நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
பிரிட்டனின் பிரபல ஊடகமான "தி டைம்ஸ்", நன்கொடை/அறக்கொடை அளிப்பதில், சமயரீதியாக மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பிரதிபளிக்கும் ஆய்வொன்றின் முடிவுகளை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அந்த கட்டுரைக்கு தி டைம்ஸ் வைத்த தலையங்கம் இதுதான்,
Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013
அறக்கொடை அளிப்பதில் பிரிட்டனில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்கின்றனர் - (Extract from the original article of) The Times, 20th July 2013.
இன்று பரவலாக பல்வேறு ஊடங்களும் பகிர்ந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் கவனிக்கத்தக்க தகவல்களை நமக்கு தருகின்றன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம்.
பிரிட்டனில், சாரிட்டி (charity) எனப்படும் அறக்கொடை அளிப்பதில் முஸ்லிம்கள் முதல் நிலையிலும், நாத்திகர்கள் கடைசியிலும் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 371 யூரோக்களை கொடுத்துள்ளனர் (இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 29,000 ரூபாய் ஆகும்). இதுவே மற்ற சமயத்தவர்களை பொருத்தமட்டில் பின்வருமாறு உள்ளது.
யூதர்கள் - 270 யூரோக்கள்
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள்
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே அதிகமாக
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே குறைவாக
நாத்திகர்கள் - 116 யூரோக்கள்
இதுமட்டுமல்லாது, நன்கொடை/அறக்கொடை கொடுக்காதவர்கள் பட்டியலிலும், யூதர்களுடன் இணைந்து நாத்திகர்கள் முன்னிலையில் உள்ளனர். சென்ற ஆண்டில், பத்தில் நான்கு நாத்திகர்கள் எவ்விதமான தர்மத்தையும் மேற்கொள்ளவில்லை. யூதர்களை பொருத்தமட்டில், இது, நான்கிற்கும் சற்றே அதிகமாக உள்ளது.
ரிச்சர்ட் டாகின்ஸ் போன்ற பிரித்தானியர்கள், நாத்திகத்தின் மூலம் ஆரோக்கியமான/கருணையான உலகத்தை உருவாக்க முடியும் என்று முயற்சிகள் செய்துவரும் நிலையில் இப்படியான முடிவுகள் நிச்சயம் பெரும் பின்னடைவே. தங்களின் செல்வத்தை எப்படி செலவழித்தால், செலவழித்தவருக்கு எப்படியான நன்மைகள் உண்டாகும் என்பதை நாத்திகர்கள் மனதில் பதிய வைத்து அறக்கொடைகளை அதிகரிக்க வேண்டியது டாகின்ஸ் போன்றவர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாகும்.
நாம் பதிவிற்கு வருவோம்.
முஸ்லிம்களின் நன்கொடை யாருக்கு அதிகமாக சென்றுள்ளது?
இது பலரும் அறிந்துக்கொள்ள விரும்பும் கேள்வியாகும். இதற்கும் இந்த ஆய்வு பதிலளிக்கின்றது. முஸ்லிம்களின் நன்கொடைகள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களான Muslim Aid மற்றும் Islamic Relief போன்றவற்றிற்கு அதிகப்படியாக சென்றுள்ளது. அதே போல, பின்வரும் மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர்.
1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research)
2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)
சந்தேகமில்லாமல், இப்படியான ஆய்வுகள் மூலம் முஸ்லிம்கள் ஆச்சர்யமடைய ஒன்றுமில்லை. இஸ்லாம் அதிகப்படியாக வலியுறுத்தும் நன்மைகளில் (கடமையான) ஜகாத் மற்றும் தர்மங்களுக்கு முக்கிய பங்குண்டு. பொருளாதார வசதியுள்ள முஸ்லிம்கள் அதிகப்படியாக வழங்கி தங்களின் நன்மைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ஆய்வு முடிவுகள் சிறு அளவிலாவது ஊக்கமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
Infographics:
1. By Aashiq Ahamed
My sincere thanks to:
1. The Times Faith.
2. Just Giving.
References:
1. Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013. link
2. UK Muslims Top Charity Givers - On Islam, 21st July 2013. link
3. Muslims 'Give Most To Charity', Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds - The Huffington Post, 21st July 2013. link
4. Justgiving - Wikipedia. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானம் நிலவுவதாக,
ReplyDeleteஉலகில் தர்மங்கள் செய்வதில் என்றுமே முஸ்லிமகள் தான் முதலிடம், உலகின் கடைசி இறை தூதரை பின்பற்றும் மக்கள் அல்லவா?
நீண்ட இடைவெளைக்கு பிறகு அருமையான பதிவு செய்து இருக்கிறார்கள் சகா, தொடருங்கள் உங்கள் எழுத்தை..
சகோ ரஹ்மான் பயத்,
Deleteஉங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானம் நிலவுவதாக,தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி. நன்மைகளில் சிறந்த நன்மை, சிறிதாக இருந்தாலும் நிறந்தரமாக செய்யப்படுபவையே என்றார்கள் நபிகள் (ஸல்) அவர்கள். அப்படியான மக்களில் ஒருவராக நம்மை இறைவன் ஆக்கியருள வேண்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு ஒரு அதிரடி பதிவை பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ்.
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
Deleteதொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி ஹிமாஸ்...
'மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர்.
ReplyDelete1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research)
2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)' அருமையான பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு ஒரு அதிரடி பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteசலாம், கருத்துக்கு நன்று சகோ.அனானி
Deletemaasha allah!
ReplyDeleteசலாம் சகோ.சீனி, வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
Deleteபுதிய தகவல்... நன்றி...
ReplyDeleteகடவுள் இல்லை என்ற கான்சப்ட் நாளடைவில் இறக்க குணத்தை அறவே அழிக்கச் செய்யும்... எல்லா நாட்டிலும் நாத்திகர்கள் தான் தான தர்மத்தில் கடைசி இடத்தில் இருப்பார்கள் என்று தோன்றுகிறது...
சலாம் சிராஜ் அண்ணன்,
Delete//கடவுள் இல்லை என்ற கான்சப்ட் நாளடைவில் இறக்க குணத்தை அறவே அழிக்கச் செய்யும்... எல்லா நாட்டிலும் நாத்திகர்கள் தான் தான தர்மத்தில் கடைசி இடத்தில் இருப்பார்கள் என்று தோன்றுகிறது...//
உண்மையாக இருக்கலாம் என்பதே என்னுடைய எண்ணமும். இதற்காக தான் டாகின்ஸ் குழுவினருக்கு பதிவில் சில ஆலோசனைகளை கூறியுள்ளேன். நாத்திகர்கள் தங்கள் செல்வத்தை செலவழிப்பதால் அவர்களுக்கு எம்மாதிரியான நன்மைகள் கிடைக்கப்போகின்றன என்பதை டாகின்ஸ் குழுவினர் விளக்கி அவர்களை தர்மம் செய்ய தூண்ட வேண்டும். ஆனால் இது பெரும் சவாலாகவே தெரிகின்றது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
பிரித்தானிய முஸ்லிம்களை வாழ்த்துவோம். ஆனால் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்காசிய முஸ்லிம்கள் எந்தளவுக்கு அறம் செய்கின்றார்கள் ? சவுதிக்கு அருகாமையில் இருக்கும் சோமாலியா, எரித்திரியா, சூடான் போன்ற நாடுகளில் பல லட்சம் மக்கள் பசி, பட்டினியால் இறக்கின்றனர். ஆனால் சவுதியிலோ மாட மாளிகைகள், தங்கக் கழிவறைகள் என ஆடம்பரமாக இருக்கின்றார்களே.. அதுக் குறித்து.. !
ReplyDeleteநிரஞ்சன் தம்பி, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
Delete//ஆனால் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்காசிய முஸ்லிம்கள் எந்தளவுக்கு அறம் செய்கின்றார்கள் ?//
இதுக்குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் நமக்கு உண்மை தெரியவரும். நிச்சயம் அவர்களும் பிரித்தானிய முஸ்லிம்களை போல முன்னனியில் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். மத்திய கிழக்கு மக்களின் ஈகை குணத்திற்கு இந்த இரு செய்திகளையும் காணவும்.
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/huge-response-to-somali-aid-campaign-1.856035
மற்றும் சவூதி அரசாங்கம் சோமாலியாவிற்கு செய்த உதவிகள்: http://www.wfp.org/news/news-release/saudi-arabia-donates-us50-million-help-save-lives-somali-children
//ஆனால் சவுதியிலோ மாட மாளிகைகள், தங்கக் கழிவறைகள் என ஆடம்பரமாக இருக்கின்றார்களே.. அதுக் குறித்து.. !//
சவுதிகள் என்று இல்லை, எந்த முஸ்லிம் செய்தாலும் குற்றமே. இஸ்லாமும் ஆடம்பரமும் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteஇது தான் ஈமானின் சுவை! கருணையுள்ளம் கொண்ட நாத்திகர்களால் இதனை ருசிக்க முடியவில்லை என்பது வெளிப்பட்டுவிட்டது.
தகவல்களுக்கு ஜஸாகல்லஹு கைர்
வ அலைக்கும் சலாம் சகோ அஷ்பா,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஅருமையான பதிவு.மறுமையை நம்பாததன் விளைவை இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.
\\பிரிட்டனில், சாரிட்டி (charity) எனப்படும் அறக்கொடை அளிப்பதில் முஸ்லிம்கள் முதல் நிலையிலும், நாத்திகர்கள் கடைசியிலும் உள்ளனர்//
கருணை,அன்பு போன்றவற்றை அறிவியபூர்வமாக நிருபித்தால் தான் இது போன்றவற்றை கொடுக்க முடியும் என வாதடினலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
வ அலைக்கும் சலாம் சகோ Islamiclinks.weebly,
Deleteமிகச் சரியாக சொன்னீர்கள் :-) :-)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
(முக்கிய குறிப்பு நான் நாத்திகன் அல்ல )
ReplyDeleteபிரிட்டிஷ் முஸ்லீம்கள் மற்றவர்களை விட அறக்கொடையளிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர் என்ற விடயம் கருத்து கணிப்பு மூலமே பெறப்பட்டது. (கருத்து கணிப்பு என்றால் sample இலும் மட்டும் தங்கியிராது கேட்கப்படும் கேள்விகளிலும் தங்கியிருக்கின்றது )
poll இல் கேட்கப்படும் போது சொல்லப்படும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (என்னை கூட சிங்கப்பூரில் ஒரு பெண் இதே போல் கேட்டார் நான் எனது ஒரு பெருமைக்காக கொஞ்சம் அதிகமாக அடித்து விட்டேன் )
உண்மையாகவே பிரிட்டிஸ் முஸ்லீம்கள் அறக்கொடையளிப்பதில் முன்னிலையில் கூட இருக்கலாம் . அதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வெறும் Poll ஐ அதாவது கருத்துக் கணிப்பை வைத்துக் கொண்டு அவை உண்மையான தீர்க்கமான முடிவுகள் என்ற மாதிரி கதை விட்டுக் கும்மியடிப்பதை பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை. :)
சகோ அனானி,
Deleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.
இந்த ஆய்வானது, வெறுமனே வாய் வார்த்தைகள் மூலமாக அமைந்ததாக தெரியவில்லை. மாறாக மக்கள் கொடுக்கும் தர்மத்தின் அளவு, அது இன்டர்நெட் மூலமாக செலுத்தப்பட்டிருந்தால், யார் மூலமாக செலுத்தினார்களோ அந்த நிறுவனம் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையிலான கணக்கெடுப்பாகும். ஆக, ஒரு சமூகம் கொடுக்கும் தர்மத்தின் அளவு வாய் வார்த்தைகள் மூலமாக அன்றி, real valueக்கள் அடிப்படையிலானது.
மேலும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு ஒருவர் தர்மம் செய்கின்றார் என்றால், வெறுமனே "நான் அதற்கு கொடுத்தேன்" என்ற வாக்குமூலம் அடிப்படையில் அல்ல. மாறாக, அந்த ஆராய்ச்சி மையத்திற்கு transfer செய்யப்பட்ட தொகை அடிப்படையிலானது.
ஆக, தாங்கள் இந்த ஆய்வு குறித்து மேலே பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மற்றப்படி, நான் பதிவில் கூறியுள்ளது போல இதில் அலட்டிக்கொள்ளவோ, ஆச்சர்யமடையவோ ஒன்றுமில்லை. இஸ்லாம் தர்மத்தை கடுமையாக வலியுறுத்துகின்றது. பொருளாதார வசதி இருந்தும் செய்யவில்லை என்றால் தண்டனை என்கின்றது. இந்த பதிவை பொருத்தமட்டில், டைம்ஸ் போன்ற ஊடகத்திடம் இருந்து வந்துள்ளதால், இதனை பகிர்ந்த உலகளாவிய ஊடகங்கள் போல இங்கேயும் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவே..
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
naththigathirkum tharuma sinthanaikkum thodarbuillai
ReplyDelete