Friday, June 22, 2012

"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா"



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

சார்....கேட்டீங்களா சங்கதிய?

இவ்ளோ ஆர்வமா கேட்குறீங்க...என்ன விசயம்?

உலக பிரசித்திப்பெற்ற நேச்சர் (Nature) ஆய்விதழ் சமீபத்துல ஒரு தலையங்கம் வெளியிட்டிருக்காங்க..."South Korea surrenders to creationist demands" (படைப்புவாதிகளின் கோரிக்கைகளுக்கு தென் கொரியா சரணடைந்தது). எப்படி சார் இருக்கு தலைப்பு?

ரொம்ப டாப்பு சார். செம அதிரடியா இல்ல இருக்கு. நேச்சரின் இந்த தலைப்புக்கு வலையுலகமே அதிர்ந்திருக்குமே?

உண்மைதான். குறிப்பா சொல்லனும்னா பரிணாமவாதிகள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க :-)

இருக்காதா பின்னே!!! அறிவியல் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் முன்னனியில் உள்ள நாடாயிற்றே தென் கொரியா. அப்படிப்பட்ட நாடு படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா சொன்னா ஒருவித ஆச்சர்யம் இருக்கத்தானே செய்யும், பரிணாமவாதிகளின் மனக் குமுறலை சொல்லவா வேணும்....அது சரி, அந்த கட்டுரைல என்னதான் எழுதியிருந்தாங்க நேச்சர்? அத நீங்க இன்னும் சொல்லலையே...

விஷயம் இதுதான். பரிணாமத்துக்கு ஆதாரமா காட்டப்படும் உதாரணங்களை உயர்க்கல்வி அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க சொல்லி பரிந்துரைத்திருக்கின்றது தென் கொரிய கல்வித்துறை.

அட்ரா சக்க......அட்ரா சக்க................................................................அட்ரா சக்க...மேலே சொல்லுங்க சார், ரொம்ப சுவாரசியமா இருக்கு....



"பாடநூல் மறுசீரமைப்பு கழகம் (Society for textbook revise, STR)" என்ற அமைப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பின்னணியில் செயல்பட்டிருக்கு. இவங்க என்ன செய்தாங்கன்னா, பரிணாமத்துக்கு (வலுவான) ஆதாரமா காட்டப்படும் "குதிரை பரிணாமம்" ஒரு கற்பனையே என்றும், அதனை பாடநூல்களில் இருந்து தூக்கணும் என்றும் அறிவியல் ஆதாரங்களை சுட்டிக்காட்டி அரசுக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க...

அப்படி போடு அருவாள...ம்ம்ம் அப்புறம்?

இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் அப்படின்னு ஒரு உயிரினத்த பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.

அட ஆமா...டைனாசர்ல இருந்து பறவைகள் வந்துச்சுன்னு சொல்றதுக்கு ஆதாரமா காட்டுவாங்களே அந்த உயிரினத்த பத்தி தானே சொல்றீங்க..

ஆமா சார். அதே தான். இந்த உயிரினம் குறித்த சர்ச்சைகள் சமீப காலமா அதிகரித்து இருக்கு. இதே நேச்சர், இந்த உயிரினம் "உலகின் முதல் பறவை" என்ற அந்தஸ்த்தில் இருந்து கீழிறக்கப்பட்டதா சிலபல மாதங்களுக்கு முன்னாடி தலையங்கம் வெளியிட்டது நினைவிருக்கலாம்...

எஸ் எஸ்...நானும் படிச்சேன். பரிணாமவாதிகளின் மிச்சம் மீதி இருந்த ஒரே ஆதாரமான(?) ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் அவங்களுக்கு டாடா காட்டிய அந்த செய்திய மறக்க முடியுமா... :-) :-) (பரிணாம ஆதரவாளர்களுக்கு ஆர்க்கியாப்டெரிக்ஸ் bye-bye சொன்னது குறித்த இத்தளத்தின் விரிவான அலசலை <<இங்கே>> காணலாம்) 

ஹி ஹி...இப்ப என்ன மேட்டர்னா, STR சமர்பித்த பெட்டிஷன்ல இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த தகவல்களையும் பாடப்புத்தககங்களில் இருந்து நீக்கனும்னு சொல்லிருக்காங்க. அதற்கான காரணங்களையும் சுட்டி காட்டி இருக்காங்க...

சரியான அணுகுமுறை தானே சார்.

ம்ம்ம்...குதிரை பரிணாமத்தையும், ஆர்க்கியாப்டெரிக்ஸ்சையும் நீக்க சொல்ற இந்த பெட்டிஷனை கூர்ந்து கவனித்த தென் கொரிய கல்வித்துறை அத ஏத்துக்கிட்டாங்க. பாடநூல் தயாரிக்கும் பதிப்பாளர்களிடம் இதுகுறித்து அறிவிப்பு செய்தாகிவிட்டது. விளைவு, பல பதிப்பாளர்கள் அந்த பரிணாம உதாரணங்களை நீக்கும் வேலைய துவங்கிட்டாங்க..


ஓஹோ...அதெல்லாம் சரி சார். ஒரு அமைப்பு ஆதாரங்கள் அடிப்படையில் பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதன் அடிப்படையில் தவறான தகவல்களை பாடநூல்களில் இருந்து நீக்குறாங்க. இதுல எங்கே படைப்புவாதிகள் வந்தாங்க? ஏன் படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா நேச்சர் சொல்லணும்?

அதுவா...இந்த STR இருக்குல்ல, அது படைப்புவாதத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்போட கிளை அமைப்புன்னு நேச்சர் சொல்லுது.

ஒ அதான் மேட்டரா...

இது மட்டும் இல்ல சார். எதிர்க்காலத்துல மனித பரிணாமம் குறித்த தகவல்கள் மற்றும் மேலும் பல பரிணாம உதாரணங்களையும் நீக்க சொல்லி பெட்டிஷன் கொடுக்க போறாங்க STR.

சூப்பரப்பு...செம டெரரா இல்ல இருக்கு. இன்னொன்ன கவனிச்சீங்களா. குதிரை பரிணாமமும் சரி, ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் சரி, இவை குறித்த சர்ச்சைகள் அதிகளவில் இருப்பது அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்னு தான். இப்படியான குழப்பமான உதாரணங்களை பசங்க ஏன் படிக்கணும்? பரிணாமவாதிகளே இந்த உதாரணங்கள நீக்க சொல்லிருக்கணும்.

சரியா புடுச்சீங்க சார் பாய்ன்ட்ட....பரிணாமவாதிகள் இந்த உதாரணங்கள நீக்க சொல்லி அரசிடம் கேட்டிருந்தா இந்த அளவுக்கு நேச்சரோ அல்லது பரிணாம ஆதரவாளர்களோ குதிப்பாங்களா? ஆக, இங்கே மேட்டர் என்னான்னா, தவறான உதாரணங்கள நீக்க சொன்னது பிரச்சனை இல்ல. படைப்புவாதிங்க சொல்லி நீக்கனுமா...இதான் பரிணாமவாதிகளின் கூச்சலுக்கு காரணம்.

தானும் படுக்க மாட்டேங்குறாங்க...தள்ளியும் படுக்க மாட்டேங்குராங்கன்னு சொல்லுங்க...

ஹி ஹி ஹி...வேற விதமா சொல்லனும்னா, தன் கண்ணை தானே குத்திகிட்டா பரவாயில்லை, ஆனா அடுத்தவன் மட்டும் குத்தக்கூடாது. இதுதான் பரிணாமவாதிகளின் தற்போதைய நிலை. தவறான உதாரணங்களை நீக்க சொன்னதை, பரிணாமத்தையே பாட நூல்களில் இருந்து நீக்க சொன்னது போல பரிணாம ஆதரவாளர்கள் சித்தரித்து விசயத்தை திசை திருப்ப முயல்வது மோசமான முன்னுதாரணம்.

:-) :-) இது என்ன அவங்களுக்கு புதுசா சார். லூஸ்ல விடுங்க. இப்படி ஒரு ஒரு ஆதாரமா தூக்கி எரிந்துக்கிட்டு இருந்தா பரிணாமத்துக்கு ஆதாரமா வேற என்ன தான் சார் மிஞ்சும்? பரிணாமத்துக்கு ஆதாரமா இருந்த எல்லாமே மண்ணோட மண்ணா போச்சு. அவற்றில் சிலபல இன்னும் பாடப்புத்தகங்களில் ஓட்டிக்கிட்டு இருக்கு. இப்ப அந்த சில உதாரணங்களை நீக்கி தென் கொரியா நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இனி கொஞ்ச கொஞ்சமா பல நாடுகளிலும் இதனை மேற்கோள் காட்டி பாடத்திட்டங்களில் இருந்து பரிணாம ஆதாரங்கள் தூக்கப்பட வழிவகுக்கப்படலாம்.

அருமையா சொன்னீங்க...இதான் பரிணாமவாதிகளின் கவலைக்கு காரணம். தவறான உதாரணங்கள பசங்க படித்தாலும் கவலை இல்ல. ஆனா தங்கள் "நம்பிக்கைக்கு" மட்டும் பங்கம் வந்திர கூடாது.

தென் கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பரிணாமவாதிகளின் ரியாக்ஸன் எப்படி இருந்தது?

தங்களிடம் இது குறித்து தென் கொரிய அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லைனு பரிணாமவாதிகள் சொல்றாங்க. ஆனா, தங்கள் குழுவில் உயிரியல் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிப்பதாக STR கூறுகின்றது.

ம்ம்ம்...இதுக்கெல்லாம் மதம் தான் காரணம்னும் பரிணாமவாதிகள் குற்றம் சாட்டி இருப்பாங்களே?

எப்படி சார். அவங்க எண்ண ஓட்டங்களை அச்சு பிசகாம படம் புடிக்கிறீங்க...

:-) இது என்ன இன்னைக்கு நேத்தா சார் நடக்குது. கேட்குற கேள்விக்கு பதில் தராம மதத்த நோக்கி தங்கள் கோப பார்வையை திருப்புவதை தானே பரிமாணவாதிகள் காலங்காலமா செய்யுறாங்க.

உண்மதான் சார். தென் கொரியாவில் மத நம்பிக்கைகள் ஆழமா வேரூன்றி வருவது தான் இதற்கு காரணம்னு பரிணாமவாதிகள் குற்றம் சுமத்துறாங்க. ஆனா இதில் உண்மை இல்லைனு தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேச்சர் சொல்லுது. தங்களின் பரிணாம எதிர்ப்புக்கும், மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லேன்னு ஆசிரியர்கள் சொல்லிருக்காங்க.

ஆஹா...

ஆமா சார். தென் கொரியாவின் 40% உயிரியல் ஆசிரியர்கள் "பரிணாமம் நடக்கின்றதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம்" இருப்பதாக சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம, 50% ஆசிரியர்கள் "பரிணாமத்தின்படி தான் மனிதன் வந்தான்" என்பதையும் ஏற்றுக்கொள்ளல.

இந்த புள்ளிவிபரங்கள கேட்க ரொம்ப வியப்பா இருக்கு. இதுல இன்னொரு விசயத்தை கவனித்தீங்களா சார்? பரிணாம எதிர்ப்பு என்பது முன்பெல்லாம் வெளியே மட்டும் தான் இருக்கும். இப்ப கொஞ்ச கொஞ்சமா கல்வித்துறையில் நுழைய ஆரம்பிச்சுருச்சு. முதல்ல அமெரிக்கா, இப்ப தென் கொரியா. இது ஒரு நல்ல அறிகுறி சார். உண்மைய பசங்க தெரிஞ்சுக்க இது உதவும்.

துருக்கிய விட்டுட்டீங்களே...

அப்படியா? துருக்கில தான் ஏற்கனவே படைப்புவாதம், பரிணாமம் என்று இரண்டையும் பள்ளியில் சொல்லி கொடுக்குறாங்களே...

இது வேற மேட்டர். துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் "பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில் படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு சென்ற மாதம் நடந்திருக்கு. இதில் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி இருக்காங்க. பல்கலைகழக அளவில் இப்படியான கருத்தரங்கு நடப்பது இதுவே முதல் முறைன்னு சொல்லப்படுது. அறிவியல் ஆய்வில் முன்னணியில் உள்ள துருக்கி போன்ற நாட்டில், அதுவும் பாரம்பரியமிக்க ஒரு பல்கலைகழகத்தில் இப்படியான கருத்தரங்கு நடந்திருப்பது பலருடைய புருவத்தை உயர்த்தியிருக்கு.

அடடா.....ஆக மொத்தத்துல (கல்வித்துறையில்) பரிணாம எதிர்ப்பு உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க....

க க க போ.....

:-) :-)

மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை காத்து, இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References:
1. South Korea surrenders to creationist demands - Nature, 5th June 2012. link
2. Creationists In South Korea Force Removal Of Evolution From High-School Textbooks - Huffinton post. 14th June 2012. link
3. Evolution Under Assault in South Korea’s Schools - Wired. 6th June 2012. link
4. South Korea to evolution from textbooks - New york daily news. 6th June 2012. link
5. Evolutionary Theory to Disappear from Science Textbooks - Korea bang. May 18, 2012. link
6. Lazy biology textbooks, the theory of evolution undergo revision attack - Seoul Newspaper. link
7. Turkey: Creationists Want to Airbrush Darwin Out of Evolutionary Picture - Eurasia. 7th June 2012. link
8. Is South Korea Removing Evolution From Public School Textbooks? - Answering Genesis, 12th June 2012. link
9. Is Nature Presenting the Whole Story about South Korea? - uncommondescent, 5th June 2012. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ