நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்
==========
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி (ஸல்) அவர்களைப் போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே சில மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடக்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். தாருல் உலூம் என்ற இஸ்லாமிய அமைப்பு, கொஞ்ச நாள் முன்ன 'முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்வது ஹராம்' அப்படின்னு ஒரு ஃபத்வா(1) சொன்னதாக எங்க பார்த்தாலும் செய்தி பரவி கிடந்தது. முஸ்லிம் பெண்கள் படிப்பதோ, வேலைக்கு செல்வதோ எந்த இடத்துலயும் ஹராம்(2) என்று சொல்லப்படாதபோது எப்படி இப்படி ஒரு ஃபத்வா வந்துச்சுன்னு ஒரே குழப்பம். பிறகு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்களின் கைங்கரியம் தான். சமீபமாக வந்த செய்திகளில் 'அப்படி ஒரு 'ஃபத்வாவை சொல்லவில்லை, பெண்கள் வேலை செய்யுமிடத்தில் பேண வேண்டிய ஹிஜாபை(3) பற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.
**
சரி. இப்ப முஸ்லிம் பெண்கள் வேலைக்கு செல்லலாமா? செல்லக்கூடாதா? இஸ்லாம் இதைப்பத்தி என்ன சொல்லுது?
ஒருத்தர் முஸ்லிம் என்று சொன்னால் அவர் எல்லாம் வல்ல இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராவார். ஆங்கிலத்துல சொல்லனும்னா 'டோட்டல் சப்மிஷன் டு அல்லாஹ்'. இதில் நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு செயல்களுமே இறைவணக்கம் தான். காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை, பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம செய்யக்கூடிய பல விஷயங்களை எப்படி ஒழுங்கோட செய்வதுன்னு இஸ்லாத்தில் நமக்கு கட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய இருந்து பார்க்கும்போது இது ரொம்ப பிற்போக்குத்தனமா தெரியலாம். ஆனா 1400 வருஷங்களாக இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதில் இன்றிருக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு எந்த சிரமமும் இல்லை.
அப்படி ஆண்கள், பெண்கள் என சேர்த்தியாகவும், தனித்தனியாகவும் மனிதர்களுக்கு பல கட்டுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கு.
ஒரு குடும்பம் என்றால், அதில் தாய், தகப்பனுக்கும், பிள்ளைகளுக்கும் பல கடமைகள் இருக்கு. இஸ்லாத்தில் என்னதான் மனைவி பணக்காரியாக இருந்தாலும், சம்பாதிப்பவளாக இருந்தாலும், குடும்பத்தின் பராமரிப்புக்கு சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் கணவனுக்கு மட்டுமே இருக்கு. மனைவி தான் சம்பாதிக்கிறாளேன்னு கணவன் ஜாலியா இருக்க முடியாது. அதே போல, மனைவி சம்பாதிப்பதில் அவள் குடும்பத்திற்கு செலவு செய்ய கடமை இல்லை.
அதாவது, ஒரு குடும்பத்தில கணவன், மனைவி இருவரும் சம்பாதிச்சாலும், மனைவிக்கு குடும்பத்துக்காக செலவு செய்யனும்கிற அவசியமே இல்லை. அப்படிக்கட்டாயப்படுத்த கணவனுக்கோ, இல்லை அவள் தகப்பனுக்கோ, பிள்ளைகளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.
இப்படி ஒரு கட்டளை இருக்கும்போதே நாம தெரிஞ்சுக்கலாம், பெண்கள் வேலைக்கு போவதையும், சம்பாதிப்பதையும் இஸ்லாம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனா இப்படி ஒரு கட்டளை தான் எனக்கு கண்டிப்பா சம்பாதிக்கனும்கிற ஆசைய தூண்டிச்சே. பின்ன, நாம சம்பாதிச்சத நம்ம இஷ்டப்படி செலவு செய்யலாம்தானே? (ஆனா அதை நேர்வழியில் செலவு செய்வது முக்கியம். ஏன்னா அதைத்தந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லனுமில்லையா?)
சரி, அப்ப ஏன் பெண்கள் வேலைக்கு போறத பத்தி எந்த வித கட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்படி ஒரு ஆணுக்கு குடும்பத்திற்காக சம்பாதிப்பது கடமையோ, அதே போல ஒரு பெண்ணுக்கு குடும்பத்தை பார்த்துக்கொள்வது கடமையாகிறது. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலாம்.
உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்காக கஷ்ப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வளவு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.
வேலை செய்யும் இடத்திலும் கண்டிப்பாக ஹிஜாபை பேண வேண்டும். நான் கேம்பஸ் இன்டர்வியூக்களுக்கு போகும்போது பலர் என்னிடம் கேட்டது, 'ஹிஜாப் போடக்கூடாதுன்னு சொன்னா என்னடீ பண்ணுவே?' 'அப்படிப்பட்ட வேலை எனக்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல.
அடுத்ததா, அளவுக்கதிகமான சோஷியலைசிங் இருக்கக்கூடாது. ஆண்களிடம் பேசும்போது நம்முடைய பேச்சு வெறும் வேலையை பற்றி மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய வீண் அரட்டைகளுக்கு நோ. நான் என் அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் எனக்கு வர விருப்பமில்லை என்று சொன்னேன். என்னை மதித்தார்கள். :)
அதோட ரொம்ப முக்கியம், நம்முடைய கடமையான தொழுகையையும் பேண அனுமதிக்கனும். இது ஆண்களுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்பது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் சமாளிப்பது நம்முடைய கடமை. ஒரு நாளைக்கு எத்தனையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிடங்கள் தொழுவதற்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை
என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.
முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.
இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷயத்தில் இது நடந்திருக்கு.
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.
வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பங்கு இருக்குங்கோவ்), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.
==========
சகோதரி நாஸியா அவர்களின் இந்த கட்டுரை அவரின் அனுமதி பெற்று இங்கே பகிரப்பட்டுள்ளது (படம்: கூகிள் உதவி).
பதிவுலகில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரிகள் அஸ்மா, அன்னு, ஹுசைனம்மா, ஜலீலா கமால், ஆசியா உமர், ஆயிஷா அபுல், மலிக்கா, ஆமினா, ஸாதிகா, ஃபாயிஜா காதர், பாத்திமா ஜொஹ்ரா, பாத்திமா நிஹாஸா, அப்சரா, ருபீனா, enrenrum16, ஆயிஷா பேகம், Zumaras போன்றவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன்.
இறைவா, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் எங்கள் செயல்பாடுகளை அதிகரித்து தருவாயாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
1. ஃபத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
2. ஹராம் - தடுக்கப்பட்டது.
3. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல. ]]
ReplyDeleteமாஷா அல்லாஹ், இந்த தெளிவை எல்லோருக்கும் வல்ல ஏகன் அல்லாஹ் வழங்க பிரார்த்திப்போம் - ஆமின்.
வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பங்கு இருக்குங்கோவ்),
ReplyDeleteஇது தான் உண்மை பெண்ணுரிமை.
இங்கு அமீரகத்தில் என்னுடைய ஊர்க்காரர்கள் நிறைய பேர் குடும்பத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு சென்றால் ஆண்களும் வீட்டு வேலை செய்வதை பார்த்து (பெருக்குவது, துணி உலர வைப்பது, மோப் போடுவது) ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இதுநாள் வர நானும் என்னுடய குடும்பத்தினருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக / உறுதுணையாகவே இருப்பேன்
சலாம் சகோ ஆசிக் அஹமது,
ReplyDeleteஅற்ப்புதமான காட்டுரை. ஒரு சகோதரியின் பதிவு இஸ்லாத்தின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் பதிவுலகில் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. இதற்க்கு யாரேனும் மாற்றுக் கருத்து சொன்னால், சகோதரர்களாகிய நாம் பதில் சொல்லாமல், சகோதரிகளையே பதில் சொல்லச் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இது பற்றி சிந்திக்கவும்.
சலாம் சகோ.....
ReplyDeleteநல்ல பதிவு.....தொடருங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!
ReplyDeleteபெண்களின் முன்னேற்றம் என்பது மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் இன்று பெண்கள் தங்களுக்கு மேலும் சுமைகளை சுமத்திக் கொள்கிறாரக்ள்.
சென்னை, டிச.31- 2009-தினத்தந்தி
வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்' கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.
பெண்களின் பாதுகாப்பு
`பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்' தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்……..
http://suvanappiriyan.blogspot.com/2011/06/blog-post_20.html
பெண்களின் உள்ளக்குமுறலை விரிவாக அறிய நான் இட்ட பழைய பதிவை பார்க்கவும்.
இஸ்லாம் சொல்லக் கூடிய வரம்புகளுக்குட்பட்டு இஸ்லாமிய பெண்கள் தங்களது முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். சகோதரர் ஆஷிக்கின பதிவும் அதைத்தான் சொல்கிறது. அதுதான பெண்களுக்கு நிரந்தரமான முன்னேற்றமாகவும் இருக்க முடியும்.
அதேபோல் இஸ்லாமிய பெண்கள் பதிவுலகில் தற்போது அதிகம் எழுதி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
சகோதரர் ஜமால்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//இந்த தெளிவை எல்லோருக்கும் வல்ல ஏகன் அல்லாஹ் வழங்க பிரார்த்திப்போம்//
ஆமீன்..
கருத்துக்கு நன்றி சகோதரர்..
சகோதரர் ஹாஜா மைதீன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் கருத்து மிகுந்த உற்சாகத்தை தருகின்றது. தாங்கள் இதுபோலவே எப்போதும் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
வ அலைக்கும் சலாம் சகோதரர் சிராஜ்,
ReplyDeleteதாங்கள் கூறும் கருத்து அழகானதே. இருப்பினும் இது குறித்து முடிவெடுக்க வேண்டியது அவர்களே. நேரமின்மை, குடும்பம் என்று பல வேலைகள் அவர்களுக்கு இருக்கலாம்.
சகோதரிகள் பதிவுலகில் மிக சிறப்பாகவே இஸ்லாம் கூறும் பெண்ணுரிமையை பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கின்றனர். இறைவன் அவர்களுக்கு மேலும் மேலும் கல்வி ஞானத்தையும், உடல்/மன வலிமையையும் தந்தருள்வானாக...ஆமீன்
சகோதரர் NKS ஹாஜா மைதீன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteபதிவு தந்த சகோதரிக்கும்
பகிர்ந்த சகோ ஆஷிக்கிற்கும்
நன்றி....
ஜஸாகல்லாஹ் கைரன்
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ((04: 32))
அருமையான பகிர்வு.. எங்களையும் இணைத்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் கைர்
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..! மிக தெளிவான விளக்கம்..! சகோதரியை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது..ஒரு நல்ல பதிவை வெளியிட்டதற்கும் எங்களின் பெயர்களைக் குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி சகோ.
சகோதரர் குலாம்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சகோதரி பாயிஜா காதர்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..
சகோதரி ஆயிஷா பேகம்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..
salam!
ReplyDelete//காலையில தூங்கி எழுவதிலிருந்து, இரவு தூங்க செல்லும் வரை, பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போனா நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம செய்யக்கூடிய பல விஷயங்களை எப்படி ஒழுங்கோட செய்வதுன்னு இஸ்லாத்தில் நமக்கு கட்டளை/அறிவுரை இருக்கு. //
சலாம்
இஸ்லாமியத்தில் எனக்கு பிரச்சினையே இல்லை! இஸ்லாமியர்களிடம்தான் பிரச்சினையே! ( மனிதன் பலகீனமானவன் - முடிந்தது விஷயம்). இவ்வளவு மார்க்க பற்றை வெளிகாட்டும் (அந்த பெண் உட்பட) நாம் , தங்களது பிரச்சனைகளில் எந்த அளவிற்கு இஸ்லாமியத்தை துணை கொண்டு தீர்த்தோம் என்பதுதான் எனது கேள்வி.
கிருஸ்துவர்களை ஓட ஓட விவாதத்தில் விரட்டிய மார்க்க அறிந்கர்களுக்குள் இருக்கும் நட்பு நாம் அறியாததா என்ன?
சிறிய சிறிய நல்ல விசயங்களில் கூட சிலர் உறுதியாய் இருப்பதை கிண்டல் செய்வதுதானா உங்கள் வாதம் என்றால், நிச்சயம் இல்லை. என்னை கிண்டல் ( எனது கொள்கைகளில் செய்யப்படும் சமரசம்) செய்யாதீர்கள் என்பதுதான் எனது வாதமே.
குறிப்பு -
என்னை சுற்றி உள்ள இஸ்லாமிய நண்பர்கள் அவர்களது உலகவாழ்க்கை பிரச்சனைகளில் எந்த அளவிற்கு இஸ்லாமியத்தை துணைகொண்டு தீர்த்தார்கள் என்று ஆராய்ந்து வருகிறேன்.( இதுவரை வந்த ஆய்வுகள் கலவையாகத்தான் ( தீர்வுகள் ) வந்திருக்கிறது) . காலம் அனுமதித்தால் அவர்களின் பெயர்களோடு /அனுமதியோடு ஆதாரத்துடன் எழுதுகிறேன். ( மனிதன் பலகீனமாவன் - இந்த வரிகளை டிராப்ட்டில் வைத்துகொள்ளவும், எனது எல்லா கேள்விகளுக்கும் இதுதான் பதில் என்பதை அறிவேன் )
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆஷிக் அவர்களே....மிகவும் நல்ல பகிர்வு...படிக்கும் போதே மெய் சிலிர்த்து போனேன்...நல்ல தெளிவான கட்டுரை.ஒவ்வொரு பெண்களும் மனதளவில் உறுதியோடும்,கட்டுப்பாடும் வாழ்ந்தார்களேயானால் நல்ல விஷயங்களை நாமும் சாதிக்கலாம் தானே...???இது என்னுடைய கருத்தாக கொண்டிருப்பேன்.அதையே,இன்னும் நிறைய விஷயங்களோடு இந்த சகோதரி மிகவும் அழகாக சொல்லியிருக்கின்றார்.அந்த சகோதரிக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவியுங்கள்.இதை எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி சகோ///
ReplyDeleteஇக்கட்டுரையோடு என் பெயரையும் சேர்த்தமைக்கும் மிகவும் நன்றி சகோ////
அன்புடன்,.
அப்சரா.
என்னுடைய இடுகையை பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹு க்ஹைர் சகோதரர்..
ReplyDeleteஇன்றைய நாட்களில் எனக்கு தெரிந்த எத்தனையோ தோழிகள் வேலைக்கு செல்கிறோம் என்ற ஒரே காரணத்தால் பர்சனல் லோன் எடுத்து வீடு கட்டி தற்போது அந்த கடனை அடைப்பதற்க்காகவே பிள்ளைகளை டே கேரின் விட்டு விட்டு அலுவலகம் செல்கின்றனர்,.
தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ்
Aashiq,
ReplyDeleteWa Alaikum Salam Wa Rahmatullah’E Wa Barakatahu,
Good post for the current generation. I have shared your post with my wife and she is very happy to know the details. Hopefully, she will continue to follow the same.
Continue the good work and May Allah gives you & family all the happiness and good health.
Salam,
Mohamed Husain
அருமையான பதிவு ... எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
ReplyDeleteAssalamu alikum good post bro!
ReplyDeletesalaams to all...
ReplyDeleteதேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ்
தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ்
தேவைகளை குறைத்துக்கொண்டு அல்லாஹ் தந்த ரஹ்மத்துக்கு நன்றி கூறி துவா கேட்டுக்கொண்டிருந்தாலே பரக்கத் தானாக வரும் இன்ஷா அல்லாஹ்
aameen......aameen.......aameen......
Here this comment is the peak of your mountain like article..!
jazakkalaah khair sister Naasia.
by the by,
when i commented in this post in your blogg,
i had no words...
//////////////////////////////////////////
mohamed ashik said...
தெளிவான - சரியான பதில் இடுகை.
மிக்க நன்றி.
தங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பறக்கத் செய்வானாக. ஆமீன்.
May 16, 2010 3:00 AM
////////////////////////////////////////////
today also i'm at the same position...
i have no words...
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை ...இந்த காலகட்டத்திற்கு அவசியமான ஒரு பதிவு இதில் எனக்கு ஒரு சிறு தெளிவின்மை ஏற்படுகிறது ....இஸ்லாம் பெண்களை தொழில் புரிய அனுமதித்துள்ளது இதை நாம் அனைவரும் அறிவோம் ..அன்னை கதிஜா(ரலி ) அவர்கள் வணிகம் செய்த செய்தி நம்மில் பலருக்கு தெரிந்ததே ..ஆனால் இங்கு என்னுடைய சந்தேகம் என்னவென்றால்...பெண்கள் தொழில் செய்வததற்கும் வேலை செய்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளது ...தொழில் செய்தல் என்பது ஒரு வணிகத்தில் தன்னுடைய பொருளாதார பங்களிப்பை அளிப்பதின் மூலமாக கிடைக்கும் இலாபத்தில் பெறப்படும் பங்கு அனால் இங்கு பெண்களின் நேரடி உடல் உழைப்பு தேவை இல்லை இதற்க்கு சான்றாக நாம் ஏற்கனவே சொன்ன சம்பவம் பொருந்தும் ,இன்னும் பல சகாபி பெண்மணிகளின் சம்பவமும் உள்ளது ....ஆனால் பெண்கள் வேலை செய்வது அதாவது உடல் உழைப்பு செய்து பணம் ஈட்டுவது என்பது என்னுடைய குறுகிய அறிவுக்கு உட்பட்டு எந்த சாக்பி பெண்களும் அல்லது அதற்க்கு பின்பும் செய்து நான் பார்க்கவில்லை ...இதற்கு ஏதாவது சான்று தங்களிடம் இருந்தால் விளக்கவும்
ReplyDelete10 pengal velaikku selvathai ningal kurippidalaam aanal 10000 kankkil velaikkusenru sambathippathillai eanbathu (islamiya)varalaru
ReplyDelete///வேலைன்னு வந்துட்டா, மண்டைக்குள்ள இருக்குறது தான் முக்கியமே ஒழிய, ஆடைக்குள்ள இருக்குறது இல்ல. ]]///
ReplyDeleteமண்டைக்குள் இருக்கிறதை பயன்படுத்துவதுவது என்பது ஆடைக்குள் இருப்பதை பாதுகாப்பது அடங்கும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும் .வேலைக்கு செல்லும் பெண்கள் என்றாலே இருக்கும் இமேஜை இஸ்லாமிய பெண்கள் மாற்றி காட்டவேண்டும்
நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள், "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட "தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டுக் கொண்டேன். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி (3595)
1சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : (மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.
ReplyDelete2.ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.
எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.பொதுவாக பெண்களுக்குரிய சட்டம் மஹ்ரமில்லாமல் பயணிக்கக் கூடாது . விதிவிலக்காக தைரியமுடைய கற்பை பாதுகாக்க வல்லமையுடைய பெண்கள் ,மற்றும் நிர்பந்த காரணமாக தனித்து பயணிக்கலாம் என்பதை ஹீரா பெண் பற்றிய வரலாற்று குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம் .தன்னுடைய காலத்தில் பெண்கள் தனித்து பயனிகாததால் அதுவே சட்டமாகிவிடக் கூடாது என்பதால் ,எதிர்காலத்தில் தனித்து பயணித்து கற்பையும் தனது உடமைகளையும் பாதுகாக்கக் கூடிய பெண்கள் வருவார்கள் என்று முஹம்மது நபிசல் அவர்கள் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த நிகழ்வை கண்டிக்கவோ அது போன்று தனித்து வருவது கூடாது என்றோ நபிசல் அவர்கள் கூறவில்லை .ஆதலால் பாகிஸ்தானிய பெண் முகத்தையும் முன்கைகளையும் தவிர மற்ற பகுதிகளை மறைத்து உடை அணிந்து ,அந்த உடை பேன்ட் சர்ட,ஓவர்கோட் ஸ்கார்ப் ஆகியவனவாக இருந்தாலோ விமானம் ஓட்டினாலும் அது இஸ்லாம் ஏற்கனவே அங்கிகரித்த செயல்தான்.
முஸ்லிம்களுக்கு பன்றிஇறைச்சி உண்ண தடை செய்யப்பாட்டாலும் உயிர்காக்கும் நிர்பந்த சூழ்நிலையில் பன்றி உணவு தடையில்லை என்பது இஸ்லாமிய வழிகாட்டுதல் .அதன் அடிபடையில் பாராசூட் அணிய தகுந்தவாறு நிகாப் அணிந்து கொள்ளலாம் .கருப்பு அங்கியை தலையிலிருந்து பாதம் வரை அணிந்து கொள்வதுதான் நிகாப் என்பதல்ல .
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் (33 : 59)
இதுதான் பெண்கள் ஆடை பற்றிய குர் ஆன் வசனம் .இந்த வசனத்தின் படி அக்காலத்தில் உடை வடிவமைத்ததேயே இப்போது பயன்படுத்தி வருகிறார்கள் .ஆனால் விமான ஓட்டுவதற்கு ஏற்றவாறும் ஏனைய வேலைகளை செய்வதற்கு ஏற்றவாறும் சுடிதார் ,பேன்ட் அணிந்து தலையிலிருந்து நீளமான ஸ்கார்ப் அணிந்து தனது மார்பு பகுதி வரை தொங்க விடுதலும் நிகாப் தான் .நபி ஸல் அவர்கள் முஸ்லிம்கள் செருப்பு அணிவதை கட்டயாமாக்கினார்.அதற்காக அவர்கள் காலத்தில் அணிந்த செருப்பை அணிய சொல்லவில்லை .