Pages

Monday, October 17, 2011

தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

---------------------
அறிவிப்பு:

தமிழ்மணத்தின் பெயரில் நடந்த குழப்பத்திற்கு தமிழ்மணம் வருத்தம் தெரிவித்துள்ளது.
---------------------


ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தமிழ்மணதிற்கெதிராக இன்று (தமிழ்மணத்தில் இணைந்துள்ள) முஸ்லிம் பதிவர்களின் பதிவுகள் தொடர்ந்து வெளிவரும், இன்ஷா அல்லாஹ். இதுவரை வெளிவந்துள்ள பதிவுகளின் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில், இந்த பதிவை படிக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த பதிவு உங்களை கொதிப்படைய செய்யலாம். பொறுப்பான சேவையில் இருக்க வேண்டிய திரட்டி, பொறுப்பற்ற முறையில் இஸ்லாமிய போதனையை கேலியும், அவமதிப்பும் செய்திருப்பது உங்களது உணர்ச்சிகளை தூண்டலாம். நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இறைவன் காட்டிய வழிப்படி பொறுமையை கடைப்பிடித்து அழகாக முறையில் நம் எதிர்ப்பை காட்டுவோம் என்பதுதான். இன்ஷா அல்லாஹ். 

முதலில் தமிழ்மணம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு அது குறித்து சொல்லிவிடுகின்றேன். தமிழ்மணம் என்பது பல்வேறு பதிவர்களின் ஆக்கங்களை சேகரித்து ஒரே இடத்தில் கொடுக்கும் தளமாகும் (திரட்டி). தமிழ்மணம் போல தமிழில் எண்ணற்ற திரட்டிகள் உண்டு.

சென்ற மாதம் தமிழ்மணத்துடனான ஒரு உரையாடலின் போது (அந்த உரையாடலை காண இங்கே சுட்டவும்) அவர்களை நோக்கி "உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று முகமன் கூறியதற்கு, தமிழ்மணம் அளித்த பதில் அதிர்ச்சி தந்தது. அது, 

"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. 

ஆனால், சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது. 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"

ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம். 

இரமணிதரனின் இந்த செயல், இஸ்லாமிய போதனையை கேலி செய்வதாகவும், கொச்சைபடுத்துவதாகும் இருந்ததால், இதுக் குறித்து விளக்கம் அளிக்குமாறு தனி மெயில் ஒன்றை தமிழ்மண நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அந்த மெயில் சென்றடைந்ததும் இரமணிதரன் அவர்களைத் தான். 

அந்த மெயிலிற்கு பதிலளித்த ரமணிதரன், தனி நபரின் கருத்தை தமிழ்மணத்தின் கருத்தாக கருதி தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்ப வேண்டுமா என்றும், எனினும் இதனை தமிழ்மணத்தின் மற்ற நிர்வாகிகளின் கவனத்திற்கு அனுப்புவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், அந்த கருத்தை நீங்கள் உங்களை கேலி செய்வதாக ஏன் நினைக்கின்றீர்கள் என்றும் கூறியிருந்தார் (பின்பு பதிவுத்தோஷம் என்று எதனை குறிப்பிடுகின்றார் என்று தெரியவில்லை). 

ரமணிதரன் அவர்களின் இந்த பொறுப்பற்ற பதில் முஸ்லிம்களை மேலும் கொதிப்படைய செய்தது. ஏனென்றால், அந்த தளத்தில் விவாதித்த ரமணிதரன், தமிழ்மணம் சார்பாகவே தான் கருத்து கூறுவதாக ஆரம்ப கமெண்ட்டுகளிலேயே (இரண்டாவது கமெண்ட்) தெரிவித்துவிட்டார். இதனை உறுதிப்படுத்திக் கொண்டு தான் தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பினோம். 


இருப்பினும் பொறுமைக் காத்து, தமிழ்மணம் சார்பாக தான் செயல்படுவதாக ரமணிதரன் கூறிய அந்த கமெண்ட்டை ஆதாரமாக அனுப்பி, மறுபடியும் விளக்கம் கேட்டோம். அதற்கு பதில் என்ற பெயரில் ரமணிதரன் கூறியிருந்தது மிகவும் துரதிஷ்டவசமானது.

என்ன தெரியுமா கூறினார்?? ஒரு கமெண்ட்டில் தானே தமிழ்மணம் சார்பாக என்றிருக்கின்றது, நீங்கள் குறிப்பிட்ட கமெண்ட்டில் அப்படி இல்லையே என்று.

என்ன அறியாமைக்கருத்து இது??? அப்படியென்றால் அந்த ஒரு கமெண்ட் மட்டுமே தமிழ்மணம் சார்பாக போடப்பட்டது, மற்ற அவருடைய கருத்தெல்லாம் இவருடைய தனிப்பட்ட கருத்தாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். 

இருப்பினும், தமிழ்மண நிர்வாகிகள் பதில் சொல்லுவார்கள் என்று பொறுமை காத்தோம். தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரும் வரை எங்களின் பதிவுகளில் தமிழ்மண வோட்டு பட்டையையும், தமிழ்மணத்தில் எங்கள் பதிவை சேர்ப்பதையும் நிறுத்திவைத்தோம். இதனாலேயே கடந்த இரு நாட்களில் பதிவிட்ட (இந்த விவகாரங்களை பற்றி தெரிந்த) முஸ்லிம் சகோதர சகோதரிகள், தமிழ்மணத்தில் தங்களுடைய பதிவுகளை சேர்க்கவில்லை, வோட்டு பட்டையையும் தூக்கிவிட்டார்கள். 

இதுநாள் வரை தமிழ்மண நிர்வாகிகளின் பதில் வரவில்லை. ஆகையால் இந்த விசயத்தை பொதுவில் வைக்கின்றோம். 

தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக முஸ்லிம்களிடம் தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை. 

நேரம் தாமதிக்காது தமிழ்மணம் இந்த விசயத்தில் செயல்படுவது சாலச்சிறந்தது. 

அந்த தளத்தில், அந்த தள உரிமையாளர்களுக்கும், அங்கே கமெண்ட் போட்டவர்களின் கருத்துக்கும் பதில் என்று பெயரில் சகோதரர் இரமணிதரன் கூறிய வார்த்தைகள் ஆபாசத்தின், அருவருப்பின், அநாகரிகத்தின் உச்சக்கட்டம். எங்களுடைய கடும் கண்டனத்தை இதற்கு தெரிவித்து கொள்கின்றோம்.ஒரு நிர்வாகி இப்படி செயல்படுவதை இதற்கு முன் பார்த்ததில்லை. இனி பார்க்ககூடாதென்றும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். பொதுவில் இப்படி பேசி எல்லார் மனங்களையும் உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்கு பகிரங்க மன்னிப்பை சகோதரர் ரமணிதரன் கேட்க வேண்டும். 

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்வார்கள் முஸ்லிம்கள் என்ற எண்ணத்தில் தமிழ்மண நிர்வாகம் இருக்குமானால், வெறும் வோட்டுபட்டையை நீக்குவதுடனும், தமிழ்மணத்தில் இருந்து விலகுவதுடனும் எங்களது நடவடிக்கைகள் முடிவடையாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு ஆதாரமாக வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பதிவர்கள், வாசகர்கள் இல்லையேல் திரட்டிகள் கிடையாது. இதனை படிக்கும் முஸ்லிம்கள் பொறுமைக்காத்து, இதுக் குறித்த உங்கள் கண்டனங்களை அழகான முறையில் தமிழ்மணத்திற்கு தெரியப்படுத்தவும் (admin@thamizmanam.com). மேலும் நீங்கள் அறிந்தவர்களுக்கும் இதனை அனுப்பி அவர்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்ய சொல்லவும்.

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 5:2

குறிப்பு: எங்களிடம் இருந்த, தமிழ்மணத்தில் இணைந்துள்ள முஸ்லிம் பதிவர்களின் மெயில் முகவரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்காதவர்கள், இதனை பார்த்த பிறகு, உங்கள் தளங்களிலும் கண்டனத்தை பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை இன்று வெளிவந்துள்ள முஸ்லிம்களின் ஏனைய கண்டன பதிவுகள் (இந்த பகுதி தொடர்ந்து update செய்யப்படும்):

1. சகோதரி அஸ்மா: http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
2. சகோதரர் குலாம்: http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
3. சகோதரர் Faaique: http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
5. சகோதரர் அப்துல் பாசித்: http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
6. சகோதரர் ஹைதர் அலி: http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
7. சகோதரி ஆமீனா: http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
8. சகோதரர் ஜமால்: http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
9. சகோதரர் ரஜின்: http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
10. சகோதரர் இளம் தூயவன்: http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
12. சகோதரர் கார்பன் கூட்டாளி: http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
13. சகோதரி ஜலீலா கமால்: http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
14. சகோதரர் சிநேகிதன் அக்பர்: http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
15. சகோதரர் ஹாஜா மைதீன்: http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
16. சகோதரர் HajasreeN: http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
17. சகோதரர் அரபுத்தமிழன்: http://ibnuzubairtamil.blogspot.com/2011/10/blog-post_17.html
18. சகோதரர் அப்துல் ஹகீம்: http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
19. சகோதரர் ஜெய்லானி: http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html
20. சகோதரர் காதர்: http://theepandham.blogspot.com/2011/10/blog-post_17.html
21. சகோதரர் ஸ்டார்ஜன்: http://ensaaral.blogspot.com/2011/10/blog-post_17.html
22. சகோதரர் ரஹீம் கஸாலி: http://ragariz.blogspot.com/2011/10/letter-to-thamizhmanam.html
23. சகோதரர் அப்துல் காதர்: http://mabdulkhader.blogspot.com/2011/10/blog-post.html
24. சகோதரர் ரியாஸ்: http://riyasdreams.blogspot.com/2011/10/blog-post_17.html
25. சகோதரர் சுவனப்பிரியன்: http://suvanappiriyan.blogspot.com/2011/10/blog-post_17.html
26. சகோதரி ஆயிஷா: http://puthiyavasantham.blogspot.com/2011/10/blog-post_18.html
27. சகோதரர் ஜியாவுதீன்: http://www.ziyau.in/2011/10/thamizmanam-my-condemnation.html
28. சகோதரி அன்னு: http://mydeartamilnadu.blogspot.com/2011/10/blog-post.html
29. சகோதரி பாத்திமா நிஹாஜா: http://fnihaza.blogspot.com/2011/10/blog-post_17.html
30. சகோதரி நாஸியா: http://biriyaani.blogspot.com/2011/10/blog-post.html


இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

52 comments:

  1. //சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்//

    அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ‘சாந்தி’ என்ற வார்த்தையைக்கூட பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பது, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் அவரது வக்கிரமான ஆழ்மனசு வெளிப்பட்டிருக்கிறது!! :-((

    இங்கே இஸ்லாம் மாத்திரமல்ல, பெண்ணினமும் சேர்த்தே இழிவு செய்யப்பட்டிருக்கிறது.

    தமிழ்மணத்தின் பாராமுகத்துக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஆஷிக்,

    "மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!"

    ///மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன செய்வார்கள் முஸ்லிம்கள் என்ற எண்ணத்தில் தமிழ்மண நிர்வாகம் இருக்குமானால், வெறும் வோட்டுபட்டையை நீக்குவதுடனும், தமிழ்மணத்தில் இருந்து விலகுவதுடனும் எங்களது நடவடிக்கைகள் முடிவடையாது என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.///

    'நச்'...!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹ். நம் தமிழகத்தில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு. அது ஒருவனின் பேச்சு அவன் யார் என்பதை காட்டி விடுகிறது. இந்த ராமனிதரன் என்ற நண்பர் தன் உள்ளத்தில் ஏற்கனவே இருந்த இருக்கும் மன வக்ரத்தை அவரை அறியாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். என்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஆஷிக்

    தெளிவான விளக்கங்கள். என்னோட கண்டனமும் உண்டு. தமிழ்மணம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  6. தமிழ்மணமே மன்னிப்புகேள்


    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

    ReplyDelete
  7. சகோதரர்கள் feroz, Starjan மற்றும் மாலிக்,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    உங்கள் கண்டங்களை தமிழ்மண மெயில் முகவரிக்கும் மறவாமல் அனுப்பிவிடுங்கள்...இன்ஷா அல்லாஹ்

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  8. Click the link below and read.

    DEAR MR. ASHIQ.

    NOT ONLY THE MUSLIM COMMUNITY BUT ALSO TAMIL BLOGGERS WERE INSULTED.


    1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

    18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


    .

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் வேதாளம்,

    ///
    வேதாளம் said...

    நமக்கு பல திரட்டிகள் உள்ளன.///

    இங்கே பிரச்சனை வேறு திரட்டி இல்லையா என்பது இல்லை சகோதரர். பதிவில் தரம் இருந்தால் எந்தவொரு திரட்டியும் இல்லாமல் நம் பதிவுகள் பலரையும் சென்றடையும். இன்ஷா அல்லாஹ்..

    இங்கே பிரச்சனை, நடந்த தவறி சுட்டிக்காட்டுவது, அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது. அவ்வளவே.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  10. தமிழ்மணத்திற்க்கு நாம் யாரென்று காட்டி விட்டோம்

    இதை தமிழ்மணம் நிச்சயமாக எதிர்பாத்திருக்காது

    ReplyDelete
  11. சரிதான்.....

    எனினும் முகமதியர்கள் அல்லாதவர்களும் அவர்களுக்கு எதிராகப் பதிந்திருக்கிரோம்...

    ReplyDelete
  12. லிஸ்ட் அப்டேட் பண்ணுங்க

    http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html

    ReplyDelete
  13. எதிர்ப்புகள் ஏன் என நியாயமான முறையில் சிந்தித்தால் அவை எரிமலையாகாமல் தவிர்க்கலாம். பார்ப்போம், இன்ஷா அல்லாஹ். நன்றி சகோ!

    தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    ReplyDelete
  14. நண்பர் ஆஷிக் :இங்கே பிரச்சனை வேறு திரட்டி இல்லையா என்பது இல்லை சகோதரர். பதிவில் தரம் இருந்தால் எந்தவொரு திரட்டியும் இல்லாமல் நம் பதிவுகள் பலரையும் சென்றடையும். இன்ஷா அல்லாஹ்..
    உண்மை. அமைதி - சாந்தி மனதில் அமைதி நிலவட்டும் என்று பெறியவர்கள் வாழ்த்துகின்றனர்.
    சிறிய விஷயத்தினை உணரமுடியாதவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது.
    கண்டனத்திற்குறிய செயல்.

    ReplyDelete
  15. இன்னும் நிறைய நீங்க அப்டேட் பண்ண வேண்டி உருக்கும் உங்க லிஸ்டை...

    ReplyDelete
  16. தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
    ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று

    ReplyDelete
  17. வணக்கம் சகோ இது என் முதல் வருகை

    தமிழ் பதிவர்களையும்,இஸ்லாமிய சகோதர சகோதரிகளையும் கொச்சைப்படுத்தும் தமிழ்மண நிர்வாகியின் ஈனமற்ற செயலுக்கு என் கடும் கண்டனங்கள்

    சகோ இன்று காலையிலே தமிழ்மண ஓட்டுப்பட்டையினை நீக்கி,மெயிலும் அனுப்பிவிட்டேன்

    நான் தமிழ்மணத்தில் இனி இணைய போவதும் இல்லை இணைக்கபோவதும் இல்லை..வேண்டாம் இந்த மானம் கெட்ட பொழப்பு..
    என் பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் இணைத்தால்தான் பலர் படிப்பாங்க என்றால் அப்படி ஒரு கேவலமான பொழப்பு எனக்கு வேண்டவே வேண்டாம்

    நிச்சயமான முடிவுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  18. muslimkaluku tani thirati vendum

    ReplyDelete
  19. தமிழ்மணமே மன்னிப்புக்கேள். தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

    M.Syed

    ReplyDelete
  20. இந்த சின்ன விஷயத்திற்காக குதிக்கும் நீங்கள் இங்கே வக்கிர புத்தியுடன் எழுதும் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    http://bibleunmaikal.blogspot.com/
    http://christianpaarvai.blogspot.com/

    ReplyDelete
  21. click the links and read

    19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

    20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!

    21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

    22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

    23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

    24.சீ தமிழ் மனமே ..

    25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?


    26.மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

    27.தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

    28.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்

    29.தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3

    30. தமிழ்மணம் பெயரில் மட்டும்

    31.தமிழ்மணத்தின் வக்கிர புத்தி

    32. தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...???

    33. தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்

    34. தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்.....

    35. தமிழ் இனி மணம் வீசுமா?

    ReplyDelete
  22. சகோதரர் ராபின்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். அடுத்தவரை அழைக்கும்போது அழகான உபதேசங்களை கொண்டு அழைக்குமாறு கூறுகின்றது. இதற்கு மாறாக அநாகரிகமான, வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தால் அது கடுமையான கண்டனத்திற்கு உரியது. இதில் மாற்று கருத்து இல்லை. அடுத்த மதத்து கடவுள்களை திட்ட வேண்டாமென்றும் கூறுகின்றது இஸ்லாம். ஆகையால் தாங்கள் கூறியது போல அந்த தளங்கள் செயல்பட்டால் அது கடுமையான கண்டனத்திற்குரியது.

    மேலும், தாங்கள் கொடுத்த முதல் லிங்க் முஸ்லிம்களுடையதாக தெரியவில்லை. இரண்டாவது லிங்க் ஒரு முஸ்லிம் சகோதரர் எழுதுவதாக தெரிகின்றது. இன்ஷா அல்லாஹ் அந்த பதிவுகளை படித்து பார்க்கின்றேன். அவைகளில் தாங்கள் சொல்லியப்படி இருந்தால் என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

    இதனை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  23. உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

    சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

    ஜெய் மாகாளி!

    ReplyDelete
  24. தமிழ்மணமே மன்னிப்புக்கேள்.

    ReplyDelete
  25. தமிழ்மண நிர்வாகி நடந்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதே சரி என்று படுகிறது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் மற்ற நிர்வாகிகளும் கண்காணிக்க வேண்டும்.

    ReplyDelete
  26. ///"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"
    இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. ///
    இந்து கடவுளுக்கு படைத்த உணவுகளை கிருத்தவர்கள் சாப்பிட மறுப்பார்கள் அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அது எப்படி நீ மறுக்கலாம் மன்னிப்பு கேள் என்று வாதடமுடியுமா?

    ReplyDelete
  27. http://www.ziyau.in/2011/10/thamizmanam-my-condemnation.html

    தமிழ்மணத்திற்கு எனது கண்டனம் ஜியா....

    ReplyDelete
  28. ஆஷிக்,
    உங்கள் பதிலுக்கு நன்றி!
    //தாங்கள் கொடுத்த முதல் லிங்க் முஸ்லிம்களுடையதாக தெரியவில்லை.// இதுவும் இஸ்லாமியர் நடத்துவதுதான். நாத்திகப் போர்வையில் எழுதுகிறார். அந்த பிளாக்கின் பாக்கவாட்டில் எழுதியிருக்கும் வாசகங்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். கிறிஸ்தவ மதத்தையோ பைபிளையோ விமர்சிக்கக் கூடாது என்று சொல்லமாட்டேன். எல்லா மதங்களும் விமரசனத்திற்குட்பட்டவைதான்.ஆனால் அதில் நேர்மை இருக்கவேண்டும்.

    ReplyDelete
  29. //உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

    சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

    ஜெய் மாகாளி!//

    இதை ஒரு இந்து நண்பர் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  30. இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். அடுத்தவரை அழைக்கும்போது அழகான உபதேசங்களை கொண்டு அழைக்குமாறு கூறுகின்றது//

    இங்குதான் பிரச்சினையே இருக்கிறது. பிறருக்கு உபதேசம் செய்ய நீங்கள் யார் ? அவர்கள் உங்களிடம் வந்து கேட்டார்களா ? அழையாத விருந்தாளியாக எந்த வீட்டிலாவது யாராவது நுழைவார்களா ?

    சாந்தியும் சமாதானமாமும் உண்டாவதாக‌ என்பது ஒரு பிரேயர். மற்றவர்களுக்காக நீங்கள் பிரேயர் பண்ணவிரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே அல்லது தர்காவிலேயே பண்ணிக்கொள்வதுதான் சரி. அடுத்தவர்கள் வீட்டுக்குள் சென்று உங்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்பது ஏன் ? இதைத்தானே மிசுனோரிகள் செய்கிறார்கள் ?

    எல்லா முசுலீம் பதிவர்களும் மற்றவர்களைவிட தாங்கள் நல்லவர்கள் என்று பந்தா காட்டுவதேன் ? மற்றவர்களேல்லாம் அயோக்கியர்கள் நீங்கள் மட்டும் யோக்கியர்களா? அப்படியா ? உங்கள் வாழ்க்கையில் நுழைந்துபார்த்தால் தெரியுமே எவனவர் எப்படியென்று?

    இங்கே ஒரு அனானி எழுதியதைப் பார்த்தீர்களா ? மாரியாத்தாளின் அருள் உங்களுக்குக் கிடைப்பதாக ? ஏற்றுக்கொள்கிறீர்களா ? ஏற்றுக்கொண்டேன் என்றால் மாரியாத்தாளுக்கு உங்களை வர்சிக்கச் சக்தியுண்டு என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் இந்து! மறுக்க முடியாது. வசமாக மாட்டுவீர்கள்.

    ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.

    முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  31. Mr Robin,
    I just checked http://christianpaarvai.blogspot.com/ and I dont find anything offensive against christianity. This brother is trying to answer the allegations posted by christians. Can you kindly point out where it is offensive?

    A muslim

    ReplyDelete
  32. Dear Anony,
    When a muslim greets, he says "Iraivanin".. it means God.. he doesn't even mention "Allah". People whoever agrees, there is a GOD, it doesnt create any discomfort.. when you say "Kaali", it becomes uncomfortable..
    We don't preach Islam to everybody. We share in our blog about islam.. Its upto you to read or ignore.. Every muslim is a human being too.. no objection :)

    ReplyDelete
  33. Hi Robin,

    http://bibleunmaikal.blogspot.com/

    I dont think its run by muslim.. It doesnt look like this site endorses religious conversion whereas muslims are fine with the same..

    A logical conclusions.. Do you want to refute?

    ReplyDelete
  34. //We don't preach Islam to everybody. We share in our blog about islam.. Its upto you to read or ignore.. Every muslim is a human being too.. no objection :)

    //

    A religion has peripherals and the core. Ur core teachings may b anything; but ur peripherals r ur customs and practices, like ur food habits, ur mode of dressing (burqa and lungi for Tamil Muslims), ur marriage habits etc. Ur salutation is distinctly urs.

    நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். s a payer, not a mere blessing or salutation or address. An Islamic prayer. Same prayer s said differently in different religions. There r different kinds of common prayers addressed to all, even in Hindu religion, which does not mention any name of God. Many such Vedic prayers exit. All r distinctly oriented to that religion only. U can’t argue that merely because ur prayer doesn’t mention any particular God, u can call it a common prayer and dine into the ears of one and alll. No one has come to ask or borrow your style. Each religion has its style. As Islam says, urs religion is urs, mine s mine! U ought to follow the sacred principle even in addressing ppl!

    Now, கர்த்தரின் ஆசிர்வாதம் உம்மேல் வருவதாக என்று கிருத்துவ பாதிரி சொன்னால், அதை கிருத்துவ மதமில்லா பிரேயர் என்று எவரேனும் சொல்வரா? மாட்டார். ஆனால், நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். என்பதற்கும் இசுலாமியத்திற்கும் சம்பந்தமே இல்லை என வாதாடுவது எங்ஙனம்?

    Muslims r human beings. No doubt. But somehow or other, like the evangelists, they assume brazenly that, by virtue of being Muslims (mostly by birth ) they become extra ordinarily lucky and blessed. Feel so freely, none has any quarrel with such smuggness; yet, it may be accepted by you that others too have their religion and they think they, too, r lucky and blessed in their religion; and they don’t come to u to receive ur prayer. Prayer should not be openly forced on others. U may use ur salutation among Muslims, not with others when u begin to address.
    If u do, u will have to accept Kali's blessings said by the mischievous fellow here.

    ReplyDelete
  35. We are not into the discussion about core and peripherals..
    Again when you say "Jesus" I can visualize a person hanging on the cross ( I don't mean to offend here. Sorry if you feel so)
    When you say "kaali" I can still visualize a goddess.. If you are not convinced let us leave it here..
    If you are not comfortable , better we dont say salam to non-muslims. But remember, few months back people were complaining that muslims dont say salams to a non-muslim (refer GOVI Kannan)..

    ReplyDelete
  36. \\அது பதிவுத் தோஷம் அல்ல, பழக்க தோஷம்!! ‘அமைதி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் ‘சாந்தி’ என்ற வார்த்தையைக்கூட பெண்ணாக உருவகப்படுத்தியிருப்பது, பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் அவரது வக்கிரமான ஆழ்மனசு வெளிப்பட்டிருக்கிறது!! :-((\\

    சத்தியமான உண்மை ஹூசைனம்மா.

    என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  37. தமிழ் பதிவுலகில் சில அறிவுக்கெட்ட ஜென்மங்கள் உண்மை எது என்பதை விளங்காமலேயே இந்த அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களை கடுமையாக கண்டிப்பதுடன் இவர்களின் தளங்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.உள்ளங்களில் சீழ்களை வைத்து அலையும் இந்த அயோக்கியர்களை தமிழ் பதிவர் உலகம் முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.

    ReplyDelete
  38. ஆஷிக்கின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  39. சாந்தியும் சமாதானமாமும் உண்டாவதாக‌ என்பது ஒரு பிரேயர். மற்றவர்களுக்காக நீங்கள் பிரேயர் பண்ணவிரும்பினால் அதை உங்கள் வீட்டிலேயே அல்லது தர்காவிலேயே பண்ணிக்கொள்வதுதான் சரி. அடுத்தவர்கள் வீட்டுக்குள் சென்று உங்களுக்காக பிரேயர் பண்ணுகிறேன் ஏனென்றால் நாங்கள் நல்லவர்கள் என்பது ஏன் ? இதைத்தானே மிசுனோரிகள் செய்கிறார்கள் ?

    எல்லா முசுலீம் பதிவர்களும் மற்றவர்களைவிட தாங்கள் நல்லவர்கள் என்று பந்தா காட்டுவதேன் ? மற்றவர்களேல்லாம் அயோக்கியர்கள் நீங்கள் மட்டும் யோக்கியர்களா? அப்படியா ? உங்கள் வாழ்க்கையில் நுழைந்துபார்த்தால் தெரியுமே எவனவர் எப்படியென்று?

    இங்கே ஒரு அனானி எழுதியதைப் பார்த்தீர்களா ? மாரியாத்தாளின் அருள் உங்களுக்குக் கிடைப்பதாக ? ஏற்றுக்கொள்கிறீர்களா ? ஏற்றுக்கொண்டேன் என்றால் மாரியாத்தாளுக்கு உங்களை வர்சிக்கச் சக்தியுண்டு என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் இந்து! மறுக்க முடியாது. வசமாக மாட்டுவீர்கள்.

    ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.

    முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே////

    தமிழ் பதிவுலகில் சில அறிவுக்கெட்ட ஜென்மங்கள் உண்மை எது என்பதை விளங்காமலேயே இந்த அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களை கடுமையாக கண்டிப்பதுடன் இவர்களின் தளங்களை முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.உள்ளங்களில் சீழ்களை வைத்து அலையும் இந்த அயோக்கியர்களை தமிழ் பதிவர் உலகம் முற்றிலும் புறக்கணிக்கவேண்டும்.

    ReplyDelete
  40. Haneef has left a new comment on your post "தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வ...":

    ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.

    முசுலீமும் மனுசந்தான். ஏதோ ஆகாயத்திலிருந்து பொத்தென பூமியில் குதிக்கவில்லை. தரையில் கால் வைத்து நடங்கள் நண்பர்களே.

    Hello,
    Who let you to update such articles and comments in this site. Do you have anything in your brain or head. do you know about The true islam and other religions.
    Never you knew about Islam the one true and strong religion in this universe. You should read the Holy Quran and other books related with other religion then you will come to know each and everything.
    If you read properly the Holy Quran with open heart and mind i challenge you that you must accept the True religion Islam.
    Then, you can come to argue with anything which is right and wrong.
    The God may bless you to be in proper way.
    Haneef

    Publish
    Delete
    Mark as spam

    ReplyDelete
  41. தமிழ்மணமே மன்னிப்புக்கேள்.

    ReplyDelete
  42. உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

    சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

    ஜெய் மாகாளி!

    GOVI Kannan

    ReplyDelete
  43. முந்தயது
    "தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

    இரண்டாவதாக
    "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
    இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.


    பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை
    பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்

    ReplyDelete
  44. FYI, In Saudi Tamilmanam is blocked

    ReplyDelete
  45. இந்த பிரச்னைல குளிர் காஞ்சி நல்லா கல்லா கட்டிட்டீங்க போலிருக்கு. நடக்கட்டும். :)

    ReplyDelete
  46. அஸ்ஸலாமு அழைக்கும்!
    சகோ. ஆசிக் அவர்களுக்கு, இது எனது முதல் வருகைபதிவு, உங்களின் இந்த பதிவை படித்தபிறகு இப்படியொரு விஷயம் வலைபதிவர்களின் மத்தியில் கண்டனமாக உறவாகி இருப்பதை தெரிந்துக்கொண்டேன்.

    முதலில் நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காபிர்களுக்கு முகமன் சொல்வதாகட்டும், அதற்கு அவர்கள் பதில் மொழிவதாகட்டும், இந்த முறையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு எப்படி காட்டிதந்தார்கள்? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக எனக்கு விளக்கமளிக்கவும். (இந்த கேள்வியை நீங்கள் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.)

    //ஒவ்வொரு மதத்துக்காரரும் இன்னொருவனிடம் என் கடவுளின் ஆசிர்வாதம் உன்மேல் உண்டாவதா என்று சொல்ல ஆரம்பித்தால்? மதக்கலவரங்கள் உண்டாகும். தயவு செய்து பிடிக்காதவரிடம் சென்று மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள்.// ஒரு பெயர் கூற விரும்பாத இந்த மாற்றுமத நண்பர் தேறுவித்த கருத்துக்கு, இதன் மூலம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன். (நீங்கள் தந்த ஈமெயில் முகவரிக்கு கண்டனம் தெரிவித்துவிட்டேன். ஏன் நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்)

    ReplyDelete
  47. //நீங்கள் தந்த ஈமெயில் முகவரிக்கு கண்டனம் தெரிவித்துவிட்டேன். ஏன் நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்//

    சொந்தமா யோசிக்காதீங்க. வாசிக்காதீங்க. நடந்தது என்னான்னு கேட்காதீங்க. தீர விசாரிக்காதீங்க. கண்டனம் மட்டும் பண்ணிடுங்க. ஒங்க மூளைய ஆசிக்கிட்டே அடமானம் வெச்சிருக்கீங்களா? நல்ல மந்தை ஆடுங்களையா நீங்க அல்லாரும்.

    ReplyDelete
  48. //சொந்தமா யோசிக்காதீங்க. வாசிக்காதீங்க. நடந்தது என்னான்னு கேட்காதீங்க. தீர விசாரிக்காதீங்க. கண்டனம் மட்டும் பண்ணிடுங்க. ஒங்க மூளைய ஆசிக்கிட்டே அடமானம் வெச்சிருக்கீங்களா? நல்ல மந்தை ஆடுங்களையா நீங்க அல்லாரும்// Mr. Anonymous! இங்கு பின்னூட்டம் இடும் நானும் சரி, மற்ற சகோதரர்களும் சரி யாரும் யாருக்காகவும் தமது மூளையை அடமானம் வைக்க அவசியமில்லை. அப்படி பார்த்தால் அன்னா ஹசாரே தொடுத்த போராட்ட அழைப்பைக்கேட்டு வந்தவர்கள் எல்லாம் நீங்கள் சொல்வதுபோல் சொந்தமாக யோசிக்காத, வாசிக்காத மக்களா எல்லோரும்? உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை தூக்கி எறிந்துவிட்டு கொஞ்சம் நடுநிலையாக சிந்திக்க முயலுங்கள்.
    இன்னமும் எங்களுக்குள் சொந்த பந்தங்களாக பழகும் மாற்றுமத சகோதரர்களும் இருக்கிறார்கள், அதனை கருத்தில் கொண்டுதான் நாங்களும் நாகரிகமான முறையில் பதில் அளித்துக்கொண்டிறிக்கிறோம்.
    (முதலில் உங்கள் உண்மையான பெயரிலே விமர்சிக்கப்பாருங்கள்)

    ReplyDelete
  49. சகோதரர் தமீம் அன்சாரி,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    சகோதரர் அனானி போன்றவர்களின் அறியாமைக் கேள்விகளுக்கு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். இன்ஷா அல்லாஹ் அவர்களை என்னிடத்தில் விட்டுவிடுங்கள்.

    நான் தற்போது அலுவலகப்பணி மற்றும் சஹிஹ் முஸ்லிம் ஹதீஸ்களின் மின்னூல் மாதிரிகளை சரிப்பார்க்கும் பணியில் இருப்பதால் உங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. தங்களால் முடிந்தால் இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் (aashiq.ahamed.14@gmail.com).

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  50. //உங்களின் சொந்த விருப்பு வெறுப்பை தூக்கி எறிந்துவிட்டு கொஞ்சம் நடுநிலையாக சிந்திக்க முயலுங்கள்.//

    இத நீங்ககூட பண்ணிருக்கலாமே!

    ReplyDelete
  51. சகோதரர் தமிம் அன்சாரி,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///முதலில் நமது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காபிர்களுக்கு முகமன் சொல்வதாகட்டும், அதற்கு அவர்கள் பதில் மொழிவதாகட்டும், இந்த முறையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு எப்படி காட்டிதந்தார்கள்? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக எனக்கு விளக்கமளிக்கவும். (இந்த கேள்வியை நீங்கள் குதர்க்கமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.) ///

    சகோதரர் இதற்கு பதில் குர்ஆனில் இருந்தே கூறலாம். இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் முஸ்லிமல்லாத தந்தைக்கு ஸலாம் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஜாகிர் நாயக் அவர்களின் இது குறித்த கருத்தும், சகோதரர் பி.ஜே அவர்களின் இது குறித்த கருத்தும் youtube-பிள் கிடைக்கின்றன. இன்ஷா அல்லாஹ் பாருங்கள்.

    சகோதரர், நான் ஸலாம் கூறுவதை ஒரு தாவாஹ்வாகவே நினைத்து செய்கின்றேன். இது நல்ல பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. முஸ்லிமல்லாதவர்கள் மகிழ்ச்சியோடு இதனை ஏற்றுக்கொள்கின்றனர், மிகச்சில குதர்க்கவாதிகளை தவிர.

    ///ஒரு பெயர் கூற விரும்பாத இந்த மாற்றுமத நண்பர் தேறுவித்த கருத்துக்கு, இதன் மூலம் உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.///

    சகோதரர், இங்கு யாரும் எதனையும் திணிக்கவில்லை. இதுவரை நான் ஸலாம் கூறி அதனை ஆட்சேபித்த (ஒருவரை தவிர) யாரையும் நான் பார்த்ததில்லை. ஒருவேளை தன்னிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினால் அடுத்த முறை கூற மாட்டேன். இதனை முன்பு ஒரு பதிவில் கூட தெளிவுபடுத்தி இருக்கின்றேன்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  52. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம். இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்காக முஸ்லிம்களிடம் தமிழ்மணம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை அந்த தளத்திலேயே இரமணிதரன் கேட்டாலும் பரவாயில்லை.

    ReplyDelete