நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
சார்....கேட்டீங்களா சங்கதிய?
இவ்ளோ ஆர்வமா கேட்குறீங்க...என்ன விசயம்?
உலக பிரசித்திப்பெற்ற நேச்சர் (Nature) ஆய்விதழ் சமீபத்துல ஒரு தலையங்கம் வெளியிட்டிருக்காங்க..."South Korea surrenders to creationist demands" (படைப்புவாதிகளின் கோரிக்கைகளுக்கு தென் கொரியா சரணடைந்தது). எப்படி சார் இருக்கு தலைப்பு?
ரொம்ப டாப்பு சார். செம அதிரடியா இல்ல இருக்கு. நேச்சரின் இந்த தலைப்புக்கு வலையுலகமே அதிர்ந்திருக்குமே?
உண்மைதான். குறிப்பா சொல்லனும்னா பரிணாமவாதிகள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க :-)
இருக்காதா பின்னே!!! அறிவியல் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் முன்னனியில் உள்ள நாடாயிற்றே தென் கொரியா. அப்படிப்பட்ட நாடு படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா சொன்னா ஒருவித ஆச்சர்யம் இருக்கத்தானே செய்யும், பரிணாமவாதிகளின் மனக் குமுறலை சொல்லவா வேணும்....அது சரி, அந்த கட்டுரைல என்னதான் எழுதியிருந்தாங்க நேச்சர்? அத நீங்க இன்னும் சொல்லலையே...
விஷயம் இதுதான். பரிணாமத்துக்கு ஆதாரமா காட்டப்படும் உதாரணங்களை உயர்க்கல்வி அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க சொல்லி பரிந்துரைத்திருக்கின்றது தென் கொரிய கல்வித்துறை.
அட்ரா சக்க......அட்ரா சக்க................................................................அட்ரா சக்க...மேலே சொல்லுங்க சார், ரொம்ப சுவாரசியமா இருக்கு....
"பாடநூல் மறுசீரமைப்பு கழகம் (Society for textbook revise, STR)" என்ற அமைப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பின்னணியில் செயல்பட்டிருக்கு. இவங்க என்ன செய்தாங்கன்னா, பரிணாமத்துக்கு (வலுவான) ஆதாரமா காட்டப்படும் "குதிரை பரிணாமம்" ஒரு கற்பனையே என்றும், அதனை பாடநூல்களில் இருந்து தூக்கணும் என்றும் அறிவியல் ஆதாரங்களை சுட்டிக்காட்டி அரசுக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க...
அப்படி போடு அருவாள...ம்ம்ம் அப்புறம்?
இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் அப்படின்னு ஒரு உயிரினத்த பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.
அட ஆமா...டைனாசர்ல இருந்து பறவைகள் வந்துச்சுன்னு சொல்றதுக்கு ஆதாரமா காட்டுவாங்களே அந்த உயிரினத்த பத்தி தானே சொல்றீங்க..
ஆமா சார். அதே தான். இந்த உயிரினம் குறித்த சர்ச்சைகள் சமீப காலமா அதிகரித்து இருக்கு. இதே நேச்சர், இந்த உயிரினம் "உலகின் முதல் பறவை" என்ற அந்தஸ்த்தில் இருந்து கீழிறக்கப்பட்டதா சிலபல மாதங்களுக்கு முன்னாடி தலையங்கம் வெளியிட்டது நினைவிருக்கலாம்...
எஸ் எஸ்...நானும் படிச்சேன். பரிணாமவாதிகளின் மிச்சம் மீதி இருந்த ஒரே ஆதாரமான(?) ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் அவங்களுக்கு டாடா காட்டிய அந்த செய்திய மறக்க முடியுமா... :-) :-) (பரிணாம ஆதரவாளர்களுக்கு ஆர்க்கியாப்டெரிக்ஸ் bye-bye சொன்னது குறித்த இத்தளத்தின் விரிவான அலசலை <<இங்கே>> காணலாம்)
ஹி ஹி...இப்ப என்ன மேட்டர்னா, STR சமர்பித்த பெட்டிஷன்ல இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த தகவல்களையும் பாடப்புத்தககங்களில் இருந்து நீக்கனும்னு சொல்லிருக்காங்க. அதற்கான காரணங்களையும் சுட்டி காட்டி இருக்காங்க...
சரியான அணுகுமுறை தானே சார்.
ம்ம்ம்...குதிரை பரிணாமத்தையும், ஆர்க்கியாப்டெரிக்ஸ்சையும் நீக்க சொல்ற இந்த பெட்டிஷனை கூர்ந்து கவனித்த தென் கொரிய கல்வித்துறை அத ஏத்துக்கிட்டாங்க. பாடநூல் தயாரிக்கும் பதிப்பாளர்களிடம் இதுகுறித்து அறிவிப்பு செய்தாகிவிட்டது. விளைவு, பல பதிப்பாளர்கள் அந்த பரிணாம உதாரணங்களை நீக்கும் வேலைய துவங்கிட்டாங்க..
ஓஹோ...அதெல்லாம் சரி சார். ஒரு அமைப்பு ஆதாரங்கள் அடிப்படையில் பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதன் அடிப்படையில் தவறான தகவல்களை பாடநூல்களில் இருந்து நீக்குறாங்க. இதுல எங்கே படைப்புவாதிகள் வந்தாங்க? ஏன் படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா நேச்சர் சொல்லணும்?
அதுவா...இந்த STR இருக்குல்ல, அது படைப்புவாதத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்போட கிளை அமைப்புன்னு நேச்சர் சொல்லுது.
ஒ அதான் மேட்டரா...
இது மட்டும் இல்ல சார். எதிர்க்காலத்துல மனித பரிணாமம் குறித்த தகவல்கள் மற்றும் மேலும் பல பரிணாம உதாரணங்களையும் நீக்க சொல்லி பெட்டிஷன் கொடுக்க போறாங்க STR.
சூப்பரப்பு...செம டெரரா இல்ல இருக்கு. இன்னொன்ன கவனிச்சீங்களா. குதிரை பரிணாமமும் சரி, ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் சரி, இவை குறித்த சர்ச்சைகள் அதிகளவில் இருப்பது அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்னு தான். இப்படியான குழப்பமான உதாரணங்களை பசங்க ஏன் படிக்கணும்? பரிணாமவாதிகளே இந்த உதாரணங்கள நீக்க சொல்லிருக்கணும்.
சரியா புடுச்சீங்க சார் பாய்ன்ட்ட....பரிணாமவாதிகள் இந்த உதாரணங்கள நீக்க சொல்லி அரசிடம் கேட்டிருந்தா இந்த அளவுக்கு நேச்சரோ அல்லது பரிணாம ஆதரவாளர்களோ குதிப்பாங்களா? ஆக, இங்கே மேட்டர் என்னான்னா, தவறான உதாரணங்கள நீக்க சொன்னது பிரச்சனை இல்ல. படைப்புவாதிங்க சொல்லி நீக்கனுமா...இதான் பரிணாமவாதிகளின் கூச்சலுக்கு காரணம்.
தானும் படுக்க மாட்டேங்குறாங்க...தள்ளியும் படுக்க மாட்டேங்குராங்கன்னு சொல்லுங்க...
ஹி ஹி ஹி...வேற விதமா சொல்லனும்னா, தன் கண்ணை தானே குத்திகிட்டா பரவாயில்லை, ஆனா அடுத்தவன் மட்டும் குத்தக்கூடாது. இதுதான் பரிணாமவாதிகளின் தற்போதைய நிலை. தவறான உதாரணங்களை நீக்க சொன்னதை, பரிணாமத்தையே பாட நூல்களில் இருந்து நீக்க சொன்னது போல பரிணாம ஆதரவாளர்கள் சித்தரித்து விசயத்தை திசை திருப்ப முயல்வது மோசமான முன்னுதாரணம்.
:-) :-) இது என்ன அவங்களுக்கு புதுசா சார். லூஸ்ல விடுங்க. இப்படி ஒரு ஒரு ஆதாரமா தூக்கி எரிந்துக்கிட்டு இருந்தா பரிணாமத்துக்கு ஆதாரமா வேற என்ன தான் சார் மிஞ்சும்? பரிணாமத்துக்கு ஆதாரமா இருந்த எல்லாமே மண்ணோட மண்ணா போச்சு. அவற்றில் சிலபல இன்னும் பாடப்புத்தகங்களில் ஓட்டிக்கிட்டு இருக்கு. இப்ப அந்த சில உதாரணங்களை நீக்கி தென் கொரியா நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இனி கொஞ்ச கொஞ்சமா பல நாடுகளிலும் இதனை மேற்கோள் காட்டி பாடத்திட்டங்களில் இருந்து பரிணாம ஆதாரங்கள் தூக்கப்பட வழிவகுக்கப்படலாம்.
அருமையா சொன்னீங்க...இதான் பரிணாமவாதிகளின் கவலைக்கு காரணம். தவறான உதாரணங்கள பசங்க படித்தாலும் கவலை இல்ல. ஆனா தங்கள் "நம்பிக்கைக்கு" மட்டும் பங்கம் வந்திர கூடாது.
தென் கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பரிணாமவாதிகளின் ரியாக்ஸன் எப்படி இருந்தது?
தங்களிடம் இது குறித்து தென் கொரிய அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லைனு பரிணாமவாதிகள் சொல்றாங்க. ஆனா, தங்கள் குழுவில் உயிரியல் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிப்பதாக STR கூறுகின்றது.
ம்ம்ம்...இதுக்கெல்லாம் மதம் தான் காரணம்னும் பரிணாமவாதிகள் குற்றம் சாட்டி இருப்பாங்களே?
எப்படி சார். அவங்க எண்ண ஓட்டங்களை அச்சு பிசகாம படம் புடிக்கிறீங்க...
:-) இது என்ன இன்னைக்கு நேத்தா சார் நடக்குது. கேட்குற கேள்விக்கு பதில் தராம மதத்த நோக்கி தங்கள் கோப பார்வையை திருப்புவதை தானே பரிமாணவாதிகள் காலங்காலமா செய்யுறாங்க.
உண்மதான் சார். தென் கொரியாவில் மத நம்பிக்கைகள் ஆழமா வேரூன்றி வருவது தான் இதற்கு காரணம்னு பரிணாமவாதிகள் குற்றம் சுமத்துறாங்க. ஆனா இதில் உண்மை இல்லைனு தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேச்சர் சொல்லுது. தங்களின் பரிணாம எதிர்ப்புக்கும், மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லேன்னு ஆசிரியர்கள் சொல்லிருக்காங்க.
ஆஹா...
ஆமா சார். தென் கொரியாவின் 40% உயிரியல் ஆசிரியர்கள் "பரிணாமம் நடக்கின்றதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம்" இருப்பதாக சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம, 50% ஆசிரியர்கள் "பரிணாமத்தின்படி தான் மனிதன் வந்தான்" என்பதையும் ஏற்றுக்கொள்ளல.
இந்த புள்ளிவிபரங்கள கேட்க ரொம்ப வியப்பா இருக்கு. இதுல இன்னொரு விசயத்தை கவனித்தீங்களா சார்? பரிணாம எதிர்ப்பு என்பது முன்பெல்லாம் வெளியே மட்டும் தான் இருக்கும். இப்ப கொஞ்ச கொஞ்சமா கல்வித்துறையில் நுழைய ஆரம்பிச்சுருச்சு. முதல்ல அமெரிக்கா, இப்ப தென் கொரியா. இது ஒரு நல்ல அறிகுறி சார். உண்மைய பசங்க தெரிஞ்சுக்க இது உதவும்.
துருக்கிய விட்டுட்டீங்களே...
அப்படியா? துருக்கில தான் ஏற்கனவே படைப்புவாதம், பரிணாமம் என்று இரண்டையும் பள்ளியில் சொல்லி கொடுக்குறாங்களே...
இது வேற மேட்டர். துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் "பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில் படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு சென்ற மாதம் நடந்திருக்கு. இதில் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி இருக்காங்க. பல்கலைகழக அளவில் இப்படியான கருத்தரங்கு நடப்பது இதுவே முதல் முறைன்னு சொல்லப்படுது. அறிவியல் ஆய்வில் முன்னணியில் உள்ள துருக்கி போன்ற நாட்டில், அதுவும் பாரம்பரியமிக்க ஒரு பல்கலைகழகத்தில் இப்படியான கருத்தரங்கு நடந்திருப்பது பலருடைய புருவத்தை உயர்த்தியிருக்கு.
அடடா.....ஆக மொத்தத்துல (கல்வித்துறையில்) பரிணாம எதிர்ப்பு உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க....
க க க போ.....
:-) :-)
மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை காத்து, இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
References:
1. South Korea surrenders to creationist demands - Nature, 5th June 2012. link
2. Creationists In South Korea Force Removal Of Evolution From High-School Textbooks - Huffinton post. 14th June 2012. link
3. Evolution Under Assault in South Korea’s Schools - Wired. 6th June 2012. link
4. South Korea to evolution from textbooks - New york daily news. 6th June 2012. link
5. Evolutionary Theory to Disappear from Science Textbooks - Korea bang. May 18, 2012. link
6. Lazy biology textbooks, the theory of evolution undergo revision attack - Seoul Newspaper. link
7. Turkey: Creationists Want to Airbrush Darwin Out of Evolutionary Picture - Eurasia. 7th June 2012. link
8. Is South Korea Removing Evolution From Public School Textbooks? - Answering Genesis, 12th June 2012. link
9. Is Nature Presenting the Whole Story about South Korea? - uncommondescent, 5th June 2012. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்,
ReplyDeleteஅட்ரா சக்க......அட்ரா சக்க................................................................அட்ரா சக்க...மேலே சொல்லுங்க சார், ரொம்ப சுவாரசியமா இருக்கு
வ அலைக்கும் சலாம்,
Deleteஇதுக்கு மேலே என்ன சொல்றது ஜாஹிர் பாய்...சொன்னதுக்கே தர்க்கரீதியா ஒரு விளக்கமும் வரப்போவதில்லை... :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
sako...!
ReplyDeletenee....nda naalukku piraku-
arumaiyaana pathivu!
vaazhthukkal!
சகோ சீனி,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி...
ஸலாமுன் அலைக்கும் சகோ.ஆஷிக் அஹமத்,
ReplyDeleteவெல்கம் பேக் ஆஃப்ட்டர் தி மச் நீடட் ப்ரேக்..!
செமை ரீ என்ட்ரி... சகோ..! கலக்கல் பதிவு... கலக்கல் புது ஸ்டைல்..! நிறைய மாற்றம் தெரிகிறது..! :-)))
ஆக மொத்தத்துல.... கல்வித்துறையில் பொய்கள் நீக்கப்பட்டு உண்மைகள் சிறிது சிறிதாக உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க..!
முஹம்மது ஆஷிக்,
Deleteவ அலைக்கும் சலாம்
//நிறைய மாற்றம் தெரிகிறது..! :-)))//
நல்ல முறையில் உம்மத்துக்கு பயன் அளிக்கும் விதத்தில் மாற்றம் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். லோக்கல் ஸ்லான்கில் ட்ரை பண்ணி பார்த்தேன். அவ்ளோதான். அல்ஹம்துலில்லாஹ் எல்லாரும் நல்லா வந்திருக்குன்னு சொல்றீங்க. எனினும் இது போல தொடர்ந்து எழுதும் எண்ணம் இல்லை.
// கல்வித்துறையில் பொய்கள் நீக்கப்பட்டு உண்மைகள் சிறிது சிறிதாக உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க..!//
க க க போ :)
வஸ்ஸலாம்..
அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் வரஹ்...
ReplyDeleteஆமா... இந்த உரையாடல் யாருக்கும் யாருக்கும் இடையில் நடந்தது? ப்ளாக் கலர் எழுத்து நீங்க பேசினதா? ஹி..ஹி..ஹி..
பாவம் பரிணாமவாதிகள் ஏற்கனவே நொந்து போயிருப்பாங்க... நாங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சவா? ஹா...ஹா..ஹா...
பரிணாமம் என்னும் மூடநம்பிக்கை ஒழியட்டும்!
அருமையான கட்டுரை சகோ.
ஜஸக்கல்லாஹ் ஹைர்
சகோதரி ஆமினா,
Deleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
//ஆமா... இந்த உரையாடல் யாருக்கும் யாருக்கும் இடையில் நடந்தது? ப்ளாக் கலர் எழுத்து நீங்க பேசினதா? //
பதிவ படிச்சு நல்லா இருந்தா ரசிக்கணும். ஆராய்ச்சி எல்லாம் பண்ண கூடாது :)
//பாவம் பரிணாமவாதிகள் ஏற்கனவே நொந்து போயிருப்பாங்க... நாங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சவா?//
ஹி ஹி ஹி....பாய்ச்ச பாய்ச்ச தான் செத்த பிணம் எந்திருக்காம இருக்கும்...
//பரிணாமம் என்னும் மூடநம்பிக்கை ஒழியட்டும்!//
ஆமீன்...ஆமீன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ
ReplyDeleteஅருமையான ஆக்கம் ....பரிணாமத்தை படிப்படியா தூக்குவதைப்போல
"வாள் முனையில் இஸ்லாம் பரவியது" என்பதையும் தூக்கணும் பாய் ..
உண்மையாக சொல்லப்போனா, பரிணாமத்தைப் பற்றியும், அதன் லேட்டஸ் வீழ்ச்சியை பற்றியும் தங்கள் பதிவின் முலமாகத்தான் அறியமுடிகிறது...
சகோதரர் நாசர்,
Deleteவ அலைக்கும் சலாம்,
//"வாள் முனையில் இஸ்லாம் பரவியது" என்பதையும் தூக்கணும் பாய் ..//
எனக்கு தெரிந்து இந்த வாதம் இப்போது ரொம்பவே குறைந்து விட்டதே? இன்னுமா இப்படியெல்லாம் வாதிக்கின்றனர்?
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்...
ASSALAM ALIKUM BRO "தன் கண்னை தானே குத்திக்கட்டா பரவாயில்லை ஆனா அடுத்தவன் மட்டும் குத்தக்கூடாது"[SUPER PUNCH]
ReplyDeleteரொம்ப பாவம் சகா, அவங்களால் முடியல அவர்களால் பரிமாணம் என்ற மதத்தை காபாற்ற.
வாங்க பிரதர் பயத் ரஹ்மான்,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//ரொம்ப பாவம் சகா, அவங்களால் முடியல அவர்களால் பரிமாணம் என்ற மதத்தை காபாற்ற.//
அசத்தியம் நிலைக்காது. அது தான் வரலாறு நமக்கு காட்டியுள்ள பாடம்.
வருகைக்கு நன்றி...
அவங்க பரிணாமவாதிகள் அல்ல...
ReplyDeleteபரிதாப வாதிகள்.....
இதில் யாருக்கு டவுட்டு இருந்தாலும், பரிணாமவாதின்னு சொல்லிகிட்டு திரியிர தமிழ் பதிவர்கள்கிட்ட பேசி பாருங்க.... காமெடியா இருக்கும்.... நான் பேசி இருக்கேன்.... பாதி பேசிகிட்டு இருக்கைலே நான் முழு பரிணாமவாதி இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க... காமெடி பீஸுங்க....
அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் அண்ணன்,
Delete//பாதி பேசிகிட்டு இருக்கைலே நான் முழு பரிணாமவாதி இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க//
உண்மை உண்மை உண்மை....பதில் சொல்றேன்னு சொல்லி எல்லாத்தையும் பேசிட்டு கடைசில நாம சொன்னதுக்கு மறுப்பே சொல்ல மாட்டாங்க. ஹா ஹா ஹா. இதுக்கா இம்மாம் பெரிய பேச்சுன்னு நாம அசந்தே பூடுவோம்.....இன்னும் செம தமாஷ் எல்லாம் இருக்கு... ஒரு பதிவா போடுவோம் இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDelete== இது மட்டும் இல்ல சார். எதிர்க்காலத்துல மனித பரிணாமம் குறித்த தகவல்கள் மற்றும் மேலும் பல பரிணாம உதாரணங்களையும் நீக்க சொல்லி பெட்டிஷன் கொடுக்க போறாங்க STR.==
அதாங்க மேட்டரு...
செம ...சகோ
எழுத்து நடையில் புதிய மாற்றம்...
ம்... எதிர்க்குரலுக்கு ஆதரவுக்குரல் வலுப்பது தெரிகிறது.
மீண்டுமொரு சிறபான பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு குலாம்...
Delete//எழுத்து நடையில் புதிய மாற்றம்...//
எதிர்க்குரலின் ஆரம்ப கால பதிவுகளில் நான் இம்மாதிரியான நடையை பயன்படுத்தி உள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் தொட்டுல்லதால் உங்களுக்கு புதிதாக தெரிகின்றது.
//ம்... எதிர்க்குரலுக்கு ஆதரவுக்குரல் வலுப்பது தெரிகிறது.//
என்னவொரு வில்லத்தனம்... :) :)
தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி குலாம்.
சகோ ஆஷிக்
ReplyDeleteரொம்ப எளிமையான கேள்விகள்.
இரண்டு உயிர்கள் வெவ்வேறு உயிரினம் என்பதற்கான உங்கள் வரையறை என்ன என்று கேட்டேன். அதற்கு நீங்கள் பதில் சொன்னமாதிரி தெரியவில்லையே?
-
மனிதரிடம் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னர் எந்த விலங்கிடம் எந்த அடிப்படையில் பரிசோதித்து பார்ப்பீர்கள் என்று கேட்டேன். இதற்கும் பதில் சொன்னதுபோல தெரியவில்லை.
முன்பு ஏதாவது ஒரு பதிவில் இதனை கூறியிருந்தால் அதன் லிங்கை இங்கே கொடுங்கள்.
நன்றி
சகோதரர் அனானி,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//இரண்டு உயிர்கள் வெவ்வேறு உயிரினம் என்பதற்கான உங்கள் வரையறை என்ன என்று கேட்டேன்.//
Genome (மரபணு தொகுப்பு).
//மனிதரிடம் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னர் எந்த விலங்கிடம் எந்த அடிப்படையில் பரிசோதித்து பார்ப்பீர்கள் என்று கேட்டேன்.//
இதுவும் மேலே கூறியுள்ள கருத்தை சார்ந்து தான்.
மேலும் சகோ, தயவுக்கூர்ந்து பதிவின் சாரம்சத்தை சார்ந்து கருத்து தெரிவியுங்கள். இந்த பதிவானது, பள்ளிகளில் பரிணாமம் குறித்த உதாரணங்கள் நீக்கப்படுவது குறித்து பேசுகின்றது. இதை சார்ந்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். பரிணாமம் உண்மையா பொய்யா என்பது குறித்து இத்தளத்தில் நிறைய பதிவுகள் உள்ளன. அங்கே உங்களின் மேலே கூறிய கேள்விகளை பதித்தால் பதிவின் சாரம்சம் திசை திருப்பபடாமல் இருக்கும்.
இந்த பதிவு திசை திருப்பப்படுவதை நான் விரும்பவில்லை. ஆகையால் பதிவின் சாரம்சத்தை சார்ந்து மட்டும் கேள்வி எழுப்பவும்.
தங்களின் கேள்விகளுக்கு முன்னமே என் கருத்தை கூறியதாக நினைக்கின்றேன். அப்படி இல்லை என்றால் மன்னிக்கவும். என் நிக்காஹ் நிகழ்வால் பதிவுலகம் பக்கம் சில காலம் வரவில்லை.
வஸ்ஸலாம்...
பரிணாமவாதிகளுக்கு உள்ளே ஒரே ஆதாரம் (ஙே ) ஆர்க்கியாப்டெரிக்ஸ்தான் . இப்போ தென் கொரியாவிலும் ஆப்பா...!! ஹா..ஹா :-))))
ReplyDeleteசகோ ஜெய்லானி,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
//பரிணாமவாதிகளுக்கு உள்ளே ஒரே ஆதாரம் (ஙே ) ஆர்க்கியாப்டெரிக்ஸ்தான்//
பாஸ், அது தான் எப்பவோ அவங்க கனவில் இருந்து விலகிருச்சே.... :-) இப்ப பாட புத்தகத்தில் இருந்து விலகி இருக்கு அவ்ளோதான்..
நம்ம நாட்டுலயும் டார்வினின் முட்டாள்தனமான பரிணாமம் வளர்ச்சி குறித்த பாடத்திட்டத்தை மாற்றினால் தகும். இதற்கு (டார்வின் கொள்கை) எந்தவிதமான ஆதாரமோ கிடையாது. மாணவர்களும் குழப்பமடையாமல் இருப்பார்கள். ஆங்கிலேயர் கொண்டு வந்த பொருளாதாரத்தை அடிப்படையா பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் நெஞ்சில் விஷத்தை பதித்துள்ளனர். குர்ஆனிய கல்வி முறைப்படி பாடத்திட்டத்தை அமுல்படுத்தினால் தெரியும் இவர்களது வண்டவாளங்கள்.
ReplyDeleteநல்ல பகிர்வு.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய விசயங்களை சொல்லியிருக்கீங்க.. நன்றி சகோ ஆஷிக் அஹ்மத்.
சகோதரர் ஸ்டார்ஜன்,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ஆம் சகோதரர் உண்மைதான். இந்தியாவில் இந்த அறிவுக்கு பொருந்தாத பாடத்திட்டத்தை அறிவியலின் பெயரால் புகுத்துவதை நிச்சயம் தடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதற்கான முயற்சியில் ஒருமித்த கருத்துடைய அறிஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி ஆவணத்தில் உள்ளது. துவா செய்யுங்கள்.
வஸ்ஸலாம்...
salam bro! Masha allah super post!
ReplyDeleteadithu thuvaithu kayapattachu :)
சகோதரர் ஜாபர் கான்,
Deleteவ அலைக்கும் சலாம்,
//adithu thuvaithu kayapattachu :)//
ஹி ஹி..கிளிப் மாட்டி விடுறத பத்தி சொல்லலையே...
தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி பாஸ்...
மிக நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு எப்பவும் போல மிக அருமையான தகவலுடன் RE-ENTRY ஆயிரிக்கீங்க..
ReplyDeleteஉங்களிடம் இதுபோன்ற ஆக்கங்களை மேலும் எதிர்பாக்கும் உங்கள் மிக நீண்ட நாள் வாசகன்
முஹம்மத் ஹிமாஸ் நிலார்.
முஹம்மத் ஹிமாஸ் நிலார்,
Delete//உங்களிடம் இதுபோன்ற ஆக்கங்களை மேலும் எதிர்பாக்கும்//
இன்ஷா அல்லாஹ் பிரதர். எதிர்க்குரலின் அனைத்தின் சூழ்நிலைகளிலும் அதற்கான ஆதரவு அளிக்கும் உங்களின் நல்லுள்ளத்திற்கு ஜசாக்கல்லாஹ்.
சலாம் சகோ ஆஷிக்!
ReplyDeleteதிருமணத்துக்கு பிறகு கலக்கலான ஒரு பரிணாம பதிவு. எழுதும் முறையிலும் மாற்றங்கள் தெரிகிறதே!(சகோதரி பதிவு எழுதுவதில் உதவுகிறார்களோ?) :-) கொஞ்சம் இலகுவான தமிழிலும் பதிவு இருக்கிறது. வாழ்த்துக்கள்.
எங்கே சார்வாகன்? பதிலளிக்க உடன் வரவும்.
சுவனப்பிரியன் அண்ணன்,
Deleteவ அலைக்கும் சலாம்,
//எழுதும் முறையிலும் மாற்றங்கள் தெரிகிறதே!(சகோதரி பதிவு எழுதுவதில் உதவுகிறார்களோ?)///
அவங்க ப்ரூப் ரீடிங் பார்ப்பதோடு சரி. எழுதும் முறை நான் ஏற்கனவே ட்ரை செய்த ஒன்றுதான்.
//எங்கே சார்வாகன்? பதிலளிக்க உடன் வரவும்.//
வழக்கம் போல "மறுப்பு இல்லாத மறுப்புபதிவு (?)" போட்டிருக்காரு என்று நினைக்கின்றேன். நீங்க பார்க்கலையா?
.இதுக்கெல்லாம் மதம் தான் காரணம்னும் பரிணாமவாதிகள் குற்றம் சாட்டி இருப்பாங்களே?
ReplyDeleteஎப்படி சார். அவங்க எண்ண ஓட்டங்களை அச்சு பிசகாம படம் புடிக்கிறீங்க...
:-) இது என்ன இன்னைக்கு நேத்தா சார் நடக்குது. கேட்குற கேள்விக்கு பதில் தராம மதத்த நோக்கி தங்கள் கோப பார்வையை திருப்புவதை தானே பரிமாணவாதிகள் காலங்காலமா செய்யுறாங்க.
சகோதரர் அனானி,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கு நன்றி..
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ...
ReplyDeleteவழக்கம் போல.. அருமையான பதிவு. :))
அனைவர்க்கும் எளிதில் புரியும்படியான எழுத்து நடை.... உங்கள் கல்வி ஞானத்தை அல்லாஹ் மென்மேலும் அதிகரிக்க செய்வானாக ஆமீன்..!
சகோதரி ஷர்மிளா ஹமீத்,
Deleteவ அலைக்கும் சலாம்,
ஊக்கத்திற்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ...
ReplyDeleteஎத்தனை அடி வாங்கினாலும் அசராம இருக்காங்களே? :D :D :D
இது போல மற்ற நாட்டு பாடங்களிலும் நீக்கினால் நலம்.
பாஸித் தம்பி,
Deleteவ அலைக்கும் சலாம்,
//எத்தனை அடி வாங்கினாலும் அசராம இருக்காங்களே? :D :D :D///
இது, building strong basement weak கதை தான்...ஹா ஹா ஹா
//இது போல மற்ற நாட்டு பாடங்களிலும் நீக்கினால் நலம்.//
இன்ஷா அல்லாஹ்...
ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு பதிவுனாலும்.மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.
ReplyDeleteபரினாமவாதிகளின் வாதங்கள் இனி பப்பர பப்ப தான்...
சார்வாகன் வந்தாலும் .....வழக்கமான (அர்த்தமில்லா)பதில் தானே வரும் சகோ.சுவனப்பிரியன்...பரினாமவாதிகளே அப்படி தானே.எத்தன பெற பாக்குறோம் சகோ.
புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்
திருவாளப்புத்தூர் முஸ்லீம்,
Deleteவ அலைக்கும் சலாம்,
//பரினாமவாதிகளின் வாதங்கள் இனி பப்பர பப்ப தான்...//
அவங்க வாதங்கள் எப்பவுமே பப்பர பப்ப தான் சகோ.. :) :)
//சார்வாகன் வந்தாலும் .....வழக்கமான (அர்த்தமில்லா)பதில் தானே வரும் சகோ.சுவனப்பிரியன்...//
அப்படித்தான் தான் சகோ வந்திருக்கு... :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சத்தியம் நிச்சயம் வெற்றிபெறும், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
ReplyDelete//சத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும். வரலாறு சொல்லியுல்லதும் அதைத்தான்.//
Delete'அசத்தியம்' என்று இருக்கனும்.
சொல்லியுல்லதும் - 'சொல்லியுள்ளதும்'.
கொஞ்சம் பிழை திருத்தி பின்னூட்டமிடுக.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
ReplyDeleteஅருமையான பதிவுடன் சூப்பர் ரீ என்ட்ரி, வாழ்த்துகள் சகோ..
சகோதரர் Syed Ibramsha,
Deleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ஊக்கத்திற்கு நன்றி பிரதர்...
புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
ReplyDeleteகருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
ReplyDeleteஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)
http://nidurseasons.blogspot.in/2012/07/5.html
Please forward to all