நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
**********
பதிவிற்குள் நுழையும் முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:
1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.
2. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
**********
ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும்.
மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும்.
இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி' மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை.
இதுவரை நமக்கு கோடிக்கணக்கான படிமங்கள் கிடைத்து, வரலாற்றில் உயிரினங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்ற தெளிவை கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறிய ஆதாரத்தை தரவில்லை.
டார்வினும் தன் கோட்பாட்டில் உள்ள இந்த பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்தார். எதிர்காலத்தில் உயிரினப்படிமங்கள் அதிக அளவில் கிடைக்கும் போது, தன் கருத்து நிரூபிக்கப்படும் என்று நினைத்தார் அவர். ஆனால், அன்று அவருக்கு கிடைக்காத ஆதாரம், இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. கிடைத்ததாக நினைத்த சில ஆதாரங்களும் பிற்காலத்தில் பித்தலாட்டம், ஆதாரமில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன. (இதுக்குறித்த இத்தளத்தின் விரிவான பதிவுகளை காண <<இங்கே>> சுட்டவும்.
இடியக்கரா காலம்:
பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு பிரச்சனையாக இருப்பது கேம்ப்ரியன் கால (Cambrian) உயிரினப்படிமங்கள். கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன.
இதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால், பலதரப்பட்ட இந்த விலங்குகள், முதன் முதலாக காணப்படும் போதே சிக்கலான உடலமைப்புடன், முழுமையாக தோன்றியிருக்கின்றன.
இது என்ன பெரிய ஆச்சர்யம், இந்த கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு போய் பார்த்தால், இந்த விலங்குகளின் முன்னோர்கள் மற்றும் இவை படிப்படியாக மாறியதற்கு ஆதாரம் கிடைத்து விடப்போகின்றது என்று உங்களில் சிலர் கூறலாம்.
அங்கு தான் விசயமே இருக்கின்றது. கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டம் இடியக்கரா காலம் (Ediacara) என்று அழைக்கப்படுகின்றது. இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலகட்டத்திற்கு சென்று பார்த்தால் விலங்குகளின் சுவடே அங்கு இல்லை. A complete blank...blank...blank.
இது பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த வியப்பையே இன்று வரை தந்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்தில் திடீரென தோன்றியிருக்கும் உயிரினங்களின் முன்னோர்கள், பரிணமித்து கொண்டிருக்கும் நிலையில் இடியக்கரா காலக்கட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையோ அப்படியே நேரெதிராக இருக்கின்றது.
உலகில் முதன் முதலாக காணப்படும் விலங்குகள் பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவே இல்லை.
"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).
இது பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு மிகப்பெரிய பின்னடைவாக இன்று வரை இருந்துக்கொண்டிருக்கின்றது. இடியக்கரா காலக்கட்டத்தில் விலங்குகள் காணப்படவில்லை என்றாலும் ஒரு ஆறுதலான(?) விசயம் பரிணாமவியலாளர்களுக்கு 1998-ஆம் ஆண்டு கிடைத்தது. தென் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களை (animal embryos) கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.
"...the 1998 report of fossilized animal embryos in the early Ediacaran Doushantuo Formation of South China was met with almost palpable relief" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (tailored not to confuse).
1998-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய விலங்குகளின் கருக்கள் கிட்டத்தட்ட மனரீதியான ஆறுதலை (பரிணாமவியலாளர்களுக்கு) தந்தன - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
ஒரு நிமிஷம்...
விலங்குகளின் கருக்கள் எல்லாம் படிமங்களில் தென்படும்போது, பரிணமித்து கொண்டிருக்கும் விலங்குகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போகும்? மிக எளிதாகவே நமக்கு தோன்றும் இத்தகைய கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. இதுவாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைவதெல்லாம் தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் நடத்தும் மனரீதியான போராட்டமே ஒழிய வேறொன்றுமில்லை.
அந்த ஆறுதலும் தற்போது வழக்கம் போல உடைந்து சுக்குநூறாகி இருக்கின்றது.
சமீபத்தில் (23rd dec 2011) 'Science' ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை தந்திருக்கின்றன. அதாவது, 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களோ அல்லது விலங்குகளோ கிடையாது என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.
"..X-ray microscopy revealed that the fossils had features that multicellular embryos do not, and this led the researchers to the conclusion that the fossils were neither animals nor embryos.." - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011 (tailored to fit the explanation)
பலசெல் உயிரின கருக்களின் தன்மைகளுடன் இந்த படிமங்கள் ஒத்துபோகவில்லை என்பது எக்ஸ்ரே நுண் நோக்கியியல் யுக்தி மூலம் தெரியவந்துள்ளது. ஆகையால் இந்த படிமங்கள் விலங்குகளோ அல்லது கருக்களோ இல்லை என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
இப்போது, ஆரம்ப கால உயிரினங்கள் குறித்த குழப்பங்கள் மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டன. இருந்த சிறிய ஆறுதல்(?) மற்றும் யூகமும் காலி.
- கேம்ப்ரியன் கால விலங்குகள் எப்படி திடீரென தோன்றின?
- முதல் முறை காணப்படும் போதே சிக்கலான மற்றும் முழுமையான உடலமைப்பை பெற்றிருக்கின்றனவே, அது எப்படி?
- அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இவை பரிணாமம் அடைந்துக்கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லையே, ஏன்?
பரிணாமவியலாளர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளான இவை தொடர்கின்றன.
இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகள் குறித்து என்ன நினைக்கின்றார்கள்?
"We were very surprised by our results -- we've been convinced for so long that these fossils represented the embryos of the earliest animals -- much of what has been written about the fossils for the last ten years is flat wrong. Our colleagues are not going to like the result" - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
எங்கள் ஆய்வின் முடிவுகள் மிகுந்த ஆச்சர்யத்தை தருகின்றன. இந்த படிமங்களை 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று மிக நீண்ட காலமாக நாங்கள் நம்பியிருந்தோம். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த படிமங்களை பற்றி எழுதியவை முற்றிலுமாக தவறு என்று தற்போது தெரிய வருகின்றது. எங்கள் சக ஆய்வாளர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.
ஆம், நிச்சயமாக உங்கள் நண்பர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை. ஆனால், இது என்ன இன்று நேற்றா நடக்கின்றது? அடிப்படை இல்லாத யூகத்தை வைப்பதும், அது தவறென்று தெரிந்த பிறகு வியப்பு, அதிர்ச்சி போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும் பரிணாமவியலாளர்களுக்கு புதிதா என்ன?
எல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள்.
அதுசரி, இவை விலங்கோ அல்லது விலங்குகளின் கருக்களோ கிடையாது. வேறு என்ன தான் இவை?
அதிநுண்ணுயிரியாக (Encysting Protists) காட்சி தருகின்றனவாம் இவை*. இவற்றின் பிரதி எடுக்கும் தன்மை விலங்குகளில் இருப்பது போல இருப்பதால் இதுவும் பரிமாணத்திற்கு ஆதாரம் தானாம்.
அப்படியா? ரொம்ப சந்தோஷம் :) அடுத்த கேம் ஸ்டார்ட்...என்ஜாய்
அப்படியா? ரொம்ப சந்தோஷம் :) அடுத்த கேம் ஸ்டார்ட்...என்ஜாய்
இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்..
*மொழிபெயர்க்க கடினமாக இருந்த சொற்றொடர். தவறாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்று கருதுபவர்கள் சரியான தமிழாக்கத்தை பின்னூட்டத்தில் தரவும்.
Tamil translation of technical terms helped by:
1. dictionary.tamilcube.com.
References:
2. Fossilized Nuclei and Germination Structures Identify Ediacaran “Animal Embryos” as Encysting Protists - Science, 23 December 2011, Vol. 334, no. 6063 pp. 1696-1699, DOI: 10.1126/science.1209537. link
3. Terminal Developments in Ediacaran Embryology - Science, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125. link
4. Geologic Time Scale: The Phanerozoic Eon - About.com. link
5. Macroscopic algae from the Ediacaran Doushantuo Formation in Northeast Guizhou, South China - Mendeley. link
6. Ediacara biota - wikipedia. link
7. Protist - Biology online. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDelete//இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலகட்டத்திற்கு சென்று பார்த்தால் விலங்குகளின் சுவடே அங்கு இல்லை. A complete blank...blank...blank. //
மனுஷன் தான் விலங்குகளாஆனான்னு ((மனுஷந்தான் குரங்கு இப்பிடி )) கடைசியில சொல்லாம விட்டாங்களே... அது வரை சந்தோஷமே..!!
interesting infos as usual,
ReplyDeletenever expect some will accept, they are really hiding themselves from accepting truth
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteமீண்டும் ஒரு ஆஷிக் பதிவு. டார்வீனிஸ்ட்களின் நம்பிக்கை தகறும் போதெல்லாம் மனம் தளராமல் மீண்டும் ஒரு புலி வருது கதை அவிழ்த்து விடுகிறார்கள்
சகோதரர் ஜெய்லானி,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
:) :)ஏன் அவசரப்படுறீங்க..வெயிட் பண்ணுங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரர் ஜமால்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ஊக்கத்திற்கு நன்றி..
//never expect some will accept, they are really hiding themselves from accepting truth//
இம்ம்...சொல்ல வேண்டிய மட்டுமே நம் கடமை. செய்துவிடுவோம். வழி காட்ட வேண்டியது இறைவன் மட்டுமே..
கருத்துக்கு நன்றி..
வ அலைக்கும் சலாம் சகோதரர் ஜாஹிர்,
ReplyDelete//டார்வீனிஸ்ட்களின் நம்பிக்கை தகறும் போதெல்லாம் மனம் தளராமல் மீண்டும் ஒரு புலி வருது கதை அவிழ்த்து விடுகிறார்கள்//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வஸ்ஸலாம்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.ஆஷிக்,
மீண்டும் பெர்த் பிட்சில் பாடிலைன் பவுன்சிங் அட்டாக்..!
பேட்ஸ்மன் மிஸ்டர் பரிணாமம், இம்முறையும் மூக்குடைந்து ரிடைர்ட் ஹர்ட்..!
காயம் ஆரிய பின்னர் மீண்டும் வந்தால்... அடுத்த அட்டாக்... அப்புறம்...! நைஸ் போஸ்ட்.
இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து இந்த அறிவியலையும் விஞ்ஞானிகளையும் காத்து இரட்சிப்பாயாக..! ---ஆமீன்.
இறை மறுப்புக்கு ஆதாரகமாக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு தத்துவம்தான் டார்வின் அவர்களின் கொள்கை, (இறைவனின் இருப்பு உட்பட)எதையுமே கண்ணால் கண்டால் மட்டுமே நம்புவோம் என்போர், டார்வின் ஐயாவின் கொள்கையில் மட்டும் அதைக் கடை பிடிப்பதில்லை,
ReplyDeleteஒரு குரங்கு மனிதானாக மாறினால்தான் நான் டார்வின் கொள்கையை நம்புவேன் என்று ஏனோ அவர்கள் அடம்பிடிப்பதில்லை. அப்படிக் கூறுவதுதானே நியாயம். அதில் மட்டும் தங்கள் பிடிவாதத்தை நைசாக கழட்டி வைத்து விடுகின்றனர்.
பரிணாமவியல் தோற்று பல காலங்கள் ஆகிவிட்டது என்பது இப்பதிவின் மூலம் மீண்டும் நிருபனமாகி இருக்கிறது.
பதிவுக்கு வாழ்த்துக்கள்.
//இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து இந்த அறிவியலையும் விஞ்ஞானிகளையும் காத்து இரட்சிப்பாயாக..! ---ஆமீன். //
ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீபீபீபீட்டு
Assalamu alikum bro
ReplyDeletemeendum oru arumaiyana pathivu!
Settha pinathuku(parinamam) ettanai time postmartom pannuvinga :) :) :)
masha allah
kalakunga bro!
ஸலாம்
ReplyDeleteஇறைவா..!, கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...
நல்ல பதிவு ... படித்துவிட்டேன்...
ஜசகல்லாஹ் ...
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅருமையான கட்டுரை நேர்தியான மொழிபெயர்ப்பு. செய்தி நிறைய மக்களை சென்றடைய இறைவனை பிராத்திக்கிறேன்
சலாம் சகோ ஆசிக் அஹமத்,
ReplyDeleteஅறிவுப் பூர்வமான பதிவு. நிறையபேர் 18 +, 21 +, 31 +, சினிமா குப்பைகளை எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது, இது போன்ற பதிவுகள் தமிழ் இணைய உலகத்தின் எதிர்காலம் குறித்த
நம்பிகையை தருகின்றது. தொடரட்டும் உங்கள் பணி.
இங்கிலீஷ் ஸ்மெல் ல் மகுடம் சூட்ட எல்லா தகுதிகளும் இதற்க்கு இருக்கிறது. அதனால் நீங்கள் மகுடத்தில் இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சிலருக்கு இது பிடிக்காது, என்ன செய்வது?????? ஒன்றும் செய்ய முடியாது. இந்த பதிவு மகுடத்தில் இருந்து இறங்கியவுடன் அடுத்த பதிவு போட்டு நீங்களே மகுடம் சூட எனது வாழ்த்துக்கள்.
வாருங்கள் ஆக்கப் பூர்வமான பதிவுகளாக எழுதி மகுடம் சூடி மகிழ்வோம்.
எதிர் தரப்பு சும்மா சும்மா வந்து தும்மல் போடுவாங்களே. என்ன இன்னக்கி கடை காலியா இருக்கு???? பதிவ பார்த்தவுடன் தும்மல் நின்னு போச்சா இல்ல வேறு ஏதேனும் காரணமா????
ReplyDeleteரெட் Flag எதிர்பதிவு போடுவாரா?????
இந்த பதிவுக்கு நீங்கள் செலவு செய்திருக்கும் உழைப்பு வியக்க வைக்கின்றது....!!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!!!
//இந்த பதிவுக்கு நீங்கள் செலவு செய்திருக்கும் உழைப்பு வியக்க வைக்கின்றது....!!!!//
ReplyDeleteவழி மொழிகிறேன்.
assalaamu alaikkum!
ReplyDeletenalla visayam therinthu kolla
naadiya allaavukke ellaa pukazhum!
nalla pathivu!
சலாம் சகோ முஹம்மது ஆசிக்,
ReplyDelete/********** மீண்டும் பெர்த் பிட்சில் பாடிலைன் பவுன்சிங் அட்டாக்..!
பேட்ஸ்மன் மிஸ்டர் பரிணாமம், இம்முறையும் மூக்குடைந்து ரிடைர்ட் ஹர்ட்..!
காயம் ஆரிய பின்னர் மீண்டும் வந்தால்... அடுத்த அட்டாக்... அப்புறம்...! நைஸ் போஸ்ட்.
இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து இந்த அறிவியலையும் விஞ்ஞானிகளையும் காத்து இரட்சிப்பாயாக..! ---ஆமீன். ********/
நன்றாகச் சொன்னீர்கள். நீங்களும் பௌன்சரா போடறீங்க???? நம்மாளுங்க புல் டாஸுக்கே போல்ட் ஆவாங்க சகோ.
விஞ்ஞானம், விஞ்ஞானி இவங்களோட சேர்த்து அப்பாவி மக்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும்... கருப்பு சட்டை போட்ட, பெரியாருக்கு சிலை வைத்த, பெரியார் பிறந்த நாள் கொண்டாடுகிற மற்றும் இத்தியாதி இத்தியாதி பகுத்து அறியத் தெரியாத வாதிகளிடம் இருந்து.
டிஸ்கி : நான் பெரியாரை குறை சொல்ல வில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
சலாம் சகோ...
ReplyDeleteபல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன்...நன்றி....
thanks bro.....allah advance u in knowledge
ReplyDeleteசகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
//பேட்ஸ்மன் மிஸ்டர் பரிணாமம், இம்முறையும் மூக்குடைந்து ரிடைர்ட் ஹர்ட்..! //
ரிடையர்ட் ஹர்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது. முழுவதுமாக ரிடையர் ஆகும்வரை எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்..
//இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து இந்த அறிவியலையும் விஞ்ஞானிகளையும் காத்து இரட்சிப்பாயாக..!//
ஆமீன்...ஆமீன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சகோதரர் Syed Ibramsha,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி..
சகோதரர் s.jaffer.khan,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
//Settha pinathuku(parinamam) ettanai time postmartom pannuvinga :) :) :)//
நீங்க செத்துட்டதா சொல்றீங்க. அது கல்லறைக்குள்ள சும்மா படுத்துகிடக்கறதா நான் நினைக்கின்றேன். அது எழுந்துவிட கூடாதுன்னான்னு தான் திரும்ப தான் அடிக்குரேன். :)
தங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மிக்க பிரதர்...
கணிப்பொறி வாங்கி நீங்களூம் வந்து கலக்க என்னுடைய துவாக்கள்.
சகோதரர் சிந்தனை,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
தங்களின் துவாவுக்கு மிக்க நன்றி...
சகோதரர் ரப்பானி,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
தங்களின் ஊக்கத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி..
சகோதரர் சிராஜ்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//அறிவுப் பூர்வமான பதிவு. நிறையபேர் 18 +, 21 +, 31 +, சினிமா குப்பைகளை எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது, இது போன்ற பதிவுகள் தமிழ் இணைய உலகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிகையை தருகின்றது.//
அல்ஹம்துலில்லாஹ்...
//இங்கிலீஷ் ஸ்மெல் ல் மகுடம் சூட்ட எல்லா தகுதிகளும் இதற்க்கு இருக்கிறது. அதனால் நீங்கள் மகுடத்தில் இருப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சிலருக்கு இது பிடிக்காது, என்ன செய்வது?????? ஒன்றும் செய்ய முடியாது. இந்த பதிவு மகுடத்தில் இருந்து இறங்கியவுடன் அடுத்த பதிவு போட்டு நீங்களே மகுடம் சூட எனது வாழ்த்துக்கள்.//
:) :)
//வாருங்கள் ஆக்கப் பூர்வமான பதிவுகளாக எழுதி//
இன்ஷா அல்லாஹ்...
தொடர்ச்சி...
ReplyDelete///ரெட் Flag எதிர்பதிவு போடுவாரா?????//
என்னுடைய பதிவுகளுக்கு நேரம் இருந்தால் தனி பதிவுகளாக பதில் போடுவதாக ஒரு பின்னூட்டத்தில் அவர் சொன்னதாக நியாபகம்...இன்ஷா அல்லாஹ் செய்வார் என்று நினைக்கின்றேன்.
சகோ.அஹ்மத்,
ReplyDelete//More recently it was discovered that the history of life on earth goes back at least 3,450 million years:[9] Rocks of that age at Warrawoona in Australia contain fossils of stromatolites, stubby pillars that are formed by colonies of Microorganisms. //
இதை பார்க்கலை போல , எடியக்கராவுக்கு முன்னரே நுண்ணுயிர்களின் தொல்லுயிர் படிமம் இருக்கு. என்னமோ அதுக்கு முன்னர் போனா எதுவும் இல்லைனு நீங்களாவே சொல்லிக்கிறிங்க.
மேலும் சிக்கலான விலங்கு இல்லை, நீங்களா விலங்குனு போட்டு ஏதோ சிங்கம் ,புலி இருந்து இருக்கும் போல ஆக்குறிங்க.
கற்படிமங்கள் தொடர்ச்சியா இல்லாமல்/ கிடைக்காமல் போக பல காரணங்கள் இருக்கு. மனிதன், விலங்கு இயற்கை என எல்லாம் விளையாடி அழித்து இருக்கலாம். எனவே தொடர்ச்சியாக இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்.என்னமோ ஆள்ப்போட்டு பாதுகாத்து வைத்தது போல ஏன் இல்லை கேட்கிறிங்க.
இப்போ வீடு கட்ட பள்ளம் வெட்டும் போது ஒரு கல்படிமம் கிடைச்சா அது என்னனு நமக்கு தெரியுமா ஏதோ காய்ந்த சாணினு தூக்கிப்போடுவோம்.
துண்டு துண்டா படிச்சுட்டு அதை புரிஞ்ச்சுக்காம ஆஹா கண்டுப்பிடித்தேன்னு பதிவு போட்டு நீங்க்ளே கும்மி அடிச்சு கொண்டாட வேண்டியது தான் :-))
ஆதாம், ஏவாள் கதை தான் உண்மைனு சொல்ல என்ன ஆதாரம் இருக்கு?
ஆதாம் ஏவாலுக்கு தொப்புள் இருக்கா கேட்டால் கூட உங்களுக்கு பதில் தெரியாது :-))
அவங்க வாரிசுகளுக்கு யார் கூட திருமணம் நடந்து இருக்கும்? அதுவும் தெரியாது :-))
அப்புறம் எப்படி இத்தனை மனிதர்கள் வந்தார்கள்?
To know aahdama ane eval and origin of human, please read The Quran!
DeletePlease read The Quran.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..வபர..
ReplyDeleteஇதன் பின்னரும் பரிணாமத்தை நம்பும் ஒரு கூட்டம் மனித இனத்தில் இருந்தால் அதனை பரிணாமத்திற்கு எதிரான சான்றாக தான் கொள்ள வேண்டும். ஏனெனில், பரிணாம கொள்கை படி காலப் போக்கில் ஒரு சிறந்த இனம் தான் தோன்ற வேண்டுமே தவிர அறிவியலை விளங்கி / ஏற்றுக்கொள்ளாத மேலும் படிப்படியாக வீழ்ச்சி அடையும் ஒரு இனம் எப்படி தோன்ற முடியும்.
இதைப் படிக்கும் போது, எந்தவித அடிப்படையுமே இல்லாத இந்த பரிணாம மதத்தை கட்டியெழுப்பி தம்மைத் தாமே அறிவாளிகள் என்று பெயர் சூட்டிக் கொண்ட இவர்களை நினைக்கையில் ஆச்சர்யமாக உள்ளது
//எல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள்//
ஹா..ஹா..நல்ல தத்துவம்
முற்றிலும் எனக்கு புதிதான இவ்விடயத்தை வகிர்ந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு கைர்.
அல்லாஹ் உங்களிற்கும், எனக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!
சகோதரர் வவ்வால்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தலைப்பு எதை பத்தியோ அதை பற்றி மட்டுமே பேசுவது திசை திருப்பலை தடுக்கும். இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கான பதில்களுக்கு இறைவன் கிருபையால் எங்களுக்கு பஞ்சம் வந்ததே இல்லை. இந்த பதிவு பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை பற்றியது, அதை பற்றி இங்கு உரையாடுவது சால சிறந்தது. எத்தனையோ இஸ்லாம் குறித்த பதிவுகள் எழுதி இருக்கின்றேன். அங்கு சென்று இஸ்லாம் குறித்த கேள்விகளை வையுங்கள்.
சரி செட்டில்மென்டை ஆரம்பிப்போமா?
உலகின் முதல் micro-organism எப்போது தோன்றியது என்பதா இங்கே பிரச்சனை? (இத பத்தி ஒரு பதிவு செம detail-லா (+abiogenesis பத்தியும்) போடுறேன் இன்ஷா அல்லாஹ், நிறைய தகவல் வைத்திருக்கேன்)
பதிவோட மைய கருத்தை நல்லா உள்வாங்கிக்குங்க. கேம்ப்ரியன் காலத்தில் விலங்குகள் முதல் முதலாக படிமங்களில் காணப்படுகின்றன. அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லை. இதை சொல்லிவிட்டு, அவர்கள் 'விலங்குகளின் கருக்கள்' என்று இதுநாள்வரை எண்ணிக்கொண்டிருந்தவை தவறு என்று நிரூபிக்கப்பட்டிருப்பதையும் சயின்ஸ் ஆய்விதலின் மேற்கோளோடு காட்டிருகின்ரேன்.
இப்போ, இந்த பதிவை நீங்க எப்படித்தெரியுமா மறுக்கனும்?
"நீங்க கேம்ப்ரியன் காலத்திற்கு முன்னால இந்த விலங்குகள் பரிணமித்து கொண்டிருக்கவில்லை என்று சொல்றீங்க. இதோ பாருங்க, இந்த விலங்கு பரிணமித்து கொண்டிருந்த ஆதாரம்" அப்படின்னு எடுத்து போடணும். அதிகம் வேணாம் ஒரே ஒரு கேம்ப்ரியன் கால விலங்கோட பரிணமித்து கொண்டிருந்த ஆதாரங்கள கொடுங்க போதும்.
படிமம் இல்லாததற்கு நீங்க எதையாவது காரணம் சொல்லுவீங்கன்னு தான் பதிவுல தெளிவா கேட்டேன். நுண்ணுயிரியோட படிமம் எல்லாம் கிடைக்கும் போது ஒரே ஒரு விலங்கு பரிணாமம் அடைந்து கொண்டிருந்த படிமம் கூட கிடைக்கவில்லையா என்று..
அப்புறம் சகோதரர், சயின்ஸ் ஆய்விதல்ல வந்த இந்த கருத்து தான் பதிவின் சாராம்சம்,
//"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" //
புல்ஸ்டாப்.... நான் சொல்லல சயின்ஸ் ஆய்விதழ் தான் சொல்லுது, ஒன்னுமே இல்லேன்னு.
முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோ.அஹமத்,
ReplyDelete// இந்த பதிவு பரிணாமத்தில் உள்ள ஓட்டைகளை பற்றியது,//
பரிணாமத்தில் ஓட்டை இருக்குனு வச்சுப்போம், அதை அடைக்க உங்களுக்கு வழி தெரியுமா?
பின் ஏன் இந்தப்பதிவு.... இதை வைத்து எதை நிறுவ திட்டம்? எனவே தான் உங்க மூலத்திற்கே ஆப்பு வைக்கும் கேள்வி கேட்டேன். உடனே நீங்கள் வழக்கம் போல பதுங்கறிங்க?
இங்கே ஆகா,ஓகோ னு கமெண்ட் போட்டவங்க எல்லாம் இதுக்கு முந்தி பரிணாமத்த ஏற்றுக்கொண்டவர்களா? இல்லை நீங்க தான் ஏற்றுக்கொண்டவரா? அப்புறம் எதுக்கு இந்தப்பதிவு?
அரை குறையா எடுத்துப்போட்டு ஆதாம்,ஏவால் கதை சரினு காட்டத்தானே. அதானே நோக்கம். அதனால் தான் உங்க நோக்கத்தின் அடிப்படைக்கு ஆப்பு வைக்கும் கேள்விக்கேட்டேன், உடனே திசை திருப்பல் சொல்லி தப்பிப்பது உங்கள் இயலாமையைக்காட்டுது.
// கேம்ப்ரியன் காலத்தில் விலங்குகள் முதல் முதலாக படிமங்களில் காணப்படுகின்றன. //
முதலில் என்ன விலங்கு இருந்துச்சு சொல்லுங்க பார்ப்போம். அப்போது இருந்ததும் எளிய உயிர்களே? அதுவும் நீரில் மீன் போல. தரையில் என்ன இருந்தது சொல்லுங்க?
அப்புறம் நிங்க போட்ட சுட்டிகள் சில உறுப்பினர்களுக்கு மட்டும்னு இருக்கு அப்போ எப்படி அதை பொதுவா எல்லாரும் படிப்பாங்க. அப்ஸ்ட்ராக்ட் மட்டும் தான் நீங்க படிச்சிங்களா :-))
// பதிவுல தெளிவா கேட்டேன். நுண்ணுயிரியோட படிமம் எல்லாம் கிடைக்கும் போது ஒரே ஒரு விலங்கு பரிணாமம் அடைந்து கொண்டிருந்த படிமம் கூட கிடைக்கவில்லையா என்று..//
நுண்ணுயிர் காலத்திற்கு அப்புறம் தான் விலங்குகள் வர முடியும், அப்படி இருக்கும் போது,எப்படி அதற்கு முன்னர் விலங்கு படிமம் வரும்?
முதலில் படிமம் எப்படி உருவாகும்னு தெரியுமா? ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்ப்பட்டு புதையுண்டால் தான். இப்போ நாம் வாழும் காலத்தில் நம்முடைய படிமங்கள் இருக்கா? இன்னும் 10000 ஆண்டுகளுக்கு இப்போதைய மனித படிமம் உருவாகமலே அழிந்து , மீண்டும் ஒரு உயிரினம் மனிதன் போல உருவாகி ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும். ஒன்றும் கிடைக்காது.அப்போ மனித குலமே இல்லை, பிலாக் எல்லாம் போடவில்லைனு அவங்க நினைச்சுக்க மாட்டாங்களா உங்களைப்போல :-))
//புல்ஸ்டாப்.... நான் சொல்லல சயின்ஸ் ஆய்விதழ் தான் சொல்லுது, ஒன்னுமே இல்லேன்னு.
முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை. //
அப்போ சயினஸ் ஆய்விதழில் ஆதாம் ஏவாள் தான் மனித குலத்தின் முன்னோடி, இரண்டு ஆதிமனிதர்களீல் இருந்து தான் எல்லா மனிதர்களூம் தோன்றினார்கள் எனப்போட்டு இருக்கா?
அப்படி போடாமல் ஏன் நீங்களும், உங்களைப்போன்ற்வர்களும் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்.சிலப்பதிவில் என்னிடம் பேசும் போதும் சிலர் ஆதாம்,ஏவாள் வழி வந்தவர்கள் நாம்னு சொல்லி இருக்காங்க.
/* முடிஞ்சா அடுத்த தடவ வரும்போது நான் கேட்ட, சயின்ஸ் ஆய்விதல்ல சொல்லிருக்கின்ர கருத்துக்கு ஏற்றவாறு ஆதாரத்த கொண்டு வாங்க. பேசுவோம். அப்படி இல்லேன்னா இதில் வாதிக்க ஒன்றுமில்லை. */
ReplyDeleteநீங்க தெளிவாத்தான் இருக்கீங்க ப்ப்பப்ப்ப்ரதர்..... பதிவுலக அனுபவம் பேசுதுன்னு நினைக்கிறேன். நானா இருந்தா வெளங்காம ஆதாம் ஏவாளுக்கு பதில் சொல்லிக்கிட்டு திரிஞ்சிருப்பேன்.
சகோதரர் வவ்வால்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
நான் முன்னர் கேட்ட கேள்விக்கான பதிலுக்காக காத்திருக்கின்றேன்...பக்கம் பக்கமாக எழுதுவதை தவிர்த்து, கேட்ட ஆதாரங்களை கொடுத்தால் விசயம் முடிந்து விடும்.
இன்னும் தெளிவாக சொல்கின்றேன்.
micro-organisms -> xxxx -> cambrian animals.
இது தான் டார்வின் கோட்பாட்டின் புரிதல். இதில் xxxx என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள். படிமங்களில் பிரச்சனை இருக்கின்றது, அதனால் கிடைக்கவில்லை என்றால் ஆளை விடுங்கள். கிடைத்த பிறகு வாருங்கள். நானும் காத்திருக்கின்றேன். அதுவரை, தற்போதைய அறிவியல் புரிதலின் படி, ஆரம்ப கால உயிரினங்கள் படிப்படியாக கேம்ப்ரியன் உயிரினங்களாக மாறிய தகவல் இல்லை என்பது நிலைத்திருக்கும்..
ஆதாரம் இருந்தா வாருங்கள். இல்லையேல் ஆளை விடுங்கள். மறுபடியும் நீங்கள் ஆதாரம் இல்லாமல் வெறுமனே பக்க பக்கமாக அடித்தால் என்னிடமிருந்து பதில் எதிர்ப்பார்க்காதீர்கள்.
நன்றி,
sago Mohamed Ashiq comments really super
ReplyDelete//'1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். //
ReplyDeleteமிகவும் தவறுதலான புரிந்துணர்வு. பரிணாம கொள்கையினை நீங்கள் எதிர்த்துதான் இறைவனை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் எதிர்க்க வேண்டும் என திட்டமிட்டு விட்டால் நீங்கள் எழுதிய விசயங்கள் எல்லாம் எளிதாக மறுக்கப்படும்.
பூமியில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன, இத்தனை தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்ததே பெரிய விசயம்.
ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்த இயலாது. நான் வாழும் காலங்களில் எந்த ஒரு பரிணாமத்தையும் பார்க்க போவதில்லை நான். அதே போன்று எந்த ஒரு இறை தூதரையோ, இறைவனையோ பார்க்கப் போவதில்லை நான். இருப்பினும் இறந்த கால விசயங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராதா கிருஷ்ணன்,
ReplyDelete//மிகவும் தவறுதலான புரிந்துணர்வு//
டார்வினின் gradualism கோட்பாடு என்ன சொல்கின்றதோ அதனையே சொன்னேன். தாங்கள் நான் கொடுத்துள்ள அனைத்து சுட்டிகளையும் பார்த்த்து விட்டு என்னுடைய புரிதல் எதனால் தவறு என்று விளக்கினால் அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கின்றேன்.
நன்றி,
நீங்கள் எழுதியவைகளை நிச்சயம் படிக்கின்றேன்.
ReplyDeleteஅவர் தவறாக சொல்லிவிட்டார். அதை நாம் புரிந்து கொள்ளும்போது தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதைத்தான் குறிப்பிட்டேன் சகோதரரே.
சகோதரர் ராதா கிருஷ்ணன்,
ReplyDeleteசலாம்..
சூப்பரா சொன்னீங்க..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்..
சகோதரி ashfa,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
//அல்லாஹ் உங்களிற்கும், எனக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக!//
ஆமீன்...ஆமீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Brother Riyaz,
ReplyDeleteWa alaikum salaam,
Thank you so much for ur Appreciation and duads. All praise to Allah (swt).
Wassalam,
Your brother,
Aashiq Ahamed A
அண்ணன் எதிர்குரல் க்கு வணக்கம்... உங்கள் எதிர்குரல்க்கு எதிர்குரல் குடுக்க வருவேன் என்று கூறினேன்... அதலால் வந்து இருக்கிறேன்....
ReplyDeleteஉங்கள் கூற்று படி
micro-organisms -> xxxx -> cambrian animals. இந்த xxxx என்ற ஒன்று இல்லாமல் அல்லது இல்லவே இல்லை என்றாலும் சரி, டார்வின் சொல்லவது தவறு என்ற வைத்து கொள்ளுவோம்....
இதனால் நீங்கள் சொல்ல விழைவது என்ன???
அப்படி ஒன்று அங்கே இல்லை என்றால்??? அங்கு இருந்தது என்ன??? அதற்கு என்ன ஆதாரம் ????
உண்மையுள் நீங்கள் சொல்ல நினைப்பதை ஆதாரம் கொண்டு விளக்கினாள்.... நான் சந்தோசபடுவேன்...
அந்த விளக்கத்தின் முலம டார்வின் தியரி ஐ உண்டு இல்லை என்று அக்கி... அதன் முலம தங்களுக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும் என்னக்கு சந்தோசமே....