நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்
APPENDIX - இந்த உடல் உறுப்பு குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம் உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது.
சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ் குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ் உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக கருதப்பட்டு வந்தது.
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.
இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center) சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான் அது.
சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு விடுகின்றனர்.
பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்.
எப்படி சோதிப்பது?
யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது.
வேறு வழி?....
ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும். பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை ரீதியாக கடினமான ஒன்றே.
இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு விட்டதாக தெரிய வந்தது.
எப்படி?
C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254 நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள் என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence) ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை.
பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின் குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும்.
கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன.
ஆஹா...
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும்.
ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன. அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம், அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே தெளிவான பார்வை கிடைக்கும்.
அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன.
சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும். துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். இப்போது என்ன செய்வது?
Fine...நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை தீவிரமாக கன்சல்ட் செய்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை அதனை அகற்றாமல் மாற்று வழியில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள். சில ஆய்வுகள், ஆண்டிபயாடிக் மூலமாக வீக்கத்தை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன.
பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லையா? வீக்கத்தை குறைக்கும் வேறு வழிகள் கண்டுபிடிக்கப்படும் வரை அதனை அகற்றுவதை தவிர மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை.
இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
Pictures taken from:
1. Scientific American Blog.
2. Physorg.com
Translation of technical terms helped by:
1. dictionary.tamilcube.com
My sincere thanks to:
1. Scientific American
References:
1. Your Appendix Could Save Your Life - Scientific American blog, January 2, 2012. link
2. Duke University Medical Center highlights importance of the appendix in human body - News Medical, August 21, 2009. link
3. Scientists may have found appendix’s purpose - AP news service report. 5th Oct, 2007. link
4. Scientists: Appendix Protects Good Germs - Physorg, 6th Oct 2007. link
5. Vermiform appendix - Wikipedia. link
2. Duke University Medical Center highlights importance of the appendix in human body - News Medical, August 21, 2009. link
3. Scientists may have found appendix’s purpose - AP news service report. 5th Oct, 2007. link
4. Scientists: Appendix Protects Good Germs - Physorg, 6th Oct 2007. link
5. Vermiform appendix - Wikipedia. link
6. Appendicitis - PubMed health, last reviewed 22nd July 2011. link
7. What organ does a rat not have that humans have? - answers.com. link
8. Gut - Biology Online. link
7. What organ does a rat not have that humans have? - answers.com. link
8. Gut - Biology Online. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ....
ReplyDeleteகடுமயான வலிவேதனையை தரக்கூடிய இந்த நோய் இப்போது நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம் என சொல்கிறார்கள் மருத்துவர்கள்...பகிர்வுக்கு நன்றி...
nice mr aasik
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
ReplyDeleteபயனுள்ள தகவல்.!தெரியாத பல விவரங்களை அறிய முடிந்தது.
பகிர்வுக்கு நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஅறிவியல் பற்றி ஆர்வத்தை எப்பொழுதும் ஏற்படுத்துகின்றன உங்கள் இடுக்கைகள், விளங்காவிடினும் ...
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteடார்வினுக்கு அடுத்த ஒரு அடி காத்திருக்கிறதா? பாருங்கள் பரிணாம ஆதரவாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வரப் போகிறார்கள். பதில்களை தயார் பண்ணி வைக்கவும். :-)
சிறந்த பதிவை தந்தமைக்கு நன்றி சகோ.
வ அலைக்கும் சலாம் சகோதரர் NKS ஹாஜா மைதீன்,
ReplyDeleteமருத்துவரை கலந்தாலோசித்து அதற்கேற்றவாறு செயல்படுவது சால சிறந்தது..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்..
சகோதரர் அனானி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்
சகோதரி ஆயிஷா பேகம்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
அல்ஹம்துலில்லாஹ்.
வருகைக்கு நன்றி சகோதரி..
சகோதரர் ஜமால்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு ஜசாக்கல்லாஹ்.
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
ஏங்க இப்படி. இதில் அவர்கள் மறுப்பதற்கும் ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன். அப்பெண்டிக்ஸ் உறுப்பு உபயோகமானது என்றால் சந்தோசம் தான் படுவார்கள்.
வருகைக்கு நன்றி...
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹ்..!
ReplyDeleteஉடலில் பயனற்ற உறுப்புக்கள் என்ற வார்த்தையில் எனக்கும் எப்போதும் உடன்பாடில்லை..இப்போது இந்தப் பதிவும் நம் நம்பிக்கைக்கு மகிழ்ச்சியளிக்கிறது..அல்ஹம்துலில்லாஹ்..
பார்த்துப்பார்த்து கருவிகளை உருவாக்குபவர்கள் கூட தேவையின்றி எதனையும் சேர்க்காமல் அல்லது தேவையை விட குறைவாகவே சேர்த்துக்கொள்ளும் போது இறைவனின் படைப்பில் மட்டும் தேவையில்லை என்று ஒதுக்கிட அல்லது ஒத்துக்கிட என்ன தகுதி பெற்றுவிட்டார்கள்!
சுபஹானல்லாஹ்!!! அல்லாஹ் (இவர்கள் கற்பிப்பதை விட்டும்) தூயவன்.
//இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...//ஆமீன்.
பயனுள்ள தகவல்.!தெரியாத பல விவரங்களை அறிய முடிந்தது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.by
Kabeer
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteநல்லா தெளிவாக எழுதி இருக்குறீங்க
என்ன கொஞ்சம் லேட்........
மூன்று மாதம் முன் என் மகளுக்கு ஆபரேசன் பண்ணியாச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...வபர..
ReplyDeleteமாஷா அல்லாஹ்! நல்ல பதிவு. இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வரும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.
//இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது// appendix மட்டுமல்ல, இவர்கள் பதாங்க அங்கமென கூறும் எல்லாமே சிறந்த தொழிற்பாடுகளை கொண்டவை என்று ஆராய்ச்சி முடிவுகள் வரத்தான் போகிறன. இன்ஷா அல்லாஹ்!
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் கண்டுபிடிக்காவிட்டால் தொழிற்பாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறவேண்டியது தானே....ஏன் உபயோகமற்ற உறுப்பு என்று பத்வா கொடுக்க வேண்டும்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteமாஷா அல்லாஹ், இறைவன் நமக்கு வழங்கிய உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு பயனளிக்க கூடியதே! என்பதை இக்கட்டுரையில் அறிந்து கொண்டேன் நன்றி சகோதரரே!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteஅருமையான பயனுள்ள பதிவு.
அப்பெண்டிக்ஸ் தாங்க முடியாத வலி வரும். வலி அதிகமாகி வெடித்து விட்டால் உயிர்க்கு ஆபத்தாம். அந்த நிர்பந்தத்தில் நாம் பண்ணிதானே ஆகணும். என் பையனுக்கு ஒரு வருடமாக வயிறு வலி இருந்தது. ஆப்ரேஷன் பண்ணி, இறைவன் கிருபையால் இப்ப அந்த வலி இல்லை.
//இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...// ஆமீன்...
விஞ்ஞான வளர்ச்சியின் மற்றுமொரு புதிய விடயத்தை அறிந்துகொண்டேன். நன்றி
ReplyDeletenalla muyarchi ithu!
ReplyDeleteசகோதரி zalha,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்..
சரியா சொன்னீங்க. ஒரு யூகத்தை வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு ஆதாரத்தை தேடினால் இப்படித்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரர் கபீர்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்..
கருத்துக்கு நன்றி சகோதரர்..
சகோதரர் ஜாகிர்,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
//மூன்று மாதம் முன் என் மகளுக்கு ஆபரேசன் பண்ணியாச்சி//
:( மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை செய்வதே சரியாக இருக்கும்.
வருகைக்கு நன்றி...
சகோதரி ashfa,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபர காத்துஹு..
//என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் கண்டுபிடிக்காவிட்டால் தொழிற்பாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறவேண்டியது தானே.//
பழைய யூகங்களையே நம்பிக்கொண்டிருக்காமல் இனி தங்களுடைய எண்ணங்களை இம்மாதிரியான திசையில் திருப்புவார்கள் என்று நம்புவோம். இன்ஷா அல்லாஹ்.
கருத்துக்கு நன்றி..
சகோதரர் தமீம் அன்சாரி,
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி...
வருகைக்கு நன்றி...
சகோதரி ஆயிஷா,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்
//வலி அதிகமாகி வெடித்து விட்டால் உயிர்க்கு ஆபத்தாம். அந்த நிர்பந்தத்தில் நாம் பண்ணிதானே ஆகணும்.//
ஆம். வேறு வழி இல்லையென்றால் அதனை எடுப்பது தான் சரியான தீர்வு.
//என் பையனுக்கு ஒரு வருடமாக வயிறு வலி இருந்தது. ஆப்ரேஷன் பண்ணி, இறைவன் கிருபையால் இப்ப அந்த வலி இல்லை.//
அல்ஹம்துலில்லாஹ்...
சகோதரர் அம்பலத்தார்,
ReplyDeleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..
சகோதரர் சீனி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
கருத்துக்கு நன்றி பிரதர்...
2010 டிசம்பரிலேயே இது குறித்து ஆராய்ச்சித் தகவல்கள் செய்திகளில் பார்த்ததை வைத்து நானும் appendix உள்ளிட்ட vestigial organs பயனுள்ளவையே என்று ஒரு பதிவு எழுதினேன் ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும் என்ற தலைப்பில். (இதைப் போல ரொம்ப டெக்னிக்கலாகவெல்லாம் இருக்காது)
ReplyDelete2009-ல் என் மகனுக்கும் அப்பெண்டிக்ஸ் வலி வந்து, ஆபரேஷன் செய்தும் நீக்கமுடியவில்லை. ”Appendicular mass" என்ற நிலைக்குச் சென்று விட்டதால் அதை அகற்ற முடியவில்லை. அப்போது வருத்தமாக இருந்தது. ஆனால், இச்செய்தியைப் படித்ததும், இறைவன் காப்பாற்றினான் என்று மகிழ்ந்தேன்.
"ரப்பீ மா கலக்த ஹாதா பாதிலா, ஃபகினா அதாபன்னார்" (ரப்பே,இதை நீ வீணாகப் படைக்கவில்லை, எனவே என்னை நரக வேதனையை விட்டும் காப்பாற்றுவாயாக) என்ற துஆவை இது போன்ற சமயங்களில் ஓதுவது
ReplyDeleteஇறை திருப்திக்குக் காரணமாகும்.
JazaakALLAHu brother Ashiq.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. appendix பற்றி சில அறியாத விசயத்தையும் அறிந்து கொண்டேன்,
appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.
http://www.youtube.com/watch?v=yEWO7wrFXUU&feature=endscreen&NR=1
சகோதரி ஹுசைன்னம்மா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்...
அட என்னுடைய கமெண்ட் கூட அங்கே இருக்கு :)
//ஆனால், இச்செய்தியைப் படித்ததும், இறைவன் காப்பாற்றினான் என்று மகிழ்ந்தேன்//
அல்ஹம்துலில்லாஹ். இறைவனே எல்லாம் அறிந்தவன்.
சகோதரர் அரபுத்தமிழன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ஜசாக்கல்லாஹ் பிரதர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சகோதரர் கார்பன் கூட்டாளி,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்..
மாஷா அல்லாஹ்...
//appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.//
இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோவை பார்க்கின்றேன்...
கருத்துக்கு நன்றி சகோதரர்...
//appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=yEWO7wrFXUU&feature=endscreen&NR=1 //
ரொம்பவே ஓவர் ,
started answering -- http://walkingdoctorcom.blogspot.in/2012/02/blog-post_19.html
you tube இல் அந்த ஆள் சொல்வதை கேட்டேன் , அவன் மட்டும் கையில் கிடைச்சிருந்தா அவளவு தான் .
ReplyDeleteபித்தப்பை இல்லனா ஜீரணமே ஆகாதா ? அடப்பாவிகளா ... பித்தம் ( bile ) ஈரலினால் உற்பத்தி செய்யப்படுகிறது , அதை சேர்த்து வைக்கும் பை தான் பித்தப்பை , அது இல்லாவிட்டாலும் பித்தம் செரிக்க செய்யும் , பித்த நீர் வந்து கொண்டு இருக்கும் .குதிரை , புறா உள்ளிட்ட பல விலங்குகளுக்கு பித்தப்பை கிடையாது , நேரடியாக உணவோடு கலந்து , ஜீரணிக்க செய்யும் .
அந்த ஆள் லூசு மாதிரி எய்ட்ஸ் வரும் , கான்செர் வரும் என கதை விட்டுக்கொண்டு உள்ளான் , அதை உயிரியலை நன்கு அறிந்த கார்பன் கூட்டாளியும் வழிமொழிகிறார் .
தயவு செய்து தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பாதீர்கள் , உயிர் போக இருக்கும் சமயங்களில் சில உறுப்புகளை அறுவை செய்வது அவசியமான ஒன்று , அறுவை சிகிச்சை , உறுப்பை அறுப்பது என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் சாலிஹோதிரர் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தேரை சித்தர் போன்றவர்களால் செய்யப்பட்டது . அது ஒரு மூட பழக்கம் போல அந்த மூடன் உளறிக்கொண்டு உள்ளான் .
எந்த ஒரு உறுப்பையும் வெட்ட கூடாது என்றால் circumcision ( வேண்டாம் இது தேவையில்லாத விவாதத்திற்கு இட்டு செல்லும் ) .... நீங்கள் முடியே வெட்ட கூடாது .
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
அனைவரும் அறிய வேண்டிய தகவல் ...
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹைர். .
முக்கியமான நல்லதொரு தகவல் சகோ.
ReplyDeleteஎங்கள் குடும்பத்தாரில் சிலருக்கு இவ்வலி மிகவும் கொடுமைப்படுத்தி அல்ஹம்துலில்லாஹ் தற்போது நலமுடன் இருக்கிறர்கள்..