Pages

Tuesday, October 30, 2012

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான். டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது. 

நீங்கள் சில வரிகளில் பார்த்த இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆய்வாளர்கள் வெட்கி தலைகுனியும் அளவு அசிங்கமான உண்மைகளும், நம்பிக்கை சார்ந்த துரோகங்களும் ஒளிந்திருக்கின்றன. 

டிஸ்கவரி ஊடகம் இந்த பித்தலாட்டதிற்கு இரண்டாம் இடத்தை கொடுகின்றது (முதல் இடம் நம்ம பில்ட்டவுன் மனிதனிற்கு தான். பார்க்க <<இங்கே>>). இந்த முக்கிய செய்தியை சரியாக புரிந்துக்கொள்ள சில கிளைச்செய்திகளை நாம் நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்வோம். வேறெந்த துறையையும் விட பரிணாமத்துறையில் பித்தலாட்டங்கள் பரவலாக காணப்பட காரணமென்ன? 

மேலே காணும் கேள்விக்கு விடையை கண்டுபிடிப்பது இந்த பதிவுக்கு அவசியமாகின்றது. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக காலப்போக்கில் மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. டார்வின் காலத்திலிருந்தே இதற்கான ஆதாரங்களை அதன் நம்பிக்கையாளர்கள் தேடிக்கொண்டு தான் வருகின்றனர். தங்களின் இந்த நம்பிக்கையை நிரூபிக்குமாறு ஒரு படிமம் கிடைத்தால் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கவும் இவர்கள் தயாராகவே இருக்கின்றனர். 

டைனாசர் படிமங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடமாக சீனா திகழ்கின்றது. இங்குள்ள பல விவசாயிகள் நிலத்தை தோண்டி படிமங்கள் எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். தாங்கள் எடுக்கும் படிமங்களை இடைத்தரகர்களிடம் விற்றுவிடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அவற்றை ஆய்வாளர்களுக்கோ அல்லது அருங்காட்சியகங்களுக்கோ விற்று விடுவார்கள். 

இங்கு தான் நீங்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய இடம் வருகின்றது. ஒரு படிமம் பரிணாம கொள்கையை உறுதிப்படுத்துவது போல இருந்தால் அதற்கு விலை அதிகம். இதனாலேயே விவசாயிகள் இப்படியான படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிக விலைக்கு ஆசைப்பட்டு, பரிணாம கொள்கை எதிர்பார்ப்பது போன்று, படிமங்களில் மாற்றம் செய்து விற்றுவிடுகின்றனர். 

படிம வியாபாரத்தின் இத்தகைய இருண்ட பக்கத்தில் தான் நே.ஜி மாட்டிக்கொண்டது. காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் தவறை செய்கின்றனர். ஆனால் பரிணாம ஆய்வாளர்களுக்கு என்ன வந்தது? அந்த படிமங்களை நன்கு ஆராய்ந்தாலே இவை பித்தலாட்டம் செய்யப்பட்டவை என்று புரிந்துவிடுமே? இத்தகைய கேள்விகள் உங்களுக்கு எழுவது புரிகின்றது. இதனை நோக்கி தான் இப்போது பயணிக்க போகின்றோம், பதிவின் மையமும் அதுதான். 

சிறிய அளவிலான டைனாசர்கள் படிப்படியாக உருமாறி பறவைகளாக பரிணமித்ததாக ஒரு கோட்பாடு உண்டு. (இதனை அறிந்த) ஒரு விவசாயி அதிக விலைக்கு ஆசைப்பட்டு, தான் கண்டெடுத்த பழங்கால பறவையின் படிமம் ஒன்றில் அதன் உடலுடன், டைனாசரின் வாலை கொண்ட மற்றொரு படிமத்தை ஒட்டவைத்து ஒரு இடைத்தரகரிடம் விற்றுவிட்டார். 

நுணுக்கமாக செய்யப்பட்ட இந்த பித்தலாட்டம், இயல்பாகவே, ஒரு அதிரடி ஷோவிற்கு ரெடியாகிவிட்டது. காரணம், பறவையின் உடலமைப்பும் டைனாசரின் உடலமைப்பும் ஒருசேர இருந்ததால் "டைனாசரில் இருந்து பறவைகள் வந்தது" என்ற யூகத்திற்கு ஆதாரமாக காட்டப்பட சிறந்த படிமம் இது. டைனாசர்களுக்கும் பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) இதனை காட்டி பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கலாம் (பின்னாளில் இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் என்று பெயர் சூட்டப்பட்டது)

ஆர்க்கியோராப்டர் படிமம் 

காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன. விவசாயிடம் படிமத்தை பெற்ற தரகர் அதனை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்திவிட்டார் (ஜூன் 1998). அங்கு இந்த படிமம் எதிர்பார்த்தது போல சலசலப்பை உருவாக்க ஆரம்பித்தது. இந்த படிமம் ஆர்வத்தை தூண்ட, யுடா (Utah) பகுதியில் உள்ள டைனாசர் அருங்காட்சியகத்தின் தலைவரான ஸ்டீபன் ஜெர்கஸ் இதனை சுமார் 80,000 டாலர்களுக்கு வாங்கினார் (பிப்ரவரி 1999). ஒருவித பரவச உணர்வு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சும்மாவா, இந்த படிமம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் அதிர்வால் அவருக்கு கிடைக்கக்கூடிய புகழ் லேசுப்பட்டதா என்ன?

பிரபல தொல்லுயிரியலாளரும், துறைச்சார்ந்த வல்லுனருமான பில் க்யூரி-க்கு இதுக்குறித்து ஜெர்கஸ் தெரியப்படுத்த, க்யூரி நே.ஜி-வை தொடர்புக்கொண்டார். இதுக்குறித்த ஆய்வுகளை நே.ஜி முடுக்கிவிட்டது. மற்றொரு பிரபல தொல்லுயிரியலாளரான ஜூ ஜின்க்-கும் இந்த பணியில் இணைக்கப்பட்டார். 

ஆரம்ப கால ஆய்வுகளிலேயே இந்த படிமத்தில் பிரச்சனை இருப்பது க்யூரிக்கு தெரிந்தது. படிமத்தில் காணப்படும் வால், உடலுடன் ஒருசேர ஓட்டவில்லை. மேலும் இந்த படிமத்தின் பகுதிகள் ஒரே கற்பலகையை சேர்ந்தவை இல்லை என்பதும் தெளிவானது. படிமத்தை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர் க்யூரியும், ஜெர்கசும். இந்த ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் டிமோத்தி ரோவ் என்னும் மற்றொரு வல்லுநர். வால் மற்றும் கால் பகுதிகள் ஒரே படிமத்தை சார்ந்தவை அல்ல என்பது சி.டி ஸ்கேன் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது. இந்த முழு படிமமும் பித்தலாட்டமாக இருக்கலாம் என்று கூறினார் ரோவ். 

சி.டி ஸ்கேன் செய்யப்பட்ட ஆர்க்கியோராப்டர் படிமம் (இடது)

எப்போது பிரச்சனைகள் இருப்பது தெளிவானதொ, அப்போதே இந்த படிமத்திற்கு end card போடப்போட்டிருக்க வேண்டும். இங்கேயே இந்த படிமம் தூக்கி எரியப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் நடந்ததோ வேறு. ஆசை யாரை தான் விட்டது? 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தை நிரூபிக்க  கிளம்பிய ஆய்வாளர்களின் கண்ணை நம்பிக்கை மறைத்தது. பின்னாளில் இதுக்குறித்து கருத்து தெரிவித்த நே.ஜி, படிமத்தில் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் தங்கள் பார்வைக்கு கொண்டு வரவே இல்லை என்று கூறியது. அட்ரா சக்க....அட்ரா சக்க....

ஆக, நே.ஜி கூறுவதை உண்மை என்று நம்பினால், இந்த படிம பித்தலாட்டத்தை நன்கு அறிந்துக் கொண்டே இந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு சென்றிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விவசாயிகள் காசுக்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தனர். ஆய்வாளர்கள் என்று அறியப்பட்ட இவர்களோ தங்களின் நம்பிக்கையை நிரூபிக்க பித்தலாட்டதிற்கு ஒத்துப்போயினர். இந்த இரண்டு தவறுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது வேறுபாடு தெரிகின்றதா?

சரி, அது போகட்டும். அடுத்ததுக்கு வருவோம். அறிவியல் உலகை பொருத்தமட்டில் ஒரு கண்டுபிடிப்பு முழுமை பெற வேண்டுமென்றால் அது ஆய்விதழ்களில் (Peer review) தான் முதலில் வெளியிடப்பட வேண்டும். பிறகு தான் நே.ஜி போன்ற அறிவியல் ஊடங்களில் வெளிவரும். இந்த படிமம் குறித்த ஆய்வுகளும் அங்கீகாரத்திற்காக Nature மற்றும் Science போன்ற ஆய்விதழ்களுக்கு அனுப்பப்பட்டன. ஜெர்கஸ், க்யூரி, ரோவ், ஜூ ஆகியோரின் பெயரில் கட்டுரை சமர்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த படிமத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் குறைவாக இருப்பதாக கூறி ஆய்வுக்கட்டுரையை நிராகரித்துவிட்டது நேச்சர். Science இதழை பொறுத்தமட்டில், விலை அதிகம் பெறுவதற்காக இந்த படிமம் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவானதால் அந்த ஆய்விதழும் கட்டுரையை நிராகரித்துவிட்டது (இந்த விசயமும் நே.ஜிக்கு தெரிவிக்கப்படவில்லையாம்...ம்ம்ம்ம்) ஆக, இரண்டு ஆய்விதழ்களும் ஜெர்கஸ் குழுவினரின் கட்டுரையை நிராகரித்துவிட்டன. 

உங்கள் கண்டுபிடிப்பை இரண்டு ஆய்விதழ்கள் நிராகரித்துவிட்டன. அட்லீஸ்ட் இப்போதாவது இந்த படிமத்தை பிரசுரிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். நடந்ததா? இல்லையே. 

நே.ஜி, தன்னிச்சையாக படிமம் குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்தது. அக்டோபர் 1999-இல் இந்த படிமம் பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நவம்பர் 1999-ஆம் ஆண்டு நே.ஜியின் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'T.Rex எனப்படும் சிறிய அளவிலான டைனாசர்களுக்கு சிறகுகளா (Feathers for T.Rex?)' என்ற கேள்வி தான் கட்டுரையின் தலைப்பு. 

படுகலர்புல்லான அந்த கட்டுரையை எழுதிய கிறிஸ்டோபர் ஸ்லோன், நே.ஜியின் ஆர்ட் எடிட்டர் ஆவார். இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் (Archaeoraptor) என்று பெயர் சூட்டியிருந்தது நே.ஜி. பெரும் பரபரப்பை உண்டாக்கியது கட்டுரை. 

நே.ஜி பிரசுரித்த கட்டுரையின் முதல் பக்கம் 

டைனாசர்களுக்கும், பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) ஆர்க்கியோராப்டர் இருப்பதாகவும், எப்படி மனிதர்கள் பாலூட்டிகள் என்பது தெளிவோ அதுபோல 'டைனாசர்கள் தான் பறவைகள்' என்பது இதன் மூலமாக தெளிவாவதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 

இந்த கட்டுரை வெளிவந்தது தான் தாமதம். பிரபல ஸ்மித்சோனியன் இயற்கை அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு பாதுக்காப்பாளரான ஸ்டோர்ஸ் ஒல்சொன் (Storrs L. Olson) பொங்கி எழுந்துவிட்டார். பறவைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர் இவர். 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர். நே.ஜியை கடுமையாக விமர்சித்து தள்ளினார் ஒல்சொன். பரபரப்பான, பொருள் இல்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு நே.ஜி கீழே இறங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார் ஒல்சொன். 

மேலும், 'டைனாசர்களில் இருந்து பறவைகள்' என்ற யூகம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியாக இருந்த மற்றொரு கட்டுரைக்காக தன்னை நே.ஜி கூப்பிட்டு கருத்து கேட்டதாகவும், மாற்றுக்கருத்தை அவர்கள் பரிசீலிக்க மறுத்ததில் இருந்து, எவ்வகையான ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் நே.ஜி தயாரில்லை என்பதை தான் புரிந்துக்கொண்டதாகவும் கூறினார். விமர்சனங்களுக்கு எல்லாம் கிரீடமாக, தங்கள் நம்பிக்கைக்கு பிரச்சாரம் செய்பவர்களாக சில ஆய்வாளர்கள் மாறிவிட்டதாக ஒரு காட்டு காட்டினார் ஒல்சொன்.

நம் தலைமுறையின் மிகப்பெரிய அறிவியல் பித்தலாட்டங்களில் ஒன்றாக இது மாறப்போவதாக கூறிய ஒல்சொனின் வார்த்தைகள் காலப்போக்கில் நிரூபனமாயின. ஆம், இந்த படிமத்தில் மேற்கொண்டு நடந்த ஆய்வுகள் இந்த படிமத்தின் உண்மைநிலையை உறுதிப்படுத்தின. நே.ஜி தலைகுனிந்தது. கூடவே இந்த தவறை செய்த ஆய்வாளர்களும் மன்னிப்பு கோரினர். 

அறிவியல் போர்வையில் நடந்த நாடகம் மிக சோகமான க்ளைமாக்ஸ்சுடன் முடிவுற்றது. 

தவறை ஆய்வாளர்கள் மீது சுமத்தி நே.ஜி தப்பிக்க நினைத்த போதிலும் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

  • ஒரு அறிவியல் கட்டுரையை ஆர்ட் எடிட்டர் எழுத அனுமதித்தது ஏன்?
  • மிக விரைவாக இப்படியான கட்டுரையை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
  • இந்த படிமம் சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்று நே.ஜிக்கு தெரியும். விரைவில் இந்த படிமம் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், என்ன காரணத்தை கூறினாலும், இப்படியாக ஒரு கட்டுரை பிரசுரிப்பது ஒரு சட்டவிரோத செயலை ஊக்கிவிப்பது போலாகாதா?

இந்த பிரச்சனையில் செமையான காமெடிகளும் உண்டு. இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இதுக்குறித்து பரிணாம ஆதரவாளர்கள் கவலைப்பட்டிருப்பார்களோ இல்லையோ, படைப்புவாதிகள் குறித்து தான் அதிகம் கவலைப்பட்டார்கள். வேறென்ன, இதனை வைத்து படைப்புவாதிகள் எப்படியெல்லாம் ஆடப்போகின்றார்களோ என்ற பீலிங் தான். 

'இது பித்தலாட்டம் தான், ஆனா டைனாசரில் இருந்து பறவை வந்ததற்கு வேறு சில ஆதாரங்கள் உண்டு' என்பார்கள் பரிணாம ஆதரவாளர்கள். அட எப்பா, இப்ப டைனாசரில் இருந்து பறவை வந்ததா பிரச்சனை?, பித்தலாட்டம்னு தெரியுமுல்ல, தெரிந்தே அதனை மேற்கொண்டு தொடர வேண்டிய அவசியம் என்ன? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

இன்னொரு சாராரோ, இந்த கட்டுரையை எழுதியது விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு ஆர்ட் எடிட்டர் மட்டுமே என்று சப்பை கட்டுகட்டுகின்றனர். ஆனால் சிறிதேனும் அவர்கள் யோசித்தால் இப்படியான வாதத்திற்கு வாய்ப்பிருக்காது. எழுதியது ஒரு ஆர்ட் எடிட்டர் என்றாலும், கட்டுரை என்ன தானாகவா வந்து குதித்துவிட்டது? நே.ஜியின் எடிட்டர் மற்றும் ஆய்வு குழு அனுமதித்தால் தானே பிரஸ்சுக்கே போக முடியும்?. மேலும், பித்தலாட்டம் என்று தெரிந்தும் இதனை தொடர்ந்த ஆய்வாளர்கள் தானே இந்த கட்டுரைக்கு பின்னால் இருந்தது? அவர்களின் கருத்துக்கள் தானே அந்த கட்டுரையை அலங்கரித்தது? எய்தவர்கள் இருக்க அம்பின் மீது குறை சொல்வது முட்டாள்தனம் இல்லையா? நல்ல காமெடி தான் போங்க...

இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்.  "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். 

மேலும், "இது பித்தலாட்டம் தான், ஆனா இத யாரு கண்டிபிடிச்சா, நாங்க தானே" என்ற அறிவுக்கு பொருந்தாத கேள்வியையும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது சாதனை அல்ல, வேதனை மட்டுமே. 

நம் அனைவரையும் இறைவன் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

References: 
1. Two open letters from Storrs Olson (LONG). link
2. All mixed up over birds and dinosaurs - 15th jan 2000, Science News. link
3. The 5 Greatest Palaeontology Hoaxes Of All Time - 7th June 2011, Science 2.0. link
4. Archoearaptor - wikipedia. link
5. Fake bird fossil highlights the problem of illegal trading - Nature 404, 696 (13 April 2000, doi:10.1038/35008237. link
6. Feathers fly over Chinese fossil bird's legality and authenticity - Nature 403, 689-690 (17 February 2000), doi:10.1038/35001723. link
7. Giant feathered dinosaur found in China was too big to fly - 5th April 2012, The Guardian. link
8. Top 10 scince hoaxes - Discovery Scince. link
9. Philip J. Currie -wikipedia. link
10. Expert: 80% fossils in Chinese museums are fakes - 13th jan 2011. China.org.cn. link
11. Timothy B. Rowe - The University of Texas at Austin. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

51 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும்,

      தகவலுக்கு நன்றி...என் பதிவை இணைத்துவிட்டேன்...

      Delete
  2. Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ரப்பானி,

      வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி...

      Delete
  3. பரிணாம கோட்பாது.. அது ஒரு பரிதாப கோட்பாடு..

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் அண்ணன்,

      //..பரிணாம கோட்பாது.. அது ஒரு பரிதாப கோட்பாடு..//

      :-) :-)

      Delete
  4. சலாம் சகோ ஆஷிக்!

    மற்றுமொரு அழகிய பரிணாம எதிர் பதிவு. சீன விவசாயிகள் வறுமையினால் இவ்வாறு பித்தலாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பரிணாவியல் ஆய்வர்கள் இது போன்று பொய் சொல்ல காரணம் தங்கள் அரசுகளை நம்ப வைக்கவே. வருடா வருடம் இதற்கென பல மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது. இவர்களின் சம்பளமும் இந்த தொகைகளை நம்பியே இருக்கிறது. எனவே ஏதாவது தில்லுமுல்லுகள் செய்து பரிணாவியலை உயிரோட்ட முயற்சிக்கவே செய்வார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் இந்த மோசடிகளை செய்ய வாய்ப்பிருக்காது என்றே எண்ணுகிறேன். அந்த அளவு விஞ்ஞானமும் வளர்ந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் அண்ணன்,

      தாங்கள் சொல்வது குறித்து டாக்டர் ஜொனாதன் வெல்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார். அதில் மிகவும் உண்மையும் ஆகும். இன்ஷா அல்லாஹ் இது போன்றவற்றில் இனி ஈடுபடாமல் இருந்தால் நலம்.

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

      Delete
  5. பரிணாம ஆய்வாளர்கள் அறிவியல் போர்வையில் நடத்திய நாடகம்.

    பரிணாம ஆய்வாளர்களின் வண்டவாள துரோகம் தண்டவாளத்தில் ......


    So fossils record proves that Darwin's theory is not true.

    But yet, though they could not substantiate that Darwin's theory could be proved through fossils record,

    they manufacture fossils record.
    And for example - how do they do that?

    In the magazines,

    in the television channels and different channels,
    discovery channels and different video programs,
    we see the construction of the ape-man.

    As if we are given to understand that these were the creatures which existed.

    But what is the fact?

    These creatures did not exist.

    It is reconstruction of these creatures.


    Ape-man - it is reconstruction.

    What is reconstruction?

    That if they find one piece of bone - for example if they find one arm bone.

    Arm bone in the fossil - based on one arm bone, one hand, these construct the whole human being - the whole ape-man.

    This is construction.

    If they find one skull - based on one skull,

    they make the whole body of ape-man,

    signifying that this is the ape-man which is the intermediary between the ape and human being.

    So, they fabricate drawings and constructions by just picking up one piece or two pieces of skeleton, and they make the whole structure.

    Not making just whole structure,

    they make the wife and children and the whole family,

    signifying that these are the ape-man - half ape and half man.

    This is forgery.

    An example of such forgery is that one such thing took place in Piltdown.

    A certain place known as Piltdown.


    (அறிவியல் போர்வையில் நடந்த நாடகம்.)


    In 1912, Dr. Charles Dawson - he presented a skull with a jawbone and the skull.

    And he said: "this is the ape-man - half ape and half man."

    And he tried to prove that this will prove Darwin's theory.

    Later on, Kenneth Oakley in 1949, he made a fluorine testing on this skull bone.

    With this fluorine testing he came to know that the jaw bone hade few, or very little or negligible fluorine content.

    The skull had little more fluorine content.

    During the fluorine content of the jaw bone and the skull separately,
    it was proved that it did not belong to the same specie.

    But again, Weiner in 1953 through again a further study prove to the world that the jaw bone actually belonged to an ape which has died recently - just few years back.

    And the skull belongs to a 500 year back man.

    So it was the half skull taken of a man and jaw bone taken to an ape joint together and manipulated,

    and trying to prove that this is an ape-man.

    And they had stained it with potassium dichromate to give an understanding that it is backdated of long long years back.

    But once they put in acid, the potassium dichromate finished off.

    This is one example of Piltdown forgery.


    READ FULL ARTICLE.


    Darwin's Theory: True Or False? by Dr. Shuaib Sayyed



    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ உண்மைகள்,

      இன்ஷா அல்லாஹ் முழுமையாக படித்துவிட்டு கருத்திடுகின்ரேன். பகிர்வுக்கு நன்றி..

      Delete
  6. very good article with good amount of info... Thanks for the share.. keep writing...

    ReplyDelete
    Replies
    1. Peace be upon u brother Agal,

      thanks for the encouragement.

      Delete
  7. சலாம் அண்ணே... !

    அருமையான பதிவு..

    பரிணாமம் என்பதில்தான் எத்தனை தில்லு முள்ளு..!! ஷப்பாஆஅ :/

    //மேலும், "இது பித்தலாட்டம் தான், ஆனா இத யாரு கண்டிபிடிச்சா, நாங்க தானே" என்ற அறிவுக்கு பொருந்தாத கேள்வியையும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது சாதனை அல்ல, வேதனை மட்டுமே. ///// உண்மையிலேயே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது :)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோதரி ஷர்மிளா ஹமீத்,

      நல்லா சிரிங்க :-) உங்களை மகிழ்விக்க அப்பப்ப இந்த மாதிரியான பித்தலாட்டங்களை எடுத்து போட்டுக்கொண்டு இருக்கின்றேன். :-)

      தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சிஸ்டர்..

      Delete
  8. நல்லதொரு விவாதத்தை கட்டுரையாக தந்து உள்ளீர்கள்....சிறந்த பதிவு....

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜா மைதீன்,

      தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி..

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வழக்கம் போல்...

    பரிணாமம்
    பல்லிளிப்பது
    இந்த பதிவிலும்
    பளிச்சிடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

      :-) :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலாம்..

      Delete
  10. அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோ
    நீங்க லேட்டா வந்தாலும் கலக்கலான பதிவோட வர்றீங்க ..சபாஷ்
    டைனோசர்களின் பெரும்பாலான படிமங்கள் சைனாவில் கிடைப்பதாக
    தகவல் அதுல முக்கால்வாசி போலி, ஃபெப்ரிகேசன் செய்யப்பட்டது என்ற
    தகவல் உண்டு இத நா ஏன் கேக்குறேன்னா இன்றைய தேதியில்
    சைனாக்காரன் நகல் எடுப்பதில் மன்னன் அவனை மீஞ்ச ஆளில்லை
    அதுனாலே இந்த ஆர்கியோராப்டர் படிமத்துலேயும் அவன் வேலைய
    காட்டிட்டான் ......
    ஒருத்தனுக்கு "பேங்க்" பேலன்ஸ் ஏறிப்போச்சி [சைனா விவசாயி ]
    இன்னொருத்தனுக்கு "மானம்" கப்பல் ஏறிப்போச்சி [அமெரிக்கா நாத்திகன்]
    பதிவின் கடைசில சூப்பர் பன்ச் படித்து முடித்தவுடன் எனக்கு 'வவ்வால் '
    நினைப்புதான் வந்தது ஏன்னா அவரும் இப்படித்தான் சொல்லுவார் ..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் நாசர் பாய்,

      அல்ஹம்துலில்லாஹ். ஆம், சீன அருங்காட்சியகங்களில் இருக்கும் 80% படிமங்கள் மாற்றம் செய்யப்பட்டவையாம்.

      //பதிவின் கடைசில சூப்பர் பன்ச் படித்து முடித்தவுடன் எனக்கு 'வவ்வால் '
      நினைப்புதான் வந்தது ஏன்னா அவரும் இப்படித்தான் சொல்லுவார்//

      அப்படியா...சிலர் அப்படி கூறிக்கொண்டு திரிந்ததால் தான் அப்படியான வாக்கியத்தை சேர்த்தேன்.

      கருத்துக்கு நன்றி பாய்.

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்....
    அட போங்க சகோ!, இவனுங்க எல்லாம் (பரிணாம ஆய்வாளர்கள்) ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொன்னா உண்மையைடுமா!. திருடனுக்கு தேள் கொட்டுன கதைதான் போங்க! உண்மை வெளியே தெரிஞ்சதும் இந்த மூஞ்சிங்க (நே.ஜி) எப்படி ஆக்ட் கொடுக்குது பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோதரர் தமீம் அன்சாரி,

      போய் என்னைக்குமே போய் தான். இதுல என்னா இன்னொரு செய்தினா, இந்த பித்தலாட்டம் நே.ஜி-க்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று usatoday ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளார் ஒல்சொன். உண்மை என்னவோ, இறைவனே அறிவான்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. கண்களை மறைக்கும் பரிணாம புழுதி, கிறிஸ்தவ மிஷனரிகளால் நெடுங்காலமாக துன்புறுத்தப்பட்டு வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததே இந்த பரிணாம், கடவுள் இல்லை என்று வாதிடுவதற்காக,,,ஆனால் கண்ணை மூடிக்கொண்டு ஆராய மறுப்பவர்களும் இருக்கிறார்கள், ஆராய்ந்து பார்க்கட்டும் நடுநிலையானவர்கள்......

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் உங்களில் ஒருவன்,

      இன்ஷா அல்லாஹ் நிலைமை ஒருநாள் முழுமையாக மாறும். கருத்துக்கு நன்றி சகோ

      Delete
  13. சலாம்.சகோ.ஆசிக் அஹ்மத்,

    நீங்க என்ன படிச்சிருக்கீங்க ???இந்த உங்களின் பதிவு குறித்து சகோ.ஒருவர் சார்வகனிடம் காட்ட பின்வருமாறு சொல்கிறார்.

    // உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம் கடமை.ஆகவே விரைவில் எதிர்பாருங்கள்.
    நன்றி //

    இப்பிடியே தான் சொல்லுறார்..ஆனா உருப்படியா ஒண்ணுமே இல்லை..அவரோட லேட்டஸ்ட் பதிவை பாருங்கள் செம காமெடி...பாவம் அவருக்கு உதவத்தான் யாருமே இல்லை..! இஸ்லாத்தை தாக்குணா கும்பலா வருவாங்க ..தன்னை பரிணாம வாதின்னு சொல்லுவாங்க(ஏன்னா அவங்க மதத்து மேல அவ்வளவு நம்பிக்கை) ..கேள்வி கேட்டா ஒருத்தரும் நிக்கிறது இல்லை...சார்வாகன் மட்டுமே மாட்டிகிறார்..எல்லா வழிலையும் தோல்வி எனும்போது இஸ்லாத்தின் விமர்சிக்கிரவரா இருந்தாலும் அவரைப்பார்க்க பாவமா இருக்கு...மறுமைல என்ன செய்ய போறாரோ...??

    அல்லாஹ் அவருக்கு நேர் வழி காட்டட்டும்...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்



    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் நாகூர் மீரான் பாய்,

      //நீங்க என்ன படிச்சிருக்கீங்க ???//

      B.Tech (ECE). என்னுடைய specialization ஏரியா semiconductor physics. எளிதாக சொன்னால் இயற்பியலில் ஒரு பிரிவு.

      சகோ, நீங்கள் குறிப்பிடும் நபரை எல்லாம் நான் சட்டை செய்து வெகு நாட்கள் ஆகின்றது. அதற்கு காரணம், விவாதம் என்று வரும் போது பாதியில் ஓடுவது, பதில் சொல்கின்றேன் என்ற பெயரில் பதிலே சொல்லாமல் திசைதிருப்புவது போன்றவை.

      பதிவுலகில் என் பதிவுகளுக்கு பதில் சொல்ல யாரேனும் ஒருவர் வருவார் என்ற என்னுடைய தேடல் காத்திருத்தலாகவே முடிந்து விடுமோ என்றும் தோன்றுகின்றது.

      எப்படியோ உண்மையை எல்லோரும் அறிந்துக்கொண்டால் சரி.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்...

    சபாஷ்!, வழக்கம் போல் பரிணாம பித்தலாட்டத்தின் முகமூடி கிழிக்கப்படும் பதிவு!. வாழ்த்துக்கள் சகோ.

    //ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக காலப்போக்கில் மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. டார்வின் காலத்திலிருந்தே இதற்கான ஆதாரங்களை அதன் நம்பிக்கையாளர்கள் தேடிக்கொண்டு தான் வருகின்றனர்.//

    தேடிக்கொண்டே இருக்கட்டும். :(

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சையத் இப்ராஹீம் ஷா,

      தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி..

      Delete
  15. Aashiq,
    Assalamu alaikkum,

    I watch the documentaries in Smithsonian. They seem to be more focused and researched than NGC. I do get NGC magazines every month. Now i have to be double careful :)

    ReplyDelete
    Replies
    1. wa alaikum salaam Peer Mohamed,

      :-) :-) be careful. :-)

      thanks for the visit and comment

      Delete
  16. யானையிலிருந்து ஒரு வேளை பறவைகள் வந்திருக்கலாம் , ஏன்னு சொன்னா டைனோசரை விட யானை சின்னது ஹி..ஹி... :-)))

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் ஜெய்லானி,

      ஹா ஹா...மேட்டர் என்னான்னா டைனாசர்களில் பல வகை உண்டு. அதில் சிறிய அளவிலானவை ஒருவகை. அதனால் தான் அதன் மீது தங்கள் கற்பனை கதைகளை வைக்கின்றனர்.

      கருத்துக்கு நன்றி..

      Delete
  17. பரிணாமத்தின் உண்மையை பற்றி பல பதிவுகளை வெளியிட்டு, பரிணாமவாதிகளுக்கு தக்க பதில் அளிக்கும், உங்கள் கட்டுரையின் எழுத்துகள் படிக்க தூண்டுகிறது, உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது. இறைவன் உங்கள் ஞானத்தை மேலும் அதிக படுத்துவானாக..

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ..!!! உங்களுடன் நானும் துஆவில் இணைகிறேன்..ஏனெனில் பதிவானது வரலாறாக நிலைத்து இருக்கும்..வருங்காலத்தில் நம் மக்கள் மேற்கோள் காட்ட மிகவும் உதவியாக இருக்கும்...நாம் வாழும் காலத்தில் நம்மால் முடிந்ததை ஒவ்வொரும் பதிவாக செய்தால் அடுத்த தலைமுறை பிரச்சாரகற்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்..குர் ஆன் ஹதீஸ் கொண்டு விளக்க பலர் உள்ளனர்...ஆனால் பரிணாமத்திற்கு நாமம் போட அந்த துறையில் அறிவுடையவர்களாலே முடியும்...அந்த வகையில் சகோ.ஆசிக் அவர்களுக்கும்..இன்னும் பரிணாமம் சார்ந்த துறையில் அறிவுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் அறிவை விசாலமாக்குவானாக !...ஆமின்.!!!

      நன்றியுடன்
      நாகூர் மீரான்

      Delete
    2. வ அலைக்கும் சலாம் ரஹ்மான் பயத்,

      புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

      இருவரின் துவாவிற்கும் மிக்க நன்றி...

      வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி..

      Delete
  18. சகோஸ், இந்த கட்டுரையை தமிழ்மணம் நீக்கியுள்ளது (இன்று அதிகாலையே நீக்கிவிட்டார்கள்). இதற்கு அவர்கள் கூறிய காரணத்தை பாருங்கள்.

    //Dear author,
    Your post Nationalis removed by tamilmanam.net Administrator due to follwing reason,
    நிர்வாகி
    www.tamilmanam.net//

    பின்வரும் காரணத்திற்காக நீக்கியிருக்கின்றோம் என்று கூறிவிட்டு காரணத்தை குறிப்பிடவே இல்லை. அவர்களுக்கு நான் மெயில் அனுப்பி இருக்கின்றேன். பார்ப்போம் என்ன சொல்கின்றார்கள் என்று...

    ReplyDelete
  19. VAALKA PALLANDU

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் P.M,

      தங்களின் துவாவிற்கு மிக்க நன்றி...

      Delete
  20. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே,
    மாஷா அல்லாஹ், நல்ல பதிவு நீண்ட நாள்கள் கழித்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்,
    நானும் National Geographic பார்பேன் ஆனால் அதில் 9 /11 பற்றி பச்சை பொய்யை குருகீறார்கள் என்ன செய்ய முடியும் நம்மால் ???

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ,
    உங்கள் தளத்தினை www.islamiyaarangam.blogspot.in இல் இணைத்துள்ளேன் . ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் அதிரை இக்பால்,

      இணைத்ததற்கு ஜசாக்கல்லாஹ் சகோ..

      Delete
  23. The entire science and technology now most of its parts and perception , and some of its elaborated theory , is made to use against islamophobia or it dose help the enemy in technological warfare or it decrease the
    rise of muslims or it serves as a tool to eradicate Islam and its actual culture ? Please explain me under this topic

    ReplyDelete
    Replies
    1. Brother faizeejamali,

      I can't understand what you are saying. Kindly re-ask and if it is in tamil all of them here will understand.

      thanks

      Delete
  24. vin_yanathin utchathil valkirom ariviyal matrum vin - yane tholzil nutpe pariname valarchi yil manithe kalacharam pala matrangangalai kandullathu pirappu mudhal irappu varai ean atharku pinnarum manidhanai naveenangal thodargirathu,(yasar Arafat udal meendum thondi edukke thittam ) ennudaya kelvi
    1: perumbalane naveenangal , tholzil nutpangal manithe kalachare seeralivai erpaduthugirathu tholirsaligali thavira
    pokkuvarathu matrum thagaval tholzil nutpam valvyial angamage karudhappadum minsaram,petrol,unavu sampantha patta naveenangalai thavira
    2: idhan oodage cell phone , walithalam, ivatril kattupattai Merkollumn muslimgalum islamiya nadugalum manitha sudhanthirathai parippavargalage sitharikke padugirathu
    3: vinveli araaiychi endra peyaril satellite , media, naveena kalvi murai, matrum idhan oodaga thinikka padum moode kolgaigal islamiya kolgaigalai pinpantruvatharke miga periya savalaga irukkirathu
    4: poar matrum ulavu sambathapatte naveenangal islathin adipada yai alikka ve oru ubagarana maage payanpadugirathu .
    Ivai en neende naal sandhe gankal pls explain me

    ReplyDelete
  25. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு:முக்கிய குற்றவாளி ம.பி.,யில் கைது


    புதுடில்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின், முக்கிய குற்றவாளியை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், நேற்று கைது செய்தனர்.டில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடையே, இயக்கப்பட்ட ரயில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில், 2007 பிப்., 18ம் தேதி குண்டு வெடித்தது. அரியானா மாநிலம், பானிபட்டில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட, தீ விபத்தில், 68 பேர் உயிரிழந்தனர்; பெண்கள், குழந்தைகள் உட்பட, 12 பேர் காயம் அடைந்தனர்.



    இந்த குண்டு வெடிப்பு, வழக்கு விசாரணையை, ஆரம்பத்தில், ரயில்வே போலீசாரும், அரியானா போலீசின் சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரித்தனர். அதன்பின், இவ்வழக்கு, 2010 ஜூலை, 29ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.



    வழக்கை விசாரித்த, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், கமால் சவுகான், ஆசிமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா என்ற, மூன்று பேரை கைது செய்தனர். அதன் பின்னும், தொடர்ந்து விசாரணை நடந்தது.இந்நிலையில், இந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான, ரயிலில் குண்டு வைத்தவர் என, கருதப்படும் ராஜேஷ் சவுதாரி என்பவரை, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், நேற்று கைது செய்தனர். பின், அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.தற்போது கைதாகியுள்ள, ராஜேஷ் சவுதாரி பற்றி, தகவல் கொடுப்பவர்களுக்கு, ஏற்கனவே, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  26. http://en.wikipedia.org/wiki/Archaeopteryx#Controversy..

    ReplyDelete
  27. மாஷா அல்லாஹ்..!!! நான் பதிவுலகத்துக்கு புதியவன். நிரூபனுக்கு நீங்கள் கொடுத்த பதிலடியில் இருந்து பின்தொடர்ந்தேன்..உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை..இன்னும் நிறைய எழுதுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் ஞானத்தையும், பரக்கத்தையும் வழங்க துஆ செய்கிறேன்.

    ReplyDelete
  28. மாஷா அல்லாஹ்....!!! அருமையான பதிவு....!!!

    ReplyDelete