Pages

Thursday, January 10, 2013

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். 

ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம். 

இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறை இருந்ததால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதில் சிரமம் இருக்கவில்லை. சில பதிவர்களுடன் துவங்கிய இந்த முயற்சி இன்று பல பதிவர்களுடன் ஆரோக்கியமான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நபிமொழி தொகுப்பான சஹிஹ் முஸ்லிமை மின்னூல் வடிவில் கொண்டுவந்தததில் தொடங்கி ஒரு கட்டுக்கோப்பான பதிவர் வட்டத்தை எட்டியது வரை இந்த குழுமம் நடத்திக்காட்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் பல. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. 

அப்படியான முயற்சிகளில் ஒன்றை தான் நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.  முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று. இன்று அது சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். இம்மாதிரியான எதிர்கால முயற்சிகளுக்கு நிச்சயம் இந்நூல் முன்னோடியாக இருக்கும் என்று கூறிக்கொள்ளும் இத்தருணத்தில் சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியத்தில் சகோதரர்கள் சிராஜ், நிஜாம் மற்றும் சகோதரி ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. அடுத்ததாக, உம்மத் குழும சகோதர சகோதரிகள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த பணியை முன்னெடுத்து சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. கட்டுரைகளை தொகுக்க குழு அமைத்ததில் தொடங்கி, நேர்த்தியான திட்டமிடல் வரை இவர்களின் உழைப்பு அலாதியானது. இவர்கள் அனைவரின் கல்வி ஞானத்தையும் இறைவன் அதிகரித்து தருவானாக என்று பிரார்த்தித்தவனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.       

ஒரு தரமான படைப்பாக இந்நூல் உங்கள் உள்ளத்தினை ஆக்கிரமிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.   



சகோதரத்துவத்துடன், 
ஆஷிக் அஹமத் அ, 
உம்மத் பதிவர் குழுமம்.

----------------

இன்னும் சில தினங்களில் (இன்ஷா அல்லாஹ்) வெளிவர இருக்கும் முஸ்லிம் பதிவர்களின் நூலுக்காக எழுதப்பட்ட இந்த முன்னுரையே உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும். 


பதிவுலகம் என்பது சவால்கள் நிறைந்த பகுதி. இங்கு நிலைப்பதற்கும் சரி, சிறப்பாக செயல்படுபதற்கும் சரி கடுமையான பொறுமையும், சிறப்பான செயல்பாடுகளும் அவசியம். அதிலும் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களையவதென்பதே நோக்கம் என்றால் அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அந்த வகையில் இன்றைய முஸ்லிம் பதிவர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியையே தருகின்றன. 

இஸ்லாம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்று ஆக்கப்பூர்வமாக எதிர்க்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று வலுப்பெற்று வருகின்றது. இதுவொரு மிக ஆரோக்கியமான முன்னேற்றம். 

ஆனால் இது போதுமா என்றால், இல்லை. ஆம், தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிற்கும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு "எதிர்க்குரல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். 

நூலில் இருந்து சில க்ளிப்ஸ் 

கடந்த சில மாதங்களாக, இந்த தளத்திற்கு, குர்ஆன் கேட்டு வரும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்தகைய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த நூல் இருக்கும். 

இணையத்தில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்து பலருக்கும் சேர்க்க வேண்டும் என்ற எங்களின் தொலை நோக்கு பார்வை இன்று சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியின் போது வெளிவரும் இந்த நூல் குறித்த மேலதிக தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் இடங்கள்:



நூல் விற்பனையாளர்கள்:

சஜிதா புக் சென்டர்,
248, தம்பு செட்டி தெரு,
முதல் தளம்,
பாரிமுனை,
சென்னை- 600 001
044 - 25224821


Sajitha Book Centre,
248, Thambu Chetty Street,
Ist Floor,
Parrys,
Chennai 600 001.
044 - 25224821


தொடர்புக்கொள்ள:

ஆஷிக் அஹமத் : 90432 99006
சகோதரர் சிராஜ்: 99415 85566

இந்த தளம் மூலம் நேரடியாக நூலை பெறவிரும்புவோர், எத்தனை புத்தகம் தேவை, முகவரி உள்ளிட்ட தகவல்களை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கின்றேன். 

எங்கள் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள் இந்த பணிக்கும் உங்களின் மேலான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் - குர்ஆன் 05:02

இறைவன் என்றென்றும் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

36 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    மாஷாஅல்லாஹ்! வியக்க வைக்கும் அருமையான முயற்சி இது அல்லாஹ் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! எனக்கும் 10 புக் அனுப்பி வையுங்கள். இங்கே குவைத்தில் உள்ள தமிழ் நண்பர்கள் கூடும் இடங்களில் வைப்பதற்கும். இன்னும் சில நண்பர்களுக்கு கொடுப்பதற்கும் தேவைப்படுகிறது.

    ReplyDelete
  2. அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷிக்,

    ரொம்ப மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், உணர்ச்சிக் கொந்தளிப்பாய் உள்ளது. இதற்கான எண்ணத்தை விதைத்த நாளிலிருந்து புத்தகமாக வெளிவரும் நாள் வரையான எல்லாப் பணிகளையும் செய்த, செய்கின்ற, நாடிய அனைவரின் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் அல்லாஹ் நிறைந்த நற்கூலியைத் தருவானாக. ஆமீன். சும்ம ஆமீன்.

    இந்தியாவில் இருந்திருந்தால் இன்னேரம் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கக்கூடும் :(

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாம் அலைக்கும் சகோதர்ரே, சென்ற வருடம், எனக்கும் ஒரு யோசனை இருந்தது. தங்கள் பதிவில் சிலவற்றை சேகரித்து, அச்சிட்டு, கணிப்பொறி பயன்படுத்தாத சில சகோதர்களுக்கு தரலாம் என்று நினைத்தேன்.. அப்பொழுதே தங்களுக்கும் நமது சகோதர்கள் பதிவை புத்தகமாக வெளியிட எண்ணம் இருந்ததை அறிந்தேன்,.

    மாஷா அல்லா தற்பொழுது நடந்துவிட்டது, என்னால் முடிந்தவரை மாற்ற மத சகோதர்களுக்கு அன்பளிப்பாக தர இந்த புத்தகம் உதவும் என்று நினைக்கிறன்..

    ReplyDelete
  4. சலாம்! பல சிரமங்களைக் கடந்து இந்த புத்தகம் வெளி வருகின்றது. சகோதர சகோதரிகள் தரும் ஆதரவினைப் பொருத்து அடுத்த பதிப்புகளும் இன்ஷா அல்லாஹ் வெளியாகலாம். எனவே இதை அனைவரிடமும் எடுத்துச் செல்ல நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோம்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்

    மனது நிறைந்த பூரிப்புடன் மாஷா அல்லாஹ். இஸ்லாத்துக்கு எதிராக வீசப்பட்ட அவதூறு கற்களைக் கொண்டே, "எதிர்க்குரல்" எனும் மாளிகையை எழுப்பியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    கற்களை வீசிவிட்டு போனவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களின் செயல்களால் தான் இவர்கள், இன்னும் இன்னும் இஸ்லாத்தை ஆய்ந்துணரத்தலைப்பட்டனர்.

    உங்களின் சிறப்பான உழைப்பில் விளைந்த பதிவுகள் இணையம் எனும் கடலில் தொலைக்கப்பட்டு விடாமல் அதனை ஒரு புத்தக வடிவமாக பாதுகாத்து வரலாற்றுக்கு வழங்கியிருக்கிறீர்கள்.

    பல்வேறு துறைசார்ந்த விடயங்களையும் எழுதுங்கள். மற்ற ஊடகங்களில் முஸ்லிம்களின் பங்கு குறைவாக இருக்க ஆர்வமின்மையும் ஒரு காரணம். ஆனால் இணையத்தில் திருப்திகரமான பங்களிப்பு இருந்து வருகிறது. இதனை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ்...இறையருள் தங்கள் மீது உண்டாகட்டும்...
    தங்களின் முயற்சிக்கு இறைவன் வெற்றியை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்....
    எதிர்க்குரலுக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறோம் :)

    ReplyDelete
  7. சலாம் சகோ.ஆஷிக் அஹ்மத்

    " மாண்புமிகு பணியில் மற்றுமொரு மகத்தான மைல் கல்.." இன்ஷா அல்லாஹ் ! எதிர்காலத்தில் என்னுடைய பங்கும் இதில் இருக்க வேண்டும் என்று ஆவல் !

    இந்த பணிகளுக்கெனவும் நேர நிர்வாகம் செய்வது நம் மீது பொறுப்பு..அதை சரி செய்து கூடிய விரைவில் உங்களுடன் கலக்கிறேன் சகோ..இன்ஷா அல்லாஹ்..!!!

    நன்றி !!!

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    கற்பனையில் கோட்டை கட்டி காற்றோடு பறக்க விட்டு விட்டார்கள் என்றில்லாமல்

    தொலை நோக்கு பார்வையுடன்

    சிறப்பாக செயலாற்றி

    அருமையான "எதிர்க்குரல்" புத்தகம் வெளியிட்டதற்கு

    எனது மனமார்ந்த பாராட்டுக்களை பதிவு செய்கிறேன்.

    தொடர்ந்து இது போன்று மேலும் பல நூல்கள் வல்ல இறைவன் அருளால் வெளிவரட்டும்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ்.. அருமையான முயற்சி சகோ... இணையம் பயன்படுத்தாமல் இன்னும் நூலகத்தை நாடிச் செல்லும் எத்தனையோ பேருக்கு இது அறிய வாய்ப்பு...

    உங்கள் பணி வெற்றியடைய வாழ்த்துக்கள்... இதில் வெளி வரும் அனைத்து கட்டுரை ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக!!! ஆமின்...

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ் ...

    மேலும் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

    மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்;(அல்குர்ஆன் 3:110)

    அருமையான முயற்சியின் வெளிப்பாடு இது .. வாழ்த்துக்கள் & மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள் :)

    ஜசகல்லாஹ் க்ஹைர்

    ReplyDelete
  11. M.HIMAS NILAR has left a new comment on your post "வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...":

    மாஷா அல்லாஹ் ஒரு சிறந்த முயற்சி.அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணை நிப்பானாக ஆமீன்.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    மாஷா அல்லாஹ்!, மிகவும் சிறப்பான பணி, படிப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாக உள்ளது.

    இதை இறைவன் பொருந்திக்கொண்டு இதற்காக உழைத்தவர்களுக்கு நற்கூலி வழங்குவதுடன், இந்த பணியின் வெற்றியை பலருக்கு சென்றடைவதன் மூலம் தந்தருள்வானாக...

    இப்படி ஒரு முயற்சியின் தூண்டுதலுக்கு காரணமாயிருந்த “இஸ்லாமிய எதிர்ப்பு” பதிவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். :)

    ReplyDelete
  13. சலாம் சகோ ஆஷிக்
    மாஷா அல்லாஹ் படிக்கும் பொழுதே சந்திஷம் தாங்க முடியவில்லை.அல்லா ரப்புல் ஆலமீன் உங்கள் பணியை பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete
  14. நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்...

    Regards,
    Abu Nadeem
    http://ungalblog.blogspot.com
    http://niduronline.blogspot.com

    ReplyDelete
  15. நல்ல முயற்சி !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் ..

    நல்ல முயற்சி ...மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அழைக்கும்..

    மாஷால்லாஹ் நீங்கள் செய்திருக்க கூடிய பணி.. மிக உயரியது சொல்ல வார்த்தைகளில்லை சகோதரே... எனக்கு இந்த விஷயம் முன்னரே தெரிந்திருந்தால் ஏதேனும் ஒரு விதத்தில் நான் இந்த பணியில் உங்களுக்கு உதவி செய்து நன்மையை கொள்ளை அடித்திருப்பேன்.

    உண்மையாகவே பொறாமைபடுகிறேன் இவ்விசயத்தில் நீங்கள் நன்மையை கொள்ளை அடித்துள்ளீர்கள்.
    உங்களுக்கு சுயநலம் ரொம்ப அதிகம் தான். :-)

    அல்லாஹ் இந்த பணியில் ஈடுபட்ட அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஈருலகிலும் நன்மையை வாரி வழங்குவானாக..

    மேலும் எந்த நோக்கத்திற்காக இந்த புத்தகம் வெளியிடபடுகிறதோ அந்த நோக்கத்தை நிறைவேற செய்வானாக.. ஆமீன்.

    மிகவும் சந்தோசம் சகோதரே..

    ஊரில் இருந்தால் வருட வருடம் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் தவறாமல் சென்று வருவேன் அங்கே ஏதேனும் புதிய புத்தகம் வந்திருக்கிறதா என்று தேடுவது வழக்கம்.. இந்த வருடம் எதிர்குரல் புத்தகம் வாங்குவதற்கு என்றே போக இருக்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.. முதலில் அந்த புத்தகத்தை வாங்கிவிட்டு தான் மறுவேலை எனக்கு...

    அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  18. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ...
    ஜனவரி 14 இல் புத்தகம் கிடைக்கும் ....அதுவும் என் விட்டுக்கு அருகில்
    இருக்கும் நந்தனம் YMCA வில் ...பச் இந்த முறையும் எனக்கு கொடுப்பனை இல்லை போன முறை போல .....நான் லீவில் ஊருக்கு வருவதோ ஜனவரி கடைசியில் ...சரி ஸ்டால் நெம்பர் தெரிவித்தால், என் வீட்டில் உள்ளவர்கள் வந்து வாங்குவதற்கு வசதியாக இருக்கும் .
    தயவு செய்து ஸ்டால் நெம்பர் தெரிவிக்கவும் சிட்டிசன் .....

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்..!

    மாஷா அல்லாஹ்..! இந்த மாபெரும் முயற்சியில் கை கோர்த்த அனைவரின் நற்பணியையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்தி கொன்டு அவர்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன்..!

    ReplyDelete
  20. நல்ல முயற்சி..

    ஒரு புத்தகத்துடன் நின்று விடாமல், தொடர்ந்து அடுத்தடுது புத்தகங்கள் வெளியிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லாஹ்!

    'எதிர்க்குரல்' வெளியாக மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவுக்குரல் கொடுத்த அனைவருக்கும் அல்லாஹ் நன்மை நாடுவானாக..!

    ReplyDelete
  22. நல்ல முயற்சி..
    மாஷா அல்லாஹ்!

    ReplyDelete
  23. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  24. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    இறைவனின் மாபெரும் கிருபையால் முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்லும் இந்த பணி வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.அல்லாஹ்வின் அருளை எதிர்நோக்கி செய்யும் பணிக்கு அவன் வெற்றியயே வழங்குவான்.அதற்கு என் பிரார்த்தனை எப்போதும் உண்டு.


    இந்த புத்தக பணிக்காக பலரும் உழைத்துள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவருக்கும்
    அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக... ஒரு பேரிட்சை பழ அளவு நன்மை செய்தாலும்
    அதை அல்லாஹ் பல மடங்காக திருப்பி தருவான்.இதற்கு சொல்ல வேண்டுமா... :)

    ஆனால் இந்த அற்புத பணியில் நான் எதுவும் செய்யவில்லை என்பது வருத்தமே.

    இறைவன் நாடினால் இதுபோன்ற இன்னும் பல நூல்கள் வெளிவர அதில்
    எனது பங்கும் இருக்க எனது பிரார்த்தனைகளும்,

    உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்....... :)

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும்!

    அல்ஹ‌ம்துலில்லாஹ் :) இதற்காக பாடுப‌ட்ட‌ அனைவரது (சிறிய, பெரிய) உழைப்புகளையும் அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்வானாக!

    ReplyDelete
  26. இணையத்தில் மட்டுமே இடம்பெற்று சிலரை மட்டுமே அடைந்த பதிவுகள் இன்று புத்தக வடிவில் பலரை எட்டும் நாள் வந்துவிட்டது. இறைவனுக்கே புகழனைத்தும்!

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும்
    அல்ஹம்துலில்லாஹ் நல்ல முயற்சி .இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சிறந்த கூலியை கொடுப்பானாக .

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும்
    அல்ஹம்துலில்லாஹ் .இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சிறந்த கூலியை கொடுப்பானாக .ஆமீன்

    ReplyDelete
  29. அன்புச் சகோதர சகோதரிகளுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    இன்ஷா அல்லாஹ் இரண்டொரு நாளில் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதற்கும் எதிர்க்குரல் முதற் பதிப்பை வாங்கி அச்சில் படிக்கவும் ஆசையுண்டு.

    நன் முயற்சிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  30. நூலமைப்பு நன்றாகவுள்ளது.

    சில பக்கங்களில் மை கூடுதல் குறைவாக உள்ளது (நான் வாங்கிய பிரதி மட்டுமோ?)

    படங்கள் கலரிலிருந்தால் கலக்கலாயிருந்திருக்கும்.

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும்...

    எதிர்க்குரல்= அதிர்குரல்

    மேலும் வளர வாழ்த்துகள். அல்லாஹ் அருள்புரிவானாக..
    :)

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )

    மாற்றுக் களத்தில் நின்று .., நிகழ்கால நம் சமுதாய தேவைகளை நிதானமாய் யோசித்து ., பல தோழமை கைகளுடன் கைகோர்த்து ., கடின முயற்சிக்குப்பின் வெளியிடப்பட்ட இந்த " எதிர்குரல் ".!

    நம் சமுதாயத்தின் எதிர்க்கால வளர்ச்சிக்கு முன்னோடியாய் திகழ வாழ்த்துக்கள் .!

    " எதிர்க்குரல் - நமக்கான கட்டாயம் " தொடரட்டும் ..., இதுபோன்ற தொடர் குரல்கள் .

    எனக்கான பிரதிக்கும் , இங்கே புருனையில் விநியோகம் செய்வதற்கும் இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்தியாவிலிருந்து எனது நண்பர் உங்களை தொடர்புகொள்வார் .

    கீப் இட் அப் ப்ரோ .!


    - காயின் காதர்
    21.01.15 / புருனை

    ReplyDelete