Tuesday, February 28, 2012

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

மீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.  

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள். 

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள். 

ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.  

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது. 


இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள். 


இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது. 

அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது. 

தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

My Sincere thanks to:
1. Brother Garibaldi of Loonwatch.

References:
1. Women in national parliaments - Inter-Parliamentary Union (situation as of Nov, 2011). link
2. Women in Parliament: Islamists in Tunisia Field More Women as Candidates than the Percentage of Women in the US Congress - Loonwatch. link
3. Inter-Parliamentary Union - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






38 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லாஹ்
    சிறிய பதிவாக இருந்தாலும்
    சிறப்பானதொரு பதிவு

    //தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது.
    அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது. //

    இஸ்லாத்தை கறைப்படுத்த முனைவோர் யோசிக்க வேண்டும்!
    .

    ReplyDelete
  2. நல்ல தகவல்...நமது நாட்டில் இப்பொது இட ஒதுக்கீடு பிரச்னை வைத்து அரசியல் செய்கின்றனர்..பிறகு எப்படி இது போல் ஆகா முடியும்...

    ReplyDelete
  3. சலாம் சகோ!

    பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூச்சலிடும் பலர் அமெரிக்காவின் நிலையை ஆராய்வதில்லை. பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாம் தடையல்ல என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சவுதியில் கூட அதிகார மையமான சூரா சவுன்சிலில் தற்போது பெண்களை நியமித்திருக்கிறது அரசு.

    ReplyDelete
  4. Salam bro!
    Padikave makilchiyaga ullathu!
    Thanks for sharing!
    Jazhkallahu kair!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்,
    தங்களின் தகவல் - இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது அடிமையாக நடத்தப்படு கிறார்கள் என்று ஆப்கன் மற்றும் சவுதியை உதாரணம் காட்டி இழிவுபடுத்தும் போலிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..அதே சமயத்தில் - பெண்களுக்கு உலக கல்வி அவசியமில்லை -அதிகபட்சமாக பத்தாவது வரை மட்டும் படித்தால் போதும் - பெண்களுக்கு தலைமையேற்கும் உரிமை கிடையாது - பெண்கள் வீட்டை விட்டு வெளீயே போனால் கெட்டு சீரழிந்துவிடுவார்கள் என்றெல்லாம் - கழிசடைகளாய் போன ஓரிரு விதிவிலக்குகளை உதாரணம் காட்டி இணையம் - மின்னஞ்சல் குழுமம் - பத்திரிக்கை கள் - மற்றும் தொலைக்காட்சி மூலம் பூச்சாண்டி காட்டி நம் சகோதரிகளை - வீட்டுக்குள் முடக்க நிணைக்கும் முல்லாக்களுக்கும் அடியாய் விழுந்திருக்கும்..எ ன்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. அறிவியல் துறையில் அற்புதம் செய்து வரும் ஈரான் சகோதரிகளை பற்றியும் எழுதி - நம் சகோதரிகள் திறமை மிக்கவர்கள் என்பதை நம்மவர்க ளுக்கு பறைசாற்றுங்கள்.. தங்களின் எழுத்துப்பணி இன்னும் சிறப்புற ஏக இறைவனை பிரார்த்திக்கிறே ன்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    அருமையான பதிவு சகோ...

    இன்னுமின்னும் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே அவா..

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.ஆஷிக் அஹமத்,

    நாம் என்னதான் விழுந்து விழுந்து உண்மைகளை எழுதினாலும், இஸ்லாமோஃபோபியா கண்களுக்கு மட்டும் நம் பதிவில் உள்ள எழுத்துக்கள் எதுவுமே தெரிவதில்லை..!

    அதனால்,

    இதை வேறு யாராவது முஸ்லிம்கள் அல்லாத பெண்ணுரிமைவாதிகள்... குறிப்பாக "ஒரிஜினல்" கம்யூனிச, நாத்திக ஆண் பதிவர்கள் எவரேனும் ஒருவர்...

    இப்பதிவை அப்படியே காபி-பேஸ்ட் பண்ணி, தங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொள்ளுமாறு மிக மிக மிக பணிவுடன் தயவு கூர்ந்து அவர்களை கேட்டுக்கொள்கிறேன்..!

    ReplyDelete
  8. சலாம் சகோ ஆசிக் அஹமது,

    மிக நல்ல பதிவு. இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து இல்லாததும் பொல்லாததும் இஸ்லாமிய எதிரிகள் சேற்றை வாரி இறைக்கையில், இது போன்று உலக எதார்த்தத்தை சொல்லும் பதிவுகள் நிச்சயம் தேவை. தொடரட்டும் உங்கள் பணி. எதிரிகள் இதிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பார்கள், ஆனால் நடுநிலையாளர்களுக்கு நல்ல புரிதலை கொடுக்கும்.

    ReplyDelete
  9. sakotharaa!

    arumaiyaana pathivu!

    ReplyDelete
  10. "தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்."

    WELL DONE BOTHER
    HATSOFF

    ReplyDelete
  11. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  12. சகோதரர் சேகர்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    //நமது நாட்டில் இப்பொது இட ஒதுக்கீடு பிரச்னை வைத்து அரசியல் செய்கின்றனர்//

    உண்மைதான் சகோதரர். வெளியே ஆதரிப்பது போன்றும், உள்ளே உள்ளடி செய்துக்கொண்டும் இருக்கின்றனர் என்று எங்கோ படித்ததாக நியாபகம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்று பிரதர்..

    ReplyDelete
  13. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் சலாம்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  14. சகோதரர் ஜாபர் கான்,

    வ அலைக்கும் சலாம்,

    ஊக்கத்திற்கு நன்றி பிரதர்..

    ReplyDelete
  15. சகோதரர் பிரைநதிபுரத்தான்,

    வ அலைக்கும் சலாம்,

    உங்கள் கருத்துக்கள் சரியே. பிரச்சனை எங்கே என்று ஆராய்ந்து அதனை தீர்ப்பதே அழகான செயல்முறையாக இருக்க முடியும். இஸ்லாம் சரியான முறையில் ஏற்றிவைக்கப்பட்டால் இந்த பிரச்சனைகள் இருந்த இடம் காணாமல் போகும். ஆனால் பல இமாம்களுக்கு தங்களிடம் தான் பிரச்சனை இருக்கின்றது என்பது புரியாமலேயே போய்விடுகின்றது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்

    ReplyDelete
  16. சகோதரர் சையத் இப்ராஹீம்ஷா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிரதர்..

    //இன்னுமின்னும் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதே அவா..// - இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  17. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம்,

    //நாம் என்னதான் விழுந்து விழுந்து உண்மைகளை எழுதினாலும், இஸ்லாமோஃபோபியா கண்களுக்கு மட்டும் நம் பதிவில் உள்ள எழுத்துக்கள் எதுவுமே தெரிவதில்லை..!//

    இல்லை சகோதரர். இஸ்லாமை கடுமையாக எதிர்த்தவர்கள் பலர் இஸ்லாமை தழுவியது/தழுவிக்கொண்டிருப்பது நீங்கள் அறியாதது அல்ல. ஏற்றிவைப்பது மட்டுமே நம் கடமை. நேர்வழி காட்டுவது இறைவன் மட்டுமே. அது போல நம் முயற்சிகளில் நாம் துவண்டு விடவும் கூடாது, முடியாது. இவை நமக்கான இறைவனின் சோதனைகளே என்பதை புரிந்து கொண்டால் நமக்கு தொய்வு வராது...

    ReplyDelete
  18. Excellent information and very good post brother. May God reward your efforts. Ameen.

    ReplyDelete
  19. சகோதரர் சிராஜ்,

    வ அலைக்கும் சலாம்,

    //எதிரிகள் இதிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பார்கள், //

    கண்டுபிடிக்கட்டும் சகோதரர். பதில் சொல்லுவோம் இன்ஷா அல்லாஹ்.

    //நடுநிலையாளர்களுக்கு நல்ல புரிதலை கொடுக்கும்.//

    நிச்சயமாக..

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    ReplyDelete
  20. சகோதரர் சீனி,

    சலாம்...

    ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரர்..

    ReplyDelete
  21. என்னது நமக்கு தொய்வா...? முயற்சியில் தொய்வா..? ஹா..ஹா..ஹா..
    நான் சொன்னதை நீங்கள் தவறாக விளங்கி விட்டீர்கள்..!

    நாம் யாரும் எதுவும் எழுதாமலேயே...
    நம் எவருடைய தாஃவா உதவி இல்லாமலேயே... அல்லாஹ் நாடிவிட்டால்,
    தான் நாடியவருக்கு எல்லாம் உண்மையை அறியவைத்து நேர்வழி காட்டுவது நாம் அறிந்த விஷயமே..! சரிதானே..?

    என்றாலும்,
    எத்திவைக்கும் பணியை நாமும் செய்வதால்... ஒருவர் கூட நம் எழுத்தை படிக்கா விட்டாலும், அல்லது படித்தும் மாற்றம் ஏதும் ஏற்படாவிட்டாலும் சோதனை நமக்கல்ல சகோ..! அவர்களுக்குத்தான்..! எழுதியதற்கான நமக்கு நன்மை நமக்குண்டு சகோ.

    அதேநேரம், இதன்மூலம் அல்லாஹ் தான் நாடிய யாருக்காவது ஹிதாயத் தந்தால், அதில் நமக்கு மேன்மேலும் நன்மை உண்டு..! சதக்கத்துல் ஜாரியா..!

    ஆனால், நான் சொன்னது இதுபற்றி அல்ல..!

    நீங்கள் குவோட் பண்ணியது,
    அதற்கு அடுத்து நான் 'போல்ட் லெட்டர்ஸ்'-இல் எழுதி இருப்பதற்கு தொடர்புடையது.

    அதன்மூலம் நான் சொல்ல வந்தது இதுதான்..!

    "இந்த விஷயங்கள் - புள்ளி விபரங்கள் - போட்டோக்கள் எல்லாம் அவர்கள் அறியாதது என்றா நினைக்கிறீர்கள்..? அறிந்தும் வேண்டுமென்றே அதை அவர்கள் எழுதாமல் தவிர்க்கிறார்கள்" என்றே சொல்ல வந்தேன்.

    ஒருவேளை இந்த செய்தி எல்லாம் 'எங்களுக்கு தெரியாது' என்பார்களேயானால்......

    'நான் சொன்னது உண்மை இல்லை' என்று அவர்கள் நிரூபிக்க விரும்பினால்.......

    இப்பதிவை காபி பேஸ்ட் பண்ணி அவர்கள் தளத்தில் போட்டுக்காட்டட்டுமே..!

    காட்ட மாட்டார்கள்... அதனால்தான், நாம் என்னதான் விழுந்து விழுந்து உண்மைகளை எழுதினாலும், இஸ்லாமோஃபோபியா கண்களுக்கு மட்டும் நம் பதிவில் உள்ள எழுத்துக்கள் எதுவுமே தெரிவதில்லை..! (அல்லாஹ் நாடாத வரை)


    நம்மை விட இன்னும் நன்றாக எழுதிக்காட்டுவார்கள்..!
    (அல்லாஹ் ஹிதாயத் தர நாடிவிட்டால்)

    ReplyDelete
  22. சகோதரர் ஹிமாஸ் நிளர்,

    சலாம்...

    என்ன சகோதரர், சற்று நாட்களாக ஆளை காணவில்லை.. :)

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  23. சகோதரர் ரபீக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    துவாவிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோதரர்...

    ReplyDelete
  24. //துனிசிய‌ குறித்து அவர் தெரிந்து பதிவ்ட்டாரா என்று தெரியவில்லை.
    துனிசிய ஒரு ஜனநாயக,மதசார்பற்ற நாடு,ஷாரியா கிடையாது,பல் தார மண‌ம் தடை செய்யப் பட்டுள்ளது,ஃபர்தா கட்டாயமில்லை.மத தீவிரவாதிகளான சாலாஃபிகளை ஒடுக்குகிறது.பெண்களுக்கு அரசியலில் 20% இட ஒதுக்கீடு////
    தங்களது இந்த பதிவுக்கு சார்வாகன் இங்கே தனது கருத்தை தெரிவிக்காமல் வேறொரு தளத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இவைகள் சரியான தகவல்களா என்பதை அறிவீர்களா?

    ReplyDelete
  25. சலாம் சகோ ..

    தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது. ##


    அருமை சகோ....இதைவிட விளக்கம் வேற தேவை இல்லை...

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துதுன்னு ஒருவித மனநோயோடு திரிபவர்களுக்கு சரியான சாட்டையடி பதிவு!

    ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நல்ல பதிவு ...
    பதிவை படிக்கும் போதே பெருமையாகவும், கர்வமாகவும் உள்ளது...
    பகிர்ந்தமைக்கு நன்றி சகோ ..

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோ. ஆசிக்,

    பெண் உரிமை பற்றி பேசும் இறைமறுப்பாளர்களாலும் சரி, இணைவைப்பவர்களாலும் சரி பெண்ணை தெய்வதற்கு இணையாக மதிக்கிறோன் என்ற பெயரில் போலிவேசமிடுகிறார்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்கு மட்டும் தான் தெரியும். என்னத்தான் நாம் வருடக்கணக்கில் இது போன்று எழுதினாலும் மனசாட்சியை முன்னிருந்தி சிந்திக்கும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே அவர்களால் உண்மையை உணரமுடியும். முன்முடிவோடே இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்று அப்பட்டமாக அவதூறுகளை பரப்புகிறார்கள்.

    பெண்ணுறிமை என்று போலிவேசமிடும் இறை மறுப்பு கூட்டத்தில் எத்தனை பெண் முன்னனி தலைவிகள் உள்ளார்கள் என்பதை பட்டியலிட முடியுமா?

    பெண்ணுறிமைக்கு அக்மார்க்கு முத்திரை தரும் ஒரு நாட்டில் இன்று பெண்களில் கேடுகெட்ட நிலையை பாருங்கள் இந்த சுட்டியை தட்டுங்கள். http://gulfnews.com/news/world/uk/young-british-women-tear-up-the-rule-book-on-dating-1.987174

    பெண்களுக்கு பாதுகாப்பு, சம உரிமை, வசதியான வாழ்க்கை இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என்பதை அதை உண்மையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் உண்மை முஸ்லீம் பெண்களிடம் கேட்டுப்பார்ப்பார்கள் இந்த அறிவிஜீவி பெண் உரிமை(?) போலி காவல்காரர்கள் ?

    ReplyDelete
  29. பெண்ணுரிமை பற்றி கருத்துப்பரிமாற்றம் செய்யப்படுவதால், இந்த சுட்டிகளுக்கு சென்று பாருங்கள்.
    சுதந்திரமா, பெண்ணுக்கா? http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_26.html



    இந்த சுட்டியில் உள்ள காணொளியை தயவு செய்து பெண்ணுரிமை பற்றி பீற்றிக்கொள்ளும் அறிவுஜீவிகள் காட்டாயம் கேட்கவேண்டும்.
    http://adirainirubar.blogspot.com/2011/03/blog-post_08.html

    ReplyDelete
  30. ஆச்சரியமான பல தகவல்கள்..... பெண்கள் முதன்மைப் பதவி வகிக்கும் நாடுகளில் கூட பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்பது வருத்தத்திற்குரியது தான். ஆண்களே நாடாளுமன்றத்திற்கு கட்டடிக்கும் இந்நாட்களில் இத்தனை பெண்களும் கடமையே கண்ணாக இங்கு அட்டன்டன்ஸ் கொடுத்திருப்பது பார்க்கவே ஆச்சரியமாயிருக்கு.

    ReplyDelete
  31. சகோதரர் இப்ராஹீம்,

    வ அலைக்கும் சலாம்,

    உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கின்றேன், பாருங்கள்..

    வருகைக்கும் நன்றி...

    ReplyDelete
  32. சகோதரர் NKS.ஹாஜா மைதீன்,

    வ அலைக்கும் சலாம்,

    ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிரதர்..

    ReplyDelete
  33. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  34. சகோதரி மும்தாஜ்,

    வ அலைக்கும் சலாம்,

    //பதிவை படிக்கும் போதே பெருமையாகவும், கர்வமாகவும் உள்ளது...//

    ஆம். ஆனால் சிலர் எதார்த்தத்தை புரியாமல் இருப்பது தான் வேதனை அளிக்கின்றது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..

    ReplyDelete
  35. சகோதரர் தாஜுதீன்,

    வ அலைக்கும் சலாம்,

    அசத்தலான கருத்துக்களுக்கு நன்றி...

    //இது போன்று எழுதினாலும் மனசாட்சியை முன்னிருந்தி சிந்திக்கும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே அவர்களால் உண்மையை உணரமுடியும். முன்முடிவோடே இஸ்லாத்தில் பெண்கள் நிலை என்று அப்பட்டமாக அவதூறுகளை பரப்புகிறார்கள்.//

    துவா செய்வோம். அது போல், அறியாமையால் உண்மையை உணராதவர்கள் இருப்பவர்களுக்கு இம்மாதிரியான நம் முயற்சிகள் பயனளிக்கலாம். விதண்டாவாத சகோதரர்களுக்கு நாம் சொல்ல ஒன்றுமில்லை. அறிந்தே தன்னை ஏமாற்றிக்கொல்பவர்கள் அவர்கள்.

    //பெண்களுக்கு பாதுகாப்பு, சம உரிமை, வசதியான வாழ்க்கை இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என்பதை அதை உண்மையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் உண்மை முஸ்லீம் பெண்களிடம் கேட்டுப்பார்ப்பார்கள் இந்த அறிவிஜீவி பெண் உரிமை(?) போலி காவல்காரர்கள் ?//

    இத மட்டும் செய்யவே மாட்டார்கள் :) :)

    ஜசாக்கல்லாஹ் பிரதர்...

    ReplyDelete
  36. சகோதரி என்றென்றும்16,

    அஸ்ஸலாமு அலைக்கும்

    //பெண்கள் முதன்மைப் பதவி வகிக்கும் நாடுகளில் கூட பெண்களுக்கு அதிக இடஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்பது வருத்தத்திற்குரியது தான்//

    உண்மைதான். எக்கச்சக்க அரசியல் இருக்கின்றது இந்த விவகாரத்தில். இறைநம்பிக்கை சார்ந்த நேர்மை மட்டுமே நிரந்தரமான தீர்வை கொடுக்கும்.

    //ஆண்களே நாடாளுமன்றத்திற்கு கட்டடிக்கும் இந்நாட்களில் இத்தனை பெண்களும் கடமையே கண்ணாக இங்கு அட்டன்டன்ஸ் கொடுத்திருப்பது பார்க்கவே ஆச்சரியமாயிருக்கு.//

    :) :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  37. How about Saudi Arabia?

    ReplyDelete
  38. How about Polygamy

    ReplyDelete