நம் அனைவர் மீதும் இறைவனின், சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...
என்ன தம்பி, தலைப்பே செம விவகாரமா இருக்கே....நேரா மேட்டருக்கு வா.
நம்ம டாகின்ஸ் புதுசா ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்காரு அண்ணே. ஒரு அறிவியல் கருத்தரங்குல, இங்கிலாந்தின் New Statesman ஊடக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரு கிட்ட கேள்வி கேட்டிருக்காரு.
ரிச்சர்ட் டாகின்ஸ் |
என்னான்னு?
மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டிருக்காரு. 'தம்பி இந்த கருத்தரங்குக்கு சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க'ன்னு டாகின்ஸ் சொல்லிருக்காரு.
நியாயம் தானே !
ஆமாண்ணே, சரியான பேச்சு தான். இந்த நிருபர் திரும்பவும் அப்படியே கேள்வி கேட்டிருக்காரு. ஒரு கட்டத்துல, இந்த நிருபர் முஸ்லிம்னு தெரிஞ்சிகிட்ட டாகின்ஸ், 'உங்க இறைத்தூதர் பறக்கும் குதிரைல வானத்துக்கு போனாரே, அத நீ நம்புறியா'ன்னு கேட்டிருக்கார். அதுக்கு அந்த நிருபர், ஆமான்னு சொல்லிருக்கார். அவ்ளோதான் டென்ஷன் ஆகி, கோபத்துல அந்த நேர்க்காணல்ல இருந்தே வெளியேறிவிட்டார் டாகின்ஸ்.
ஆஹா, இது என்னப்பா விசித்திரமா இருக்கு. பிடிக்கலன்னா, மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டப்பவே வெளியேறி இருக்கலாமே. அது என்ன இஸ்லாம் சம்மந்தமா கேள்வி கேட்டு, சொன்ன பதில் புடிக்கலன்னு போறது.
இது தான் பிரச்சன. பலரும் டாகின்ஸ்சுடைய இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிச்சு இருக்காங்க. இந்த பறக்கும் குதிரைய பத்தி பொதுமேடைல டாகின்ஸ் கேட்குறது இது முதல் தடவை இல்லை. ஏற்கனவே, ஆக்ஸ்போர்ட் யூனியன்ல, சில வருஷத்துக்கு முன்னாடி, அல்ஜசீரா ஊடகத்தின் மஹ்தி ஹசன் கூட நடந்த ஒரு நேர்காணல்ல இதே கேள்விய டாகின்ஸ் கேட்டிருக்காரு. அப்ப ஹசனும், இந்த நிகழ்வ 'இறைவன் புறத்துல இருந்து அவன் அடியாருக்கு காட்டப்பட்ட ஒரு அற்புத சம்பவமா நாங்க நம்புறோம்'னு சொன்னார்.
ஆமா, அல்ஜசீரா நிருபர் பேரு என்னான்னு சொன்ன?
மஹ்தி ஹசன்.....
மஹ்தி ஹசன் |
யோவ், இந்த பயலா, சமீபத்துல கூட நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருத்தர ஒருவழி பண்ணி ட்விட்டர்ல வலதுசாரிகள் கிட்ட கடுமையா எதிர்ப்ப சம்பாரிச்சானே, அந்த பய தானே...
அவரே தான்....
ரொம்ப விவகாரமான பையன்பா. இவர பத்தி அப்பால பார்ப்போம். முதல்ல பறக்கும் குதிரை மேட்டருக்கு வா. என்ன சம்பவம் இது, இப்படியான நிகழ்வு இஸ்லாமுல இருக்கா? கொஞ்சம் டீடெயிலா சொல்லு.
இப்படியான சம்பவம் இருக்கு.. அதாவது, சவூதி அரேபியாவின் மக்காவுல இருக்குற ஹரம் மசூதியில் இருந்து, (ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின்) ஜெருசலத்தில் இருக்குற அக்ஸா மசூதி வரை, ஒரு இரவில், நபிகள் நாயகம் அழைத்து செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து வானுலகிற்கு சென்று திரும்பியதா இஸ்லாமிய மூல நூல்கள் சொல்கின்றன. குர்ஆன்ல இந்த சம்பவம் பின்வருவாறு விவரிக்கப்பட்டிருக்கு..
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன் - அல்குர்ஆன் 17:1
ம்ம்ம். நீ தொடரு.
இந்த பறக்கும் குதிரை குறித்து நபிமொழிகள்ல பின்வரும்படியான விளக்கம் வருது.
"நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது....(இந்த நிகழ்ச்சி நடந்தது)..... கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது'' - அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி), நூல்: புகாரி 3207.
ஒ, இந்த புராக் வாகனத்த தான் டாகின்ஸ் பறக்கும் குதிரைன்னு சொல்றாரா...
ஆமாம். இப்ப சொல்ல போறத நல்லா கவனியுங்க.
சொல்லு சொல்லு. ரொம்ப சுவாரசியமா இருக்கு.
இந்த புராக்ல போன சம்பவம் எல்லாம் ஒரு இரவுல நடந்து முடிஞ்சிருச்சுன்னு நான் சொன்னேன் இல்லையா. அடுத்த நாள் காலைல இத எப்படி மக்கள் கிட்ட சொல்றதுன்னு நபிகள் நாயகமே ரொம்ப கவலைல தான் இருந்திருக்காங்க. ஏன்னா, ஏற்கனவே இவரு குழப்பத்த ஏற்படுத்திகிட்டு இருக்குறதா மக்கா நகர மக்கள் நினைக்குறாங்க. இப்ப இந்த நேரத்துல இதை வேற சொன்னா, நிச்சயமா இவர் ஒரு பொய்யர்ன்னு முத்திரை குத்திருவாங்கன்னு அஞ்சி இருக்கார்.
அப்ப, இந்த சம்பவம் மேல, இன்னைக்கு டாகின்ஸ்சுக்கு இருக்குற கேள்வி/சந்தேகம்/கேலி எல்லாம் நபி வாழ்ந்த காலத்துல இருந்த மக்கள் கிட்டயும் இருந்துச்சுன்னு சொல்லு. சூப்பரா இருக்குப்பா. சரி, இந்த சம்பவத்த மக்கள் கிட்ட சொன்னப்ப என்ன நடந்துச்சு...
என்ன நடந்துச்சு என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குது.
நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந்திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல், நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.
நபி (ஸல்) அவர்களிடம், "என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?'' என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். "இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப்படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?'' என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
உடனே அபூஜஹ்ல், "பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங்கள்!'' என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். "என்னிடம் அறிவித்ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்'' என்று அபூஜஹ்ல் கூறினான்.
"இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், "நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?'' என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவர்களும் அந்தச் சபையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், "வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்'' என்று கூறினர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2670
கேட்கறதுக்கு செமையா இருக்கப்பா. மக்காவுக்கும், ஜெருசலதிற்கும் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரமாவது இருக்குமா?
இருக்குமண்ணே....
அன்னைக்கு இருந்த டெக்னாலஜி படி, ஒரு நாள் நைட்ல, இவ்வளவு தூரத்திற்கு போயிட்டு வந்திருக்க முடியாது. ஆனா, இவர் இதற்கு முன் போயிராத/பார்த்திராத ஜெருசலம் பள்ளிவாசல் குறித்து நுணுக்கமான விசயங்கள கூட சரியா வர்ணிச்சு இருக்காரு. ஏற்கனவே அந்த பள்ளிக்கு போயிட்டு வந்திருந்த மக்கள் இவர் சொல்றது சரிதான்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்ப, இறைவன் நபிக்கு காட்டின அத்தாட்சியா/அற்புதமா தான் இந்த பயணத்த நாம புரிஞ்சிக்க முடியும்.
இவ்ளோ தான் மேட்டரு. இத ஒரு அற்புதமா (miracle), இறைவன் தன் அடியாருக்கு காட்டிய அத்தாட்சிகளாக தான் முஸ்லிம்கள் நம்புறாங்க.
சரிதாம்பா... இந்த சம்பவத்த இறைவன் நடத்திக்காட்டிய அற்புதமா நம்புறதுல டாகின்ஸ்க்கு என்ன பிரச்சன?
இதுக்கு அறிவியல்ரீதியான ஆதாரம் கேட்குறார்ண்ணே...
என்ன? என்னையா சொல்ற.
ஆமா அவரு அப்படித்தான் கேட்குராறு. குதிரைக்கு எப்படி இறக்கை இருக்கும்? அது எப்படி பறக்கும்? யாரு பார்த்தா? இப்படியான ஆதாரங்கள்...
ஆஹா............ இறைவன் சைட்ல இருந்து நிகழ்த்தக்கூடிய ஒரு அற்புதத்துக்கு, இந்த உலகத்துல இருக்குற விசயங்கள அளவுக்கோலா வச்சு ஆதாரத்த கேட்குறது என்னய்யா லாஜிக்? அதுமட்டுமில்லாம நபி சொன்னது சரிதான்னு செக் செய்து அப்போதைய மக்கள் ஒத்துக்கிட்டு இருக்காங்க. இது பொய் என்று மக்கள் நம்பியிருந்தா இஸ்லாம் பரவியிருக்க வாய்ப்பே இல்ல. ஒருவேள New Statesman நிருபரோ அல்லது மஹ்தி ஹசனோ, 'இந்தா பாருங்க, நாங்க அந்த காலத்துலைய பறக்குறதுக்கு டெக்னாலஜி கண்டுபிடிச்சிட்டோம்'னு சொல்லியிருந்தா கூட டாகின்ஸ் கேட்கறதுல நியாயம் இருக்கு. இவங்க அப்படி சொல்லல தானே.
கரெக்ட் தான். இவங்க அப்படி சொல்லல. ஒரு அற்புதமா இந்த சம்பவத்த நம்புறோம்னு தான் சொல்றாங்க.
நல்ல வேலை நம்ம மோடி தப்பிச்சாரு...
என்ன சொல்றீங்க? இப்ப எதுக்கு மோடிய இதுல நுழைக்குறீங்க?
'ப்ளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்துலயே நம்ம நாட்டுல இருந்துச்சு. அதுக்கு பிள்ளையார் தான் உதாரணம்'னு மோடி சொல்லப்போய் அவர நம்ம நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வழி பண்ணிட்டாங்க தானே. நல்ல வேலை மோடி இங்கிலாந்துல இத சொல்லல.
சரிதான். பிள்ளையார் சம்பவத்த ஒரு தெய்வீக நிகழ்வா மோடி சொல்லியிருந்தா இந்த அளவிற்கு எதிர்ப்பு வந்திருக்காது. சரி நம்ம விசயத்துக்கு வாங்க.
வந்தாச்சு. சொல்லு, டாகின்ஸ் இப்படியெல்லாம் பேசும் போது இந்த மஹ்தி ஹசன் சும்மா இருந்திருக்க மாட்டாரேப்பா...
அது எப்படி இருப்பாரு...டாகின்ஸ்சுடைய இந்த பேச்சுக்களை 'sheer nonsense' அப்படின்னு சொல்லிட்டாரு ஹசன்.
ஆஹா, அப்படின்னா 'சுத்தமா அறிவுக்கு ஒத்துவராதது' என்று தானே அர்த்தம்....
ஆமா. ஹசனோட எதிர்வாதங்கள பாருங்க. அப்படியே மலைத்து போயிடுவீங்க...
சொல்லுப்பா...எனக்கு எந்த மாதிரி விசயத்துல ஆர்வம் ஜாஸ்தி...
ரெடியா.............................. "தாஜ்மஹால் அழகானது" - இந்த வாக்கியத்த நீங்க ஒத்துக்குறீங்களா?
நான் என்ன ஒத்துக்குறது, உலகமே ஒத்துக்குமப்பா...
வெரி குட். சரி இந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மைய அறிவியல்ரீதியா எப்படி சோதித்து பார்க்குறது?
என்ன?.........(சில நொடி மவுனம்)
புரியலையா. இன்னொருவிதமா சொல்லுறேன். 'நீங்க அழகானவர்' - இத எப்படி அறிவியல்ரீதியா நிரூபிக்.....
தம்பி நிறுத்து....நிறுத்து....ஸ்டியரிங்க என் பக்கமா திருப்பாத, உன்னுடைய குசும்பு எனக்கு தெரியும்....நீ தாஜ்மஹாலுக்கே வா.....
ஹா ஹா....சொல்லுங்கண்ணே சொல்லுங்க...தாஜ்மஹால் அழகானது என்பதை அறிவியலரீதியா எப்படி சோதித்து பார்ப்பீங்க. இப்படி கட்டுனதான் அழகு, இந்த வடிவம் கொடுத்தா தான் அழகு, ஒரு கட்டிடம் இப்படி இருந்தா தான் அழகு - இதற்கெல்லாம் அறிவியல்ரீதியா என்ன அளவுகோல்?
எப்பா தம்பி, நான் அப்பவே சொன்னேன் இந்த மஹ்தி ஹசன் விவகாரமான பையன்ன்னு....
சரி இத விடுங்க..... 'உங்க மனைவி உங்கள விரும்புறார்' - இத எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? உண்மைன்னு நம்புவீங்க?
ஐயோ ஐயோ...தெரியாத்தனமா உன்கிட்ட கேள்வி கேட்டு மாட்டிகிட்டேன். என் மனைவி என்ன விரும்புறாங்கன்னு எனக்கு தெரியாதா..அவங்க உணர்வு எனக்கு புரியாதா....
அண்ணே, இந்த உணர்வு உணர்ச்சி இதையெல்லாம் விடுங்க. நீங்க அவங்கள விரும்புறதோ அல்லது அவங்க உங்கள விரும்புறதோ உண்மைன்னு எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? நிரூபிப்பீங்க?
முடியாதுப்பா....சத்தியமா முடியாது....
நீங்க நேர்ல பார்க்குற, உண்மைன்னு ஒத்துக்குற இம்மாதிரியான விசயங்களையே அறிவியல்ரீதியா சோதித்து பார்க்க முடியாது, அறிவியல்ரீதியா ஆதாரங்கள் கொடுக்க முடியாதுன்னு இருக்குறப்ப, தெய்வீகரீதியா நடந்த ஒரு அற்புத சம்பவத்துக்கு அறிவியல்ரீதியா ஆதாரம் கேட்குறது நியாயமா?? ------ இதுதான் ஹசனோட ஒரு வாதம்.
அடேங்கப்பா...எவ்ளோ ஆழமான வாதம்....... (கொஞ்ச நேரம் கழித்து சிரிக்கிறார்) தெரியாத்தனமா நம்ம ஆர்எஸ்எஸ் தலைவரு ஹசன் கிட்ட போய் மாட்டுனாரு பாரு. அத நினைச்சா சிரிப்பா தான்யா வருது. இந்த பையன பத்தி தெரிஞ்சிருந்தா பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டு இருப்பாரா?
ஹா ஹா ஹா....அறிவியல்ரீதியா சோதிச்சு பார்த்து நம்புறதுக்கு குர்ஆன்ல நிறைய விஷயம் இருக்கு. அதவிட்டுட்டு ஒரு தெய்வீக அற்புதத்துக்கு அறிவியல் ஆதாரம் கேட்டு தொங்குறதுல என்ன பயன் இருக்க முடியும்?
ரொம்ப சரி... இதெல்லாம் இருக்கட்டும். டாகின்ஸ் நம்புற பரிணாமத்துக்கு ஆதாரம் இருக்கா???? (சிரிக்கிறார்) டயர்ட் ஆகிட்டேன் தம்பி...இதுக்கு பதில் சொல்லிட்டு நீ முடிச்சிக்க.
பரிணாமத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இப்படியான கேள்வி கேட்டா டாகின்ஸ் எப்படி பதில் சொல்றார்ன்னு பாருங்க. 'ஒரு கொலை நடந்திருக்கு. அத நாம பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு கொலைதான்னு நம்புறோம். அதுமாதிரி தான் பரிணாமமும். பரிணாமம் நடந்ததை யாரும் பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு பரிணாமம் நடந்துச்சுன்னு நம்புறோம்' - இது தான் டாகின்ஸ்சோட விளக்கம்.
அட்ரா சக்க...அட்ரா சக்க...இத தானய்யா இறை நம்பிக்கையாளர்களும் சொல்றாங்க. இறைவன நாங்க பார்த்ததில்லை, ஆனா அவனோட இருப்பை நிரூபிக்குறதுக்கு இந்த உலகத்துல நிறைய ஆதாரங்கள் இருக்கு, அவற்றை வஞ்சு தான் இறைவன நம்புறோம்ன்னு. டாகின்ஸ்ச விட பிரபலமா இருந்த நாத்திகரான பேராசிரியர் ஆண்டனி ப்ளு (இவர் குறித்த எதிர்க்குரல் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்), ஆத்திகரா மாறினதுக்கு இப்படியான ஆதாரங்களை தானே காரணமா சொன்னாரு. ஒரே அளவுக்கோலை வைத்துக் கொண்டு ஒன்ன மட்டும் நம்புவேன், இன்னொன்ன நம்ப மாட்டேன்னு சொல்றது அறிவுக்கு ஒத்துவர்ர விசயமாய்யா....
இத நீங்க டாகின்ஸ்கிட்ட தான் கேட்கணும்......
ஹி ஹி...நீ கிளம்பிக்க...
இறைவன் நம்மை நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...
இறைவனே எல்லாம் அறிந்தவன்...
References:
1. Mehdi Hasan vs Richard Dawkins: My faith in God is not foolish - Mehdi Hasan, 19th December 2012 . New Statesman. link
2. 'Pathetic': Richard Dawkins in extraordinary outburst against Islam - Jason Taylor. 29th December 2015. Express. link
3. My year in Islamophobia - Emad Ahmed. New Stateman. 22nd December 2015. link
4. Richard Dawkins is just as rude in person as he is on Twitter, apparently - Ryan Kearney, New Republic. link
5. Richard Dawkins debates Muslim Journalist - Youtube. link
6. Richard Dawkins, PZ Myers, AronRa and Hamza Tzortzis at Atheist Convention - Islamic Education and Research Academy. Youtube. link
சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ
ஹாஹாஹா....
ReplyDeleteவழக்கம்போல டாக்கின்ஸ் மாட்டிக்கிட்டாரா உங்ககிட்ட..!!
கொல கேசு உதாரணம் சூப்பரு..
சகோ Nasar Navas, ஹா ஹா விட்ருவோமா...உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete/ ஆர்எஸ்எஸ் தலைவரு ஹசன் கிட்ட போய் மாட்டுனாரு பாரு//
ReplyDeleteஇது எப்போ? எங்கே? லிங்க் ப்ளீஸ்!!
சகோ ஹுசைன்னம்மா, இந்தாங்க லிங்க்
Deletehttps://www.youtube.com/watch?v=m1W-oXZ_31U
அதெப்படி விடமுடியும்..??
ReplyDeleteஒவ்வொரு பரிணாம வியாதிகளையும் தேடிபுடிச்சி அட்டாக் பன்னனும்...
இதே டாக்கின்ஸ் போன வருஷம் இங்லாந்தில் நம்ம தஃவா ஆட்களிடம் மாட்டிக்கிட்டு விழிபிதுங்கி ஓட்டம் எடுத்ததை மறக்க முடியுமா ??
இன்ஷா அல்லாஹ் இவரும், ஆண்டனி ப்ளு வை போல் கடைசி நேரத்தில் இறைவன் உண்டு என ஏற்றுக் கொள்வார், கலிமா சொல்வார்...
சகோ Nasar Navas, இன்ஷா அல்லாஹ் உங்க கணிப்பை இறைவன் நிறைவேற்றி தரட்டும்.
Delete//ஒவ்வொரு பரிணாம வியாதிகளையும் தேடிபுடிச்சி அட்டாக் பன்னனும்...// - ஹா ஹா. இப்பவெல்லாம் சமூக தளங்களில் பரிணாம விவாதங்கள் குறைந்திருப்பதாக நினைக்கின்றேன். எனக்கு மட்டும் இப்படி தோனுதான்னு தெரில.
அருமை. வேதாளமும் விக்ரமாதித்தனும் கதை படித்த சுவாரசியம் :-)
ReplyDelete"நம்பிக்கை" விசயங்கள் அனைத்தையுமே "அறிவுபூர்வமா" அணுகி விடைகண்டுவிட முடியாது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். இது டாகின்ஸ் கொள்கைவியாதிகளுக்கு மட்டுமல்ல, எல்லாத்தையும் அறிவைக் கொண்டே அணுகுவோம்னு விடாகண்டன்களாக நிற்கும் தூய கொளுகைவியாதிகளுக்கும்தான்!
தொடருங்கள் சகோ. வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!
சகோ அப்துல் ரஹ்மான்.ஜ, உலகில் பல நம்பிக்கைகள் அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளாலேயே நிலைத்திருக்கின்றன. அதே நேரம், இப்படியான பல நம்பிக்கைகள் அறிவியல்ரீதியான சோதனைகளுக்கு உடன்படாதவை. உதாரணமாக: ஆழ்மனது நமக்கு உண்டு. ஒரு விஷயத்தை நாம் செய்ய வேண்டும் என்றால் அது நம்மை தடுக்கின்றது அல்லது அனுமதிக்கின்றது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்த்தால் இந்த ஆழ்மனது என்பது இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த ஆழ்மனதின் இருப்பை அறிவியல் ரீதியாக சோதித்து பார்க்க முடியாது, ஆதாரங்களை சமர்பிக்க முடியாது. ஆக, ஒரு விசயத்தை அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்ப்பதே சிறந்தது. அதேநேரம் அவற்றிற்கு அறிவியல் ஆதாரங்களை தேடுவது அறிவுக்கு அப்பாற்பட்டதாகும்.
Deleteதங்களின் வருகைக்கும், தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி.
உரிய நேரத்தில் அறிவை பிறயோகிக்க தெறிந்தவனே அறிஞன்...அல்லாஹ் அப்படி அடையாளம் தெறியாத பலருக்கும் கொடுத்துள்ளான்...அவர்களது சிந்தனை வெளியில் வராமலேயே போய்விடுகிறது...
ReplyDeleteஉங்களது கேள்விகளும் உதாரானங்களும் அழகாக ஆழமாக இரிந்தது....
இது போன்று நான் நாத்திகர்களிடம் விவாதிக்கும் போதல்லாம் இறைவன் தொடர்பாம அற்புதம் சார்ந்து கேள்வி கேட்கும் போது என்னால் சொல்லமுடியுமாக இருந்த பதில்
"கண்முன் இறைவன் இருப்பிற்கு ஆதாரத்தை வைத்து பரிணாமம் என்னும் கொள்கையை முன்வைத்த உங்களுக்கு இறைவன் புறம் இருந்து செய்யப்பட்ட அற்புதங்களை நீங்கள் ஏற்காதிருப்பது ஆச்சரியம் அல்ல...ஆனால் இறைவனே ஏற்காத நீங்கள் இறைவன் சார்ந்த நம்பிக்கையுடன் தொடர்புடைய கிளைச்செய்தியில் எப்படி கேள்வி கேற்கிரீர்கள் என்பதுதான்....இறைவனையே மறுக்கும்போது இந்த அற்புதங்கள் பற்றிய பேச்சு எதற்கு?ஒன்று இறைவன் இதற்கல்லாம் சக்தி பெற்றவன் இல்லை என நம்ப வேண்டும்...அல்லது இது அறிவியலுக்கு மாற்றமானது என்று நம்ப வேண்டும்...
இறைவனுக்கு சக்தியில்லை என்று இவர்கள் சொல்லிவிட்டால் இறைவனை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் முழுதாக இறைவனை ஏற்கவில்லை என்று பொருள்...
அறிவியலுக்கு முரண் என்றால்.... ஒரு காலத்தில்(நாடோடிகளாக மக்கள் காடு கரையன்று அழைந்து திறிந்த அந்த காலத்தில்) வானத்தில் உலோகம் மனிதர்களை ஏற்றி கொண்டு பரக்கும் என்று சொன்னால் எப்படி மனிதன் அன்று அறிவியலுக்கு முரண் என்று சொல்லியிருப்பானோ பல்லாயிரக்கணக்கான மயில்தூரத்தில் உள்ள ஒரு உறவுடன் எந்த வயரும் இல்லாமல் ஒரு தகட்டு டப்பாவை வைத்தி பேசினேன் என்று சொல்லும்போது எப்படி சாத்தியமே இல்லாத விடயம் என்று என்னியிருப்பானோ அது போன்றுதான் அறிவியல் சார்ந்த இவர்களின் அறிவும்....
சகோ Sifraj S, உங்கள் கருத்துகளுடன் ஒத்துப்போகின்றேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Delete'ஒரு கொலை நடந்திருக்கு. அத நாம பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு கொலைதான்னு நம்புறோம். அதுமாதிரி தான் பரிணாமமும். பரிணாமம் நடந்ததை யாரும் பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு பரிணாமம் நடந்துச்சுன்னு நம்புறோம்' - இது தான் டாகின்ஸ்சோட விளக்கம். //
ReplyDeleteஏனுங்கண்ணா அப்படி இவுரு பாக்காதப்ப்ப அந்த குதிரைக்கு எதிர்பாராத விதமா மரபணு மாற்றம் நிக்ழ்ந்ததுல பொசுக்கட்டீர்ன்னு ரெக்க முளைச்சு இருக்க வாய்ய்பு இருக்கலமில்லிங்களா?? அப்டி கேட்டா டாகின்ஸ் ரியாக்ஷன் என்னவா இருக்கும்?? :D
சகோ ஷர்மிளா ஹமீத்,
Delete//ஏனுங்கண்ணா அப்படி இவுரு பாக்காதப்ப்ப அந்த குதிரைக்கு எதிர்பாராத விதமா மரபணு மாற்றம் நிக்ழ்ந்ததுல பொசுக்கட்டீர்ன்னு ரெக்க முளைச்சு இருக்க வாய்ய்பு இருக்கலமில்லிங்களா?? அப்டி கேட்டா டாகின்ஸ் ரியாக்ஷன் என்னவா இருக்கும்?? :D//
அட ஆமாம்..ஹா ஹா. முடிஞ்சா இதுக்குறித்து ஒரு மெயில் அவருக்கு அனுப்பி பாருங்க :-) :-). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
மா ஷா அல்லாஹ்.. அருமையான ஆக்கம்..
ReplyDelete/// 'ஒரு கொலை நடந்திருக்கு. அத நாம பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு கொலைதான்னு நம்புறோம். அதுமாதிரி தான் பரிணாமமும். பரிணாமம் நடந்ததை யாரும் பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு பரிணாமம் நடந்துச்சுன்னு நம்புறோம்' - இது தான் டாகின்ஸ்சோட விளக்கம்.//
ஹாஹா.. நல்ல விளக்கம்.. பரிணாமம் நடந்துச்சோ இல்லையோ கூடியோ சீக்கிரம் இவர் இஸ்லாத்துக்கு வந்துட்டார் என்ற நற்சேதி வரப் போகுது..
இன்ஷா அல்லாஹ்..
இந்த மாதிரி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் கேலிக்கு உள்ளாக்கியோ எத்தனையோ பேர் அவனின் அடிமைகளாக வாழ அவனே வழியை ஏற்ப்படுத்தினான்...
ஆம் சகோ யாஸ்மின், டாகின்ஸ் போன்று இருந்தவர்களில் பலர் இறைவழிக்கு திரும்பிவிட்டனர். இறைவன் நேர்வழி காட்ட நாடுவோரில் டாகின்ஸ்சும் ஒருவராக இருக்கட்டும். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமா ஷா அல்லாஹ் சிந்திக்க வைக்கும் அருமையான தொகுப்பு
ஜஸாக்கல்லாஹு ஹைரன்
உங்கள் பணி தொடர அல்லாஹ் அருள் செய்வான் ஆமீன்
வ அலைக்கும் சலாம் சகோ அனானி,
Deleteதாங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
மாஷா அல்லாஹ் !
ReplyDeleteஅருமையான தொகுப்பு...
சகோ m.nainathambi.அபூஇப்ராஹீம்,
Deleteஜசாக்கல்லாஹ். தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteஆஷிக் பாய்,
Mermaid,Merman கட்டுக்கதையா அல்லது உண்மையா ??
கூகுள், விக்கி, புராண கட்டுகதைனு சொல்றாங்க ஆனா இரண்டு வருடம் முன்பு பாக் கராச்சி கடற்கரையில் இறந்த நிலையில் ஒரு கடல்கன்னி கரை ஒதுங்கியது, யுடுபில் வீடியோ இருக்கு.
இதப்பத்தி நீங்க என்ன சொல்ரீங்க ?
வ அலைக்கும் சலாம் சகோ Nasar Navas,
Delete//ஆனா இரண்டு வருடம் முன்பு பாக் கராச்சி கடற்கரையில் இறந்த நிலையில் ஒரு கடல்கன்னி கரை ஒதுங்கியது, யுடுபில் வீடியோ இருக்கு. // - அந்த ஆதாரத்தை இங்கே கொடுங்க சகோ. பார்த்துவிட்டு கருத்தை தெரிவிக்கின்றேன்.