நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவு சரியான முறையில் கையாளப்பட்டிருந்தால் இதில் உள்ள சில தகவல்கள் உங்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டுச்செல்லலாம் (இன்ஷா அல்லாஹ்). தயாராகிக்கொள்ளுங்கள்.
Hoatzin (வாட்சின் என்று உச்சரிக்க வேண்டும்) - பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை.
கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத்தன்மைகளை தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும் இல்லாத தனித்துவங்கள் இவற்றிற்கு உண்டு.
படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக் கேட்டாலே சில பரிணாமவியலாளர்களுக்கு அலர்ஜி தான். ஆம், பரிணாமவியலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துக்கொண்டிருக்கின்றது இந்த உயிரினம்.
ஏன் இவை பரிணாமவியலாளர்களுக்கு கடுமையான சவாலாக விளங்கிக்கொண்டிருக்கின்றன? அப்படி என்ன ஆச்சர்யத்தன்மைகளை, தனித்துவங்களை இவை கொண்டிருக்கின்றன?
அறிந்துக்கொள்ள தொடருங்கள்...
ஆச்சர்யங்கள் மற்றும் தனித்துவங்கள்:
பல்வேறு நிறங்களை தன் உடலில் கொண்டுள்ள வாட்சின், ஒரு சரிவர பறக்கத்தெரியாத பறவை. இறக்கைகளை படபடவென்று அடித்துக்கொண்டு மரம் விட்டு மரம் பாயியுமே தவிர, நீண்ட தூரத்திற்கு அதனால் பறக்க இயலாது.
தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வசிக்கும் வாட்சின், ஆற்று நீருக்கு மேலே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டும். ஆண் பெண் என்று இரண்டுமே முட்டைகளை மாறி மாறி அடைக்காக்கும்.
ஆச்சர்யமான உடலமைப்பை தன்னிடத்தே கொண்டவை இதனுடைய குஞ்சுகள். எப்படியென்றால், குஞ்சுகளின் ஒவ்வொரு இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு.
இந்த நகங்கள் ஆபத்தான சூழ்நிலையில் குஞ்சுகளுக்கு உதவுகின்றன. எப்படி என்பதற்கு ஒரு உதாரணத்தை சொன்னால் உங்களுக்கு புரிந்துவிடும். கழுகு போன்ற ஆபத்துக்கள் வாட்சினின் கூட்டை நெருங்கினால், குஞ்சுகளை விட்டு விட்டு தாய் தந்தை பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடும் (குஞ்சுகள் தங்களை காத்துக்கொள்ளும் என்ற எண்ணம் இதற்கு காரணமாக இருக்கலாம்).

இந்த குஞ்சுகள் என்ன செய்யுமென்றால், ஆபத்து நெருங்கும் போது, கூட்டிலிருந்து அப்படியே தாவி கீழே உள்ள ஆற்றில் விழுந்துவிடும். ஆபத்து நீங்கும் வரை நீருக்கடியில் நீந்திக்கொண்டிருக்கும். ஆபத்து விலகிவிட்டதாக உணர்ந்துவிட்டால், கரையேறி, தன் இறக்கைகளில் உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி தன் கூட்டிற்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்.
இதில் மற்றொரு வியப்பான தகவல் என்னவென்றால், குஞ்சுக்களாக இருக்கும்போது நன்கு நீந்தவும் மரமேறவும் தெரிந்த இவற்றிற்கு, பெரியவர்களானதும், இந்த இரண்டு தன்மைகளும் இவற்றை விட்டு போய்விடுகின்றன.
வாட்சின்கள் சைவத்தை உணவு முறையாக கொண்டவை. அதிலும் இலைகளையே அதிகம் உண்பவை. இவற்றை உணவுக்காக பிடிப்பதில்லை தென் அமெரிக்க பழங்குடியினத்தவர். இதற்கு காரணம், இவற்றின் இறைச்சி ருசியாக இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல், இவற்றிலிருந்து வெளிவரும் ஒருவித துர்நாற்றமும் மற்றுமொரு காரணம். உணவுக்கு வேறெதுவும் கிடைக்காத கடைசிக்கட்டத்தில் மட்டுமே இவற்றை பிடிக்கின்றனர் பழங்குடியினத்தவர்.
உலகின் மற்ற பறவையினங்களுக்கு இல்லாத ஒரு தனித்தன்மை வாட்சின்களுக்கு உண்டு. அது, இவற்றின் செரிமான மண்டலம் (Digestive System) தான்.
மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் (Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.
வாட்சின்களின் தொண்டைப்பை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று உணவுகளை சேமித்து வைப்பதற்கும், மற்றொன்று செரிமானத்திற்கும் பயன்படுகின்றது.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் மற்றொரு தகவல், இந்த பறவைகள் தங்களது தொண்டைப்பையில் உணவுகளை நிறுத்திவைக்கும் நேரம்தான். திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன. உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது.
பாதி அறைத்த நிலையில் தொண்டைப்பையில் உள்ள உணவுகளை மேலே கொண்டுவந்து தங்கள் குஞ்சுகளுக்கு உணவாகக் கொடுக்கின்றன இந்த பறவைகள். வாட்சின்களின் உணவில் ஏதேனும் நச்சுப் பொருட்கள் இருந்தால் அவை தொண்டைப்பையில் உள்ள திரவங்களால் நீக்கப்பட்டு தூய்மையான உணவுகளே குஞ்சுகளுக்கு செலுத்தப்படுகின்றன.
வியப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு தகவல், வாட்சின்களுடைய தொண்டைப்பையும் அதன் தன்மைகளும் கால்நடைகளை ஒத்திருக்கின்றன என்பதுதான். ஆம், மாடு போன்ற கால்நடைகளும் இப்படியான செரிமான மண்டலத்தையே கொண்டிருக்கின்றன.
வாட்சின்கள் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்...
மர்மங்களும், குழப்பங்களும்:
வாட்சின்களின் வினோதமான உடலமைப்பும், இயல்புக்கு மாற்றமான தன்மைகளும் பரிணாமவியலாளர்களை பெரும் குழப்பத்திலேயே ஆழ்த்திருக்கின்றன.
- இப்படியான கேள்விகளுக்கு இதுவரை திருப்திகரமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
'பரிணாமத்தில் விடையில்லா கேள்விகள்தான் நிறைய இருக்கின்றனவே?, இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பல கேள்விகளுக்கு அப்படி இப்படி என்று எதையாவது கூறி சமாளிக்கவாவது முயற்சி செய்வார்கள் பரிமாணவியலாளர்கள். ஆனால் வாட்சினை பொறுத்தவரை அப்படியான அனுமானம் கூட கிடையாது. ஒரு பெரிய வெற்றிடம் மட்டுமே.
டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் (DNA Sequence data) கூட சூழ்நிலையை மோசமாக்கினவே தவிர சீராக்கவில்லை.
இப்படியான படுகுழப்பமான சூழ்நிலை வாட்சின்கள் விசயத்தில் நீடிப்பதாலேயே இவற்றை வேறெந்த (பறவை) குடும்பத்தோடும் சேர்க்காமல் இவற்றிற்கென தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கின்றனர் (Family-Opisthocomidae).
உலகின் பெரும்பான்மை உயிரினங்களான பூச்சிகளின் தோற்றத்தில் எப்படி விடைத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனரோ, அதுபோலவே வாட்சின்களின் விசயத்திலும் நிற்கின்றனர் பரிணாமவியலாளர்கள். (பூச்சிகளின் தோற்றம் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).
இருக்கும் தலைவலி போதாதென்று மற்றுமொரு புது பிரச்சனை வாட்சின்கள் விவகாரத்தில் தற்போது கிளம்பியுள்ளது.
அறிவியல் ஆய்விதழான "Naturwissenschaften"-னில், சென்ற மாதம் ஐந்தாம் தேதி (5th October, 2011) வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, வாட்சின்கள் குறித்த புது தகவலை கூறுகின்றது. அதாவது, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புத்துண்டுகள் வாட்சின்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றன என்ற தகவல்தான் அது.
அப்படியென்றால், வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சார்ந்தவைகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கின்றது. வாட்சின்கள் தென் அமெரிக்காவில் மட்டுமே வசிக்கின்றன. வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றால், எப்படி அவை தென் அமெரிக்காவிற்கு வந்தன? சற்று தூரம் கூட பறக்க முடியாத அவை, ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும் நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?
இவைகளின் மூதாதையர் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவைகளாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும் கூட, 1000 கி.மீ தூரத்தை கடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது Science Daily தளம்.
பிறகு எப்படித்தான் கடந்தன?
இங்கு தான் ஒரு சூப்பர்(??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் (drifting flotsam, rafting event).
மிதவை என்றால் நாம் பார்க்கக்கூடிய கட்டுமரங்கள் போன்று இருக்கலாம், அல்லது ஒரு சிறு தீவு போன்ற நிலப்பரப்பு அப்படியே தண்ணீரில் மிதந்து செல்வதாக இருக்கலாம். நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?
பரிணாமவியலாளர்களின் இத்தகைய கற்பனை கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அப்படி சொல்வதைத்தவிர வேறு வழியும் இல்லை. டார்வினின் காலத்தில் இருந்து பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்? ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது இப்படியான எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும்.
எது எப்படியோ, வாட்சின்கள் தொடர்ந்து இவர்களுடன் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன. 'வாட்சின்கள் விவகாரத்தில் மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது' என்ற (வழக்கமான) பதிலை சொல்லி தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.
இதுவரை பரிணாம விசயத்தில் எதிர்மறையான பதில்களையே இவர்களுக்கு சொல்லியுள்ள காலம், வாட்சின்கள் விசயத்திலாவது இவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பதிலை சொல்லுமா??.....இவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்....
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
Pictures taken from:
1st Picture - 'Its Nature' website.
2nd Picture - Howstuffworks website and tailored by aashiq ahamed.
3rd Picture - Scientific American blog.
My sincere thanks to:
1. Lynx Edicions.
References:
1. Across the Atlantic On Flotsam: New Fossil Findings Shed Light On the Origins of the Mysterious Bird Hoatzin - Science Daily, 4th oct 2011. link
2. HBW 3 - Family text: Opisthocomidae (Hoatzin) - Handbook of the Birds of the World, Lynx Edicions. link
3. Hoatzins are no longer exclusively South American and once crossed an ocean - Scientific American blog, 5th oct 2011. link
4. Hoatzin - Encyclopedia Britannica. link
5. Hoatzin - howstuffworks. link
6. Hoatzin — the strangest bird in the Amazon: Houston Chronicle, 9th April 2010. link
7. Hoatzin - Wikipedia. link
8. Hoatzin (Opisthocomus hoazin) - Guyana Birding. link
9. More Taxa, More Characters: The Hoatzin Problem Is Still Unresolved - Molecular Biology and Evolution, Oxford Journals. link
10. The Case of the Mysterious Hoatzin: Biogeography Fails Neo-Darwinism Again - Evolution News, 5th Nov 2011. link
11. Opisthomocus hoazin - Oiseaux birds. link
12. RELIC OF PREHISTORY? - Last Refuge. link
13. Hoatzin – Beautiful Stinkbird: Suite 101. link
14. Oceannic dispersal - wikipedia. link
15. Biogeographical Challenges to Neo-Darwinian Evolution - Idea center. link
16. The Horrible Hoatzin - Its Nature. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

- இவை எந்த உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கும்?
- உலகின் மற்ற பறவையினங்கள் தங்களுக்குண்டான gizzard செரிமான மண்டலத்தை கொண்டு பிரச்சனைகள் இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்க, இவைகளுக்கு மட்டும் கால்நடைகளுக்கு இருப்பது போன்ற செரிமான மண்டலம் உருவாகத் தேவை என்ன?
- இப்படியான கேள்விகளுக்கு இதுவரை திருப்திகரமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
'பரிணாமத்தில் விடையில்லா கேள்விகள்தான் நிறைய இருக்கின்றனவே?, இதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பல கேள்விகளுக்கு அப்படி இப்படி என்று எதையாவது கூறி சமாளிக்கவாவது முயற்சி செய்வார்கள் பரிமாணவியலாளர்கள். ஆனால் வாட்சினை பொறுத்தவரை அப்படியான அனுமானம் கூட கிடையாது. ஒரு பெரிய வெற்றிடம் மட்டுமே.
டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் (DNA Sequence data) கூட சூழ்நிலையை மோசமாக்கினவே தவிர சீராக்கவில்லை.
No satisfying evolutionary hypothesis has been proposed, and the situation has become worse with the availability of DNA sequence data - wikipedia
இதுவரை எந்தவொரு திருப்திகரமான பரிணாம அனுமானமும் முன்வைக்கப்படவில்லை. டி.என்.ஏ நிலைவரிசை தகவல்கள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன - wikipedia
இப்படியான படுகுழப்பமான சூழ்நிலை வாட்சின்கள் விசயத்தில் நீடிப்பதாலேயே இவற்றை வேறெந்த (பறவை) குடும்பத்தோடும் சேர்க்காமல் இவற்றிற்கென தனி குடும்பத்தை உருவாக்கியிருக்கின்றனர் (Family-Opisthocomidae).
உலகின் பெரும்பான்மை உயிரினங்களான பூச்சிகளின் தோற்றத்தில் எப்படி விடைத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனரோ, அதுபோலவே வாட்சின்களின் விசயத்திலும் நிற்கின்றனர் பரிணாமவியலாளர்கள். (பூச்சிகளின் தோற்றம் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).
இருக்கும் தலைவலி போதாதென்று மற்றுமொரு புது பிரச்சனை வாட்சின்கள் விவகாரத்தில் தற்போது கிளம்பியுள்ளது.
அறிவியல் ஆய்விதழான "Naturwissenschaften"-னில், சென்ற மாதம் ஐந்தாம் தேதி (5th October, 2011) வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, வாட்சின்கள் குறித்த புது தகவலை கூறுகின்றது. அதாவது, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புத்துண்டுகள் வாட்சின்களின் உடலமைப்பை ஒத்திருக்கின்றன என்ற தகவல்தான் அது.
அப்படியென்றால், வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சார்ந்தவைகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கின்றது. வாட்சின்கள் தென் அமெரிக்காவில் மட்டுமே வசிக்கின்றன. வாட்சின்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவை என்றால், எப்படி அவை தென் அமெரிக்காவிற்கு வந்தன? சற்று தூரம் கூட பறக்க முடியாத அவை, ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும் நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?
இவைகளின் மூதாதையர் ஓரளவு நன்கு பறக்கக்கூடியவைகளாக இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும் கூட, 1000 கி.மீ தூரத்தை கடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது Science Daily தளம்.
But how does a bird, which is an especially poor long-distance flyer, manage to cross a sea that is over 1,000 kilometres wide? Even if the flying capabilities of the Hoatzin's ancestors were better, it is highly unlikely that they could have managed this distance in the air - Science Daily, 4th Oct 2011
பிறகு எப்படித்தான் கடந்தன?
இங்கு தான் ஒரு சூப்பர்(??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் (drifting flotsam, rafting event).
மிதவை என்றால் நாம் பார்க்கக்கூடிய கட்டுமரங்கள் போன்று இருக்கலாம், அல்லது ஒரு சிறு தீவு போன்ற நிலப்பரப்பு அப்படியே தண்ணீரில் மிதந்து செல்வதாக இருக்கலாம். நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?
பரிணாமவியலாளர்களின் இத்தகைய கற்பனை கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அப்படி சொல்வதைத்தவிர வேறு வழியும் இல்லை. டார்வினின் காலத்தில் இருந்து பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்? ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது இப்படியான எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும்.
எது எப்படியோ, வாட்சின்கள் தொடர்ந்து இவர்களுடன் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன. 'வாட்சின்கள் விவகாரத்தில் மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது' என்ற (வழக்கமான) பதிலை சொல்லி தங்களை சமாதானப்படுத்திக்கொண்டு காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கின்றனர்.
இதுவரை பரிணாம விசயத்தில் எதிர்மறையான பதில்களையே இவர்களுக்கு சொல்லியுள்ள காலம், வாட்சின்கள் விசயத்திலாவது இவர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய பதிலை சொல்லுமா??.....இவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம்....
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலை நிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
Pictures taken from:
1st Picture - 'Its Nature' website.
2nd Picture - Howstuffworks website and tailored by aashiq ahamed.
3rd Picture - Scientific American blog.
My sincere thanks to:
1. Lynx Edicions.
References:
1. Across the Atlantic On Flotsam: New Fossil Findings Shed Light On the Origins of the Mysterious Bird Hoatzin - Science Daily, 4th oct 2011. link
2. HBW 3 - Family text: Opisthocomidae (Hoatzin) - Handbook of the Birds of the World, Lynx Edicions. link
3. Hoatzins are no longer exclusively South American and once crossed an ocean - Scientific American blog, 5th oct 2011. link
4. Hoatzin - Encyclopedia Britannica. link
5. Hoatzin - howstuffworks. link
6. Hoatzin — the strangest bird in the Amazon: Houston Chronicle, 9th April 2010. link
7. Hoatzin - Wikipedia. link
8. Hoatzin (Opisthocomus hoazin) - Guyana Birding. link
9. More Taxa, More Characters: The Hoatzin Problem Is Still Unresolved - Molecular Biology and Evolution, Oxford Journals. link
10. The Case of the Mysterious Hoatzin: Biogeography Fails Neo-Darwinism Again - Evolution News, 5th Nov 2011. link
11. Opisthomocus hoazin - Oiseaux birds. link
12. RELIC OF PREHISTORY? - Last Refuge. link
13. Hoatzin – Beautiful Stinkbird: Suite 101. link
14. Oceannic dispersal - wikipedia. link
15. Biogeographical Challenges to Neo-Darwinian Evolution - Idea center. link
16. The Horrible Hoatzin - Its Nature. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDelete//
இங்கு தான் ஒரு சூப்பர்((??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் //
இத படிச்சதும் பயங்கரமா சிரிப்பு வந்துடுச்சு... ரொம்ப காமெடி பீஸாகிட்டாங்க போல :-)
அரிய தகவலை அறிய தந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர் . ஒவ்வொரு விஷயமும் அதன் தனித்தன்மைகளும் ரொம்பவே ஆச்சர்யப்படுத்துது.இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்
வாழ்த்துக்கள் சகோ
வஸ்ஸலாம்
உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்
அண்டத்தையும் அதில் அடங்கியவைகளையும் படைத்திட்ட வல்ல இறைவா !!!
ReplyDeleteஉன் ஆற்றலை எண்ணிக்கையில் அடக்க யாரால் இயலும்?
சலாம் சகோ....
ReplyDeleteபகிர்வு அருமையா இருக்கு.....
எவ்வளவு விசித்திரமான பறவை இது.....
பல ஆச்சரியங்களை குவித்து சிறப்புப்பெறுகிறது இந்த வாட்சின்....
இறைவனின் அற்புதமான படைப்பு மாஷா அல்லவாஹ்.....
ஆச்சரியங்கள் பலவற்றின் உறைவிடமாக இருக்கும் இந்தப்பறவை பற்றிய சுவாரசியமான தகவல்களிற்கும், பரிணாமக்கோட்பாடுகளின் முரண்பாடுகள்பற்றியும் விரிவான தகவல்களை பதிவிட்டதற்கு நன்றிகள்.
ReplyDeleteநெத்தியடி...
ReplyDeleteநாம பையோ டைவர்சிடி படிக்கும் போது இது பற்றியோ, இதன் குடும்பத்தை பற்றீயோ படிக்கவில்லை... எப்படி மிஸ்’ஆச்சு’னு தெர்யல...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஇறைவனின் படைப்பில் எவ்வளவுதான் கோடானு கோடி ஆச்சரியங்கள் கொட்டிக் கிடந்தாலும் பரிணாமவியலாளர்களை ஆட்கொண்டிருக்கும் ஈகோவும் பிடிவாதங்களும் அவற்றை விட்டும் அவர்களின் கண்களை மறைத்துவிடுகின்றன. இறைவன் நாடினால் அவர்களின் அந்த திரைகள் விலகி நேர்வழிப் பெறுவார்கள், இன்ஷா அல்லாஹ்! பகிர்வுக்கு நன்றி சகோ.
//இங்கு தான் ஒரு சூப்பர்((??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள்//
ReplyDeleteஅவர்கள் தான் அறிவுபூர்வமாக யோசிப்பவர்களாயிற்றே! இப்படிக்கூட விளக்கம் கொடுக்காவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லாது போய்விடுமே!
மாஷா அல்லாஹ் நல்ல பதிவு,நன்றி. இறைவனின் அற்புதமான படைப்பை பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.அல்லாஹு அக்பர்
"எங்கள் இறைவா!இதை நீ வீணாகப் படைக்கவில்லை.நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!"
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆசிக்!
ReplyDeleteமற்றுமொரு பரிணாமவியலை ஒட்டிய சூப்பரான இடுகை. பரிணாமத்தை ஆதரிக்கும் எந்த நபரின் மறுப்பையும் காணோமே! ஒருவராவது வந்து தகவல் தரக் கூடாதா?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteமர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த அற்புத பதிவு!
பதிவை படித்து விட்டு வியக்கிறேன்.
//இங்கு தான் ஒரு சூப்பர்((??) விடையை கூறுகின்றனர் பரிணாமவியலாளர்கள். அதாவது மிதவைப் போன்ற ஒன்றில் ஆப்ரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாமாம் வாட்சின்கள் //
இதை படித்து விட்டு நகைக்கிறேன்
எல்லாம் வல்ல இறைவன் உலகில் பல ஆச்சரியங்களை வைத்துள்ளான்.பரிணாமம் எனும் நகைச்சுவையில் அதை தேடி தமிழுக்கு கொடுக்கும் வேலையை திறம்பட செய்கிறீர்கள்.மாஷா அல்லாஹ்.
உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானம் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.
இந்த திறமை உங்களிடம் இருந்ததை வெளிக்கொணர்ந்த தருமியே நீவிர் வாழ்க.உம்மாலும் எமக்கு நண்மை ..
ஸலாம் சகோ ஆஷிக் அஹ்மத்...
ReplyDelete'அறிவியல் என்ற பெயரில் புனைவியல்' கூறும் பரிணாமத்திற்கு ஆப்பு அறையும் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறீர்கள்.
இவை, உங்களுக்கும் அலுக்கவில்லை. படிக்கும் எங்களுக்கும் அலுக்கவில்லை. காரணம், பதிவில் விஷயம் அப்படி..!
வாட்சின் பற்றி நான் அறியாத தகவல்களை மீண்டும் ஒரு சூப்பர் பரிணாம ஆப்பு பதிவின் மூலம் அறிய தந்தமைக்கு நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்.
ReplyDelete//பரிணாமத்தை ஆதரிக்கும் எந்த நபரின் மறுப்பையும் காணோமே! ஒருவராவது வந்து தகவல் தரக் கூடாதா?//---அதானே..!
ஏற்கனவே இங்கே சகோ.ஆஷிக் அஹமது செத்துப்போன பாம்பைத்தான் தொடர்ந்து விதவிதமாக அடித்துக்கொண்டு இருக்கிறார்..!
:-) :-)) :-)))
நீங்கள் என்னடாவென்றால்... "எங்களை விட்டுடுங்கோ.." என்று புறமுதுகிட்டு கல்லறைக்குள் போய் ஒளிந்து கொண்டு மாசக்கணக்காய் மூச்சு விட மறந்து விட்டாலும், விடாமல் தேடிச்சென்று உடைத்து எடுத்து வந்து அந்த... "மரணித்த பரிணாம ஆதரவு கருத்துக்களுக்கு" மரணதண்டனை கொடுக்க நினைக்கிறீர்கள்..!
இத்தளத்தில் ஆரம்பத்தில் 'பரிணாம ஹாரிபாட்டர் சீரீஸ் பதிவுகள்' வந்த சமயத்தில் ஓயாமல் ஒப்புக்கு சண்டை போட வந்த 'டார்வின் ரசிகர்'களான நாத்திகர்கள் எவரையுமே கடந்த சில பரிணாம ஆப்பு பதிவுகளில் பின்னூட்டமிடக்காணோம்தான்..!
அநேகமாக அவர்கள், பரிணாமம் என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை என்ற உண்மையை விளங்கி இருக்க வேண்டும்..!
அப்படியெனில், இரகசியமாக அவர்கள் படைப்புக்கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்களா..?
எனில், அவர்கள் ஆத்திகர்களாகி விட்டனரா..? அப்படியெனில் அதை அறிவிக்க என்ன தயக்கம்..?
இல்லையேல்...
இரண்டும் இன்றி தமக்கென்று தனியாக வேறு ஒரு புதிய கொள்கையை(?!) வகுக்கும் சிந்தையில் மூழ்கி உள்ளனரா..?
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவழக்கம் போல புதியதொரு தகவலை பகிர்ந்துள்ளீர்கள். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
ஒரு சந்தேகம்.
//ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்கவிற்கும் நடுவில் இருக்கக்கூடிய 1000 கி.மீ (க்கும் மேலான) அகலம் கொண்ட அட்லான்டிக் பெருங்கடலை எப்படி தாண்டின?//
மனிதர்கள் யாராவது பறவைகளை எடுத்து வந்திருக்க முடியாதா?
மாஷா அல்லாஹ்! மிக அருமையான பதிவு!
ReplyDeleteநான் இதற்கு முன்பு ஒட்டகத்தை மட்டுமே, பல குணாதிசியங்கள் கொண்ட படைப்பாக இதுநாள் வரை நான் எண்ணிகொண்டிருந்தேன். உங்களின் பதிவு அதனை பொய்பித்து விட்டது. இந்த வாட்சின் (Hoatzin) பறவைப்போல, எல்லாம் வல்ல இறைவனின் படைப்புகள் எத்தனை உள்ளதோ நம் உலகில்...? எல்லாம் அல்லாஹ்வே அறிவான்.
(சகோ.ஆசிக், பரிணாமவியலாளர்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும், ஏன் இப்படி தலைவலி கொடுக்கறிங்க! :))
சகோதரர் பாஸித்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
//மனிதர்கள் யாராவது பறவைகளை எடுத்து வந்திருக்க முடியாதா?//
நமீபியாவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் சுமார் 17 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. பரிணாம கணக்கை பொருத்தவரை அப்போது மனிதன் தோன்றவில்லை. அதனால் மனிதன் எடுத்து வந்திருப்பான் என்ற எண்ணத்திற்குள் அவர்கள் போகவில்லை.
Hope this answers your question...
வஸ்ஸலாம்...
சகோதரி ஆமீனா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
//இத படிச்சதும் பயங்கரமா சிரிப்பு வந்துடுச்சு//
முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. பட் அவங்க சீரியசாவே இத பத்தி பேசுறாங்க :) :)...
வருகைக்கும் துவாவிற்கும் நன்றி...
ஸலாம் சகோ.அப்துல் பாஸித்...
ReplyDelete///மனிதர்கள் யாராவது பறவைகளை எடுத்து வந்திருக்க முடியாதா?/// ---ஹா...ஹா...ஹா...
மனிதன்தான்... "பரிணாமத்தொடர் கதையின் கடைசி அத்தியாயம்" என்று அம்புலிமாமா படிக்கும் குழந்தைப்பருவ காலத்திலேயே அறிந்திருப்பீர்கள் என்பதில் 'நூற்றுக்குநூறுசதவீதம்' எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆக, எனக்கு உங்களின் இந்த "போட்டு-வாங்கலாம்" என்று முயற்சிக்கும் டெக்னிக் பிடித்திருந்தது. :-)
ஆனால், அதற்குள் இந்த 'சீரியஸ் மேன்' அதை இப்படி பப்ளிக்காய் போட்டு உடைத்து விட்டாரே..! :-(
வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரி F.NIHAZA,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்...
//எவ்வளவு விசித்திரமான பறவை இது.....///
இறைவனின் அத்தாட்சிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. காண கண் இருந்தும் குருடர்களாக இருப்பவர்கள் பரிசீலனை செய்ய முன்வர இறைவன் அருள்புரியட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteஇறைவனோட படைப்பில் இது ஒரு விசித்திரமான பறவை.
அறியாத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
அஸ்ஸலாம் அலைக்கும் ....
ReplyDeleteஇந்த செய்தி தமிழில் இதுவரை வந்ததில்லை என்றே நினைக்கிறேன்...
மிகவும் வியப்பான செய்தி .பகிரிந்தமைக்கு மிக்க நன்றி....
** இதில் மற்றொரு வியப்பான தகவல் என்னவென்றால், குஞ்சுக்களாக இருக்கும்போது நன்கு நீந்தவும் மரமேறவும் தெரிந்த இவற்றிற்கு, பெரியவர்களானதும், இந்த இரண்டு தன்மைகளும் இவற்றை விட்டு போய்விடுகின்றன. ** ஏன் ??? பரிணாமம் இதட்கு பதில்தறுமா?? ** WIKIPEDIA SAID, No satisfying evolutionary hypothesis has been proposed, and the situation has become worse with the availability of DNA sequence data.**
எப்போதோ சவக்குழிக்குள் போய்விட்ட பரிணாம தியரிக்கு!!?? மேலும் ஒரு மறுப்பு (ஆப்பு ) ஆணி அடித்துவிட்டீர்கள் மேலும் இதட்கு VINAVU & CO
ஏதாவது சால்ஜாப்பு பதில் தரும் மிக விரைவில் எதிர்பாருங்கள் ........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteஅன்பு சகோ அஷிக்
பரிணாம கதைகளுக்கு எதிரான பதிவு என்பதை விட வழக்கம்போல் உண்மை அறிவியலுக்கு ஆதரவான பதிவு.,
//குஞ்சுகளின் ஒவ்வொரு இறக்கையின் இறுதியிலும் இரண்டு நகங்கள் உண்டு.//
சுப்ஹானல்லாஹ்! இறை படைப்பில் எவ்வளவு இயல்பு நிலைக்கு மாற்றமான அற்புதங்கள்.,
அல்லாஹ் உங்கள் கல்வி அறிவை மென்மேலும் அதிகப்பபடுத்தட்டும்!
//பரிணாமத்தை ஆதரிக்கும் எந்த நபரின் மறுப்பையும் காணோமே//
நாத்திக - பரிணாம சிந்தனை பொதுவாக குர்-ஆன் ஹதிஸ் குறித்து எழுதும் ஆக்கத்திற்கே மறுப்பு தந்து அங்கே அறிவியல் மூலாம் பூசி பரிணாமத்தை முன்னிருத்துகிறது.,
மாறாக இதைப்போன்ற ஆக்கங்களில் பரிணாம அபிமானிகள் அறிவியல் தரவுகளோடு வருகை தருவதில்லை., ஒருவேளை பரிணாமம் கட்டுக்கதை என்பதை புரிந்துக்கொண்டார்களோ என்னவோ...
????
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்.
சகோதரர் அம்பலத்தார்,
ReplyDeleteஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..
சகோதரர் faaique,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
///நாம பையோ டைவர்சிடி படிக்கும் போது இது பற்றியோ, இதன் குடும்பத்தை பற்றீயோ படிக்கவில்லை... எப்படி மிஸ்’ஆச்சு’னு தெர்யல...///
:) :). நல்லா யோசிச்சு பாருங்க..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...
சகோதரி அஸ்மா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
//இறைவனின் படைப்பில் எவ்வளவுதான் கோடானு கோடி ஆச்சரியங்கள் கொட்டிக் கிடந்தாலும் பரிணாமவியலாளர்களை ஆட்கொண்டிருக்கும் ஈகோவும் பிடிவாதங்களும் அவற்றை விட்டும் அவர்களின் கண்களை மறைத்துவிடுகின்றன//
பரிணாமத்திற்கு முன்பு இருந்த ஆதரவு இப்போது இல்லை சகோதரி. காலங்கள் மாற காட்சிகளும் மாறுகின்றன. இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நேர்வழி பெறுவார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரி ashfa,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//அவர்கள் தான் அறிவுபூர்வமாக யோசிப்பவர்களாயிற்றே! இப்படிக்கூட விளக்கம் கொடுக்காவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லாது போய்விடுமே!//
இப்படி கொடுப்பதற்கு பதிலாக, நன்கு பறக்கத் தெரிந்த பறவைகள், வாட்சின்களை அப்படியே வாயில் கவ்விக்கொண்டு போய் பக்கத்து கண்டத்தில் போட்டிருக்கலாம் என்று சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சொல்ல முடியாது, இப்படியான யூகத்தை கூட இவர்கள் வைத்திருக்கலாம். இவர்களின் கற்பனைக்கு எல்லை கிடையாது.
//"எங்கள் இறைவா!இதை நீ வீணாகப் படைக்கவில்லை.நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!"//
ஆமீன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
ReplyDeleteசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
****
அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****
.
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
எல்லாப் புகழும் இறைவனிற்கே உரித்தாவதாக...
//. பரிணாமத்தை ஆதரிக்கும் எந்த நபரின் மறுப்பையும் காணோமே! ஒருவராவது வந்து தகவல் தரக் கூடாதா?///
அப்படி வந்தால் கேட்பதற்கு சிலபல கேள்விகளை வைத்துள்ளேன். இந்த கட்டுரை கோர்வையாக தெரிந்தாலும், சில தகவல்களை அவர்கள் வரும்போது கேட்டுக்கொள்ளலாம் என்பதால் விட்டு வைத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் வரட்டும்.
அதுமட்டுமல்லாமல், இதுவரை நமது கட்டுரைகளுக்கு எந்த விதமான மறுப்பை தந்துவிட்டார்கள்?
வஸ்ஸலாம்..
சகோதரர் ஜாஹிர்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.
//இந்த திறமை உங்களிடம் இருந்ததை வெளிக்கொணர்ந்த தருமியே நீவிர் வாழ்க.உம்மாலும் எமக்கு நண்மை ..///
:) :). எப்படி சகோதரர் இப்படியெல்லாம்.....ஆனாலும் பாயிண்ட் இருக்கின்றது. நான் ப்ளாக் ஆரம்பிக்க தூண்டியவர்களில் ஒருவர் என்ற முறையில், நான் எதிர்க்குரல் தொடங்கியவுடன் அவருக்கும் நன்றி சொல்லி மெயில் அனுப்பினேன். நீங்க பழசையெல்லாம் நினைவுபடுத்துகிண்றீர்கள். மிக்க நன்று :)
வஸ்ஸலாம்...
வ அலைக்கும் சலாம் சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDelete//பரிணாமத்திற்கு ஆப்பு அறையும் பதிவுகளை//
நல்லா தின்க் பண்ணி பாருங்க...நாம தான் இவங்களுக்கு ஆ*பு வைக்கணுமா என்ன?...இவங்களே இவங்களுக்கு வைத்துப்பாங்க என்பது தானே நாம பார்க்குறது.
//இவை, உங்களுக்கும் அலுக்கவில்லை. படிக்கும் எங்களுக்கும் அலுக்கவில்லை. காரணம், பதிவில் விஷயம் அப்படி..!//
எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக..
//ஏற்கனவே இங்கே சகோ.ஆஷிக் அஹமது செத்துப்போன பாம்பைத்தான் தொடர்ந்து விதவிதமாக அடித்துக்கொண்டு இருக்கிறார்..! //
:) :)
இறைவனின் நாட்டத்தை என்னவென்று சொல்வது. சென்ற வருடமே, ஆர்கியாப்டேரிக்ஸ் மற்றும் வாட்சின்களை இணைத்து ஒரு பதிவு போடலாம் என்று இவை குறித்து நீண்ட நாட்கள் படித்து வைத்திருன்தேன். ஆனால் அல்லாஹ் அப்போது நாடவில்லை. என்னடா இவ்வளவு படித்து எழுத முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்தது. ஆனால் பாருங்கள், அப்போது நான் படித்தது வீணாகாமல், இப்போது, மற்றொரு கருவை வைத்து ஆர்கியாப்டேரிக்ஸ் குறித்தும் எழுதியாகிவிட்டது, வாட்சின்கள் குறித்தும் எழுதியாகிவிட்டது. a double bonus. முன்னரே இவை படித்து வைத்திருந்தது தற்போது வேலையை மிக சுலபமாக்கிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
//இரண்டும் இன்றி தமக்கென்று தனியாக வேறு ஒரு புதிய கொள்கையை(?!) வகுக்கும் சிந்தையில் மூழ்கி உள்ளனரா..?//
இது நல்லா இருக்கு...
வஸ்ஸலாம்...
சகோதரர் பாஸித்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...
சகோதரர் தமீம் அன்சாரி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ஆம் சகோதரர்..இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் அற்புதம். அவை அவனுடைய அத்தாட்சிகலாக இருந்து உண்மையை பறைசாற்றி கொண்டிருக்கின்றன. நீங்கள் பூச்சிகளின் இறக்கைகள் குறித்து படியுங்கள் சகோதரர். சுப்ஹானல்லாஹ். வியந்து போவீர்கள்..
//சகோ.ஆசிக், பரிணாமவியலாளர்களுக்கும், அதன் ஆதரவாளர்களுக்கும், ஏன் இப்படி தலைவலி கொடுக்கறிங்க! ://
பரிணாமத்தை பொருத்தவரை, நாமெல்லாம் கொடுக்க தேவையில்லை. கோட்பாடே அப்படியான ஒன்று தான். என்ன, இவர்களுக்கு தலைவலி இருக்கிறதென்று நாம் ஊருக்கெல்லாம் சொல்கின்றோம், அவ்வளவுதான்.. :)
வஸ்ஸலாம்...
salaam.....
ReplyDeleteMashaa allah...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..ஒரு புதிய தகவல் அடங்கிய மற்றும் ஒரு அருமையான பதிவு ..
அல்லாஹ்வின் படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள் ..
படிக்கும் போதே வியப்பாக உள்ளது..
உங்கள் பதிவை பார்த்ததும் யு டியூபில் வாட்சின் பார்த்தேன் ..
நம் மயிலின் உருவத்தை கொஞ்சம் ஒட்டியதாக குட்டியாக அழகான வர்ணங்கள் கொண்டதாக உள்ளது..
\\இந்த குஞ்சுகள் என்ன செய்யுமென்றால், ஆபத்து நெருங்கும் போது, கூட்டிலிருந்து அப்படியே தாவி கீழே உள்ள ஆற்றில் விழுந்துவிடும். ஆபத்து நீங்கும் வரை நீருக்கடியில் நீந்திக்கொண்டிருக்கும். ஆபத்து விலகிவிட்டதாக உணர்ந்துவிட்டால், கரையேறி, தன் இறக்கைகளில் உள்ள நகங்களை பயன்படுத்தி மரமேறி தன் கூட்டிற்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்.//
சுப்ஹானல்லாஹ்..அல்லாஹ்வின் கருணை தான் எத்தகையது..
உங்களின் தேடுதலால் எங்களுக்கு ஒரு புது தகவல் கிடைத்துள்ளது..
பதிவிற்கு நன்றி சகோதரரே..
amazing post brother.Aashiq. Jazakallahu Khayr for sharing :)
ReplyDeleteAssalaamu alaikum!!!
ReplyDeletevery interesting!!! Alhamthulillaah!!
சகோதரி ஆயிஷா அபுல்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
எல்லாப் புகழும் இறைவனிற்கே....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வஸ்ஸலாம்,
சகோதரர் நாசர்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
எல்லாப் புகழும் இறைவனிற்கே....
//மேலும் இதட்கு VINAVU & CO
ஏதாவது சால்ஜாப்பு பதில் தரும் மிக விரைவில் எதிர்பாருங்கள் ........//
அவங்களா....அப்படி கொடுத்தாலும் நாம் அவர்களை சீண்ட போவதில்லை. பித்தலாட்டகாரர்களை எதற்கு கண்டுக்கொள்ள வேண்டும்??
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க குலாம்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
///உண்மை அறிவியலுக்கு ஆதரவான பதிவு.,///
அல்ஹம்துலில்லாஹ்..சூப்பரா சொன்னீங்க. ரொம்ப நன்றி...
///நாத்திக - பரிணாம சிந்தனை பொதுவாக குர்-ஆன் ஹதிஸ் குறித்து எழுதும் ஆக்கத்திற்கே மறுப்பு தந்து அங்கே அறிவியல் மூலாம் பூசி பரிணாமத்தை முன்னிருத்துகிறது.,///
இதுதான் உண்மை. அடுத்தவர் கொள்கையை விமர்சிக்கும் நேரத்தில் தம் கொள்கை குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க முன்வந்திருந்தால் அந்த கொள்கையை இந்நேரம் தள்ளிவைத்திருப்பார்கள்.
///ஒருவேளை பரிணாமம் கட்டுக்கதை என்பதை புரிந்துக்கொண்டார்களோ என்னவோ... ///
குலாம், அவர்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கின்றார்கள்? பரிணாமத்திற்கு ஆதாரவாக கருதப்பட்ட எல்லா ஆதாரங்களும் காலி. என்ன வெளிப்படையாக 'பரிணாமம் ஒரு அறிவியலுக்கு ஒத்துவராத கோட்பாடு" என்று அறிவிக்கவில்லை. அவ்வளவுதான். மற்றப்படி பரிணாமத்தில் உள்ள எண்ணற்ற ஓட்டைகளை உணர்ந்தே இருக்கின்றனர் பரிணாம ஆதரவாளர்கள்.
வஸ்ஸலாம்...
சகோதரர் சுல்தான்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
வருகைக்கு நன்றி...
சகோதரி சபிதா,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரி அன்னு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்..
வருகைக்கும் துவாவிற்கும் நன்றி..
சகோதரி zalha,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
ReplyDeleteசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
.
தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது
விடியோ காணவும்.
உண்மையிலேயே அதிசயமும் ஆச்சர்யமும் தான். பதிவு நல்லா விளக்கமா இருக்கு படங்களும் நல்லா இருக்கு.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
ReplyDeleteமதம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து எப்போது, ஏன் தோன்றியது என்ற வினாவிற்கான விடையை நாம் முதலில் கண்டறிதல் வேண்டும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும்.
1847 ஆம் ஆண்டு ஸிம்ப்ஸன்(Simpson) என்னும் மருத்துவர் குழந்தைப் பேற்றின்போது பிரசவ வேதனையைக் குறைக்க மயக்க மருந்தைப் பரிந்துரை செய்தபோது கிறிஸ்துவ குருமார்கள் அதனை ஆட்சேபித்தனர்.
“துன்பத்திலும் வேதனையிலுமே நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்”
(In Sorrow Shalt Thou Bring Forth Children Gen 111:16) என்ற பைபிளின் போதனைக்கு எதிராக இது அமைவதாக அவர்கள் வாதாடினர்.
இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எதிராகவும், அறிவியல் விளக்கங்கள், கண்டுபிடிப்புகளை மறுக்கும் வகையிலும், கிறித்தவ திருச்சபையும் அதனைப் பிரதிநிதித்துவப் சிந்தனைப் போக்கை ஐரோப்பாவில் தோற்றுவித்தது. கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக திருச்சபையின் இரும்புப் பிடிலிருந்து விடுபடும் பொருட்டு சுதந்திரச் சிந்தனையை விரும்பியவர்களால் தொடுக்கப்பட்ட அறிவுப் போராட்டம் வரலாற்று ஓட்டத்தில் மதத்திற்கே எதிரான ஒரு போராட்டமாக மாற்றமடைந்தது.
ஆக மதத்திற்கு எதிராக கிளம்பிய இவர்கள் இப்போது குழம்பி போய் நிற்கிறார்கள்
மேலும் அறிந்துக் கொள்ள
http://valaiyukam.blogspot.com/2011/05/blog-post_10.html
லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,
ReplyDeleteஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Assalamu alikum
ReplyDeleteonotheor super post
parinamam sethukondu varukerathu! Koodiya seekeram kabar kuli thonda vendum enru nenaikeran!!
Jazakallahu kair
Assalamu alikum
ReplyDeletesuper post bro jazkallahu kair!
சகோதரர் ஹைதர் அலி,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
நல்லதொரு புத்தக அறிமுகம். நாத்திகம் என்பது ஒரு முழுமையான அளவில் வெளிவந்தது தாங்கள் கூறிய காலக்கட்டத்தில் தான் என்றாலும், அது, நீண்ட காலமாகவே ஏதோ ஒரு வடிவில் இருந்துள்ளதாக விக்கி கூறுகின்றது.
///ஆக மதத்திற்கு எதிராக கிளம்பிய இவர்கள் இப்போது குழம்பி போய் நிற்கிறார்கள்///
நிரூபிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் மத புத்தகங்களுக்கு எதிரான வகையில் இல்லாதவரை நாத்திகர்களது பாடு திண்டாட்டம் தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...
சகோதரர் ஜாபர் கான்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களை பொறுத்தவரை, பரிணாமம் எப்போதோ குழிக்குள் போய்விட்டது. அதற்கு மேலாக ஒவ்வொரு ஆணியாக அடித்துக்கொண்டிருக்கின்றதாம் நிகழ்கால ஆதாரங்கள். :)
தங்களின் பேஸ்புக் தாவாஹ் நடவடிக்கைகள் மிக நன்றாக உள்ள. ஜசாக்கல்லாஹ். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன்...
வஸ்ஸலாம்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ).
ReplyDeleteஇறை நம்பிக்கை கொண்டவருக்கு இதில் மட்டுமே ஆச்சிரியங்கள் எதுவும் இல்லை . இறைவன் படைத்த ஒவ்வொன்றும் அதன் அடிப்படையில் ஆச்சிரியமே...!! ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)
((ஒட்டகம் எப்படி படைக்கப்பட்டது ..? சிந்தித்துப்பார்ப்பவருக்கு அதில் அத்தாட்சி இருக்கிறது -குர் ஆன் )
ஆஸ்திரேலியாவே இந்தியாவை ஒட்டிதான் இருந்ததுன்னு ஒரு வரலாறு இருக்கு . அதுப்போல பல நூறு வருஷங்களுக்கு முன்னே இரண்டு கண்டங்களும் ஒன்றாய் இருந்திருக்கலாம் தானே :-)
பரிணாமவியாலர்கள் இது வரை எங்குமே ஜெயிச்சதில்லை வெறும் ஊகம் அடிப்படையில்தானே டைம் பாஸ் செய்யுறாங்க :-)
நிறைய ரெஃபரென்ஸ் .. வாழ்த்துக்கள் ஜஸாக்கலாஹ் க்கைர்
May be they didn't cross over anywhere. Couldn't it be possible that they are living on the same land mass as they did before, but the land mass has drifted apart??
ReplyDelete@ சகோதரர் ஜெய்லானி,
ReplyDelete@ சகோதரர் அழகன்,
உங்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
///ஆஸ்திரேலியாவே இந்தியாவை ஒட்டிதான் இருந்ததுன்னு ஒரு வரலாறு இருக்கு . அதுப்போல பல நூறு வருஷங்களுக்கு முன்னே இரண்டு கண்டங்களும் ஒன்றாய் இருந்திருக்கலாம் தானே :-)///
/// Couldn't it be possible that they are living on the same land mass as they did before, but the land mass has drifted apart??///.
fine. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலப்பரப்புகள் எல்லாம் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமென்பது ஆய்வாளர்களின் எண்ணம் என்றாலும், இந்த பறவை தோற்றத்திற்கு முன்பாகவே நிலப்பரப்புகள் பிரிந்துவிட்டதாக எண்ணுகின்றனர்.
அட்லாண்டிக் கடலின் தற்போதைய அகலம் sumaar 2500km-மேல். பதிவில் கூறப்பட்டுள்ள அகலம், அப்போது 1000km இருந்திருக்கலாம் என்ற யூகம்.
Hope this answers your question...
//////////மற்ற பறவைகளில், அவை உண்ணும் உணவுகள் gizzard எனப்படும் இரப்பையில் உடைக்கப்பட்டு செரிமானம் நடக்கின்றது. ஆனால் வாட்சின்களிலோ, இவற்றினுடைய பெரிய தொண்டைப்பையில் (Crop) உணவு செரிமானம் நடக்கின்றது. இது அறிவியல்ரீதியாக மிகவும் ஆச்சர்யமான விசயமாகும்.////////
ReplyDeleteசார் அது தாவர உன்னி அதனால் தான் crop இல் செரிமானம் நடக்கிறது .
crop என்பது oesophagus இன் ஒரு மாற்றம் , மாடுகள் புல் செரிமானத்திற்கு rumen ஐ உபயோகிக்கின்றன , rumen என்பதும் oesophagus இன் ஒரு மாற்றம்.( for microbial fermentation of cellulose )
///////// திரவ உணவுகளை சுமார் 18 மணி நேரங்கள் வரையும், திட உணவுகளை சுமார் 1-2 நாட்கள் வரையும் நிறுத்திவைக்கின்றன. உலகில் வேறெந்த பறவைக்கும் இப்படியான தன்மை கிடையாது//////////
இதுவும் microbial fermentation னுக்காகதான் ( நார் பொருட்களை நுண்ணுயிரிகளை வைத்து செரிக்க வைப்பதற்காக )
Any way , very nicely narrated and very informative , I ll post an article regarding this issue Bro.
பதிவு போட்டாச்சு நண்பரே ,பதில்களுக்கு இங்கே சென்று பார்க்கவும் http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_18.html
ReplyDeleteஇந்த பறவையே பரிணாமத்தின் ஒரு உதாரணம் தான்!
ReplyDeleteதலைபிரட்டை முதலில் நீரில் மீன் போல் வாழ்ந்து பின் தவளையாவது.
பட்டாம்பூச்சிகள் முதலில் லார்வா புழுக்கலாக இருந்தது பின் பூச்சிகளாவது போன்று தான் இந்த பறவையும், விரல்களுடன் குஞ்சுகளால இருக்கும் போது இருக்கிறது!
பரிணாமத்திற்கு அருமையான உதாரணத்தை எடுத்து கொடுத்தமைக்கு நன்றி!
//இப்படி கண்டம் விட்டு கண்டம் மிக நீண்ட தூரம் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மிதவையில் செல்ல வாய்ப்புண்டா? அப்படி இதுவரை ஒரு பயணத்தை சோதித்து பார்த்திருக்கின்றார்களா? அல்லது இதுவரை அப்படியொரு பயணத்தை யாராவது பார்த்திருக்கின்றார்களா?//
ReplyDeleteHave you guys not heard of continental drift? very funny!!!
please see: Bill Nye - Greatest Discoveries - Earth Sciences - Full Documentary
சகோ கிருஷ்ணா,
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..
//Have you guys not heard of continental drift? very funny!!!//
இதற்கான பதிலை மேலேயே சொல்லியிருக்கின்றேனே? it is quite sad that you didn't notice my answer to Bro.Jailani and Bro.Azhagan above. Please check out.
thanks.