நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...
"Not to send you into a meltdown or anything but octopuses are basically ‘aliens’ – according to scientists. Researchers have found a new map of the octopus genetic code that is so strange that it could be actually be an “alien” " - Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com
"உங்களை நிலைக்குலைய செய்வது எங்களின் நோக்கமல்ல. அதே நேரம், விஞ்ஞானிகளை பொருத்தமட்டில் ஆக்டோபஸ் ஒரு வேற்றுக்கிரகவாசியாக கருதப்படுகின்றது. ஆக்டோபசில் நடைபெற்ற சமீப கால ஆய்வுகள், அவை மிக வினோதமான மரபணுக்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனாலேயே வேற்றுக்கிரகவாசியாக அவை அறியப்படுகின்றன" - (extract from the original quote) Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com.
நில்லுங்கள். உங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிடாதீர்கள். உலகில் யாருமே ஆக்டோபஸ்சை வேற்றுக்கிரகவாசியாக கருதுவதில்லை. ஆம், ஆக்டோபசின் மரபணுக்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் நம் கற்பனைக்கு எட்டாத, நீண்ட கால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் செய்திகளை நமக்கு கொண்டு வந்திருக்கின்றன. அதே நேரம், நீங்கள் மேலே படித்த, பிரபல BT ஊடகத்தின் வர்ணனை சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது.
ஆக்டோபஸ்:
சாக்குக்கணவாய் என்பது இவற்றுடைய தமிழ் பெயர் என்கிறது விக்கிப்பீடியா. எல்லோரும் புரிந்துக்கொள்ள ஏதுவாக நாம் ஆக்டோபஸ் என்றே அழைப்போம்.
ஆக்டோபஸ் பற்றிய பல உண்மைகள் வியப்பாகவே உள்ளன. எட்டு கைகள் கொண்ட இவற்றிற்கு மூன்று இதயங்கள் உண்டு. உங்களை ஆபத்தாக அது கருதினால் உங்கள் கண்களுக்கு முன்பாக, நேருக்கு நேராகவே மறைந்திருக்கும். இல்லை, நான் வார்த்தைகளை தவறாக போடவில்லை, சரியாக தான் சொல்லியிருக்கின்றேன். ஆம், உங்கள் முன்பு தான் நின்றிருக்கும், ஆனால் நீங்கள் பார்க்க முடியாது. ஆபத்தான நேரங்களில், சுற்றுச்சூழலின் நிறம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவை ஆக்டோபஸ்கள். பல நேரங்களில், இவற்றின் எதிரிகளான ஷார்க் மீன்கள், டால்பின்கள், ஈல்கள் போன்றவை ஆக்டோபஸ்சின் பக்கத்திலேயே நீந்தி செல்லும். ஆனால் இவற்றை கண்டுபிடிக்க அவற்றால் முடியாது.
ஒருவேளை எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், கறுப்பு நிற மையை பீச்சியடித்து தப்பிவிடும். இந்த மையானது மேகம் போல பரவி எதிரிகளை குழப்பமடைய வைக்கும். மேலும், வெறுமனே குழப்புவதற்கு மட்டுமல்லாமல் எதிரிகளின் நுகரும் தன்மையை தற்காலிகமாக மழுங்கடிப்பதற்கும் இந்த மை பயன்படுகின்றது. அதனால், இவை தப்பிய பிறகு, தங்களின் நுகரும் தன்மையால் இவற்றை தொடர்ந்து வர எதிரிகளால் முடியாது.
மெல்லுடல் (Mollusca) உயிரினங்களான இவை, கடல் பாறைகளின் சின்னஞ்சிறிய விரிசல்களுக்குள் கூட தன் உடலை புகுத்திக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும். தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்விடைந்து விட்டதா, எதிரி நெருங்கிவிட்டதா, கடைசி முயற்சியாக, தன் எட்டு கைகளில் ஒன்றை அறுத்துவிட்டு விடும். இதன் மூலம் எதிரிகளின் கவனத்தை சிதறடிக்கும். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த கையானது சில நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும்.
உயிரியலின்படி, தலைக்காலிகள் (Cephalopod) என்ற வகுப்பில் வரும் இவை, தங்களுடைய ஒவ்வொரு கையிலும், இரண்டு வரிசையில் உறிஞ்சு குப்பிகளை கொண்டிருக்கும். இந்த குப்பிகள், தன்னிச்சையாக சுவைகளை உணரக்கூடியவை என்பது மற்றுமொரு கவனிக்கத்தக்க செய்தி.
ஆக, ஆய்வாளர்களை பொருத்தமட்டில், உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் இருந்தும் பெரிதும் வித்தியாசப்பட்டவை ஆக்டோபஸ்கள். இதன் காரணமாகவே, பிரபல பிரிட்டிஷ் உயிரியலாளரான மார்ட்டின் வெல்ஸ், ஆக்டோபஸ்களை 'ஏலியன் (வேற்றுக்கிரகவாசி)' என்று குறிப்பிட்டார்.
மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தி (Gene Sequence technique):
உயிரினங்களின் விசித்திர நடவடிக்கைகளின் பின்னணியை எப்படி அறிந்துக்கொள்வது? மரபணுக்களை ஆராய்வதே பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று எண்ணினர் ஆய்வாளர்கள். இப்படியான சூழலில் தான் 'மரபணு வரிசைப்படுத்துதல்' தொழில்நுட்பம் வந்தது. உயிரினங்களின் மரபணுக்களை ஆராயும் வழிகளை அது எளிதாக்கியது. இன்றோ, பல்வேறு உயிரினங்களின் பின்னணியை இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகின்றனர் உயிரியலாளர்கள்.
இந்த யுக்தியைக் கொண்டு, ஆக்டோபஸ்சில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக பாரம்பரிய 'நேச்சர் (Nature)' ஆய்விதழில் வெளிவந்தன. இந்த உயிரினத்தை போலவே ஆய்வு முடிவுகளும் விசித்திரமான செய்திகளை கூறின. அதன் பிரதிபலிப்பு தான் 'இவை வேற்றுக்கிரகவாசிகள்' என்றுக் கூறி வெளிவந்த தலையங்கங்கள். அறிவியல் உலகை மட்டுமல்லாமல், சாமானியர்களின் உலகையும் சேர்த்து ஆட்கொண்டது இந்த செய்தி. தமிழில் கூட, சில தளங்களில் இதுக்குறித்து செய்திகள் வெளியானதாக நியாபகம்.
இந்த ஆய்வுக் குறித்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் பலவும், வேற்றுக்கிரகவாசி போன்ற வர்ணனைகள் மூலம் மக்களின் கவனத்தை கவர நினைத்தனவே தவிர, ஆய்வாளர்கள் இந்த உயிரினத்தை அப்படி அழைக்க பின்னால் இருந்த காரணங்களின் ஆழத்தை, காலங்காலமாக நம்பப்பட்டுவரும் பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆக்டோபஸ்சின் மரபணுக்கள் சவால் விட்டதை எடுத்துரைக்க ஏனோ மறந்துவிட்டனர்.
அப்படி என்ன சொல்லின ஆய்வு முடிவுகள்?
Fig 1. ஆக்டோபஸ் உறிஞ்சு குப்பிகளை காட்டும் படம் |
கணவாய் என்று நாம் பேச்சு வாக்கில் கூறும், உணவிற்கு பயன்படுத்தும் ஊசிக்கணவாய்களும் (squid), தலைக்காலிகள் என்ற இந்த வகுப்பில் தான் வருகின்றன என்ற போதும், அவற்றுடன் ஒப்பிடும் போது, ஆக்டோபஸ் மிக அறிவார்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது. இவ்வளவு ஏன், எலும்பு இல்லா (invertebrates) உயிரினங்களிலேயே மிக புத்திசாலியானவை என்ற பெருமையும் ஆக்டோபஸ்களுக்கு உண்டு. ஒருமுறை, இவற்றிற்கு பிடித்த உணவான நண்டுகளை ஜாடியில் போட்டு மூடிய போது, ஜாடியை திறந்து நண்டுகளை பிடிக்கும் அளவு அறிவார்ந்தவையாக இவை செயல்பட்டன.
Fig 2. a) ஆக்டோபஸ் b) கணவாய் |
மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தி (Gene Sequence technique):
உயிரினங்களின் விசித்திர நடவடிக்கைகளின் பின்னணியை எப்படி அறிந்துக்கொள்வது? மரபணுக்களை ஆராய்வதே பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று எண்ணினர் ஆய்வாளர்கள். இப்படியான சூழலில் தான் 'மரபணு வரிசைப்படுத்துதல்' தொழில்நுட்பம் வந்தது. உயிரினங்களின் மரபணுக்களை ஆராயும் வழிகளை அது எளிதாக்கியது. இன்றோ, பல்வேறு உயிரினங்களின் பின்னணியை இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகின்றனர் உயிரியலாளர்கள்.
இந்த யுக்தியைக் கொண்டு, ஆக்டோபஸ்சில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக பாரம்பரிய 'நேச்சர் (Nature)' ஆய்விதழில் வெளிவந்தன. இந்த உயிரினத்தை போலவே ஆய்வு முடிவுகளும் விசித்திரமான செய்திகளை கூறின. அதன் பிரதிபலிப்பு தான் 'இவை வேற்றுக்கிரகவாசிகள்' என்றுக் கூறி வெளிவந்த தலையங்கங்கள். அறிவியல் உலகை மட்டுமல்லாமல், சாமானியர்களின் உலகையும் சேர்த்து ஆட்கொண்டது இந்த செய்தி. தமிழில் கூட, சில தளங்களில் இதுக்குறித்து செய்திகள் வெளியானதாக நியாபகம்.
"The octopus appears so utterly different from all other animals, even ones it’s related to, that the British zoologist Martin Wells famously called it an alien. In that sense, you could say our paper describes the first sequenced genome from an alien," - Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.
"ஆக்டோபஸ்கள், மற்ற உயிரினங்களில் இருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை தொடர்புடைய (கணவாய் போன்ற) மற்ற உயிரினங்களில் இருந்தும் கூட இவை வேறுபடுகின்றன. அதனாலயே, பிரிட்டிஷ் உயிரியலாளர் மார்டின் வெல்ஸ் இவற்றை 'ஏலியன்' என்று அழைத்தார். அப்படி பார்த்தால், நாங்கள், இந்த வேற்றுக்கிரகவாசியின் மரபணு தொகுப்பை முதல் முறையாக ஆய்வு செய்து வரிசைப்படுத்தியுள்ளோம்" - Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.
இந்த ஆய்வுக் குறித்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் பலவும், வேற்றுக்கிரகவாசி போன்ற வர்ணனைகள் மூலம் மக்களின் கவனத்தை கவர நினைத்தனவே தவிர, ஆய்வாளர்கள் இந்த உயிரினத்தை அப்படி அழைக்க பின்னால் இருந்த காரணங்களின் ஆழத்தை, காலங்காலமாக நம்பப்பட்டுவரும் பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆக்டோபஸ்சின் மரபணுக்கள் சவால் விட்டதை எடுத்துரைக்க ஏனோ மறந்துவிட்டனர்.
அப்படி என்ன சொல்லின ஆய்வு முடிவுகள்?
மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தியைக் கொண்டு எந்தவொரு உயிரினத்தின் மரபணுக்களை பரிணாமவியலாளர்கள் ஆராய்ந்தாலும், பரிணாமத்திற்கு ஆதரவான விசயங்களை அதில் தேடுகின்றனர். உதாரணத்திற்கு, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக இவர்கள் நம்புகின்றனர். அதனால் இன்றைய மனிதனும், குரங்கின் சில இனங்களும் தொடர்புடையவை (அல்லது உறவினர்கள்) என்று கூறுகின்றனர்.
இதனை மனதில் கொண்டு, மனித மரபணுக்களில் சோதனை நடத்தி, முடிவுகளை குரங்கின் சில இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்படி ஒற்றுமை (??) இருந்தால், 'பார்த்தீர்களா, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது" என்பார்கள்.
ஒருவேளை இவ்விரு உயிரினங்களின் மரபணுக்களுக்கும் தொடர்பில்லை என்றால்? மனிதனின் தோற்றம் குறித்த இவர்களின் புரிதல் தவறு என்று தானே அர்த்தம்? ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது என்று இவர்கள் கூறும் விளக்கத்தை கண்டு நாம் நம் விதியை நொந்துக்கொள்ள வேண்டும் :-) :-).
சரி விடுங்க விசயத்திற்கு வருவோம். ஆக்டோபஸ்சில் நடத்தப்பட்ட மரபணு ஆய்விலும் இத்தகைய தொடர்பை தேடினர். அதாவது, மற்ற மெல்லுடல் மற்றும் எலும்பில்லா உயிரினங்களை ஆக்டோபஸ் ஒத்திருக்கும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையோ, பரிணாமவியலாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'ஆச்சர்யம், திகைப்பு, எதிர்ப்பார்க்காதது' போன்ற வர்ணனைகள் தான்.
எப்போது இவர்கள் 'எதிர்பார்க்காதது' போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்களோ அப்போதே நாம் உஷாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ பிரச்சனை வந்துவிட்டது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
1. இவர்கள் எதிர்பார்த்திராத முதல் விசயம், ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க அளவு, இவை தொடர்புடைய மெல்லுடல் உயிரினங்களுடன் ஒத்திராமல், முதுகெலும்பு உள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்த மரபணுக்களுடன் ஒத்திருந்தன (அட).

"What's more, they saw a massive expansion in a family of genes that's involved in setting up brain circuits. These genes have been studied in mice and were previously thought to be numerous only in animals with backbones. "We were really surprised as we were poking through the octopus genome to see that there were just 150 [or] 160 of these genes," Albertin says. She says they're completely absent in the invertebrates that scientists normally work on, like flies or nematode worms" - Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs , Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
"இன்னும் என்ன வேண்டும், ஆக்டோபஸ்சின் மூளை அமைப்புகளுடன் தொடர்புடைய சுமார் 150, 160 மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இப்படியான மரபணுக்களை எலிகளில் அவர்கள் கண்டுள்ளனர். மேலும், இந்த மரபணுக்கள் முதுகெலும்புள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்தனர். ஆய்வாளர்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள எலும்பில்லாத உயிரினங்களில் இவை முற்று முழுவதுமாக காணப்படவில்லை - (Extract from the original quote of) Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
ஒரு உயிரினத்தின் மரபணுக்கள், அது சார்ந்த உயிரினங்களுடன் ஒத்துப்போகாமல், எங்கோ தூரமாக உள்ள உயிரினங்களுடன் ஒத்துப்போவதான காட்சிகளை, நிச்சயம், பரிணாம ஆதரவாளர்கள் விரும்புவதில்லை. பரிணாமக் கோட்பாட்டின் யூகங்களுக்கு முற்றிலும் மாறான செய்திகள் இவை. இந்த விவகாரத்தை நோக்கும் சாதாரண மனிதனுக்கு கூட இது புரியும். ஆனால், நம்பிக்கையின் பால் சுழலும் பரிணாமவியலாளர்கள், இவற்றை ஏற்க மறுத்து, இந்த நிகழ்வுகளுக்கு வேறு காரணங்களை தேடி அலைகின்றனர்.
அப்படி கண்டுபிடித்த ஒரு காரணம் தான் 'தன்னிச்சையாக பரிணமித்தல் (Convergent Evolution)'. அதாவது, தொடர்பில்லாத இரண்டு உயிரினங்களிடையே மரபணுக்கள் ஒத்திருக்கின்றனவா, அப்படியானால், இந்த மரபணுக்கள் இரண்டு உயிரினங்களிலும் தன்னந்தனியாக பரிணமித்து விட்டதாக அர்த்தமாம். ஆக, மரபணுக்கள் தொடர்பிருந்தாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம், தொடர்பில்லை என்றாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம். what a pity !!!
சரி, இந்த தன்னிச்சையாக பரிணமித்தலுக்கு ஆதாரம்? அட, பரிணாமத்தின் மற்ற விசயங்களுக்கு மட்டும் ஆதாரம் இருக்கா என்ன? அப்படித்தான் இதுவும். லூஸ்ல விடுங்க.
2. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது தகவல் இன்னும் விவகாரமானது. ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவை தனித்துவம் வாய்ந்தவையாம். அப்படியென்றால், இதுப்போன்ற மரபணுக்கள் உலகில் வேறு எந்த உயிரினங்களிலும் காணப்படவில்லை என்று அர்த்தம் (அப்படி போடு).
பரிணாம ஆதரவாளர்களுக்கு இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், இப்படி புதிய மரபணுக்கள் தென்பட்டால் கூறும் வழக்கமான காரணத்தை கூட கூற முடியாதபடி செய்துவிட்டது ஆக்டோபஸ் :-). எப்படி என்கின்றீர்களா? எப்போதெல்லாம் புதிய மரபணுக்கள் உயிரினங்களில் தென்படுகின்றவோ, அப்போதெல்லாம் ரெடிமேடாக இவர்கள் வைத்துள்ள பதில், "மரபணு நகலெடுத்தல்" என்பதாகும். அப்படின்னா என்ன?
மரபணு நகலெடுத்தல் (Gene Duplication):

We identified hundreds of cephalopod-specific genes, many of which showed elevated expression levels in such specialized structures as the skin, the suckers and the nervous system - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668
நூற்றுக்கணக்கான தனித்துவமான மரபணுக்களை நாங்கள் ஆக்டோபஸ்சில் கண்டறிந்துள்ளோம். தோல், உறிஞ்சு குப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவாக இவை இருக்கின்றன - (Extract from the original quote of) Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668
பரிணாம ஆதரவாளர்களுக்கு இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், இப்படி புதிய மரபணுக்கள் தென்பட்டால் கூறும் வழக்கமான காரணத்தை கூட கூற முடியாதபடி செய்துவிட்டது ஆக்டோபஸ் :-). எப்படி என்கின்றீர்களா? எப்போதெல்லாம் புதிய மரபணுக்கள் உயிரினங்களில் தென்படுகின்றவோ, அப்போதெல்லாம் ரெடிமேடாக இவர்கள் வைத்துள்ள பதில், "மரபணு நகலெடுத்தல்" என்பதாகும். அப்படின்னா என்ன?
மரபணு நகலெடுத்தல் (Gene Duplication):
உங்களிடம் ஒரு ஆவணம் (டாகுமென்ட்) இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதனை நகல் (ஜெராக்ஸ்) எடுக்கின்றீர்கள். எடுக்கப்பட்ட நகலில் சில மாற்றங்களை செய்து புது வேலைக்கு பயன்படுத்துகின்றீர்கள். அதே நேரம், உங்கள் ஒரிஜினல் ஆவணம் அப்படியே இருந்து, தொடர்ந்து பழைய வேலைக்கே பயன்படுகின்றது.
புதிய மரபணுக்கள் எப்படி உருவாகின என்பதற்கும் இப்படியான ஒரு விளக்கத்தையே காலங்காலமாக கொடுத்து வந்தனர் பரிணாமவியலாளர்கள். அதாவது, ஒரு உயிரினத்தில் உள்ள மரபணு, தன்னை நகல் எடுத்துக்கொள்கின்றது. நகல் எடுக்கப்பட்ட மரபணு காலப்போக்கில் மாற்றமடைந்து புதிய மரபணுவாக உருவெடுக்கின்றது. இந்த மரபணுவானது உயிரினத்தில் புதிய வேலைகளை செய்கின்றது. அதே நேரம், பழைய மரபணுவோ தொடர்ந்து தன்னுடைய பழைய வேலையை செய்துக்கொண்டிருக்கின்றது.
Fig 3. மரபணு நகலெடுத்தல் முறை செயல்படும் விதம் |
ஆக, பழைய மரபணுக்கள் பழைய வேலையையும், அவற்றில் இருந்து நகல் எடுக்கப்பட்டு உருவான புதிய மரபணுக்கள் புதிய வேலைகளையும் செய்ய ஆரம்பித்தன. ஒரு உயிரினத்தில் புதிய மரபணுக்கள் காணப்படுவதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த விளக்கமானது "மரபணு நகல் எடுத்தல்" என்றழைக்கப்படுகின்றது.
ஆனால், எப்போது உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம் (Gene Sequence) வந்ததோ, அப்போதே பிரச்சனைகள் தலைக்கு மீறி போக ஆரம்பித்தன. புதிய மரபணுக்கள் எனப்படுபவை குறித்த ஆழ்ந்த பார்வையை இவை கொடுக்க ஆரம்பித்தன. நிச்சயம் பரிணாமவியலாளர்களுக்கு இது இக்கட்டான நிலையே.
எப்படி என்றால், உங்களின் புதிய ஆவண நகல், ஒரிஜினல் ஆவணத்தை ஒத்து தானே இருக்கும்? அல்லது குறைந்தபட்ச ஒற்றுமைகளாவது இருக்கும் அல்லவா? 'நகலெடுத்தல்' வழிப்படி புதிய மரபணுக்கள் வந்திருந்தால், அந்த புதிய மரபணுக்கள், தங்களின் மூதாதையரான பழைய மரபணுக்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது கொண்டிருக்க வேண்டுமல்லவா?
இங்கு தான் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. மரபணு வரிசைப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வகையான உயிரினங்களின் மரபணு தகவல்களை சேமித்து வைத்துள்ளனர் ஆய்வாளர்கள். (அவற்றில்) தேடித்தேடி பார்த்தார்கள், புதிய மரபணுக்களுடன் தொடர்புடைய பழைய மரபணுக்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு உயிரினத்தின் புதிய மரபணுக்கள் வேறு எந்தவொரு உயிரினத்திலும் காணப்படவில்லை. காணப்படவே இல்லை. இவை புத்தம் புதியவை, வேறு எங்கும் இல்லாதவை.
சரி போகட்டும். இப்படியான மரபணுக்கள் காணப்படுவது மிக அரிதான நிகழ்வு என்று தங்களை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்ற தருணத்தில், தொடர்ந்து, பல்வேறு உயிரினங்களில் புதிய மரபணுக்களை கண்டறிய ஆரம்பித்தனர். புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன.
"For most of the last 40 years, scientists thought that this was the primary way new genes were born — they simply arose from copies of existing genes. The old version went on doing its job, and the new copy became free to evolve novel functions. Certain genes, however, seem to defy that origin story. They have no known relatives, and they bear no resemblance to any other gene. They’re the molecular equivalent of a mysterious beast discovered in the depths of a remote rainforest, a biological enigma seemingly unrelated to anything else on earth" - Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015.
"கடந்த நாற்பது வருடங்களாக, புதிய மரபணுக்கள் பிறந்ததற்கு நகல் எடுத்தலே பிரதான காரணம் என்று ஆய்வாளர்கள் நினைத்தனர் - அதாவது, ஏற்கனவே இருக்கும் மரபணுக்களின் நகல் மூலம் இவை பிறந்ததாக. பழைய மரபணுக்கள் தங்களின் வழக்கமான வேலைகளை பார்க்கும், நகலோ பரிணமித்து புதிய வேலைளை பார்க்கும். ஆனால், குறிப்பிடத்தக்க மரபணுக்கள் 'நகல் எடுத்தல்' என்ற விளக்கத்திற்கு உடன்படவில்லை. அவற்றிற்கு மூதாதையர் இல்லை, வேறு எந்த மரபணுக்களை போலவும் அவை இல்லை. தொலைத்தூர மழைக்காட்டில், உலகில் உள்ள எந்த உயிரினத்தோடும் ஒப்பிட முடியாத ஒரு மர்ம விலங்கு கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியான சூழலே இது" - (extract from the original quote of) Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015.
இந்த பிரச்சனையில் தான் ஆக்டோபஸ்சும் பரிணாமவாதிகளை தள்ளி விட்டுவிட்டது. ஆக்டோபஸ்சில் காணப்படும் புதிய மரபணுக்கள் 'நகலெடுத்தல்' மூலம் வந்தவை என்று கூற முடியாத அளவு தனித்துவமாக இருக்கின்றன. இதனால் தான் இவை எப்படி வந்தன என்பதை விளக்காமல் கமுக்குமாக கட்டுரையை முடித்துவிட்டார்கள் ஆய்வை நடத்தியவர்கள். இவ்விவகாரத்தின் வீரியத்தை இதிலிருந்தே நாம் உணரலாம். அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன , நாம் சொல்லுவோமே. உண்மைகள் நெடுநேரம் உறங்காதே...
பைனல் பன்ச்:
விசித்திரமாகவும், வேறு எந்த உயிரினத்திலும் காணப்படாத மரபணுக்கள் ஆக்டோபஸ்சில் காணப்படுவதாலும் அவை வேற்றுக்கிரகவாசிகள் என்றால், உலகில் இப்படியான பல வேற்றுக்கிரகவாசிகள் உண்டு. மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் தனித்துவமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு வகையில் விசித்திரமானது தான். அது புரியாத வரை சிலருக்கு எதுவும் புரியாது :-) :-)
"ஹலோ நாசாவா, நீங்க ஏலியன்களை எங்கெங்கோ தேடுறீங்களே, நம்ம பரிணாம பங்காளிகள் கிட்ட கேட்டா, இந்த பூமியிலேயே புடிச்சு தருவாங்க. ஆவண பண்ணுங்க"
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...
இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Pictures taken from:
Fig 1 - Scientific American.
Fig 2 - Google
Fig 3 - Designed by Aashiq Ahamed
References:
1. The octopus genome and the evolution of cephalopod neural and morphological novelties - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668. link
2. Octopus genome surprises and teases - Dennis Normile. Science Magazine, Aug. 12, 2015. link
3. Octopus genome holds clues to uncanny intelligence - Alison Abbott, Nature, 12 August 2015. link
4. Octopus Genome Reveals Secrets to Complex Intelligence - Katherine Harmon Courage, Scientific American, August 12, 2015. link
5. Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105. link
6. Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study - BT, 13 August 2015. link
7. The Octopus Genome: Not "Alien" but Still a Big Problem for Darwinism - Casey Luskin, Evolution News and Views, August 24, 2015. link

அருமையான ஆக்கம்...
ReplyDeleteபகுதி பகுதியாக பிரித்து இரண்டு மூன்று பிரசுரித்தால் இன்னும் நல்லது.
தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணே. இம்மாதிரியான ஆய்வுக் கட்டுரைகளை ஒரேடியாக போட்டுவிடுவதே சிறந்தது. எதிர்க்குரலில் இதுவரை ஒரே ஆய்வுக்குறித்த கட்டுரையை தொடர்களாக போடாததிற்கு இதுவே காரணம். நாம் கேப் விட்டால் நம் கவனத்தை சிதறடித்து விடுவார்கள். இங்கு வருபவர்கள் ஆழ்ந்த பதிவை எதிர்பார்த்தே வருகின்றனர் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக). ஆக, பெரிய மாற்றம் நிகழ போவதில்லை.
Deleteஇன்னும் நிறைய எழுதி வைத்திருந்தேன், பலவற்றை proof reading போது அழித்துவிட்டேன்.
நன்றி அண்ணன்.
அருமை. உயிரியில் கசப்பவர்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்.
ReplyDeleteஎலி, ஆக்டோபஸின் பரிணாம வளர்ச்சியில் வந்தது என்றும் இவை இரண்டும் உறவினர்கள் என்றும் சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. யாரும் சொல்லலையா?
//எலி, ஆக்டோபஸின் பரிணாம வளர்ச்சியில் வந்தது என்றும் இவை இரண்டும் உறவினர்கள் என்றும் சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. யாரும் சொல்லலையா?// - ஹா ஹா செமையா சிரிச்சிட்டேன் சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஹா ஹா ! சரியான ஜாதக சாதக பரிந்துரை... சகோ : அப்துல் ரஹ்மன் ஐ.
Delete@ m.nainathambi.அபூஇப்ராஹீம், :-) :-)
Deleteநல்ல ஆய்வு ,சிறந்த விளக்கம் .தொடரட்டும் உமது சேவைகள் . வாழ்த்துகள்
ReplyDeleteபாசத்துடன் ,
உங்களின் தொடர்ச்சியான ஊக்கமும், அரவணைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மிக்க நன்றி அப்பா.
Deleteஅருமையான ஆக்கம், ரொம்ப நாள் எதுவும் எழுதாமல் எழுதியதால் பெரிதாக கொடுத்திருக்கிறிர்கள். நல்ல பணி. எல்லாம்வல்ல அல்லா உங்களுக்கு சுகத்தையும் இதுபோல் மேலும் தர கிருபை செய்யட்டும்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்திற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசிறந்த ஆய்வு & தெளிவான அருமையான கட்டுரை.
ஜஸாக்கல்லாஹு கைர்.
எதிர்க்குரல் தொடர்ந்து ஒலிக்க அல்லாஹ் உதவி செய்யட்டும்!
வ அலைக்கும் சலாம் சகோதரி Ashfa,
Deleteதங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி
Next they will ex-communicate the scientists who did not tow the usual line of "everything in evolution is explainable"
ReplyDelete:-) :-) thanks for ur comments brother..
Deleteஎப்படியாவது டார்வினின் கோட்பாட்டை நிலை நிறுத்த துடிக்கின்றனரளானால் உங்களை போன்ற சிலர் அவுங்கள விட மாட்டேங்கிறீங்கள்... ஏதாவது சான்ஸ் கிடைச்சா பரிணாமத்தை தூக்கி வாசிக்கலாம்ன்னு நினைச்சிருப்பாங்க எதுவும் கிடைக்காம ஏடாகூடமாக கிடைத்த முடிவால் பரிணாமம் வெறும் நாமமாக மாறிப்போனது கடைசியில ஆக்டோபஸை ஏலியன்ஸ் ன்னு சொல்லி மேட்டரை முடிச்சிட்டாங்க.. அவங்க பிரச்சனை அவங்களுக்கு... :)
ReplyDeleteஹா ஹா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ அப்பாஸ்
Deleteஎப்படியாவது டார்வினின் கோட்பாட்டை நிலை நிறுத்த துடிக்கின்றனரளானால் உங்களை போன்ற சிலர் அவுங்கள விட மாட்டேங்கிறீங்கள்... ஏதாவது சான்ஸ் கிடைச்சா பரிணாமத்தை தூக்கி வாசிக்கலாம்ன்னு நினைச்சிருப்பாங்க எதுவும் கிடைக்காம ஏடாகூடமாக கிடைத்த முடிவால் பரிணாமம் வெறும் நாமமாக மாறிப்போனது கடைசியில ஆக்டோபஸை ஏலியன்ஸ் ன்னு சொல்லி மேட்டரை முடிச்சிட்டாங்க.. அவங்க பிரச்சனை அவங்களுக்கு... :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ Abufaisal sahib
Deleteஅருமையான ஆய்வு... மிகவும் பொறுமையாகவே வாசித்`தேன்
ReplyDeleteஉங்கள் கருத்தை ரசித்தேன். மிக்க நன்றி சகோ
Deleteநீண்ட நாள் ஆனாலும் இந்த பரினாமவியலாளர்களுக்கு அருமையான ஆப்பை செதுக்கி இருக்கிறீர்கள்
ReplyDeleteஅருமையான ஆக்கம்
வாங்க சகோ. தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி பாஸ்
Deleteசலாம் பாஸ்.,
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு எழுதிய ஒரு நீண்ட பதிவு., பரிமாண கனவை கலைக்கும் மற்றுமொரு நிதர்சன பதிவாக இருக்குமென நினைக்கிறேன்.
பாதி தான் படித்தேன். முழுவதும் முடித்து பின் தொடர்கிறேன்.
வ அலைக்கும் சலாம் குலாம்,
Deleteஇன்ஷா அல்லாஹ், முழுவதுமாக படிச்சிட்டு வாங்க..
எத்தனை கத்தினாலும்
ReplyDeleteதெளியப்போவதில்லை பித்தன்
சொல்ல வேண்டியத சொல்லிடுவோம். அப்புறம் அவர்கள் விருப்பம். வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி ஜமால் அண்ணே
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமிக அருமையான பதிவு. மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியான சிறப்பான பதிப்பு.
வ அலைக்கும் சலாம், மிக்க நன்றி சகோ. புத்துணர்ச்சியை தருகின்றது உங்கள் கருத்து. வருகைக்கு நன்றி
Deleteநகல் எடுத்தல் நிகழ வேண்டும் என்றால் அந்த நகழ் எடுத்தல் நிகழ வேண்டிய அவசியம் என்ன?
ReplyDeleteநகழ் எடுக்கும் அறிவு எப்படி வந்தது?இதைத்தான் நகழ் எடுக்க வேண்டும் என்றும்,
அதில் இவற்றையல்லாம் நகல் எடுத்துட்டு இவற்றையல்லாம் ஒதுக்க வேண்டும் என்ற அறிவும்,
இவற்றைத்தான் புதிய நகலில் புதிய மரபணு உருவாக்க வேண்டும் என்ற அறிவும்
அந்த புதிய மறுபனு எப்படி உருவாக்கப்படுகிறது என்ற அறிவும் எங்கிருந்து? எப்படி ?
அதற்கும் தற்செயல் என்று சொன்னால்...இவர்களால் அறிவு என்பதற்கும் இயக்கம் என்பதற்கும் நகர்வு என்பதற்கும் பரிணாமவியலுக்கு சார்பாக புதிய கோட்பாட்டை முன்வைக்க வேண்டிவரும்.இதில் கேள்விகள் அடிக்கிக் கொண்டே போகலாம்....பரினாம வியலாலார்கள் மூச்சு தினறி இறந்து விடுவார்கள்...எப்படியோ உயிர்களின் படைப்புக்குப்பின்னால் பெரிய ஓர் அறிவு இருந்து இயக்குகிறது என்பதை இவர்கள் சொல்லாமல் சொல்லும் விடயம்..பரிணாமவியல் இறைவனை ஏற்கும் வெகும் தூரம் இல்லை...எத்தனை நாற்கள் ஒழிந்திருப்பார்கள்
உங்களுடைய இந்த தளத்தில் நீங்கள் எப்போது ஆரம்பிப்பீர்கள் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தேன்...இப்போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது...இன்னும் எதிர் பார்க்கிறேன்
உங்கள் கருத்தை பார்த்தவுடன் மிக்க மகிழ்வாய் உணர்ந்தேன் ப்ரதர். காரணம், ஒரு விசயம் சரியாக உள்வாங்கப்பட்டால் மட்டுமே அது சார்ந்த மற்ற கேள்விகளுக்கான வாசல் திறக்கும். அந்த வகையில் இந்த கட்டுரை மிக சரியான முறையில் சென்றடைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. ஆம் சகோ, நகலெடுத்தல் என்பதே மிக சர்ச்சையான கருத்து தான். பதிவின் நீளம் கருதி இதுக்குறித்த மாற்றப்பார்வையை தவிர்த்து விட்டேன்.
Deleteஉங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் தொடர்ந்து செயலாற்ற வைக்கின்றது. புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
மா ஷா அல்லாஹ்..நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பேவரைட் சப்ஜெக்டில் அசத்தலான பதிவு சகோ ..வாழ்த்துக்கள் ..!!
ReplyDeleteபுகழ் அனைத்தும் இறைவனுக்கே புரித்தாவதாக. தங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமா ஷா அல்லாஹ் ஒரே மூச்சா முழுவதுமாக படிச்சும் சலிப்பே வராததோடு, எனக்கு அவ்ளோ அறிவில்லாத ஒரு விசயத்தை இவ்ளோ தெளிவாக புரியும் படி எழுதியதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.
அறிவியல் உலகம் தன் கோட்பாடுகளுக்கு முரணானதை ஆதாரமின்றி ஒப்புக் கொள்ளாது.
ஆதாரம் கிடைத்து விட்டால் தக்க (?!) விளக்கத்துடன் முரணானதை தன் கோட்பாடுகளுக்குள் கொண்டு வந்து விடும்.
வ அலைக்கும் சலாம் ஹசன் தம்பி,
Deleteபுகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...நீங்கள் சொன்னதை வேறு விதமாக சொல்கிறேன் பாருங்கள். அறிவியல் உலகமும், பரிணாம உலகமும் வெவ்வேறானவை. பரிணாமத்தை பொருத்தவரை ஒரு கோட்பாட்டை முன்வைத்து விட்டு ஆதாரங்களை தேடுகின்றனர். அப்படி ஆதாரங்கள் கிடைக்கவில்லையா, ஆதாரங்களுக்கு ஏற்றவாறு கோட்பாட்டை மாற்றிக்கொள்கின்றனர். ஆனால் அறிவியல் இப்படி செயல்படுவதில்லை. Scientific Method எனப்படும் உக்திகளை கொண்டே அறிவியல் செயல்படுகின்றது. பரிணாமமோ இந்த method-க்குள் பொருந்தாது. அதனால் பரிணாமத்தை அறிவியலாக ஏற்றுக்கொள்ள முடியாது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்.
அல்ஹம்துலில்லாஹ்... இடையிடையே கமண்ட்ரிகளுடன் படிக்க அருமையான கட்டுரை... உங்கள் அறிவை அல்லாஹ் மேம்படுத்துவானாக. அவர்களுக்கும் நமக்கும் அவனே நேர்வழி காட்டுவானாக.
ReplyDeleteபுகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக....தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..
Deleteமாஷா அல்லாஹ் ஆக்டோபஸ்சிர்குள் இவ்வளவு விஷயம் இருப்பது இன்று தான் தெரியும்....
ReplyDeleteஅருமையான ஆராய்ச்சி தெளிவான பதிவு உங்கள் ஆராய்ச்சி தொடரவேண்டும்...
ஆயிரம் தான் இவர்கள் பரிணாமம் பரிணாமம் என்றாலும் படைத்தவனை பற்றி பேசாமல் போய்விட முடியாது...
@ Shams deen, அல்ஹம்துலில்லாஹ். தங்களின் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Delete