை என்று கூறி உய்குர் இனத்தவர் மீதான தங்களது அடக்குமுறையை அதிகரிக்கப்பார்க்கின்றது சீன அரசு என அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை, உய்குர் இன மக்களின் மத நம்பிக்கைகள் மீதான சீன அரசின் அடக்குமுறை. வேலை நாட்களில் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு.
நிச்சயமாக சீன அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வினோதமானவை. ஏனென்றால், கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளது சீன அரசாங்கம் (இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் இவற்றை பார்ப்போம்). பலவிதத்திலும் முஸ்லிம்களுக்கு உதவியாக இருந்துள்ளது சீன அரசு. அப்படியிருந்தவர்கள் இன்று இப்படி செயல்பட என்ன காரணம்? மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.
தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், "தனி நாடு" கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை.
இப்போது இவர்களுக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், சீன அரசின் நடவடிக்கைகளால் தங்களின் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ என்பது தான்.
பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம்,
- உய்குர் மொழியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
- அதன் மூலமாக இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது,
- பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர் இனத்தவர் மீது நடத்தும் அடக்குமுறையை கைவிடுவது,
- மத நம்பிக்கைகள் மீதான தன்னுடைய அதிகாரத்தை கைவிடுவது,
- உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.
ஆக, இவை தான் சின்ஜிஅங் பிரச்சனையின் முக்கிய சாரம்சங்கள். அப்பகுதியில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவத்தின் மூலம் நிரந்தர அமைதி திரும்பலாம்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்:
உய்குர்களுக்கும், ஹன் இனத்தவருக்குமிடையே பல வேறுபாடுகள் என்றால், ஹுய் இனத்தவருக்கும் ஹன் இனத்தவருக்குமிடையே (பெரிய அளவில்) ஒரு வேறுபாடும் கிடையாது.
ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். இவர்களுக்குள்ளான (வெளிப்படையாக தெரியும்) வித்தியாசங்கள் என்றால், அது, ஹுய் இனத்தவர்,
என்பன போன்றவை தான்.
- பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள்,
- மதுவை விலக்குவார்கள்,
- பெண்கள் ஹிஜாப் அணிவார்கள்
என்பன போன்றவை தான்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.
யார் இந்த ஹுய் இனத்தவர்?
இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும். இது குறித்த தகவல்கள், மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த பொதுவான சில சுவாரசிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்...
இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும். இது குறித்த தகவல்கள், மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த பொதுவான சில சுவாரசிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்...
References:
1. Uyghur Muslim Ethnic Separatism in Xinjiang, china - Elizabeth Van Wie Davis, Asia-Paciifc Center for Security Studies, January, 2008. (Document available upon request)
2. China’s Xinjiang problem - The Hindu, Aug 12, 2008. link
3. Q+A - Who are the Uighurs and why did they riot? - Reuters, 7th July, 2009. link
4. Strangers in their own Land - By Ron Gluckman /Kashgar, Turpin, Urumchi and around Xinjiang, China. link
5. Who are the Uyghur? - Islamicity, 4th March 2011. link
6. 1421: The Year China Discovered America -gavinmenzies.net, link
7. 1421: The Year a Chinese Muslim Discovered America - Islamicity, link
8. The Silk Road - Ancient China for kids. link
9. Zheng He - Wikipedia. link
10. Gavin Menzies - Wikipedia. link
11. Islam in China: The Uyghur - Muslim Voices. link
12. Fresh protests erupt in China's Xinjiang region - Japan Today. 12th July 2009. link
13. China's Xinjiang Problem Has Nothing Much to Do With Islam - New York Times. November 30, 2001. link
14. Xinjiang Uyghur Autonomous Region - Wikipedia. link
15. Uighur - Asian History. link
16. Uyghur people - wikipedia. link
17. The Xinjiang Conflict: Uyghur Identity, Language, Policy, and Political Discourse - Arienne M. Dwyer, East West center. link
18. Uighur language - Encyclopedia Britannica. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Very lenghty but too informative.
ReplyDeleteI just knew there are Muslims in China, but not this detailed.
awaiting the next post, give some more time for the readers to read this post and understand
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரர் ஜமால்,
-----------
Very lenghty
--------------
ஆம் சகோதரர் உண்மைதான். இது மாதிரியான பதிவுகளை எழுதுவதற்கு நீண்ட தயக்கத்தை நான் காட்டுவதுண்டு. காரணம், பதிவின் நீளம் கருதி தான்.
மற்றொன்றும் காரணம்...நான் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே அதிக உழைப்பை எடுத்து கொண்டது செசன்யா பற்றிய பதிவும், இந்த பதிவும் தான். இவற்றிற்கு பல தகவல்களை நீங்கள் திரட்ட வேண்டும், படிக்க வேண்டும். அதிக நேரம் செலவாகும். பணிக்கு மத்தியில் சிறிது சிறிதாக எழுத வேண்டும். வரலாற்று தகவல் என்பதால் கூடுதல் கவனம் வேண்டும். போரடித்து விட கூடும்.
அல்ஹம்துலில்லாஹ்...இவற்றை ஓரளவு வெற்றிகரமாக கடந்து வந்திருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்
----------
give some more time for the readers to read this post and understand
-------------
நிச்சயமாக சகோதரர்...
தங்களின் வருக்கைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மிக அருமையான தகவலுக்கு நன்றி.அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்கள் நீண்ட நாள் வாசகன்.
சகோதரர் Mohamed Himas Nilar,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
----
மிக அருமையான தகவலுக்கு நன்றி.
----
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
வாழ்த்துக்கள் சலாம்.
ReplyDeleteமிக்க உதவிகரமாக இருந்தது. தெரியாத விஷயம்கள் இப்பொழுது தெரிந்துக்கொண்டேன் இன்ஷா அல்லாஹ்
முயற்சிக்கு பாராட்டுக்கள். எல்லாம் வல்ல இறைவனும் உதவி செய்வானாக
அன்புடன்
அசலம், பெஹ்ரேன்
சகோதரர் அசலம்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
-----
மிக்க உதவிகரமாக இருந்தது. தெரியாத விஷயம்கள் இப்பொழுது தெரிந்துக்கொண்டேன்
------
அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் படித்த இவை சரிதானா என்று ஆய்வு செய்யுங்கள். சரியாக இருக்கும்பட்சத்தில் அடுத்தவருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த இந்த செய்தி பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
முஸ்லீம்களால் பிற சிறுபான்மையினர் எப்படி நசுக்கப்படுகிறார்களோ, அதே வேலையை சீனா செய்கிறது. சரி தானா?
ReplyDeleteதங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஆஷிக் அஹ்மத்.
ReplyDeleteஅனைத்துமே எனக்கு புதிய தகவல்கள். பதிவிற்கான உங்களின் ஆழ்ந்த உழைப்பு தெரிகிறது. மிக்க நன்றி சகோ.
உங்களுக்கு மென்மேலும் கல்வி அறிவையையும், தேடலில் ஆர்வத்தினையும், பிறருக்கு சொல்வதில் புத்துணர்ச்சியையும், இதற்கான நன்மைகளையும் பலமடங்காக்கி தந்தருள இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு! இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். உழைப்பு கண்டிப்பாக இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.
இன சுத்திகரிப்பு திட்டமிட்டு கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படுகிறது. துர்க்கிஸ்தான் என்ற பெயர் ஸின்ஜியாங் என்று மாற்றப்பட்டது. நாட்டின் பெயரையே மாற்றுபவர்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளை அந்த மக்களுக்குத் தருகிறார்களோ?
சகோ.ஆஷிக் அஹ்மத்,
ReplyDeleteபதிவை மீண்டும் ஒருமுறை உணர்ந்து படித்தேன்..!
பொதுத்தேர்வில் பிட் அடித்தவன் முஸ்லிமாக இருந்து விட்டால்கூட,
"இவன் பின்லேடன் கூட்டாளியாக இருப்பானோ(?!)" என்று...
சந்தேகிக்கப்படும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ச்சூழலில்'
முஸ்லிம்கள் சிக்கித்தவிக்கும் இவ்வுலகில்....
//மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.//...ம்ம்ம்... இருக்கலாம்..!
அதேநேரம்,
//தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன.//
--இதற்கு...
//"தனி நாடு" கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை.//
--இது மட்டும்தான் காரணமா..?
அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா..?
//யார் இந்த ஹுய் இனத்தவர்?//
ReplyDelete//இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும்.//
சுபஹானல்லாஹ்..! அறிய ஆவலுடன்..
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) சகோ.!
ReplyDeleteசீன முஸ்லிம்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்துக் கொண்டேன். பதிவையும், reference பட்டியலையும் பார்க்கும் பொழுதே உங்களின் கடின உழைப்பு தெரிகிறது. தங்களின் உழைப்புக்கு அல்லாஹ் நற்கூலி தருவானாக! அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். அறியாத அருமையான் தகவல்கள் சகோ. தாங்கள், மு.ஆஷிக், மற்றும் ஹைதர் மூன்று பெரும் இறைவன் எங்களைப்போன்ற பார்வையாளர்களுக்கு வழங்கிய பொக்கிஷமாக நினைக்கிறன். வல்ல அல்லாஹ் தங்கள் மூவர் மீதும் குடும்பத்தின் மீதும் கிருபை செய்வானாக. ஆமீன்.
ReplyDeleteசகோதரர் அனானி,
ReplyDeleteஉங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
-----------
முஸ்லீம்களால் பிற சிறுபான்மையினர் எப்படி நசுக்கப்படுகிறார்களோ,
--------------
சகோதரர், அப்படி நடந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது.
நன்றி...
உங்கள் சகோதரர்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
------
அனைத்துமே எனக்கு புதிய தகவல்கள். பதிவிற்கான உங்களின் ஆழ்ந்த உழைப்பு தெரிகிறது.
-------
எல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும், துவாவிற்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சமீப காலமாக சீன அரசின் அடக்குமுறைகள் பற்றி செய்திகள் அரிதாகத் தென்படுகின்றன.
ReplyDeleteபத்து-பன்னிரெண்டு வருடங்களுக்குமுன், துபாயில் என் நண்பர் வீட்டில் ஒரு சீன முஸ்லிம் பெண் வாடகைக்கு இருந்தார். அதிகாரபூர்வ அரசாங்க ஆவணங்களில் அவருடைய முஸ்லிம் பெயரைப் பதியாமல், சீன மொழியிலான ஒரு பெயரையே பதிவு செய்யவேண்டுமென்பது அரசு ஆணையென்று கூறக் கேட்டிருக்கிறேன்.
சீனாவிலும் முஸ்லிம்கள் இருக்க்றார்கள் என்பதை யும், அவர்களின்மீது கம்யூனிஸ்ட் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் அறிந்தது அப்போதுதான்.
உங்களின் தொடர் மேலும் புதிய தகவல்கள் தருகின்றன.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநிறைய புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன் சகோ உய்குர் என்பது கொத்திர குலப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
உய்குர் என்பது அவர்கள் பேசுகின்ற மொழியின் பெயரேன்று இப்போது தான் தெரியும்
பகிர்வுக்கு நன்றி சகோ
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
----------
துர்க்கிஸ்தான் என்ற பெயர் ஸின்ஜியாங் என்று மாற்றப்பட்டது.
-------------
இந்த பகுதியை பழைய ஆவணங்கள் சீன துர்கிஸ்தான், கிழக்கு துர்கிஸ்தான் என்றும் குறிப்பிட்டிருக்கின்றன. இந்த பகுதிக்கு ஸின்ஜியாங் என்ற பெயர், சீனாவை கடைசியாக ஆண்ட Qing பரம்பரையின் போது வைக்கப்பட்டது. இதற்கு "புதிய நிலப்பகுதி" என்று அர்த்தம். தாங்கள் அந்த பகுதியை ஆக்கிரமித்ததால் அப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருக்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஸலாம் சகோ ஆஷிக்..
ReplyDeleteபுதிய தகவல்களுடன் வழக்கம் போல் சிறப்பானதொரு பதிவு...வாழ்த்துக்கள்...
சீன முஸ்லீம்கள் உலகின் பிறநாட்டு முஸ்லீம்களிடம் இருந்து தனித்து இருக்கிறார்கள்...இன்னும் சொல்லப்போனால் அங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்களா என்பதே பலருக்கும் தெரியாது..
அதற்கு தாங்கள் மேலே சொன்ன சில காரணங்கள் பொருந்தும்...
சீனாவில் இருந்து ஹஜ் செய்ய முஸ்லீம்கள் வருவதுமட்டுமே,சீன முஸ்லீம்களின் வெளியுலக தொடர்பாக இருக்கும் என நினைக்கிறேன்...
மற்றபடி,அவர்களுக்கும் இருக்கும்,பல இனம்,மற்றும் பிரச்சனை,ஆதி,இன்னும் பல புதிய தகவல்களை தங்களின் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்...
அடுத்த பதிவை எதிர்நோக்கி...
அன்புடன்
ரஜின்
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
---------
இது மட்டும்தான் காரணமா..?
-----------
தற்போதைய நிலையில், இந்த பகுதியின் வடக்கே உள்ள இடங்களில் தான் உய்குர்கள் அதிகம் இருக்கின்றனர். ஹன் இனத்தவரை அதிகப்படுத்தியதால் பிரிவினை கோரிக்கை அவ்வளவு சுலபத்தில் எடுபடாது. இனப்பிரச்சனையாக திருப்பப்படும்.
நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். //
ReplyDeleteஅதாவது அவர்கள் இனம் மங்கோலிய இனம்,மொழி மாண்டரின்.மதம் மட்டுமே மாறுகிறது அதனால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுவார்களா? மதத்தையும் இனத்தையும் போட்டு குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இங்கே நீங்கள் தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழர்கள் என்றாகி விடாது. அப்படிப் பார்த்தால் இங்கே வேலை செய்ய வரும் எல்லா மாநிலத்துக்காரனும் உங்களுடைய அளவுகோலின்படி தமிழர்களா? உங்களுடைய வேர்கள் தமிழ் வாழ்வியலில் இருந்தால் மட்டுமே தமிழர்கள். தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் தான் அவர்களின் வழிபாடு முறை மாறியதால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுமா? இன்றளவும் உருது மொழியை தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா?
சகோதரர் பாஸித்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் செந்திலான்,
ReplyDeleteஉங்கள் மீதும், உங்களின் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
-----------
மதத்தையும் இனத்தையும் போட்டு குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இங்கே நீங்கள் தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழர்கள் என்றாகி விடாது. அப்படிப் பார்த்தால் இங்கே வேலை செய்ய வரும் எல்லா மாநிலத்துக்காரனும் உங்களுடைய அளவுகோலின்படி தமிழர்களா? உங்களுடைய வேர்கள் தமிழ் வாழ்வியலில் இருந்தால் மட்டுமே தமிழர்கள். தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் தான் அவர்களின் வழிபாடு முறை மாறியதால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுமா?
--------------
அடுத்த பதிவு வரை பொறுத்திருக்கலாம். சரி, விடுங்கள். யார் சகோதரர் குழம்பி போய் இருக்கின்றார்கள்?
நடப்பில் என்ன இருக்கின்றதோ அதை தான் சகோதரர் சொல்லியிருக்கின்றேன்.
உங்களுடைய ஆதங்கம் சீன அரசை நோக்கி தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் மதத்தை வைத்து இவர்களை பிரிப்பது.
உங்கள் வாதப்படியே வருவோம். சில நூற்றண்டுகளுக்கு முன்பு அரேபியர் ஒருவர் தமிழ்நாட்டில் வந்து தங்கி விட்டார் என்று வைத்துகொள்வோம். அவர் இங்கிருந்த தமிழ் பெண்ணை மணந்து கொண்டார். அவர் இங்கேயே தங்கி விட்டதால், தமிழ் மக்களோடு இரண்டற கலந்து விட்டார்கள். இப்போது பல நூற்றண்டுகளுக்கு பிறகு அவர்களது சந்ததியுனரை என்னவென்று அழைப்பீர்கள்? அவர்கள் தமிழர்கள் இல்லையா? ஆம் என்றால் இந்த விசயம் சீன அரசாங்கத்திற்கு தெரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
மங்கோலிய இனம்??????????...ஹன் இனத்தவர் ஒருவர் முஸ்லிமாக மாறி விட்டால் அவரை என்னவென்று சீன அரசு அழைக்கும் தெரியுமா சகோதரர்?
ஹுய்-ஹன் விவகாரங்கள் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. பொறுத்திருங்கள் சகோதரர்.இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் தெளிவான ஆதாரங்களை வைக்கின்றேன் சகோதரர்.
தங்களின் வருகைக்கும் கருத்தும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் feroz,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
--------
சகோ. தாங்கள், மு.ஆஷிக், மற்றும் ஹைதர் மூன்று பெரும் இறைவன் எங்களைப்போன்ற பார்வையாளர்களுக்கு வழங்கிய பொக்கிஷமாக நினைக்கிறன்.
---------
நிறைய பேர் இருக்கின்றார்கள் சகோதரர். நாங்கள் அனைவரும் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் உதவுவானாக..ஆமீன்...
தங்களின் வருகைக்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரி ஹுசைனம்மா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
------
உங்களின் தொடர் மேலும் புதிய தகவல்கள் தருகின்றன.
-------
எல்லாப் புகழும் இறைவனிற்கே உரித்தாவதாக. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் ஹைதர் அலி,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
---------
நிறைய புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன்
----------
அல்ஹம்துலில்லாஹ்...தங்களுக்கு இவை உதவியாக இருந்தால், இங்கு சொல்லப்பட்டவை உண்மையாக இருந்தால் இதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் ரஜின்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
---------
இன்னும் சொல்லப்போனால் அங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்களா என்பதே பலருக்கும் தெரியாது..
----------
ஆம் சகோதரர். இது தான் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது. சுமார் பத்து கோடி முஸ்லிம்களை நாம் எப்படி தவறவிட்டோம். ஆச்சர்யம் தான். நான் பெரிதும் ஆச்சர்யப்பட்ட மற்றொரு விஷயம் திபெத்திய முஸ்லிம்கள். ஆம் திபெத்தில் முஸ்லிம்களா? நாமே கூட சமயங்களில் நம்ப மாட்டோம்.
சுப்ஹானல்லாஹ்...இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறி இப்படி மூலைமுடுக்கெல்லாம் பலதரப்பட்ட மக்களை கவர்ந்து தன்னுள் இழுத்திருப்பது சிலிர்க்க வைக்கின்றது.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
as Salamu alaykum brother Aashiq,
ReplyDeleteOnly today I got the chance to read this article. Masha Allah. Splendid work. Iam truly amazed at the length of pain you have took to summarize this topic. I think I should take more time to go through each link to absorb more. I have read about Chinese muslims. But never knew they had these many issues. If so, why no Islamic org / concern is supporting them? Are they afraid of political pressure? Seeing the population has gone low in a short span of time, would it be erased in a matter of decades? Subhanallah. We all keep ourselves busy with petty issues that we forget such wonderful branches of this Ummah. May Allah shoer His abundant blessings on them. And May Allah bless you with Magfirath and Jannath. Aameen.
Cant wait to read the next part :))
சகோதரி அன்னு,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
-------
If so, why no Islamic org / concern is supporting them? Are they afraid of political pressure?
-------
சீனாவை பொருத்தவரை அவர்களுடைய உள்விவகாரங்கள் வெளியே தெரிவது மிக அரிது. என்ன நடக்கிறதென்றே தெளிவாக தெரியாமல் யார் என்ன முடிவுக்கு வருவது???
அதுமட்டுமல்லாமல் இரண்டு இனத்தவருக்குள்ளான பிரச்சனை இது. இதற்கு மதசாயம் பூச முடியாது. சீனாவின் நோக்கம் சின்ஜியாங் தன்னை விட்டு போய்விட கூடாது என்பதுதான். அங்கு முஸ்லிம்கள் இல்லாமல் வேறு மதத்தவர் இருந்தாலும் தன்னுடைய நியாயமற்ற செயல்களை செய்திருக்கும் சீனா. ஆக, பிரிவினையை நசுக்கும் ஒரு செயலாகத்தான் இதனை அரசியல் வல்லுனர்கள் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு மதத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுவதில்லை.
இருந்தபோதிலும், உய்குர் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, உலகளவில், முஸ்லிம்கள் சீன அரசாங்கத்தை எதிர்த்து போராடித்தான் இருந்தனர்.
-------
ReplyDeleteSeeing the population has gone low in a short span of time, would it be erased in a matter of decades?
-------
இல்லை. சரியான புரிந்து கொள்ளப்படவில்லையோ என்று அஞ்சுகின்றேன். உலகின் மற்ற பகுதிகளை போலவே சீனாவிலும் இஸ்லாம் தொடர்ந்து வளர்ந்து தான் வருகின்றது. ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தியதால், அந்த பகுதியின் உய்குர் இன மக்களின் சதவீதம் குறைந்துள்ளதே ஒழிய, அவர்களின் மக்கள் தொகை குறையவில்லை. தொடர்ந்து உய்குர் இனத்தவரின் மக்கள் தொகை அதிகரித்து தான் வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமை சரிவர பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்து வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். முன்பை காட்டிலும் தற்போதெல்லாம் பள்ளிவாசல்களுக்கு அதிகளவில் முஸ்லிம்கள் வருகின்றனராம். இம்ம்
------
We all keep ourselves busy with petty issues that we forget such wonderful branches of this Ummah.
------
யாரும் யாரையும் மறந்துவிட போவதில்லை. இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்
------
May Allah shoer His abundant blessings on them.
------
ஆமீன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஆஷிக் அஹமத் ,உங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வின் உச்சத்தை காட்டி நிற்கிரது,இச்சமுதாய பரப்பில் உங்கள் விம்பம் பட்டு சமுதாயத்தேடல் அதிகரிக்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். உங்கள் இஸ்லாமிய சகோதரன் அம்ஜத் அஸ்ஹரி
ReplyDeleteசகோதரர் அம்ஜத்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
---
உங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வின் உச்சத்தை காட்டி நிற்கிரது
----
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்
தங்களின் வருகைக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி சகோதரர்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சும்மா நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் சொரிஞ்சு விட்டுகிட்டு இருக்காம, கொஞ்சம் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நேத்து ஆப்கானிஸ்தான்ல எட்டு வயசு சிறுவன் ஒருவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து நிறைவேத்தி இருக்காங்க சில பைத்தியக்கார பயங்கரவாதிகள். இதையெல்லாம் அவங்க இப்ப நீங்க பேசிக்கிட்டு இருக்கற மதத்தின் பெயரால் தான் பண்றாங்க. புள்ளகுட்டிங்கள படிக்க வையுங்க.
ReplyDeleteஇதுவரை தெரியாமல் இருந்த சீனவில் வாழும் இஸ்லாமிய சமுதாய சகோதரர்கலை பற்றி மிக துல்லியமாக தெழிவாக விவரித்து எழதிய கட்டுரை வாசித்து பிரமித்து போனேன் தாங்கலுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள் மேலும் மேலும் இது போன்ற கட்டுரை எழத எல்லாம் வல்ல இறைவன் இடம் துவ்வா செய்கிரேன் ஆமீன்.
ReplyDeleteதாங்கள் அன்புடன்
ஏ.கே.அலியார் பாஷா
Masha Allah your contribution about sharing of Islamic issues is always incomparable.
ReplyDeleteMasha Allah your contribution about sharing of Islamic issues is always incomparable.
ReplyDeleteபுதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன் என்பதைவிட முழுமையாகவே எமக்கு இந்த தகவல்கள் புதியவைததாம்.
ReplyDeleteதொடர்ந்து வாசிப்பதற்கு ஆவலாக இருக்கிறொம். நீங்கள் கூறுவதைப்போன்று //பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம், // அந்த விடயங்களை நிரந்தர அமைதிக்குப் பதிலாக ”சுதந்திர” கோஷம் எழும் வாய்ப்புள் இருக்கலாமே என்று அவர்களளுடைய பார்வையில் சீனர்கள் நினைக்கலாம் அல்லவா???
இந்த ஆக்கத்துக்காக நீங்கள் அதிகமாக உழைத்திருக்கிறீர்கள் ஜதாகுமுல்லாஹ் உங்களுடைய முயற்சிகளை அல்லாஹ் இழகுபடுத்தித்தரவேண்டும் என்ற பிரர்த்தனைகளுடன்.
@ கஹடோவிட,
Deleteசலாம்,
//அந்த விடயங்களை நிரந்தர அமைதிக்குப் பதிலாக ”சுதந்திர” கோஷம் எழும் வாய்ப்புள் இருக்கலாமே என்று அவர்களளுடைய பார்வையில் சீனர்கள் நினைக்கலாம் அல்லவா???//
தாங்கள் வஞ்சிக்கப்படுகின்றோம் என்ற உய்குர் மக்களின் எண்ணமே இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை நீடித்திருக்க செய்கின்றது. இப்பகுதிக்கு சுதந்திரம் கொடுக்க முடியாத நிலையில், இப்பகுதி மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதே ஒரு அரசின் செய்கையாக இருக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் சுதந்திர கோஷம் என்பது ஒருமித்த கருத்துடையது அல்ல, அப்படியான சூழலில் மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை சீன அரசாங்கம் பின்பற்றினால் பிரிவினையை எதிர்ப்போர், பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..